• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

மர்மங்கள்-2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Crazeequeen

நாட்டாமை
Joined
Jun 27, 2019
Messages
74
Reaction score
298
Location
Pudukkottai
ஸ்ரீநிவாஸ் அப்பா , அம்மா பரபரப்பாக இருந்தனர். வீடு முழுக்க உறவுக்காரர்கள்.

அப்பா ஏழிசைவண்ணம் பல கோடிகளுக்கு அதிபதி.

பல்வேறு கம்பெனிகளின் சொந்தக்காரர்.

அத்தனையும் இருந்தும், ஸ்ரீநிவாஸ் எதிலும் தலையிடாத காரணங்கள்.... அவனுக்கென ஒரு
விளம்பர நிறுவனம் இருந்து தான். இது தவிர உலகளாவிய அளவில் நண்பர்கள் பரவிக் கிடக்க.... எந்த நேரமும் வெளிநாட்டுப் பயணம் தான்!.

பெற்றவர்களே அவனை மாதத்தில் ஒரு முறை சந்தித்தால் அதிகம். கல்யாண பேச்சை ஒரு மாதமாக நடத்தி, அம்மா வண்ணமதி அவனை 'சென்டிமென்டாக லாக் ' செய்து, அவனே இணையத்தில் பெண்ணைத் தேர்ந்தெடுத்து இறுதியில் சம்மதித்தான்.

"மற்ற ஏற்படுகளை செஞ்சிரும்மா."

" டேய்.... கல்யாணத்துக்கு நீ தான் வரணும். நீ வந்து தான் தாலி கட்டணும் . எங்களை கேவலப்படுத்திடாதே !"

திருமணம் தீர்மானிக்கப்பட்ட பிறகு இஷ்மாயுடன் தினமும் போனில் பேசுகிறான் . அவளை ஓரிரு முறை வெளியே அழைத்துச் போய் சாப்பிட்டு.... எல்லாம் நடந்து கொண்டிருக்கிறது.

இஷ்மா இரண்டு முறை ஸ்ரீ வீட்டுக்கு வந்துவிட்டார் ஆனால் அவன் ஒரு தடவை கூட இஷ்மா வீட்டுக்கு வரவில்லை.

அவளுக்கு அது பெரிய மனக்குறை. கேட்டுவிட்டாள்.

" வீடு ... நான்தான் அந்த வீட்டுக்கு மாப்பிள்ளை ! இனிமே அடிக்கடி இதுதான் வந்து தானே ஆகணும்?"

அப்பா நன்மொழியன் , அம்மா கலைக்குறிஞ்சி , தம்பி கவின் எல்லாரிடமும் ஸ்ரீ போனில் பேசி விட்டான்.

இதுவரை பேசாதது அனுவிடம் மட்டும்தான் !

" எனக்கு விளம்பர நிறுவனம். அவளும் 'மீடியா'வுல இருக்கா. அவளை அதிகம் பயன்படுத்துகிறேன். அவ உதவி எனக்குத் தேவைப்படும் ‌."

இஷ்மாயிடம் சொன்னான்.

இதை தங்கையிடம் சொன்னபோது ..... அனுப் பெருமைப்பட்டாள்.

" என்னங்க ..... நாளைக்கு சாயங்காலம் நாலு மணிக்கு நாம மண்டபத்துக்கு போகணும் ."

" உன் பிள்ளைக்கு ஞாபகப்படுத்து . சொதப்பிடப் போறான் ."

" நடிகர்கள், அரசியல்வாதிகள், பிரபலங்கள் எல்லாரும் வர்றாங்க ."

" சம்பந்தி கிட்ட சொல்லியாச்சா ?"

அப்போதுதான் போன் அடித்தது .

" அவர் தான் பேசுறார் " என்றவர் .

" எங்கே இருக்கீங்க ?" என்று கேட்டார்.

" உங்க வீட்டு வாசல்ல."

வாசலுக்கு வந்து ஏழிசைவண்ணம் வரவேற்றார்.

மண்டபத்தில் விஐபிகளுக்கு வரவேற்பு விசேஷ இருக்கை என்ற சகல ஏற்பாடுகளையும் நன்மொழியன் விவரிக்க.....

ஏழிசைவண்ணம் அசந்து போனார் ‌

" பிரமாதமா செஞ்சு இருக்கீங்களே?"

" பணம் பெருசு இல்ல. வர பெரிய மனுஷங்க முகம் சுருங்காமல் வாழ்ததணும் இல்லையா ?"

வண்ணமதி உத்தரவுபடி பழரசம் வந்தது .

" மதியம் சாப்பிட்டுட்டு போகலாம் ."

" இல்லைங்க..... நேரம் இல்ல. மாப்பிள்ளை வெளியே போயிருக்கார் ?"

" ராத்திரி தூணில் கட்டி வச்சுட்டு நாளைக்கு காலைல மண்டபத்துக்கு சரியான நேரத்துக்கு கொண்டு வந்து தரும்".

' போன்' அடித்தது ஏழிசைவண்ணம் எடுத்தார்.

" அப்பா.‌.. நான் ஸ்ரீ பேசுறேன்."

" சொல்லுப்பா சம்பந்தி வந்திருக்கார் ."

" அது இருக்கட்டும்ப்பா ! நான் சொல்ற இடத்துக்கு நீங்க உடனே வரணும் ப்ளீஸ் ப்பா."

" எங்கே.... எதுக்கு ?"

" வாங்களேன்..... நான் நேர்ல சொல்றேன் ."

" என் பிள்ளை அவசரமாக வர சொல்றேன் நான் கிளம்புறேன் ."

" நாங்களும் புறப்படுறோம் ."

ஏழிசைவண்ணம் காரில் ஏறினார் .

" டிரைவர் நமது 20 மாடி . ஸ்ரீ கன்ஸ்டிரக்ஷன்ஸ் ... நாவலூர் பக்கனனத்தில அங்கே போ ."

எல்லாம் நவீன வசதிகள் கொண்ட வெளிநாட்டு நிகரான தரத்தில் பல ஆயிரம் கோடி முதலீடு .

பணம் படைத்தவர்கள் மட்டும் வாங்க முடிகிறது வீடுகள் .

ஏழிசைவண்ணம் அரை மணி நேரத்தில் அந்த இடத்தை அடைய ... ஏராளமான கூட்டம் - போலீஸ் வாகனங்கள் !

காரைவிட்டு இறங்கி ஸ்ரீ ஓடி வந்தான்.

கூடவே உயர் போலீஸ் அதிகாரிகள்.

" என்னப்பா....?"

போலீஸ் அதிகாரி இவருக்கு கை குலுக்கினார்.

" மேல வாங்க சார்."

வேலைக்காக அமைக்கப்பட்ட ஒரு 'லிப்ட' (lift) முலம் ஏழெட்டு பேர் உச்சிக்கு வந்தார்கள்.

அது விஸ்தாரமான பெரிய மொட்டை மாடி.

அங்கும் போலீஸ் படைகள் சூழந்திருக்க, அருகில் நெருங்க....

ஒர் இளம் பெண் மல்லாந்து கிடந்தாள்.

ஏழிசைவண்ணம்க்கு அதிர்ச்சி !

" யாரது.... என்னாச்சு ?"

" ஒரு பெண் செத்துக் கிடக்காப்பா. டாக்டர் வந்து பார்த்துட்டார். உயிர் இல்லை."

" யாரிது ? எப்படி நம்ம கட்டிட உச்சிக்கு வந்தா?"

" இங்கே 'மேஸ்திரி'கள் , வேலையாட்கள் யாரும் இன்னிக்கு இல்லை. வேலையும் நடக்கல. வாராந்திர லீவு நாள். ஒரு 'செக்யூரிட்டி' மட்டும் தான் இருந்திருக்கார். அவர் ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை ரோந்து வருவார். அப்படி வந்தப்ப இந்தப் பெண் செத்துப் கிடந்திருக்கா."

" இவ மேல வந்ததை நீங்க பார்க்கலை யா?"

" டீ குடிக்கப் போன் நேரத்துல போயிருக்கலாம் சார்."

" இவர் நம்ம ' சூப்பர்வைசருக்கு ' தகவல் தந்து , அவர் 'என்ஜினீயரை' கூட்டி வந்து பார்த்துட்டு , எனக்கு சொன்னாங்க. நான் போலீஸ் க்கு புகார் கொடுத்துட்டு , டாக்டரையும் வரவழைச்சேன்."

" எப்படி இந்த சம்பவம் நடந்திருக்கு ?"

" கழுத்து எலும்பு நொறுங்கி இருக்கு சார். நிச்சயமா கழுத்து நெரிக்கப்பட்டிருக்கு. பிரேத பரிசோதனைக்கு போனாத் தான் தெரியும் ."

" எப்படி இந்த சம்பவம் நடந்திருக்கு ?"

" அப்படீன்னா....கொலையா ?"

" தெரியல ."

" என்ன சார் இது ? நமது வருமானம் பில்டர்ஸ் அந்த கட்டிடத்தை இப்படி ஒன்னு நடந்தா பெயர் என்ன ஆகும் இது 'மீடியா'வுக்கு போக வேண்டாம்."

" சாரி சார் அல்ரெடி போயிருச்சு.!"

" மை காட்!"

அதற்கும் ஊக்குவித்தது பத்திரிக்கையாளர்களுக்கும் ஒரிரு தொலைக்காட்சி 'காமிரா' களுக்கும் வந்துவிட்டன.

அவர்கள் கட்டுப்படுத்த முடியவில்லை.

வெளிச்சம் வீசத் தொடங்கிவிட்டது !

ஏழிசைவண்ணம் தவித்துப் போனார்.

" என்னடா ஸ்ரீ இது?"

" வேற வழி இல்ல பா யாரையும் நம்ப தடுக்க முடியாது நடக்கிறது நடக்கட்டும்."

பொலீஸ் 'பார்மாலிட்டி'கள் முடித்து அந்தப் பெண்ணியன் உடல் வாகனத்தில் ஏற்பட்டது.

கைரேகை நிபுணர்கள் வந்து கடமையை தொடங்கிவிட்டார்கள்.

அந்த செக்யூரிட்டி இருந்தும் கட்டிடம் தொடர்பான அனைத்து ஊழியர்கள், இன்ஜினியர் எங்க எல்லாரையும் ஸ்டேஷனுக்கு வரச் சொல்லி உத்தரவிட்டார்கள்.

" ஸ்ரீ நீங்களும் தான் "

" இல்ல வேண்டாம் நாளைக்கு இவனுக்கு கல்யாண வரவேற்பு மறுநாள் கல்யாணம் !"

" நீங்க வந்து ' ஸ்டேட்மெண்ட் ' மட்டும் கொடுத்துவிட்டு புகாரை பதிவு பண்ணுங்க நாங்க விசாரணையை ஆரம்பிக்கிறோம்.

"அப்பா நான் உங்க கூட வர்றேன் ! இதல்லாம் சமுகத்துல நடக்கிறது தான் கவலைப்படாதீங்க !"

" எதுக்கு நம்ம கட்டிடத்தை தேர்ந்தெடுத்தாங்க !"

"அப்பா ! இங்கு நிறைய கட்டிடங்கள் இருக்குது. ஆள் நடமாட்டம் குறைச்சல். இடம் தேடி, இங்கே வாட்டமா 'லிப்ட்'டும் இருக்கு..... அதான் புகுத்தும் டாங்க் !"

" ச்சே நான் எத்தனை கவுரவமானவன் !"

அவர் புலம்பித் தள்ளினார்.

போலீஸ் வாகனங்கள் புறப்பட , அப்பாவும் , பிள்ளையும் அவர்களது தனித்தனி காரில் புறப்பட்டார்கள்.

ஏழிசைவண்ணம் பதட்டமாக இருந்தார்.

" தொழிலில் எனக்கு ஏராளமான எதிரிகள் இருக்காங்க அதுல யாரோ என் பேரைக் கெடுக்க , என் கட்டிடத்தைத் தேர்ந்தெடுத்துட்டாங்க ."

" யார் அந்த பெண் ?"

" அவளின் கழுத்தை நெரித்துக் கொலை செய்தது யார் ?"

" கொலைகாரனுக்கு என்ன பாதிப்பு ?"

பலவிதமான கேள்விகள் அவரது மண்டையை குடைந்தது . கட்டிட உரிமையாளர் என்பதால் இருவரும் காவல் நிலையம் வந்து புகார் பதிவு செய்தார்கள் .

ஏழிசைவண்ணம் வந்திருப்பதை அறிந்ததும் , உயர் அதிகாரியே அங்கு வந்துவிட்டார் .

இவர் புலம்பினார் .

"கண்டுபுடிச்சிடலாம் . இதுக்காக நீங்க கவலைப்பட வேண்டாம் . உங்களோட பையனோட கல்யாணம் வேலையே கவனிங்க !"

" இது 'மீடியா'வுல வருமே !" ‌

" வரட்டும் இன்னைக்கு 90% இந்த மாதிரி செய்திகள் தான் ! அதுக்காக ஏன் கவலைப் படாதீங்க உங்க ஊழியர்கள் இங்கே இருக்கட்டும் . விசாரிச்சிட்டு அனுப்புறோம் . இன்ஸ்பெக்டர் இவரோட மகனுக்கு கல்யாணம் . மூணு நாளைக்கு இவரை தொந்தரவு பண்ணாதீங்க !"

" சரி சார் "

" நீங்க புறப்படுங்க சார் "

❣மர்மங்கள் தொடரும்.....❣
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top