• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

மர்மங்கள்-1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Crazeequeen

நாட்டாமை
Joined
Jun 27, 2019
Messages
74
Reaction score
298
Location
Pudukkottai
அனுஸ்ரீ தன்னை அழகாக அலங்கரித்துக் கொண்டாள்! , மேக்கப் சரியாக இருக்கிறதா என்று ஆளுயரக் கண்ணாடியில் ஒருமுறைக்கு பலமுறை பார்த்துக்கொண்டாள்.

பின்னால் வந்து நின்றான் தம்பி கவின்.

" 'சூப்பரா இருக்கே '! கல்யாணம் அப்பாவுக்கா இல்ல உனக்கா?"

"ஏண்டா... நான் அலங்காரம் பண்ண கூடாதா?"

"ராத்திரி தூங்கும்போது கூட மேக்கப் இல்லாம நீ தூங்க மாட்டியா?"

" அனு , கவின் 'டிபன் சாப்பிட வாங்க...."

அம்மா குரல் கொடுக்க இரண்டு பேரும் வெளியே வந்தார்கள்.

"அம்மா சீக்கிரம். நான் வெளியே போகணும் - அனு அவசரப் படுத்தினாள்.

"எங்கடி போற? "

"இப்படி கேட்கப் போன காரியம் உருப்படுமா...?"

இருவரும் சாப்பாட்டு மேஜைக்கு வர, அப்பா பரபரப்பாக வந்தார்.

"கலை புறப்படு..... நேரம் ஆச்சு."

"இதோ வந்துட்டேன்! அனு நீ எங்கேயும் ஊர் சுற்ற வேண்டாம் நாளைக்கு கல்யாணம் வந்தது போகணும் நிறைய வேலை இருக்கு. கவின்.... உன்னையும் தான்.

"டிபனை சீக்கிரம் குடுடி அம்மா சொல்றதைக் கேளு."

ஆவி பறக்க பூரிகளை பொரித்து எடுத்து வந்தால் இஷ்மா.

'ஹாட் பேக்'கில் குருமா மணம் பரப்பியது.

"ஏண்டி... இன்னைக்கும் அதுதான் வேலை பார்க்கணுமா ? நாளைக் கழித்து அவளுக்கு கல்யாணம்டி ! என்ன நடக்குது இந்த வீட்ல ?" அப்பா நன்மொழியன் சிற....

"நான் செய்ய மாட்டேன்னா சொன்னேன் ?" - அம்மாவும் சொன்னது,

"அனு ! நீயும் பச்சை குழந்தை இல்ல. படிச்சு, வேலைக்கு போற பொண்ணு. இத்தனை நாள் உங்களுக்காக இஷ்மா பொறுப்பாகப் வீட்டு வேலை செஞ்சா. இனி நீ அந்த இடத்துக்கு வரணும் புரியுதா.‌...?"

அப்பா கட்டளையிட்டார்.

"சாரி டாடி ! நான் சமையல் கட்டுல அடங்குற பொண் இல்ல சாதிக்கப் பிறந்தவ."

"நாங்க எல்லாரும் போதிக்க பிறந்தவங்களா ?" - கவின் சீண்ட.....

"எல்லாரும் சாப்பிடுங்க. 'டிபன்' ஆக போகுது. கவின் உனக்குப் பிடிச்ச புதினா சட்னியும் இருக்கு"- இஷ்மா சொல்ல,

"அக்கா, 'சிக்கன்'ல குழிப்பணியாரம் செஞ்சாங்க டி.வி.' யில நீ செஞ்சு தருவியா ?"

"புகுந்த வீடு போன பிறகு அங்கு போய் செய்து சாப்பிடுவா" - அனு சொல்ல,

"அக்கா.... நீ என்ன செய்வே...?"

"நானும் இப்பவே விட்டாச்சு ! அவருக்கு பிடிக்காது எனக்கு எதுக்கு?"

அனு உட்கார்ந்தாள்.

"இது ரொம்ப தப்பு. உணவு, உடை, கருத்து ..... இது மூன்றையும் பெண்களுக்கு சுதந்திரம் வேண்டும் புருஷன் சொல்படி கேட்கணும்னு அவசியம் இல்ல."

" அம்மா..... புரட்சித் திலகம் கல்யாணம் முடிகிற வரைக்கும் உன் திருவாய் மூடு."

கலகலப்பான குடும்பம் அது !

நன்மொழியன் ❣



காய்கறி மொத்த வியாபாரம். தவிர... அரிசி மண்டி வடகம் வற்றல் ஊறுகாய் ஏற்றுமதி என பல சங்கதிகளும் தன் தலையில் ஏற்றுக்கொண்டு பெரிய அளவில் சம்பாதிக்கும் மனிதர்.

மனைவி சுமதி ❣

குடும்பத் தலைவி



மூத்தவள் இஷ்மா ,

'எம்.காம்.' படித்துவிட்டு தனியார் வங்கியில் அதிகாரி.




அடுத்தவள் அனு ஸ்ரீ ❣



' விஷுவல் கம்யூனிகேஷன்' முடித்து மீடியாவில் வேலை பார்க்கும் பெண். பத்திரிகை தொலைக்காட்சி வலைதளம் என சகலத்திலும் வலம் வரும் துணிச்சலான பெண்.

அடுத்து கவின் ❣

வீட்டில் கடைக்குட்டி மற்றும் ஒரே பையன்.




பொறியியல் மூன்றாமாண்டு படிக்கும் சுறுசுறுப்பான மாணவன்.

இஷ்மாக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு தான் கல்யாணம் நிச்சயமாயிற்று.

மாப்பிள்ளை ஸ்ரீநிவாஸ் ❣




'எம்.டெக்.' முடித்துவிட்டு , விளம்பர நிறுவனம் ஒன்றில் உயர் அதிகாரி. மாதத்தில் பாதி நாள் வெளிநாட்டில் ! அப்பா அம்மாவுக்கு ஒரே மகன்.

வலைதளத்தில் பார்த்து பிடித்து பேசி முடிவான திருமணம். அவர்கள் வசதி படைத்தவர்கள் எதையும் எதிர்பார்க்கவில்லை.

நன்மொழியன் எதற்கும் குறைந்தவர் இல்லை. தங்க, வைர நகைகள் மகளுக்கு போட்டு பிரமாண்டமான கல்யாணத்தை நடத்த போகிறார்.

நாளை காலை மண்டபத்துக்கு செல்ல வேண்டும்.

மாலையில் வரவேற்பு: மறுநாள் கல்யாணம் !

காலில் சக்கரம் கட்டாத குறையாக குடும்பம் சுழன்று கொண்டிருக்கிறது.

சாப்பிட்டு முடித்தார்கள்.

'போன்' வந்தது. எடுத்தாள் இஷ்மா.

ஸ்ரீநிவாஸ் தான் !

"இஷ்மா , கல்யாணம் முடிந்து மறுநாள் நம்ம லண்டன் போறோம்... தேனிலவுக்கு இப்பதான் 'கன்பார்ம்' ஆச்சு. அத்தையோட அதுக்கும் சேர்த்து துணிமணிகள் 'பேக்' பண்ணிக்கோ."

"சரிங்க."

"பத்து நாள் வெளிநாட்டில் தான் ! அங்கிருந்து ஐரோப்பா இது உலக சுற்றுலா."

"ஆகட்டுங்க."

ஸ்ரீநிவாஸ் சொன்னது அப்படியே தன் பெற்றோரிடம் சொல்லி முடித்தாள் இஷ்மா.

"அக்கா ! கொடீஸ்வரன் குடும்பத்துக்கு வாக்கப்பட போற நமக்கெல்லாம் இனிமே உட்கார வெச்சு விமானத்துல தான்" - கவின் சொல்ல.

"உன்னை யார் கூட்டிட்டு போவாங்க?"

"ஏண்டி அப்படி சொல்ற ! அதற்குக் கூடப்பிறப்புகள் இல்லை. நீங்க ரெண்டு பேரும் தான். நான் உங்களை விட்டுட்டுப் போக மாட்டேன்."

"அனு ! இந்த வீடு மாதிரி உன் தம்பி தங்கச்சி எல்லாம் கொஞ்சம் முடியாது. மாப்பிள்ளை உடன் மனநிலை பார்த்துட்டு செய்யலாம். முதல்ல நீ சந்தோசமா இருக்கணும்."

"அம்மாவுக்கு பொறுக்காதே!"

"சரி.... நான் கிளம்புறேன்".

"அனு .... அப்பா உன்னை வெளியே போக வேண்டாம்னு சொன்னார்."

"மூணு மணிக்குள்ள வந்துடுவேன்க்கா."

"கலை .... நம்ம மண்டபத் ஒரு தடவை பார்க்கணும். புறப்படு... அங்கே நிறைய வேலை இருக்கு."

"சரிங்க."

"கவின் நீ இஷ்மா கூட இரு. கல்யாண பொண்ணு வீட்ல தனியா விட வேண்டாம்.

"சரிப்பா"

"அப்பா... நீங்க கார்ல போற வழியில என்னை இறக்கி விடுறீங்களா ?" - அனு கேட்க.

"வண்டி என்னாச்சு?"

"ரிப்பேர்ப்பா."

"சரி.... வந்து தொல!"

அனு, 'பேக்'கை மாட்டிக்கொண்டு சிரித்தபடியே அப்பாவுடன் புறப்பட்டாள்.

" இது அடங்காத குதிரை ! இதுக்கு ஒரு நல்ல மாப்பிள்ளை எங்கே தேடி பிடிக்கிறது? "

அம்மா புலம்பிக் கொண்டு காரில் ஏற... அது புறப்பட்டது.

அந்தத் தொலைக்காட்சி அலுவலகம் முன் காரை நிறுத்தச் சொல்லி அனு இறங்கிக் கொண்டாள்.

"சீக்கிரம் வீட்டுக்கு போயிடும்மா."

"சரிப்பா".

அனு உள்ளே வந்தாள். 'மீட்டிங்' தொடங்கவில்லை.

"என்னப்பா... ரொம்ப நேரம் இருக்குமா ? "

"நீ 'மீட்டிங்' வர வேண்டாம். உனக்கு 'அவுட்டோர்' (outdoor) தான்".

"ரொம்ப நல்லது."

தனக்காக ஒதுக்கப்பட்ட பணியை வாங்கிக் கொண்டு அதற்கான நடைமுறை சங்கதிகளில் முடித்துவிட்டு வெளியே வந்தாள்.

"அனு ! உங்க அக்கா கல்யாணத்துக்கு நம்ம சேனலில் இருந்து 50 பேர் 'ரிசப்ஷனுக்கு' வர்றோம்."

"ம்... நல்ல பரிசு கொண்டு வாங்க. ஓசில தின்னுட்டு போயிடாதீங்க."

"எப்படி பேசுறா பாரு ?"

"ஆமாம்டி.... எங்கப்பா பல லட்சங்கள் செலவழிக்கிறார். நீங்க சும்மா வந்து தின்னுட்டு போனா எப்படி?"

"ஆனாலும், இவளுக்கு இத்தனை கொழுப்பு ஆகாது."

"நான் இனி வேலைக்கு அடுத்த வாரம் தான் வருவேன். 'பை.... பை'."

அனு புறப்பட்டு , அந்த நட்சத்திர ஹோட்டலுக்கு வந்து விட்டாள்.

ஏழாவது மாடியில் 'டான்ஸ் மாஸ்டர்'.

மறுபடியும் செல்போனில் உறுதிப்படுத்திக் கொள்ள... அவளது உதவியாளர் மொட்டை மாடியில் உள்ள 'கார்டனில்' காத்திருக்க சொன்னார்.

" ஏன் இங்கே டான்ஸ் ஆடிக் காட்டப் போறாரா ?"

"எஸ் மேடம் !"

"சரி... நீங்க சொன்ன இடத்துல இருக்கோம்."

'காமிரா' உள்ளிட்ட உபகரணங்களுடன் நட்சத்திர ஹோட்டல் லின் மொட்டை மாடிக்கு வந்தார்கள்.

நகரமே தெரிந்தது. அந்த உயரத்தில்...‌

அந்த 'டான்ஸ் மாஸ்டர்' சமீபத்தில் தேசிய விருது பெற்றவர் அவருடன் ஒரு பேட்டி !

அனு , காமிராமேன் லால்...‌ மற்ற உதவியாளர்களுடன் அங்கே காத்திருந்தாள்.

பெரிய மொட்டை மாடி.

அனு , மெதுவாக சுற்றி அந்தப் பிரதேசத்தில் நடக்கத் தொடங்கினாள்.

அவளிடம் உள்ள நவீன வெளிநாட்டுக்குப் 'காமிரா'வை வெளியே எடுத்தாள்.

சுற்றிலும் வான் முட்டும் கட்டிடங்கள்.

'ஸ்பெஷல் லென்ஸ் பயன்படுத்தி இயற்கையை ரசிக்கத் தொடங்கினாள். சந்தோஷமாக இருந்தது.

பார்த்துக் கொண்டு வர... ஓரிடத்தில் அவளது பார்வை 'படக்கென்று நின்றது.

பாதி கட்டப்பட்ட பல மாடிக் கட்டிடம். அதன் உச்சியில் ஆளை உறைய வைக்கும் காட்சி.

ஒரு பெண்ணை ஆண் உருவம் கழுத்து நெரித்து கொலை செய்து கொண்டிருந்தது. ஆணின் முதுகு பகுதி தான் தெரிந்தது முகம் தெரியவில்லை.

ஆடிப் போனாள் அனு.

சுவரின் விளிம்பில் வைத்து கழுத்தை நெறிக்கும் அவன்.

அந்தப் பெண் துவண்டு சரியும் நேரம், அவனது முகம் முன்னால் தெரிந்தது.

அனு அவசரமாக அழுத்தமாக அதை 'போக்கஸ்' (focus) செய்ய...

அந்தப் பெண் சரிந்தாள்.

அவளைத் தொட்டுப் பார்த்து இறந்துவிட்டால் என்பதும் ஊர்ஜிதம் செய்துகொண்டு நிமிர்ந்தான்.

இப்போது அவனது முகம் முழு உருவம் பளிச்சென்று வெளிப்பட்டது.

அவன் மறுப்பக்கம் ஓடுவது தெரிந்தது.

படிகளில் இறங்கிக் கீழே போகிறான்.

பட்டப்பகலில் பயங்கரமாக கொலை.

ஆள் ஆரவாரமற்ற கட்டிட உச்சியில் !

அனு சகலமும் படம் பிடித்து விட்டாள். பார்த்த ஆள் போல் தோன்றியது.

அதைவிட சரிந்து விழும் பெண்ணின் மேல்தான் அனுவின் கவனம் அதிகமாக இருந்தது.

சகலமும் அவளது நவீன கருவியில் படம் ஆகிவிட்டது.

"அனு. டான்ஸ் மாஸ்டர் வந்துட்டாரு. சீக்கிரம் வா."

"இதோ வந்துட்டேன்."

இதயம் முழுக்க ஒரு கொலையில் இருக்க , ஒரு மாதிரி சமாளித்து அந்தப் பேட்டியை முடித்தாள்.

ஒரு மணி நேரத்தில் வெளியே வந்தார்கள்.

'வீட்டில் போய் கணினியில் போட்டுப் பார்க்க வேண்டும்.'

'இந்த ஆள் ரொம்ப வேண்டப்பட்டவர் யாரது ?'

முகம் நினைவுக்கு வரவில்லை!

? ஹலோ ரீடர்ஸ் ❣

உங்களுக்கு புது கதையோட வந்திருக்கேன் இதுவரைக்கும்

❣காதல் குடும்பம் எழுதினான். இப்போ வித்தியாசமான கதையோட வந்திருக்கேன் அதுவும் கிரைம் கதையோட வந்திருக்கேன். மற்ற கதை மாதிரி இந்தக் கதைக்கும் உங்க சப்போர்ட் எதிர்பார்க்கிறேன். அப்போ தான் அடுத்த யூ. டி வரும்.





 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
உங்களுடைய "மர்ம மணக்கோலம்"-ங்கிற
அழகான அருமையான புதிய
லவ்லி நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
தஸீன் பாத்திமா டியர்
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
இஷ்மாவின் மாப்பிள்ளை ஸ்ரீநிவாஸ்தான் அனுஸ்ரீ பார்த்த அந்த கொலைகாரனா?
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top