• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

மிதக்கும் ஆயுதங்கள் - - அத்தியாயம் 15

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Kathambari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Feb 1, 2019
Messages
6,457
Reaction score
21,474
Location
Mumbai
அனலிக்காவும் மீனாட்சியும் பயிற்சியின் கடைசி மாதத்தில் இருந்தனர். அன்று அனலியிடம் வந்து கிருஷ் பேசினான்…

“அனா, சென்னைக்குப் போகப் போறேன்.. சொந்தமா ஒரு ஹாஸ்பிட்டல் ஆரம்பிக்க… இது என்னோட கனவு…ஒரு மூனு நாலு மாசம் ஆகலாம்… அதுக்கப்புறம் நீயும் அந்த ஹாஸ்பிட்டல ஒரு டாக்டர்… எனக்கு உன்னோட ஹெல்ப் வேணும்.. “என்று மள மளவென்று அடுக்கினான் அவன் கனவை..

“ஒரு டாக்டரா என்ன ஹெல்ப் வேணாலும்… கண்டிப்பா பண்றேன் கிருஷ்.. “என்றாள்.

சிரித்துக் கொண்டே “ம்.. சரி விடு.. ஹாஸ்பிட்டல் ஆரம்பிச்சி செட் ஆனதுக்கு அப்பறமா கால் பண்றேன்… அப்ப நீயும் அங்க வந்திரு… ” என்றான்.

அவள் யோசித்தாள்.

“என்ன யோசிக்ற அனா… “

“இல்ல கிருஷ், மீனாவ விட்டுட்டு எப்படி வர்ரனு… “

“ஏன்…. அவங்களும் டாக்டர் தான.. ஒரு ஹாஸ்பிட்டல்ல ரெண்டு டாக்டர் தான் இருக்கனுமா என்ன.. “என்று சிரித்தான்.

நன்றியுடன் அவனைப் பார்த்தாள்.

“சரி ஒரு வாரத்ல கிளம்புறேன்.. அப்புறமா ஃபோன் பண்றேன்…” என்ற கிருஷ்ணகுமார்.. சொன்னபடி சென்னைக்கு கிளம்பி விட்டான்.

இன்று..

“எனக்கும் மீனாவுக்கும் ஹவுஸ் சர்ஜன் முடிஞ்சது… ஒரு மாசம் வீட்டில சும்மாதான் இருந்தோம்… அதுக்கப்புறமும் ஒரு சின்ன ஹாஸ்பிட்டல்ல வேல பாத்தோம்… ஆனாலும் தாத்தாவோட வருமானத்துலதான் சாப்பிடுற மாதிரி இருந்துச்சு…. அதுக்கப்புறம் ஒரு நாள் கிருஷ் போன் பண்ணி… ஹாஸ்பிட்டல் செட் ஆயிருச்சு.. நீங்க வாங்கனு கூப்பிட்டான்… சரினு சொல்லி, நாங்க எல்லாரும் கிளம்பி சென்னைக்கு வந்தோம்.. இங்க கேகே நகரில் வீடு பார்த்து கொடுத்ததும் அவன் தான்… தாத்தாவுக்கு மட்டும் இங்க வந்தது பிடிக்கல… அவருக்கு அங்க மெக்கானிக் ஷாப், அப்புறமா அவர் செஞ்ச வேல.. அதெல்லாம் விட்டுட்டு வரதுக்கு சுத்தமா விருப்பம் இல்ல… ஆனாலும் மீனாவுக்காக வந்தார்… “

“இங்க வந்த ஒரு நாலு மாசம் நல்லா தான் இருந்தோம்… அப்போது தான் ஒருநாள் ஹாஸ்பிட்டலுக்கு தாத்தா போன் பண்ணாரு… “

அன்று

அன்று மீனாவின் கைப்பேசிக்கு தாத்தாவிடம் இருந்து அழைப்பு வந்தது. அழைப்பை ஏற்று

“சொல்லுங்க தாத்தா.. “என்றாள்.

“அம்மாடி.. நீ உடனே கிளம்பி வீட்டுக்கு வா.. “என்றார்.

“எதுக்கு தாத்தா.. என்ன விஷயம்னு சொல்லுங்க… “

“உங்க அம்மா பாத்ரூம்ல வழுக்கி விழுந்துட்டா… அதான் கூப்பிடுறேன்.. சீக்கிரமா வா.. “

“அடிபட்டிருக்கா.. ஒன்னும் பயப்படுற மாதிரி இல்லைல தாத்தா… “என்று பதட்டத்துடன் கேட்டாள்.

“நீ வாம்மா.. “என்று சொல்லி அழைப்பைத் துண்டித்தார்.

பின் மீனா நேராக அனலிக்காவின் அறைக்குச் சென்று, அவளிடம் விஷயத்தைக் கூறினாள். இருவரும் கிருஷ்ஷிடம் சொல்லிவிட்டு வீட்டிற்குக் கிளம்பி வந்தனர். வீட்டிற்கு வந்ததற்குப் பிறகு தான், நிலைமையின் தீவிரம் புரிந்தது. கல்பனா எப்போதோ இறந்து போயிருந்தார்.

வீடு இரண்டு நாள் அமைதியிலும் அழுகையிலும் இருந்தது. அதன் பின்னும் மீனா, எப்பவும் தாத்தா மடியில் படுத்து அழுதுகொண்டே இருந்தாள்.

அப்படி ஒரு நாள் மடியில் படுத்திருக்கும்போது தான்… தாத்தா ஆரம்பித்தார்…

“ஏம்மா..எதுக்கு நாம இங்க இருக்கணும்… பேசாம சேலத்துக்கே போயிடலாம்.. “ என்றார் மீனாவின் தலையைத் தடவிக்கொடுத்தபடி..

“ ஏன் தாத்தா அப்படி சொல்றீங்க.. “

“இல்லம்மா, இங்க வந்ததுக்கு அப்புறமா எதுவுமே சரியில்ல.. அம்மாவுக்கு வேற இப்படி ஆயிடுச்சு... அதனால தான் சொல்றேன் ..”

“இங்கதான தாத்தா எங்களுக்கு வேலை இருக்கு… “

“இல்லம்மா.. உனக்கு அங்கயும் வேலை கிடைக்கும்… “

அப்பொழுதுதான் அனலிக்காவிற்கு புரிந்தது, அவர் ‘அவரையும் மீனாவையும்’ மட்டும் பற்றிப் பேசுகிறார் என்று.. அவரே தொடர்ந்தார்…

“நம்ம போலாமா.. இந்தப் பொண்ணு இங்கேயே இந்த வேலய பார்த்துட்டு இருக்கட்டும்... “

“இல்ல தாத்தா அனலிய விட்டுட்டு என்னால எங்கேயும் வரமுடியாது… உங்களுக்கு இங்க புடிக்கலனா... நீங்க வேணா போங்க.. “என்று அவர் மடியிலிருந்து எழுந்து அறைக்குள் சென்று விட்டாள்.

தன்னைவிட தனது பேத்தி இன்னொருத்தியை முக்கியம் என்று சொன்னதில் தாத்தாவிற்கு மிகுந்த வருத்தம். அப்படி மீனா பேசியதிலிருந்து தாத்தாவிற்கு அனலியின் மீதான கோபம் அதிகமாகி இருந்தது.

மீனா இல்லாத நேரங்களில் அதிகமாக கோபப்படுவதும்.. திட்டுவதுமாக இருந்தார்… சென்னையிலும் ஒரு மெக்கானிக் ஷாப்பில் வேலைக்குச் சேர்ந்தார்… தன் பேத்திக்கு செகன்ட் கேன்ட்ல கார் வாங்கிக் கொடுத்தார்… இப்படியே இரு மாதங்கள் கழிந்தன….

பின்…

அன்று அந்த மருத்துவமனையில் அனலிக்காவின் அறை கோலாகலம் கொண்டிருந்தது. அறையில் இருந்த அனைவரும் கொண்டாட்ட மனநிலையில் இருந்தனர். அன்று தான் அனலிக்காவின் பிறந்தநாள். அவளுக்காக கிருஷ் ஒரு கேக் வாங்கி வந்திருந்தான். கேக் வெட்டி, அனைவருக்கும் ஊட்டிவிட்டாள். கிருஷ்ஷிற்கும் தான்.

கொண்டாட்டம் முடிந்ததும் அனைவரும் அவரவர் அறைக்குச் சென்றனர். அனலியும் மீனாவும் தனியே அமர்ந்துப் பேச ஆரம்பித்தனர்.

“கிருஷ்ணன் இவ்வளவு லவ் பண்றாரு.. புரியலையா உனக்கு.. “

“நல்லா புரியுது.. ஏன் கேக்குற.. “

“இல்ல கேக்கலாம் ஊட்டி விடுற… லவ் மட்டும் பண்ணலையா… “

“எனக்கும் எதிர்பார்ப்பு இருக்கும்ல… நான் கல்யாணம் பண்ணிக்கப் போறவரு எப்படி இருக்கணும்னு… “

“ஹே அனலி.. இதுக்கு முன்னாடி இதைப் பத்தி நீ பேசுனதே இல்லையே… கேக்குறதுக்கு நல்லா இருக்கு… சொல்லு.. “

“கிருஷ்ஷ கல்யாணம் பண்ணா கண்டிப்பாக நான் கேட்டதெல்லாம் கிடைக்கும்… நெனச்சதெல்லாம் நடக்கும்… நிறைய பேர் என்கிட்ட அந்த மாதிரி பரிவு காட்டி இருக்கிறாங்க…. ஆனா உரிமையோடு சண்ட போடுறதுக்கு யாருமில்ல… அழ வைக்கிற மாதிரி சண்ட போடனும் மீனா… “

“ஹலோ.. கிருஷ் காட்றது வேணா பரிவா இருக்கலாம்.. என்னோடது அப்படி இல்ல… “

“தெரியும்.. ஆனா.. “

“போதும் அனலி.. பெர்த்டே அன்னைக்கு அழனும்னு பேசுற.. எனக்குப் பிடிக்கல.. “

“சரி சரி இனி பேசல.. மீனா இன்னைக்கு கோவிலுக்கு போலாமா.. “

“என்ன திடீர்னு.. “

“போனும்னு தோணுது… “

“சரி, ஈவினிங் போகலாம்… “

இன்று..

“அது வரைக்கும் எனக்கு கோவிலுக்கெல்லாம் போகனும்னு தோணதே இல்ல … ஆனால் மீனா கிடைச்ச இந்த வருஷம் கோயிலுக்குப் போகனும்னு நினைச்சேன்… அதனால கிருஷ் கிட்ட சொல்லிட்டு வீட்டுக்குச் சீக்கிரமா வந்துட்டோம்.. வீட்டுக்கு வந்து மூனு பேரும் கோவிலுக்கு கிளம்பிறப்ப தான் கிருஷ் கிட்ட இருந்து எனக்கு போன் வந்திச்சி.. “

அன்று…

அனலிக்காவிற்காக கிருஷ்ஷிடம் இருந்து அழைப்பு வந்தது. அழைப்பை ஏற்றவள்…

“சொல்லு கிருஷ்… “என்றாள் பிறந்தநாள் கொண்டாட்டம் தந்த சந்தோஷக் குரலில்.

ஆனால் அவனின் குரலில் பதட்டம் இருந்தது.

“அனா.. எனக்கு ஒரு சின்ன ஆக்சிடன்ட்.. நீ இப்ப ஹாஸ்பிட்டலுக்கு வரமுடியுமா..” என்று கேட்டான்.

“உனக்கு ஒன்னும் அடிபடலயே கிருஷ்.. “ என்றாள் பதற்றத்துடன் அனலிக்கா.

“பயப்படாத.. எனக்கு ஒன்னும் இல்ல.. எதிர்ல வந்த வண்டியில இருந்த ரெண்டு பேருக்குத் தான் அடிபட்டிருக்கு… என்னோட கையிலயும் அடிபட்டிருக்கு.. என்னால அவங்களுக்கு ஸ்டிச் போட முடியல.. இங்கயும் யாரும் இல்ல… அதான் கேக்கிறேன்…. வரமுடியுமா… “

“சரி சரி போன வை.. நான் வரேன்… “ என்று அழைப்பை துண்டித்தாள்.

விஷயத்தை உடனே மீனாவிடம் சொல்லி “ நான் ஹாஸ்பிட்டலுக்குப் போறேன் மீனா.. “ என்று கிளம்பினாள் அனலி.

“நில்லு அனலி, நீ இன்னைக்கு கோயிலுக்குப் போகணும்னு நினைச்ச.. அதனால நீ கோயிலுக்குப் போ … நான் ஹாஸ்பிட்டலுக்குப் போறேன்… “

“இல்ல மீனா… “

“சொன்னா கேளு… தாத்தா நீங்க இவளக் கோயிலுக்குக் கூட்டிட்டுப் போங்க… நான் போயி அவங்கள கவனிச்சிட்டு, நேரா கோயிலுக்கு வந்திருவேன்… சரியா “ என்று தாத்தாவிற்கும் உத்தரவிட்டு, அனலியையும் சமாதானப்படுத்தி… அவர்கள் இருவரையும் கோயிலுக்கு அனுப்பி வைத்துவிட்டு… தான் வண்டியை எடுத்துக்கொண்டு ஹாஸ்பிட்டல் நோக்கிச் சென்றாள்..

இன்று…

“நானும் தாத்தாவும் ரொம்ப நேரம் கோயில்ல காத்துக்கிட்டு இருந்தோம்… மீனா வரவே இல்ல.. மீனாவோட மொபைலுக்கு ட்ரை பண்ணிக்கிட்டே இருந்தேன்… அவ மொபைல எடுக்கவே இல்ல… சரினு, கோயில்ல இருந்து கிளம்பி வீட்டுக்கு வந்துட்டோம்… வீட்டுக்கு வந்தப்பறமும் கால் பண்ணிக்கிட்டே இருந்தேன்… ஒரு யூசும் இல்ல.. அதுக்கப்புறம் ஒரு பதினோரு மணிக்கு, அவ கிட்ட இருந்து எனக்கு கால் வந்துச்சு.. “

அன்று
“ஹலோ மீனா… “

(தொடரும்)
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
மீனாட்சிக்கு ஏதும் ஆபத்தா,
காதம்பரி டியர்?
விபத்து-ன்னு கிருஷ்ணகுமார்
பொய் சொன்னானா?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அனலிக்காவுக்கு கிருஷ் விரிச்ச
வலையில் தானே வலியக்கப்
போய் மீனாட்சி மாட்டிக்
கொண்டாளா?
அமைச்சரின் மகன் கிருஷ்ணகுமாரின்
நண்பனா?
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஏற்கனவே இவன் கன்னத்துல
மீனா அறைந்ததுக்கு இப்போ
அவளை கிருஷ் பழி தீர்த்துக்
கொண்டானா?
மீனாட்சி இப்போ உயிருடன்
இல்லையா, காதம்பரி டியர்?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top