• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

மிதக்கும் ஆயுதங்கள் - - அத்தியாயம் 22

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Kathambari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Feb 1, 2019
Messages
6,457
Reaction score
21,474
Location
Mumbai
மனித உரிமை ஆணையம்


ஆரின்பன் மனித உரிமை ஆணையத்திற்கு வந்து இருந்தான். அங்கு அவனுக்கு முன்பே இந்த வழக்கில் சம்பந்தப்பட்டிருந்த அழகேசன், முரளி, தேவன் மற்றும் ஆனந்தி வந்திருந்தனர். அவன் வருவதை பார்த்தவுடன் அழகேசன் முரளி தேவன் இவர்கள் பேச ஆரம்பித்தனர்…. ஆனந்தி ஒதுங்கிக் கொண்டார்..

“முரளி அண்ணே.. இவனுக்கு எல்லாம் தெரிஞ்சும்.. அன்னைக்கு எங்கூட சேர்ந்து கார்ல ஏதாவது கிடைக்குமான்னு தேடுனா பாரு… யப்பா, இதுல என்னைய வேற பக்கத்துல தடயம் இருக்கானு பாருனு சொன்னான்… “ இது தேவன்.

“நீ வேற.. ஒரு நாள் புல்லா ஒரு கார் காரனோட சேர்ந்து மல்லுக்கட்ட வச்சிருக்கான் என்னய… “ இது முரளி.

“ரொம்ப் பேசாதீங்கப்பா…அவங்க ஒரு டீமா, அமைச்சரோட சேர்ந்து இந்த மாதிரி பண்றாங்க.. “ அழகேசன்.

“ ஏண்ணே.. உனக்குப் பயமா.. “

அழகேசன் பதில் சொல்லவில்லை.

“வரட்டும்… நல்லா கேள்வி கேட்கனும்… “ என்றார் முரளி.

“கண்டிப்பா … “ - தேவன்

இவர்கள் என்ன பேசுவார்கள் என்று ஆரின்பனுக்குத் தெரியும். ஆனால் எப்படி இவர்களை கடந்து செல்வது என்று யோசனையுடன் நகத்தைக் கடித்தபடியே வந்து கொண்டிருந்தான். கடைசியில் ‘அவங்க பேசுறதுக்கு முன்னாடி நாம பேசனும்’ என்று நினைத்து அவர்கள் அருகில் வந்தான்.

அவர்கள் பக்கத்தில் வந்த இன்பன், முதலில் அழகேசனைப் பார்த்துச் சிரித்தான். அவர் மனதில் ‘ பர்ஸ்ட் நானா ’ என்ற எண்ணம் ஓடிக்கொண்டிருந்தது.

“நல்லா இருக்கீங்களா அழகேசன்.. “

“நல்லா இருக்கேன் சார்.. இதெல்லாம் உங்க பிளான்னு தெரியாது சார்.. நீங்க அன்னைக்கு அந்த பொண்ணு சூசைட் பண்ணப்பவே வந்தீங்க இல்லையா.. அப்பவே ப்ளான் ஸ்டார்டா சார் .. “

அவன் மனதில் ‘ நீங்க அங்கருந்தே ஆரம்பிக்கிறீங்களா… இதுவும் சரிதான் ’ என்று நினைத்தவன் “ஆமா அழகேசன்… “ என்றான்.

அவர் அமைதியாகி விட்டார்.

“முந்தாநாள் அவ்வளவு கேள்வி கேட்டீங்க.. இன்னைக்கு அமைதியா இருக்கீங்க.. “

“அப்ப நிறைய சந்தேகம் இருந்திச்சு சார்.. அதான்.. “

“இப்போ… “

“அதான் கமிஷனர், தெளிவா சொல்லிட்டார்ல சார்.. புரிஞ்சிடுச்சு.. “

‘அது போதும்’ என்ற மனதில் நினைத்துக்கொண்டான்.

அடுத்த முரளி, தேவன் இருவரையும் பார்த்தான்.

“என்ன முரளி.. கேஸெல்லாம் எப்படி போய்கிட்டு இருக்கு… “

“எந்தக் கேஸ் சார்.. “என்றார் முரளி புரியாமல்.

“அதான்… அந்தக் கார் மிஸ்ஸிங்.. கண்டுபிடிச்சிட்டீங்களா ஆள் யாருன்னு… “

“அன்னைக்கு நீங்க அதுக்கும் கொலைக்கும் சம்பந்தம்னு சொன்னீங்க…இப்ப நீங்கதான கொலை… “என்று இழுத்தார் முரளி.

“அது உங்கள டைவர்ட் பண்றதுக்காக செஞ்சது.. இது சாதாரண திருட்டுக் கேஸ்..அதனால என்ன பண்றீங்க.. நல்லா விசாரிச்சி, அந்தக் காரை யார் எடுத்துட்டுப் போனானு கண்டுபிடிக்கனும்..சரியா “

“சரி சார்.. “என்றார் முரளி வேறு வழியில்லாமல்.

அதை முடித்தவுடன் அடுத்து தேவனைப் பார்த்தான்.

“சார், அந்த மாதிரிக் கேஸ், என் ஏரியாவல ரிஜிஸ்டர் ஆகவே இல்ல… “ என்று முந்திக் கொண்டார் தேவன்.

‘தெளிவு’ என்று நினைத்துக் கொண்டே, அவர்களை கடந்துச் சென்று விட்டான்.

அவனது பின்னே ஆனந்தி “சார்.. சார்.. “ வேகமாக வந்தார்.

திரும்பிப் பார்த்தவன் “ஸாரி ஆனந்தி.. இந்தக் கேசுக்காக நீங்க நிறைய வேல பாத்தீங்க.. ஆனா என்னால உண்மையை சொல்ல முடியாத நிலைமை… “

“பரவால்ல சார்… இது உங்க ப்ளான்னு தெரியாதுல.. ஆனா சூப்பர் சார்.. இனிமே இந்த மாதிரி பண்ணும்போது நானும் ஹெல்ப் பண்றேன் சார்… “என்று ஒரு விண்ணப்பம் வைத்தார்.

“சரி “ என்று சிரித்து கொண்டே சென்று விட்டான்.

‘டீம்ல ஆளுங்க அதிகமாகிறத பார்த்தா.. பிரைவேட்டா போலீஸ் ஸ்டேஷனே நடத்தனும் போல’ என்று நினைத்துக்கொண்டே விசாரணை நடக்கும் அறைக்குள் சென்றான்.

நான்கு பேர் கொண்ட குழு அங்கே இருந்தது. அவர்கள் அனைவரும் அமர்ந்திருந்த இடத்திற்கு முன்னே சென்று, அவனுக்காகப் போடப்பட்ட இருக்கையில் அமர்ந்தான் ஆரின்பன்.

அடுத்த நொடியே அவனுக்கு கைப்பேசியின் அழைப்பு வந்தது. அழைப்பை ஏற்று அவன் பேச ஆரம்பிக்கும் போது…

“ஆரின்பன் விசாரணைக்காக வந்திருக்கீங்க… போனெல்லாம் பேசக்கூடாது….இது கூடத் தெரியாதா “ என்றார் குழுவில் இருந்த ஒருவர் அதிகாரமாக.

அவரிடம் “சாரி சார் “என்றவன்,

கைப்பேசியில் “ சார், நான் பேசக்கூடாதாம்… “என்று அழைப்பைத் துண்டித்தான்.

சிறிது நேரத்திலேயே அந்த நால்வர் குழுவில் ஒருவருக்கு அழைப்பு வந்தது. அவர் இன்பனைப் பார்த்தார்.

“சார்.. உங்கள மாதிரி நான் சொல்ல மாட்டேன்… “என்றான் இன்பன்.

அவர் புரிபடாமல் ‘என்னய்யா சொல்றான்..’ என்பது போல் அருகில் இருப்பவரைப் பார்த்தார்.

“உங்கள போன எடுத்துப் பேசச் சொல்றான் சார்.. “என்றார் காதிற்குள் ரகசியமாக அருகில் இருந்தவர்.

பின் சற்று நகர்ந்து சென்று அழைப்பை ஏற்று பேச ஆரம்பித்தார்.. பேசிக் கொண்டே இருந்தார்.. யார் யாரோ பேசினார்கள்.. ஒருவழியாக அழைப்பைத் துண்டித்தவுடன்.. தன் குழுவில் உள்ள மற்ற மூவரையும் அழைத்துப் பேச ஆரம்பித்தார்…

“என்ன சார்.. என்ன விஷயம்..” என்றார் நபர் 3.

“வேறென்ன.. மேல இருந்து பிரஷர் வருது… “ -- நபர் 1

“யாரு சார் .. “ - - நபர் 2

“யார் யாரோ பேசுறானுங்கய்யா… “ - - நபர் 1

பின் அனைவரும் திரும்பி அவனைப் பார்த்தனர்.

“இங்க என்ன நடக்கப் போகுதுன்னு தெரிஞ்சிட்டு வந்து… தெரியாத மாதிரியே உட்கார்ந்து இருக்கான் பாரு .. “ -- நபர் 1

“பாத்தா அப்படித் தெரில சார்.. “ - - நபர் 4

“என்ன சொன்னாங்க சார்… “ - - நபர் 3

“ மூனு மாசம்தான் சஸ்பெண்ட் ஆர்டர் கொடுக்கனும்னு சொல்றாங்க .. “ - - நபர் 1

“ இதெல்லாம் ரொம்ப அராஜகம் சார்...”-- நபர் 4.

“சார் ஒரு நிமிஷம்.. நேத்து எல்லாரும் ரொம்பத் திட்டிக்கிட்டு இருந்தாங்க.. இவன் செஞ்சது தப்பு அப்படின்னு இப்படின்னு.. ஆனா இன்னைக்குப் பாருங்க பாதி பேரு, இப்படி எல்லாம் பண்ணாதான் இவனுங்கள திருத்த முடியும்னு சொல்ல ஆரம்பிச்சு இருக்காங்க…” - - நபர் 2

“என்னய்யா சொல்ல வர… “ - - நபர் 1…

“சார்.. அவர் சொல்றது கரெக்ட்… இந்த நேரத்துல நாம போய் பெரிசா ஏதாச்சும் பண்ணா.. நமக்குத் தான் கெட்ட பேரு.. “ - - நபர் 4

“ஆமா சார்... பேசாம அவங்க தான் மூனு மாசம்னு சொல்றாங்கள.. கொடுத்துட்டு போவோம்...”-- நபர் 3

“சரி வாங்கப் போய் பேசிக்கலாம்.. “ என்று நபர் 1 மற்ற நபர்களை அழைத்து வந்து அவன் முன் அமர்ந்தது.

“அப்புறம் ஆரின்பன்… உங்களுக்கு இங்க என்ன நடக்கப்போகுதுனு தெரியாது அப்படித்தானே… “ - - நபர் 1

“ ஆமா சார், ஒரே பதட்டமா இருக்கு… “

கேட்டதே தப்பு என்று நினைத்து…

“ஆரின்பன், உங்கள மூனு மாசம் சஸ்பென்ட் பண்ணச் சொல்லி, உங்க டிபார்ட்மெண்டுக்கு சொல்லப் போறோம்… “ - - நபர் 1

“ மூனு மாசமா… “என்று அதிர்ந்தான்.

“என்ன அதிர்ச்சியா.. உங்களுக்கே இது ஓவரா தெரியல.. பேசாம கையெழுத்துப் போட்டுட்டுக் கெளம்புங்க… “ - - நபர் 1

அவன் அவர்கள் கொடுத்த தாள்களில் எல்லாம் கையெழுத்துப் போட்டுக் கொண்டிருந்தான்.

“ஏன் ஆரின்பன்… இதெல்லாம் உங்களுக்குத் தப்புன்னு தோணலையா.. “ நபர் 1-அவரால் பொறுக்க முடியவில்லை …

“எது சார்.. கையெழுத்து போடறதா.. இந்த மாதிரி தான் எப்பவும் போடுவேன்.. “

“நான் சொல்றது உங்களுக்கு புரியல…இத நான் நம்பனும்.. “நபர் 1

“சார்… நானே மூனு மாசம் அப்படின்னு, மன வருத்தத்தில இருக்கேன்.. நீங்க என்ன பேசுறீங்கனே புரியல சார்… “

நபர் 2 நபர் 1 பார்த்துக் குனிந்து “அவன் தான் பேசாம கையெழுத்துப் போட்றான்ல.. விடுங்க சார்.. “ என்றது மறுபடியும் காதிற்குள்.

எல்லாம் முடிந்த பின் வெளியே வந்தவன் ஒரு நிமிடம் கண்மூடி நின்றான்.
 




Kathambari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Feb 1, 2019
Messages
6,457
Reaction score
21,474
Location
Mumbai
அருவி மருத்துவமனை

ப்ரித்திஸ் சொன்னபடி அனலிக்காவை பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு வந்திருந்தான் இளமதி. அவளுக்கு சிறிதளவு உடல் தேறி இருந்தது, இது சம்பவம் நடந்த மூன்றாவது நாள் என்பதால்.

முதலில் இளமதி கிருஷ்ணனுடைய அறைக்குச் சென்றான்.

“ வாங்க சார்.. உங்க ப்ரண்ட் பயங்கர வேலையெல்லாம் பாத்திருக்காரு.. “ என்று கிருஷ்ணன் கேட்டான்.

மதி சிரித்துவைத்தான்.

“அவ ரொம்ப டிஸ்டர்பா தான் இருக்கா.. டேப்ளட் சரியா எடுக்கிறதுல.. பேசன்ட் யாரையும் பார்க்க மாட்டேன்னு சொல்றா… சரி வீட்ல போய் ரெஸ்ட் எடுனு சொன்னா.. போக மாட்டேங்கிறா… “என்று அடுக்கினான் கிருஷ்.

“சரி .. நான் போய் பார்க்கிறேன்.. “ என்று சொன்னவன், நேராக அனலிக்காவின் அறைக்குச் சென்றான்.

அறையின் உள்ளே அமைதியாக உட்கார்ந்திருந்தாள்.

“எப்படி இருக்கீங்க டாக்டர்… “என்று அவள் முன்னே அமர்ந்தான் மதி .

அவள் எதுவும் பதில் சொல்லவில்லை.

“கிருஷ் சொன்னாரு, நீ பேசன்ட் யாரையும் பார்க்கலைன்னு.. வீட்டுக்கு வர்றியா, எழில் கூட பேசிகிட்டு இருக்கலாம்… “ என்றான்.

வேண்டாம் என்று சொல்வாள் என்று நினைத்தான். ஆனால் அவள் உடனே சரி என்று சொல்லிக் கிளம்பிவிட்டாள். அவனுக்கே அது ஆச்சரியமாகத்தான் இருந்தது.

இளமதியின் வீடு

வீட்டில் உள்ளே நுழைந்தவுடன் எழில் அவர்கள் இருவரையும் வரவேற்றாள்.

“ம்ம்ம்.. இப்ப எப்படி இருக்கு டாக்டர் … “ என்றாள் எழில்.

அனலிக்கா தலையை மட்டும் ஆட்டினாள்.

“போ… போய் பிரஷ் அப் பண்ணிட்டு வா… நான் ஏதாவது சாப்பிட செய்றேன்.. “என்று சொன்னான் மதி.

சரி என்று அவளும் போனாள்.

அவன் சமையல் அறைக்குள் நுழையும் போதே, திரும்பியும் அழைப்பு மணியின் ஓசை கேட்டது. போய் திறந்து பார்த்தால் ஆரின்பன் நின்றிருந்தான்.

உள்ளே வந்தவன் சோபாவில் வந்து உட்கார்ந்தான். முகத்தை இரு கைகளாலும் மூடியவாரே “நானும் எவ்வளவோ பேர அடிச்சிருக்கேன்… ஆனா இப்படி எதுவுமே செய்யாம.. அதுக்குப் போயி.. “என்று கரங்களை விலக்கினான் .

அப்பொழுது மதி இன்பனை பார்க்கவில்லை. அவன் பின்புறமே பார்த்திருந்தான். இன்பனும் திரும்பி பின்புறம் பார்த்தாள். அங்கே அனலிக்கா நின்றிருந்தாள்.

அவள் எதுவும் பேசவில்லை, மதியிடம் மட்டும் “நான் கிளம்புறேன் மதி… “என்று சொன்னாள்.

ஆனால் இதற்கு மேல் விடக்கூடாது என்று எழுந்தான் இன்பன். அவளைத் தடுத்தான்.

“உக்காரு பேசலாம்.. “ என்றான்.

அவள் எதுவும் பதில் கூறாமல், மௌனத்தை உடுத்திக் கொண்டாள்.

“ அனலி ப்ளீஸ்… . “என்று கையைப் பிடித்தான்.

“இந்தப் பேரச் சொல்லிக் கூப்பிட வேண்டாம்…“என்று கத்தினாள்.

“ஏன் சொல்லக் கூடாது.. அன்னைக்கு மதிக்கிட்டயும் இப்படித்தான சொன்ன… எதுக்கு … போன்லதான பேசமாட்ட.. நேர பேச வேண்டியதுதானே.. “

பொறுமை போனது இன்பனுக்கு..

“நான் ஒன்னு சொல்லட்டா.. உன்னப் பத்தி நீ சொல்றதுக்கு முன்னாடியே, இதே வீட்ல வச்சு உன்ன நான் அனலி னு கூப்பிட்டிருக்கேன்… “ என்றான் விடாமல்.

அவள் புரியாமல் விழித்தாள்.

“அன்னைக்கு நீயும் மதியும் ப்ளான் பண்ணீங்கள.. “

அவள் யோசிக்க ஆரம்பித்தாள்.

இதற்கிடையில் இன்பன் கைப்பேசி கதறியது.

“நல்லா யோசி… எது நல்லதோ அதெல்லாம் கேக்கிறதே இல்ல.. எப்ப பார்த்தாலும் என்ன தப்பா பேசுறோம்னு மட்டும் கேட்டா இப்படித்தான் இருக்கும்.. கிளம்பு உன்னெல்லாம் சமாதான படுத்த முடியாது… போ.. “

“இது உன் வீடா ஆரின்பன்…” என்றான் மதி இடையே வந்து.

இன்பன் எதுவும் பேசாமல், சென்று அமர்ந்து விட்டான்.

“நான் கிளம்புறேன் மதி... “என்று அவள் கிளம்பினாள்.

அவளை அனுப்பி விட்டு உள்ளே வந்த மதி “ஏன்டா, நீ வேல முடிஞ்சா உன் வீட்டுக்கு போக மாட்டியா.. இங்க எதுக்கு வந்த … “என்றான்.

“வேல முடியல.. வேல போயிடுச்சு.. ஒரு மூனு மாசம் இத போடவே முடியாது.. “ என்றான் அவன் உடையைக் காட்டி.

அப்பொழுதுதான் இளமதியும் எழிலினியும் அவன் எங்கிருந்து வருகிறான் என்பதை உணர்ந்தனர். இதற்கிடையே இன்பன் கைப்பேசி கதறிக் கதறி ஓய்ந்தது.

“அதை எடுத்து பேசு.. அட்லீஸ்ட் யாருனாவது பாருடா… “என்றான் மதி எரிச்சலாக.

இன்பன் தன் கைப்பேசியை எடுத்து இளமதியிடம் காண்பித்தான். அழைப்பு அவன் தாயிடம் இருந்து வந்து கொண்டிருந்தது.

“பேசு இன்பா… அம்மா நியூஸ் பார்த்திருப்பாங்க… கவலையா இருப்பாங்க.. அதனாலதான் கால் பண்றாங்க.. “என்றாள் எழில்.

“ம் அப்படியா… இந்தா நீயே பேசு… “ என்று எழிலிடம் கொண்டு போய்க் கொடுத்தான் கைபேசியை.

அவள் தயங்கினாள்.

“பேசு… “ என்றான்.

அவளும் கைப்பேசி அழைப்பை ஏற்று பேச ஆரம்பித்தாள். அவளின் முகத்தில் பல மாற்றங்கள் வந்தன. அழைப்பைத் துண்டித்து விட்டவுடன் இன்பன் அவளிடம் கேட்டான்…

“என்ன சொன்னாங்க.. “

“அவங்க இன்னைக்கு நைட்டு வீட்டுக்கு வர்றாங்களாம்.. அக்காவையும் கூட்டிட்டு வர்றாங்களாம்.. பர்ஸ்ட் டைம் பேபியோட வர்றதுனால, வீட்டுல டெக்கரேட் பண்ணச் சொன்னாங்க…கெட்டுகெதர் மாதிரி வேற ..“

“இதுக்குதான் நான் அட்டென்ட் பண்ணாம இருந்தேன்.. நான் இருக்கிற நிலைமையில் இதெல்லாம் பண்ண முடியாது… “

“இப்ப என்ன செய்ய… “என்றாள் எழில்.

“போன் அட்டென்ட் பண்ணேல… நீயும் இவனும் போய் டெகரேட் பண்ணுங்க.. முடிச்சுட்டு கூப்பிடுங்க நான் வரேன்… மதி.. ப்ரித்தீஸ், மஹிமா சிஸ்டரையும் கூப்பிடு… “

“ அனலிக்காவ கூப்பிட வாடா…. “

“வேண்டாம் மதி.. இன்னைக்கு நைட்டே அவகிட்டப் பேசப்போறேன்.. இதுக்கு மேல முடியாது.. “

இளமதி இன்பனின் பக்கம் வந்து அமர்ந்தான். கிருஷ்ணன் மருத்துவமனையில் கூறியதைச் சொன்னான்.

“பாத்து பேசுடா.... அவ நீ பேசுனதெல்லாம் ஞாபகம் வச்சிருப்பா.. பதில் நல்லா யோசிச்சுக்கோ… “என்றான் மதி அக்கறையாக.

“நீ கிளம்பிறயா… “என்று முறைத்தான் இன்பன்.


ஆரின்பன் வீடு

அன்று இன்பன் வீடு, அளவான அலங்காரத்துடன் அழகாக இருந்தது. அம்மா.. அப்பா.. அக்கா.. அக்கா கணவர்.. அவர்களின் குழந்தைகள்.. மதி.. எழில்.. ப்ரித்திஸ்… மஹிமா என்று வீடு அவனின் நெருங்கிய உறவுகளால் சந்தோஷம் கொண்டது.

மதி, மஹிமா இன்பனின் தாய் தந்தையுடன் … - - சாப்பாடு மேசையில்

ப்ரித்திஸ், இன்பனின் அக்கா கணவருடன்… - - சோபாவில்

இன்பன் கைகளில் தன் மருமகளை ஏந்திக் கொண்டே.. அவன் அக்கா மற்றும் எழிலுடன் - - சமையலறையில்

இப்படி அனைவரும் பேசிக் கொண்டிருந்தனர்…

அழைப்பு மணியின் ஓசை கேட்டது..

இன்பனின் தாய்… “மஹிமா.. போய் யாருனு பாரு.. “என்றார்.

கதவைத் திறந்த மஹிமா… “ஹே… அனலிக்கா.. இவ்வளவு லேட்டா வர்ரீங்க… “ என்றாள்.

மற்றவருக்கு எப்படியோ தெரியவில்லை.. ஆனால் ஆரின்பன் அதிர்ச்சியுடன் நின்றான்…

அத்தனைப் பேரையும் ஒன்றாகப் பார்த்த அனலிக்காவின் கண்களில் வெறுமை குடி கொண்டது.

(தொடரும் )
 




deepa_srivi

மண்டலாதிபதி
Joined
Dec 18, 2018
Messages
164
Reaction score
264
Location
Srivilliputhur
At initial episodes, it didnt get my attention much.....the title attracted me very much after the explanation by analica some two/three episodes back.....i feel the story is moving in a very matured way because of these three young police officers.....Hope after completion, one single stretch read of the entire story is really worth......
 




Kathambari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Feb 1, 2019
Messages
6,457
Reaction score
21,474
Location
Mumbai
At initial episodes, it didnt get my attention much.....the title attracted me very much after the explanation by analica some two/three episodes back.....i feel the story is moving in a very matured way because of these three young police officers.....Hope after completion, one single stretch read of the entire story is really worth......
☺
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top