முகநூல் நண்பர் மோகன் அவர்களின் விமர்சனம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Joined
Jan 14, 2021
Messages
2,182
Reaction score
3,556
Points
113
Location
Chennai
எழுத்தாளர் உமா மகேஷ்வரி படைத்த காதல் தீண்டவே பற்றி சொல்ல வந்துருக்கேன்.காதல் தீண்டவே... தலைப்புலயே எழுத்தாளர் இது ஒரு காதல் கதைனு சொல்லிடுறாங்க.கதையின் மையப்பகுதி மிதுராவை சுற்றி நிற்கிறது. கார்த்திக் ராஜ்,கார்த்திக் தீரன் என்ற இருவரும் நாயகனாக இருக்கிறார்கள்.கதையை கொண்டு செல்லும் விதம் எப்படி இருக்கிறதென்றால் சாலை நன்றாக இருக்கிறது என நாம் வேகமாக செல்லும்போது திடீரென எதிர்பாராத நேரத்தில் வேகத்தடைகளும், மேடு பள்ளங்களும் இருந்தால் எப்படி இருக்கும் அதுபோல இந்த கதையில் twist களுக்கு பஞ்சம் இருக்காது.எங்கெங்கெல்லாம் twist வைக்க முடியுமோ அங்கெங்கெல்லாம் எழுத்தாளர் தன் வித்தையை காட்டியுள்ளார்.மிதுராவை பெற்றவர்களின் முன்வாழ்க்கையை பற்றி கேட்கும்போது மனம் கலங்கித்தான் போகிறது.மிதுராவின் மகிழ்ச்சிக்காக அவர்கள் எந்நிலைக்கும் செல்வதில் வெளிப்படுகிறது அவர்களின் தன்னிகரற்ற பாசம்.பல இடங்களில் எதார்த்தமாக வெளிப்படும் நகைச்சுவைகளுக்கு குபீர் சிரிப்பு வந்து விடுகிறது.நடு நடுவே வரும் கவிதைகளில் எழுத்தாளர் left & right வாங்கியுள்ளார்.அவ்வளவும் அருமை.மிதுராவின் அலுவலத்தில் நடக்கும் நிகழ்வுகளை எழுத்தாளர் மனத்திரையில் 3D போல காட்டியுள்ளார்.இந்த பதிவு உங்களை எழுத்தாளர் உமா மகேஷ்வரி எழுதிய "காதல் தீண்டவே"வை படிக்கத்தூண்டும் விதமாக இருக்கும் என நம்புகிறேன்.நல்லதொரு படைப்பை தந்த எழுத்தாளர் உமா மகேஷ்வரிக்கு மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.காதல் தீண்டவே இரண்டாம் பாகத்துக்கு ஆவலோடு காத்திருக்கும் வாசக இரசிகர்களில் நானும் ஒருவன்...
 
Advertisements

Latest Episodes

Advertisements