• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

மிதக்கும் ஆயுதங்கள் - - அத்தியாயம் 11

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Kathambari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Feb 1, 2019
Messages
6,457
Reaction score
21,474
Location
Mumbai
ஆணையர் அலுவலகம்

இன்பன் புதிதாய் சேர்ந்த இரு காவல்துறை அதிகாரிகளுடன் சில தகவல்களைப் பரிமாறிக் கொண்டிருந்தான்.

அவர்களை அனுப்பிவிட்டு “ப்ரித்திஸ் வந்துட்டானா… “என்று மதியிடம் கேட்டபடியே உள்ளே நுழைந்தான் .

“இன்னும் வரலனுதான் நினைக்கிறேன் .. ”

“இவ்வளவு நேரமாச்சி ஏன் இன்னும் வரல… சாமிண்ணே.. ”என்று கருப்பசாமியை உள்ளே அழைத்தான் இன்பன்.

“ கமிஷனர் வந்தாச்சா… “

“இல்ல சார் இன்னும் வரல.. ஆனா அவரு பத்து நாளு லீவு கேட்டு இருக்காருனு சொல்றாங்க .. “

இளமதிக்கும் இன்பனுக்கும் அதிர்ச்சியாக இருந்தது. இந்த நேரத்தில் எதற்காகப் பத்து நாள் லீவு கேட்டிருக்கான் என்று இருவரும் குழம்பினர்.

“சாமிண்ணே , உங்களுக்கு எப்படித் தெரியும்.. “ என்றான் மதி.

கருப்பசாமி சொல்ல ஆரம்பிக்கும் முன்பே ப்ரித்திஸ் வந்துவிட்டான்.

“நானே சொல்லிக்கிறேன் சாமி… நீங்க போங்க.. “என்று அவரை அனுப்பினான் ப்ரித்திஸ்.

உடனே இன்பன் எழுந்து அவனிடம் சென்று “ஏன்டா, எதுக்கு இப்ப லீவு .. “

“ரொம்ப நாளா நினைச்சதுதான்.. இப்ப டைம் கிடைச்சது.. அதான் நானும் மகிமாவும் கிளம்பிட்டோம்.. ஃபாரின் டிரிப்” என்று சிரித்தான்.

“இது கரெக்ட் டைமா உனக்கு … “

“புரியுது.. நீ அந்தக் கேஸப்பத்தி நினைக்கிற.. இன்னைக்கு தேதிக்கு நம்ம டிபார்ட்மென்ட்ல இந்தக் கேஸத் தூக்கிட்டுச் சுத்துறது நீ மட்டும் தான்… வேறு யாருக்கும் இதுல இன்ட்ரஸ்ட் கிடையாது..”

இன்பனுக்கு அதற்கப்புறம் பேசுவதற்கு எரிச்சலாயிருந்தது. அமைதியாக நின்றான்.

“எப்பக் கிளம்பிற.. “ என்று மதி தான் அங்கு நிலவிய அமைதியைக் கலைத்தான்.

“இன்னிக்கு ஈவினிங்.. “

அமைதியாக குனிந்து நின்ற இன்பனின் தோளைத் தொட்டான் ப்ரித்திஸ்.

நிமிர்ந்து பார்த்தவனிடம் "எதுனாலும் தெளிவா முடிவு எடு… “ என்றான்.

‘இதற்கு என்ன அர்த்தம்’ என்பது போல அவனைப் பார்த்தான் இன்பன்.

இன்பனின் முகத்தில் தெரிந்த குழப்ப ரேகைகளைக் கண்ட ப்ரித்திஸ், அவனின் தோளை அழுத்தினான்.

பின் மதியிடம் திரும்பி “ பாத்துக்கோ மதி… நான் கிளம்புறேன்.. “என்று சொல்லிவிட்டுக் கிளம்பிச் சென்று விட்டான்.

ப்ரித்திஸ் சென்ற பின் மதியின் அருகில் வந்து அமர்ந்தான் இன்பன்.

“இவன் ஏன் இப்படி சொல்லிட்டு போறான்… இதுக்கு என்ன அர்த்தம்.. “என்று நெற்றியைத் தடவி யோசித்தபடியே முனுமுனுத்தான்.

“என்னமோ.. இந்தக் கேஸே யாரோ சுத்தி விட்டு வேடிக்கைப் பார்க்கிற மாதிரி இருக்குடா.. அவனுக்கு ஏதாவது தெரிஞ்சிருக்குமோ.. அமைச்சரோட எதிரிங்க யாராவது .. ”

“கண்டிப்பா இருக்காது. “

“எப்படி இவ்வளவு உறுதியா சொல்ற.. “

“நம்ம விசாரிக்கப் போற எந்த இடத்திலயும் நம்மள யாருமே தடுக்கல.. எல்லாம் ரொம்ப ஈஸியா நடக்குது… அத வச்சித்தான்.. “

ஆரின்பனுக்கு எல்லாவற்றையும் விட ப்ரித்திஸ் சொன்ன வார்த்தைகள் மனதை மிகவும் குழப்பியது.

சிறிது நேரத்திற்குப் பின் ஆரின்பன் தன் கைப்பேசியை எடுத்து அனலிக்காவை அழைத்தான்.

தனது மேஜையில் இருந்த கைப்பேசியின் அதிர்வில், தொடுதிரையைப் பார்த்தாள். திரைக் காட்டியப் பெயரைக் கண்டு வந்த முறுவலுடன்… எடுத்துப் பேசினாள்.

“சொல்லுங்க… “

“பாக்கனும்.. வர முடியுமா.. “

“ இல்ல கொஞ்சம்.. “ என்று அவள் காரணம் சொல்லும் முன்பே…

“ஏன் உங்க தாத்தா ஏதாவது சொல்வாருனு பயமா… “

அவள் சொல்ல வந்தது என்ன… அவன் புரிந்து கொண்டது என்ன..

“சரி.. எங்க வரனும் சொல்லுங்க.. “

அவன் கூறினான்.

இருவரும் காஃபி ஷாப்பில் சந்திக்க முடிவு செய்தனர்.

இளமதி நடந்த அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தான். அவனிடம் கூட எதுவும் சொல்லாமலே இன்பன் கிளம்பிவிட்டான்.

காஃப ஷாப்


அனலிக்காவிற்காக காஃபி ஷாப்பில் காத்திருந்தான் ஆரின்பன். சிறிது தாமதமாக வந்தவள் “ஸாரி.... “ என்று சொல்லிக் கொண்டே அவனருகில் வந்து அமர்ந்தாள்.

அவன் பதிலுரைக்கவில்லை.

“என்னாச்சி… “ என்றாள் அவனின் முகத்தில் தெரிந்த சோர்வைக் பார்த்து.

அப்பொழுதும் அவன் பதில் எதுவும் செல்லவில்லை.

“காஃபி ஆர்டர் பண்ணட்டா… “ என்று வெயிட்டர் தேடி எழப் போனவளின் கரத்தைப் பற்றினான். அவள் திரும்பி அவனைப் பார்த்தாள். அவனின் பார்வை ‘உட்காரு’ என்பது போல் இருந்தது. அவளும் அமர்ந்தாள்.

“எதும் பிரச்சினையா… “என்றாள் அக்கறையுடன்.

“கொஞ்ச நேரம் இப்படியே இரு.. “

அதற்குப் அப்புறம் அவள் பேசவில்லை. இன்பனும் பற்றியக் கரத்தை விடவில்லை. சிறிது நேரத்திற்குப் பின்னே, அவளை நிமிர்ந்து பார்த்தான்.

“என்ன லேட்… உங்க டாக்டர் பெர்மிஷன் தரலயா…” என அவ்வளவு நேர மெளனத்தை கைவிட்டு பேசினான்.

“ஹலோ.. அவன் ரொம்ப நல்ல டைப்… காலே...“ என்று ஆரம்பிக்க போனவளிடம்..

“காரணம் சொல்லனாலும் பரவால்ல… இந்த டயலாக் வேண்டாம்.... “

சிரித்துக்கொண்டே “உங்க அம்மா அப்பா இன்னும் வரலயா… “ என்று கேட்டாள்.

இல்லை என்ற தலையசைப்புடன் “வர்ரீங்களா அக்கா வீட்டுக்குக் கூட்டிட்டுப் போறேன்…இங்கதான்.. ஏரியா தான் வேற… எல்லாரையும் பாத்துட்டு வரலாம்… “

“இன்னொரு நாள்.. “ என்றவளின் குரலில் ‘தன்னை ஏற்றுக் கொள்வார்களா’ என்ற கவலை தெரிந்தது.

அதைப் புரிந்து கொண்டவன்… பற்றியக் கரத்தை அழுத்தியபடி “யாருக்குப் பிடிச்சாலும் பிடிக்கலனாலும் இது மாறாது… “ என்றான் அவன் பிடித்திருந்த அவளது கரத்தைப் பார்த்து.

கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டாள். கண்கள் கலங்கின. அதைப் பார்த்தவன் அவனது விரல் நீட்டிச் சுட்டிக்காட்டினான்.

“அது ஏதோ தூசி… “ என்று சமாளித்தாள்.

அதைத் துடைப்பதற்காக அவளது கண்கள் அருகே கை கொண்டு வந்தவனைத் தடுத்தவள், “அந்தத் தூசிக் கொஞ்ச நேரம் அங்கயே இருக்கட்டும்… “என்றாள்.

‘சரிதான்‘ என்பது போல் சிரித்துக்கொண்டே தலை அசைத்தான்.

“என் கண்ல எப்ப தூசி விழ வைக்கப் போறீங்க … “

அவள் புரியாமல் பார்த்தாள்.

“பொய்யாவது சொல்லுங்களேன்… தாத்தாவுக்கு பிடிக்கலனாலும்… “ என்று இழுத்தான்.

“பொய் எதுக்கு.. உண்மையே சொல்றேன்… “ என்றவளை ஆச்சரியமாகப் பார்த்தான்.

சுற்றும் முற்றும் பார்த்தவள்.. அவன் பிடித்திருந்த கரத்தை எடுத்து, தன் முகத்தருகே கொண்டு வந்து.. இதழ் ஒற்றி எடுத்தாள்.

“காஃபி ஷாப்பா போயிருச்சு… “

“ம்ம்.. என்ன… “என்றாள் அவன் சொல்வது கேளாதது போல்.

“இல்ல… காஃபி ஷாப்பா போயிருச்சு… இல்லனா நான் ரியாக்ட் பண்றத பாத்துட்டு… நாளைக்கு பேப்பர்ல வந்துரும்… காஃபி ஷாப்பில் அஸிஸ்டன்ட் கமிஷன… “ என்றவனை முடிக்க விடாமல்…

“போதும்…. நீங்க காஃபி ஆர்டர் பண்ணுங்க… ஹாஸ்பிட்டலருந்து டைரக்டா வந்தேன்.. ஸோ ப்ரஸ்ஸப் பண்ணிட்டு வரேன்… “ என்று எழுந்து சென்றாள்.

அவள் செல்வதைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவளின் சில நிமிட அருகாமையில், அவன் வரும்போது இருந்த மனநிலை முற்றிலும் மாறியிருந்தது.

ஆரின்பன் வீடு


மூளையில் ப்ரித்திஸ் சொன்ன வார்த்தைகளும்.. மனது முழுவதும் அனலிக்கா சொல்லிச் சென்ற வார்த்தைளும்… இருவேறு உணர்வுகளாய் அவனுக்கு உறக்கம் வர வழியில்லாமல் செய்தன.

ஆணையர் அலுவலகம்

இன்பனும் மதியும் செய்தித்தாள் செய்திகளைப் பகிர்ந்து கொண்டு இருந்தனர்.

திடிரென“ நம்ம இன்வெஸ்டிகேஷனே தப்புன்னு தோணுது மதி… “என்றான் இன்பன்.

மதி எதுவும் சொல்லவில்லை.

“மதி.. “

“சொல்லு கேக்கறேன்.. ஆனா இப்ப எதுக்கு இந்த சந்தேகம்… “

“நல்லா யோசிச்சுப் பாரு… பப்ல அந்த கால் கேர்ள், செல்போன் மிஸ்ஸாகிறது, அப்பறம் எதிர்ல வந்த கார்… இதெல்லாம் கொல பண்ணவன், வேணும்னே நமக்காக விட்டுட்டு போனத் தடயம்… “

“அவனுக்குத் தெரியும்.. நாம இந்த மூனு விஷயத்த நோக்கிதான் போவோம்னு… நம்மள அந்த மாதிரி திசை திருப்பத் தான் இது எல்லாமே… அந்த டைம் ஹேப் போதும்.. அவன் அடுத்த கொலய செஞ்சிறான்…. “

“பேசாம மறுபடியும் அட்டாப்ஸி பண்ணிப் பாக்கலாம்னு தோணுது … “

“இன்னொன்னு… அவன் கணக்குப் படி பார்த்தா, நேத்து நைட்டே கொல பண்ணிருப்பான்… நான் நினைக்கிறது கரெக்ட்னா இன்னிக்கு ஏதாவது ஏரியால இருந்து போன் வரும்… “

“தயவு செஞ்சு போயிராத… “என்றான் மதி.

“ம்ம்… “என்றான் புன்னகையுடன்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு, அவன் முகத்தில் புன்னகைக் கண்டதில், மதிக்கு மகிழ்ச்சி.

ப்ரித்திஸ் இல்லாததால் அவனுடைய கடமைகளையும் சேர்த்துச் செய்து கொண்டிருந்தான் இன்பன்.

சிறிது நேரத்திற்கு பின் இன்பன் சொன்னது போல் அவனுக்கு அழைப்பு வந்தது. கைப்பேசியை எடுத்து மதியிடம் காட்டினான். சிரித்துக்கொண்டே மதியின் அருகில் சென்று அழைப்பை ஏற்று, ஸ்பீக்கரில் போட்டு விட்டு,

“சொல்லுங்க தேவன்..” என்றான்

“சார்.. ஏரியால.. “

“கார்ல பையன் இறந்திருக்கான… “

“ஆமா சார்.. உங்களுக்கு நியூஸ் வந்திருச்சா…நீங்க எப்ப வருவீங்க… “

மதி சைகையிலே ‘போகாதடா ‘ என்றான்.

“இல்ல தேவன், இப்ப கொஞ்சம் வேல இருக்கு.. நீங்களே பாருங்க.. வேற ஏதாவது சொல்லனுமா “

“அமைச்சர் வரும்போது நீங்க இருக்கனும்ல சார் … “

“என்ன சொல்றீங்க... “

“சார், இறந்து போனது சட்டத்துறை அமைச்சரோட பையன்.. உங்க அமைச்சர் சார்.. “

மதி, இன்பன் முகம் முழுவதும் அதிர்ச்சி படர்ந்திருந்தது.

“வரேன்… “ என்று சொல்வதைத் தவிர அவனிடம் வேறு வார்த்தைகள் இல்லை.

(தொடரும்)
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top