• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

மனதில் அன்றே எழுதி வைத்தேன்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Crazee queen

மண்டலாதிபதி
Joined
Oct 14, 2019
Messages
129
Reaction score
827
Age
29
Location
Pudukkottai
பகுதி -

வழக்கம் போல் குழந்தையை தூங்கச் செய்து விட்டு சாப்பிட வந்த போது தான் குருவிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது.

பேசிவிட்டு வந்தவளிடம், அவளுக்காக சாப்பிட்டாமல் காத்திருந்த வெற்றிவிழி "மாமா தானே?" என்றார்.

"ஆமாம்மா" என்றவள் மேலே சொல்ல முடியாமல் தயங்கினாள்.

"என்ன விஷயம்? சும்மா தானே?"

"ம்.... இ... இல்லம்மா... நல்ல விஷயம். அவரோட மகளுக்கு கல்யாணம். ஒரு வாரம் என்னை அங்கே வரச் சொல்றார், கல்யாணத்துக்கு."

சற்று யோசித்த வெற்றிவிழி, எதுவும் பேசாமல் சாப்பிட துவங்கினார்.

அன்று இரவு இருதயராசன் அவளை அழைப்பதாய் ஆள் வந்து சொல்ல, எழுந்து போனாள் மிருதுளா.

"குழந்தை தூங்கிட்டாளா?"

"ம்".

" உட்காருங்க".

சோபா நுனியில் அமர்ந்தாள்.

"உங்க மாமா மக கல்யாணம் பத்தி அம்மா சொன்னாங்க."

இதற்குள் வெற்றிவிழி அங்கு வந்து சேர்ந்து கொண்டார்.

"ஒரு வாரம் நீங்க கல்யாணத்துக்கு போயிட்டு வாங்க."

பளிச்சென்று அவன் சொல்ல, அவள் புரியாமல் அவனைப் பார்த்தாள்.

"குழந்தை..."

" அது என் குழந்தை. எனக்கு பார்த்துக்க தெரியும்."

முகத்தில் அடித்தாற் போன்ற பதில். பளிச், பளிச் என்று பேசுவது அவன் சுபாவம் என்பதை அவள் அறிந்திருந்தாள். சந்தித்த முதல் நாள் குழந்தை இவளை " நீ என் மம்மியா?" என்றாவுடன், " நோ, மாம் இல்ல மேடம்" என்று பட்டுக் கத்தரித்தாற் போல் திருத்தியவன்.

"எனக்கென்ன , உன் குழந்தை உன் இஷ்டம்' என்ற‌ ரோஷம் சுர்ரென்று மனதில் எழுந்தது. ஆனால், அதையும் முறி பாசம் அவளை கட்டிப் போட்டது. தான் இல்லாவிட்டால் குழந்தை கஷ்டப்படுவாளே என்று தவிப்பு ஏற்பட்டது.

" வேணும்னா, கல்யாணத்துக்கு மட்டும் ரெண்டு நாள் போயிட்டு வந்துடறேன்" என்றாள்.

"இல்ல, நீங்க ஒரு வாரம் போயிட்டு வாங்க. குழந்தை பத்தி கவலை வேண்டாம். நான் வேற ஏற்பாடு செஞ்சுக்கறேன்".

அவளுக்கு படக்கென்று. வேலையை ஒழுங்காத்தானே செய்கிறோம். எங்காவது தவறு செய்து விட்டோமா? இப்படியே வேலையிலிருந்து நிறுத்தி விடப் போகிறார்களா?

இந்த வேலை போனால் வேறு வேலை. தாமதப்பட்டாலும், வசதிகள் வசப்படும். ஆனால், அவளை உண்மையில் அங்கு கட்டிப் போட்டிருப்பது அந்த குழந்தையின் பாசமும் வெற்றிவிழி அன்பும் அல்லாவா! இந்த அன்புச் சூழல் வேறு எங்கு கிடைக்கும்.

அடிப்பட்ட பார்வையோடு நிமிர்ந்து இருதயராசன் பார்த்தாள். பின் வெற்றிவிழி பார்த்தாள். அவர் ஏனோ முகம் இறுகி அமர்ந்திருந்தார்.

"அடுத்த புதன் கல்யாணமா? வர இந்த வெள்ளி உங்களுக்கு ரெயில் டிக்கெட் எடுத்துள்ளேன், ஓ.கே?" என்றவன், இதற்கு மேல் ஒன்றுமில்லை என்பது போல் எழுந்து போனார்.

இரவு முழுவதும் சரியாக உறங்க முடியாமல் தவித்துப் போனாள் மிருதுளா.
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
@Raman @banumathi jayaraman

ரெண்டு பேருக்கும் போட்டி போல இருக்கு.
போட்டியெல்லாம் இல்லைப்பா
டென் மினிட்ஸ்ல அப்டேட் போடுவேன்னு நீங்க சொன்னதால் டின்னர் வேலையைப் பாதியில் நிறுத்திட்டு இப்போ வந்தேன், தஸீன் டியர்
 




Crazee queen

மண்டலாதிபதி
Joined
Oct 14, 2019
Messages
129
Reaction score
827
Age
29
Location
Pudukkottai
போட்டியெல்லாம் இல்லைப்பா
டென் மினிட்ஸ்ல அப்டேட் போடுவேன்னு நீங்க சொன்னதால் டின்னர் வேலையைப் பாதியில் நிறுத்திட்டு இப்போ வந்தேன், தஸீன் டியர்

அச்சச்சோ. நமக்கு சோறு தான் முக்கியம் மத்ததெல்லாம் அப்புறம்தான்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top