மனதின் சத்தம் - இன்னிசை பாடிவரும்!

Abhirami

Author
Author
#1
இசையில் மனம்
லயித்து போவது ஏனோ?

வார்த்தையின் தாக்கமா?
சூழ்நிலையின் ஆட்சியா?

இருவிழியும் கலங்கி
கண்ணீர் வடிப்பது ஏனோ?

பூட்டி வைத்த நினைவுகள்
கண் முன் தோன்றுவதாலா?
உடலின் ரோமங்கள் எழுந்து
நின்று வரவேற்பதனாலா?

கருவறையின் இருட்டிலும்
இசை சென்று கை கோர்த்ததே,
தாயின் தாலாட்டில்...

கண் கூசும் மின்னல்
ஒளியிலும் இசை வந்து
சிரித்ததே மழையில் கானப்பாட்டில்...

மழலையின் கொஞ்சும்
மொழி இசையில்
மனம் துள்ளி குதித்தாடும்...

மாவிலை தோரணம்
அசையும் நேரம்
இதயமும் புத்துயிர் பெறும்...

தொட்டில் முதல்
சுடுகாடு வரை,
வாழ்வின் அங்கமாய்
நல்லதோர் வீணையின்
தமிழ் இசை...
 

Sponsored

Latest Episodes

Advertisements

Top