மின்மினியின் ஆசைகள் - முகமறியாத நண்பனின் ரிவ்யூ

sandhiya sri

SM Exclusive
Author
SM Exclusive Author
#1
இந்த ரிவ்யூ எழுதியவரின் பெயர் எனக்கு தெரியவில்லை. அவரும் அகிலா கண்ணன் அக்காவின் கதை என்று குறிப்பிட்டு எழுதியிருப்பார். தலைப்பு வைத்துதான் என்னுடைய கதை என்று கண்டுபிடிக்க முடிந்தது. அவருக்கும் என் நன்றிகள்

வணக்கம் எழுத்தாளர் , நலமா ?? தங்களுடைய குடும்பத்தினர் அனைவரும் நலமா ?? இன்று தான் பொழுது போகவில்லை என்று தங்களுடைய முன்னாள் smnovels sight சென்றேன் .. கதையை படிக்கலாம் என்று , அதில் அகிலா கண்ணன் அவர்களின் மின்மினியின் ஆசைகள் கதையை படித்தேன் . மிகவும் பிரமித்து போனோன் , நாயகி மீது ஆரம்பத்தில் ஆழ்ந்த அனுதாபம் தான் முதலில் வந்தது , ஆனால் கடைசியில் தலை நிமிர்ந்து பார்க்க உயரத்தில் இருக்கும் நபர் போல காட்டி விட்டார் .. ( எனக்கு தெரிந்து உங்கள் அளவிற்கு பெண்மையை போற்றும் நபர் அகிலா கண்ணண் மட்டுமே நான் படித்த கதைகளில் இருந்து ..) கதையில் தன்னுடைய காதலன் முன்பு பேசும் வார்த்தைகள் பாராட்ட வார்த்தைகள் இல்லை , ஏனெனில் எப்படி பாராட்டுவது என்று எனக்கு தெரியவில்லை .. அவ்வளவு பாராட்டிட வேண்டும் கண்டிப்பாக , தான் காதலிலும் , வாழ்க்கையிலும் தோற்கவில்லை என்று அடித்து பேசி இருப்பார் .. அவர்கள் பேசுவதை கேட்கும் முன்னாள் கணவர் அதனை பெருமையாக ரசிப்பதும் , நாயகியை சந்திக்க வாய்ப்பு தேடாமல் தனது மகளை கவனிக்கும் பக்குவம் பெற்றது அதை விட சிறப்பு ,. கதையை முடிக்கும் கடைசி பகுதியில் நாயகியின் மகள் என்னுடைய அம்மா உனக்கு அம்மா ஆகலாம் உன்னுடைய அம்மா எனக்கு அம்மா ஆக முடியாது என்று ஆணித்தரமாக சொல்வது பயங்கரம் .. அனுபவம் மற்றும் வளர்ப்பு எப்படி இருக்கிறது என்று மிகவும் தெளிவாக கதையை நகர்த்தி சென்று இருக்கிறார்கள் ,. கண்டிப்பாக என்னுடைய பாராட்டுக்களை தெரியப்படுத்துவும் தாங்கள் .. 🤝🏼👍
 
Latest Episodes

Advt

Advertisements

Top