• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

மர்மங்கள் -6

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Crazeequeen

நாட்டாமை
Joined
Jun 27, 2019
Messages
74
Reaction score
298
Location
Pudukkottai
குடும்பமே கல்யாண மண்டபத்துக்கு வந்துவிட... பரபரப்பாக செயல்படத் தொடங்கிவிட்டார்கள்.

அலங்காரங்கள், பெயர்ப் பலகை, அலங்கார வளைவுகள் அத்தனையும் அமர்க்களமாக இருந்தது.

மதிய உணவு தடபுடலாக தயராகிக் கொண்டிருந்தது.

'வீடியோ'‌, 'போட்டோ'க்காரர்கள் வேகமாக செயல்பட்டுக் கொண்டிருக்க...‌

மேளம், 'பேண்டு' வாத்தியக்காரர்கள் தயாராக இருந்தனர். நன்மொழியன் அத்தனை ஏரியாக்களிலும் புகுந்து சகல உத்தரவுகளையும் பிறப்பித்துக் கொண்டிருந்தார்.

குடும்பம் மொத்தமும் சுறுசுறுப்பாக செயல்பட.‌‌..

வந்த உறவும், நட்பும் மணமகள் ஜோதியை மொய்த்துக் கொள்ள,

அனுவின் உடல் இயங்கிக் கொண்டிருந்தாலும்... மனம் முழுக்க அந்த கொலையில் இருந்தது.

'திரும்பத் திரும்ப ஸ்ரீநிவாஸ் முகம் - உருவம்'

'சொல்லாமல் இருந்தால் அக்காவின் வாழ்க்கை பாழாகிவிடுமா?' உள்ளே வண்டு போல் அந்த கேள்வி குடைந்தது கொண்டு இருந்தது.

'சொல்லி, நின்று போனால் பல லட்சங்களும் அப்பாவின் கவுரவமும், அக்காவின் வாழ்க்கையும் சிதறுமே!'
என்று குழம்பியது.

நண்பகல் மூன்று மணிக்கு நன்மொழியன் அனுப்பிய வாகனங்களும் பிள்ளை வீட்டாரது காரிலும் பலர் வந்து இறங்கினர்.

மாப்பிள்ளை ஸ்ரீநிவாஸ் தாய், தகப்பனார் உறவினர்களுடன் உடன் வந்து இறங்க, மாலை மரியாதையுடன் ஆரத்தி எடுத்து தடபுடலாக வரவேற்பு நடைப்பெற்றது.

அனு ஓரமாக நின்றாள்.

ஸ்ரீனிவாஸ், அந்த முகம்... இந்த முகம் மாதிரியே தான் இருந்தது!

அதே முகம், அதே உயரம்...

எந்த ஒரு மாற்றமும் இல்லை.

'கடவுளே ஒரு பெண்ணை கொலை செய்து விட்டு இங்கே இத்தனை இயல்பாக மாப்பிள்ளையாக வந்து நிற்க முடியுமா?! உள்ளே அழைத்துப் போய் உட்கார வைத்து உபசரிப்பு நடந்தது.

"அனுவைக் கூப்பிடு!" அப்பா குரல் கொடுக்க, அம்மா கலைக்குறிஞ்சி உள்ளே வந்தாள்.

"அனு நீ என்ன செய்யறே?"

"வந்துட்டேன்மா."

"என்னடி நீ, மாப்பிள்ளை வீட்டார் வந்தாச்சு, மச மசன்னு நிக்குறே?"

"இல்லம்மா இதோ வந்துட்டேன்."

"ஏன் இப்படி இருக்க. அப்பா கோவப்படுறார். என்ன ஆச்சு உனக்கு? அவங்க வீட்டுப் பெண்கள், ஆளுங்களுக்கு என்ன வேணும்னு கேட்டு செய்."

கவின் வந்தான்.

"அம்மா டிபன் ரெடி"

"வரேன் பா, அவங்க எல்லாரையும் கூட்டிட்டு போய் சாப்பிட வைக்கணும்."

அம்மா, "இதோ முப்பது முழம் மல்லிகை பூ. அனு இதை மாப்பிள்ளையோட அம்மாகிட்ட குடு. அவங்க வீட்டுப் பெண்கள் வச்சுக்கட்டும்."

அனு அதை வாங்கிக்கொண்டு மாப்பிள்ளை வீட்டார் தங்கியிருந்த அறைக்கு நடந்தாள்.

அப்பா அவர்கள் தங்க வைத்த வசதிகளை சரி பார்த்துக் கொண்டிருந்தார்.

அனு உள்ளே நுழைய, ஸ்ரீநிவாஸ் தான் உள்ள இருந்தான் கூடவே வண்ணமதிவும்...

"அத்தை இந்தாங்க பூ."

"அனு, உன்ன தான் பிடிக்கவே முடியலை இப்படி வா!" அருகில் வந்தாள்.

"உட்கார், நான் விளம்பரப் பிரிவு, நீ மீடியா, ரெண்டு பேரும் கிட்டத்தட்ட ஒரே பணி தான்!"

"ஆமாம்!"

"என்ன நீ இப்படி இருக்கே... 'மிடியா'வுல இருக்கிற பொண்ணுங்க நிறைய பேச வேண்டாமா?"

"விடுடா அவங்க அக்கா கல்யாண வேலைல அவ இருக்கா, இப்ப பேசவா நேரம் இருக்கும்?"

"வாங்க சார்!" அப்பா ஏழிசைவண்ணம் குரல் கொடுத்தபடியே போலீஸ் அதிகாரிகள் பின்னால் வந்தவன்
ஸ்ரீநிவாஸ்.

அனு அதை கவனித்தாள்.

அம்மா முகத்தில் கலக்கம்.

"உட்காருங்க சார்."

"நான் உங்களை தொந்தரவு பண்ணல, நீங்க பில்டிங் ஓனர். கொலை நடந்த உங்க கட்டிடத்தில் தகவல் சொல்கிற கடமை எங்களுக்கு இருக்கு"

அனு அங்கிருந்து நகரவில்லை.

"கொலையான பெண் பெயர் ராகினி. துணி கடையில் வேலை பாக்குற பொண்ணு. மேற்கு மாம்பலத்தில் வீடு அம்மா - தம்பி ஊர்ல இருக்காங்க. இறந்தவ மூணு மாசம் கர்ப்பம். எவனோ கெடுத்து இருக்கான். இவ வாழ்க்கை கேட்டப்போ கொன்னுட்டான்னு நினைக்கிறோம். சாதுரியமாக ஒரு தடயம் கூட விடாமல் கொலை செஞ்சு இருக்கான். அவளோட எல்லாம் 'ஏரியா'க்களும் விசாரிக்கிறோம் நிச்சயமா மாட்டுவான்."

அனு திரும்பி ஸ்ரீநிவாஸ் முகத்தை ஆழமாகப் பார்த்தாள்.

அதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை.

''பெரும்பாலும் பணக்கார பசங்களா இருப்பாங்க சார். பொண்ணு அழகா இருக்கா. கடைக்கு போன இடத்துல 'கவர்' பண்ணி இருப்பான்னு அதை அவ நம்பி இருக்கலாம்''

ஸ்ரீநிவாஸ் எழுந்து வந்தான்.

"சார், இதை எல்லாம் காதல்னு நம்பாதீங்க. பணத்துக்காக பெரிய ஆளுங்கள வளைச்சு போட்டு, காரணம் காட்டி பணம் பறிக்க பார்த்து இருக்கும்."

"ம்... 'கரெக்ட்' ஸ்ரீநிவாஸ். அதுமாதிரி மிரட்ட, வேற வழியில்லாம அவனும் போட்டுத் தள்ளிட்டான் தான் போல!"

"இதுக்கு எங்க கட்டிடம்தான் கிடைச்சதா?" - ஸ்ரீநிவாஸ் கேட்க.

"இது சில மணி நேரத்துல உணர்ச்சிவசப்பட்டு செய்த கொலை இல்ல. அழகா திட்டம்போட்டு நடந்த சதி. பணக்கார பையன் படித்தவனாக இருப்பான். புத்தி வேலை செஞ்சு இருக்கும். எல்லாத்தையும் தீர்மானித்து சாதகமாக நடந்து இருப்பான். ஆனா, அவனுக்கு தெரியாமல் ஏதோ தடயத்தை விட்டிருப்பான். உங்க கட்டிடத்தை அ
வனா தான் அவன் இருப்பான்."

சைவண்ண்ண்ண

ஏழிசைவண்ணம்ப்்ப்ப்்்ப்்்்் பதட்டம் ஆகிவிட்டார்.

"என்ன சார் எங்க பக்கம் திருப்புறீங்க?"

"இல்ல சார், நீங்க புரிஞ்சுக்கோங்க, தொழில்ரீதியாக உங்களுக்கும், உங்க மகனுக்கு நிறைய எதிரிகள் இருக்கலாம். அவர்களில் ஒருத்தன் தான் இந்த தப்பு செய்ய திட்டம் போட்டு, இந்தக் கட்டிடத்தைத் தேர்ந்தெடுக்கலாம் இல்லையா? இப்ப தேவை இல்லாம உங்க பேர் அடிபட்டு, உங்களுக்கு மன உளைச்சல் உண்டாக்கி இருக்கே?"

"அது உண்மைதான்!"

"அப்படிப்பட்ட எதிரிகள் யாராவது உண்டா? அதுல 'பிளேபாய்' மாதிரி யாராவது இருக்காங்களா? சமீபத்துல மோதல் ஏற்பட்டிருக்கா? அவசரமில்லை... இதையெல்லாம் நீங்க அலசி, ஒரு 'ரிப்போர்ட்' கொடுத்தா குற்றவாளி கண்டுபிடிக்க எங்களுக்கு வசதியா இருக்கும்."

"ஓகே ஆனா இந்த நாள் மட்டும் எங்களை விட்டுடுங்க சார்.

"நிச்சயமாக!"

"என்ன, பல லட்சங்கள் கொட்டி நன்மொழியன் தன்னோட மகள் கல்யாணத்தை நடத்துவதற்கு எந்த ஒரு பாதிப்பும் வரக்கூடாது. பொண்ணைப் பெத்தவங்க, அது மட்டும் இல்ல எனக்கும் இது கவுரவ பிரச்சனை நிறைய பெரிய மனுஷங்க இன்னைக்கு 'ரிசப்ஷனுக்கு ' வரப்போறாங்க புரிஞ்சுக்கோங்க."

"எனக்கும் புரியுது."

"நாங்க நிச்சயமாக ஒத்துழைப்போம். நாம நாளை கழிச்சு பேசலாம். சாப்பிட்டு போங்க. அனு அவரை சாப்பிட வைம்மா!"

"இருக்கட்டும் சார் நான் 'டியூட்டியில' இருக்கேன்."

அவர் புறப்பட்டுவிட்டார்.

அனு அங்கிருந்து விலகி வந்தாள்.

"பணக்காரன், பிளேபாய், படித்தவன், புத்திசாலி எல்லாம் ஸ்ரீநிவாஸ்க்கு பொருந்துகிறதா?"

'அந்தக் கட்டிடத்தில் கொலை நடக்க காரணம் இருப்பதாக போலீஸ் கருதுகிறது.'

'சொந்தக் கட்டிடத்தில் இப்படி ஒரு குற்றத்தை நிகழ்த்த ஒருவன் முன் வருவானா?"

"ஒருவேளை இப்படி இருக்குமோ?"

'திருடனுக்கு பாதுகாப்பான புகலிடம் காவல் நிலையம் தான்.

'பாபநாசம் படத்தில் பிணத்தைப் போலீஸ் நிலையத்துக்கு அடியில் கதாநாயகன் மறைத்த மாதிரி, தன் சொந்த கட்டிடத்தில் கொலை நிகழ்த்தினால் யாரும் தன்னை சந்தேகப்பட மாட்டார்கள் என்று கணிப்பா? அல்லது, வேறு இடத்துக்கு அந்த ஸ்ரீநிவாஸ் போனால், சந்தேகம் வரும்... கேள்வி வரும். இந்தக் கட்டிடத்துக்கு போனால் யாரும் சந்தேகப்பட மாட்டார்கள் என்ற புத்திசாலித்தனமா?'

'கைதான 'செக்யூரிட்டி'யை பணத்தால் விலைக்கு வாங்கி விட்டதால், முதலாளிக்கு எதிராக பேச மறுக்கிறான். அல்லது அவனை அப்புறப்படுத்திவிட்டு நிகழ்ந்ததா?'

அனுவுக்கு சந்தேகம் வலுத்தது.

காரணம்... வலுவான ஆதாரம் அவள் கையில்!

'ஸ்ரீநிவாஸ், அந்த உருவம் படைத்த இன்னொருவன்! மொத்தத்தில் கொலையாளி என் 'காமிரா'வுக்குள்!

கடவுளே நான் என்ன செய்யப் போகிறேன்.

நாளை விடிந்தால் என் அக்கா புருஷன் இவன்.'

உடம்பு நெருப்பாகக் கொதித்தது.

கவின் வேகமாக வந்தான்

"அக்கா... உன்னை கூப்பிடறா அனு".

"இதோ வர்றேன் டா."
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
மிகவும் அருமையான பதிவு,
தஸீன் பாத்திமா டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top