• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

மனதில் அன்றே எழுதி வைத்தேன் - 4

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Crazee queen

மண்டலாதிபதி
Joined
Oct 14, 2019
Messages
129
Reaction score
827
Age
29
Location
Pudukkottai
பகுதி -4

"அம்மா, அம்மா" உலுக்கினாள்.


உடல் அவள் அசைவுக்கு ஏற்ப ஆடியதே தவிர, சலனமில்லை. தன்னிச்சையாய் கண்களில் நீர் வழிந்தது.


ம்... அசந்து தூங்கிட்டேன்' என்று எழப் போகிறாள் என்ற எதிர்பார்ப்போடும் ஏதோ ஆகிவிட்டதோ என்ற பயத்தோடும் அழுகையில் தேய்த்தாலும், பயத்தில் ஒழுங்கற்ற சொற்களாக ஓங்கி ஒலித்தது. "ம்.... ம்மா.... எழுந்திரும்மா, எழுந்திரு".


அந்தக் குரலின் அவலமும், வாசலில் கோலம் போடக் கூட கதவை திறக்காத சூழலும், அக்கம் பக்கத்து ஒண்டுக் குடித்தன வீட்டினரை இவள் வீட்டுக் கதவை தட்ட கொண்டு இருந்தார்கள். இருண்ட பாதையில் ஒளிக்கற்றையைப் பார்த்தது போல் மனித குரல்களைக் கேட்டவுடன் தெம்பு வர, ஓடிப் போய் கதவைத் திறந்தாள் மிருதுளா.


நிலைமை சட்டென்று புரிந்து அனைவருக்கும். ஒருவர் கவுசல்யா முகத்தில் தண்ணீர் தெளித்துப் பார்த்தாரா. ஒருவர் மிருதுளாவுக்கு "பயப்படாதே... ஒண்ணுமிருக்காது" என்று ஆறுதல் கூறினார்.


இந்த சம்பவங்கள் இடையில் மருத்துவர் வந்து பரிசோதித்து, உதட்டைப் பிதுக்கினார்.


"சாரி, ஷி ஈஸ் நோ மோர், மாஸிவ் ஹார்ட் அட்டாக்" என்றார் இயல்பான குரலில்.


சட்டென எல்லாருக்கும் அமைதியானார்கள்.


மிருதுளாவுக்கு யாரோ யாரை பற்றியோ கூறுவதாய் பட்டது. இப்போது என்ன செய்ய வேண்டும்? அம்மா ஒன்றும் சொல்லாமல் படுத்திருக்கிறாளே... படித்த மனோதத்துவம் எதுவும் உதவிக்கு வரவில்லை. மூளை மரத்திருத்து. யாரோ டாக்டருக்கு பணம் கொடுத்து அனுப்பினாள். யார் யாரோ முடிவெடுத்தார்கள்.


"உறவுக்காரங்க யார் யாருக்கு சொல்லணும்?"


"அடுத்த தெருவில் கவுசல்யாவோட ஒண்ணு விட்ட தம்பி குரு இருக்கார் எங்க ரவிக்கு வீடு தெரியும்... போய் சொல்லிட்டு வரச் சொல்றேன்.‌.. அவர் வந்து எல்லாத்தையும் பார்த்துப்பார். மிருது பாவம் சின்ன பொண்ணு... என்ன செய்யும்!"


குரு வந்தான்.நேரம் யாருக்கும் காத்திருக்கவில்லை. வர வேண்டியவர்கள் ஒவ்வொருவராய் வந்து போக, காரியம் மடமடவென நடக்க , கவுசல்யா தன் இறுதி பயணத்தை தொடங்கி விட்டார்கள்.


மிருதுளா ஸ்தம்பித்து போய் இருந்தாள்.


இவளுடைய மேல் படிப்பிற்காக எடுத்து வைத்திருந்த பணம் இவள் அம்மாவின் இறுதி காரியங்களுக்குப் பயன்பட்டது‌


காரியம் நடக்கும் வரை குரு வீட்டினர் இவள் வீட்டில் துணைக்கு இருந்தனர்.


அம்மா ஏதோ அவசர வேலையாய் துணைக்கு இவர்களை வைத்துவிட்டு வெளியூருக்கு போயிருப்பது போல் ஒரு மாயை அவள் மனதில் தோன்றிய இருந்து. அதை மீறி சில சமயம்'அம்மா இல்லை வர மாட்டாள் இனி' என்ற எண்ணம் பந்தாய் எழுந்து வயிற்றிலிருந்து தொண்டை வரை வந்தடைக்கும். அந்த சமயங்களில் தன் கட்டுப்பாட்டை மறி கூறுவாள். எல்லோரும் தேற்றவார்கள். சமளித்துக் கொள்வாள்....


அவள் அம்மா போய் 13 நாட்கள் ஓடிவிட்டன. சுபம் முடிந்தது.


துணிகளை எடுத்து வந்து விடலாம் என்று மாடிக்கு போனாள். தண்ணீர் தொட்டிக்கு மறுபுறம் மெல்லியக் குரலில் குருவும் அவன் மனைவியும் பேசுவது கேட்டது. துயரில் எதையும் கவனிக்கும் நிலையில் இல்லாத மிருதுளா, தன் போக்கில் துணிகளை எடுத்தாள்.


"ஏதாவது முடிவெடுக்கணுமில்ல.... இப்படியே வழவழ குழகுழனு இருந்தா"


"என்ன செய்யச் சொல்றே மாவு? கவுசி அக்கா இப்படி திடீர்னு போய் சேருவானு யார் நினைச்சா?"


"திரும்ப முதல்லேர்ந்து ஆரம்பிக்காதீங்க.‌ அந்த பொண்ணை இனி என்ன செய்ய போறாதா உத்தேசம்? தனியா இங்கே இருக்க போறாளா? நம்ம வீட்ல வெச்சுக்கப் போறமா? வயசுப் பொண்ணு...."


கவனமற்ற அவள் சிந்தனையயும் தட்டி பற்களால் தட்டியது குருவின் பேச்சு மிதுலா கீழுதட்டை பற்களால் கடித்துக் கொண்டு தன் பொருட்டு இவர்கள் வீட்டில் பிரச்சினை இதுவரை இதுபற்றி யோசிக்கவே இல்லை இது பற்றி என்ன இது பற்றி கடந்த இரு வாரங்களாக யோசிக்கவில்லை மனம் அடங்கும் துறைகள் அள்ளிக் கொண்டு கீழே ஓடினான் கீழே வந்த வேகத்தில் தன் செல்போனை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வெளியே வந்தார் அந்த செல்போனை பார்த்த போது அவள் கண்கள் பனித்து அம்மாவின் கைபேசி வயசு பொண்ணு வீட்ல இருக்கு கல்லூரி போயிட்டு வர நம்ம வீட்ல ஒரு கைபேசி இருக்கும் நல்லது என்று அதிக விலை இல்லாத அதை வாங்கி இந்த வாங்கியது வசதியற்ற இந்த கல்லூரியில் ஸ்பெஷல் கிளாஸ் கல்ச்சுரல் practice என்று ஏதாவது தாமதம் ஏற்பட்டால் சற்றென்று கல்லூரி தொலைபேசியில் இந்த அம்மாவுக்கு தெரிவிக்க சுலபமாக இருந்தது இப்போது கைபேசியை இவர் கையில் இருக்கிற ஆனால் அம்மா எப்படி தொடர்பு கொள்வது என்று


முட்டிய கண்ணீரை அவசரமாக துடைத்துக் கொண்டு தோழி நந்தினியின் எண்ணுக்கு அழைப்பு விடுத்தால்.


" என்னடி? அம்மா காரியம் எல்லாம் நல்லபடியாக முடிந்ததா?"


"அதெல்லாம் ஆச்சுடி..."


" நீ எப்படி டி இருக்கே?"


"அதெல்லாம் கல்லு குண்டு மாதிரி நான் நல்லாத்தான் இருக்கேன். இப்போ எனக்கு நீ ஒரு உதவி செய்யணும்...."


என்னடி? சொல்லு." ரஞ்சனியின் குரல் கவலை வெளிப்பட்டது


"எனக்கு அவசரமாக ஒரு வேலை வேண்டும்".


"என்னது?"


"தமிழ்ல தாண்டி சொல்றேன் அம்மா போயிருச்சு அடுத்த மாசம் சம்பளம் வராது. ஏதோ நகை நட்டு சொற்ப சேமிப்புனு 2 மாசம் நான் ஓட்டலாம். எந்த உறவு வீட்லையும் போய் பார்மா உட்கார நான் விரும்பலை . அப்பா போன பிறகு அவர் பக்க உறவு சுத்தமா எங்களை கை கழுவிட்டாங்க. அம்மாவுக்கு சொந்த அண்ணன் தம்பி அக்கா தங்கைனு யாரும் கிடையாது. ஒண்ணு விட்ட உறவு தான்..."


"புரியுதுடி..."


" உன் அப்பா ஆடிட்டர் இல்ல. அவருக்கு பலபேர் கூட பழக்கம் இருக்கும்..."


" நீ பி.ஏ. சைக்காலஜி..."


"படிப்பு அடிப்படையில் தான் வேலை வேணும் இல்ல ரஞ்சி. பாத்ரும் கழுவற வேலைனா கூட..." தொண்டை அடைத்தது அவளுக்கு.


"சீ அசடு, உன் அவசர நிலை புரியது அப்பா ஒரு இடம் பத்தி பேசிகிட்டிருந்தார்... அது உனக்கு ..."


"என்ன வேலை?"

" அப்பா ஆடிட்டிங் செய்யும் எஸ்டேட் முதலாளி வீட்ல அவரோட மனைவி இறந்துட்டாங்க. ரெண்டு வயசு குழந்தையை அவரோட அம்மாவால தனியா சமாளிக்க முடியாலை . ஒரு'கவர்னஸ்' - நானி- மாதிரி நீ அந்த குழந்தையை பார்த்துக்கணும். சரிப்பட்டு வருமா?"


"அவர் தன் தகுதிக்கு ஏற்ப ரெண்டாம் கல்யாணம் பண்ணிக்கலாமே".


"பணக்காரங்க ‌... பெத்த அம்மாவே குழந்தையை பார்த்துக்க ஆள் ஏற்பாடு செஞ்சுட்டு ஹாயா இருப்பாங்க. ரெண்டாவது சம்சாரம் வந்து குழந்தையை பார்த்துக்கப் போறாங்க? படிச்ச, நல்ல குடும்பமத்து பொண்ணா குழந்தையை பார்த்துக்க ஆள் கேட்டார்களாம்.... நாகரீகம், பண்பாடு எல்லாம் காத்துக் கொடுக்க கூடிய ஆளா இருக்கணும். ஒரு நல்ல வேலை கிடைக்கும் வரை வேணும்னா, நீ போய் அந்த குழந்தையை பார்த்துக்க முடியுமா.."


"சந்தோஷமா செய்யறேன் , ரஞ்சி இருக்க இடம் , சம்பளம் எல்லாம் கிடைக்குதுனா..."


"சரி , அப்பா கிட்ட சொல்லி ஏற்பாடு செய்யறேன். குன்னூர்ல அவங்க வீடு. போய் பாரு பிடிக்காட்டி, சரிப்பட்டாட்டி எனக்கு ஒரு போன் போடு , வேற வேலை பார்த்துக்கலாம். என்ன?"


"சரி"


இந்த வாரக் கடைசியில் அவள் குன்னூரில் இருந்தாள். அன்று தான் முதல் முதலாக இரண்டு வயது குழந்தையாய் ரக்ஷனாவை சந்தித்தாள்.


முதல் பார்வையிலேயே இனி அந்தக் குழந்தைதான் தனக்கு எல்லாம் என்று ஏனோ தோன்ற சட்டென வாரி அணைத்தாள்.


"நீ என் அம்மாவா?" என்னது அது தன் மழலையில்...





? அந்த குழந்தைக்கு கேட்ட கேள்விக்கு மிருதுளா என் சொல்லுவா . அந்த விட்டுக்கு வேலைக்கு போவாள்ளா மிருதுளா ?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top