• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

மிதக்கும் ஆயுதங்கள் - - அத்தியாயம் 16

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Kathambari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Feb 1, 2019
Messages
6,457
Reaction score
21,474
Location
Mumbai
அன்று…

“ஹலோ மீனா.. “

“சொல்லு அனலி.. “

“போன ஏன் எடுக்கல… நான் ரொம்ப பயந்திட்டேன் மீனா….. “

“ அனலி.. மூனு பேருக்குமே ஸ்டிச் போட வேண்டியது இருந்துச்சு.. அதான் எதையும் கவனிக்கல.. ச்சே, என்னால கோயிலுக்கும் வர முடியல.. “

“அத விடு…இப்ப எங்க இருக்க… “

“ஹாஸ்பிட்டல்ல தான்.. பைவ் மினிட்ஸ்ல வீட்டுக்கு கிளம்பறேன்…”

“ரொம்ப லேட் ஆயிருச்சு மீனா… நான் வேணா கார எடுத்துட்டு வரவா… “

“அதெல்லாம் வேண்டாம் நானே வந்துடுவேன்… தாத்தாவ எனக்காக வெயிட் பண்ணாம, தூங்கச் சொல்லு… “

“ம்ம்ம் சரி… பாத்து வா மீனா.. “

அவள் அழைப்பைத் துண்டித்த உடன்… தாத்தாவிடம் சென்று

“மீனா வரதுக்கு கொஞ்சம் லேட் ஆகும்.. நான் முழிச்சிருக்கேன்… நீங்க தூங்குங்க… “ என்றாள் அனலி.

அவர் எதுவும் சொல்லாமல் சென்றுவிட்டார்.

இன்று…

“அதுக்கப்புறமா ஒரு மணி நேரமாகியும் மீனா வரல… நான் திருப்பியும் கால் பண்ணிக்கிட்டே இருந்தேன்… அவ எடுக்கல.. எனக்குப் பயம் அதிகமாச்சு… நான் கிருஷ்க்கு போன் பண்ணி கேட்டா… அவ அப்பவே கிளம்பி போய்ட்டானு சொன்னான்… திருப்பியும் மீனாவோட மொபைலுக்கு டிரை பண்னேன்… ம்கும் .. அப்புறம் ஒரு மணி இருக்கும்... காலிங் பெல் சத்தம் கேட்டது… ஓடிப்போய் கதவைத் திறந்தேன்… “

அன்று…

கதவைத் திறந்த அனலிக்கு அதிர்ச்சியாக இருந்தது, அங்கு நின்ற மீனாவின் தோற்றம்… அவளின் அலங்கோலத்திலிருந்தே அனலியால் யூகிக்க முடிந்தது.. அவளுக்கு என்ன நடந்திருக்கும் என்று… மீனாவும் எதுவும் பேசவில்லை.. நேராக படுக்கை அறைக்குச் சென்றாள்… அவளைப் பின் தொடர்ந்தாள் அனலி..

“மீனா… “என்று மெதுவாக அழைத்தாள் அனலி..

மீனா எதுவும் பேசவில்லை அமைதியாகவே இருந்தாள்.. திடீரென்று…

“என்னய இப்படிப் பண்ண, அந்த மூனு பேரையும் பழிவாங்கனும் அனலி… ஏதாவது பெரிசா செய்யனும்… சும்மா விடக் கூடாது.. “ என்றவளின் கண்களில் அவ்வளவு கோபம் தெரிந்தது.

“இப்ப இதப் பத்தி பேச வேண்டாம்.. நீ தூங்கு… காலைல தெளிவா, யோசிச்சி பேசலாம்.. “

“அய்யோ அனலி, நான் வலிலயோ.. கஷ்டத்திலயோ உளறேனு நினைக்காத… ரொம்ப தெளிவா சொல்றேன்… கண்டிப்பா அந்த மூனு பேரையும் ஏதாவது செய்யனும்… “

அவளின் கண்களில் பயமோ, வலியோ.. ஏன் ஒரு துளி கண்ணீர் கூட இல்லை. நிரம்பி வழியும் அளவிற்கு உறுதி இருந்தது.

ஆனால் அனலியின் அமைதியைப் பார்த்த மீனா…
“நீ எனக்கு ஹெல்ப் பண்ணுவியா.. “

“ஏன் இப்படிக் கேட்கிற மீனா… அதுவும் எங்கிட்ட…உனக்காக என்ன வேணாலும் பண்றேன்.. ஆனா இப்ப தூங்கு… ப்ளீஸ்.. “

“ச்சு.. தாத்தா கிட்ட சொல்லாத.. ரொம்ப கஷ்டப்படுவாரு.... “

“சரிம்மா.. காலைல பேசலாம்… “

மீனாட்சி படுத்துக் கொண்டாள். அவள் தூங்கிய பிறகு, வெளியே வரும் போது தான் தெரிந்தது, அவ்வளவு நேரமும் எல்லாவற்றையும் தாத்தா கேட்டுக் கொண்டிருந்தார் என்று…

“போதுமா உனக்கு.. இவகிட்ட அன்னைக்கே சொன்னேனே.. ஊருக்கு போயிறலாம்னு... கேக்காம உனக்காக இருந்தா.. இப்ப பாத்தியா.. எங்கிருந்தோ வந்து என் குடும்பத்த இப்படி நாசமாக்கிட்டியே.. நானும் நீ வந்ததலிருந்தே திட்டித் தான் பார்க்கிறேன்.. போக மாட்டிக்கியே .. “ என்று வார்த்தைகளைக் கொண்டே அவளைத் தாக்கினார்.

அவளுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை… ஆனால் இதில் தன் தவறு எங்கு இருக்கிறது என்று “நான் என்ன பண்ணேன்… “ என்று கேட்டாள்

ஆனால் அவர் சொன்ன அடுத்த வார்த்தையில் தான் தெரிந்தது.. இது தன்னால் தான் என்று..

“நீ போயிருக்க வேண்டியது.. என் பேத்தி போயி, அவனுங்க கிட்ட மாட்டிக்கிடுச்சி.... “ என்று துடிதுடித்து அழுதார்.

இன்று..

“ஆனா அவர் சொல்றதும் சரிதான.. அன்னைக்கு நான்தான போயிருக்கனும்…எனக்கு தா.. “

“என்ன பேசறேனு புரிஞ்சிதான் பேசிறியா… “ என்றான் இன்பன் அவளை அதற்கு மேல் பேசவிடாமல்…

“உங்களுக்குப் புரியுதுல.. அவளுக்கு என்ன நடந்திருக்கும்னு.. புரியும்.. ஏன்னா அவ அட்டாப்ஸி ரிப்போர்ட்ட வாங்கிட்டு வந்ததே நீங்கதான.. படிச்சிருப்பீங்கள.. “ என்றாள் இன்பனைப் பார்த்து.

மதி புரியாமல் லேசாக இன்பனின் தோள் தொட்டு ‘என்ன’ என்பது போல் கேட்டான்.

“அன்னைக்கு, கேகே நகர்ல ஒரு திருட்டு கேஸுனு நீயும் நானும் போனோம்ல.. அப்போ பக்கத்தில ஒரு சூசைட் கேஸ்னு அழகேசன் சொன்னார்ல… அதுதான் மீனாட்சி.. “

‘அப்படியா’ என்பது போல் அனலியைப் பார்த்து கேட்டான் மதி.

அவளும் ‘ஆமாம்’ என்பது போல் தலையை அசைத்தாள்.

சிறிது இடைவெளி விட்டு…

“அதுக்கு அடுத்த நாள் காலையிலேயே ரெண்டு பேரும் கிளம்பி, அந்த இடத்தில போய் நின்னோம்.. எங்களுக்கு ஒரு நம்பிக்க அவனுங்க வருவாங்கனு.. ரொம்ப நேரமா வெயிட் பண்னோம்.. நிறைய கார் போயிட்டும் வந்துட்டும் இருந்துச்சு… ஆனா அவனுங்க வர்ற மாதிரி தெரியல.. ஆனா மத்தியானம் பன்னிரண்டு மணிக்கு மேல நிறைய கார் போகல… அப்ப மூனு கார் வந்திச்சி.. அதுலிருந்து இறங்கனவங்களப் பாத்திட்டு .. மீனா ‘இவனுங்கதானு’ அடையாளம் காட்டினா... “

இடையில் இன்பன் குறுக்கிட்டான். “மூனு பேரா இல்ல நாலு பேரா.. சரியா சொல்லு.. “

“இல்ல மூனு பேரு தானு மீனா சொன்னா… “

"நான் அங்க வந்தவங்களப் பத்தி கேட்கிறேன்...."

யோசித்தாள்...
“இல்ல.. கொஞ்ச நேரம் கழிச்சி ஒருத்தன் பைக்ல வந்து, இந்த மூனு பேருக்கும் ஏதோ கொடுத்தான்.. “ என்று சொல்லி நிறுத்தினாள்.

“மதி, அந்த தினேஷோட போட்டோ இருக்கா.. “

“ம்ம் … “ என்று தன் கைப்பேசியை எடுத்து இன்பனிடம் தந்தான்.

மதியிடமிருந்து வாங்கிக் கொண்டு, அனலிக்காவின் அருகே சென்று காட்டினான்.

“அந்த நாலாவது வந்தவன், இவனானு பார்த்து சொல்லு… “

“ஆமாம்.. “என்றாள்..

“சரி.. அடுத்து சொல்லு… “

“அதுக்கு அப்புறம் அவனுங்கள போட்டோஸ் எடுத்துக்கிட்டோம்... அவங்க கார் நம்பரையும் நோட் பண்ணிகிட்டோம்.. “

திரும்பவும் இன்பன் குறுக்கிட்டான்…

“அந்த போட்டோ வச்சிருக்கியா.. “

“ம்ம்ம்.. “

“அத எனக்கு அனுப்பு… “

“ இது எதுக்குடா.. “என்றான் மதி.

“தேவைப்படலாம்… “ என்றான் இன்பன்.

இதற்கு அப்புறமாக அவள் பேசுவதை பெரிதாகக் இன்பன் கவனிக்கவில்லை. அவனின் நினைப்பு எல்லாம் கிடைத்த விவரங்களை வைத்து என்ன செய்யலாம் என்பதிலே இருந்தது.

அன்று…

அதுக்கப்புறம் நேரா வீட்டுக்கு வந்தார்கள். தாத்தா ஷோபாவில் படுத்திருந்தார். அவரும் எதுவும் கேக்கவில்லை. இவர்களும் எதுவும் சொல்லவில்லை. இருவரும் அறைக்குள் வந்தனர். கட்டிலில் அமர்ந்தவுடன்…

“ நீ ஏன் எதுவும் சொல்லல அனலி… சொல்லிருக்கலாம்ல.. “என்ற மீனாவின் குரலில் அத்தனை சோகம் இருந்தது.

“என்ன சொல்ற மீனா.. புரியல… “

“நீ எல்லாத்தையும் எங்கிட்ட இருந்து மறச்சிட்டல.. “

“புரியல மீனா.. “

“நேத்து நைட் தாத்தா உன்ன திட்றத கேட்டேன்.. அவரு, இத்தன நாளா உங்கிட்ட இப்படித்தான் பேசுவாரா… எனக்கு தெரியாதே அனலி.. உன்ன எப்படி பாத்துக்கனும்னு நினைச்சேன்.. கடைசில… “ என்று கண்ணீர் விட்டாள்.

“அவரு கஷ்டத்துல அப்படிப் பேசிட்டாரு.. நீ அழாத மீனா… “ என்றாள் அவளுக்கு ஆறுதலாக.

“அவர் நேத்து பேசுனது மட்டும்னா கஷ்டத்தில் பேசுற மாதிரி.. ஒவ்வொரு நாளும் திட்டிருக்காருனா… அவருக்கு உன்ன பிடிக்கல… ”

“விடு… இப்ப எதுக்கு அதைப் பத்திப் பேசணும் “

“எங்கயாவது ஹாஸ்டல்ல நல்லா இருந்திருப்ப.. உன்னைய வீட்டுக்குக் கூட்டிட்டு வந்து இவ்வளவு கஷ்டப் படுத்திட்டேனே… ”என்று மேலும் மேலும் அழுதாள்.

“விடு மீனா… நீ கொஞ்சம் ரெஸ்ட் எடு “ என்று அனலி சொன்னவுடன் மீனா அவளது மடியில் படுத்துக் கொண்டாள்.

“அந்த மூனு பேரையும் பழிவாங்கனும் அனலி.. தாத்தாவ வெறுத்திராத அனலி… நல்லா பாத்துக்கோ.. “ என்று ஏதேதோ புலம்பினாள்..

அதன் பின் அனலிக்காவிற்காக இருந்த ஒரு உயிரும், அன்று இந்த உலகத்தை விட்டுச் சென்றது.

இன்று

“அப்ப என்கிட்ட அந்த மாதிரி பேசும்போது எனக்குப் புரியல.. ஆனா அதுக்கப்புறம் அவ எடுத்த முடிவ யோசிக்கும் போதுதான் தெரிஞ்சது.. அவ என்னய பழிவாங்கச் சொல்லிருக்கானு.. அவளுக்கு வந்த கஷ்டத்துக்காக அவ அந்த முடிவ எடுக்கல.. என்னய கஷ்டப்படுத்திட்டோம்னு நினைச்சு தான் அந்த முடிவை எடுத்திட்டா.. “

சிறிது தன்னை சமன் படுத்திக் கொண்டு மீண்டும் ஆரம்பித்தாள்.

“அதுக்கு அப்புறமா எனக்கும் தாத்தாக்கும் சண்டை வந்துச்சு.. நானும் மீனா சொன்ன வார்த்தைகாக எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தேன்…அவர சமாதானப்படுத்த முடியல.. கடைசில ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வந்தோம்… மீனா நினைச்ச மாதிரியே அந்த மூனு பசங்களையும் பழிவாங்கனும்.. பழிவாங்கிட்டு அவங்கவங்க பாதைல போய்ரனும்… அவ்ளோ நல்ல பொண்ணுக்கு நாங்க வேற என்ன பண்ண முடியும்.. “

கவனம் முழுவதும் கைப்பேசியில் வைத்துக் கொண்டே “எங்கிட்ட சொல்லிருக்கலாமே.. “ என்றான் இன்பன்.

“என்னைக்காவது நான் போன் பண்ணா.. இவ எதுக்கு போன் பண்ணானு யோசிச்சிருக்கியா.. இல்ல என்ன வேணும்னு தான் கேட்ருக்கியா.. எப்பப் பாரு ‘முடியாது’, ‘வரமாட்டேன்’ ‘சீக்கிரமா சொல்லு’... இப்படித்தான சொல்லிருக்க… ஏன் இன்னைக்கு கூட ‘ஏன் வந்தனு‘ தான கேட்ட… வெறுத்திடுச்சி இன்பன்… “ என்றாள் அவனையே பார்த்தபடி …

(தொடரும் )
 




Kathambari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Feb 1, 2019
Messages
6,457
Reaction score
21,474
Location
Mumbai

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top