• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

முகநூல் விமர்சனங்கள்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
[COLOR=rgb(85, 57, 130)][B]@Chitrasaraswathi சித்ரா அம்மா அவர்களின் விமர்சனம்[/B][/COLOR]

ஸ்ரீநவியின் பூந்தளிர் ஆட எனது பார்வையில். உயரம் காரணமாக முப்பது வயது வரை திருமணம் ஆகாது இருக்கும் அரவிந்த் மற்றும் கிருஷ்ணா திருமணம் பெரியோர்களால் நிச்சயம் செய்து நடக்கிறது. அரவிந்த் வளர்ந்து வரும் தொழிலதிபர். கிருஷ்ணா ஆசிரியர் பணியில் இருக்கிறாள். பொறுப்பான மகன் அரவிந்த் குடும்பத்தை கட்டிக் காத்து சிறந்த உறவாக அனைவருக்கும் இருப்பவன் மனைவிக்கும் சிறந்த கணவனாக இருக்கிறான். அவனது தம்பி ராம் வெளிநாட்டில் பணியாற்றுவதால் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரு பெண்ணுடன் சேர்ந்து வாழும் காலத்தில் கர்ப்பிணியாகும் அவளை மறுத்து குழந்தைகள் பொறுப்பினை ஏற்றுக் கொள்ளாமல் வெளியேறிவிடுகிறான். வெளிநாட்டில் இருந்து தன் இரட்டையருடன் பெற்றோரை பார்க்க வருபவளை அவளை மட்டும் ஏற்றுக் கொண்டு இரண்டு குழந்தைகளையும் ராம் வீட்டில் விட்டுவிட்டு மகளுக்கு திருமணம் செய்து வைத்துவிடுகிறார்கள். வீட்டிற்கு வந்து சேர்ந்த இரட்டை குழந்தைகளை அரவிந்த் வீட்டில் எப்படி கையாள்கிறார்கள் என்பதையும் வீடு திரும்பும் ராமை ஏற்றுக் கொள்கிறார்களா என்பதையும் விறுவிறுப்பாக தந்திருக்கிறார் ஸ்ரீநவி. யதார்த்தமான குடும்ப நிகழ்வுகளை கதை முழுவதும் தந்திருக்கிறார். அரவிந்த் மற்றும் கிருஷ்ணா தம்பதிகள் அருமையான கதாபாத்திரங்கள். கதையில் வரும் எல்லா கதாபாத்திரங்களும் கச்சிதமாக இருக்கின்றன. இன்றைய தலைமுறையினர் வெளியே வேலைக்கு செல்பவர்கள் தங்களின் சுதந்திரத்தை நல்ல விதமாகவும் அதே சுதந்திரத்தை தங்கள் விருப்பப்படி வாழ்க்கை வாழ்வதால் ஏற்படும் பின்விளைவுகளையும் அழகாக தந்திருக்கிறார் ராம் மற்றும் ஹனியா கதாபாத்திரங்கள் மூலம். ஹனியாவின் கணவன் இம்ரான் நல்ல மனிதனாக மனைவியை அரவணைக்கிறான். ராமின் நிலையை காலத்தின் கையில் விட்டுவிடுகிறார். அரவிந்த் அம்மா பரிமளம் அத்தை, கிருஷ்ணா என்று பெண்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்.
 




Last edited:

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
அபிபாலா அவர்களின் விமர்சனம்

ஹாய் ஸ்ரீநவி... அருமையான கதாபாத்திரங்கள்..அழகான கூட்டுக் குடும்பத்தை சேர்ந்த ஒருவனால் ஏற்பட்ட பிரச்சினைகள்... விளைவுகள்...தீர்வுகள் னு கச்சிதமாக செதுக்கப்பட்ட கதை.சாலா 💚 ரவி perfect. ஹனியா சூழ்நிலைக் கைதி...இருந்தாலும் இம்ரானின் அரவணைப்பு ஆறுதல்.பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அரவிந்த் நம்மை ஃப்ளாட் ஆக்கிட்டான். கதிரவன் யதார்த்தமான கேரக்டர்.சுமதி lovely 🥰 பூந்தளிர்கள் தான் கதையின் உயிரோட்டமே. காலத்தின் மடியில் ராம் திருந்தி வாழ ஒரு சந்தர்ப்பம் தரப்படலாம். ராமின் தனி கதைக்காக காத்திருக்கோம். கலாச்சார சீர்கேடுகளின் வழி செல்வோருக்கு மற்றுமொரு செருப்படியாக இந்த ஸ்டோரி 👏👏மனமார்ந்த வாழ்த்துக்கள் மா🎊🎉
 




Last edited:

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
@Zeenath sabeeha ஜீனத் அவர்களின் விமர்சனம்

Sri Navee சிஸ்டர் எழுதிய "பூந்தளிர் ஆட" அரவிந்தலோசனன்.. விசால கிருஷ்ணாக்ஷி.. இவர்கள் இருவருக்கும் திருமணம் செய்ய பெண்பார்க்கும் படலத்திலிருந்து ஆரம்பம் ஆகிறது கதை.. அரவிந்தன் தன் அன்னை அத்தை இரண்டு அக்காள் அவர்களின் கணவர்கள் தங்கை அவளின் கணவன் என ஒரு பெரும் பட்டாளத்தோடும் தன் மாஸ் மசாலாவின் பொருட்களோடும் வருகிறான் பெண் பார்ப்பதற்கு 😀🥰
பெண்ணும் மாப்பிள்ளையும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வதாகட்டும் அவர்களை சுற்றி இருக்கும் குடும்பத்தாரின் கேலிக்கு உட்படுவதாகட்டும் அதோடு கூடிய திருமணத்தில் ஏற்படும் சில சச்சரவுகளாகட்டும் என விறுவிறுப்பாக நகர்ந்தது கதை.. தெளிவாக நகர்ந்த கதையில் முத்தாய்ப்பாக வந்து சேர்ந்தது அரவிந்தனின் தம்பியின் தரம் கெட்ட செயலால் உருவான குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பு இவர்களை வந்தடைய குடும்பத்தில் ஏற்படுகிறது பெரும் பிரச்சனையும் பிளவுகளும் அவை அனைத்தையும் எப்படி சமாளித்து ஒட்டுறவோடு குடும்பத்தை அனுசரித்து சென்றார்கள் அரவிந்தும் கிருஷ்ணாவும் என்பதை கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள் அருமையான கதை வாழ்த்துக்கள் ரைட்டர்ஜி 👏👏👏 சில உறவுகளிடம் கோபம் இருந்தாலும் அதே நேரம் அங்கு குணமும் இருந்தது அனைவரையும் அனுசரித்து அவர்களின் மீது அதிகமான அன்பும் பாசமும் வெளிப்படும் இடங்களும் அருமை 👏🥰
Good luck dear 💐🥰❤
Keep rocking 🥰💐🌹
 




Last edited:

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
செல்வராணி அம்மா அவர்களின் விமர்சனம்

ஸ்ரீநவீயின் பூந்தளிர் ஆட.
இந்த பெயரில் ஒரு திரைப்படம் பார்த்து இருக்கேன்.அழகு குழந்தை ஒண்ணு ஊரெல்லாம் அநாதையாக திரியும்.இறுதியில் தந்தையிடம் வந்து சேரும்.தலைப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும்.
அரவிந்தன் கிருஷ்ணா தம்பதிகளின் குட்டிப்பாப்பா கதையில் என்னை பதட்டப்படுத்திட்டா!.அரவிந்தனின் குடும்ப வாழ்வில் ரெடிமேடாக இரண்டு குழந்தைகள் வந்து சேருகிறார்கள்.குழந்தைகளின் பொறுப்பை உதறிவிட்டு தப்பிக்கும் பெற்றோர்.இன்றைய லிவ் இன்னின் குளறுபடிகளால் எத்தனை பேருக்கு பாதிப்பு?ஹனியா தன் பெற்றோரிடம் வந்து நிற்கும் இடமும் அவளை பெற்றவர்களின் ஆதங்கமும் கோபமும்... நமக்கும் அத்தனை கோபம் வருகிறது.மனதை கல்லாக்கிக் கொண்டு குழந்தைகளை அதற்கு பொறுப்பான குடும்பத்தில் ஒப்படைப்பது, தன் பெண்ணின் வாழ்க்கையில் நல்லது நடக்கணும்னு நினைத்தவர் குழந்தைகளை கை விடுகிறார்.சம்பந்தமில்லாது அரவிந்தன் கிருஷ்ணா சுமக்கிறார்கள்.
ஹனியாவுக்கு இம்ரான் கிடைத்து நல்ல வாழ்க்கை அமைந்து விட்டது.ராம் போன்ற அரை வேக்காடு கள் திருந்தாத ஜென்மங்கள்.
கதையில் வரும்... பிள்ளை பொறக்க காரணமாகவும் பெத்துக்கவும் தெரிஞ்சவங்க எல்லாம் அம்மா அப்பா ஆகிட முடியாது என்னும் வரிகள் அசத்தல்.ஆனால் அதை சொன்ன ஹனியா தான் முரண்!
கையில் எடுத்தால் கீழே வைக்க முடியாத கதை.
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
விமர்சனம் அளித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் :love: :love: :love:
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
தோழி கௌரி முத்துகிருஷ்ணன் அளித்த விமர்சனம்

மனமார்ந்த நன்றிகள் கௌரி சிஸ் :love: :love: :love:
****

பூந்தளிர் ஆட - ஶ்ரீநவீ

அழகான குடும்ப கதை.. அதும் கூட்டு குடும்பம் பற்றிய கதை..

எந்த இடத்திலும் தேவை இல்லாம ஒரு வார்த்தை வசனம் இல்ல..

ரொம்ப அழகா சொல்ல வேண்டியதை மட்டுமே சொன்ன கதை..

எல்லா உணர்வுகளும் இருக்கு, எல்லாருக்கும் காட்சிகள் இருக்கு.. அது யதார்த்தமாக இருக்கு..

தம்பி செய்த தவறால் வீட்டுக்குள் வர இரட்டை சுட்டி குழந்தைகள்.. அவர்களுக்கு அடுத்து நடந்தது என்ன? அந்த குடும்பமே செய்தது என்ன? இவளோ தான் கதையே.. ஆனா அதுக்குள்ள நிறைய நிறைய உணர்வுகள்.

ஹீரோ மாஸ்டரும் - ஹீரோயின் டீச்சரும் நெஞ்சில் நின்னுட்டாங்க.. கதையில் நான் ரசித்த இன்னொரு கதாபாத்திரம் இம்ரான். 😍

எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை என எல்லா வீட்டிலும் எப்பவும் பாடிட்டு இருக்க மாட்டாங்க.. சண்டை சச்சரவு, கருத்து முரண் எல்லாமே இருக்கும். ஆனா உறவு விட்டு போகதுன்னு சொன்ன விதம் ரொம்ப பிடிச்சு இருந்தது..

ரெண்டு நாள் முன்னாடி என் நெருங்கிய ப்ரெண்ட் ஒருத்தர்கிட்ட கூட்டு குடும்பமும் அதன் அவசியம் என்று பேசிட்டு இருந்தேன். என் எண்ணம் போல ஒரு கதை வாசித்ததில் மகிழ்ச்சி.

ஒரே மூச்சில் வாசித்து முடிக்க வேண்டிய கதை.. உங்களுக்கு கதை தாண்டி வேற சிந்தனையே இருக்காது. படிச்சு முடிச்சுட்டு தான் மொபைலை கீழ வைக்க முடிந்தது என்னால..

ரொம்ப அழகான பக்குவமான எழுத்து நடை உங்களுக்கு.. ரசித்து வாசித்தேன். எழுத்தில் மென்மேலும் வளர்ந்து சிறக்க வாழ்த்துகள் 💜

கதை திரி: https://www.amazon.in/gp/product/B0BRGYLLKB/ref=dbs_a_def_awm_bibl_vppi_i0

கௌரி_முத்துகிருஷ்ணன்
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top