• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

மரணம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Jaalan

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
111
Reaction score
361
அந்த அறையில் எல்லாம் தலை கீழாய் மாறியிருந்தது. பல திருப்பங்களுடன் அந்த இரவு யுகம் போல நீண்டு கொண்டிருந்தது.


மேரியின் பிடி துப்பாக்கியின் மேல் இறுகியிருந்தது, இந்த நிமிடம், இந்த அறையில் அவள் தான் ராணி , அவள் நினைத்தது நடக்கும். மித்ரன் ஏதோ பேச முயல அவனுக்கு வாயப்பளிக்காமல்,
"முட்டி போடு .." என மறுபடியும் சொன்னாள் இம்முறை சற்று அழுத்தமாக.


மித்ரன் இன்னும் நகரவில்லை , அவன் அச்சத்தை தன் தோரணையால் சமாளித்திருந்தான். மேரி பொறுமை இழந்திருந்தாள்,


"முட்டி போடுனு சொல்றேன்லடா.." அவள் அதட்டல் பக்கத்திலிருந்த காயத்ரின் காதை துளைக்க, துப்பாக்கியை வான் நோக்கி காட்டி சுட, நிசாவும் காயத்ரியும் கண்களை இறுக மூடிக் கொண்டனர்.
டமால் என சத்தம் வரும் என்று எதிர்பார்த்த காதுகளுக்கு டிக் என்ற முனகலே கேட்டது. மேரி மலங்க மலங்க விழிக்க,
"என்னடி துப்பாக்கி சைலன்ட் மோட்ல இருக்கா.." காயத்ரி நடப்பது தெரியாமல் கேட்க,



"துப்பாக்கி சுடலக்கா.." மேரி கிசு கிசுத்தாள் பரிதாபமாக,
"கன் லாக் ஆயிருக்கு.." இப்போது கர்வம் மித்ரனின் குரலில் தெரிய , சன்னலிலிருந்து காற்றும் அவன் பக்கம் அடித்தது.



"ஆஆ.. இது என்னாடி பொல்லாத லாக்கு, துப்பாக்கி சுடும்னுன்னா கேள்வி பட்ருக்கோம் , இதென்ன மாயத் துப்பாக்கியோ" அலுத்துக் கொண்டாள் காயத்ரி.



"அது என் கைல தான் சுடும் .. மை டியர் மாமி"



"அதான் இப்போ உன் கைல இல்லியே.." சிமிட்டினாள் நிசா சிறு குழந்தையாக.



"இப்ப வரும் பாரு.." மித்ரன் தன் பையிலிருந்து எதையோ எடுத்து அதை அமுக்க , அதனுள்ளிருந்து ஒரு கத்தி எட்டி பார்த்தது.



"இதோ.. பாருடா அம்பி .., என்னதானாலும் உன்னான்ட இருக்கறது வெறும் கத்தி, நாங்க துப்பாக்கி வச்ருக்கோம், கத்தி பெருசா..? துப்பாக்கி பெருசா.. சமத்தா கத்திய கீழே போட்ரு .. உன்ன மன்னிச்சு விட்டுடறோம்.."



மித்ரன் முகம் கோபமாக மாற,



"இல்ல.. நீ எங்கள மன்னிச்சு விட்டாளும் பரவாயில்ல , நாம பிரண்ட்ஸ் ஆயிட்லாமே" ஈஈஈ யென அசட்டு சிரிப்பு உதிர்த்தாள் காயத்ரி.



மித்ரன் பொறுமையிழந்தவனாய்,
"துப்பாக்கிய கீழ போடுடி.." முழங்க , அந்த அறையே அலறியது. அறையே அலறும் போது, காயத்ரி என்ன செய்வாள், பதற்றத்தில் மேரி கையிலிருந்து துப்பாக்கியை பிடுங்கி கீழே போட்டாள். அது சறுக்கி கொண்டே மித்ரனை வந்தடைந்தது.
மேரி அதிர்ச்சியிலிருந்து மீளாமல் , வாயை திறந்த வாறே இருக்க. அவள் அதிர்ச்சி ஆத்திரமாக மாறும் முன், காயத்ரியே்பேசத் தொடங்கானாள்.
"நீங்கள்லாம் சிக்குனு இருக்கேள் ஓடிருவீங்க, என்ன நினைச்சு பாருங்கோ.. நான் இந்த உடம்ப தூக்கி ஓடுறதுக்குள்ள, அவன் கத்திய வச்சு நான் மதியம் சாப்ட காரக் குழம்ப கின்டி பாத்துருவான்டி.."



இம்முறை காயத்ரியை திட்ட வேண்டும் என்று தோணவில்லை , அதை விட பெரிய பிரச்சனை அவள் முன்னால் இருக்கிறது, இல்லை நிற்கிறது கையில் துப்பாக்கியுடன்.
மித்ரன் துப்பாக்கியின் தலையை முன்னும் பின்னும்
ஆட்டி சுளுக்கெடுப்பது போல ஏதோ செய்ய , அது மீண்டும் சுடத் தயாரானது. முதல் புல்லட் யாருக்கு என்று மூவரும் மனதிற்குள் இங்கி பிங்கி போட்டுக் கொண்டிருக்க, அவன் அவர்களை சிறிதும் சட்டை செய்யாமல், மயங்கி கிடந்த சாமியை நோக்கி சென்றான். அரை பிணமாய் கிடந்த அவனை சட்டையை பிடித்து தூக்கி , சரமாரியாக அடித்தான். அவனது ஒவ்வோர் அடியும் தோழிகளின் அடி வயிற்றில் இடியாய் இறங்கிக் கொண்டிருந்தது.
காயத்ரி மெதுவாக நிசாவின் காதில் கிசு கிசுத்தாள்,
"கொலை கேஸ் அவன் மேல தாண்டி ., நீங்க தான
சாட்சி.."
"உஷ்ஷ்ஷ்......" என்றாள் நிசா.
மேரிக்கு தன் வாழ்க்கையின் கடைசி நிமிடங்கள் கரைவது ஓடும் கடிகார முள்ளில் தெரிந்தது.. அந்த முள்ளை போலவே, எவ்வளவு நேரம் ஓடினாலும் ஒரே இடத்திற்கு தான் வருகிறார்கள் இவர்களும்.



தன் ஆத்திரம் குறைந்ததும் ஏறக்குறைய உயிரற்ற அந்த உடலை தரையில் சரித்தான், அவனது பார்வை அடுத்தது நேராக மேரியின் மேல் விழுந்தது.
மேரி பயத்தில் பின்னால் பதுங்க முயல, கால் இடறி காயத்ரி நிசா மேல் விழ , மூவரும் கீழே விழுந்தனர். அது மித்ரனுக்கு சுலபமாக முடிய அவள் அருகில் மண்டியிட்டு, அவள் கண்ணை நேராக பார்த்தான். அவன் முகமெங்கும் சாமியின் ரத்தம் சிதறலாய் வண்ணமிட்டிருக்க, கண்கள் மட்டும் இருள் குகையினுள் பாயக் காத்திருக்கும் புலியின் மின்னும் கண்களை நினைவூட்டின.
பளார்ர் என ஒரு அறை விழுந்தது மேரியின் கன்னத்தில். அவள் இதழ் ஓரத்தில் வந்த ரத்தம் வாங்கிய அறையின் தாக்கத்தை பிரதிபலித்தது.
தன் தோழியின் நிலையை கண்டு வந்த கோபமும் உயிர் பயத்தால் தடைபட கண்ணீர் மட்டும் வெளியே கசிந்தது, காயத்ரி நிசா கண்களில். அவன் அடுத்த முறை அடிக்க ஓங்க, அவன் கால்களில் விழுந்து கெஞ்சினர் , அவர்களை உதைத்து தள்ளியவன், மூவரையும் மீண்டும் கட்டிபோட்டான் இம்முறை வாயையும் விட்டு வைக்கவில்லை.
அவன் கோபம் பெருமூச்சாக வெளிவந்து கொண்டிருக்க , தன் அலமாரியிலிருந்து தூசு தட்டி , ஏதோ எடுத்தான், அதை தன் துப்பாக்கியின் கொள்ளிவாயில் மாட்டி திருகினான். அது சைலன்சர் என்பது புரியுமளவு நிசா ஆங்கில படங்கள் பார்த்திருந்தாள். அவளுக்கு மட்டும் அடுத்து நடக்க போவது புரிந்திருந்ததால் , காது கிளிய கத்தினாள் ஆனால் பாவம் அவள் வாயில் ஒட்டியிருந்த ப்ளாஸ்டர் அனைத்து சத்தத்தையும் உட்கிரகித்து அனத்தலை மட்டும் ஏப்பமென விட்டது.
முதலில் சாமியின் பக்கம் தான் திரும்பினான். துப்பாக்கியை அவன் மார்பில் முத்தமிடும் தொலைவில் வைத்து, அவன் வாயை பொத்தும் வேளையில், கடைசி ஆயுதமாக மித்ரனை காரி உமிழ்ந்தான் சாமி. அது மித்ரனின் கண்ணில் பட, அனிச்சையாக சாமியை கீழே போட்டு விட்டு தன் பாக்கெட்டிலிருந்த கர்ச்சீப்பால் தன் முகத்தை துடைத்தான். மறுபடியும் துப்பாக்கியை எடுக்க முயல, அவன் கைகள் காற்றினில் பறப்பதாய் உணர்ந்தான், அறை முழுதும் ஓளி மங்கி மங்கலானது, தலை கிறு கிறுவென சுற்ற தன் கையிலிருந்த கர்ச்சீப்பை பார்த்தான். அது சாதாரண கர்ச்சீப்பாக இருந்தால் பரவாயில்லை, அதுதான் நிசா குளோராபார்மில் குளிப்பாட்டிய கர்ச்சீப் ஆயிற்றே.. நிசா பிளாஸடர் ஒட்டிய வாயினுள் சிரித்துக் கொண்டிருந்தாள்.
மித்ரன் மயக்கத்தில் சரிந்து பொத்தென கீழே விழுந்தான் . அவன் துப்பாக்கிக்கு இம்முறையும் வேலையில்லை.

தொடரும்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
நான்தான் First,
ஜாலன் டியர்
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ஜாலன் டியர்
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top