• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

மர்மங்கள்-4

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Crazeequeen

நாட்டாமை
Joined
Jun 27, 2019
Messages
74
Reaction score
298
Location
Pudukkottai

அந்த கட்டிடத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

போலீஸ் அந்த 'செக்யூரிட்டி'யை 'லாக்கப்' பில் கடுமையாக விசாரித்துக் கொண்டிருந்தது.

காலை 6 மணி முதல் அங்கு வேலை பார்க்கும் ஊழியர்கள், மேஸ்திரி, இன்ஜினியர் இவர்கள் அனைவரும் எப்போது வந்தார்கள்.... எப்போது போனார்கள் ? போன்றவற்றை குடைந்து குடைந்து விசாரித்தார்கள்.

அங்கிருந்து அரை கிலோ மீட்டர் தள்ளி ஒரு டீக்கடை இருந்தது அந்த டீக்கடைக்காரர் போலீஸ் இழுத்து வந்து கடுமையாக விசாரணை நடத்தியது.

காவலாளியை அடித்தார்கள்.

"நிச்சயமாக உனக்குத் தெரிஞ்சிருக்கும். உனக்குப் பணம் கொடுத்து அந்தப் பெண்ணை மேலே இழத்துட்டுப் போறது யார் ?"

அவன் அலறினான்.

"சத்தியமா எனக்கு தெரியாது நான் யாரையும் பார்க்கல நான் புள்ள குட்டிக்காரன் என்ன தயவு செஞ்சு விட்டுங்க."

கடுமையாக விசாரணை ஒரு பக்கம் போய்க் கொண்டிருந்தது.

இந்தக் கட்டிடத்தின் தடயம் ஏதுவும் கிடைக்கிறதா ? என் சல்லடை போட்டு சலித்தார்கள்.

கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலில் மாற்றத்தைப் செல்போன் என எந்தத் அடையட்டும் கொலையாளி விட்டுவைக்கவில்லை செருப்புகள் தவிர எதுவும் அவள் உடம்பில் இல்லை. ஒப்பனை கூட இல்லாமல் அந்தப் பெண் எளிமையாக தான் இருந்தாள். பளிச்சென்று நல்ல நிறத்துடன் , பூசிய உடல்வாகு. அழகான முகம்.

'அழகுக்காக , அவளது இளமை காலம் நடந்த கொலைதான் இருக்க வேண்டும்.'

கொடி சத்திரிய வரை எந்த தடையும் அந்தப் பிரதேசத்தில் கிடைக்கவில்லை குழுவினர் ஒரு பக்கம் துருவிக் கொண்டு இருந்தார்கள்.

மறுநாள் விடிந்து விட்டது.

பரபரப்பாக அத்தனை காலை நாளிதழ் இது தலைப்புச் செய்தியாகவே வந்துவிட்டது.

நன்மொழியன் விடிந்துமே சொல்லிவிட்டார்.

''எல்லாம் பேப்பர்' - டி.வி.'களும் இது தொடர்பான அலைசல் இருக்கும்."

" தினம் 100 கொலைகள் நடக்குதேப்பா . அதுக்கு மட்டும் ஏன் இந்த முக்கியத்துவம் ?" கவின் கேட்க.

"அப்படி இல்லடா இது ஒரு பெரிய தொழிலதிபர் கட்டிடத்தில் நடந்த. எதுல பிரபலங்கள் இருக்காங்க கவனம் கூடுதல் இருக்கும்பா. சரி ! நம்ம வேலையை கவனிக்கலாம்!"

ஓரளவு உறவுக்காரர்களும் வந்துவிட்டார்கள்.

கேள்வி மேல் கேள்வி விழுந்தது.

கலை பதில் சொல்ல திணறிக் கொண்டிருந்தாள்.

நன்மொழியன் சத்தம் போட்டார்.

"கல்யாண வீட்டுக்குப் போறோம். தேவை இல்லாம ஒரு மரணத்தைப் பற்றி யாரும் இங்கே பேச வேண்டாம். கலை யாருக்கும் பதில் சொல்லாதே வேலையை மட்டும் கவனி"

பெரிய இரண்டு வேன்கள் வந்து நிற்க,

அத்தனை பொருட்களும் ஏற்றப்பட்டன.

"கவின், நீயும் இதயகவும் புறப்பட்டுப் போங்க. அங்கே பெட்டிகள் இறக்க நம்ம ஆட்கள் இருப்பாங்க.... அப்புறம் பெண்கள் எல்லாம் அடுத்த வேன்ல ஏறுங்க. மீதிப்பேர் கார்ல உட்காருங்க.

மளமளவென உத்தரவுகள் பிறப்பித்தார்.

"அனு எங்கே!"

"உள்ளே இருக்கா ?"

"நீ அக்கா கூட இரு . சாமி கும்பிடனும் விளக்கேத்தி குழந்தைக்கு பொட்டு வச்சு.... நல்ல நேரத்தில் வண்டில ஏத்தணும்"

அனுவுக்கு உள்ளே குழப்பம்.

' கல்யாணம் முடிஞ்சு பிறகு 'காமிரா'வை வெளியே

' கடவுளே.... ஸ்ரீ கொலைகாரனா இருந்தா , இந்தக் கல்யாணத்தை நடக்கவிடலாமா ?"

' தெரிஞ்சே அக்கா வாழ்க்கையைப் பாழாக்கலாமா ?'

கேள்வி எழுந்தது.

"அனு வர்றியா ?" - வெளியே குரல் கேட்டது.

'சரி ! ஆதாரம் வீட்ல பத்திரமா இருக்கட்டும். தேவைப்பட்டா வெளியில எடுத்துக்காட்டாய்.'

'பீரோ'வுக்குள் வைத்துவிட்டாள் கூட்டினாள்.

வெளியே வந்தாள்.

"அனு , நீ இப்படி மந்தமாக இருக்கே ?" - அப்பா கத்தினார்.

"அப்பா ! அவளை ஒன்னும் சொல்லாதீங்க அவ கூட நான் இனி இருக்க முடியாது நினைச்சு பீல் பண்ற. பாவம் அனு.

இஷ்மா அணுவின் கைகள் தன் கைகளுடன் சேர்த்துக் கொண்டாள்.

"சரி புறப்படுற நேரம் வந்தாச்சு நல்ல நேரத்துல மண்டபத்துல கால் வைக்கணும். 'லேட்'டாகக் கூடாது. சாமி கும்பிட்டுவிட்டு நீ புறப்படு இஷ்மா.

பூஜை அறையில் அவள் வர, அம்மா கலை குங்குமச் சிமிழை எடுத்து வந்து இஷ்மா நெற்றியில் திலகமிட முயல..... அது கை நழுவி குங்குமம் சிதறியது.

"என்ன கலை இது ?" - கணவர் கேட்டார்.

"கை தவறிடுச்சுங்க."

"அப்பா குங்குமம் கொட்டினால் மங்கலம்னு பாட்டி சொல்லுவாங்க . நல்ல சகுனம் தான் !"

"சரி கால் படாம ஒதுக்குங்க. சீக்கிரம் சாமி கும்பிடு. நேரமாச்சு."

சாமி கும்பிட்டு விட்டு வாசலுக்கு வந்தவர்கள்.

"எல்லாம் சரி பார்த்தாச்சா ? அனு கதவை பூட்டும்மா."

கதவைப் பூட்ட முயலும்போது பூட்டு நழுவி அவள் காலில் விழ....

"அம்மா ! - அலறினாள்.

" என்னடி ... கால்ல விழுந்துட்டா ? பார்த்து வா... "

இஷ்மா பரிதாப்பபட்டாள்.

அனுவால் நடக்க முடியவில்லை.

நொண்டி நொண்டி நடந்தாள்.

"என்ன அனு... கொஞ்ச நேரம் நிக்கிறியா?"

"அக்கா நேரமாச்சு. மண்டபத்தில் போய் பார்த்துக்கலாம். அப்புறம் மறந்து தடவிக்கலாம்."

"அனைவரும் காரில் ஏறினார்கள் . மண்டபத்தில் உள்ளவர்களுக்கு தகவல் கொடுத்தார் நன்மொழியன்.

"எல்லாம் தயாரா வச்சுக்கோங்க. நாங்க வந்ததும் இஷ்மாக்கு மாலை போட்டு ஆட்டி எடுத்து வர வைக்கணும் நாதஸ்வரம் மேளக்காரங்கள் கிட்ட சொல்லிடுங்க..."

வண்டி செல்ல செல்ல நன்மொழி என் போன் மூலம் உத்தரவுகளைப் பிறப்பித்துக் கொண்டே வந்தார்.

"என்னடி வலிக்குதா ? இஷ்மா கேட்க,

"இல்லக்கா... நீ நிம்மதியா வா".

வாய் சொன்னாலும் அனுவுக்கு மனது வலித்தது.


'இனியும் பேசாமல் இருக்கலாமா ?'

?மர்மங்்க்்க்ள தொடரும்?





 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
மிகவும் அருமையான பதிவு,
தஸீன் பாத்திமா டியர்
 




Yuvakarthika

இளவரசர்
SM Exclusive
Joined
Apr 18, 2019
Messages
15,688
Reaction score
35,222
Location
Vellore
Interesting dear????
Spelling mistakes avoid pannuga dear please...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top