• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

மிதக்கும் ஆயுதங்கள் - - அத்தியாயம் 10

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Kathambari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Feb 1, 2019
Messages
6,457
Reaction score
21,474
Location
Mumbai
ஆணையர் அலுவலகம்

இரண்டாவதாக இறந்த பையனின் அட்டாப்ஸி ரிப்போர்ட்டைத் தான் திரும்பத் திரும்பப் படித்துக் கொண்டிருந்தான் இளமதி.

“நீ பாத்துட்டியா. “

“மனப்பாடம் ஆயிருச்சு.. “

“என்ன முடிவு பண்ணி இருக்க.. “

“பாப்போம் இதோட முடியுதா.. இல்ல கண்டினியூ ஆகுதான்னு…. தினேஷ் பத்தி ஏதாவது நியூஸ்.. “

“விசாரிச்சாச்சுடா.. அவன் லோக்கல்ல ஹெராயின் ஸப்லே பண்றான்… இப்ப ஒன்னும் பண்ண வேண்டாம்ல.. “

“கண்டிப்பா வேண்டாம்… ஸோ செத்தவனுங்க ரெண்டு பேருக்கும் ஹெராயின் ஸப்லே பண்ணது இவனா இருக்கலாம்… இப்போதைக்கு இந்த ரெண்டு கொலைக்கும் பொதுவான விஷயம் இது மட்டும் தான்.. “

அப்போது உள்ளே வந்தான் ப்ரித்திஸ், இவர்கள் பேசுவதைக் கேட்டபடியே வந்து அமர்ந்தான். ஆனால் அவர்கள் இருவரும் பேசுவதை நிறுத்தவில்லை.

“நீ சிசிடிவி செக் பண்ணியா.. அதுல ஏதாவது… ”

“ செக் பண்ணியாச்சு.. ஒரு யூசும் இல்ல.. எந்த வண்டியும் அவன பாலோவ் பண்ணிட்டு வந்த மாதிரியே தெரியல…”

அமைதி நிலவியது. சில நிமிட யோசனைக்குப் பின்…

“மதி.. அட்டாப்ஸில அந்தப் பசங்க இறந்ததா சொல்ற நேரமும்… மொபைல்ல கால் கிஸ்டரில கடைசியா அவனுங்க பேசுன காலுக்கு உள்ள நேரத்துக்கும் பெரிய வித்தியாசம் இல்ல… அப்படினா சாகறதுக்கு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வரைக்கும் போன்ல பேசிட்டு இருந்திருக்கானு அர்த்தம்… யாராவது விரட்டிட்டு வந்தா இவ்வளவு கூலா போன்ல பேசிட்டு வந்திருக்க மாட்டான்…”

திரும்பவும் இன்பன் யோசித்தான்…

“ ஏன் யாராவது பாலோவ் பண்ணிட்டுதான் வந்திருக்கனுமா.. அவனுக்கு ஆப்போசிட் சைடுல இருந்து ஏதாவது காரோ, பைக்கோ வந்து, அங்க அவன ஸ்டாப் பண்ணிருந்தா….. ”

“அப்ப ஆப்போசிட் சைடு இருந்து வர்ற ரோடுல இருக்கிற சிசிடிவி செக் பண்ணச் சொல்லவா.. “

“மதி, நீ என் கூட வா.. சிசிடிவி ரெக்கார்டிங்ஸ் நாமளே செக் பண்ணலாம்.. “

“நா எதுக்குடா… “

“அந்த ஏரியா இன்ஸ்பெக்டர் முரளி கூட பேச… ப்ரித்திஸ், ஆனந்திக்கு போன் செஞ்சி, அவங்க ஏரியால இதே மாதிரி செக் பண்ணச் சொல்லு”

சரி எனத் தலையாட்டினான் ப்ரித்திஸ். அவ்வளவுதான்.

எதிர்த் திசையில் இருந்து கொலை நடந்த இடத்திற்கு வந்தடைய மூன்று சாலைகள் இருந்தன.

அந்த மூன்று சாலைகளில் எங்கெல்லாம் சிசிடிவி கண்காணிப்பு இருக்கிறது என்று ஆராய்ந்தனர்.

அவன் இறந்த நேரத்தை வைத்துக் கொண்டு… அந்த குறிப்பிட்ட நேரத்தில் எந்தெந்த வாகனங்கள் அந்தச் சாலையைக் கடந்து வந்தன எனப் பார்த்தனர். மூன்று சாலைகளில், ஒரு சாலையின் வழியே ஒரு கார் மட்டுமே அந்தப் பையன் இறந்து போன நேரத்திற்கு முன்பாக வந்தது தெரிந்தது. அதுவும் ஒரு குறிப்பிட்ட எல்லைவரையே.. அதற்குமேல் சிசிடிவி கண்காணிப்பு இல்லை.. நன்றாகத் தெரிந்தது இது திட்டமிட்ட கொலை என்று.

ஆனால் அந்த சிசிடிவி பதிவிலிருந்து காரின் நம்பரைக் கண்டுபிடிக்க முடிந்தது. கார் நம்பரை வைத்துக் கொண்டு, வீட்டின் விலாசம் கண்டுபிடிக்கப்பட்டது.

இப்போது இன்பனும் இளமதியும் அந்த ஏரியாவின் இன்ஸ்பெக்டரான முரளியுடன் அந்தக் காரின் உரிமையாளர் வீட்டின் முன் நின்றிருந்தனர்.

“என்ன முரளி சும்மாவே நிக்கிறீங்க.... உள்ள போய்க் கேளுங்க.. . “என்றான் இன்பன்.

“சார், கார் மிஸ் ஆச்சானு கேக்கச் சொல்றீங்க… ஆனா கார் இங்க தான சார் இருக்கு”என்றார் முரளி.

“உங்களுக்கு ஒன்னு சொல்லட்டா.. இந்த கார் ஓனருக்கும் அந்தப் பையன் செத்ததுக்கும் எந்த சம்பந்தமும் இல்லனு எனக்கு நல்லா தெரியும்...ஆனாலும் ஏதாவது க்ளூ கிடைக்காதானு ஒரு நம்பிக்கைல தான் இப்படி வந்து நிக்கறேன்.. போறீங்களா… “

“முதல்ல உள்ள போய் அவர வரச் சொல்லுங்க முரளி “என்றான் தன் பங்குக்கு மதி.

இன்ஸ்பெக்டர் உள்ளே போய் அந்தக் காரின் உரிமையாளரை வெளியேக் கூட்டி வந்தார்.

இன்ஸ்பெக்டர் முரளி அந்த உரிமையாளரிடம் கொலை நடந்த தேதி மற்றும் நேரத்தைக் கூறி

“அன்னைக்கு ராத்திரி நீங்க, உங்க கார எடுத்துக்கிட்டு எங்கயாவது வெளில போனீங்களா.. ” என்று கேட்டார்.

“இல்ல சார்.. வீட்ல தான் இருந்தேன்” என்றார்.

“அவர்ட்ட அந்த வீடியோவ காட்டுங்க” என்றான் இன்பன்.

அந்தக் காணொளியை அந்தக் காரின் உரிமையாளருக்கு காண்பித்தார் இன்ஸ்பெக்டர் முரளி .

பார்த்தவருக்கு அதிர்ச்சி “சார், இது என்னோட கார் தான்.. ஆனா எப்படி வெளில போச்சு.. அந்த வழியெல்லாம் எனக்குத் தெரியவே தெரியாது… நான் போனதும் இல்ல… “

“சரி நீங்க எடுக்கல வேறு யாருக்காவது கொடுத்தீங்களா.. இல்லனா மெக்கானிக் ஷாப்பில சர்வீசுக்கு விட்டு இருந்தீங்களா.. ”
என்றான் மதி.

“இல்ல சார்.. ”.

இளமதியும் இன்பனும் ஒருவரை ஒருவர் பார்த்தனர். இருவரும், இவரால் எந்த பிரயோஜனமும் இல்லை என்ற முடிவுக்கு வந்திருந்தனர்.

இன்பன் தான் அவரிடம் சென்ற “இதுக்கு முன்னாடி கார எப்ப சர்வீஸிக்கு விட்டீங்க.. “ என்று கேட்டான்

“ஞாபகம் இல்ல சார் ” என்றான்.

“ச்சு… முரளி அவர ஸ்டேஷன்ல வந்து கார் மிஸ்ஸிங்னு ஒரு கம்ப்ளைண்டு கொடுக்கச் சொல்லுங்க... அதுக்கப்புறம் என்ன பண்ணனும்னு சொல்றேன்.. “என்றான் திரும்பி நடக்கத் தொடங்கியபடி.

அந்தக் காரின் உரிமையாளரோ “நான் ஏன் கம்ப்ளைன்ட் கொடுக்கணும்.. கார் இங்க தான் இருக்குது… நீங்க ஏதோ பிளான் பண்ணி என்ன மாட்டி விடப் பார்க்கிறீங்களா… ” என்று கேட்டார் கோவமாக.

அவரை நோக்கி வேகமாகச் சென்ற இன்பனை, கையைப் பிடித்துத் தடுத்தான் இளமதி. திரும்பிப் பார்த்தவனிடம்

“போதும்.. வா போலாம்.. “என்று இழுத்தான் மதி.

“கைய விடு.. நான் அமைதியா பேசுறேன்… “என்றான் இன்பன்.

அந்த உரிமையாளரிடம் சென்றவன்..

“அந்த வீடியோ பாத்தீங்கள.. அதவச்சே உங்கள அரெஸ்ட் பண்ண முடியும்… இருந்தாலும் எங்களுக்குத் தெரியும்.. உங்களுக்கு இதுல சம்பந்தம் இல்லனு.. ஆனா கம்ப்ளைன்ட் கொடுக்கச் சொன்னா கொடுக்கனும்..“என்று கனிவாக ஆரம்பித்து ஒரு கட்டளையுடன் முடித்தான்.

திரும்பி நடந்தவனின் கைபேசியின் அழைத்தது. அவன் எடுக்கவில்லை.

“ஏன் இப்படி பேசுற”

“பின்ன என்னடா.. எங்க கேமராவ வைக்கனுமோ அங்க வைக்க மாட்டானுங்க.. “என்ற அவனது குரலில் அவ்வளவு எரிச்சல் இருந்தது.

“அடுத்து என்ன… “

“தெரில…ஆனா கார்ல வந்தவனுக்கும் கொலைக்கும் சம்பந்தம் இருக்கலாம்”

இன்பனுடைய கைபேசி திரும்பியும் கூப்பிட்டது. எடுத்துப் பேசினான். அமைச்சர் தான் பேசினார்.

“என்ன இன்பா.. என்ன பண்ற.. கூப்பிட்டா எடுக்க மாட்டிக்ற.. “

“அந்த மர்டர் கேஸப் பத்தி விசாரிக்க வந்தேன்.. அதான் போன எடுக்கல சார். .. “

“எதுக்கு தேவையில்லாம இந்தக் கேஸுக்குப் போய் இவ்வளவு கஷ்டப்படறப்பா.. ”

“அது வந்து.. ”

“வேணாம்ப்பா.. நாம பார்க்க வேண்டிய வேல நிறைய இருக்கு. இது ரெண்டுமே ஹெராயின் கேஸூ.. தூக்கிப் போடு… “

“ சரி சார் “என்று போனை வைத்து விட்டான்.

“என்னவாம் அவருக்கு.. “என்றான் மதி.

“ம்.. விசாரிக்க வேண்டாமாம்.. “என்ற ஆரின்பனின் முகம் அவ்வளவு சோர்வைக் காட்டியது.

“விட்டுத் தொலடா… எனக்கும் அப்படித்தான் தோணுது.. “

சிரித்தான் இன்பன்.

“என்னடா.. “

“எல்லாரும் இதத்தான சொல்றீங்க.. இன்னும் ரெண்டு பேர் தான் சொல்லல“

“யார்டா.. “

“செத்துப்போன அந்த ரெண்டு பசங்க.. இப்ப இருக்கிற நிலமைக்கு.. அவனுங்களே வந்து, நீ வேற வேல இருந்தா பாருனு சொன்னாலும் ஆச்சரியமில்ல.. “என்றவனின் குரலில் நம்பிக்கை சுத்தமாக இல்லை.

(தொடரும்)
 




Geethazhagan

அமைச்சர்
Joined
Aug 16, 2018
Messages
3,895
Reaction score
4,804
Location
Chennai
எப்படிதான் கொலைகாரனை கண்டுபிடிக்க போறாங்களோ தெரியலை
 




Thamaraipenn

அமைச்சர்
Joined
Aug 9, 2018
Messages
1,730
Reaction score
1,785
Location
India
Appa police pathina neraya stories vandhalum.. avanga life style romba kastam thaan
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top