• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

மர்மங்கள்-5

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Crazeequeen

நாட்டாமை
Joined
Jun 27, 2019
Messages
74
Reaction score
298
Location
Pudukkottai
போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்துவிட்டது. உயிர் அதிகாரிகள் மத்தியில் அந்த அறிக்கை இருந்தது.

இறந்த பெண் மூன்று மாத கர்ப்பம். கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டு இருக்கிறாள். அது நடந்த நேரமும் துல்லியமாக குறிக்கப்பட்டு இருந்தது.

பட்டப்பகலில் நடந்த கொலை !

அதிகாரிகள் அலசத் தொடங்கிவிட்டார்கள்.

'கர்பம் என்பதால், அதற்கு காரணமானவன், அவளைக் கொலை செய்திருக்கலாம்' என்று அலசப்பட்டது.

'டி.என்.ஏ. டெஸ்ட்' முலம் அவள் யாரென்று கண்டு பிடித்து விட முடியும். அந்த பெண்ணின் புகைப்படங்கள், அவளது முகம் எல்லாம் தெளிவாக இருந்தது. அது பத்திரிகையில், தொலைக்காட்சியில் ஏற்கனவே வந்துவிட்டது.

இப்போது அந்த கொலை தொடர்பான பரபரப்பான செய்திகளுக்காக 'மீடியா' காத்திருந்தது.

இதனிடையே போலீசுக்கு போன் அழைப்பு வந்தது.

"சார்.... அந்த பொண்ணு ஜவுளிக்கடையில வேலை பார்க்கிற . பெயர் மல்லிகா." என்று கூறியவன் கடையின் பெயரையும் சொன்னான்.

"நீங்க யாரு?"

"சார். என் பேரைச் சொல்லி நான் மாட்டிக்கத் தயாரா இல்லை" போன் வைக்கப்பட்டது.

உடனே போலீஸ் புறப்பட்டு விட்டாது.

அந்த அரை மணியில் அந்த பிரபலமான ஜவுளிக்கடையில் போலீஸ் புகுந்து விட்டது. நேராக முதலாளியிடம் வந்தார்கள்.

அப்போது கடையில் ஏற்கனவே ஒரு பரபரப்பு இருந்தது. போலீசைப் பார்த்ததும் அது கூடியது ‌. 'எந்த நேரமும் போலீஸ் வரலாம்' என எதிர்பார்த்து அவர்கள் காத்திருந்தது போல் இருந்தது.

"முதலாளி யாரு ?

அழைத்துப் போனார்கள்.

"கொலை செய்யப்பட்ட மல்லிகா உங்க கடையில வேலை பார்க்கிற பொண்ணுங்கிறது. ஆதாரப்பூர்வமா தகவல் வந்திருக்கு. அவ கர்ப்பமா இருக்கா. கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டிருக்கா. நீங்க ஒத்துழைக்கணும்."

"இங்கே நிறைய பெண்கள் வேலை பார்க்கிறாங்க. அதனால குறிப்பா எனக்கு அவளைப் பற்றி தகவல் தெரியாது. கூட வேலை பார்க்கறவங்களை கூப்பிடுறேன்."

அங்குள்ள 'மானேஜர்' , 'சூப்பர்வைசர்' , உடன் வேலை பார்க்கும் பெண்கள் அழைக்கப்பட்டார்கள்.

அவர்களிடம் பயம் இருந்தது.

அதில் 'சக்தி என்ற பெண்ணுக்கு மல்லிக்கும் நெருக்கம்' என்றார்கள்.

அவள் அழைக்கப்படாள்.

"எதையும் மறைக்காம சொல்லும் மா. இல்லைன்னா உன்னைக் கூட்டிட்டு போய் விசாரிக்க வேண்டி இருக்கும்."

"அந்த பெண் அழுது விட்டாள்.

"பயப்படாம சொல்லு . உன்னை ஒண்ணும் செய்ய மாட்டோம்."

"நாங்க நாலு பொண்ணுகளா ஒரு சின்ன வீட்டை வாடகைக்கு எடுத்துத் தங்கி இருக்கோம் சார். அதுல மல்லிகாயும் ஒருத்தி கிட்டத்தட்ட மூணு வருஷமா ஒண்ணா இருக்கோம். எங்க குடும்பம் ஊர்ல இருக்கு."

"மல்லிகா குடும்பம் எங்கே இருக்கு?"

"அவளுக்கு அப்பா இல்லை அம்மாவும் , தம்பியும் மட்டும் இருக்காங்க. தம்பிக்கு படிப்பு ஏறல. ஒரு பட்டறைல கார் ' மெக்கானிக்'கா ஊர்லயே வேலை பார்க்கிறான்."

"எந்த ஊரு?"

"விழுப்புரம். அம்மாவும் அங்கே தான் இருக்காங்க. இவ சிக்கனமா செலவு செஞ்சிட்டு பணம் அனுப்புவா."

"மல்லிகாக்கு என்ன வயசு ?"

"23 சார். படிப்பு 12 வது தான்"

"வேலை நேரம் என்ன?"

"காலை 9 மணிக்கு கடை திறந்தா , ராத்திரி 10 மணி வரைக்கும் இருக்கும். வீட்டுக்கு வர 10.30 ஆகும். வாரத்துல ஏதாவது ஒரு நாள் லீவு !"

"அவள் வெளியே போவாளா? அவளைப் பார்க்க யாராவது வருவாங்களா ? அவளுக்கு ஆண் தொடர்பு உண்டா?"

"எனக்குத் தெரிஞ்சு அப்படி எதுவும் இல்லை சார்"

"பொய் சொல்லாதே!"

"சத்தியமா இல்லீங்க சார். 'லீவு' நாள்ல வெளியே போவோம். சினிமா பார்ப்போம்."

"எப்பவும் சேர்ந்து தான் போவீங்களா ?"

"எல்லாருக்கும் ஒரே நாள்ல 'லீவு' கிடைக்காது. அவ 'லீவு'ல இருக்கும் போது எனக்கு வேலை இருக்கும். அதனால அவ எங்கே போறானு தெரியாது ?"

"சரி .... ஒரே வீட்ல தங்கியிருக்கீங்க".

"ஆமாம்!"

போலீஸ் உடனே விலாசம் வாங்கி , ஒரு பெண்ணையும் கூட்டிக்கொண்டு அந்த வீட்டுக்கு புறப்பட்டது.

10 நிமிடங்களில் அந்த வீட்டை அடைந்தனர்.

அங்குள்ள பகுதி பரபரப்பானது

ஒரு 'மீடியா' நபர் இவர்களை விடாமல் பின் தொடர்ந்து தகவல்களை சேகரித்தார்.

அவள் தங்கி இருந்த அறை சோதனையிடப்பட்டது.

அவள் போடும் துணிமணிகள் , அவளது வங்கிக் கணக்கு புத்தகம் - உபயோகிக்கும் அழகுசாதனப் பொருட்கள் என எல்லாம் சோதனையில் இருந்து தப்பவில்லை.

" அவ ' சொல்போன்' உபயோகிப்பாளா ?"

"ஆமாம் சார். காலையில கடையில 'சரண்டர்' பண்ணிடணும். வீடு திரும்பும் போது தான் தருவாங்க."

"என்ன 'நம்பர்' அது?"

எண்களை சொன்னாள். போலீஸ் அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டனர்.

ஆனால், இணைப்பு துண்டிக்கப்பட்டு இருந்தது.

முடிந்த வரை அவளைப் பற்றிய எல்லா தடயங்களையும் அங்கே சேகரித்துக் கொண்டனர்.

அந்தப் பிரதேசத்தில் உள்ள யாரையும் போலீஸ் வீட்டு வைக்கவில்லை.

அவளுக்கு தரப்படும் வார விடுமுறை நாளில் காலையில் வெளியே போனால் , மாலையில் தான் வருவாள் என்ற தகவல் உறுதியாகத் தெரிந்தது. பெரும்பாலும் யாரையும் அழைக்காமல் , தனியாகத்தான் போவாள் என்பதும் தெரிந்தது. இது கூட கடந்த ஏழெட்டு மாதங்களாகதந் தான் . சில சமயம் காலை 6 மணிக்கே புறப்பட்டுப் போய் 9 மணிக்கு நேராக கடைக்கு வருவாள் என்றார்கள்.

இந்த நாட்களில் அவள் யாரையோ சந்தித்து அது காதலாக வளர்ந்திருக்க வேண்டும்.

சந்திப்பு இறுதி, கர்ப்பம் வரை கொண்டு போய் விட்டிருக்கிறது. கர்ப்பம் உறுதியானதும் இவளைத் தொட்டவன் பயந்து , இவளது தொல்லை தாங்காமல் கொலை செய்திருக்க வேண்டும்.

"யார் அவன்?"

இத்தனை புத்திசாலித்தனமாக அவளை அழைத்துப்போக கொலை செய்திருக்கிறான்.

'எந்தத் தடயமும் கிடைக்காத கொலை.'

'அவன் சாதாரண ஆள் அல்ல.'

'யாரது?'

மர்மங்கள் தொடரும் ?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
மிகவும் அருமையான பதிவு,
தஸீன் பாத்திமா டியர்
 




Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,608
Reaction score
36,881
Location
Srilanka
Nice dear???

But chinna ud aa irukku...innum konjam serthu kodukkalaame.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top