• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

முகநூல் விமர்சனங்கள்.

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anamika 46

மண்டலாதிபதி
Author
Joined
Nov 4, 2021
Messages
408
Reaction score
787
தோழி Zeenath Sabeeha அவர்களின் முகநூல் விமர்சனம்
#SMTamilNovels_Antihero_Thiruvizha போட்டிக் கதைகள் ..
Anamika 46 அவர்கள் எழுதிய
ஆண்மையெனப்படுவது யாதெனில்... (பேராண்மை)
இது எழுத்தாளரின் முதல் கதை என்றால் நம்ப முடியவில்லை... அவ்வளவு அழகான எழுத்து நடையோடு விறுவிறுப்பாக கதையை சற்றும் தொய்வில்லாமல் நகர்த்திச் சென்றிருக்கிறார் 👏👏👏
தேவா.. தன் தாயை பழித்து கூறி இவனுக்கு சினம் ஏற்றவே ஆண்மகன் தானா என்ற ஒரு நச்சுப் பெண்ணின் கேள்வியால் மூக்கு முட்ட குடித்து வீடு திரும்பும் இவனிடம் ...தன் மனதில் சலனத்தை ஏற்படுத்திய பெண்ணும் அதே கேள்வி கேட்டதால் மிருகமாக மாறி அவள் பெண்மையை காவு வாங்குகிறான்... தன் செயலால் தன்னை வெறுத்து தன்னை மறந்து இருக்கும் நிலையிலும் அவளிடம் மன்னிப்பை யாசிக்கிறான்... தன்னை ஒதுக்கி வைப்பதாக தாயின் மேல் தவறான புரிதல் கொண்டு அவரை இவன் ஒதுக்கிவைத்து தானும் வருந்தி அவரையும் வருந்தச் செய்கிறான்... கட்டப்பஞ்சாயத்து செய்த மக்களுக்கு நன்மை செய்யும் இவன் தன் தாய்க்கும் தாரத்திற்கும் நன்மை செய்தானா என்பது கதையில்...
வள்ளியம்மை... கிராமத்துப் பெண்ணாக அமைதியாக இருப்பாள் என்று நினைத்தால் அதிரடி சரவெடியாக மிளிர்கிறாள்🥰🥰 இவளின் துடுக்குத் தனமும் நையாண்டி பேச்சும் வேற லெவல் 🥰🥰👏 தேவாவுடன் வாய்க்கு வாய் வழக்காடுவதும்... அவனின் புரிதலை மாற்றி சிந்திக்கத் தூண்டும் இவள் செயல்களும்... சகுந்தலா தேவியை இவள் கேள்வி கேட்கும் விதமும் அருமை 👏👏🥰
கதிரேசன் அருமையான கதாபாத்திரம் 🥰
இவரோடு தேவாவின் உரையாடலும் அந்த கிண்டல் பேச்சும் கவிதை 🥰🥰❤
அருமையான குடும்ப கதை கிராமத்து மனிதர்களிடையே ஏற்படும் சிறுசிறு பொறாமைகளையும் உறவு முறைகளையும் அதன் முக்கியத்துவத்தையும் அங்கங்கு எடுத்துக் காட்டி இருப்பது அருமை 🥰🥰🥰
துரைப்பாண்டி... அக்கால மனிதரின் சிந்தனையும் செயலும் தன் வாரிசுகளுக்கு புத்திக்கூர்மை யோடு இவர் எழுதி வைத்த உயிலும் வெகு சிறப்பு 👏👏👏
நீங்கள் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் டியர் 🥰❤🌹
Good luck dear 💐🥰❤
 




Anamika 46

மண்டலாதிபதி
Author
Joined
Nov 4, 2021
Messages
408
Reaction score
787
சகோதரி ஜான்சி மிக்கேல் அவர்களின் முகநூல் விமர்சனம்.

ஆண்மை எனப்படுவது யாதெனில்

Feel gd story

நன்றாக எழுதி இருக்கிறார்.

கடைசி இரு அத்தியாயங்களும் சொல்லப்படும் கருத்துகளும் நச்

மற்றபடி வெகு பழக்கமான கதைக்களம்.

ஆன்டி ஹீரோக்கள் முற்கதை சோகமாக இருப்பது போலவே இங்கும்.

வண்புணர்வு தான் கதையின் அடிப்படை எனினும் கதை அதை மையமாக சுழலாமல் நாயகனின் இழப்பையும் அவமானத்தையும் சுற்றி சுற்றி ஃப்ளாஷ் அடிக்கின்றது.

கதை நாயகிக்கு( பேர் மறந்திட்டேன்பா) நீதி வாங்கித்தர கதையில் யாரும் இல்லை. இதில் அந்த குடும்பத்தையே திருத்தும் பொறுப்பு அவள் தலையில்.

இனிப்பான சாறில் முக்கி கொடுக்கப்பட்ட பாகற்காய்.

கற்பனை அளவில் மட்டும் நல்ல ப்ளாட்

நல்ல எழுத்து.வாழ்த்துகள் எழுத்தாளரே.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top