• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

மழைக்கால தேனிசையே! - 7

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,424
Reaction score
33,168
Location
Tirupur
ஹாய் மக்களே,

கதையின் பதிவுகளை தாமதமாக தருவதற்கு முதலில் சாரிப்பா! ஒரு வாரத்தில் அடுத்தடுத்து முக்கியமான கல்யாணம் என்பதால் தொடர்ந்து எழுத நேரம் கிடைப்பதில்லை.

அதே நேரத்தில் உங்களின் ஒவ்வொரு கமெண்ட் பார்க்கும் போதும் எழுத வேண்டும் என்ற ஆர்வமே அதிகரிக்கிறது. ரொம்ப நன்றி.

இந்த கதையை தொடர்ந்து படிங்க. என்னால் முடிந்தவரை பதிவுகள் தர முயற்சிக்கிறேன். அப்புறம் நாளைக்கு கமெண்ட் reply பண்றேன்.

"மழைக்கால தேனிசையே!" அடுத்த பதிவுடன் உங்களை சந்திக்க வந்துவிட்டேன். சென்ற பதிவிற்கு லைக் அண்ட் கமெண்ட் கொடுத்த அனைவருக்கும் நன்றி.
இந்த பதிவைப் படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை மறக்காமல் பகிரவும்.

என்றும் பிரியமுடன்,
சந்தியா ஶ்ரீ
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,424
Reaction score
33,168
Location
Tirupur
தேனிசையே - 7

மதுர மஞ்சரியின் பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்த ஜீவரஞ்சனின் மனதில், 'அவளை எப்படியாவது சம்மதிக்க வைத்தே தீர வேண்டும்' என்ற சிந்தனையுடன் நின்றிருந்தான்.

அதே நேரத்தில் நோக்கி வந்த இயக்குனர் கிருஷ்ணன், "நிஜமாவே பாடல் ரொம்ப நல்லா வந்திருக்கு. நீங்க வேணா பாருங்க ரஞ்சன், இந்தப் பாட்டு தான் படத்தோட ஹிட்டிற்கு முக்கிய காரணமா அமைய போகுது" மனம் திறந்து அவனை பாராட்டினார்.

அதைக் கேட்டு அவன் பிரகாசமாகிவிட, "ரொம்ப தேங்க்ஸ் சார்!" என்றான் புன்னகையுடன்.

"சரிப்பா நான் கிளம்பறேன்" என்றவர் அங்கிருந்து செல்ல, அப்போது அவனைத் தேடி அங்கே வந்தான் அசிஸ்டன்ட் மனோகர் மனதில், 'இந்த விஷயத்தை எப்படி சொல்வது?!' அவன் மனதில் தயக்கம் எழுந்தது.

அவனது பார்வை வைத்து மனதை படித்து விட்ட ஜீவரஞ்சன், "என்ன விஷயம் மனோகர்?!" அவனிடம் நேரடியாக கேட்டான்.

அவனது குரல்கேட்டு தன்னிலைக்கு மீண்ட மனோகர், "காலைல மஞ்சரி மேடமோட நம்பர் வாங்குவதற்கு அவங்க கடைக்கு போயிருந்தேன் சார். அப்போ தான் ஒரு விஷயம் கேள்விப்பட்டேன்!" தயக்கத்துடன் பேச தொடங்கினான்.

ஜீவரஞ்சன் புருவங்கள் மேல ஏற இறங்கிட, "அவங்க அப்பாக்கு முடியாம ஹாஸ்பிடல்ல சேர்த்திருக்காங்க சார். உடனே ஆபரேஷன் பண்ண வேண்டிய கண்டிஷன்ல இருக்காரு" தான் கேள்விப்பட்ட விஷயத்தை மறைக்காமல் கூறினான்.

இந்த விஷயத்தை கேட்டவுடன் ஜீவரஞ்சனின் மகிழ்ச்சி சற்றே குறைய, "ஓ ரொம்ப சீரியஸ் ஆனா கண்டிஷனா?!" மனோகரிடம் விசாரித்தான்.

அவனின் கேள்விக்கு ஒப்புதலாக தலையசைத்து, "ஃபர்ஸ்ட் அட்டாக் மாதிரி தான் சொல்றாங்க சார்." என்றான் கவலையுடன்.

அவளின் தந்தையின் உடல்நிலையை நினைத்து மனம் வருந்தியவன், "சரி நீங்க போய் வேலையை பாருங்க! கொஞ்சம் வெளியே போயிட்டு வர்றேன்"மனோகரை அங்கிருந்து அனுப்பிவிட்டு காரை நோக்கி நடந்தால் ஜீவரஞ்சன்.

டிரைவர் சீட்டில் ஏறி அமர்ந்து காரை எடுத்தவன் மனம் அவளை சுற்றி வலம் வந்தது. அவள் சொன்ன பூங்கா அவனது ஸ்டுடியோவிற்கு மிக அருகில் அமைந்திருந்தது.

அதனால் சற்று முன்னதாக அங்கே சென்று விட்ட ஜீவரஞ்சன், சாலையின் ஓரமாக காரை நிறுத்திவிட்டு, பூங்காவின் உள்ளே நுழைந்தான். காலைநேரம் என்பதால் பூங்கா காதலர்கள் மற்றும் வயதான முதியவர்கள் என்று ஆங்காங்கே தனித்தனியாக அமர்ந்திருந்தனர்.

ஒரு மரத்தின் நிழலில் போடப்பட்டிருந்த சிமிண்ட் பெஞ்சில் அமைதியாக அமர்ந்தான் ஜீவரஞ்சன். பூங்காவை சுற்றிலும் இருந்த மரங்களின் நிழலால் வெயில் அதிகம் தெரியவில்லை.

செயற்கையாக செய்யப்பட்ட நீர்வீழ்ச்சியில் நீர் வழிந்து ஓடுவதைப் பார்க்கவே மனதிற்கு நிறைவாக இருக்க, ஏதோவொரு மரத்தில் இருந்து கிளிகள் சத்தமிட, குயில்கள் ராகம் பாடியது. அந்த சூழல் அவனின் மனதை வெகுவாகக் கவர்ந்தது.

தன்னுடைய தம்பியை ஸ்கூல் வாசலில் இறக்கிவிட்டு, தந்தையை அனுமதித்து இருக்கின்ற மருத்துவமனைக்கு செல்லும் வழியில் தான், ஜீவரஞ்சன் ஞாபகமே அவளுக்கு வந்தது. ஒரு கவிதைப் பேப்பருக்காக அவனை நேரில் சென்று சந்திக்க வேண்டுமா என்ற கேள்வி அவளின் நெஞ்சினில் எழுந்தது.

'முதலில் அப்பாவைப் போய் பாரு! ஜீவரஞ்சனை இன்னொரு நாள் போய் பார்க்கலாம்.' என்று அவளின் மனம் சொன்னது.

அதே நேரத்தில், 'அந்த பேப்பர் முக்கியம் இல்லன்னா அவனை எதுக்காக வர சொன்னே?! உனக்காக அவன் அங்கே காத்திருப்பான், இப்போது நீ போகலன்னா அவனுக்கு உன்மீது தவறான அபிப்பிராயம் ஏற்படும்!' என்று அவளை எச்சரித்தது மூளை.

ஒருபக்கம் மனம் சொல்வது சரியென்று தோன்றிய போதும், ஒருவரை வரச் சொல்லிவிட்டு நேரில் செல்லாமல் இருப்பது தவறென்று புரிய, அதற்குமேல் எதைப்பற்றியும் யோசிக்காமல் பூங்கா செல்லும் சாலையில் வண்டியை திருப்பினாள்.

அவள் வண்டியை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு, பூங்காவிற்கு நுழைந்தாள். அவளின் விழிகள் அந்த இடத்தைச் சுற்றி வலம் வந்தது. ஒரு மரத்தின் நிழலில் போடப்பட்டிருந்த சிமிண்ட் பெஞ்சில் சிந்தனையுடன் அமர்ந்திருந்த ஆடவனைக் கண்டாள்.

அவனது புகைப்படத்தை நியூஸ் பப்பரில் பார்த்திருந்த போதும், அவனின் முகம் அரைகுறையாக ஞாபகம் இருந்தது. அதனால் அவன்தான் என்று உறுதியாக ஒரு முடிவிற்கு வர முடியவில்லை.

'அவன் தான் ஜீவரஞ்சன்!' அவளின் மனம் கூப்பாடு போட, வேறு எதைப்பற்றியும் யோசிக்காமல் அவனை நோக்கி சென்றாள் மதுரமஞ்சரி.

அவன் வெகுநேரமாக காத்திருந்தும் அவள் வராமல் போகவே, அவனது நம்பிக்கை குறைய தொடங்கியது. இனி அவள் வர போவதில்லை என்று தோன்றவே, சட்டென்று இருக்கையை விட்டு எழுந்தான்.

அவனின் அருகே சென்றவுடன், "நீங்க ஜீவரஞ்சன் தானே?!" இனிமையான குரல் அவனின் கவனத்தை ஈர்த்தது.

சட்டென்று அவன் நிமிர்ந்து பார்க்க, அவனின் எதிரே பிங்க் நிற காட்டன் சுடிதாரில் தேவதைப்போல ஒரு இளம் யுவதி நின்றிருக்க கண்டு அவனது விழிகள் இமைக்க மறந்தன.

அதே நேரத்தில் அவனைப் பார்த்ததும் ஒரு இனம்புரியாத படபடப்பு மின்னல் வேகத்தில் அவளின் நெஞ்சில் தோன்றி மறைந்தது. அதற்கான காரணம் தெரியாமல், அவள் பார்வை தரையை நோக்கியது.

தன்னுடைய தடுமாற்றத்தை சமாளித்துக் கொண்டு, "ஆமாங்க! நீங்கதான் மதுரமஞ்சரியா?!" சந்தேகமாக கேட்க, அவளும் ஒப்புதலாக தலையசைத்தாள்.

அவளைப் பார்த்து சினேகமாக புன்னகைத்த ஜீவரஞ்சன், "நான் கொஞ்சம் முன்னாடியே வந்து விட்டேன். நீங்க வருவதாக சொன்ன நேரம் முடிந்ததால், இனி வர மாட்டீங்கன்னு நெனச்சேன்" என்றவன் விளக்கம் தர, அவளுக்கு ஏதோ போலானது.

அவன் தனக்காக வெகுநேரம் காத்திருந்தது குற்ற உணர்வை ஏற்படுத்திட, "சாரிங்க! நான் வேணும்னு உங்களைக் காத்திருக்க வைக்கல. இங்கே வரும் வழியில் ஒரே ட்ராஃபிக் ஜாம். அதனால் கொஞ்சம் நேரமாகிடுச்சு!" அவனிடம் உண்மையை மறைத்து பொய் சொன்னாள்.

"வாங்க உட்கார்ந்து பேசலாம்!" என்றவன் கூற, அவளால் சட்டென்று மறுக்க முடியவில்லை. அதனால் எதுவும் பேசாமல் அமைதியாக சிமெண்ட் பெஞ்சில் சற்று இடைவெளி விட்டு அமர்ந்தாள்.

தன் கைக்கடிகாரத்தை பார்த்துவிட்டு, "நான் வரும் வழியில் கவனிச்சேன் உங்க கடை ஏன் இன்னும் திறக்கல?!" பொதுவாக பேச்சைத் தொடங்கினான்.

ஏற்கனவே தன் தந்தையைப் பற்றிய சிந்தனையில் இருந்த மதுரமஞ்சரிக்கு அவனிடம் உண்மையைச் சொல்லி பரிதாபத்தை பெறுவதற்கு அவளுக்கு துளியும் விருப்பம் இல்லை.

சட்டென்று நிமிர்ந்து அவனின் முகம் பார்த்து, "முக்கியமான வேலை விஷயமாக அப்பா வெளியே போயிருக்காரு. அதனால் இன்னைக்கு கடை லீவ் விட்டுட்டோம்" மெல்லிய குரலில் சொன்னாள்.

அவள் சொல்வது பொய் என்று தெரிந்தும், அவன் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான். அவளிடம் எப்படி பேசி சம்மதிக்க வைப்பது என்று புரியாமல் ஜீவரஞ்சன் மௌனமாக இருந்தான்.

தந்தைக்கு சாப்பாடு எடுத்து செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்த மதுர மஞ்சரி, அவனே முதலில் பேசட்டும் என்று காத்திருந்தாள்.

அவனிடம் எந்தவொரு பதிலும் வராமல் போகவே, "என்னோட கவிதை பேப்பரை கொடுத்தீங்கன்னா நான் கிளம்புவேன்..." என்றவள் கூற, அவள் குரல்கேட்டு அவனின் மனம் நடப்பிற்கு திரும்பியது.

அவளை நிமிர்ந்து பார்த்த ஜீவரஞ்சன், "உங்கள் கவிதை பேப்பரை உங்க அனுமதி இல்லாம எடுத்துட்டு போனதுக்கு சாரி." அந்த கவிதை பேப்பரை எடுத்து அவளின் கையில் கொடுத்தான்.

பிறகு அவளின் விழிகளை நேராக நோக்கி, "நிஜமாகவே உங்க கவிதை அழகாக இருந்தது. என்னுடைய படத்தில் நீங்க பாட்டு எழுதினால் கண்டிப்பா ஹிட் ஆகும்னு தோணுச்சு. அதனால்தான் உங்களிடம் பாடல் எழுதி தர முடியுமான்னு கேட்டேன்" என்றவன் தன்னிலை விளக்கம் தந்தான்.

அவனது காந்த பார்வை அவளின் மனதை ஏதோ செய்ய, "எனக்கு பாடல் எழுத விருப்பம் இல்லை. ஏற்கனவே என்னைத் தேடி கடைக்கு வந்த இயக்குனரிடம் அதை தெளிவாக சொல்லிட்டேன். அவர் அதை உங்களிடம் சொல்லவில்லையா?!" அவனின் பேச்சில் குறுக்கே புகுந்தாள் மதுர மஞ்சரி.

கவிதை எழுத ஆர்வமும், ஈடுபாடும் இருந்த போதும், சினிமாத்துறை அவளுக்கு சுத்தமாக பிடிக்காது. இந்த இக்கட்டான சூழலில் பணம் அவளுக்கு அத்தியாவசியமாக இருந்தது. விருப்பிற்கும், வெறுப்பிற்கும் நடுவே அவளின் மனம் ஊஞ்சலாடியது.

அவளின் பேச்சில் ஒருவிதமான தடுமாற்றத்தை உணர்ந்த ஜீவரஞ்சன், "நிஜமாவே நான் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் உங்களை பார்க்க வந்திருக்கேன். நீங்க மறுப்பு சொன்னதுக்கு அப்புறமும் இப்படி கேட்கிறேன்னு என்னை தப்பா நினைக்காதீங்க" அவள் சொல்ல வேண்டிய வாக்கியத்தை சொல்லி பேச்சை தொடங்கினான்.

அவள் இடையில் ஏதோ சொல்ல வாயெடுக்க, "நான் முதலில் பேசி முடிச்சர்றேன்" அதை கையமர்த்தி தடுத்துவிட்டு, அவன் மேலும் தொடர்ந்தான்.

"எனக்கு கவித்துவமான வரிகள் ரொம்ப பிடிக்கும். ஆனா அப்படி எழுதும் ஆட்களை இப்ப ரொம்ப குறைஞ்சிட்டே வராங்க. இந்தப் படத்துக்கு மெட்டுக்கள் நல்ல அமைஞ்சாலும் பாடல் வரிகள் என் மனசுக்கு திருப்தி தரல" என்றவன் உண்மையைக் கூற, அவளின் விழிகள் வியப்பில் விரிந்தது.

ஏனெனில் யாரோ முன்பின் அறியாத பெண்ணிடம் அவன் இவ்வளவு நேர்மையாக பேசுவது அவளின் மனதை வெகுவாக கவர்ந்தது.

அவனிடத்தில் வேறொருவர் இருந்திருந்தால், அவளை பணம் கொடுத்து விலைக்கு வாங்கவே முயல்வர். ஆனால் இவன் உண்மையை வெளிப்படையாக பேசுவது அவளுக்கு வியப்பையும், அவன் மீது நல்லதொரு அபிப்பிராயத்தையும் ஏற்படுத்தியது.

"இன்னும் ரெண்டு நாள்ல இந்த படத்தோட பாடல்களை நான் முடிச்சு கொடுக்கணும். ப்ளீஸ் எனக்காக பாடல் வரிகளை கொஞ்சம் எழுதிக் கொடுக்க முடியுமா?!" தன் நிலையிலிருந்து இறங்கி வந்து கேட்க, அவளால் மறுப்பு சொல்ல முடியவில்லை.

அதே நேரத்தில் அவளின் கொள்கை அவளை சம்மதிக்கவும் விடவில்லை. இப்போது என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அவள் குழப்பத்தில் அமர்ந்து இருந்தாள்.

அதைக் கவனித்த ஜீவரஞ்சனின் மனதில், 'இந்த இக்கட்டான சூழ்நிலையில் இந்த பேப்பர் ரொம்ப முக்கியமா?! என்னைத் தேடி இவ்வளவு தூரம் வந்தது மட்டும் இல்லாம, நான் சொன்னதைக் கேட்டபிறகும் எதுக்காக சம்மதம் சொல்லாமல் இருக்கிறா?!' அவனின் மனதில் கேள்வி எழுந்தது.

அப்போது தான் ஏதோவொரு விஷயம் அவளை சம்மதிக்க விடாமல் தடுக்கிறது என்று உணர்ந்தவனுக்கு, அவளது தந்தையின் ஞாபகம் வந்தது. அதை தனக்கு சாதகமாக பயன்படுத்தும் அளவிற்கு அவன் கெட்டவன் இல்லை என்றபோது, அவளை சம்மதிக்க வைக்க தன் மனதைக் கல்லாக்கி கொண்டான்.

அவளை நிதானமாக ஏறிட்ட ஜீவரஞ்சன், "இப்பவும் நீங்க எப்படியும் முடியாதுன்னு தான் சொல்ல போறீங்க... அது நல்லாவே புரிஞ்சி போச்சு. ஆனா எனக்கு ஒரு சந்தேகம்" என்றவன் மெல்ல பேச்சை தொடங்க, அவளோ யோசிப்பதை நிறுத்திவிட்டு அவனைக் கேள்வியாக நோக்கினாள்.

அவள் கவனிப்பதை உணர்ந்த ஜீவரஞ்சன், "உங்க இடத்துல வேற யாராவது இருந்திருந்தால், தனக்கு இவ்வளவு பெரிய வாய்ப்பு அமைந்ததை கடவுள் அளித்த வரமாக நினைத்து இருப்பாங்க. ஆனா நீங்க அதை இலகுவாக தட்டிக் கழிக்கிறது எனக்கு சந்தேகத்தை கொடுக்குது" அவன் பேச்சை பாதியில் நிறுத்த மதுர மஞ்சரியின் புருவங்கள் மேலேறி இறங்கியது.

அவன் தனக்கு வலை விரிப்பதை உணராத மதுர மஞ்சரி, "உங்களுக்கு இதுல என்ன சந்தேகம்?!" கேள்வியாக புருவம் உயர்த்தினாள்.

அவளது விழிகளை நேராக நோக்கி, "முதல்ல நீங்க ஒரு பொழுது போக்கு கவிஞர். சினிமாவில் பாட்டு எழுதும் அளவுக்கு உங்களுக்கு திறமை இல்லன்னு நினைக்கிறேன்!" என்றதும் அதுவரை இருந்த மனநிலை மாறி அவளின் விழிகள் கோபத்தில் சிவந்தது.

அவளை நினைத்து மனதிற்குள் சிரித்துக் கொண்டே, "இன்னொன்னு என்னுடைய இசைக்கு ஏற்றபடி உங்களால் எழுத முடியாது. அதனால் தான் ஏதேதோ காரணம் சொல்லி தட்டிக் கழிக்கிறீங்க. அதாவது உங்களுக்கு பாடல் எழுதவே பயம்னு நினைக்கிறேன்" என்றவன் கூற, அவள் பட்டென்று எழுந்து விட்டாள்.

அவளது கோபத்தைக் கண்டு, "என்னங்க எழுந்திட்டீங்க?!" என்றவன் இயல்பாக கேட்க, அவன் சொன்ன வார்த்தைகள் அவளின் மனதை வெகுவாக பாதித்தது.

அவன் வேறு என்ன சொல்லி இருந்தாலும், அதை தூக்கி தூர போட்டுவிட்டு அவளால் இலகுவாக கடந்து போக முடியும். ஆனால் தன்னுடைய திறமையை அவன் கேள்வி கேட்டது அவளுக்கு அவன் மீதிருந்த நல்ல எண்ணத்தை சுக்குநூறாக உடைத்தது.

அவளுக்கு சுள்ளென்று கோபம் தலைக்கேற, "யாருக்கு பாட்டு எழுத வராதுன்னு சொல்றீங்க?!" அவனிடம் நேரடியாக கேட்டாள்.

அவளை பார்வையில் ஊடுருவி, "உங்களுக்குத்தான்!" புன்னகையுடன் அவளை சீண்டிவிட, அவளுக்கு அப்படியே பத்திக் கொண்டு வந்ததது.

அவள் கோபத்துடன் அவனை முறைக்க, "இங்கே கவிஞராக இருக்கிற எல்லோருக்கும் பாட்டு எழுதி வட முடியாது. மெட்டு ஏத்தபடி ஒவ்வொரு வார்த்தையும் அந்தந்த இடத்தில் கட்சிதமாக பொருந்தும் அளவுக்கு எழுத தெரியணும். ஒரு வரியில் சொல்லனும்னா இசைக்கு உயிர் கொடுப்பதே பாடல் வரிகள் தான்" தன் கருத்தை அழுத்தமாக முன் வைத்தான்.

அவனை நிமிர்ந்து பார்த்த மதுர மஞ்சரி, "நான் இந்த படத்திற்கு பாடல் எழுதி தர்றேன். என் திறமை சந்தேகப்பட்ட உங்களையே என்னை பாராட்ட வைக்கிறேன்" அவன் முகத்திற்கு நேர் சவால்விட்டாள்.

அவளிடம் எதை எதிர்பார்த்தானோ அது நடந்துவிட, "நாளைக்கு காலையில ஸ்டுடியோ வந்துடுங்க" என்றவன் விசிட்டிங் கார்டை கொடுக்க, அதை வாங்கிக் கொண்டு வேகமாக அங்கிருந்து சென்றாள்.

மதுர மஞ்சரியை பார்த்தபடி நின்றிருந்த ஜீவரஞ்சன் உதடுகளில் புன்னகை அரும்பியது. அவன் செய்த செயலால் அவள் மனம் காயமடையும் என அ வன் யோசிக்கவில்லை.

ஒரு விளக்கு நன்றாக சுடர்விட்டு எரிய, சின்ன குச்சியின் தூண்டுகோல் வேண்டும். அவளது நிலையை உணர்ந்து, கொஞ்சம் அவளைத் தூண்டி விட்டான். இதனால் அவளின் திறமை வெளிப்படும் என்ற நல்ல எண்ணத்தில் இதை செய்தான்.

இதன் மூலமாக வரும் வருமானம் அவர் அவரின் மருத்துவ செலவிற்கு பயன்படட்டும் என்ற எண்ணத்தில் மட்டுமே, வேறெந்த சிந்தனையும் அவன் மனதில் இல்லை.

அதன்பிறகு நேரமாவதை உணர்ந்த ஜீவரஞ்சன் அங்கிருந்து கிளம்பினான். அவனது செயலில் கோபமடைந்த மதுர மஞ்சரி, அதன் பின்னொடு இருக்கின்ற காரணத்தை உணர்வாளா?! தன்னுடைய சவாலில் வெற்றி பெறுவாளா?!
 




Last edited:

bbk

மண்டலாதிபதி
Joined
Jul 11, 2022
Messages
373
Reaction score
163
Location
Trichy
மஞ்சரி குழந்தை மாதிரி செய்யாதேன்னு சொன்னா செய்யும்
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,424
Reaction score
33,168
Location
Tirupur
மஞ்சரி குழந்தை மாதிரி செய்யாதேன்னு சொன்னா செய்யும்
Paravalla akka unmaiyai kandu pidichideenga... நன்றி அக்கா
 




thani

இணை அமைச்சர்
Joined
May 19, 2022
Messages
928
Reaction score
477
Location
Deutschland
அவளை எப்படி சம்மதக்க வைப்பது என்று அவனுக்கு தெரிந்து இருக்கு ,
மஞ்சரி சரி என்று விட்டாள் ஆனால் அவள் பெற்றோர் என்ன சொல்வாங்களோ...?
 




Advertisements

Latest Episodes

Advertisements

Top