You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.


மறந்துபோ என் மனமே(1) - MEM1 - Chapter 1 & 2

#1
எல்லாம் முடிவடைந்தது. அவள் சம்மதம் கேட்காமலே. ஒரு போட்டோவிலும் சிறு புன்னகை இல்லை.

உறவினர்கள் அவர்கள் வந்த வேலையை சரியாக செய்தனர், கூட்டம் கூட்டமாக பேசிக்கொண்டு. ஒருவர் கூட ஒரு நிமிடம் என்னிடம் என் சம்மதம், என் விருப்பத்தை கேட்கவில்லை.

"நந்தினி" என்ற ஒரு சத்தம் பலமாக அழைக்க கண்கள் திறந்திருந்தும் விழித்தெழுந்தாள், மன ஓட்டத்திலிருந்து.

அவள் அம்மா கத்த, அவர் பக்கம் திரும்பினாள். அவர் சாஸ்திரிகளை பார்க்கச்சொல்லி கண்ணசைத்தார். "அம்மா கனவு கண்டது போதும் இந்த மாலையை உன் ஆம்பளையான் கழுத்துல போடு" என்றார் சாஸ்திரிகள்.

மாலையை வாங்கிக்கொண்டு நந்தினி திரும்ப. அவன் வாட்ட சாட்டமாக அமர்ந்திருந்தான். மாலையை போட்டுவிட்டு திரும்பினாள் முகம் கூட பார்க்காமல். அடுத்த அரை மணி பல சடங்குகள். கழுத்தில் மஞ்சள் கயிறு.

அவன் கையை சுற்றி நெற்றியில் குங்குமம் வைத்தான். பின் மெட்டி அணிவித்து சில சடங்குகள்.

"என் உயிரை ஏன் இப்படி வாங்குகிறார்கள் என்ற கோபம் ஒரு பக்கம். அம்மாவின் சந்தோஷம் மறுபக்கம். ஒரு வழியாக எல்லா சடங்குகளும் முடிந்தன. இரவு எட்டி பார்க்க, இனி அடுத்து" என்று அவள் எண்ணிக்கொண்டிருக்க

"நந்தினி நீ ரூம்க்கு போய் ரெடி ஆயிட்டு வாம்மா" என்றார் அவள் மாமியார் புன்னகையுடன். ப்ராச்சி , சுபா அவளை பின்தொடர்ந்தார்கள்.

"ஹே உன்னோட பிரச்சனை என்ன நந்து. அவரும் அவர் குடும்பமும் நல்லவங்க போல தான் இருக்காங்க. எனக்கு எதுவும் தப்பா தெரில. யு மஸ்ட் அக்ஸப்ட் தி லைப் வித்அவுட் எக்ஸ்பெக்டேஷன்ஸ்" என்றாள் வடநாட்டு தோழி ப்ராச்சி. பதிலுக்கு அவளை ஒரு பார்வை பார்த்தாள்.

"சும்மா என் எதிர்பார்ப்பு, என் கடமைனு உளறிட்டு இல்லாம நிஜத்துக்கு வா. ஆண்ட்டிக்கு ஹார்ட் அட்டாக் வந்ததால, கல்யாணம் சீக்கரம் முடிவு பண்ணிட்டாங்க.

அதிலென்ன தப்பு இருக்கு" என்றாள் சுபா. நந்தினி பதில் பேசும்முன் அவள் அத்தை உள்ளே அழையா விருந்தாளியாக. "ஏன்டி மா உங்களுக்கு வீட்டுக்கு நேரம் ஆகலையா. நீங்க கிளம்புங்க நான் பாத்துக்கறேன்" என்றார் அவள் தோழியரிடம்.

"இது தான் உன் வாழ்க்கை. யு மஸ்ட் அக்ஸப்ட் அன்ட் மூவ் ஆன். நாளைக்கி உன்கிட்ட நான் பேசறேன்" என்றாள் ப்ராச்சி. தலையசைத்தாள். சுபா அவள் கன்னத்தில் முத்தமிட்டு, ஆல் தி பெஸ்ட் கூறி இருவரும் வெளியேறினார்கள்.

அத்தை எதோ பேசிக்கொண்டே அவளை முதல் இரவுக்காக தயார் செய்தார். அவள் அம்மா உள்ளே வந்தாள் ஒரு பாத்திரம் எடுத்துக்கொண்டு.

"அண்ணி, உங்கள அண்ணா கேட்டுட்டு இருந்தார். நீங்க போங்க. நான் அவளை அனுப்பி வைக்கிறேன்" என்றாள் அம்மா.

"இவருக்கு வேற வேலையே இல்ல. சரிடி நீ பக்குவமா நடந்துக்கோ. பாத்து அனுப்பிவைடி வனஜா" என்றாள் நந்தினியிடம், அவள் அம்மாவிடமும். பிடிக்காத புன்னகையுடன் தலையாட்டினாள். அவர் வெளியே செல்ல

"அம்மா எனக்கு இது வேணாம்மா. அவருகூட இதுவரைக்கும் பேசக்கூட இல்ல. இப்படி திடீர்னு அனுப்பினா நான் என்ன செய்வேன்" என்றாள் அழுதபடி.

"ஏன்டி இப்படி இருக்க? இனி இதுதான் உன் வாழ்க்க. எத்தன நாள் உன் கல்யாணம் நல்ல படியா நடக்கணும்னு வேண்டிட்டேன்னு உனக்கே தெரியும். மாப்பிள்ளை வீட்டுக்காரங்க நல்லவங்களா இருகாங்க"

"அதுனால நீ மூஞ்ச தூக்கி வெச்சுக்கிட்டாலும் ஒன்னும் பெருசா எடுத்துக்கல. அவங்கள ஏதாச்சும் நினைச்சுக்க வெச்சுடாத. அப்பா இல்லாம தப்பா வளர்த்துட்டேன்னு நினச்சுடுவாங்க. புரிஞ்சுக்கோ ப்ளீஸ்" னு முடிப்பதற்குள் அவள் அம்மாக்கு அழுகை தாங்கவில்லை .

அம்மாவை கட்டிக்கொண்டு அவளும் அழ "அழாதமா. எல்லாம் நல்லபடியா முடிஞ்சுது" என்றாள் அம்மா. "சரி மா. நீ பீல் பண்ணாத. நான் பாத்துக்கறேன்" என்று சொல்லிமுடிக்கும் முன்

"நந்தினி" என்று ஒரு சத்தம். "உன் மாமியார் தான் கண்ண துடைச்சுக்கோ" என்றாள் அவசர அவசரமாக. "என்ன அம்மாவும் பொண்ணும் பேசிட்டு இருக்கீங்க" என்றார் புது அத்தை ஸ்ரீமதி.

"ஒன்னும் இல்லைங்க. நல்ல படியா நடந்துக்கோனு சொன்னேன்" என்று கண் துடைத்துக்கொண்டே அம்மா சொல்ல,

"நீங்க ஒன்னும் கவலைப்பட வேண்டாங்க. இந்த காலத்து பொண்ணுங்க சோ சோசியல் . US போய்ட்டா அவங்க இரண்டுபேரும் தான். அட்ஜஸ்ட் ஆய்டுவாங்க" என்று சொல்லிட்டு அவளை பார்த்து "ரெடியாமா" என்றார் சிரித்துக்கொண்டே.

அவள் தலை அசைத்தாள் . "இந்தா இத பிடி" என்று அந்த மினி ஜக்கை (mini jug) அம்மா குடுக்க,

இருவரும் அவளை அழைத்துக்கொண்டு ஒரு அறையினுள் அனுப்பினார்கள்.

உள்ளே படுக்கை நிறைய பூக்கள். அருகில் சில பழங்கள். யாரும் இல்லை என்பது போன்று நிசப்தம். ஜக்கை டேபிள் மேல் வைக்கும் போது, உள்ளே கதவு திறக்கும் சத்தம்.

வேஷ்டி அட்ஜஸ்ட் செய்துகொண்டு சற்று தலையை நிமிர்த்தியபடி ரெஸ்ட் ரூமிலிருந்து வெளியே வந்த ராம் அவளை பார்த்தான்!!!

 
#2
Chapter 2:

வெளியே வந்த ராம் அவள் அமர்ந்திருப்பதை பார்க்க, பெட் மேல் இருந்த போன் அடித்தது.

அவள் எழுந்தாள், அவன் அவளை அமரும்படி கை அசைத்துவிட்டு, கால் அட்டென்ட் செய்ய, அவள் அவனை பார்த்தாள். அவன் பால்க்கனிக்கு சென்று பேச ஆரம்பித்தான்.
--------
“அம்மா போட்டோ பார்க்க சொன்னப்ப, அப்போ இருந்த மனநிலைல பார்க்க பிடிக்கல. நிச்சயதார்த்தத்துக்கு கூட வரல”

“நேற்று தான் USல் இருந்து வந்ததா அம்மா சொன்னாள். இப்போ தான் நேர்ல பாக்கறேன்”

“நான் ஒரு ரிசெர்வ்ட் டைப். அப்பா போனதுக்கப்பறம் என்னால ரொம்ப சகஜமா யார்ட்டயும் பேச முடில. அதுவும் பசங்கனா இன்னும் பயம்”

“எனக்கு கல்யாணத்துக்கு முன்னாடி நல்லா பழகி கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசை. லவ் பண்ணற அளவுக்கு தைரியம் இல்ல. அப்படி பண்ணா அம்மா என்ன பண்ணுவா நம்ம இல்லாமனு தோணும்”

“அப்பா இல்லாததால அம்மாவ பக்கத்துலயே வெச்சுக்கணும். கொஞ்ச நாள் ஒர்க் பண்ணி கொஞ்சம் பணம் சேர்க்கணும். எனக்கு பிடித்த பரதம் ஆடணும், சொல்லி தரணும்னு ஆச”

“ஆனா எல்லாம் ஆசையும் நிராசை ஆனது போல ராமிடம் ஒரு தடவை கூட பேசல கல்யாணத்துக்கு முன்னாடி. இது போதாதுன்னு கல்யாணத்துக்கு அப்பறம் ரெண்டு வாரத்துல US போகணும் அதுவும் டிபென்டண்ட் விசால(dependent visa)”

“ப்ராச்சி வேற டிபென்டண்ட்ல போன வேலைலாம் பாக்க முடியாதுனு சொன்னா”

“அம்மாவ விட்டுட்டு அவளோ தூரம் சரியா பழகாத ஒருத்தர் கூட. எதுக்காக இந்த கல்யாணத்த இவளோ அவசரமா ஒரு மாசத்துல முடிக்கணும்”

“எல்லாம் அந்த அத்தை செய்த வேலை. அவங்க அக்கா மகன்னு அம்மாவ கன்வின்ஸ் பண்ணிட்டாங்க. எல்லாம் என் தலையெழுத்து”

“இன்னக்கி நைட் எப்படி போகுமோ. எப்படி பேசணும்னு கூட தெரில” என்று அவள் முணுமுணுத்துக்கொண்டிருக்க ராம் போன் பேசி முடித்துவிட்டு உள்ளே வந்தான். ராம் அவளிடம் நெருங்கும்போது எதோ ஒரு பயம் பதட்டம் என்ன நடக்குமோ என்று.

“ஹே. நீ தூங்கலையா. ஐம் சாரி டு மேக் யு வெயிட். உனக்கும் என்னைப்போல களைப்பா இருக்கும்னு நினைக்கறேன். நீ ரெஸ்ட் எடுத்துக்கோ. எனக்கு வேல இருக்கு. முடிச்சுட்டு நான் படுத்துகிறேன்” என்றான்.

“இப்ப கூட என்கிட்ட பேசணும்னு தோணல அவருக்கு” என்று அதிர்ந்தாள்.

“இல்ல இந்த பால கொடுக்க சொன்னாங்க உங்களுக்கு. தரவா?” என்று பேச்சை ஆரம்பித்தாள்.

“நோ ஃபோர்மாலிடிஸ். எனக்கு முக்கியமான வேல இருக்கு. உனக்கு வேணும்னா நீ எடுத்துக்கோ, எனக்கு இப்போ எதும் வேணாம்” என்று சொல்லிட்டு சோபாவில் அமர்ந்தவன் லேப்டாப் எடுத்து அதில் மூழ்கினான்.

என்னசெய்வதென்று தெரியாமல் அவள் பெட்டின் ஒரு மூலையில் படுத்துகொண்டாள்.
--------
ராம் சோபாவில் உக்கார்ந்தபடியே யோசனையில் மூழ்கினான்.

“என்ன மன்னிச்சுடு நந்தினி. என் விருப்பமில்லாம என் வாழ்க்கையில நடந்த முதல் விஷயம் இந்த கல்யாணம்”

“ஆரம்பத்துல நான் எவ்வளவோ முயற்சி பண்ணேன் இதை நிறுத்த. பட் அம்மா கேக்கவே இல்ல. தங்கச்சி இருக்கா. அவ வாழ்க்கையை ஸ்பாயில் பண்ணிடாத. அவளுக்கு ஒரு நல்ல லைப் வேணாமானு செண்டிமெண்ட்டா பேசியே என் வாய அடைச்சுட்டாங்க”

“இட் வாஸ் ஆல் ஓவர் இன் தி பிலின்க் ஆஃப் அன் ஐ (It was all over in the blink of an eye)”

“என்னால Sue வ எப்படி மறக்க முடியும்?!?!”

 
#6
:D :p :D
உங்களுடைய "மறந்துபோ
என் மனமே"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
ப்ரீத்தி கார்த்திக் டியர்
 

Sponsored

Latest Episodes

Advertisements

Top