• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

மனிதனின் கடைசி நம்பிக்கைகள் இவைதாம்!' மரங்கள் நமக்கு விடுக்கும் எச்சரிக்கை

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

selvipandiyan

மண்டலாதிபதி
Joined
Feb 7, 2018
Messages
191
Reaction score
621
Location
chennai
தாவரங்களின் பரிணாம வளர்ச்சிப் பாதையில் இது கொஞ்சம் சிக்கலான காலகட்டம். அப்போது அவற்றுக்கு ஒளிச்சேர்க்கைக்கான இலைகள் இருக்கவில்லை. நீண்ட தண்டுகள் மட்டுமே வளர்ந்திருக்கும்.

4.5 பில்லியன் ஆண்டுகள் பழைமையான பூமியில் தாவரங்கள் தோன்றியது என்னவோ 470 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்புதான். அதுவும் பாசி போன்ற தாவரங்களே. அதற்குப் பிறகு நடந்த மாற்றங்கள் 420 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்புதான் திசு போன்ற உறுப்புகளைக் கொண்ட தாவரங்கள்(Vascular plants) தோன்றின. அதிலிருந்து சில பத்து மில்லியன் ஆண்டுகளுக்குத் தாவரங்கள் அதிகபட்ச உயரமாக நிலத்திலிருந்து சுமார் மூன்று அடிவரை மட்டுமே வளர்ந்தது. அவை அன்றிலிருந்து இன்றுவரை பல்லாயிரம் கோடி உயிரினங்களுக்கு வீடாகவும் உணவாகவும் மேலும் பல விதங்களிலும் உதவிசெய்து உலகில் உயிர் வளர்ச்சிக்குப் பக்கபலமாகத் திகழ்ந்துவருகின்றன. அந்த உயிரினங்களில் நம் மூதாதையர்களும் அடக்கம். அவர்கள் பெரும்பாலும் பாறைகளிலும் குகைகளிலும்தாம் வாழ்ந்தார்கள் என்றாலும் சில சமயங்களில் மரங்களிலும் வாழ்ந்துள்ளார்கள். அதுமட்டுமல்ல, மரங்கள் இல்லாமல் அவர்கள் உயிர்பிழைத்து வாழ்ந்திருக்கவும் முடியாது.
தாவரங்களின் பரிணாம வளர்ச்சியில் முதலில் தோன்றியது பூஞ்சை போன்ற உயிரினங்களே. சுமார் 420 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்து 370 ஆண்டுகளுக்கு முன்புவரை மூன்றடி அகலம், இருபத்தாறு அடி உயரமுள்ள மரங்கள் இருந்துள்ளன. 2007-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வுகளின் மூலம் அவை மரங்கள் அல்ல, பூஞ்சைகள் என்பது தெரியவந்தது. சில சென்டிமீட்டர் அளவே உள்ள பூஞ்சைகளைக் கொண்ட நவீன உலகில் வாழும் நமக்கு அது அதிசயமாகத்தான் இருக்கும். பூஞ்சைகளோடு அதே காலத்தில் வளரத்தொடங்கிய மரங்களில் எதிலுமே இலைகள் இருக்கவில்லை. வெறும் தண்டுகள் மட்டுமே உயர்ந்து நின்றன.
தாவரங்களின் பரிணாம வளர்ச்சிப் பாதையில் இது கொஞ்சம் சிக்கலான காலகட்டம். அப்போது அவற்றுக்கு ஒளிச்சேர்க்கைக்கான இலைகள் இருக்கவில்லை. நீண்ட தண்டுகள் மட்டுமே வளர்ந்திருக்கும். அதற்குள், குழாய் போன்றிருந்த திசுக்கள் நிலத்திலிருந்து தண்ணீரையும் மண்ணிலிருக்கும் ஊட்டச்சத்துகளையும் உறிஞ்சியெடுத்து வளரும். இத்தகைய மரங்களில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதிலேயே மிகவும் பழைமையான மரத்தின் பெயர் வாட்டெயிஸா (Wattieza). 385 மில்லியன் ஆண்டுகள் பழைமையான 26 அடி உயரமுடைய அந்த மரம் நியூயார்க்கில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வகைகள்தான் உலகில் முதல் காடுகளை உருவாக்கின. அவை விதைகளிலிருந்து இனப்பெருக்கம் செய்யவில்லை. தத்தம் வித்துகளைப் (Spores) பரப்பி இனப்பெருக்கம் செய்தன.



ஜூராசிக் காலத்தின்போது கூம்பு போன்ற அமைப்புடைய வொலீமியா (Wollemia) என்ற மரங்கள் கோண்டுவானாவில் (Gondwana) வளர்ந்தன. இந்தச் சரித்திரகால (இங்கு சரித்திரம் என்று நாம் பேசுவது மனிதர்களுக்கும் முந்தைய பூமியின் சரித்திர காலத்தைப் பற்றி) மரங்களின் தொல்லெச்சங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. பலகட்ட ஆய்வுகளுக்குப் பிறகு அவை சுமார் 150 ஆண்டுகளுக்கும் முன்பே அழிந்துவிட்டதாகக் கூறப்பட்டது. ஆனால், 1994-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் வொலீமியா மரங்களில் ஒருவகை இன்றும் இருப்பதைக் கண்டுபிடித்தனர். அந்தப் பகுதி தற்போது வொலீமியா தேசியப் பூங்கா (Wollemia National park) என்று பெயரிடப்பட்டுப் பாதுகாக்கப்படுகின்றது. வொலீமியா நொபிலிஸ் என்ற அந்த வகை மரம் இப்போது வாழும் தொல்லெச்சமாகக் கருதப்படுகிறது. ஆம், பல மில்லியன் ஆண்டுக்காலப் பயணத்தில் பல பேரழிவுகளையும் கடந்து உயிர்வாழ்ந்து கொண்டிருக்கிறது இன்றைய தாவரங்களின் மூதாதை. இப்போது வெறும் 80 வளர்ந்த மரங்களே மிஞ்சியிருக்கின்றன. அதோடு சுமார் 300 கன்றுகளும் சேகரிக்கப்பட்டுள்ளன. வொலீமியா நொபிலிஸ் இப்போது இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தில் (International union for Conservation of Nature) அழியும் நிலையிலிருக்கும் உயிரினங்கள் பட்டியிலில் வைக்கப்பட்டிருக்கிறது.
உலகில் எத்தனை வகையான மரங்கள் இருக்கின்றன என்பது குறித்து இதுவரை சர்வதேச கணக்கெடுப்பு எதுவும் நடத்தப்படவில்லை. ஆனால், 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மிகப்பெரிய ஆய்வு முயற்சியில் உலகிலுள்ள மரங்களின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன்மூலம் உலகில் 60,065 வகையான மரங்கள் இருப்பதாகத் தெரியவந்தது. இதே ஆய்வை 2020-ம் ஆண்டு இன்னும் விரிவாக நடத்த முடிவு செய்துள்ளார்கள். ஒருவேளை அது மேலும் துல்லியமாகச் சில தரவுகளைக் கொடுக்கலாம்.
நாம் பார்க்கும்போது மரங்கள் அசைவற்று உதவியின்றித் தனித்து நிற்பதுபோல் தெரியலாம். ஆனால், அவை தமக்கெனத் தனித்துவமான தற்காப்பு முறைகளை வைத்துள்ளன. தம் இலைகளைச் சாப்பிட வரும் பூச்சிகளைக் கொல்வதற்காக அல்லது அண்டவிடாமல் செய்வதற்காகக் குறிப்பிட்ட சில வேதிமங்களைக் காற்றில் வெளியிடுகின்றன. அதேசமயம், தன்னருகே வளர்ந்திருக்கும் மற்ற தாவரங்களுக்கும் பூச்சிகள் வருவதை முன்கூட்டியே அறிவிக்கின்றன. அவற்றை எச்சரிக்கவும் கூடக் காற்றில் கடத்தக்கூடிய வேதிமங்களையே பயன்படுத்துகின்றன. மற்ற தாவரங்களும் உடனடியாகப் பூச்சிகளை எதிர்த்துத் தத்தம் வேதிமங்களை வெளியிட்டுத் தற்காத்துக் கொள்கின்றன. ஆச்சர்யம் இதோடு நின்றுவிடவில்லை. தாவர உலகையும் தாண்டி அவற்றால் தகவல் தொடர்பு செய்யமுடிகிறது. மரங்கள் தன் எதிரிகளின் எதிரிகளை ஈர்க்கவும் தன் வேதிமக் கூட்டுகளை வெளியிடுகின்றன. உதாரணமாக, தன் இலைகளைச் சாப்பிடும் புழுக்களைக் கொல்ல அவற்றைச் சாப்பிடும் பறவைகளைத் தன்னை நோக்கி ஈர்க்கின்றன. இது வெறும் கற்பனையல்ல, 2013-ம் ஆண்டு நடத்தப்பட்ட தாவரவியல் ஆய்வுகள் அதை நிரூபித்துள்ளன.



மரங்களால் தங்களுக்குள் பேசிக்கொள்ளவும் தங்கள் ஊட்டச்சத்துகளை தேவையான சமயங்களில் பக்கத்திலிருக்கும் மரங்களோடு பகிர்ந்துகொள்ளவும்கூட முடியும். சர்வதேச அளவில் 70 நாடுகளில் 28,000 வகைகளைச் சேர்ந்த 12 லட்சம் மரங்கள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அதில் சுமார் 500 மில்லியன் ஆண்டுகள் பழைமையான நுட்பமான தொடர்பு, இவை அனைத்துக்குமிடையே இருப்பது தெரியவந்துள்ளது. இந்தத் தொடர்பு நிலத்தடியில் நீண்டுசெல்லும் வேர்களாலும் அவற்றை மற்ற மரங்களோடு இணைக்கும் பூஞ்சைகள், பாக்டீரியாக்கள் போன்றவற்றாலும் ஏற்பட்டுள்ளது. அவை மரங்களுக்குள் தொடர்பு ஏற்படுத்துவதோடு அவற்றைத் தொடர்புகொள்ளவும் வைக்கின்றன என்றால் மிகையில்லை. லட்சக்கணக்கான மரங்களின் நிலத்தடி அமைப்புகளை ஆய்வு செய்ததன் மூலம் ஆய்வாளர்கள் அதைப் போன்ற மாதிரி ஒன்றையும் உருவாக்கியுள்ளார்கள். ஆய்வுக்குழுவில் ஒருவரான மெர்லின் ஷெல்டிரேக் (Dr. Merlin Sheldrake) பி.பி.சி-க்கு அளித்த பேட்டியில், ``உலகம் முழுவதும் நம் கால்களுக்குக் கீழே என்ன இருக்கிறதென்பதைப் புரிந்துகொள்ள முயன்றது இதுவே முதல்முறை. மூளையை எ.ஆர்.ஐ ஸ்கேன் எடுத்துப் பார்த்தால் எப்படியிருக்குமோ அப்படித்தான் இதுவும் இருந்தது. இது பூமியின் சூழலியலைப் புரிந்துகொள்வதில் நமக்குப் பேருதவி புரியும்" என்று கூறியுள்ளார்.
மரத்தை நிலத்தோடு பிடித்து வைத்திருப்பது வேர்கள். அந்த வேர்கள் குறைந்தபட்சம் பதினெட்டு இன்ச்களிலிருந்து சில நூறு மைல்கள் ஆழம்வரை நீள்கின்றன. பூமியிலுள்ள பாதிக்கும் மேலான மரங்களின் வேர்கள் முதல் ஆறு இன்ச்களில்தான் உறுதியாக நிலைகொண்டிருக்கும். அதுவே பல்லாயிரம் ஆண்டுகள் வளரக்கூடிய ஓக் மரங்களின் வேர்கள் நூறு மைல்களுக்கும் மேலாகச் செல்லக்கூடியது. ஓக், பைன், வால்நட் போன்ற மரங்களின் வேர்கள் நீண்ட ஆழத்திற்குச் செல்லக்கூடியவை. அவற்றுக்குத் தேவையான நீர் மற்றும் ஊட்டச்சத்துகள் மேல்மட்டத்திலேயே மொத்தமாகக் கிடைத்துவிடுவதில்லை என்பதால் இந்த மாதிரியான அமைப்பு. மர வகை, மண்ணின் தன்மை, தட்பவெப்பநிலை போன்றவற்றைப் பொறுத்து மரத்தின் வேர் பயணிக்கும் ஆழம் மாறுபடுகின்றது. சில மரங்கள் தம் வேர்களை நிலத்திற்கு மேலேயும் செலுத்துகின்றன. அந்த வகைகளின் வேர்களில் நுண்துளைகள் (Pneumatophores) இருக்கும். அவை அடியிலிருக்கும் வேருக்குத் தேவையான காற்றைக் கிரகித்துக்கொண்டுசெல்கின்றன. இந்த மாதிரியான வேர் அமைப்புகள் பெரும்பாலும் அலையாத்தி மரங்களில் காணப்படும். உப்புநீரில் வளர்வதால் அவை எடுத்துக்கொள்ளும் நீரிலிருந்து உப்பை வெளியேற்றுவதற்காகவும் இந்த நுண்துளைகள் துணைபுரிகின்றன.

திருட்டுகளிலிருந்து பாதுகாப்பதற்காகக் கூண்டுக்குள் வைக்கப்பட்டிருக்கும் இளம் வொலீமியா நொபிலிஸ்
வயது முதிர்ந்த மரங்களுக்கு அளவுக்கு அதிகமான தண்ணீர் தேவைப்படும். இதுமாதிரி முதிர்ச்சியடைந்த மரங்கள் வெள்ளம் ஏற்படும் பகுதிகளில் இருந்தால், அவை அதிகமான தண்ணீரைக் கிரகித்துக்கொண்டு வெள்ளத்தின் தாக்கத்தைக் குறைத்துவிடுகின்றன. தாழ்வான ஆற்றுப்படுகைகளில் முதிர்ந்த மரங்களை விட்டுவைப்பது இப்படியான பலன்களை நமக்குக் கொடுக்கும். அவை அதிகமான நீரை உறிஞ்சி வைக்கும் திறனை மண்ணுக்கு வழங்குகின்றன. அதோடு அவற்றின் வேர்கள் மிக ஆழமாகச் செல்வதால், மண் சரிவுகளையும் தடுத்துவிடுகின்றன. இவை திடீர் வெள்ளங்கள் ஏற்படும்போது மிகப்பெரிய தற்காப்பு அரண்களாகச் செயல்பட்டுச் சேதங்களைக் குறைக்கின்றன.
உதாரணத்திற்கு, முதிர்ச்சியடைந்த ஒரு ஓக் மரம் ஒரு நாளைக்கு 412.61 லிட்டர்களையும் ஆண்டுக்குச் சுமார் 151416.47 லிட்டர்களையும் நீரை ஆவியாக மட்டுமே தன்னுள்ளிருந்து வெளியேற்றுகின்றது. அப்படியென்றால் அதன் வேர்களுக்கும் இலைகளுக்கும் அனுப்புவதற்காக எவ்வளவு நீரை உறிஞ்சியிருக்கும் என்பதைக் கணக்கிட்டால் பிரமிப்புதான் மிச்சம். மரத்தின் வளர்ச்சியைப் பொறுத்து இந்த அளவு மாறுகின்றது. இப்படியாகப் பெரிய பெரிய மரங்கள் வெளியிடும் நீராவி மேகங்களில் சேகரிக்கப்பட்டுப் பின்னர் மழையாகப் பெய்கின்றது.
நாம் சுவாசிப்பதில் பாதியளவு பிராண வாயுவை உற்பத்தி செய்வது மிதவைத் தாவரங்களே. இருந்தாலும் பிராண வாயு உற்பத்தியில் மரங்களின் பங்கு மிக முக்கியமாகக் கருதப்படுகிறது. நன்கு வளர்ந்த ஒரு மரத்திலிருக்கும் இலைகளால் ஓர் ஆண்டுக்கு இருவர் முதல் பத்துப் பேருக்குப் பிராண வாயு வழங்கமுடியும். அதோடு மரங்கள் உணவு, மருந்துகள், பல உற்பத்திகளில் தேவைப்படும் மூலப்பொருள்களையும் கொடுக்கின்றது. காற்று மாசுபாட்டால் ஆண்டுக்குச் சுமார் முப்பது லட்சம் பேர் உலகளவில் இறந்துகொண்டிருக்கின்றனர். நகர்ப்புறத்தில் அதிகமாகிவரும் காற்று மாசுபாட்டையும் அதீத வெப்பத்தையும் குறைக்க இருக்கும் ஒரேவழி அதிகமான மரங்களை நடுவதுதான். இவற்றோடு நமக்குத் தெரிந்தது போலவே அவை கரிம வாயுவை உள்ளிழுத்துக் கொள்கின்றன. நீங்கள் உங்கள் காலியிடத்தில் ஒரு மரத்தை வளர்த்து வைத்தால், அந்த மரம் உங்கள் இடத்திற்குச் சுமார் ஐந்து முதல் அதிகபட்சமாக எண்பது பறவைகள் வரை வரவைக்கும். உங்களைச் சுற்றி வளமான பல்லுயிர்ச்சூழலை அந்த மரம் உருவாக்கும்.
 




selvipandiyan

மண்டலாதிபதி
Joined
Feb 7, 2018
Messages
191
Reaction score
621
Location
chennai

மரங்களோடு ஆழமாக வேரூன்றியிருக்கும் நம் வரலாற்றை மறந்து, அவற்றைச் சகட்டுமேனிக்கு அழித்துக்கொண்டிருக்கிறோம். ஒவ்வோர் ஆண்டும் மனிதர்களால் பல லட்சக்கணக்கான மரங்கள் அழிக்கப்படுகின்றன. அதனால் விளையப்போகும் மிகப்பெரிய ஆபத்துகளைப் பற்றிக் கவலைப்படாமல் சின்னஞ்சிறிய பலன்களுக்காகவே அவை செய்யப்படுகின்றன. இதைச் சரிசெய்வதற்கான முயற்சிகளை நாம் எடுப்பதற்கு இப்போதைய அறிவியல் பல வழிமுறைகளை வழங்குகிறது. அவற்றைக் கடைபிடித்து அனைத்தையும் உடனடியாகச் சரிசெய்தே ஆகவேண்டும். ஏனென்றால், நாம் செல்லவேண்டிய பாதை வெகுதூரம் இருக்கிறது.
பூமியில், பன்னிரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் இருந்த மரங்களின் அளவில் இப்போது 46 சதவிகிதம்தான் இருக்கின்றது. மரங்கள் எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை என்ற புரிதலின்றி நாம் செயல்பட்டுவிட்டோம். அதற்கான விளைவுகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். பூமி வெப்பமயமாதல் சரியாக வேண்டுமா! நடந்துகொண்டிருப்பதாகச் சொல்லப்படும் ஆறாவது பேரழிவிலிருந்து தப்பிக்கவேண்டுமா! நமக்கிருக்கும் ஒரே நம்பிக்கை மரங்கள் மட்டும்தான்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top