• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

மனமார்ந்த நன்றிகள்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
இது என்னுடைய பதிவு இல்லையென்றாலும் சகோதரர் சொல்லி இருப்பது எனக்கும் முழுவதுமாய் பொருந்தும்.என் எழுத்துக்குத் துணை நிற்பது என் தோழமைகளே.
உரிமையாய், அன்பாய் உங்கள் தோள் இல்லையென்றால் இன்று என் எழுத்து இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

எனக்காக என்று எழுத ஆரம்பித்த பயணம் இன்று தோழமைகளுக்காக என்று மாறி இருப்பது வரம்.

துவளும் போது தட்டி கொடுத்து, தேவைப்படும் போது ஊக்கம் கொடுத்து, முதுகில் குத்தும் பல அம்புகளுக்கு அரணாய் நிற்பது உண்மையான என் தோழமைகளே.

உங்களுக்கு இன்றைய நாள் மட்டும் அல்ல...வருடத்தின் 365 நாட்களும் மனமார்ந்த நன்றியை சொல்லி கொண்டே இருக்கிறேன்.

*****************************************************************************************************************
இன்று நண்பர்கள் தினமாம், வெள்ளையன் சொல்லித்தான் நட்பின் அருமை தெரிய வேண்டுமா என்ன?

நட்புக்கே இல்லகணம் கொடுத்தது இந்தியா

வெள்ளையன் வரலாற்றில் அலெக்ஸான்டர் மட்டுமே நட்புக்கு அடையாளமாய் நிற்கின்றான், அதுவும் அருமை நண்பன் பார்மேனியொவினை கொன்றபின் தன் ராஜ்ஜியத்தை நண்பர்களுக்கு பிரித்து கொடுத்துவிட்டு செத்துவிட்டான், நண்பனுக்கான அஞ்சலி அது

பாரதமும் ராமாயணமும் நட்புக்கான இடத்தை மிக அழகாக அன்றே பதிவு செய்கின்றன‌
கர்ணனின் நட்பு பாரதத்திலும் குகனின் நட்பு அனுமனின் நட்பு ராமாயணத்திலும் அழகாக சொல்லபட்டன, நட்பின் அவசியத்தை வலியுறுத்தி சொன்ன மதம் இந்துமதம்.
வள்ளுவன் அதற்கு குறளே அமைத்தான்

எதிரியினை மிக சுலபத்தில் அடையாளம் கண்டுகொள்ளும் மனிதன் நண்பனை மிக காலம்தாழ்த்தித்தான் அடையாளம் கண்டுகொள்ள முடியும், மானிட விதி அது.
மிக அழகாக நட்புக்கு இலக்கணம் வகுக்கின்றது பாரத இலக்கியங்கள், அதாவது பழுத்த மரத்தில் பறவை கூடுவது போல் உள்ளது நட்பே அல்ல, ஏழை குடிசையில் உடைந்த மட்பாண்டத்தை தாண்டி வருவதே நட்பு

கண்ணன் குலேசன் கதை அந்த வகை

நல்ல நட்பினை ஆபத்தில் மட்டுமே உணரமுடியும்,உயிரே போனாலும் நண்பனுக்காக அதுவும் தன் உடபிறப்புகளை எதிர்த்து ஆனாலும் பரவாயில்லை என நின்றது கர்ணனின் நட்பு

நல்ல நட்பு என்பது முகஸ்துதி அல்ல, நன்பனின் முகம் வாடியதும் எவன் கலங்கி எழுகின்றோனோ அதுதான் உண்மையான நட்பு

நட்புகளில்தான் எவ்வளவு வகை? அவ்வையார் அழகாக சொல்வார்.

அதாவது நண்பர்களில் பல வகை உண்டு பனைமரம் , தென்னமரம், வாழைமரம் போன்றவர்கள்

இதில் வாழைமரம் என்பது தினமும் நீர்பாய்ச்ச வேண்டியது, குறிப்பாக காதலி போல இல்லை என்றால் நட்பு போய்விடும் .

தென்னைமரம் என்பது அடிக்கடி நீர்பாய்ச்ச வேண்டிய விஷயம் அதாவது கள்ளக்காதல் போன்றது இல்லை என்றால் அந்த நட்பும் முறிந்துவிடும்.

ஆனால் பனைமரம் என்பது நிபந்தனையற்ற நட்பு போன்றது, அதற்கு நாம் ஒரு சொட்டு நீர் பாய்ச்சவில்லை என்றாலும் அது பலன் கொடுத்துகொண்டே இருக்கும்.
அந்த பனைமரம் போன்ற நட்பு கிடைப்பதுதான் வரம், அது எளிதில் அமைவதில்லை, அமைந்துவிட்டால் அதுதான் சொர்க்கம்.

"சுக்ரீவனோடு ஐவரானொம், குகனோடு அறுவரானோம் , விபீஷ்னனோடு எழுவரானொம் என நண்பர்களை உடன்பிறப்பாக கொண்டாடுகின்றான் ராமன்.

அசோகவனத்தில் சீதைக்கும் கூட திரிசடையின் நட்பே ஆறுதல்.

இன்னும் எத்தனையோ விதமான நட்புகளை உலகிற்கு சொன்னது தமிழினம்,
அவதாரங்களுக்கும், மன்னருக்கும், பெரும் பொல்லாதவர்களும் கூட நண்பர்கள் இன்றி வாழ்ந்ததில்லை என்பதை சொல்லும் கலாச்சாரம் நம்முடையது.

காரணம் மானிட வாழ்வில் நட்பு ஒரு தவிர்க்க இயலாத அங்கம்.

தமிழர் நட்பிற்கு கொடுத்த கொளரவமும், இந்திய பாரம்பரியம் கொடுத்த பெரும் மரியாதையும், உலகில் எந்த நாடும், எந்த இனமும் கொடுத்தது இல்லை, கொடுக்கபோவதும் இல்லை

அப்படிபட்ட தமிழகத்தில் இப்பொழுது எமக்கும் முகநூலில் ஏகபட்ட நண்பர்கள் இருக்கின்றார்கள்

ஆண்டவன் எனக்கு செய்திருக்கும் மிகபெரும் கருணை இது, ஆபத்தில் எல்லாம், சில தேவைகளில் எல்லாம் இவர்கள் உருவில் அந்த ஆண்டவனையே காண்கின்றேன்
முகநூலில் கிடைத்திருக்கும் நண்பர்கள் அவ்வளவு அற்புதமானவர்கள்.

அவர்களில் குகன் போன்றவர்கள் உண்டு, சடையப்ப வள்ளல் போன்றவர்களும் உண்டு, கர்ணன் போன்றவர்களும் உண்டு, கன்ணன் போன்றவர்களும் உண்டு.

எனக்கு எழுத்து வரும் என நான் நினைத்ததில்லை, எழுதுவதாக நினைத்ததுமில்லை.
எதையோ எழுத தொடங்கினால் அது கழுத்தை பிடித்து எங்கோ இழுத்து சென்று எங்கோ முடித்துவிடுகின்றது, எப்படி இழுத்து செல்கின்றது என எனக்கு தெரியவே இல்லை
எழுதி கொண்டே இருந்தேன், திரும்பி பார்த்தால் ஏராளமான நன்பர்கள் நிற்கின்றார்கள் இது அந்த ஆண்டவன் கருணை

அந்த அற்புத நண்பர்கள் அனைவருக்கும் நண்பர் தின
வாழ்த்துக்கள்
.
உங்கள் அனைவருக்காகவும் பிரார்த்தித்துகொள்வதை விட நான் என்ன செய்ய முடியும்?
அப்படிபட்ட அபூர்வ நண்பர்களை முகநூல் கொடுத்திருக்கின்றது, அவர்களுக்கு என்னால் எதுவும் பிரயொசனமா என்றால் ஒன்றுமே இல்லை

ஆனால் பலன் எதிரா பனைமரம் போல அவர்கள் அப்படி தாங்கிகொள்கின்றார்கள்
எங்கோ கடல்கடந்து இருந்தாலும் பல காரியங்களை மாபெரும் சக்கரவர்த்தி போல் ஒரே வார்த்தையில் செய்ய முடிகின்றது

அதில் ஆண்களும் உண்டு பெண்களும் உண்டு, நல்ல நட்புக்கு ஆண் பெண் என்ற பேதமில்லை

மிகபெரும் பலம் அந்த நண்பர்கள், அவர்களை எவ்வளவும் வாழ்த்தலாம்
அவர்களுக்காக நான் என்ன செய்துவிட முடியும்? பிரார்த்திக்க மட்டுமே முடியும்.
முடிந்தவரை ஒவ்வொரு நொடியும் அதனைத்தான் செய்துகொண்டிருக்கின்றேன்
ஒருவனுக்கு சொத்தும் வீடும் பெற்றோரால் தரபடலாம் ஆனால் நல்ல மனைவி கடவுளால் மட்டும் தரபடுவாள்

அதில் நண்பர்களையும் தாராளமாக சேர்த்துகொள்ளலாம்.

உடன்பிறப்புக்கள் பெற்றோரால் கொடுக்கபடுகின்றன ஆனால் உத்தமமான நண்பர்கள் கடவுளால் மட்டும் கொடுக்கபடுகின்றனர்.

அவ்வகையில் உண்மையான அன்பும் பாசமும் கொண்ட நண்பர்களை உலகம் முழுக்க இறைவன் இந்த எழுத்தால் கொடுத்திருகின்றான்.

அந்த நண்பர்களுக்காக நொடியும் இறைவனிடம் பிரார்த்தித்து கொண்டே இருக்கின்றேன், அவன் அந்த நண்பர்களை அவர்கள் மனம் போல் ஆசீர்வதிக்கட்டும்.1627825331587.png
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top