மனதின் சத்தம் - என்றும் உன் நினைவுகளில்!

Abhirami

Author
Author
#1
ஆண் என்றாலும்
ஆணாக பழகாதவன்...


குறும்புகளால் சிறுவனாகவும்
அன்பால் தாயாகவும்...
செல்ல சண்டை இடும் போது
நண்பனாகவும் கண்ட நட்பு...


ஒளிவு மறைவு
இல்லாமல் பேசுவான்
கவிதை புத்தகமாக...


சொல்லி சொல்லி
அன்பு செய்தவன் இன்று
சொல்லாமல்
பிரிந்து போகிறான்...


கலைந்து போன
ஒரு கனவு போல்
மீண்டும் வராமல் போகிறான்...


எனக்கு ஒரு
( ஹலோ )
சொல்லாமல் ...
விலகி போகிறான்...


காலையில் எழுந்ததும் பார்க்கும்
( ஹவ் ஆர் யூ? குட் மார்னிங்! )
வருவதில்லை ...


அவன் அக்கறை
( வீட்டுக்கு போனதும் சொல்லு! )
இல்லை...


நாளைக்கு ஐந்து முறை
( சாப்டியா? )
இல்லை...


உறங்கும் முன்
கடைசியாக உன்
( பேய் ட்ரீம்ஸ்! )
இல்லை...


தோல்வி வரும்
வேலையில் உன்
( கவலை படாதடா! சரியாகிடும்!) இல்லை ...


வெற்றி வரும்
வேலையில் உன்
( ட்ரீட் வை மச்சி! ) இல்லை ...


உன் தாய் அன்பு நம் நட்பை பிரிக்கலாம்...
காலம் உன் அன்பை குறைக்கலாம்...


காதலில் உண்டு
பொய்களும் தோல்விகளும்!
என்றும் நட்பில் இல்லை!


அம்மா வயிற்றில் சுமந்தாள்!
பத்து மாதத்திற்கு பிறகு இறக்கிவிட்டாள்...
அப்பா தோளில் சுமந்தார்!
கணவன் வந்த பிறகு இறக்கிவிட்டார்...


நீ என்னை சுமக்க வில்லை!
ஏனென்றால், நட்பு என்றும் ஒரு சுமையில்லை!


தாய்மையின் ஸ்பரிசமும்...
சகோதர பாதுகாப்பும்...
தகப்பன் கண்டிப்பும்...
கொண்ட ஒரு கலவையாய்
நம் நட்பு...


நிழலும் இருள் சூழ்ந்த பின் பிரிந்து விடும்...
உன் நினைவுகள் என்னை விட்டு பிரிவதில்லை!


ஆழ பதிந்த ஈட்டியின் பதிவுகளாய்!
என் மனதில் நீ பேசி சென்ற வார்த்தைகள்!


பிறக்கும் போது தொப்புள் கொடியில் தொடங்கும் பிரிவு...
இடைப்பட்ட வாழ்வில் சேரும் சொந்தங்களும் பிரிவதற்காகவா?


இறுகும் என்று நினைத்த நட்பு...
இளகி விலகி போனது ஏனோ?


சூழ்நிலையின் சூழ்ச்சியோ? அல்லது,
ஊழ்வினையின் உச்ச தண்டனையோ?

நீங்குதல் என்பது நெஞ்சின் நிம்மதிக்கு எதிரி!
ஏங்கி நிற்கும் என் நிலை உணர்ந்து,
உயிர் தாங்கிப்பிடித்து இந்நிலை போக்க
நீங்கா நட்பே மீண்டு(ம்) நீ வருவாயா?

 

Yuvakarthika

Author
Author
SM Exclusive Author
#5
அழகான உணர்வு நட்பு, அதனை மிக அருமையாக சொல்லி இருக்கீங்க அபி👏👏👏👏😍😍😍😍
 

Advertisements

Latest updates

Latest Comments

Top