You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.


மனதில் அன்று எழுதி வைத்தேன்

#1
பகுதி -5

"மேம்" என்று ஓடி வந்தது குழந்தை. அள்ளி எடுத்து காரில் ஏற்றிக் கொண்டு. வீடு வந்தாள் மிருதுளா.

இரண்டு மாதங்களில் மிருதுளாவுக்கு புது சூழலும் குழந்தைக்கு அவளும் நன்கு பழகிப் போயிருந்தார்கள்.

குன்னூர் வரும் போது புது சூழல் , அறியாத குடும்பம் என்று பயந்து கொண்டு தான் வந்திருந்தாள். அம்மாவை தவிர வெளி உலகம் தெரியாமல் வளர்ந்திருந்த பெண். சென்னையை தாண்டி போனதில்லை. ஆனால் எதையும் யோசிக்கும் சூழலிலா இருந்தாள், இப்போது?

வேலை பற்றி சொன்ன போது குரு குடும்பத்தினர் கூட ஒப்புக்குத்தான் தடுத்தார் போல் இருந்தது. அவர்களையும் எப்படி குறை கூற முடியும்? வயதுப் பெண்ணை பராமரித்து கல்யாணம் செய்து கொடுப்பது சொற்ப வருமானமுள்ள ஒரு குடும்பத்தில் பெரும்பாரம் இல்லையா? ஆனால், அதற்காக குரு அப்படியே கை கழுவி விட்டு விடவில்லை. ரஞ்சனியின் அப்பாவிடம் பேசினான்.

"மிருதுளா என் பெண் மாதிரி. அப்படி நல்ல இடமாக இல்லாட்டி சொல்வேனா?" என்று அவர் இருதயராசன் குடும்பம் பற்றி விலாவாரியாய் எடுத்துரைத்தார்.

அதன் பின்பே குரு மனம் தெளிந்தான் தானே அவளை குன்னூரில் கொண்டு விட்டான். ரஞ்சனியின் அப்பா சொன்னது போல் நல்ல குடும்பம் தான் என்பது இருதயராசன் மற்றும் அவன் அம்மா வெற்றிவிழி பார்த்தவுடன் புரிந்தது‌.

"அம்மா இல்லாத குழந்தையை தாய்க்கு தாயாய் , நல்லாசிரியராய் பார்த்துக்கணும்" இருதயராசன் அந்த விஷயத்தில் மட்டும் கறாராய் இருந்தான்.

"அதெல்லாம் எங்க மிருதுளா நல்லபடி பார்த்துப்பா, இயல்பிலேயே பொறுமைசாலி.... அதுவும் இல்லாம.... இப்ப அவளே தாயை இழந்துட்டு நிக்கறா" சொல்லும் போதே குருவின் குரல் தழுதழுத்தது‌.

" அந்த கவலையே வேண்டாம் உங்களுக்கு. நான் அவளுக்கு ஒரு தாயா இருந்து பார்த்துப்பேன். போதுமா?" வெற்றிவிழி உறுதியளித்தார்.

"அது போதும்மா!" கையெடுத்து கும்பிட்டுவிட்டு விடைபெற்றான் குரு.

சொன்னது போலவே வெற்றிவிழி அவளுக்கு ஒரு தாயின் அன்பையும் பிரிவையும் வெற்றிவிழி . இழப்பிற்கு ஈடு செய்ய தான் முயன்றார். முதலாளி என்று கறாராய் நிற்காமல் இத்தனை இங்கிதமாய் இவ்வளவு பணக்காரப் பெண்மணியால் நடந்து கொள்ள முடியுமா என்று மிருதுளாவுக்கு ஆச்சரியம் கூட ஏற்பட்டது. வாய் விட்டே ஒரு முறை சொல்லி விட்டாள்.

"இதுல என்னம்மா இருக்கு. கொடுக்கக் கொடுக்க குறையாம பெருகும் இரண்டே விஷயங்கள் அன்பும் அறிவும் தான்".

யோசித்துப் பார்த்த போது அது எத்தனை உண்மை என்பது புரிந்தது. அங்கு வேலை செய்த எல்லா வேலையாட்களிடமும் அதிகாரத்தை விட அன்பையே வெற்றிவிழி செலுத்தினார்.

"சேகர் உன் முதலாளி கிளம்பளதுக்குள்ள ஒரு வாய் சாப்பாடு. அவருக்கு அங்கே விருந்து. அங்கே சுற்றுச்சூழல் நல்ல ஒட்டலும் கிடையாது. ரெண்டு மணி நேரம் நீ பசியோட இருக்கணும். ம், சீக்கிரம் வந்து சாப்பிடுப்பா..."

"சரோஜா, உன் பொண்ணுக்கு உடம்பு சரியில்லைன்னு சொன்னியே. டாக்டர் கிட்ட காட்டினியா? நம்ம கார்லயே கூட்டிப் போய் வரச் சொன்னேனே... டாக்டர் என்ன சொன்னார்?"

"ராம்நாத் ராத்திரி பூரா பனில நின்னு காவல் காத்து இருமிகிட்டு கிடக்கான் பாரு. அவனுக்கு தூதுவளை கஷாயம் வெச்சுக் குடு விமலா."

இப்படி பார்த்துப் பார்த்து செய்வதால் அவர்களும் இந்த குடும்பத்தை தாங்கினார்கள்.

வெற்றிவிழி செலுத்திய அன்பை எல்லாம் நூறு மடங்காக அந்த குழந்தைக்கு திருப்பி தரத் துவங்கினாள் மிருதுளா. குழந்தை ரக்ஷனா அவளிடம் ஒட்டிக் கொண்டது.

"மேம் இன்னைக்கு ஸ்கூல் என்ன சொல்லி கொடுத்தாங்க தெரியுமா?"

காரிலிருந்து குழந்தையை இறக்கி கை கால் கழுவி விட்டு. நறுக்கிய பழத் துண்டுகளை ஸ்பூனால் ஊட்டிய படி அன்றைய நிகழ்வுகளை கேட்டுக் கொண்டாள்.

மெல்லிய குரலில் பாட்டுப் பாடி தூங்க வைத்தாள். இரண்டு மணி நேரத்தில் குழந்தை எழுந்து பூப்பந்தாக துள்ளி வந்தவுடன். மசித்த காய்கறிகளுடன் சோறு ஊட்டினாள். கதை சொன்னாள்... பாட்டு பாடினாள்... பாடம் சொல்லிக் கொடுத்தாள்... கார்ட்டூன் போட்டுக் காட்டினாள்.. பந்து விளையாடினாள்... அந்த குழந்தைதான் உலகம் என்று மாறிப் போனாள்...

மாதங்கள் உருண்டு காணாமல் போயின....‌

 
#8
அம்மாவான்னு கேட்ட குழந்தைக்கு மிருதுளா என்ன பதில் சொன்னாள்?
இவளை மேம்-ன்னு ஏன் ரக்க்ஷனா கூப்பிடுறாள்?
அப்படிக் கூப்பிடுன்னு அப்பா சொல்லிக் கொடுத்தானா?
 
#9
அப்புறம் இப்போ மட்டும் ரக்க்ஷனா எப்படி மிருதுளாவை மம்மின்னு கூப்பிடுறாள்?
இருதயராசன் மிருதுளாவிடம் என்ன ஒப்பந்தம் போட்டான்?
என்ன கண்டிஷன்ஸ் சொல்லி இவன் மிருதுவை கல்யாணம் செஞ்சான்?
 

Sponsored

Advertisements

New threads

Top