• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

முதலாவது: எழுத்ததிகாரம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
எழுத்தியல்
இலக்கண நூலாவது, உயர்ந்தோர் வழக்கத்தையுஞ் செய்யுள் வழக்கத்தையும் அறிந்நு விதிப்படி எழுதுவதற்கும் பேசுதற்குங் கருவியாகிய நூலாம்.
*****
2. அந்நூல் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், தொடர்மொழியதிகாரம் என, மூன்றதிதிகாரங்களாக வகுக்கப்படும்.

எழுத்துக்களின் பெயர்
3. எழுத்தாவது சொல்லுக்கு முதற்காரணமாகிய ஒலியாம்.
*****

4. அவ்வெழுத்து, உயிரெழுத்து, மெய்யெழுத்து, உயிர் மெய்யெழுத்து, ஆய்தவெழுத்து என நான்கு வகைப்படும்.
*****

5. உயிரெழுத்துக்கள், அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள என்னும் பன்னிரண்டெழுத்துக்களுமாம். இவை ஆவி எனவும் பெயர் பெறும்.
*****

6. உயிரெழுத்துக்கள், குற்றெழுத்து, நெட்டெழுத்து, என இரண்டு வகைப்படும்.
*****

7. குற்றெழுத்துக்கள், அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்துமாம். இவை குறில் எனவும் பெயர் பெறும்.
*****

8. நெட்டெழுத்துக்கள், ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என்னும் ஏழமாம். இவை நெடில் எனவும் பெயர் பெறும்
*****

9. மெய்யெழுத்துக்கள், க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் என்னும் பதினெட்டெழுத்துக்களுமாகும்.
இவை உடல், உடம்பு, உறுப்பு, ஒற்று, புள்ளி எனவும் பெயர் பெறும்.
*****

10. மெய்யெழுத்துக்கள், வல்லெழுத்து, மெல்லெழுத்து, இடையெழுத்து என மூன்று வகைப்படும்.
*****

11. வல்லெழுத்துக்கள், க், ச், ட், த், ப், ற், என்னும் ஆறுமாம்.
இவை வல்லினம், வன்கணம், வலி எனவும் பெயர் பெறும்.
*****

12. மெல்லெழுத்துக்கள், ங், ஞ், ண், ந், ம், ன் என்னும் ஆறுமாம்.
இவை மெல்லினம், மென்கணம், மெலி எனவும் பெயர் பெறும்.
*****

13. இடையெழுத்துக்கள், ய், ர், ல், வ், ழ், ள் என்னும் ஆறுமாம்.
இவை இடையினம், இடைக்கணம், இடை எனவும் பெயர் பெறும்.
*****

14. அ, இ, உ என்னும் மூன்றும், மொழிக்கு முதலிலே சுட்டுப் பொருளில் வரும்போது, சுட்டெழுத்துக்களாம். உதாரணம்.
அவன், இவன், உவன்,
அக்கொற்றன், இக்கொற்றன், உக்கொற்றன்.
*****

15.எகரம் மொழிக்கு முதலிலும், அகரமும் ஒகாரமும் மொழிக்கு கடையிலும், வினாப்பொருளில் வரும் போது, வினாவெழுத்துக்களாம்.உதாரணம்.
எவன், எக்கொற்றன்
கொற்றான, கொற்றனோ
ஏவன், கொற்றனே
யா என்னும் உயிர் மெய்யும், மொழிக்கு முதலிலே வினாப் பொருளில் வரும் போது வினாவெழுத்தாம்
*****

16. அகரத்துக்கு ஆகாரமும், இகரத்துக்கு ஈகாரமும், ஒகரத்துக்கு ஓகாரமும், உகரத்துக்கு ஊகாரமும், எகரத்துக்கு ஏகாரமும், ஐகாரத்துக்கு இகரமும், ஒகரத்துக்கு ஓகாரமும், ஒளகாரத்துக்கு உகரமும், ககரத்துக்கு ஙகரமும், சகரத்துக்கு ஞகரமும், டகரத்துக்கு ணகரமும், தகரத்துக்கு நகரமும், பகரத்துக்கு மகரமும், றகரத்துக்கு னகரமும், இன வெழுத்துக்களாம். இடையெழுத்தாறும். ஓரினமாகும்; அவை இவ்விரண்டோரினமாகாவாம்.
*****

17. உயிர் மெய்யெழுத்துக்களாவன. புன்னிரண்டுயிரும் பதினெட்டு மெய்மேலுந் தனித்தனி ஏறிவருதலாகிய இருநாற்றுப்பதினாறுமாம்.
அவை, க, கா, கி, கீ முதலியவைகளாம்.
உயிர் மெய்க்குற்றெழுத்துத் தொண்ணூறு; உயிர்மெய் நெட்டெழுத்து நூற்றிருபத்தாறு; ஆக உயிர்மெய் இருநாற்றுப் பதினாறு.
ஊயிர்மெய் வல்லெழுத்து எழுபத்திரண்டு, உயிர்மெய் மெல்லெழுத்து எழுபத்திரண்டு, உயிர்மெய் யிடையெழுத்து எழுபத்திரண்டு, ஆக உயிர்மெய் இருநாற்றுப் பதினாறு.
*****

18. ஆய்தவெழுத்தாவது, குற்றெழுத்துக்கும் உயிர்மெய் வல்லெழுத்துக்கும் நடுவே மூன்று புள்ளி வடிவுடையதாய் வரும் ஓரெழுத்தாகும்.
உதாரணம். எஃகு, கஃசு, அஃது, பஃறி
*****

19. மேற்சொல்லப்பட்ட உயிர் பன்னிரண்டும், மெய்பதினெட்டும், உயிர்மெய் இருநாற்றுப் பதினாறும், ஆய்தம் ஒன்றும் ஆகிய இருநாற்று நாற்பத்தேழெழுத்துக்களுந் தமிழ் நெடுங்கணக்கில் வழங்கி வருதல் கண்டு கொள்க.
******

தேர்வு வினாக்கள்​
  1. இலக்கண நூலாவதியாது?
  2. அந்நூல் எத்தனை அதிகாரங்களாக வகுக்கப்படும்?
  3. எழுத்தாவது யாது?
  4. அவ்வெழுத்து எத்தனை வகைப்படும்?
  5. உயிரெழுத்துக்கள் எவை?
  6. உயிரெழுத்துக்கள் எத்தனை வகைப்படும்?
  7. குற்றெழுத்துக்கள் எவை?
  8. நெட்டெழுத்துக்கள் எவை?
  9. மெய்யெழுத்துக்கள் எவை?
  10. மெய்யெழுத்துக்கள் எத்தனை வகைப்படும்? 11. வல்லெழுத்துக்கள் எவை?
  11. மெல்லெழுத்துக்கள் எவை?
  12. இடையெழுத்துக்கள் எவை?
  13. சுட்டெழுத்துக்கள் எவை?
  14. வினாவெழுத்துக்கள் எவை?
  15. எந்தெந்த வெழுத்துக்கு எந்தெந்தவெழுத்து இனவெழுத்தாகும்.
  16. உயிர்மெய்யெழுத்துக்கள் எவை?
  17. உயிர்மெய் குற்றெழுத்து எத்தனை?
  18. உயிர்மெய்க் குற்றெழுத்து எப்படி தொண்ணுறாகும்?
  19. உயிர்மெய் நெட்டெழுத்து எத்தனை? உயிர்மெய் நெட்டெழுத்து எப்படி நூற்றிருபத்தாறாகும்?
  20. உயிர்மெய் வல்லெழுத்து எத்தனை? உயிர்மெய் வல்லெழுத்து எப்படி எழுபத்திரண்டாகும்?
  21. உயிர்மெய் மெல்லெழுத்து எத்தனை? உயிர்மெய் மெல்லெழுத்து எப்படி எழுபத்திரண்டாகும்?
  22. உயிர்மெய் யிடையெழுத்து எத்தனை? உயிர்மெய் யிடையெழுத்து எப்படி எழுபத்திரண்டாகும்?
  23. ஆய்தவெழுத்தாவது எது?
  24. ஆகத் தமிழ் நெடுங்கணக்கில் வழங்கும் எழுத்துக்கள் எத்தனை?
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
எழுத்துக்களின் மாத்திரை
20. குற்றெழுத்துக்கு மாத்திரை ஒன்று, நெட்டெழுத்துக்கு மாத்திரை இரண்டு.
மெய்யெழுத்துக்கும் ஆய்தவெழுத்துக்குந் தனித்தனி மாத்திரை அரை.
ஊயிர்மெய்க் குற்றெழுத்துக்கு ஏறிய உயிரின ளவாகிய மாத்திரை ஒன்று; உயிர்மெய் நெட்டெழுத்துக்கு ஏறிய உயிரினளவாகிய மாத்திரை இரண்டு.
மாத்திரையாவது கண்ணிமைப்பொழுது, அல்லது கைந்நொடிப்பொழுது.
*****

21. உயிரெழுத்துக்குள்ளே, உகரமும் இகரமும், சிலவிடங்களிலே தம் மாத்திரையிற் குறைவாக ஒலித்து நிற்கும். ஆவ்வுகரத்திற்கு குற்றியலுகரமென்றும் பெயராம்.
*****

22. குற்றியலுகரமாவது, தனிக் குற்றெழுத்தல்லாத மற்றையெழுத்துக்களுக்குப் பின்னே மொழிகளிளிறுதியில் வல்லின மெய்களில் ஏறி நிற்கும் உகரமாகும்.
ஆக்குற்றியலுகரம், ஈற்றெழுத்தாகிய தன்னைத்தொடர்கின்ற அயலெழுத்தின் வகையiனாலே, நெடிற் றொடர்க்குற்றியலுகரம், ஆய்தத்தொடர்க்குற்றியலுகரம், உயிர்த்தொடர்க்குற்றியலுகரம், வன்றொடர்க்குற்றியலுகரம், மென்றொடர்க்குற்றியலுகரம், இடைத்தொடர்க்குற்றியலுகரம், என ஆறுவகைப்படும். அவைகளுள், நெடிற்றொடர் மாத்திரம் இரண்டெழுத்து மொழியாகியும், மற்றையைந்து தொடரும் மூன்றெழுத்து முதலிய பல வெழுத்து மொழியாகியும் வரும்.
உதாரணம்.
நாகு, ஆடு நெடிற்றொடர்க்குற்றியலுகரம்
எஃகு, கஃசு ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம்
வரகு, பலாசு உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
கொக்கு, கச்சு வன்றொடர்க் குற்றியலுகரம்
சங்கு, வண்டு மென்றொடர்க் குற்றியலுகரம்
அல்கு, எய்து இடைத்தொடர்க்குற்றியலுகரம்
*****
23. தனிக்குற்றறெழுத்துக்குப்பின் வல்லின மெய்களில் ஏறி நிற்கும் உகரமும், மெல்லின மெய்களில் ஏறி நிற்கும் உகரமும் முற்றியலுகரமாம்.
உதாரணம். நகு, கொசு, கடு, அது, கணு, திரு, வழு: பூணு, வாரு, உருமு, கதவு, நெல்லு, கொள்ளு.
*****

24. குற்றியலிகரமாவது, யகரம் வந்து புணருமிடத்துக் குற்றியலுகரந் திரிந்த இகரமாம்.
உதாரணம்.

நாகு + யாது = நாகியது
எஃகு + யாது = எ.கியாது
வரகு + யாது = வரகியாது
கொக்கு + யாது = கொக்கியாது
சங்கு + யாது = சங்கியாது
அல்கு + யாது = அல்கியாது
அன்றியும், மியாவென்னும் அசைச்சொல்லிலே மகரத்தின் மேல் ஏறி நிற்கும் இகரமுங் குற்றியலுகரந் திரிந்த இகரமாம்.
*****
25. பாட்டில் ஓசை குறைந்தவிடத்து, உயிரெழுத்துக்களுள்ளும், ஒற்றையெழுத்துக்குள்ளும், சிலசில, தம் மாத்திரைகளின் அதிகமாக ஒலிக்கும், அவிவுயிரெழுத்துக்கு உயிரளபெடை என்றும் பெயராம்.
*****

26. உயிரளபெடையாவன, மொழிக்கு முதலிலாயினும் இடையிலாயினுங் கடையிலாயினுந் தம் மாத்திரையின் அதிகமாக ஒலித்து வருகின்ற நெட்டெழுத்துக்களேழுமாம். ஆளபெடுகின்ற நெட்டெழுத்துக்குப் பின் அதற்கினமாகிய குற்றெழுத்து அறிகுறியாக எழுதப்படும்.
உதாரணம்.
ஆஅடை, ஈஇடு, ஊஉமை, ஏஎடு,
ஐஇயம், ஓஒடு, ஒளஉவை, பலாஅ.
சில விடயங்களிலே குற்றெழுத்து நெட்டெழுத்தாகிப் பின்னளபெடுக்கும்.உதாரணம்.
எழுதல் * எழூஉதல்,
வரும் * வரூஉம்,
குரி * குரிஉஇ

*****
27. ஒற்றளபெடையாவன, மொழிக்கு இடையிலாயினுங் கடையிலாயினுந் தம் மாத்திரையின் அதிகமாக ஒலித்து வருகின்ற ங், ஞ், ண், ந், ம், ன், வ், ய், ல், ள் என்னும் பத்து மெய்களும் ஆய்தமுமாம். ஆளபெடுகின்ற ஒற்றெழுத்துக்குப் பின் அவ் வொற்றொழுத்தே அறிகுறியாக எழுதப்படும். இவ்வொற்றளபெடை, குறிற்கீழுங் குறலிணைக்கீழும் வரும்.
உதாரணம்.
சங்ங்கு, பிஞ்ஞ்சு, கண்ண்டம், பந்ந்து, அம்ம்பு, அன்ன்பு, தெவ்வ்வர், மெய்ய்யர், செல்ல்க, கொள்ள்க, எஃஃகு, அரங்ங்கு, அங்ங்கனிந்த, மடங்கலந்த.

*****

28. குற்றியலுகரத்துக்குங், குற்றியலிகரத்துக்குந் தனித்தனி மாத்திரை அரை, உயிரௌபெடைக்கு மாத்திரை மூன்று, ஒற்றளபெடைக்கு மாத்திரை ஒன்று.
*****

29. பண்டமாற்றலிலும், அழைத்தலிலும், புலம்பலிலும், இராகத்திலும், உயிரெழுத்தும், மெய்யெழுத்தும், தமக்குச் சொல்லிய அளவை கடந்து நீண்டொலிக்கும்.
*****

தேர்வு வினாக்கள்
  1. குற்றெழுத்துக்கு மாத்திரை எத்தனை?
  2. நெட்டெழுத்துக்கு மாத்திரை எத்தனை?
  3. மெய்யெழுத்துக்கு மாத்திரை எத்தனை?
  4. ஆய்தவெழுத்துக்கு மாத்திரை எத்தனை?
  5. உயிர்மெய்குற்றெழுத்துக்கு மாத்திரை எத்தனை?
  6. உயிர்மெய்நெட்டெழுத்துக்கு மாத்திரை எத்தனை? மாத்திரையாவது எது?
  7. தம் மாத்திரையிற் குறைவாக ஒலித்து நிற்கும் எழுத்துக்கள் உளவோ?
  8. தன் மாத்திரையிற் குறைவாக ஒலித்து நிற்கும் உகரத்திற்கு பெயர் யாது?
  9. ன் மாத்திரையிற் குறைவாக ஒலித்து நிற்கும் இகரத்திற்கு பெயர் யாது?
  10. குற்றியலுகரமாவது யாது?
  11. அக்குற்றியலுகரம் எத்தனை வகைப்படும்?
  12. நெடிற்றொடர் எத்தனையெழுத்து மொழியாகிவரும்?
  13. முற்றியலுகரமாவன எவை?
  14. குற்றியலிகரமாவது யாது?
  15. தம் மாத்திரைகளின் அதிகமாக ஒலிக்கும் எழுத்துக்கள் உளவோ?
  16. அதிகமாக ஒலிக்கும் உயிரெழுத்துக்குப் பெயர் யாது?
  17. அதிகமாக ஒலிக்கும் ஒற்றெழுத்துக்குப் பெயர் யாது?
  18. உயிரௌபெடை யாவன யாவை?
  19. ஒற்றளபெடையாவன யாவை?
  20. குற்றியலிகரத்துக்கு மாத்திரை எத்தனை?
  21. உயிரள பெடைக்கு மாத்திரை எத்தனை?
  22. ஒற்றளபெடைக்கு மாத்திரை எத்தனை?
  23. எவ.வௌ;விடங்களில் எழுத்துக்கள் தமக்குச் சொல்லிய அளவைக்கடந்து நீணடடொலிக்கும்?
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
முதனிலை
30. பன்னிரண்டுயிரெழுத்துக்களும், உயிரேறிய க, ச, த, ந, ப, ம, வ, ய, ஞ என்னும் ஒன்பது மெய்யெழுத்துக்களும், மொழிக்கு முதலில் நிற்கும் எழுத்துக்களாம்.
உதாரணம்.
அணி, ஆடை, இலை, ஈரல், உரல், ஊர்தி, எழு, ஏணி, ஐயம், ஒளி, ஓடு, ஒளவை.
கரி, சரி, நன்மை, பந்து, மணி, வயல், யமன், ஞமலி.
******

31. இவைகளுள்ளே, க, ச, த, ந, ப, ம, என்னும் ஆறு மெய்களும், பன்னிரண்டுயிரோடும் மொழிக்கு முதலாகி வரும்.
உதாரணம்.
1. களி, காளி, கிளி, கீரை, குளிர், கூடு, கெண்டை, கேழல், கைதை, கோண்டை, கோடை, கௌவை.
2. சட்டி, சாநந்து, சினம், சீர், சுக்கு, சூரல், செக்கு, சேவல், சையம், சொன்றி, சோறு, சௌரியம்.
3. தகை, தார், திதலை, தீமை, துளை, தூசு, தெளிவு, தேழ், தையல், தொண்டு, தோடு, தௌவை.
4. நஞ்சு, நாரி, நிலம், நீறு, நுகம், நூல், நெல், நேர்மை, நைதல், நொய்து, நோய், நௌளி.
5. பந்து, பால், பிட்டு, பீடு, புள், பூண்டு, பெருமை, பேடு, பையல், பொன், போது, பௌவம்.
6. மனை, மாடு, மின்னல், மீன், முள், மூரி, மெய்ம்மை, மேதி, மையல், மொட்டு, மோகம், மௌவல்.

****
32. வகரமெய், அ, ஆ, இ, ஈ, எ, ஏ, ஐ, ஒள என்னும் எட்டுயிரோடு, மொழிக்கு முதலாகி வரும்.
உதாரணம்.
வளி, வாளி, விளி, வீடு, வெண்மை, வேலை, வையம், வெளவால்.
****

33. யகரமெய், அ, ஆ, உ, ஊ, ஒ, ஒள னெ;னும் ஆறயிரோடு, மொழிக்கு முதலாகிவரும்.
உதாரணம்.
யவனர், யானை, யுகம், யூகம், யோகம், யௌவனம்.
****

34. ஞகரமெய், அ, ஆ, எ, ஒ, என்னும் நான்குயிரோடு மொழிக்கு முதலாகி வரும்.
உதாரணம்.
ஞமலி, ஞாலம், ஞெகிழி, ஞொள்கல்.

தேர்வு வினாக்கள்
  1. மொழிக்கு முதலில் நிற்கும் எழுத்துக்கள் எவை?
  2. இவ்வொன்பது மெய்களுள், எத்தனை மெய்கள் பன்னிரண்டுயிரோடும் மொழிக்கு முதலாகிவரும்?
  3. வகரமெய் எவ்வுயிர்களோடு மொழிக்கு முதலாகிவரும்?
  4. யகரமெய் எவ்வுயிர்களோடு மொழிக்கு முதலாகிவரும்?
  5. ஞகரமெய் எவ்வுயிர்களோடு மொழிக்கு முதலாகிவரும்?
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
இறுதி நிலை
35. எகரம் ஒழிந்த பதினோருயிர்களும், ஞ், ண், ந், ம், ன், ய், ர், ல், வ், ழ், ள், என்னும் பதினொரு மெய்களுமாகிய இருபத்திரண்டெழுத்துக்களும், மொழிக்கிறுதியில் நிற்கும் எழுத்துக்களாம்.
உதாரணம்.
விள, பலா, கிளி, தீ, கடு, பூ, சே, கை, நொ, போ, வெள, உரிஞ், மண், வெரிந், மரம், பொன், காய், வேர், வேல், தெவ், யாழ், வாள்.

தேர்வு வினா
மொழிக்கு இறுதியில் நிற்கும் எழுத்துக்கள் எவை?
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
எழுத்துக்களின் சாரியை
36. உயிர்நெட்டெழுத்துக்கள் காராச்சாரியை பெற்றும், அவைகளுள், ஐ ஒள, இரண்டுங் காராச்சாரியை யேயன்றிக் கான்சாரியையும் பெறும்.
உதாரணம்.
ஆகாரம், ஈகாரம், ஊகாரம், ஏகாரம், ஐகாரம், ஒகாரம், ஒளகாரம், ஐகான், ஒளகான்.
ஊயிர்க்குற்றெழுத்துக்களும், உயிர்மெய்க்குற்றெழுத்துக்களும், கரம், காரம், கான், என்னும் மூன்று சாரியை பெறும்.
உதாரணம்.
அகரம், அகாரம், அஃகான், ககரம், ககாரம், கஃகான்.
மேய்யெழுத்துக்கள், அ என்னுஞ் சாரியை அதனோடு கரம், காரம், கான் என்னும் சாரியை பெறும்.
உதாரணம்.
க, ங, ககரம், ககாரம், கஃகான், ஙகரம், ஙகாரம். ஙஃகான்.
உயிர்மெய் நெட்டெழுத்துக்கள், சாரியை பெறும் மெய்கள் சாரியை பெறாதும் இயங்காவாம்.

தேர்வு வினாக்கள்

  1. உயிர்நெட்டெழுத்துக்கள் எச்சாரியை பெறும்?
  2. ஐ, ஒள, இரண்டும் காரச்சாரியை யன்றி வேறு சாரியை பெறுமா?
  3. உயிர்க்குற்றெழுத்துக்களும், உயிர்மெய்க்குற்றெழுத்துக்களும் எச்சாரியை பெறும்?
  4. மெய்யெழுத்துக்கள் எச்சாரியை பெறும்? எவ்வெழுத்துக்கள் சாரியை பெற்று வருவதில்லை?
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
போலியெழுத்துக்கள்
37. அகரத்தோடு யகரமெய் சேர்ந்து ஐகாரம் போன்றும். அகரத்தோடு வகரமெய் சேர்ந்து ஒளகாரம், போன்றும் ஒலிக்கும்.
உதாரணம். ஐயன் * அய்யன்; ஒளவை * அவ்வை.

தேர்வு வினாக்கள்
இரண்டெழுத்துக்கள், சேர்ந்து ஒரெழுத்தைப்போல் ஒலிப்பதுண்டோ.

எழுத்தியல் முற்றிற்று.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top