• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

முக நூல் விமர்சனங்கள் 😍

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anamika 47

அமைச்சர்
Author
Joined
Nov 5, 2021
Messages
1,414
Reaction score
3,158
Ak47
கர்வி அர்ஜுனின் காதல் கர்வம் அழகு
பாரதியின் கர்வம் காதலுக்கு அழகு

கவிஞனின் கவிதை கதைக்கு அழகு

இக்ககதையை எழுதிய கவிதாயினியின் கவிதைஞயம் கவிஞனின் கவிதைக்கு அழகு

வாசகர்களின் பாராட்டுக்கு ஆசிரியரின் பதில் அழகு

மொத்தத்தில் "நட்பே" என்றழைத்து தித்திக்க தித்திக்க முள்ளை முள்ளால் எடுத்த இக்கதை அழகோ அழகு.Screenshot_20220126-230013_Facebook.jpg
 




Nuvali

அமைச்சர்
Joined
Aug 14, 2021
Messages
1,051
Reaction score
2,969
Location
India
கவிதாயினியின் கவித்துவமான கதைக்கு கவிதை விமர்சனம் அழகு :love::love::love:
 




Anamika 47

அமைச்சர்
Author
Joined
Nov 5, 2021
Messages
1,414
Reaction score
3,158
Rishi Lib
#போட்டிக்கதை
#அனாமிகா_47

முள்ளோடு முத்தாட வா!

ஹீரோ : அர்ஜுன்
ஹீரோயின் : பாரதி

அழகான காதல் கதை...

காளையவனின் அகம்பாவம் சரியுமிடம் அவளாக!

காரிகையவளின் திமிர் பணியுமிடம் அவனாக!

வீறு கொண்ட சிங்கத்திடம் விரும்பியே மாட்டிக் கொண்ட புள்ள மானாய் பாரதி கண்ட புதுமைப் பெண்!

மனிதர்களையே எட்ட நிறுத்துபவன் பாவையிடம் மட்டும் பனியும் மாயம் என்னவோ?

இறுக்கப் பூட்டியிருந்த மனக் கதவை அன்பெனும் சாவி கொண்டு திறந்து விட்டவளுக்கு மணாளனின் கண்களே கடவுளாய்!

திருமண பந்தத்தில் மாதுவை இழுத்து வைத்தவன் அறியவில்லை அவள் அகம் நுழைந்து நாட்களானதை!

வெற்றியில் சிகரம் தொட்டு வா காதலை தருகிறேன் என்றவளுக்கு அவன் காதலே பரிசாய் முள்ளோடு முத்தாடுதலாய்!

போட்டியில் வெற்றிபெற மனமார்ந்த வாழ்த்துக்கள்.

நன்றி.
ரிஷி.

04-02-2022.

———————————————————

கதை அருமை.

பாரதியாரை எனக்கும் பிடிக்கும்னாலும் அவ்வளவு ஆழமா ரசிச்சு வரிகளை உள்வாங்குனதில்ல…

இடத்திற்கு தகுந்தா மாதிரி இருந்த பாரதியாரோட ஒவ்வொரு வரிகளையும் அவ்வளவு ரசிச்சு வாசிச்சேனுங்கறது தான் உண்மை.

கதை கொண்டு போன விதம் கூட ரொம்ப அழகா இருந்துது. ரசிக்க வெச்சுட்டீங்க… அய்யோ முடிஞ்சிடுச்சான்னு தான் இருந்தது வாசிச்சு முடிஞ்சதும்.

அவனோட ஆளுமை அழகுன்னா அவளோட அழுத்தம் இன்னொரு அழகு.

இடையில உங்க வார்த்தை பிரயோகங்கள் கூட சில இடங்கள்ல ஆழமா பொருந்தி இருந்துது.

அருண் வர்ற இடங்களெல்லாம் கலக்கல் 🤣🤣 சிரிச்சுகிட்டே இருக்க வெச்சுட்டீங்க 😆🤣

அதுலயும் லாஸ்ட் ‘சைத்தான் ஜெராக்ஸ் கடையில தான் பிள்ளைய பெத்துக்கும் போல’ இந்த கவுண்டர் என்னால சிரிப்ப கன்ட்ரோல் பண்ணவே முடில 🤣🤣

ரொம்ப நன்றி ❤

போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்.

பாரதியாரோட விசிறியாவே மாத்திட்டீங்க என்னை!
 




Anamika 47

அமைச்சர்
Author
Joined
Nov 5, 2021
Messages
1,414
Reaction score
3,158
என்னவென்று சொல்வேன் 🤔
வெள்ளம் வந்தால் பள்ளம் நிறையும்....
உந்தன் விமர்சனத்தால் எந்தன் உள்ளம் நிறைந்ததே...
இந்த போட்டி கதை அழகிய நட்பு
உலகத்தை எனக்காய் படைத்துவிட்டது...
ரிஷியின் நட்பு - வாழ்வில்
ருசியாய் அமைந்தது சிறப்பு 😍

அடுத்த நொடி என்னவாகும் என்று தெரியாத இந்த வாழ்வில்..
உமது நொடிகளை எமக்காய் சேர்த்து, கருத்து வெடியாய் வெடித்து, என் இதயத்தில் மத்தாப்பூக்களை மலரச் செய்த தோழமையே ..

பாரதியின் வரிகளில் இருக்கும் ஆளுமையும், காதலும்
உம்மைக் கவர்ந்ததில்
தாய் தமிழுக்கு நன்றிகள் 🙏🙏🙏

நேர்மறை எண்ணங்களை விதைக்க எண்ணினேன்...
உயிரோட்டமாய் பாரதி போன்ற பெண்களைப் பார்க்க இயலுமா?

தெரியவில்லை எனக்கு...

என் மனக்கண்ணில் வலம் வந்தவள், உள்நுழைய உங்கள் அகக்கதவைத் திறந்ததற்கு நன்றிகள் கோடி நட்பே 🙏🙏🙏

கூடவே அகம் பாவியும் அகம் நுழைந்துவிட்டானே 😍😍😍

சைத்தான் கூட ஜன்னல் வழி வந்து விட்டானே 🤣🤣🤣🤣

உயிரோட்டமான விமர்சனம் நன்றிகள் நட்பே🙏🙏🙏

தங்கள் நட்பின் மகிழ்வில் என்றும்...
-AK47 ❤
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top