• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

General Audience மழையே நின்றுவிடு!

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
இது சில நாள்களுக்கு முன் எழுதியது. காலையில் கடைத்தெருவில் சில புலம்பெயர்த் தொழிலாளர் மூட்டைமுடிச்சுகளுடன் கூட்டமாய் நடந்து செல்வதைக் கண்டேன். இரவு மழை பெய்கிறது என்று என் மனைவி முற்றத்திலிருந்து அழைத்த போது ஏனோ என்னால் வழக்கம் போலச் சென்று அம்மழையை இரசிக்க இயலவில்லை... காலையில் நான் கண்ட அப்புலம்பெயர்த் தொழிலாளர்கள் கண்முன் வந்தனர்... ’ஏற்கனவே எந்த வண்டியும் இல்லாமல், சரியான உணவோ பாதுகாப்போ இல்லாமல் அவர்கள் தம் தாயூரை நோக்கிய ஒரு நெடிய பயணத்தைத் தொடங்கியிருக்கிறார்கள், இதில் இந்த மழை வேறா? அவர்கள் எங்கே ஒதுங்குவார்கள்?’ என்ற கவலை என் மனத்தை அரித்தது... அதன் உணர்ச்சி வெளிப்பாடாகப் பிறந்ததே இக்கவிதை!
-------------------

கொட்டும் மழையே கேளாய்
.....கூரை உண்டிங் கெனக்குக்,
கொட்டும் உன்னைக் கண்டு
.....கொண்டா டிடுவேன் நானும்!
பட்ட நோயால் தாயூர்
.....பார்த்துச் சாலை தன்னில்
எட்டி நடக்கும் ஏழை
.....என்ன செய்வார் பாவம்?

பொழியும் மழையே கேளாய்
.....புகவோர் வீடுண் டெனக்குப்,
பொழியும் உன்னைப் பார்த்துப்
.....போற்றிக் களிப்பேன் நானும்!
மொழிமா றிவந்திங் குழைத்தோர்
.....மூட்டை சுமந்து தாயூர்
வழிபார்த் தேகின் றாரே
.....மழைக்கெங் கொதுங்கி நிற்பர்?

தூவும் மழையே கேளாய்
.....தொழிலுண் டைவுண் டெனக்குத்,
தூவும் உன்னை நோக்கித்
.....துள்ளிக் குதிப்பேன் நானும்!
மேவி இருந்த வேலை
.....மேற்கொண் டில்லா தாகி
ஆவித் தாயூர் செல்லும்

.....அவரை எண்ணி நிற்றி!

[நிற்றி - நின்றுவிடு; முன்னிலை ஏவல்!]

:(:(:(:(:(:(:(:(
 




Manikodi

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
3,747
Reaction score
17,102
Location
Vriddhachalam
ரொம்ப நாட்கள் கழித்து ஆசிரியரின் விஜயம் இங்கு. நடக்கும் நிகழ்வுகளுக்கு நாம் பொறுப்பு இல்லை என்றாலும் இந்த லாக்டவுன் ஆரம்பித்ததலிருந்து கேக்கும் செய்திகள் பார்க்கும் செய்திகள் மனம் கனக்கவே செய்கிறது
 




Guhapriya

அமைச்சர்
Joined
Apr 5, 2019
Messages
4,175
Reaction score
12,257
Location
Trichy
இயற்கைக்கு எதிராகவே நிற்கும் நிலையில் உள்ளோம். அருமை சகோ தங்கள் தமிழ்.
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
தாமரைக்கு ‘இறக்க’ குணம் அதிகம், எதா இருந்தாலும் உடனே ’இறக்கி’ வெச்சுடுவா! இரக்க குணமும் அதிகம்... என்னை மாதிரி கவிதைலாம் எழுதி அதை எஸ்டாபிளிஷ் பண்ணிக்குறதில்ல அவ...

:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

அப்புறம் நீங்க முன்னுரைய மட்டுந்தான் படிச்சிருக்கீங்க போல... நேரம் கிடைக்கும் போது கவிதையையும் படிங்க... :LOL::LOL::LOL:

நன்றி :)(y)(y)
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top