மித்ரமதி கார்த்திக் ஹரிகிரிஷ்ணா வின் எச்சரிக்கை!!!

#1
நான் தான் மித்ரமதி. நான் தான் மித்ரமதி கார்த்திக் ஹரிகிருஷ்ணா. கார்த்திக் ஹரிகிருஷ்ணாவுக்கு பல புதிய அடைமொழியோடு பெயர் தேர்ந்து எடுக்கும் நல்லுள்ளங்களுக்கு, என் வணக்கம்.

அமாம் நீங்க எல்லோரும் இத்தனை நாளா எங்க போய் இருந்தீங்க? புதுசா நான் கார்த்திக் ஹரிகிருஷ்ணாவை விட்டுட்டு போன பின்னால எல்லோரும் வரிஞ்சு கட்டிட்டு அவனை கெட்டவன்னு திட்டுறீங்க? எனக்கு இன்னைக்கி தான் கார்த்திக் ஹரிகிருஷ்ணாவோட இந்த முகம் தெரியும். ஆனா, உங்க எல்லோருக்கும் அவனோட இந்த முகம் முன்னவே தெரியும் தானே? அப்போ ஏன் பேரு வைக்கலை?

அதோட எனக்கு கார்த்திக் தான் தன்னை பத்தி தன் கடந்த கால கசடு பத்தி சொன்னான். வேற யாரும் சொல்லலை. இது எனக்கும் கிருஷ்ணாவிற்கும் இடையில் நடக்கும் வாழ்க்கை போராட்டம். நானும் கிருஷ்ணாவும் வளர்ந்த நாடுகளின் சூழலில், கிருஷ்ணாவின் திருமணத்திற்கு முன் இருந்த வாழ்க்கையை எனக்கு மறைத்ததும், என்னை திருமணம் செய்ததிற்கான முக்கிய நோக்கமும், காதலிக்காமல் காதலித்து கல்யாணம் செய்ததாக சொன்ன வேறுபாடும், தான் எனக்கான கோபமுமே தவிர வேறேதும் கிடையாது.

ஆண்களுக்கு பெண்களின் உணர்வுகள் அவ்வளவு எளிதில் புரிவதில்லை. ஏன் பத்மா அத்தை கூட முதலில் கோபப்பட்டு பின்பு அந்த பொண்ணு பாவம் என்ன செய்யும்னு வறுத்தப்பட்டாங்க. ஆனால் கார்த்திக் கடைசிவரை அண்ணனா மட்டும் தான் யோசிச்சான். அது தான் இங்கே அத்தனை பிழைகளின் காரணி.

நீங்க கேட்க்கலாம் இவ்ளோ பேசுற நீ ஏன் கிருஷ்ணாவை விட்டு போனனு. அது கிருஷ்ணாவிற்கு என்னை பத்தி புரியனும். பத்மா தேவ் தம்பதிக்கு அவங்க தப்பு புரியனும். கிருஷ்ணாவிற்கு அவன் என் மேல் கொண்ட காதலும், அவன் சொன்ன காரணங்களின் ஓட்டைகளின் அளவும் புரியனும். என் கோபம் குறைய எனக்கும் தனிமை வேணும். அதான். இதுக்கு மேல அழகியின் கைகளில் மித்ரமதி கார்த்திக் ஹரிகிருஷ்ணாவின் வாழ்க்கை. அழகி பதமா பக்குவமா பார்த்து பண்ணுங்கமா.
 
Last edited:

Sponsored

Latest Episodes

Advertisements

Top