டோராவின் பயணங்களில்
இணைந்து கொண்டு
குரங்கு பொம்மையை
புஜ்ஜி என்று கூறி கொண்டு
வரைப்படம் ஒன்றை பிடித்து
தொலைத்த பொருளை
தேடிக்கொண்டு வீடெங்கும் ஓட...
மந்திர கற்களாய்
கூர் தீட்டியும் அழிப்பானும் மாறி
ஜூலியின் துணையோடு
பாடயிடை வேளையில்
ஜாக்கி சானின் சாகசங்களும்
திறம்பட அரங்கேற...
அப்பாவிற்கு தெரியாமல்
களவாடிய ஹீரோ பேனாவை
நண்பர்கள் வகுப்பறை
என்ற அற்புத தீவில்
ஒளித்து வைக்க
சிந்துபாத் ஆக மாறி
வீரதீரச் சாகசம் புரிய...
மேனி எங்கும் அம்பு குறியிட்டு
நாய் குட்டியை ஆப்பாவாக மாற்றி
அவதார் ஆங் நான் என்று கூறி
கடாரா பெண் தோழிகளை பயமுறுத்தி
சொக்கா அண்ணன்களோடு
மண்ணில் புரண்டு சண்டையிட...
அண்ணாவின் கறுப்பு கோட்டையும்
அப்பாவின் கறுப்பு கண்ணாடியும்
கையில் பொம்மை துப்பாக்கியோடு
மென் யின் பிளாக் என்ற பலகையோடு
நண்பர்கள் முன் மிதப்போடு
நடந்த காலம் பறந்து செல்ல...
பேப்பர்களில் பாதி படம் வரைந்து
அதை வைத்து வரைய போகும்
படத்தை கண்டுபிடித்த டாடிகளுக்கு
டானிகள் கொடுக்கும் பரிசுகளும்...
டோலக்பூர் வகுப்பறை பிரச்சனைகளை
தீர்வு காண வீட்டில்
அம்மாவின் லட்டு சாப்பிட்ட
பீம்களுக்கு மட்டும் கிடைத்த
சுட்கி உடனான நட்பும் போய்...
இன்று கிரிக்கெட்டை ரசித்தேன்
காதல் பாடல்களை
கண்டாலே முகம் சுளிக்கும்
காதலியான என் அம்மாவுடன்...
இணைந்து கொண்டு
குரங்கு பொம்மையை
புஜ்ஜி என்று கூறி கொண்டு
வரைப்படம் ஒன்றை பிடித்து
தொலைத்த பொருளை
தேடிக்கொண்டு வீடெங்கும் ஓட...
மந்திர கற்களாய்
கூர் தீட்டியும் அழிப்பானும் மாறி
ஜூலியின் துணையோடு
பாடயிடை வேளையில்
ஜாக்கி சானின் சாகசங்களும்
திறம்பட அரங்கேற...
அப்பாவிற்கு தெரியாமல்
களவாடிய ஹீரோ பேனாவை
நண்பர்கள் வகுப்பறை
என்ற அற்புத தீவில்
ஒளித்து வைக்க
சிந்துபாத் ஆக மாறி
வீரதீரச் சாகசம் புரிய...
மேனி எங்கும் அம்பு குறியிட்டு
நாய் குட்டியை ஆப்பாவாக மாற்றி
அவதார் ஆங் நான் என்று கூறி
கடாரா பெண் தோழிகளை பயமுறுத்தி
சொக்கா அண்ணன்களோடு
மண்ணில் புரண்டு சண்டையிட...
அண்ணாவின் கறுப்பு கோட்டையும்
அப்பாவின் கறுப்பு கண்ணாடியும்
கையில் பொம்மை துப்பாக்கியோடு
மென் யின் பிளாக் என்ற பலகையோடு
நண்பர்கள் முன் மிதப்போடு
நடந்த காலம் பறந்து செல்ல...
பேப்பர்களில் பாதி படம் வரைந்து
அதை வைத்து வரைய போகும்
படத்தை கண்டுபிடித்த டாடிகளுக்கு
டானிகள் கொடுக்கும் பரிசுகளும்...
டோலக்பூர் வகுப்பறை பிரச்சனைகளை
தீர்வு காண வீட்டில்
அம்மாவின் லட்டு சாப்பிட்ட
பீம்களுக்கு மட்டும் கிடைத்த
சுட்கி உடனான நட்பும் போய்...
இன்று கிரிக்கெட்டை ரசித்தேன்
காதல் பாடல்களை
கண்டாலே முகம் சுளிக்கும்
காதலியான என் அம்மாவுடன்...