• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

மாயம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Crazee queen

மண்டலாதிபதி
Joined
Oct 14, 2019
Messages
129
Reaction score
827
Age
29
Location
Pudukkottai
நானும் ரவியும் வாரத்தில் ஒரு முறை அலெக்ஸ் வீட்டுக்குப் போவது வழக்கம். அவன் வீடு பைபாஸ் ரோட்டில் இருந்து அரை கிலோமீட்டர் உள்ளே தள்ளி உள்ளது‌. நாங்க மூணு பேரும் நல்லா ஊர் சுத்துவோம் விளையாட அப்படியே அன்னைக்கு பொழுது ஓடிரும்‌.


ஒரு சில நேரம் நானும் ரவியும் அங்க தங்கி மறுநாள் காலையில வீட்டுக்கு போவோம். சிலநேரம் அன்னைக்கு சாயங்காலமே கிளம்பிடுவோம்.

ஆனா அன்னைக்கு மட்டும் சாயங்காலம் கடந்து இரவு நோக்கி நேரம் கடக்க எட்டு மணிபோல ரவிக்கு போன் வந்தது. அதை அவன் அட்டென்ட் பண்ணி பேசி முடிக்கிற வரைக்கும் அவனையே பார்த்துட்டு இருந்தோம்.

சில வினாடிகளில் ரவியின் கண்கள் கலங்கி இருக்க அழுகுரல்ல எங்க கிட்ட பேசினான்.
"வீட்டில இருந்து தங்கச்சி பேசினாள், அப்பாவுக்கு உடம்புக்கு முடியலையா பக்கத்துல இருக்கா ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணிட்டாங்களா"
என்று தங்கச்சி சொன்னதை சொல்ல "கவலைப்படாதடா" என நானும் அலெக்ஸ்ஸும் ஒரு சேர சொன்னோம்.

மூணு பேரும் காரில் ஏறினோம். அலெக்ஸ்தான் வண்டியை ஓட்டினான். நான் அவன் அருகில் உட்கார்ந்தேன். ரவி பின்னாடி உட்கார்ந்திருந்தான்.

அலெக்ஸ் வேகமாக காரை ஓட்ட ஸ்பீடோமீட்டர் 150 ஸ்பீடை தாண்ட எனக்கு அல்லையை பிடித்தது. "மெதுவா போடா" என பலமுறை சொல்லியும் அவன் கேட்கவில்லை எனக்கு திக் திக் என இருக்க ஒரு பக்கம் ஏண்டாப்பா முன்னாடி உட்கார்ந்தோம் என தோன்றியது.

தூரத்தில் யாரோ டூவீலரோட கீழே விழுந்து கிடப்பது போல் இருக்கவும் அலெக்ஸ் வண்டியை ஸ்லோ செய்து காரை இடப்புறம் நிறுத்திவிட்டு இறங்க நானும் இறங்கி போய் பார்க்க ஒரு நடுத்தர வயது ஐயா முகத்தில் சில காயங்களோடு ரத்தம் வழிய மயக்க நிலையில் இருந்தார்.

மற்ற நேரத்தில் கூட இந்த ரோட்டில் இருப்புறமும் வண்டி சல்லென்று செல்லும் ஆனால் அன்று மட்டும் பயங்கர அமைதி கொண்டிருந்தது.

"எவனோ அடிச்சு போட்டு போய்ட்டான் டா" எனச் சொல்லி அவரை காப்பாற்றாமல் அலெக்ஸ் பின்வாங்கினான். நான் அந்த ஐயாவை காப்பாற்றச் சொல்லி அலெக்ஸ்ஸை சமாதானம் செய்து ஐயாவை தூக்கிக் கொண்டு காரில் ஏறி ஆம்புலன்ஸ் வேகத்தில் தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம்.

அலெக்ஸ் அப்பாவின் நண்பர் போலீஸ் இன்ஸ்பெக்டர் என்பதால்
அவரிடம் ரோட்டில் அடிபட்டு கிடந்த ஐயாவை காப்பாற்றி ஹாஸ்பிட்டலில் சேர்த்த விஷயத்தை அலெக்ஸ் போனில் சொன்னான்.

ரவி எப்பொழுது மயங்கினான் ? என்றே தெரியவில்லை, அனேகமாக அவன் காரை இடையில் நிறுத்தியது முதல் அந்த ஐயாவை ஹாஸ்பிட்டலில் சேர்த்த வரை அவன் ஒன்றும் அறிந்திருக்க மாட்டான்.

அவனை இடையில் எழுப்பலாம் எனும் போது அலெக்ஸ் தடுத்துவிட்டான். இப்பொழுது அலெக்ஸ் அவனை எழுப்ப சொல்லும்போது எனக்கு போன் வரவும் எடுத்துப் பார்த்தேன் ரவி வீட்டில் இருந்து கால் வர அட்டன் செய்து பேசினேன். ரவி அப்பாதான் பேசினார். எனக்கு நெஞ்சை அடைத்தது. 'ஹாஸ்பிட்டலில் சேர்த்ததாக சொன்னானே என்ன அவர் சர்வசாதாரணமாக நல்லா பேசுகிறாரே' என எனக்குத் தோன்றியது.

"தம்பி ரவிக்கு ஏழு மணியிலிருந்து கால் ட்ரை பண்றேன், ஆனா அவன் போன் ஸ்விட்ச் ஆஃப்னு வந்துச்சு,
நேரமாச்சுனா காலையில கூட வாங்கப்பா நைட்டு நேரம் டிராவல் பண்ண வேணாம்" என்று சொன்னார்.

நான் திகைத்தபடி ரவி போனை எடுத்துப் பார்த்தேன். ஃபுல் டெட் சுத்தமா சார்ஜ் இல்லாத போன்.

எனக்கு ஒரே குழப்பம் எப்படி எல்லாம் ஏதோ ஒரு அமானுஷ்ய நிகழ்வு போல தோன்ற, அலெக்ஸ் "என்ன ? என்ன ?" என்று என்னை கேட்க அப்படியே தலை சுற்றி மயக்கம் போட்டு கீழே விழுந்து விட்டேன்.

?நண்பர்களே ?

என்ன நடந்தது இருக்கும் நீங்களா சொல்லுங்க. கதையோட முடிவு உங்க கிட்ட விடுறேன்.....
 




Sugaaa

முதலமைச்சர்
Joined
Jun 23, 2019
Messages
6,379
Reaction score
22,012
Location
Tamil Nadu
????....
என்ன நடந்திருக்கும்..?

?ரவி அப்பாவே நல்லா பேசறாரே...

?ரவி தான் பொய் சொல்லிருக்காங்க. ..?

?எப்படியோ அடிபட்டு கிடந்தவரை காப்பாற்றின வரையில் நிம்மதி தான்...

?ஆனாலும் ஏன் ரவி இப்படி சொன்னான்...

?ஒருவேளை தனது நண்பர்களை முட்டாள்கள் தினம் கொண்டாட ஊருக்கு அழைச்சிட்டுப் போறானோ..?:p:p
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top