மர்மி-2

NanthuSara

Author
Author
#1
கோபியின் உடலைப் பிரேத சோதனைக்கு அனுப்பிவிட்டு ,கோபியைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தார் சூர்யா.

"சார்,அவன் பெரிய கந்துவட்டிக்காரன் பணத்துக்காக எதையும் பண்ணுவான்.இங்க இருக்கறவங்க அவன்கிட்ட வட்டிக்கு வாங்கிட்டு கட்டமுடியாம ரொம்ப கஷ்டத்துல இருக்காங்க "என்று கோபியைப் பற்றித் தெரிந்தவர்கள் சொன்னார்கள்.

கந்துவட்டிக்காரன் கோபிக்கும் XYZ கல்லூரியின் முதல்வர் சதாசிவத்திற்கும் என்ன சம்மந்தம்.அவன் பணத்துக்காகக் கொலைப் பண்ணிருந்தா அவர் இறந்துக்கிடந்த இடத்துலப் பணம் அப்படியே தான் கிடந்தது.ஒரு வேளை வேற யாரவாது இவனுக்குப் பணம் கொடுத்து சதாசிவத்தைக் கொலைப் பண்ணச் சொல்லிருப்பாங்களோ...அப்படி இருந்தாலும் இவ்வளவு பணத்தையும் விட்டுட்டுப் போயிருக்கமாட்டான் கோபி..இதுல என்னமோ இருக்குனு யோசித்தார் சூர்யா.

இரண்டு நாட்கள் கழித்து......

சூர்யா இந்தக் கொலை மற்றும் தற்கொலைக்கானக் காரணங்களை கண்டுப் பிடிக்க முடியாமல் எதையோ யோசித்துக் கொண்டிருந்தார்.

கான்ஸ்டபிள் கையில் போனுடன் ஓடி வருகிறார்.

“சார் டி.ஜி.பி பேசனுமாம்”.சூர்யா போனை வாங்கி பேசுகிறார்.

“என்ன சூர்யா? இவ்வளவு பெரிய கொலை நடந்துருக்கு என்ன பண்ணிட்டு இருக்கீங்க?” என்று கேட்கிறார்.

“இல்லை சார் அந்தக் கொலையைப் பத்தித்தான் விசாரிச்சுட்டு இருக்கேன்” என்று சொல்கிறார் சூர்யா.

“எப்படி சூர்யா கொலை இப்பதான் நடந்தது அதுக்குள்ள விசாரிக்க ஆரம்பிச்சுட்டிங்க நான் ஸ்பாட்ல தான் இருக்கேன் வாங்க” என்கிறார் டி.ஜி.பி.

“ஸ்பாட்டிற்கு சென்று பார்த்தால் அது இன்னொரு கொலை.அது XYZ கல்லூரி பேராசிரியர் அரவிந்தன்.அவரும் பெரிய பணக்காரர். ஒரு காரின் உள்ளே கை நரம்பு அறுக்கப் பட்டு அவர் இறந்து கிடந்தார்.ஆனால் அது அவரது கார் இல்லை அவரின் வீட்டிற்கு போன் செய்து விசாரிக்கும் போது அவரின் சொந்த காரில் தான் அவர் சென்றதாக சொல்கிறார்கள்.ஆனால் அவர் வேறொரு காரில் இறந்து கிடந்தார்.

அவரின் காரைத் தேடும் பணியின் போது அந்த கார் சாலை ஓரம் பஞ்சர் ஆகி இருந்தது.அவர் இறந்து கிடந்த காரின் தகவல்களை சேகரித்தப் போது அது சிவா என்பவரின் கார் எனத் தெரிந்தது.அவரைத் தேடும் பணித் தொடங்கியது.

இரண்டு நாட்களில் இரண்டு கொலைகள் இரண்டுமே XYZ கல்லூரிக்கு சம்மந்தப்பட்டவர்கள் மற்றும் பெரிய பணக்காரர்கள்.
சூர்யா மற்றும் டி.ஜி.பி.க்கு அந்த தகவல் அதிர்ச்சியாக இருந்தது.

“திட்டமிட்டு கொலை பண்ணீருக்காங்க சார். இரண்டு கொலைகளும் ஒரே மாறி இருக்கு கை நரம்பு அறுத்து கொன்னுருக்காங்க சார்” என்கிறார் சூர்யா.

.அப்போது சூர்யாவிற்கு ஒரு போன்கால் வருகிறது.

”சார் இங்க ஒருத்தர் தற்கொலைப் பண்ணிக்கிட்டாருனு” சொல்கிறார்கள்.

சூர்யா அந்த இடத்திற்கு விரைகிறார்.கோபியைப் போன்றே இவரும் அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது சூர்யாவிற்கு தெரிகிறது.அவரை ஆராய்ந்த போது அவர் ஐடி கார்டில் அவரது பெயர் சிவா என்று இருந்தது.அவர் ஒரு கால்டேக்ஸி ஓட்டுனர் என்பதும் அரவிந்தன் இறந்துக்கிடந்த கார் இவரின் சொந்த கார் எனவும் தெரிய வருகிறது.ஆனால் அவரிடம் இன்னொரு ஐடி கார்டு கிடந்தது அதில் ராஜேஷ் கால்டேக்ஸி ஓட்டுனர் என்றும் முதல் கொலையில் இருந்த அதே முகவரி இருந்தது. சூர்யாவிற்கு குழப்பம் அதிகமானது.

இதை எல்லாம் செய்வது ஒருத்தனா இல்லை ஒரு குழுவா எதற்காக செய்கிறார்கள் அவர்களுக்கும் அந்த கொலை செய்யப்பட்டவர்களுக்கும் என்ன சம்மந்தம்.பணக்காரர்களை கொலை செய்து விட்டு அவர்கள் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் பணம் ஏதும் திருடுப் போகவில்லை அப்போ எதற்காக இந்த கொலைகள் நடந்தன என்று தனக்குள்ளே ஆயிரம் கேள்விகள் கேட்டுக் கொண்டான்....

கேள்விகளுக்கான விடையைத் தேடும் தேடல்கள் தொடரும்..........
 

Sponsored

Latest Episodes

Advertisements

Latest updates

Top