• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

மிதக்கும் ஆயுதங்கள் - அத்தியாயம் 3

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Kathambari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Feb 1, 2019
Messages
6,457
Reaction score
21,474
Location
Mumbai
அத்தியாயம் 3

கண்களில் கண்ணீருடன் கையைப் பிடித்து நின்று கொண்டிருப்பவளை லேசாகத் திரும்பிப் பார்த்தான். பின் அவள் கை அவன் கையை விட்டு விலகியது. அவளும் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.

“விட்டா, ஆம்புலன்ஸ் பின்னாடியே ஓடுவீங்களா” என்று கேட்டான்.

அதற்குள் அந்தப் பெரியவர் வந்து….

“சார், அவ கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுட்டா… அதனாலதான் இப்படி…. சாரி சார் “ என்றார்.

“வா…போலாம்” என்று உள்ளே அவளை அழைத்துச் சென்றார்.

“இன்பா, சரியான பயந்தாங்கொள்ளி போல “ என்றான் மதி.

“ஃபேமிலியே அப்படித்தான் சார்.. ஒரு கம்ப்ளைன்ட் கொடுக்க மாட்டேங்கிறாங்க…
ஃபார்மாலிட்டீஸ்க்கு ஸ்டேஷன் வரைக்கும் வரச் சொன்னா… வரமாட்டேன்னு சொல்றாரு” என்று சொல்லியபடியே அழகேசன் வந்தார்.

“இப்பவே வந்து ஃபார்மாலிட்டீஸ் எல்லாம் முடிக்கணும்னு சொல்லிடுங்க” என்றான் மதி.

சரி எனச் சொல்லித் திரும்பிச் சென்றவரை, அதுவரை அமைதியாக நின்ற இன்பன்..
“அழகேசன், காலைல வந்து கம்ப்ளைன்ட் கொடுப்பாங்க” என்றான்.

“சார் “

“அதான் சொல்றேன்ல”..

“சரி சார் “என்று இருவரிடமும் விடைபெற்றுச் சென்றார்.

“போலாமா மதி”

மதி சிரித்தான்.

“பசிக்கிதுடா...வீட்ல ஏதாவது சாப்பிட இருக்கா“ என்றான் அவன் சிரிப்பைக் காணாதவன் போல.

“இல்ல… ஆனா நான் செஞ்சு தாரேன்… இன்னும் கொஞ்ச நாளைக்குத்தான என் கையால சாப்பிடப்போற” என்று சொல்லிப் பைக்கில் ஏறினான் மதி.

“இன்பா…ஒன்னு சொல்லட்டா… “

ஆரின்பன் அவனது பைக்கில் ஏறியபடி என்ன என்பது போல் பார்த்தான்.

“மாமனார் வீட்ல கேட்டுப் பார்க்கிறியா “

“அடிங்… “ என மட்டியைக் கடித்துக்கொண்டு வண்டியிலிருந்து கால் ஊன்றி நின்றவனைப் பார்த்து சிரித்தவாறே இளமதி புறப்பட்டுச் சென்றான்.

கேகே நகர்….

அடுத்த நாள் காலை… கேகே நகர் வீட்டில்

“ஸ்டேஷன்ல இருந்து வரச் சொன்னாங்க” என்றார் அந்தப் பெண்ணின் தாத்தா.

அவள் அவரைப் பார்த்தாள்.

“நான் போல… நீயும் கூப்பிட்டா போகாத... ” என்றார்.

"இல்ல.." என்று ஏதோ ஆரம்பித்தாள்.

“போதும்மா…. நீ கவலப்படாத…தாத்தாவுக்கு வயசாயிருச்சி.. உன்ன யார் கைலயாவது புடிச்சுக் கொடுக்கனும்” என்று ஏதேதோ புலம்பிய படியே அழுதார்.

அவளும் கண்ணீர் மல்க நின்றாள். ஆறுதல் சொல்லலாம் என்று அருகில் வந்தவளைப் பார்த்து…

“நான் சொல்றத மட்டும் கேளும்மா ” என்று சொல்லி எழுந்துச் சென்று விட்டார்.

ஆணையர் அலுவலகம்.

இள வெயில் சூழ்ந்த மாலை நேரம்.

சுற்றும் முற்றும் பார்த்தபடி மெதுவாக வளாகத்தின் உள்ளே வந்தாள். அவளுக்கு யாரிடம் என்ன கேட்பது, எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. பயத்தில் உடலெங்கும் வியர்வைத் துளிகள் அரும்பியது.

“நீங்களா” என்ற குரலைக் கேட்டு பயந்தபடியேத் திரும்பினாள். அங்கே ஆரின்பன் நின்றான்.

“இங்கேயேன் வந்தீங்க.. உங்க ஏரியா ஸ்டேஷன்ல தான ஃபார்மாலிட்டீஸ் பண்ணனும் “

“அங்க போக பயமா இருக்கு… தனியா வேற போனும்… அதான் இங்கே வந்தேன்”

அவன் அவளின் பின்னே யாரவது இருக்காங்களா எனப் பார்த்தான்.

“என்ன “ என்றாள்.

“இல்ல, இங்கயும் தனியாதான வந்திருக்கீங்க”

“ஆமாங்க “

“பயமில்லயா”

அவள் சில வினாடிகள் யோசித்த பின் “இல்ல “ என்றாள் உறுதியாக.

மென் முறுவல் தந்து “சரி சரி.. வாங்க “என்றான்.

அவன் பின்னேயே நடந்தாள்.

“காலைல சீக்கிரமாகவே வந்திருக்கலாம்ல ஏன் லேட்டு”

“ ஹாஸ்பிட்டல்ல ஆபரேஷன் இருந்திச்சு… அத முடிச்சிட்டு வர்றதுக்கு லேட் ஆயிடுச்சு”

“ஓ.. ஏங்க.. கொஞ்சம் கூடயே நடந்து வர்ரீங்களா”

“ஏன் “

“பின்னாடி திரும்பிப் பார்த்துப் பேச கஷ்டமா இருக்கு “

சரியெனச் சொல்லி அவன் கூடயே நடந்தாள். ஆனால் அதற்கப்புறம் அவன் எதுவும் பேசவில்லை.

ஒரு அறையின் அருகே வந்து உள்ளே போங்க என்பது போல் கை காட்டினான். உள்ளே சென்றாள். அங்கு இளமதி அமர்ந்திருந்தான்.

“எக்ஸ்க்யூஸ் மீ சார் “என்றான் இன்பன்.

தலையை நிமிர்ந்து பார்த்த மதி, இவன் ஏன் இவளக் கூட்டிட்டு வந்திருக்கான் என்று நினைத்தான்.

இன்பனும் உள்ளே வந்து மேஜையின் மீது ஏறி அமர்ந்தான்.

“நீ ஏன் இங்க வந்த… ஏரியா போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் கம்ப்ளைன்ட் பண்ணு”என்றான் மதி அந்தப் பெண்ணைப் பார்த்து.

“எனக்கு அது சரியாத் தெரியாது சார்…. அதனால தான் இங்க வந்தேன்”

“நீ ஒன்னும் பண்ண வேண்டாம்… ஸ்டேஷனுக்குப் போ… அங்க அவங்க பார்த்துப்பாங்க”

அவள் சிறிது நேரம் முழித்துக் கொண்டிருந்தாள். பின் எழுந்து நடக்கத் தொடங்கும் போது,

“எதுக்கு இன்பன்.. “ என மதி பேசும்போது…

இடையிலே… “ஒரு நிமிஷம் இருங்க” என்றான் இன்பன். பின் வெளியே சென்று யாருக்கோ போன் பண்ணினான்.

“நான் அவங்ககிட்ட சொல்லிட்டேன்… நாளைக்கு ஸ்டேஷன் போக மட்டும் செய்ங்க.. போதும் “

அமைதியாக நின்றாள்.

“என்னங்க”

“தண்ணீ வேணும்…”

“இருங்க “என தண்ணீர் எடுக்கத் திரும்பினான் இன்பன் .

“டேய்.. பிடிடா… மயங்கி விழுப் போறா” என்று மதி கத்தினான்.

அதற்குள் அந்த இடத்திலேயே மயங்கிச் சரிந்தாள். இன்பன் அவளைத் தூக்கி ஒரு நாற்காலியில் அமரச் செய்தான். அவள் மயக்கத்திலே இருந்தாள்.

“மதி.. என்னடா இப்படி ஆயிருச்சு”

“இந்தததத மயக்கும்…. இந்தப்ப்ப் பொண்ணு.. அந்தததத ஸ்டேஷனில் போட்டிருக்க வேண்டியது… இங்க எதுக்கு கூட்டிட்டு வந்த”

“ நான் எங்க கூட்டிட்டு வந்தேன்… அவ தான் வந்தா “

“முதல எழுப்பி வெளியில போச்சொல்லு”

“மயக்கத்தில இருக்காடா… இப்போ எப்படி சொல்ல.. “

“என்னமோ பண்ணு… நான் கிளம்புறேன் “ என்று மதி கிளம்பி விட்டான்.

சிறிது நேரத்திற்குப் பிறகு மயக்கத்தில் இருந்து எழுந்தாள். அவள் முன் இன்பன் அமர்ந்திருந்தான். யாரும் இல்லையா என்பது போல் தலையை இருபுறமும் திருப்பிப் பார்த்தாள்.

“யாரும் இல்ல… ஆனா பயப்படாதீங்க.... நம்மளும் கிளம்பலாமா”

“அந்த ஸ்டேஷன்ல என்ன பண்ணனும்னு சொல்ல முடியுமா “

“அப்பவே சொன்னேன்ல.. இப்ப ஸ்டேஷன் போனாலும் நீங்க பார்க்க வேண்டியவங்க இருக்க மாட்டாங்க…அதனால வீட்டுக்குப் போங்க” என்று சொன்னான்.

இருவரும் வெளியே வந்தனர்.

“உங்க பேரு என்னங்க… “என்று அவன் பேச்சை ஆரம்பித்தான்.

“அனலிக்கா”...

“உங்க பேரு “

“ஆரின்பன்”

அவள் வாய்மூடிச் சிரித்தாள்.

“ஹலோ .. எதுக்குச் சிரிக்கிறீங்க”

“இல்ல… இந்தக் காலத்திலயும் இன்சியலோட பேரச் சொல்றீங்க.. அதான் “

இன்சியலா என யோசித்தான்.. “ஏங்க, ஆரின்பன் “

“ம்ம்.. R இன்பன் “ என அவள் பிரித்துக் கூறினாள்.

அவனுக்கு என்ன செய்ய என்று தெரியவில்லை.

“பென் இருக்காங்க “

இதோ என கைப்பையில் இருந்து பேனாவை எடுத்து நீட்டினாள்.

“கைய நீட்டுங்க “

எதுக்கு என்பது போல் யோசித்தாள்.

“அட.. நீட்டுங்க”

நீட்டினாள். அவள் உள்ளங்கையில் அவன் பேரை ‘ஆரின்பன்‘ என எழுதினான்.

பார்த்தவுடன் “ஸ்ஸ்.. ஸாரிங்க.. உங்கள, உள்ள இருந்த போலிஸ் இன்பன்னு கூப்பிட்டாறா.. அதான்.. ஸாரி “

“ம்ம்ம்.. பரவால்லீங்க.. எப்படி வீட்டுக்குப் போறீங்க.. “

“கார்ல”

“ஓஓ.. கார்லாம் ஓட்டத் தெரியுமா “

“ம்ம்ம், தாத்தாதான் சொல்லிக் கொடுத்தாரு”

“அவரு உங்க தாத்தாவா”

அவள் ஆமாம் என்பது போல் புன்னகையைப் பதிலாக தந்தாள்.

“ம்ம்... இப்பதான மயக்கம் போட்டீங்க.. ஸோ நீங்க டிரைவ் பண்ண வேண்டாம்… நானே என் ஜீப்ல டிராப் பண்றேன் “

அவள் யோசித்தாள்.

“என்ன யோசிக்கிறீங்க “

“போலிஸ் ஜீப்னா பயம்”

இது வேறயா என்று நினைத்தபடி”சரி உங்க கார்ல டிராப் பண்றேன் “

தலையை நன்றாக ஆட்டினாள்.
 




Kathambari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Feb 1, 2019
Messages
6,457
Reaction score
21,474
Location
Mumbai
கேகே நகர்

அவள் வீட்டின் முன் காரை நிறுத்தினான். அவள் இறங்கிய பின்னும் அவன் இறங்கவில்லை. காரின் சன்னல் கண்ணாடியை இறக்கினான்.

“ஏங்க.. எனக்கு ஆட்டோல போய் பழக்கம் இல்ல.. நான் உங்க கார்ல வீட்டுக்குப் போறேன்.. நாளைக்குக் காலையில் என் வீட்டுக்கு வந்து நீங்க கார எடுத்துக்கோங்க.. இல்லைன்னா நானே ஹாஸ்பிட்ல்ல வந்து காரைத் தரேன்”

“ம்ம்ம் “

அவன் புறப்பட தயாராகும் போது.. “ஒரு நிமிஷம்.. அட்ரஸ் சொல்லுங்க “என்றாள்.

“ஆங்.. இதோ வரேன் “ என்று இறங்கி வந்தான்.

“மறுபடியும் பென் தாரீங்களா“

இந்த முறை பேனாவை எடுத்து நீட்டியவள், அவள் கையையும் சேர்த்து நீட்டினாள்.

“தெளிவு… “

அவன் எழுதினான்.. எழுதி முடித்தவுடன் படித்துப் பார்த்தாள்.

“என்னங்க அட்ரஸ் எழுதனும்னு சொல்லிட்டு.. நம்பர் தந்திருக்கீங்க”

“தினமும் கையில எழுதி எழுதி அளிக்க முடியுமா…அதனால இதுல எழுதுறேன்” என்றான் இலக்கங்களைக் காட்டி.

“ம்ம்ம் “

இருவரும் அடுத்த நாள் சந்திப்பை உறுதி படுத்திக் கொண்டு விடைபெற்றனர் .

அனலிக்கா உள்ளே நுழையும்போது அவள் தாத்தாவின் பார்வையைச் சந்திக்க முடியவில்லை. எதுவும் பேசாமல் அவளது அறைக்குச் சென்று விட்டாள்.

அவளது காரிலேயே அவனும் வீட்டுக்குச் சென்று விட்டான்.

அடுத்த நாள் காலை..
ஆரின்பன் இல்லம்..


மொட மொட என்று இருந்த காட்டன் புடவையில், கையில் வெள்ளைக் கோட்டுடன், தோளில் ஒரு சிறிய சணல் பையைத் தொங்கவிட்டபடி… அவனது வீட்டின் அழைப்பு மணியை அழுத்தினாள்.

கதவு திறக்கப்பட்டது.

“வாங்க”

உள்ளே வந்தவள், தயங்கியபடியே “அம்மா .. அப்பா.. எங்க” என இழுத்தாள்.

“அவங்க, அக்கா வீட்ல இருக்காங்க “

“ஆனாலும்… வீடு ரொம்ப நீட்டா இருக்கு”

“ஏங்க.. ரெண்டு நாளைக்கு முன்னாடி தான் போனாங்க.. அதான் இப்படி ”என அவன் சமையலறையிலிருந்து தட்டில் காலை உணவை எடுத்துக் கொண்டு வந்தான்.

“ சாப்பிடுறீங்களா…”

“இல்ல.. நான் சாப்பிட்டேன்… நீங்க சாப்பிடுங்க “

“காஃபியாவது குடிக்கிறீங்களா”

“ நீங்க சாப்பிடுங்க.. நான் காஃபி போட்டுத்தரேன் “என்றபடி சமையலறைப் புகுந்தாள்.

காய்ச்சியப் பாலை, அந்த அழகான வெள்ளையில் பச்சை வண்ண இலைகள் படமாக வரையப்பட்ட கோப்பையில் ஊற்றி, இருவருக்கும் காஃபி கலந்தாள்.

மேஜையில் சாப்பிட்டுக் கொண்டே அவன் பார்த்துக் கொண்டிருந்தான் அவளை, “பின்னொரு நாளுக்கான ஒத்திகையா” என்ற எண்ணத்தில்.

அவளும் அவ்வப்போது அவன்புறமாகப் பார்வையை வீசினாள். காஃபிக் கோப்பையை எடுத்துக் கொண்டு வந்து அவனிடம் தந்தாள். இருவரும் வார்த்தைகளைத் துப்பி நேரத்தை விழுங்கிக்கொண்டிருந்தனர்.

“கிளம்புவோமா” என்றான் கைக்கடிகாரத்தைப் பார்த்தவாறு.

“ம்” என கோப்பைகளை எடுத்து சிங்கிள் போட்டு விட்டு , தன் கைப்பையை எடுத்துக் கொண்டாள்.

“நீங்க வரும்போது… எப்படி வந்தீங்க”

“ ஆட்டோல”

“ தாத்தா ஒன்னும் சொல்லயா”

“ அவர் இப்போ எதையும் கவனிக்கிற நிலைமையில இல்ல”

“ சாரி “

பின் இருவரும் அப்பார்ட்மென்டில் இருந்து கீழே இறங்கி வந்து காரினுள் அமர்ந்தனர். அவளே காரை ஓட்டினாள். கார் அவளைச் சுமக்க, அவள் அவனைச் சுமந்தபடியேக் காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு வந்தனர்.

இறக்கிவிட்டவுடன் “இன்னொரு ரெண்டு நாள்ல அட்டாப்ஸி ரிப்போர்ட் வந்ததும் ஸ்டேஷன்ல போய் வாங்கிக்கோங்க “என்று சொன்னான்.

மௌனமாகத் தலையசைத்தபடி சென்றுவிட்டாள்.

ஆணையர் அலுவலக அறை

ஆரின்பன் அறைக்குள் நுழைந்தவுடன்…
மதி ஆரம்பித்தான்.

“ப்ரித்திஸூ புது கேப் சர்வீஸ் ஆரம்பிச்சு இருக்காங்க தெரியுமா “

“எங்கடா “

“ நம்ம கேம்பஸ்ல தான் ”

“ அப்படியா”

“சாயங்காலம் பிக்கப் பண்ணுவாங்களாம்… காலையில் டிராப் பண்ணுவாங்களாம்… சூப்பர்ல “

மேஜையில் இருந்த கோப்புகளைப் பார்த்துக் கொண்டிருந்த இன்பன் “அடி வாங்கப் போறீங்க” என்றான் கருப்பசாமியை முறைத்துப் பார்த்தபடி

“சார்.. அவங்க தான் சார் கேட்டாங்க.. ஜீப் உள்ள இருக்கு, நீங்க நேத்து சாயங்காலம் எப்படி போனீங்கனு… அதான் சொன்னேன் “

போதும் என்றபடி கையை தூக்கி காட்டினான் இன்பன்.

“அஸிஸ்ட்டு, என்ன சொல்லுது அனலிக்கா “

“மதி, இது என்ன பேரு.. லகலகனு“

“கூப்பிடப் போரவனே சும்மா இருக்கான்.. உனக்கு என்னடா”

“ கரெக்ட்டு “என்றான் ப்ரித்திஸ்.

சட்டென்று கோப்புகளை மூடிய இன்பன் .. மதியின் முன் வந்து.. ஒரு கையை இடுப்பில் வைத்து… மற்றொருக் கையால் நெற்றியைத் தேய்த்தபடி..

“பாருங்க, நேத்து அந்தப் பொண்ணு மயங்கிட்டா… ஸோ, அவ கார்ல போயி வீட்டுல விட்டேன்… அவ்வளவுதான் “

“ கரெக்டுதான்… பொண்ண ட்ராப் பண்ணிட்டு.. கார அவ வீட்ல விட்டுட்டு வராம.. ஏண்டா உன் வீட்டுக்கு எடுத்துட்டுப் போன“

“ மதி, இதே கேள்விதான் எனக்கும் தோணுச்சு “ என்றான் இன்பன்.

மதியும், ப்ரித்திஸூம் அவன் ஒரு பதில் சொல்லப்போகிறான் என அவனையே பார்த்தனர்.

சிறிது இடைவெளி விட்டு..

“ பதில் தெரிஞ்சா சொல்றேன்” என்றான் இன்பன்.

கொஞ்சம் சீரியஸான மனநிலைக்கு மாறினான் ப்ரித்திஸ்.

“இன்பா, அமைச்சர் போன் பண்ணாரா “

“ம்ம்.. இன்னைக்கு காலைல போன் பண்ணிப் பேசுனாரு. மூனு நாலு கேஸ் இருக்குதாம்… இந்த வாரத்ல முடிக்கச் சொன்னாரு” என்றான் இன்பன்.

“டேய், அவர் உன்ன வெச்சு ஏதோ பெருசா ப்ளான் பண்றாரு… உஷாரா இருந்துக்கோ “என்றான் மதி.

அது இன்பனின் செவிக்குள் சென்றதோ.. இல்லையோ…

(தொடரும் )
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top