• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

மனதில் அன்றே எழுதி வைத்தேன்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Crazee queen

மண்டலாதிபதி
Joined
Oct 14, 2019
Messages
129
Reaction score
827
Age
29
Location
Pudukkottai
பகுதி -1

பரந்து விரிந்து தோட்டத்தைத் தாண்டி தெருவில் கார் வரும் சத்தம் கேட்டது ஓடி வந்து கதவருகே நின்றாள் மிருதுளா. கார் கதவைத் திறந்து வெள்ளை தேவதையாய் துள்ளி குதித்து ஓடி வந்து, "அம்மா" என்று மிருதுளாவை கட்டிக் கொண்டாள் ‌


அப்படியே இருவரும் ஒரு சுற்று சுற்றினார்கள். அவள் பின்னால் இறகுப் பந்தாக அவள் தோழிகளும் இறங்கி வந்தார்கள்.


"ஹாய் ஆண்ட்டி!"


"வாங்கடா" என்று அவர்கள் கன்னம் கிள்ளிய மிருதுளா , ரக்ஷானாவை விலக்காமல், அப்படியே அணைத்தபடி உள்ளே போனாள்.


"எல்லாரும் கை கழுவிட்டு வாங்க. முதல்ல ஏதாவது ஸ்நாக்ஸ் சாப்பிடலாம்" என்று கூறிவிட்டு உணவு மேஜைக்கு விரைந்தாள்.


வரவேற்பு அறையை தாண்டும் போது தான் இருதயராசன் சோபாவில் அமர்ந்து மெயில் செக் செய்து கொண்டிருப்பதை சிறுமிகள் கவனித்தார்கள். சட்டென அவர்களின் சுருதி இறங்கியது‌ அம்மாவிடமிருந்து விடுபட்டிருந்த ரக்ஷானா, அப்பாவை நோக்கி ஓடினாள்.


"ஹாய், டாட்! என்ன இவ்வளவு சீக்கிரமா வீட்டுக்கு வந்துட்டீங்க!" என்றபடி அவன் கன்னத்தில் முத்தம் பதித்தாள் ரக்ஷனா.


"ஈவினிங் கொஞ்சம் மாடிக்கு வெளியே வேலை இருக்க. அதான் சீக்கிரமா வந்துட்டேன்...சரி, போய் உன் பிரெண்ட்ஸ் கூட டிபன் சாப்பிடு" மகளை உச்சி முகர்ந்து அனுப்பினான், இதயா.


சலசலக்கும் நீரோடையாய் அவர்கள் பேசியபடி அந்த வரவேற்பறையை ஒட்டிய சாப்பாட்டு அறைக்குப் போய் உணவு மேஜையை ஆக்கிரமித்தார்கள். சுறுசுறுப்பாக மிருதுளா கோபி 65, பயறு சாலட், கேரட் அல்வா என்று கொண்டு வந்தாள். அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப சிறுமிகள்ச வாங்கிக் கொண்டார்கள் .


"பியறு கொத்தமல்லி, எலுமிச்சை, கேரட் எல்லாம் சேர்த்து செஞ்ச சாலட் முளைப் பயறு உடம்புக்கு நல்லது புரதம். அதை ஒதுக்கலாமா? என்று மறுத்த குழந்தைகளுக்கு அதுவும் அதையும் சிறு கண்டிப்புடன் தட்டில் வைத்தாள்.


அவர்கள், ஓயாமல் பேசிக் கொண்டும். அதற்கு மேல் சிரித்துக் கொண்டும் மெதுவாக சாப்பிட்டார்கள்.


"அந்த காந்திக்கு இங்கிலீஷ் தெரியலைடி"


"ஹையோ, நான் இங்கிலீஷ்ல பேசினா என் வாயை பார்த்துக்கிட்டிருக்கும் டீ..."


"ஷ் , அப்படி பேசக் கூடாதுடாம்மா. அவளும் உங்களைப் போல ஒரு பொண்ணு தானே, நீங்க தான் அவளை ஒதுக்காம, ஆங்கிலம் பேசச் சொல்லிக் கொடுக்கணும்" கையில் ஆரஞ்சு ஜூஸைசுடன் வந்த மிருதுளா சொல்ல, மொத்த சிறுமிகளும் 'கொல்' என்று சிரித்தார்கள்.


மிருதுளா புரியாமல் பார்க்க "ஹையோ.... மம்மி, அது எங்க வகுப்பு தோழி இல்ல. புது சயின்ஸ் மிஸ். இங்கிலீஷே தெரியலை" என்று சொல்ல, முகம் அசடு வழிந்தாலும். மிருதுளா சமாளித்துக் கொண்டு சிரித்தாள்.


"ஹேய் ரக்ஷா, உன் மம்மி ரொம்ப ஸ்வீட்டீ. எங்க அம்மா முன்னாடி இப்படியெல்லாம் இஷ்டப்படி பேச முடியாது" என்று ஒருத்தி தோள் குலுக்கினாள் ‌


சிரித்துக் கொண்டு மிருதுளா, மென்மையாக இதமான குரலில், "ஆமாம் உங்கம்மா நடந்துக்கற விதம் சரிதான். ஒரு தாயார் தானே தன் குழந்தைகளோட நல்லது கெட்டதை எடுத்து சொல்ல முடியும். உங்க டீச்சர் யாரையும் நீங்க கேலி செய்யக்கூடாது என்ன?"


"சரி, ஆண்ட்டி. ஆனா தப்பு தப்பா இங்கிலீஷ் பேசறதனால், பாடமே புரிய மாட்டேங்குதே."


"அது, நான் உங்க பிரின்ஸிபலை பார்த்து பேசறேன். சரியா?"


குழந்தைகள் மலர்ந்து சிரித்தார்கள்.


"ரொம்ப தேங்க்ஸ் ஆண்ட்டி... ஸ்கூல்ல டான்ஸ் பிராக்டீஸ் முடிஞ்ச பிறகு கார்ல் பிக்அப் பண்ணி, இப்படி நல்ல நல்லதா சாப்பிட கொடுத்து, விட்டுல திரும்ப கார்ல டிராப் பண்ண ஏற்படும் செஞ்சசிருக்கீங்களே, ஆண்ட்டி "என்று லோட்டஸ் ஆப் தாங்க்ஸ் ஆரம்பித்தது ஒரு சிறுமி.


"இதுக்கெல்லாம் எதுக்கு நன்றின்னு பெரிய வார்த்தை எல்லாம் சொல்லிக் கிட்டு பெரிய மனுஷி" என்று அந்த சிறுமியின் காதைத் திருகினாள் செல்லமாய் மிருதுளா.


ஆளாளுக்கு நன்றிக்கான காரணமும் நன்றியும் சொல்லிக் கிளம்பினார்கள். சிறுமிகள் வழியில் இருதயராசன்யிடம் விடை பெற்றனர்.


சிறுமிகள் மீண்டும் காரில் ஏறிக் கொண்டார்கள். ரக்ஷனா அவர்களை வழியனுப்ப கூடவே போக, மிருதுளாவும் வாசல் வரை சென்று வழக்கம் போல் டிரைவரிடம் குழந்தையை பத்திரமாக விடச் செல்லி ஆணை பிறப்பித்தாள். குழந்தைகளிடமும் போகச் சொல்லி விட்டு, அவள் வீடு நோக்கிப் போனாள்.


"இப்படி ஒரு மம்மி கிடைக்க நீ கொடுத்து வச்சிருக்கணும் ரக்ஷு. சோ ஸ்வீட்" என்றாள் ஒரு சிறுமி காரில் ஏறியபடி.


மற்றொருத்தி முகம் வாட,


"ஆமாம் எங்கம்மா திட்டிக்கிட்டே இருப்பாங்க... எப்பவும் அப்பாவோட சண்டை தான், ரக்ஷனா. உன் அப்பாவும் அம்மாவும் சண்டையே போட மாட்டாங்க, இல்ல."


ரக்ஷனா, "ம்ஹும்... என் அம்மாப்பா சோ ஸ்வீட்!" என்று தோள் குலுக்கினாள்.


கார் கிளம்ப, கையாட்டிக் கொண்டு நின்றாள் குழந்தை.


உள்ளே இருதயராசன் அருகே வந்து அம்மா வெற்றிவிழி அவன் நெற்றியில் கை வைத்து பார்த்தார்.


"என்னம்மா?"


"இவ்வளவு சீக்கிரமா வந்துட்டியே. உடம்புக்கு ஒண்ணு இல்லையே?"


"இல்லம்மா. கொஞ்சம் வெளியே போகணும்."


"ஓ!" என்றவர் முகம் சிறுத்து.


"ஆபிஸ் விஷயம் இல்லன்னு நினைக்கிறேன்"என்றார் கறாரான குரலில். விடாமல், "அவ வீட்டுக்குத்தானே!" என்றார்.


அவன் பதில் பேசவில்லை.


"இருதயராசன், இது சரி இல்லை. குழந்தை வளர்ந்துகிட்டு வரா"


அவன் அலுப்பாய் தன் அம்மாவை நோக்கினான்.


"அம்மா, குழந்தைக்காகத்தான் நான் எல்லாத்தையும் வீட்டுக் கொடுத்துட்டு வாழறேன்னு உங்களுக்கே தெரியும். புதுசா இதுலா பேசவோ ஆரம்பிக்கவோ ஒண்ணுமில்ல. ஏன் முடிஞ்சு போன விஷயத்தை கிளறி விடறீங்க?" சற்று கோபம் கொப்பளிக்கும் குரலில், அடித் தொண்டையில் பேசினான்.


வெற்றிவிழி பெருமூச்சு விட்டார். பேச்சை கேட்டபடி உள்ளே வந்த மிருதுளா, மெல்ல தன் மாமியார் அருகை வந்த மிருதுளா, அவர் தோள் மீது கை போட்டு, "அத்தை, அவர் சொல்றது சரிதானே. நீங்க ஏன் உங்க உடம்பை வருந்திக்கிறீங்க. அப்புறம் பி‌.பி. ஏறிடும். உள்ளே வாங்க . காபி எடுத்துக்கிட்டு வரேன்" என்றாள் இதமாக, டைனிங் அறையை நோக்கி அவரை நடத்தியபடி.


சாப்பாட்டு மேஜை முன் அமர்ந்த வெற்றிவிழி, இதுக்கெல்லாம் குறைச்சலில்லை. புருஷனை கைக்குள்ள போட்டுக்க மட்டும் தெரியலை" என்றார் அலுத்த குரலில்.


"அது நம்ம ஒப்பந்தத்துல இல்லையே அத்தை" என்று அவள் சிரித்தாள். கண்கள் மட்டும் கலங்கின. அதை மறைக்க அவசரமாய் சமையலறைக்குள் புகுந்து கொண்டாள் மிருதுளா.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top