• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

மாவடு ஊறுகாய்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,488
Reaction score
44,928
Location
India
தேவையான பொருட்கள் :

மாவடு (முடிந்தளவு சிறியதாக கிடைத்தால் வாங்கி கொள்ளுங்கள்) - ஒரு கிலோ

விளக்கெண்ணெய் - இரண்டு டேபிள் ஸ்பூன்

கல்உப்பு - இருநூறு கிராம்

மிளகாய்த்தூள் - நூறு கிராம்

கடுகுத்தூள் - ஐம்பது கிராம்

மஞ்சள் தூள் - ஒரு டீஸ்பூன்


செய்முறை :

மாவடுவை (மாங்காயை) காம்புடன் கிடைக்குமாறு வாங்குவது நன்று. இல்லையென்றால் பரவாயில்லை. நன்றாக கழுவி எடுத்த பிறகு, காம்பை சிறிதளவு மட்டும் விட்டுவிட்டு மீதத்தை வெட்டி எடுத்து விடுங்கள்.

கழுவி எடுத்து காட்டன் துணியில் போட்டு ஒரு அரைமணி நேரம் உலர்த்திவிடுங்கள்...

நன்றாக ஈரமில்லாமல் காய்ந்ததும், ஒரு துணி வைத்து மீண்டும் துடைத்து எடுத்து ஒரு ஜாடி அல்லது பெரிய கண்ணாடி பௌலில் போட்டுவையுங்கள்...


இதில் விளக்கெண்ணெய் இரண்டு டேபிள் ஸ்பூன் சேர்த்து நன்றாக எல்லா மாங்காயிலும் படுமாறு குலுக்கி விடுங்கள்,


கல்உப்பை மிஜியே ஜாரில் சேர்த்து பொடி செய்து கொள்ளுங்கள்..

பொடி செய்த உப்பை நாம் கழுவி எடுத்து பௌலில் எண்ணெய் போட்டு வைத்திருக்கும் மாவடுவில் போட்டு நன்றாக குலுக்கி விடுங்கள். அல்லது ஒரு மரக்கரண்டியில் நன்றாக கிளறி விடுங்க.

முடிந்தளவு மாவடுவை கிளறாமல் குலுக்கி விடுவது நல்லது..

இதை அப்படியே ஒரு பத்து நாட்கள் வைத்திருங்கள், தினமும் காலை மாலை இருமுறை எடுத்து நன்றாக குலுக்கி விட்டு வைத்துவிடுங்கள்.

பதினொன்றாவது நாள் எடுத்து பார்க்கையில் நன்றாக நீர் விட்டிருக்கும்,.

அந்த நீரை தனியாக ஒரு பௌலில் ஊற்றிவிடுங்கள்.

அந்த நீருடன், மிளகாய்த்தூள், கடுகுத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக கலந்துவிட்டு, குலுக்கி விடுங்கள்.

மீண்டும் ஒரு பத்து நாட்கள் இப்படியே இருக்கட்டும், முண்டு சொன்னது போல தினமும் இரு வேளையும் மாவடுவை நன்றாக குலுக்கி விடவேண்டும்.

மொத்தமாக ஒரு இருபது நாட்கள் ஆகும் மாவடு தயாராவதற்கு. இருபது நாட்களுக்கு பிறகு சுவையான மாவடு ஊறுகாய் / வடுமாங்காய் ஊறுகாய் தயார்...


(பின்குறிப்பு :
1. இதில் மாவடுவை கழிவு எடுத்தபிறகில் இருந்து ஊறுகாய் போட்டு முடிக்கும் வரை ஒரு துளி தண்ணீர் கூட இதில் பட்டுவிட கூடாது, ஊறுகாய் கெட்டுவிடும்.
2. இதை பீங்கான் ஜாடியில் தான் போட்டுவைக்க வேண்டும், இல்லையென்றால் கண்ணாடி ஜாரில் போட்டுவைக்கலாம். அதுவும் இல்லையென்றால் தான் பிளாஸ்டிக். அதுவும் கொஞ்சம் கெட்டியான பிளாஸ்டிக் டப்பாவில் போடலாம். பீங்கான் ஜாடியில் போட்டுவைப்பதால் அதன் ருசி கூடும்.)


60a4d8b4-53a7-4e88-91df-f6c0a5477a08.jpg

547385a8-9085-4242-b599-84ec7f23e3fe.jpg

1.jpg

3bd381c6-85a3-4228-b6be-6d03218ac5dd.jpg

198fcd73-745a-4d32-94ed-bff6e458e71d.jpg
265d7b44-b025-48d6-a9db-670cfaac5b96.jpg
 




ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,488
Reaction score
44,928
Location
India
வாட் இஸ் மீன் பை விளக்கெண்ணெய்
Athuva inga anamika 73 nu oru jandhu suthittu irunthuchu athu than antha விளக்கெண்ணெய்🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️
 




Nuvali

அமைச்சர்
Joined
Aug 14, 2021
Messages
1,051
Reaction score
2,969
Location
India
வாட் இஸ் மீன் பை விளக்கெண்ணெய்
anamika 73 ஓட ஹீரோ தேவ் தான் விளக்கெண்ணெய்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top