• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

மனதின் சத்தம் - இரும்பிலே இதயம் பிறந்ததே!

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Abhirami

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2019
Messages
1,527
Reaction score
3,795
Location
Chennai
ஏழு வண்ண கலவையாக
சில நொடிகள் தோன்றும்
வானவிலாய் வாழ்வில்
இன்பமும் நிலைக்க,

பரமபத வாழ்வாட்டத்தில்
பாம்பை அதிகம் சந்தித்தாலோ
விஷத்தை மட்டுமே கக்க,

சுற்றி இருந்த நண்பரும்
உறவு கூட்டம் யாவும் கல் பட்ட
கண்ணாடியாய் சிதறி செல்ல,

முன் அனுபவ தாக்கத்தால்
உணர்வுகள் உலர்ந்து
மனமிருந்தும் ஜடமாகினேன்...

யாவரும் நெருங்க அஞ்சும்
கனலினி என்னை அணைக்க
வந்த மேக தூதன் நீயோ?

எட்டி பார்த்து செல்லும்
மனிதர்கள் போல் நீயில்லாமல்
மனதில் ஆழ்துளை கிணறு
வெட்டியது ஏனோ?

பாலின் தூய்மையாய்
நீ இருக்க இந்த விஷத்திடம்
சிக்கி தவிப்பது ஏனோ?


எதற்கும் வளையாது நிற்கும்
இரும்பு மனிஷி என்னுள்
இதயத்தின் முகவரியை
அறிய வைத்தது ஏனோ?


விதியின் விளையாட்டோ?
மதனின் சதியாட்டமோ?
விலகியிரு என்கிறேன்...

அடித்தாலும் தாயிடமே
ஓடி வரும் குழந்தையாய்
நீ மாறி இருக்கிறாய்...

விலக்கவும் முடியாமல்
சேர்க்கவும் முடியாமல்
என் நிலை!

காதல் ஆடும் ஆட்டத்தில்
வசமாய் சிக்கி விட்டோம்...
காலமே பதில் கூறட்டும்,
நம் காதலிற்கு ஓர் நல்ல பதிலை!




 




Sugaaa

முதலமைச்சர்
Joined
Jun 23, 2019
Messages
6,379
Reaction score
22,012
Location
Tamil Nadu
?இதயத்தின் முகவரியை அறிய வைத்தது ஏனோ..?8d6c85200417c605e52c18dba7b0741b.gif
 




Yuvakarthika

இளவரசர்
SM Exclusive
Joined
Apr 18, 2019
Messages
15,688
Reaction score
35,222
Location
Vellore
ஏழு வண்ண கலவையாக
சில நொடிகள் தோன்றும்
வானவிலாய் வாழ்வில்
இன்பமும் நிலைக்க,


பரமபத வாழ்வாட்டத்தில்
பாம்பை அதிகம் சந்தித்தாலோ
விஷத்தை மட்டுமே கக்க,


சுற்றி இருந்த நண்பரும்
உறவு கூட்டம் யாவும் கல் பட்ட
கண்ணாடியாய் சிதறி செல்ல,


முன் அனுபவ தாக்கத்தால்
உணர்வுகள் உலர்ந்து
மனமிருந்தும் ஜடமாகினேன்...


யாவரும் நெருங்க அஞ்சும்
கனலினி என்னை அணைக்க
வந்த மேக தூதன் நீயோ?


எட்டி பார்த்து செல்லும்
மனிதர்கள் போல் நீயில்லாமல்
மனதில் ஆழ்துளை கிணறு
வெட்டியது ஏனோ?


பாலின் தூய்மையாய்
நீ இருக்க இந்த விஷத்திடம்
சிக்கி தவிப்பது ஏனோ?


எதற்கும் வளையாது நிற்கும்
இரும்பு மனிஷி என்னுள்
இதயத்தின் முகவரியை
அறிய வைத்தது ஏனோ?


விதியின் விளையாட்டோ?
மதனின் சதியாட்டமோ?
விலகியிரு என்கிறேன்...


அடித்தாலும் தாயிடமே
ஓடி வரும் குழந்தையாய்
நீ மாறி இருக்கிறாய்...


விலக்கவும் முடியாமல்
சேர்க்கவும் முடியாமல்
என் நிலை!


காதல் ஆடும் ஆட்டத்தில்
வசமாய் சிக்கி விட்டோம்...
காலமே பதில் கூறட்டும்,
நம் காதலிற்கு ஓர் நல்ல பதிலை!
கனலினியை அணைக்க வந்த மேகதூதன்???
இரும்பு மனுசியின் இதயத்தின் முகவரியை அறிய வைத்தவன்????


அருமை அபி❤❤❤❤❤
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top