மனதின் சத்தம் - நெஞ்சுக்குள்ள நீ!

Abhirami

Author
Author
யாமம் தேடும்
நிலா போலவே
உன் நினைவுகள்
தரும் சுகத்தை
தேடி செல்கிறேனே!
காற்றில் வீசும்
உன் சுவாசத்தில்
தாயின் கதகதப்பை
உணர்கிறேனே!

உன் சிரிப்பென்னும்
காந்தம் இழுக்க
மயங்கி தான் போனேனே!
வாடாத பூவாக
உன் சிரிப்பிருக்க
என் உயிரையும் தருவேனே!
என் பெயரோடு
உன் பெயர் சேரும்
நாளிற்காக காத்திருக்கிறேனே!

உனக்காக காத்திருக்கும்
ஒவ்வொரு நொடியும்
மனதில் பொக்கிஷமே!
உன்னை கண்டதும்
மனதில் பூக்கும்
ஆயிரம் பூக்களையும்
மனப் பெட்டகத்தில்
சேமித்திடுவேனே!
உயிருக்குள் உன்னை
அனுதினமும் சுமந்து
சுவாசத்தில் கலந்திடுவேனே!

உன் இமைகள்
தேடும் விம்பமாக
நான் இருப்பேன்...
கண்கள் இமைக்காமல்
நீ பார்க்கும் போது
வெட்கத்தில் கண்ணம்
சிவந்து போவேன்...
உன் இதயச்சிறையில்
ஆயுள் கைதியாக
இடம் பிடிப்பேன்...

காற்றாக நீ இருந்தால்
உயிர் மூச்சாகி
நான் கலப்பேனே!
ஒளியாக நீ இருந்தால்
வீசும் வெளிச்சமாக
நான் இருப்பேனே!
உன்னோடு கலந்திருப்பேன்
உனக்காக மட்டுமே

மண்ணில் வாழ்ந்திருப்பேன்!
 

Yuvakarthika

Author
Author
SM Exclusive Author
காதல் ஊற்றெடுக்கும் வரிகள்???????? படிக்க படிக்க நினைவில் தித்திக்கும் வார்த்தைகள் அழகு அபி?????
எப்பவும் போல கலக்குறடா??????
 

Shaniff

Well-known member
காதல் ஊற்றெடுக்கும் வரிகள்???????? படிக்க படிக்க நினைவில் தித்திக்கும் வார்த்தைகள் அழகு அபி?????
எப்பவும் போல கலக்குறடா??????
Eswar eppadi irukkaanga?????
Leave nu sollittu kavithai padikka vanthirukkeenga...ithellaam boangaattam dear??
 

Advertisements

Advertisements

Top