• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

மிதக்கும் ஆயுதங்கள் - அத்தியாயம் 1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Kathambari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Feb 1, 2019
Messages
6,457
Reaction score
21,474
Location
Mumbai
சென்னை மாநகரத்தின் காவல்துறை ஆணையர் அலுவலகம். மதியம் சுமார் மூன்று மணி அளவிலும் பல்வேறு பகுதியில் இருந்தும் பொதுமக்கள் தங்கள் பிரச்சினைகளைத் தீர்க்கக் கோரி புகார் அளிப்பதற்காக வந்தும் போயும் இருந்தனர்.


கமிஷனரின் தனி அலுவலக அறையில் சென்னை மாநகரத்தின் காவல் ஆணையர் ப்ரித்திஸ், அந்தப் பதவிக்குரியக் கம்பீரத்துடன் அமர்ந்திருந்தான். நயமான பேச்சு, பொறுமையுடன் சூழ்நிலையைக் கையாள்வது மற்றும் யார் மனமும் புண்படாமல் நடப்பது... இவையெல்லாம் அவனின் குணநலன்கள். எதுவும் சட்டப்படியே நடக்க வேண்டும் என நினைப்பவன். கூடுதல் தகவல் புதிதாய் திருமணமானவன்.


ப்ரீத்திஸ் இன்று கொஞ்சம் கோபம் கொண்டிருந்தான். எதற்கு, யாரிடம் இந்த கோபம்?.


மணி 4:30 என்று காட்டியது சுவர்க் கடிகாரம்.


கருப்பசாமி என்கிறவரை அழைத்தான். அவர் அங்கு உள்ளோர்க்கு உதவியாளர்.

நல்ல மனநிலையில் இருந்தால் ‘அண்ணே’ என்று கூப்பிடுவார்கள். இல்லையென்றால் வெறும் ‘சாமி’ மட்டும்தான்.


“சாமி.. போய் உங்க அசிஸ்டன்ட் கமிஷனர கூட்டிட்டு வாங்க “ என்று உத்தரவிட்டான்.


“சார், அவரு ஏதோ வெளியில வேல இருக்குன்னு சொன்னாரு”என்றார்.


“எனக்குத் தெரியாது சாமி, அவர் இப்ப இங்க வரனும்”



“சரிங்க சார்” என்று கூறி, இரண்டு அறைகள் தள்ளி உள்ள அறைக்குச் சென்றார்.


“சார்… உள்ள வரலாமா” என்று கருப்பசாமி கேட்டார்.


“வாங்கண்ணே.. அப்பவே வருவீங்கன்னு நெனச்சேன்.. ரொம்ப லேட்டா வந்திருக்கீங்க…” என்றான் அந்த உதவி ஆணையர்.


“தெரியுமா சார் உங்களுக்கு… கமிஷனர் கூப்பிடுவாரனு”


“தெரியும்ண்ணே.. காபி குடிக்கிறீங்களா… ” என்றான் கோப்பையில் இருந்தக் காப்பியை அருந்தியபடி.


“ஐயோ சார்… அவரு ரொம்பக் கோவமா இருக்காரு”


“விடுங்கண்ணே… நமக்கு இது புதுசா என்ன ”


திடுமென ஒருவன் உள்ளே நுழைந்தான்.

வந்தவன், உதவி ஆணையரைப் பார்த்து என்ன என்பது போல் கண்களால் கேட்டான்.


“ஒரு கை தேவைப்படுதுடா… வரியா “


“எங்க”


“கமிஷனர் கூப்பிடுறாரு ”


“உன்னதான கூப்பிட்டாரு… நீ மட்டும் போ… இன்னிக்கு கோட்டா எனக்கு காலைலயே முடிஞ்சிருச்சு” என்றான் மதி என்று கூப்பிடப்படும் இளமதி.


“கருப்பசாமி நீங்க போங்க… நான் கண்டிப்பா போய் உங்க கமிஷனர பார்க்கிறேன்” என்றான் உதவி ஆணையர்.


“சீக்கிரம் போயிருங்க ரெண்டு பேரும் “என்றார் சாமி.


“என்னைய ஏண்ணே கோர்த்து விடுறீங்க”என்றான் மதி.


“உங்க விளையாட்டில என்னைய திட்டுவாங்க வச்சிடாதீங்க சார் “என்று புலம்பிய படியே வெளியே சென்றார் கருப்பசாமி .


“வாடா… இல்லனா ரொம்ப கோபப்படுவாரு…. பத்து நிமிஷம் தான்டா அவருக்கு டைம்.. “என்று மதியையும் அழைத்துச் சென்றான் உதவி ஆணையர்.


“என்ன பத்து நிமிஷம் “


“சொல்றேன் வா”


கமிஷனரின் அறை…

மணி 4:50


“வாங்க ஆரின்பன்…. எத்தனை தடவை சொன்னாலும் திருந்த மாட்டீங்களா…. ஒரு கம்ப்ளைன்ட் இல்ல, எப்ஐஆர் போடல… ஆனா நீங்க அந்தப் பையன அடிச்சிருக்கீங்க… எவ்வளவு பெரிய தப்பு தெரியுமா… அந்த பையன் சைடுல இருந்து ஒரு கம்ப்ளைன்ட் கொடுத்தா போதும்… உங்கள சஸ்பண்ட் பண்ணிடுவாங்க…. “ என்று அடைமழையாய் கொட்டித்தீர்த்தான்.


“கம்ப்ளைன்ட் கொடுக்கச் சொல்லுங்க ஐயா” என்றான் கைகளைக் கட்டிக் கொண்டு குணிந்து நின்று ஆரின்பன்.


“என்னது”


“முதல கம்ப்ளைன்ட் கொடுக்கச் சொல்லுங்க.. அப்புறமா சஸ்பெண்ட் பத்திப் பேசலாம்ங்க ஐயா”


“என்ன இளமதி… இவரு ஏன் இப்படி கூப்பிடுறாரு”


“ஆமாங்கய்யா… இங்கிலீஷ்ல சார்னா தமிழ்ல ஐயானு சொல்வாங்க” என்றான் உதவி ஆணையர்.


“என்ன இளமதி, நீங்க இதெல்லாம் கேட்க மாட்டீங்களா “


“இல்லீங்க ஐயா … உங்களதான் அப்படி கூப்பிடுறான்… என்னைய அப்படி கூப்பிட மாட்டான்”


“விளையாடாதீங்க இளமதி, அவர் பண்ணது தப்பா.. இல்லையா”


இடையிடையே தன் கைக்கடிகாரத்தைப் பார்த்துக், கொண்டிருந்தான் ஆரின்பன்.


“ஏதாவது முக்கியமான வேல இருக்கா ஆரின்பன்… வாட்சயே பார்க்கறீங்க… ஏதாவது லவ்வா “ என்று நக்கலாகச் சிரித்தான் ப்ரித்திஸ்.


“நீங்க வேற ஐயா.. நடுரோட்டில வச்சி என்னா அடிங்கீறீங்க அந்தப் பையனுக்கு… பசங்களே பக்கத்தில வர மாட்டானுக … அப்புறம் எப்படி பொண்ணுங்க “ என்றான் மதி.


“அதெல்லாம் இல்லீங்க ஐயா…. நீங்க பேசுங்க… இல்ல திட்டுங்க…. “என்றான் ஆரின்பன், மதியை முறைத்துப் பார்த்துக் கொண்டு.


“29 வயசாகுது ஆரின்பன் … சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்கோங்க ”



“ எதுக்கு ஐயா, அதெல்லாம் ”


“அவரே தனியா எவ்வளவு நாள்தான் திட்டுவாரு.. கம்பெனிக்கு ஒரு ஆள் வேணும்ல” என்று மதி முணுமுணுத்தான்.


“என்ன மதி சொல்றீங்க”


“ஒன்னுமில்லைங்க ஐயா”


“ஆரின்பன்… உங்களுக்கு இருக்கிற திறமைக்கு நீங்க கமிஷனரா இருக்கணும் “


“பரவால்லீங்க ஐயா, நீங்களே இருந்துக்கோங்க… நான் இப்படியே இருந்துட்டுப் போறேன்”


“இல்ல… நான் என்ன சொல்றேனா… “


அவன் முடிக்கும் முன்பே மணி ஐந்து அடித்தது. அவ்வளவுதான்…


“அடிங்….. “என்று தன் வழக்கமான பாணியில் மட்டியைக் கடித்துக்கொண்டு கமிஷனரை அடிக்க ஆரம்பித்தான் இன்பன் என்று அழைக்கப்படும் ஆரின்பன் .. சில நேரங்களில் ‘அஸிஸ்ட்டு ‘...


“மவனே அட்வைஸ் பண்ணுவ இனிமே… உன்ன” என்று அடித்தான் ஆரின்பன் .


“டேய் விடுடா… “ என்றான் ஐயா என்று செல்லமாக அழைக்கப்படும் ப்ரித்திஸ்.


வெளியே கருப்பசாமி கான்ஸ்டபிள் “இந்த மூணும் என்ன ஆட்டம் ஆடுதுங்க. அதுங்களும் சம்பாதிக்காது.. நம்மளையும் சம்பாதிக்க விடாதுங்க… இதுங்கள அடக்க யாரவது வரனும் “ என்று நினைத்தபடிச் சென்றார்.


இன்னும் இன்பன் அடிப்பதை நிறுத்தவில்லை.


“அடிடா… என் பேரச் சொல்லி நாலு அடி அடிடா.. காலைல எனக்கும் அட்வைஸ் பண்ணான் ” என்றான் மதி அருகிலிருந்த நாற்காலியில் அமர்ந்தபடி.


இவர்களைப் பற்றி…


இளமதியும் ஆரின்பனும் பள்ளிப் பருவத்திலே இருந்து நண்பர்கள். ஆனால் ப்ரித்திஸ் அப்படியல்ல. அவனுடைய ஐபிஎஸ் பயிற்சியில் தான் இவர்கள் இருவரையும் சந்தித்தான். மூவரும் அப்போதிருந்தே நல்ல நண்பர்களாகிவிட்டனர். அவர்கள் மட்டுமல்ல அவர்களது குடும்பத்தினரும் நட்பு பாராட்டியே இருந்தனர்.


ப்ரித்திஸ் திருமணமாகி தன் அம்மா, அப்பா, அண்ணன், அண்ணி என்று கூட்டுக்குடும்ப வாழ்க்கை வாழ்கிறான். அவன் மனைவியின் பெயர் மகிமா. அவள் ஒரு தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக இருக்கிறாள். மகிமாவிற்கு இந்தக் குடும்பச் சூழல் சற்று பிடித்தம் இல்லாத ஒன்று. ப்ரித்திஸ் பெரிதாக தனது உணர்வுகளை வெளிப்படுத்திக் கொள்ளாதவன்.


இளமதி வீட்டில் அவனும் அவனின் மனைவி எழிலினி மட்டுமே.


ஆரின்பன் தன் அம்மா, அப்பாவுடன் வசித்து வருகிறான். அவனது அக்கா திருமணம் முடிந்து இரண்டாவது குழந்தையை எதிர் பார்த்து இருக்கிறாள்.


இந்த நிமிடம்…


“டேய் விடுடா… திருந்த மாட்டியா.. அம்மா, அப்பா, அக்கானு எல்லாரும் புலம்புறோம்.. அடங்குடா கொஞ்சமாது… அப்பதான்டா கல்யாணம் நடக்கும்” என்றான் ப்ரித்திஸ்.


“இவனுக்கு அந்த அமைச்சர் கொடுக்கிற இடம்… அதான் இப்படி பண்ணிக்கிட்டு இருக்கான்” என்றான் மதி.


“உனக்கும் வேணுமா “என்றான் இன்பன், மதியை நோக்கி ஒற்றை விரல் நீட்டியபடி. .


“ச்சீ… முதல உட்காரு.. எப்ப பார்த்தாலும் வெறி பிடிச்ச… “என்று மதி சொல்லி முடிக்கும்முன்னே அவன் முன் நின்றான் ஆரின்பன்.


“ம்ம். சொல்லி முடி“


“வெறி பிடிச்ச வேங்கை… வெறி பிடிச்ச யானை.. அப்படின்னு சொல்ல வந்தேன்டா”


“ஓ தெளிவு… ஆமாப்பா அப்படித்தான் நாங்க… என்னடா செய்ய.. அந்த பொண்ணு பாவம்டா.. கம்ப்ளைன்ட் கொடுக்கப் பயபப்புடுது…காசும் இல்ல… அந்தப் பையனோட டார்ச்சர் தாங்க முடியலனு சொல்லுது… அதான் அடிச்சேன்”என்றான் இன்பன்.


“மதி.. யானைக்கு மதம் தான பிடிக்கும்னு”என்றான் ப்ரித்திஸ்.


“ஆங்… ரொம்ப முக்கியம் “


“என்னமோ பண்ணுங்க .. மகிமா வெளில கூட்டிட்டுப் போகச் சொன்னா… ஸோ, கிளம்புறேன்டா…மதி நீ”என்றான் ப்ரித்திஸ் தன் இருக்கையில் இருந்த எழுந்து நின்று.


“நானும் கிளம்புறேன்டா… எழிலுக்கு போய் சமைக்கணும்.. இன்பா.., அக்கா வீட்ல இருந்து அம்மா வந்தாச்சா? இல்லனா நீ வீட்டுக்குச் சாப்பிட வரியா“ என்றான் மதி.


“இல்லடா… வேற வேல இருக்கு ”


மூவரும் வெளியே கிளம்பினார்.


அப்போது ஒரு பள்ளி மாணவி வந்து நின்றாள். இன்பன் அந்த மாணவி அருகில் சென்று…


“என்ன வேணும் “


“சார், பஸ் ஸ்டாப்ல வச்சுப் பசங்க ரொம்பத் தொந்தரவு பண்றாங்க சார் “


“எந்த பஸ் ஸ்டாப்… சரி அதவிடு… எத்தனை பேரு “


“அஞ்சு பேர் சார் “


“உன்னய மட்டுமா”


“என்ன மட்டும் இல்ல சார்.. எல்லா ஸ்கூல் பொண்ணுங்களையும்… சிலநேரம் ஸ்கூல் பசங்க கிட்டக் கூட காசு கேட்டுத் தொல்ல பண்றாங்க “


“நான் என்ன செய்யனும் “


“தெரில சார்.. ஆனா அவங்கள ஏதாவது செய்யனும் “


“ம்ம்ம்..எல்லா இடத்துக்கும் போலீஸ் வரமுடியாது “என்றான் பக்கத்தில் இருந்த தூணில் சாய்ந்து கொண்டு.


“என்ன சார்.. ஏரியா போலீஸ் சொல்றதயே நீங்களும் சொல்றீங்க “


“நான் இன்னும் முடிக்கல… கேளு.. நீங்க எல்லாரும் சேர்ந்து அந்தப் பசங்கள அடிச்சிட்டு வாங்க… அப்புறம் என்ன பிரச்சனை வந்தாலும் நான் பாத்துக்கறேன்”


“டேய் நிறுத்து....இங்க வாம்மா “என்று மதி தான் இடையே வந்தான்.


“ஏன்.. தைரியமா இருந்து பழகட்டுமே.. “என்று மதியை விளக்கினான்.


“சும்மா இரு… ஏம்மா நீ எந்த ஏரியா “


அந்தப் பள்ளி மாணவி சொன்னவுடன்..


“நீ போமா.. அந்த ஏரியா இன்ஸ்பெக்டருக்கு நான் சொல்றேன் “


அந்த மாணவி சென்றவுடன்..


ஆரின்பனை முறைத்துப் பார்த்தனர் இருவரும்.


“வாவ்.. என்னா ஒரு எக்ஸ்பிரஸ்ஸன்…. இதே மூஞ்சோட வீட்டுக்குப் போங்க.. இன்னைக்கு நாள் அமோகமா இருக்கும் “ என்றான் இன்பன்.


இவன் அடங்கமாட்டான் என்று நினைத்தபடியே இருவரும் கிளம்பினார்கள்.


சட்டத்துறை அமைச்சருக்கு பிடித்த காவல் அதிகாரி. அவரின் நேரிடையான ஆதரவு உண்டு என்பதால் வேறு யாரும் எதுவும் கேட்க முடியாது. யாராவது சொன்னாலும் இவன் கேட்பானா என்பது சந்தேகமே…


அப்படி அவர்கள் என்ன செய்கிறார்கள். காவல்துறை, நீதிமன்றம் என பணம் செலவு செய்து, அலைந்து, திரிந்து நியாயம் பெற முடியாதவர்கள் பக்கத்தில் நிற்கிறார்கள். ஆரின்பன், அமைச்சர் மற்றும் அந்தந்த பகுதியில் உள்ள ஒரு சில காவல் அதிகாரிகளுடன் சேர்ந்து இந்த நல்ல செயலைச் செய்து வருகின்றான்.


சுருக்கமாக சொன்னால் கட்டப்பஞ்சாயத்து முறைதானோ? அது மற்றவர்களுக்கு… ஆனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அது பெரிய உதவி.


நல்லது செய்தால் இந்த உலகமும் திருப்பி நல்லது செய்ய வேண்டும் என்று விதிமுறை இருக்கிறதா என்ன??

தொடரும்....
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
உங்களுடைய "மிதக்கும்
ஆயுதங்கள்"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
காதம்பரி டியர்
 




Last edited:

Kathambari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Feb 1, 2019
Messages
6,457
Reaction score
21,474
Location
Mumbai
:D :p :D
உங்களுடைய "மிதக்கும்
ஆயுதங்கள்"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
காதம்பரி டியர்
நன்றி டியர் ❤
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top