• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

மனதின் சத்தம் - யாதுமானவள்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Abhirami

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2019
Messages
1,527
Reaction score
3,795
Location
Chennai
அம்மா... காப்பி எங்க மா?
அம்மா... பேஸ்ட் காலி...
அம்மா... டவல் எங்க மா?
அம்மா... என் சட்டை அயன் பண்ணலையா?
அம்மா... சாப்பாடு போடு!
அம்மா... சீப்பு காணோம் மா?
அம்மா... தண்ணீ தா மா!
அம்மா... லேஸ் தேடி தாயேன்!
அம்மா... வண்டி சாவி மறந்துட்டேன்!
அம்மா... கோப்பு மறந்துட்டேன், கொண்டு வாயேன்!
அம்மா... சாப்பாடு டப்பா அப்படியே!
அம்மா... இன்னிக்கு பாஸ் பாராட்டினார் மா!
அம்மா... இன்னிக்கு என் கூட வேலை செய்ரவன் கடுப்பேத்திட்டான்!
அம்மா... மாத்திரை போட்டியா?
அம்மா... மடில படுத்துக்குறேன்!
அம்மா... அப்பா கிட்ட பேச சொல்லினேனே?

ஆதி முதல் அந்தம் வரை
யாதுமாகி போனவள்...
காலை முதல் இரவு வரை
நான் தேடும் நபர் அவள்...

என் தேவைகளை பூர்த்தி செய்து
தன் தேவைகளை மறந்துவிடுபவள்...
ஆயிரம் விடுமுறை வந்தாலும்
அவள்அலுவலகத்திற்கு மட்டும் விடுமுறையில்லை...

கண்டிப்பிலும் கருணையிலும்
கடவுளையும் மிஞ்சுபவள்...
தன் சோர்வை ஒதுக்கி விட்டு
என்னை உற்சாகமூட்டுபவள்...

தினம் தினம் நான் உச்சரிக்கும்
தாரக மந்திரம் அம்மா!
வயது வித்தியாசம் பார்ப்பதில்லை...
அம்மாவின் கொஞ்சலில் மட்டும்
இன்னும் குழந்தையாக நான்!
 




Yuvakarthika

இளவரசர்
SM Exclusive
Joined
Apr 18, 2019
Messages
15,805
Reaction score
35,513
Location
Vellore
அம்மா அருகில் எந்த துன்பமும் நம்மை தீண்டுவதில்லை? அருமையான பதிவு அபி???????
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,129
Reaction score
50,016
Location
madurai
உண்மையான வார்த்தைகள் அபி... நாம் அன்னையானாலும் நாம் அன்னை மடிதரும் சுகத்திற்கு ஈடில்லை ....
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top