• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

மிதக்கும் ஆயுதங்கள் - - அத்தியாயம் 17

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Kathambari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Feb 1, 2019
Messages
6,457
Reaction score
21,474
Location
Mumbai
அவன் பெயரை, அவள் வாயால் உச்சரிக்கும் போதுதான் அவன் நிமிர்ந்து பார்த்தான்.. பின் திரும்பவும் அவளைக் கவனிக்கத் தொடங்கினான்..

“இந்த மாதிரி ஒரு முடிவு எடுத்த பிறகு தான், நாங்க மீனாவோட விஷயத்தப் போலீஸ் ஸ்டேஷனுக்குச் சொன்னோம்.. அப்ப கூட பயம்தான்… ஏன்னா அன்னைக்கு வந்த இன்ஸ்பெக்டர் கேட்டார் இல்லையா… ‘நீங்க ஏன் இன்பார்ம் பண்றதுக்கு இவ்வளவு லேட் ஆச்சுனு’… இப்படி நிறைய பயம் தாத்தாவுக்கு…அதான் நீங்க வீட்டுக்கு வந்தப்போ கூட, அப்படிப் பேசுனாரு… ஆனா அவர்தான்… “என்று பாதியிலேயே நிறுத்தி விட்டாள்.

இன்பன், அவளையே கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான்..

“நான் சொல்லட்டா.. “ என்றான் இன்பன்…

அவள் ‘இவன் என்ன சொல்லப் போறான்’ என்பது போல அவனைப் பார்த்தாள்.

“அப்புறமா போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுத்தா, எப்ஐஆர் போடனும்.. அப்படின்னா அடிக்கடி போலீஸ் வீட்டுக்கு வருவாங்க, விசாரிப்பாங்க… நீங்க செய்யப் போற வேலையைச் செய்ய முடியாது… அதனால தான் அட்டாப்ஸி ரிப்போர்ட்ட கூட என்னய வச்சி வாங்கினீங்க.. “ என்றவன் ‘நான் சொல்றது சரியா ‘ என்பது போல் கேட்டான்.

“இல்ல.. “

போதும் என்று கை காட்டிவிட்டு “அடுத்து சொல்லு… “என்றான் இன்பன்.

“அப்புறமா அந்த கார் நம்பரை வச்சி அந்தப் பசங்களோட ஆக்டிவிட்டிய வாட்ச் பண்னேன்… தாத்தா எந்தெந்த ரூட்ல கேமரா இல்லனு பாத்து வச்சிப்பாரு .. அவர் மெக்கானிக் ஷாப்ல வேல செஞ்சதுனால, நிறைய ரூட் தெரியும்… அதனால் அது அவருக்கு ரொம்ப ஈசியா இருந்துச்சி.. அதோட கார எடுத்துட்டு வர்ரதுக்கு டூப்ளிகேட் சாவி பண்றதும் அவர் ஏற்கனவே செஞ்சது தான… அடுத்து ஒரு ரெண்டு மூனு நாள் இதே வேலையா அலைஞ்சோம்.. “

“பப்ல எங்களுக்கு ஒரு ஆள் தேவைப்பட்டுச்சி… அந்தப் பசங்களோட போன் நம்பர் வாங்க.. அதுக்குதான் அந்த கால் கேர்ள்ஸ் கிட்ட ஹெல்ப் கேட்டேன்… “

இன்பன் இப்போது திருப்பியும் குறுக்கிட்டான்.

“அவங்ககிட்டயும் எல்லாத்தையும் சொல்லி வச்சிருக்கியா… “

ஆமாம் என்பது போல தலையசைத்தாள்.

“ச்சு.. என்னடா .. “என்றான் மதியைப் பார்த்து… அவனுக்கு கொஞ்சம் கொஞ்சமாக பொறுமை போய்க்கொண்டிருந்தது…

“நம்பர் எனக்கு கிடைச்சதுக்கு அப்புறம்… நான் தான் ஸ்கைப் அகௌன்ட்ல இருந்து அந்தப் பசங்களுக்குக் கால் பண்ணி பேசினேன்.... அவங்கள நான் நினைச்ச இடத்துக்கு, வந்து காரைப் பார்க் பண்ண வைக்கணும்… அதுக்கு என்ன பேசனுமோ அத பேசினேன்.. என்ன பேசுனேன்னுலாம் சொல்ல முடியாது.. . “என்றாள் எரிச்சலாக…

“சொல்லவும் வேண்டாம்…எப்படி கொலை செஞ்சீங்கனு மட்டும் சொன்னா போதும்… “

“ சிரெஞ்(syringe) … “

“என்னது.. “

“எம்ட்டி சிரெஞ்ல இருக்கற காற்றை நரம்புல வழியா இரத்தத்தில செலுத்தினா.. அந்தக் காற்று(air) , ஏர் பபுள்ஸா (காற்றுக் குமிழிகள் - air bubbles) இரத்தத்தில மிதக்க ஆரம்பிக்கும்… இதனால ரத்தக் குழாய்கள்ல அடைப்பு (blockage) உண்டாகும்.. அதனால இதயத்துக்குப் போற இரத்தம் தடைபடும்… இதுக்கு ஆர்டீரியல் ஏர் எம்பாளிஸம்னு (arterial air embolism) பேரு.. இதனால ஹார்ட் அட்டாக்(heart attack) வரும் … இதனால உடல்ல மற்ற பாகங்களுக்கு போற இரத்தமும் தடைபடும்… முக்கியமா மூளைக்குப் போற இரத்தம் தடைபடும்… இதுக்கு செரிபிரள் ஏர் எம்பாளிஸம்னு (cerebral air embolism) பேரு… இதனால ஸ்டோர்க்(storke) வரும் … நரம்புல செலுத்ற காற்றோட வேகத்தையும் அளவையும்(speed and unit ) அதிகரிக்கும் போது… பெரிய பெரிய ஏர் பபுள்ஸ்(காற்றுக் குமிழிகள் - air bubbles) மிதக்க ஆரம்பிக்கும்… இது மொத்தத்துக்கும் பேரு ஏர் எம்பாளிஸம்(air embolism) “

“மூனு பேரையுமே இந்த மாதிரி தான் கொல பண்ணேன்…எங்கிட்ட வேற ஆயுதமெல்லாம் இல்ல .. அதான் காற்றையே ஆயுதமாக்கி இரத்தத்தில மிதக்க விட்டேன்… “ என்றவளின் குரலில் மீனாவின் பழிவாங்கும் ஆசையை நிறைவேற்றிய நிம்மதி தெரிந்தது.


“நரம்புல நான் போட்ட அந்த இன்ஜெக்ஷன் மார்க்க அழிக்கத்தான் அவங்க கார் சீட்டில உரசி காயம் மாதிரி பண்ணேன்..”

“இது அட்டாப்ஸில கண்டுபிடிக்கலாம்… ஆனால் ரொம்ப கேர்ஃபுல்லா பண்ணனும்.. அவங்க ஏற்கனவே ஹெராயின் எடுத்திருந்தால, அந்தளவுக்கு கேர்ஃபுல்லா பண்ண மாட்டாங்கனு தெரியும்… ”

“உங்க கவனம் எல்லாமே அந்த கால் கேர்ள்ஸ்.. மொபைல் மிஸ் ஆனது.. எதிர்ல வந்த கார்னு தான் இருக்கும்…மிஞ்சி மிஞ்சி போனா.. கார ஏன் அங்க பார்க் பண்ணானு யோசிப்பீங்க… ஆனா இதெல்லாம் யூஸ் ஆகலனு தெரிஞ்சா.. திருப்பியும் அட்டாப்ஸி பண்ணனும் நினைப்பீங்க…”

“அப்ப ப்ரைன் அட்டாப்ஸி(brain autopsy) டோமோகிராபி(tomography) பண்ணுவாங்க… கைல இருந்த காயத்த பத்தி யோசிப்பீங்க… அப்ப விஷயம் தெரியறதுக்கு வாய்ப்பு இருக்கு.. “

“எனக்கு தெரியும் நீங்க கால் கேர்ள்ஸ் விசாரிச்சீங்கனா கண்டிப்பாக உண்மை தெரிஞ்சிரும்னு.. ஒரு ஸ்டேஜ்ல அவங்க உண்மையைச் சொல்லிடுவாங்கனு பயந்தேன்… ஆனா நீங்க அவங்கள சரியா விசாரிக்கவே இல்லை… “

ஒரு நீண்ட மூச்சுடன், அவள் முடித்தாள்.

சிறிது நேரம் அமைதி நிலவியது..

இன்பன் ஆரம்பித்தான்..

“நல்லா இருக்குல மதி.. ஒரு மெக்கானிக்… ஒரு டாக்டர்.. பத்து நாளுக்கு மேல சும்மா சுத்தவிட்டு வேடிக்க பாத்திருக்குங்க.. இவ்வளவு செஞ்சிட்டு, தாத்தாவுக்கு பயம்னு வேற பேசுறது… “

“நான் சொன்னனா பயம்னு.. ஒருத்தன் பயமானு கேக்கிறதும்... இன்னொருத்தன் பாசமான கேட்கிறதும்… தலைய ஆட்றத தவிர எனக்கு வேற வழி இல்ல.. “என்றாள் கோபம் கொண்டவளாய்…

மதி ‘இன்னொருத்தன் யாரு’ என்பது போல் இன்பனை பார்த்தான்…

இன்பனும் மதியைப் பார்த்து “அந்த டாக்டர்.. “என்றான் வாய் மட்டும் அசைத்து..

“அம்மா அப்பாக்கு தான் பயப்படுவாங்க… எந்த ஊர்ல தாத்தாக்கு பயந்தாங்க… அந்த அறிவு கூட இல்…. “ என்றவள் வாக்கியத்தை முடிக்காமல் நிறுத்தி விட்டாள்.

மதியிடம் இருந்து சடாலென்று பார்வையைத் திருப்பிய இன்பன்..

“ம்.. சொல்லி முடி.. அந்த அறிவு கூட இல்ல.. நீயெல்லாம் என்ன அஸிஸ்டன்ட் கமிஷனர்.. அதான.. “

மதிக்க புரிந்துவிட்டது அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று… அதனால் அவன் அனலிக்காவைப் பார்த்து” நீ முடிச்சிட்டனா… வீட்டுக்கு கிளம்பு… ” என்றான்.

“இருடா, இன்னும் முடியல.. ம்ம்.. இன்னொருத்தர் இருக்காருல… அவரப் பத்தி சொல்லு… “

“உனக்குத் தெரியுமா இன்பா…” என்றான் மதி ஆச்சரியமாக..

“தெரியும்.. ஆனா வேற மாதிரி தெரியும்… நான் அப்புறமா சொல்றேன்… “

“எப்படா தெரியும்…”என்றான் மதி விடாமல்…

“ச்சு.. ரெண்டு நாளா சந்தேகம்… இன்னைக்குக் காலைல கன்பார்ம் பண்ணேன்…. “என்றான் சாதரணமாக..

“ஓ… அதான் ரெண்டு நாள்ல அத்தன கால் வந்துச்சா.. நான் கூட வேற ஏதோனு நினைச்சேன் .. “என்றாள் கோபத்துடன் அனலி.

அவனுக்கும் கோபம் வந்தது… அவன் அழைப்பை அவள் தவறாக புரிந்து கொண்டாள் என்று….

“அப்படியே நினைச்சுக்கோ… இப்பச் சொல்லு… யாரு அந்த மூனாவது ஆளுனு.. “என்று ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு, அவள் முன்னாடி அமர்ந்தான்..

“மதி நீங்க வெளியில இருக்கீங்களா.. நான் இவர்கிட்ட கொஞ்சம் தனியா பேசனும்… “

“மதி இங்கயே நில்லுடா… “

“நீங்க சொல்லுங்க அனலிக்கா… “

“ இல்ல தாத்தா தான்…. “

“ஜயோ.. தயவு செஞ்சு அந்த ஆள தாத்தானு சொல்லாத… பயங்கர கோவம் வருது.. ” என்றான் தன் இரு கண்களையும் மூடிக்கொண்டு ஒற்றைக் கையால் நெற்றியை அழுத்தியபடி…

“ இல்ல போலீஸ்ல..”

“ம்ம்ம்.“

“யாராவது.. “

“ம்ம்ம்.“

“தெரிஞ்சு இருந்தா… “

“ம்ம்ம்.“

“ கேஸ் எப்படி… “

“ம்ம்ம்.“

“ போகுதுன்னு… ஆனா நான்… “

“போதும்… இனி நான் சொல்லட்டா.. அதுக்கு நான் கிடைச்சேன்.. யூஸ் பண்ணிக்கிட்டீங்க..கொல பண்ண அடுத்த நாளெல்லாம் ஒன்னு என்னய பார்க்க வந்திருக்க.. இல்லனா எனக்கு கால் பண்ணிருக்க….சரியா ”

“முதல் நாள் தேவயில்லாம கமிஷனர் ஆபீஸ் வந்தது.. மயக்கம் போட்டு விழுந்தது.. அதுக்கப்புறம் எங்க வீட்டுக்கு வந்ததது.. காஃபி போட்டுக்கொடுத்தது… அடிக்கடி பிக்கப், டிராப்… மதி வீட்ல வச்சி பேசினது … காஃபி ஷாப்பில அப்படி நடந்துக்கிட்டது….”

என்று சொல்லிக் கொண்டே போனவன் மதியிடம் திரும்பி..

“நான் கூட எனக்கு மட்டும் ஸ்பெஷல்னு நினைச்சேன் மதி… ஆனா என் இடத்துல யாரு இருந்தாலும், இவங்க ப்ளானே இதுதான்… “

“நானே மன்னிக்க மாட்டேன்டா உன்ன…”என்றான் மதி கோபமாக..

‘ஏன் ‘ என்பது போல் மதியைப் பார்த்தான். எப்போதும் போல், அப்போது தான் என்ன பேசினோம் என்று உணர்ந்தான் ஆரின்பன். உடனே திரும்பி அவளைப் பார்த்தான்..

ஆனால் அவளோ அமைதியாகப் புன்னகைத்தாள்.. அவனுக்குத் தான் அவளின் புன்னகையைப் படிக்கத் தெரியுமே.. அதன் அர்த்தம்…

“நீயெல்லாம் அவ்வளவுதான்…. “

(தொடரும்)
 




Kathambari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Feb 1, 2019
Messages
6,457
Reaction score
21,474
Location
Mumbai

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top