• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

மிதக்கும் ஆயுதங்கள் - - அத்தியாயம் 21

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Kathambari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Feb 1, 2019
Messages
6,457
Reaction score
21,474
Location
Mumbai
மனமின்றி வெளியே வந்த இன்பன் மதியைப் பார்த்து “நாளைக்கு ப்ரித்திஸ் வந்திருவான்.. நீ.. “ என்று முடிப்பதற்கு முன்பே…

“நான் கிளம்புறேன்.. “என்று கிளம்பி விட்டான் மதி.

அன்று அந்த இரவு சிலருக்கு குழப்பமான இரவாகவும்… ஒரு சிலருக்கு பயங்கர இரவாகவும்… மற்றவருக்கோ உறங்கா இரவாகவும்… அமைந்திருந்தது.

அடுத்த நாள் காலைப் பரபரப்புக்குப் பஞ்சமில்லா விடியலாக இருந்தது. முதல் செய்தி போதைப் பொருள் விநியோகித்திக் கொண்டிருந்த தினேஷ் மற்றும் அவனது கூட்டத்தினரைப் போலீசார் விசாரிக்கப் போகும்போது, அந்தக் கும்பல் தாக்குதல் நடத்தினதால்.. தற்காப்புக் கருதி அவர்கள் அனைவரும் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்தச் செய்தி பரபரப்பாகிக் கொண்டிருக்கும் போதே, நண்பகலில் வந்த அடுத்தச் செய்தி அதைவிட பரபரப்பாக இருந்தது. அது என்னவென்றால் “அசிஸ்டன்ட் கமிஷனரின் மூன்று கொலைகள்” என்ற தலைப்பில் ஒவ்வொரு பத்திரிக்கைகளும் செய்திகளைத் தாங்கி வந்தன. அதன்பிறகு ஒவ்வொரு ஊடகங்களும் விவாதத்தில் இறங்கியிருந்தன.. நயமான முறையில் திட்டித் தீர்த்துக் கொண்டிருந்தனர்… வழக்கம் போலவே எந்த ஒரு விவாதங்களிலும் பேசுபொருளாகப் படுபவர்கள்.. அவர்களின் அன்றைய வேலைகளைப் பார்த்துக் கொண்டே இருப்பது போல… இங்கும் அமைச்சரும்… ப்ரபோஸரும் அவர்களுடைய அன்றாடப் பணிகளைச் செய்துக் கொண்டிருந்தனர்.

இந்தச் செய்தியில் அதிகமாகச் சர்ச்சைக்கு உள்ளாக்கப்பட்ட ஒரு உருவம், இரண்டு நாள் போராடிய நிமிடங்கள் வெற்றியடைந்ததைக் கண்டு மிகுந்த சந்தோசத்துடன் இருந்தது. அந்த உருவம் இப்பொழுது ஆணையர் அலுவலக அறையின் உள்ளே தலைகுனிந்து நின்று கொண்டிருந்தது. அதன் பெயர் ஆரின்பன்.

ஆணையர் அலுவலகம்

ப்ரித்தீஷ் அவன் இருக்கையில் அமர்ந்து இருந்தான். அவன் முன்னே ஆரின்பனும் இளமதியும் தலை குனிந்து நின்றிருந்தனர்.

அவர்களை ஒருமுறை பார்த்து விட்டு, ப்ரித்திஸ் பேச்சை ஆரம்பித்தான்.

“அவன நிமிர்ந்து பார்க்க சொல்லு…” என்றான் மதியிடம்.

“ஏன் நீயே சொல்லு.. இங்கதான நிக்கிறான்… நீ சொன்னாலும் கேட்கும்… “ என்றான் மதி .

“பார்ம்க்கு வந்துட்டோம்னு திமிரில பேசுறியா… “

“அய்யய்ய… யேய் நிமிர்ந்து பார்டா… “ என்றான் இன்பன் முதுகில் தட்டி .

‘நிமிர்ந்து பார்ப்பேனா’ என்ற தோரணையிலே நின்றான் இன்பன். .

“இந்தக் கேஸ எடுக்கிறப்ப.. என்னடா சொன்ன.. ஒரே நேர்கோட்ல கொண்டு போவேனு சொன்னேல.. இப்ப அங்க சுத்தி, இங்க சுத்தி, யூடர்ன் போட்டு கடைசில என் முன்னாடியே வந்து நிக்கிறல… “

இன்பன் எதுவும் பேசவில்லை….

“அதென்ன சொன்ன.. இந்தக் கேஸூக்காக… நான் யார்கிட்டயும் பேச வேண்டியதே இருக்காதுனு தான… இதுக்கு முன்னாடியாவது ஒரு ஏரியா இன்ஸ்பெக்டர் கிட்ட மட்டும் தான் பேசிகிட்டு இருந்தேன்… ஆனா இன்னைக்கு ஒட்டுமொத்த தமிழ்நாட்டயே ஆபீஸ் முன்னாடி கொண்டு வந்து நிறுத்திருக்க… “

அப்பொழுதும் ஆரின்பனிடம் இருந்து பதில் வரவில்லை..

“பதில் சொல்லுடா…” என்றான் ப்ரித்திஸ் கோபமாக .

“டேய்.. பதில் சொல்லத் தெரிஞ்சா.. அவன் வெளியில மீடியா கேக்கிற கேள்விக்கே, பதில் சொல்லிருப்பான்ல.. விடு.. “ என்றான் மதி…

“இரு வெளிலப் போய் பேசிட்டு வந்து வச்சுக்கிறேன்.. “என்று எழுந்து வெளியே கிளம்பினான் ப்ரித்திஸ் .

“மதி நீயும் என் கூட வா… டீடைல்ஸ் எல்லாம் வச்சிருக்கியா.. “

“ம்ம்ம்… “

பின்னர் இன்பனை ப்ரித்திஸ் பார்த்தான். ‘நானும் வரவா’ என்பது போல் இன்பன் நிமிர்ந்துப் பார்த்தான்.

“வா…ஆனா நான் சொல்றப்ப மட்டும்தான் பேசனும்..” என்றான் ப்ரித்திஸ் அழுத்தமாக.

அப்பொழுதுதான் இன்பன் தன் வாயை திறந்து “இதையும் எடுத்துட்டு போ… “என்றான் ஒரு கவரை எடுத்து..

‘என்ன’ என்பது போல் ப்ரித்திஸ் பார்த்தான்.

“தேவைப்படும்… “என்றான் இன்பன் ஒரே வார்த்தையில்.

கவரைப் பிரித்துப் பார்த்த ப்ரித்திஸ் “இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை… “ என்றபடி அவன் கொடுத்ததை வாங்கிக் கொண்டு வெளியேச் சென்றான்.

ஊடகத்தினரைச் சந்திப்பதற்காக வெளியே வந்து நின்றான் ப்ரித்திஸ். மதியும் அவன் பின்னே, கொஞ்சம் இடைவெளி விட்டு நின்றான்… அவன் நின்றவுடன் அவனது அருகில் நாலைந்து நபர்கள், உடலில் அங்கங்கே சிற்சில காயங்களுடன் வந்து நின்றனர்.

ஆரின்பனும் வந்து நின்றான்… கேள்விகளால் அவனை துளைக்க காத்துக் கொண்டிருந்தனர் ஊடகத்தினர்.

ப்ரித்திஸ் “நான் சொல்லவந்ததை முதல சொல்லிடுறேன். அதுக்கப்புறம் நீங்க கேட்க வேண்டியக் கேள்விகளைக் கேளுங்க.. பதில் கண்டிப்பா கிடைக்கும் “என்று தெளிவாகவே ஆரம்பித்தான்.

அந்தத் தெளிவான பேச்சில் அமைதியாயினர்…

“முதல இந்த மூன்று மரணங்கள் பற்றி… இது அசிஸ்டன்ட் கமிஷனர் ஆரின்பனால் திட்டமிட்டு நடத்தப்பட்டச் சம்பவம்.. இந்தச் செயலுக்காக காவல்துறை அவரை வன்மையாகக் கண்டிக்கிறது..” என்றான் கடுமையாக..

அந்தக் கடுமை ‘காசா பணமா கண்டிச்சு வைப்போம்’ என்ற மனநிலையிலே சொல்லப்பட்டுது.

“ஓகே… ஏன் அவர் இந்த மாதிரி செஞ்சாரு, அப்படிங்கிறது உங்க கேள்வி.. பெண்களுக்கு எதிரா நடக்கிற இந்த மாதிரிச் சம்பவங்கள்ல, இதுவரைக்கும் வழங்கப்படாத ஒரு தண்டனை வழங்கப்படனும்.. அதற்காகப் போடப்பட்டத் திட்டம்தான் இது… இந்தச் சம்பவம் நடத்தப்பட்டதற்கான முக்கிய நோக்கமே , இந்தப் பசங்க போல இருக்கிற மற்ற பசங்களுக்கு உயிர் பயத்தை ஏற்படுத்தனும் என்பது தான் அவருடைய நோக்கம்… இப்போ நீங்க கேள்வி கேட்கலாம்…

ஊடகம் : எதற்காக இந்த மூனு பசங்கள செலக்ட் பண்ணீங்க?

ப்ரித்திஸ் : இந்தப் பசங்க மூனு பேருல ஒருத்தன்அரசியல்வாதியோட மகன்… அதனால கண்டிப்பா, பெரிய அளவில பேசப்படும்… அதற்காகத்தான் இந்த மூனு பசங்க…

ஊடகம் : எப்படி இந்த மூனு பசங்கனு கண்டுபிடிச்சீங்க….

ப்ரித்திஸ் : இதற்கு ஆரின்பன் பதில் சொல்வார்…

ப்ரித்திஸ் இன்பனைப் பார்த்தான்.. அந்தப் பார்வையில் ‘தேவையானதை மட்டும் சொல்லு’ என்று கட்டளை இருந்தது…

ஆரின்பன் : கொஞ்ச நாள் முன்னாடி மீனாட்சியினு ஒரு பொண்ணு வந்து என்னைப் பார்த்து, தனக்கு நடந்த கொடுமையைச் சொல்லி, அதுக்கு காரணமானவங்களை அடையாளம் காட்டறதா சொன்னாங்க… மீனாட்சியால் எனக்கு அடையாளம் காட்டப்பட்டவங்க தான், இந்த மூனு பேரும்…ஆதாரத்துக்கு டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் இருக்குது … அப்புறமா ப்ளான் பண்ணோம்…

ஊடகம் : எந்த மாதிரி பிளான் சார் .. எப்படி எக்ஸ்க்யூட் பண்ணீங்க..

மிகுந்த ஆர்வத்துடன் கேட்டகப் பட்ட கேள்வி இது.

ஆரின்பன் : சொல்றேன்…

இன்பனின் கையைப் பிடித்து இழுத்து பின்னே நிறுத்தினான் ப்ரித்திஸ் ..

ப்ரித்திஸ் : இதுக்கு அவர் பிறகு பதில் அளிப்பார்.. அடுத்த கேள்வி?

ஊடகம் : ஹெராயின் கேஸப் பத்தி.. அதுக்கும் இந்த கேசுக்கு ஏதாவது சம்பந்தம் இருக்கா?

ப்ரித்திஸ் : நிச்சயமா சம்பந்தம் இருக்கு

இப்போது இடையே ஒரு ஊடகம் குறுக்கிட்டது.

ஊடகம் : அன்னைக்கு அசிஸ்டன்ட் கமிஷனர் கிட்ட கேட்டப்போ, அவர் சம்பந்தம் இல்லைன்னு சொன்னாரு?

ஊடகம் : இது இயற்கை மரணம்னு வேற சொன்னாரு?

‘எப்படி வந்து மாட்டி விட்ருக்க’ என்று இன்பனைப் பார்த்தான் ப்ரித்திஸ் …

ப்ரித்திஸ் : நான் ஏற்கனவே சொன்ன மாதிரி தான்… இதெல்லாம் அவருடைய திட்டம்…

“ஓகே... இப்ப இந்தக் ஹெராயின் கேஸப்பக்தி இளமதி சொல்லுவார்… “ என்று விலகி நின்றான் ப்ரித்திஸ்… பின் ‘வாடா’ என்பது போல் இளமதியைக் கண்ணால் கூப்பிட்டான்…

மதி வந்து நின்றான்…

இளமதி : இந்த மாதிரி பசங்க தப்பா நடக்குறதுக்கு முக்கிய காரணமே போதையில இருக்கிறதுதான்… அதுக்காகத் தான் நாங்க இந்த மூனு பசங்களுக்கு ஹெரோயின் சப்ளை பண்ண ஆளான தினேஷ ரொம்ப நாளா பாலோவ் பண்ணோம்.. அவனுடைய நடவடிக்கைகள், எங்கெங்க சப்ளை பண்றான்… இப்படி எல்லா டீடெய்ல்ஸ் இருக்கு… அது உங்களுக்கு பின்னர் கொடுக்கப்படும்…

ஊடகம் : நேத்து விசாரிக்கப் போனதுக்கு காரணம் இருக்கா சார்?

இளமதி : அதுக்கு காரணம்.. நேத்து இந்த மீனாட்சியுடைய குடும்பத்தில ஒருத்தர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டிருக்கார்.. இந்தக் கொலைக்கும் அந்த தினேஷக்கும் சம்பந்தம் இருக்குமா என்று சந்தேகப்பட்டே விசாரிக்கப் போனோம்..

ஊடகம் : இது ஒரு என்கவுண்டரா..

இளமதி : கண்டிப்பா இல்ல..ஆனா அவங்க தாக்குதல் நடத்தினதால… திருப்பி தாக்குதல் நடத்த வேண்டிய சூழ்நிலை உண்டாச்சி… அந்த தாக்குதலில் காயம் பட்ட என்னுடைய டீம் இங்க நிக்கிறாங்க பார்த்துக்கோங்க…

என்று பின்னே நின்று கொண்டிருந்த காயமடைந்த சிலரை காட்டினான்.

“இளமதி நீங்க போங்க… “ என்று மறுபடியும் ப்ரித்திஸ் மைக்கின் முன்னே வந்து நின்றான்.

ப்ரித்திஸ் : அந்த மீனாட்சி பொண்ணோட குடும்பத்தில் நேற்று இறந்ததாகச் சொல்லப்பட்ட ஒரு பெரியவரைக் கொலை செஞ்சதும்.. இளமதியால் தற்காப்புக்காக கொல்லப்பட்ட சிலரும் ஒன்றுதான்… இது அந்த ஏரியா போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகேசனால் சிசிடிவி கேமராவில் கிடைத்த தகவல்படி கன்ஃபார்ம் பண்ணியிருக்காங்க… இப்ப நீங்க கேள்வி கேட்கலாம்

ஊடகம் : சார், அந்த மூனு பேருக்கும், ஹெராயின் சப்ளை பண்றது. இந்த தினேஷ்தானு எப்படி சொல்றீங்க

ப்ரித்திஸ் : அதுக்கு எங்ககிட்ட ஆதாரம் இருக்கு

என்று ஆரின்பன் கொடுத்த கவரில் இருந்த போட்டோவை எடுத்து அவர்களிடம் காட்டினான். அந்தப் புகைப்படம் அந்த நால்வரையும், அன்று அனலிக்கா எடுத்ததாகக் சொல்லியப் புகைப்படம்.

ப்ரித்திஸ் : இது உங்களுக்கு பின்னர் வழங்கப்படும்

ஊடகம் : சார், இப்படி சட்டத்தைக் காவல்துறை கையில எடுக்கிறது தப்பில்லையா?

இந்தக் கேள்வியில் கோபம் இருந்தது.

ப்ரித்திஸ் ஒரு நொடி இன்பனைத் திரும்பிப் பார்த்தான்.. அந்தப் பார்வையின் அர்த்தம் புரிந்து உள்ளே சென்று விட்டான் இன்பன்..

ப்ரித்திஸ் : கண்டிப்பா தப்புதான்.. தப்பு இல்லைன்னு நான் சொல்லவே இல்லையே

ஊடகம் : அப்ப அவர் மேல என்ன ஆக்சன் எடுப்பீங்க?

ப்ரித்திஸ் : அந்தப் பசங்க வீட்டிலிருந்து போடப்பட்ட கேஸ வாபஸ் வாங்கிட்டாங்க… எங்க சைடுலிருந்து எந்த ஒரு ஆக்ஷன் எடுக்க முடியாத நிலையில இருக்கோம்…

ஊடகம் : சார் வேறு யாராவது புதுசா கம்ப்ளைன்ட் பண்ணா, அப்படின்னா நீங்க அதை எடுத்துப்பீங்களா?

ப்ரித்திஸ் : கண்டிப்பா… அந்த மாதிரி யாராவது முன்வந்து கம்பிளைன்ட் தந்தாங்கனா… அது எடுத்துக் கொள்ளப்படும்.. அதற்கு ஆக்ஷன் கண்டிப்பாக எடுக்கப்படும்.. ஒரு கமிஷனரா நான் இதைச் சொல்றேன்..

ஆனா இன்னொன்னும் சொல்லிக்கிறேன்.. இந்த மாதிரி அவரை எதிர்த்து கம்ப்ளைன்ட் கொடுக்கிறவங்க… இந்த பசங்க செய்த சம்பவத்தை முற்றிலும் ஆதரிக்கிறாங்கனு தான் அர்த்தம்

‘இவன் கம்ப்ளைன்ட் கொடுக்கச் சொல்றானா இல்ல வேண்டாம்னு சொல்றானா…’ என்று புரியாமல் பார்த்தனர்.

ஊடகம் : சார்.. ஹ்யூமன் ரைட்ஸலருந்து அவருக்கு சம்மன் அனுப்பி இருக்கிறதா கேள்விப்பட்டோம்.. உண்மையா?

ப்ரித்திஸ் : உண்மைதான்… நாளைக்கு அத அவர் பேஸ் பண்ணுவாரு…

கேள்விகள் அதற்கப்புறமும் கேட்கப்பட்டன.. கேள்விகளை இன்முகமாக சமாளிப்பது ஒரு கலை அல்லவா… ப்ரித்திஸ் அதை அழகாகச் செய்தான். பின்னர் கடைசியாக சில ஆதாரங்கள் சில புகைப்படங்கள் எல்லாம் ஊடகச் செய்திகளுக்காக் கொடுக்கப்பட்டது..
 




Kathambari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Feb 1, 2019
Messages
6,457
Reaction score
21,474
Location
Mumbai
எல்லாம் முடிந்த பின் இருவரும் உள்ளே வந்தனர்.. உள்ளே இன்பன் கைப்பேசியும் கையுமாக இருந்தான்.

ப்ரித்திஸ் ‘என்னடா’ என்பதுபோல மதியை பார்த்தான்.

“எடுக்காத போன் நம்பருக்கு எத்தன தடவ போன் பண்றான் தெரியுமா… “

“அந்தப் பொண்ணு பேசுறது இல்லையா… அவ்வளவு கோபமா.. “

“இவன் பேசுனது அப்படி… “

“நீ ஏன் அவ்வளவு பேசவிட்ட… “

“அவன எதுவும் சொல்ல மாட்டியே… “என்று இன்பன் அருகில் வந்து அமர்ந்தான் மதி.

உள்ளே வந்த ப்ரித்திஸ் இன்பனின் கையிலிருந்த கைப்பேசியை உருவினான்.

“வெளில என்ன நடக்குது தெரியுமா… “ என்று வந்து உட்கார்ந்தான் ப்ரித்திஸ்.

“இதான நடக்கனும்னு நினைச்சேன்.. அதவிடு.. மீனாட்சி அட்டாப்ஸி ரிப்போர்ட்ட நீ பார்த்தியா…சொல்லவே இல்ல “ என்றான் இன்பன் ஆச்சரியத்துடன்.

“நீ பார்க்காதது தான் ஆச்சரியமா இருக்கு… காதல் கண்ணை மறச்சிருச்சி.. சீக்கிரமா அந்த டாக்டர கல்யாணம் பண்ணற வழியப் பாரு.. நீ பாக்குற வேலைக்கு இது நல்லதல்ல… “

“இவ்வளவு நேரம் பேசினதுல.. நீ இப்ப பேசறது தான் சூப்பர்.. வா இப்பவே அந்தப் பொண்ணப் போய்ப் பாத்துட்டு வரலாம்… “ என்று எழுந்தான் மதி ..

“சும்மா இருக்கிறியா மதி… “என்றான் ப்ரித்திஸ் எரிச்சலாக..

“இன்பா.. வெளியில எங்கேயும் போகாத.. எல்லாரும் அது இதுனு கேள்வி கேட்க ரெடியா இருப்பாங்க.. பேசாம இரு… நாளைக்கு ஹியூமன் ரைட்ஸ் கமிஷன் விசாரணைய அட்டென்ட் பண்ணு.. அவங்க ஏதாவது ஆக்சன் எடுத்துட்டாங்கனா... அப்புறமா எல்லாரும் அமைதியா ஆயிடுவாங்க.. அதுக்கப்புறம் நீ என்னவேனா பண்ணிக்கோ… “

“ தெரியும்டா… “என்றான் இன்பன் சலிப்பாக.

“ டேய், அந்தப் பொண்ணு “ என்று இழுத்தான் மதி.

“அவன் தான் இத்தன தடவ கால் பண்றான்ல.. கால் அட்டென்ட் பண்ண வேண்டியதுதானே… இந்த நாள் இப்படியே முடியட்டும்.. பேசாம இருங்க.. இதுக்கு மேல பிரச்சனை வேண்டாம்… மதி நாளைக்குப் போய் அனலிக்காவ பாரு… “என்றான் ப்ரித்திஸ்.

சரி என்று தலை அசைத்தனர் மதியும் இன்பனும்.. ஏனென்றால் ப்ரித்திஸ் குரலில் அவ்வளவு கண்டிப்பு இருந்தது.

இன்பன் யோசனையுடன் இருப்பதைக் கண்டு “ஏன்டா.. ரொம்ப அடிபட்டு இருக்கா..” என்றான் ப்ரித்திஸ்.

“கைலயும் தலையையும் கட்டுப் போட்டு இருக்கு.. மத்தபடி என்ன நடந்திச்சினு அவ சொன்னா தான தெரியும்.. இப்போ கூட கிருஷ்ணன் கிட்ட போன் பண்ணிக் கேட்டேன்.. காலைல கம்ப்ளைன்ட் கொடுத்துட்டு, இப்ப ஹாஸ்பிட்டல் வந்தானு சொன்னாரு.. பார்ப்போம்… “என்றான் இன்பன் முடிந்த அளவு கவலை துடைத்து சாதரணமாகப்பட்ட குரலில்.

“ஒழுங்கா நேத்தே கூட இருந்து பார்த்திருக்கலாம்.. தேவையில்லாம அழகேசனுக்குப் போயி அவ்வளவு பயந்து … ”என்றான் மதி.

“அவன் செஞ்சது கரெக்டுதான்.. இன்னைக்கு கேச நாம சொல்ற ஆங்கில்ல இருந்து பார்க்கிறாங்க.. ஆனா நேத்து அப்படி பார்த்திருக்க மாட்டாங்க… ”என்றான் ப்ரித்திஸ்.

“ நல்லா சொல்லு..நேத்து அவ்வளவு பிரச்சனைக்கும் காரணம்... இவன்… ” என்று மதியைப் கை காட்டினான் இன்பன்.

“சும்மா இருடா… அவன் இப்பதான் பழைய மாதிரி இருக்கான்.. மதி நீ போன் பண்ணா அந்தப் பொண்ணு எடுக்குமா.. “

“ இப்போ எப்படினு தெரியலடா..”

“ சரி எடுத்தா.. நீ பேசிப் பாரு. நானும் பேசிப் பார்க்கிறேன்..”

“ யார் பேசினாலும் என்னோட கால அட்டென்ட் மட்டும் பண்ணச் சொல்லுங்க.. “ என்றான் இன்பன் கெஞ்சலாக...

சிறிது நேரம் இடைவெளி விட்டு

“கூடவே இருந்து அவன இவ்வளவு வேலை பார்க்க வச்சிருக்க… “ என்றான் மதியைப் பார்த்து ப்ரித்திஸ்.

“ நீ விட்டுட்டுப் போய் பார்க்க வச்ச.. ” என்றான் மதி உடனடியாக.

அனலிக்காவின் மனநிலையும் உடல் நிலையும் எப்படி இருக்கிறதோ என்ற பரிதவிப்பில் இருந்த ஆரின்பனும் … நாளை ஹியூமன் ரைட்ஸ் முன்னாடி இவன் நிற்கும் போது என்ன விதமான எதிர்வினைகள் இருக்கும் என்று தெரியாமல் படபடத்த இளமதியும் ப்ரித்திஸூம் தத்தம் மனநிலையை மறந்து கொஞ்சம் சிரித்தனர்.

(தொடரும் )
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top