• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

முதல் பயணம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Dhanuja

SM Exclusive
Joined
Aug 9, 2018
Messages
3,427
Reaction score
7,800
Age
34
Location
Trichy
ஹாய் தோழிகளே!

தனுஜாவுடன் ஒரு பயணம், நான் பயணித்த இடங்கள், அதன் சிறப்புகள் எனக்குத் தோன்றிய வகையில், நினைவின் தாக்கத்தைப் பகிர்ந்து கொள்ள தான் இந்தத் திரி.



திருஆனைக்காவல் ஸ்தல வரலாறு என் கண் தோற்றம்:

திருச்சிராப்பள்ளி மாநகரின் சிறப்புக்களுள் ஒன்று திருவானைக்கோவில் என்னும் அழைக்கப்படும் திருஆனைக்காவல், இதற்கு திருவானைக்காவல் என்ற பெயரும் உண்டு, காவேரி நதிக் கரையோரம் மாமனும் மச்சானும் எதிர் எதிர்புறம் ஆட்சி செய்கின்றனர் (ஸ்ரீரங்கம் ஒரு புறம் திருவானைக்காவல் மறுபுறம் )

அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர், காடவர்கோன் ஆகியோரால் பாடல் பெற்றதலம், ஐம்பூதங்களில் இது நீருக்கு உரியது (இன்று அந்த தீர்த்த கிணறு வற்றி விட்டது),சிவன் ஸ்தலங்களில் இது 60 வது ஸ்தலம்.

சிவகணங்களில் இருவர் சாபம் பெற்று சிலந்தியாகவும், யானையாகவும் உருமாறி விட்டனர், சுயம்புவாக தோன்றிய ஜம்புகேஸ்வரரை அனுதினமும் தனது சாபம் தீர பூஜை செய்தனர், அதில் ஒரு நாள் சிவனின் தலைப் பகுதியில் சூரியன் ஒளிபட, அதனைப் பார்த்த சிலந்தி தனது வாய் நூல் கொண்டு வலையைப் பின்னியது, இதனை அறியாத யானையோ சிவனுக்கு மேல் தூசு இருப்பதாக எண்ணிக் கொண்டு அதனை அழிக்க, கோபம் கொண்ட சிலந்தியும், யானையும் போர் தொடுக்க இறுதியில் இரண்டும் மடிந்தது, சிவபக்தியை எண்ணிக் களிப்புற்ற சிவபெருமான் யானையை சிவகணங்களுக்கு தலைவனாகவும், சிலந்தியைத் சோழனாகவும் மறுபிறவி எடுத்ததாக வரலாறு கூறுகின்றது.





தலசிறப்புகள்:

ஜம்புகேஸ்வரர் இருக்கும் இடம் தரைமட்டத்திற்கு கீழ் இருப்பதால் நீர் கசிவு இருந்து கொண்டே இருக்கும், காவேரி வற்றி இருக்கும் போது கூட இதில் நீர்சுரக்குமாம்,( ஸ்ரீரங்கத்திலும் கருவறையின் மேல் நிலையில் இது போல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது),சுமார் 18 ஏக்கர் பரப்பளவு கொண்ட கோவில்இது.நான்கு திசைக் கோபுரங்களும், ஐந்து பிரகாரங்களையும் கொண்டது.

இங்கு அம்பாள் உக்கிரமாக இருந்ததாகவும் ஆதிசங்கரர் சக்கரங்கள் கொண்ட காதணிகளை அணிவித்து அவரது உக்கிரத்தை தணித்ததாகவும் சொல்கின்றனர், அகிலாண்டேஸ்வரின் காதணி சக்கரம் தீப ஆராதனை செய்யும் பொது தனி அழகுடன் ஒளிரும்.

அது மட்டுமில்லை அம்பாளுக்கு உச்சு கால பூஜை செய்யும் பொது ப்ரோகிதர் பெண் வேடமிட்டு தலையில் கிரீடம் வைத்து பூஜை செய்வது தனி சிறப்பு

இன்னும் எண்ணில் அடங்கா சிறப்புகள் உள்ளது. எழுத வரவில்லை. எனக்குத் தெரிந்த அளவிற்கு வரலாறு கொடுத்துள்ளேன், பிழை இருப்பின் மன்னியுங்கள்……



இனி என்னுடன்…..

முதலில் பயணம் பிறந்த வீட்டில் இருந்து தொடங்கலாமே!

என்னது பிறந்த வீடா!!!!!!!!!!

ஆமாங்க என்னைப் பொறுத்தவரை இது என் பிறந்த வீடு, பொதுவா கஷ்டம் வந்தா தான் கடவுள் கண்ணுக்குத் தெரிவார், அந்த வகையில் நானும் மனுஷ பிறவி தான, எனக்கும் கஷ்டம் வரும் போது எல்லாம் ஓடி வந்துடுவேன், எனக்கு ஆறுதல் என் அம்மா அப்பா, "அது யாரு அம்மா அப்பான்னு யோசிக்கிறீங்களா, ”திருவானைக்கோவிலில் வீற்றிருக்கும் எனது தாய் அகிலம் ஆண்ட ஈஸ்வரி அகிலாண்டேஸ்வரி தாங்க, அப்பா நம்ப சுயம்பு ஜம்புகேஸ்வரர்”…………….

“எங்க அம்மா எனக்கு செல்லம், எங்க அப்பானா எனக்கு பயம், அம்மாகிட்ட அது வேணும் இது வேணும் கேக்குறநான், அப்பாகிட்ட பண்ண தப்பை எல்லாம் ஒப்பிப்பேன், பேனா உடைச்சுதுல இருந்து கணக்கு தேர்வுல குறைவா மதிப்பெண் வாங்குனதுவரை”………

திங்கள் காலை எங்க விடியுதுனு கேட்டா, திருவானைக்காவல் தான். என்ன ஒரு சந்தோசம், அம்மா கேட்பாங்க திங்கட்கிழமை மட்டும் எப்படி சீக்கிரமே விடியுது?என்று.இப்போவரைக்கும் எனக்கும் புரியலைங்க……..

எங்க அம்மாவைப் பத்தி சொல்லணும்னா இன்னிக்கு முழுசா பேசுவேன் சுருக்கமா சொல்றேன், புணரும் புணராத காலை வேளையில் தான் எனது அம்மாவின் தரிசனம், அப்பப்ப பச்சை சட்டை உடுத்தி உச்சி கிரீடத்தில் பிச்சி, அரளி செண்டு வைத்து, அவருக்கே உரித்தான சக்கரம் பொருந்திய காதணி (இதற்கு ஒரு கதையே உண்டு ஸ்தல வரலாற்றில் குறிப்பிட்டுருக்கின்றேன்),பட்டால் நெய்த பாவாடை தோற்றுப் போகும் என் அம்மாவின் பூவால் தைத்த பாவாடை முன், ஒரு பெரியகுத்து விளக்கில், அதற்குதக் திரி போட்டு எந்நேரமும் அணையா சுடராய் ஒளி வீசும் விளக்கின் ஒளியில், என் தாயின் முகம் பார்க்க கோடி கண்கள் வேண்டும்,” அழகி! நீ சூடிய மலரும், நீ இட்ட குங்குமமும் எனது நாசியைப் பதம் பார்க்கும் வேளை, மீண்டும் ஒரு பிறப்பு”.

அவளை வணங்கிவிட்டு பள்ளியறை திறப்பு, முதல் நாள் இரவில் பூஜை செய்து பூச்சூடிதாயும், தந்தையும் வைத்து நடை சாத்தி விட்டு, மறு நாள் காலை பூசை செய்யும் போது இன்று பூத்த பூவைப் போல வாடாமல் இருக்கும் அதற்கு மணமே தனி………



வலது காலை ஊன்றி இடது காலைத் தூக்கி வைத்த வாக்கில் இருக்கும் ஜம்புகேஸ்வரர் பொன்சிலை, முன்னால் அகிலா என்ற குட்டி யானை செல்லப் பின்னால் பல்லக்கில் நகர்வலம் வருவார் ஜம்புகேஸ்வரர் ,இங்கு இருந்து ஸ்ரீரங்க பெருமாள் கோபுரத்தை பார்த்துவிட்டு தான் என் தந்தைக்கு மறுவேலை, அவருக்கும் என் காதல் கள்வனைப் பார்க்காமல் அந்த நாள் இனிய நாள் ஆகாது போலும். (பெருமாள் அந்த திருடனை தாங்க காதல் கள்வன்னு சொல்றேன் ரொம்ப புடிக்கும், இப்போ புரியுதா எனக்கு ஏன் பார்த்தசாரதியைப் பிடிச்சுதுன்னு இரண்டு பேருமே திருடர்கள், கண்ணன் மீது தீராத பிரேமை கொண்ட ராதை நான்).

“என்னைத் தாங்கும் தூண்” பிரகாரம் சுற்றி வருகையில் உள்ளடங்கிய தூண் உண்டு. அதில் தான் என் ராஜாங்கம் என்ன கோவம் இருந்தாலும் அதில் நான் சாய்ந்தால் போதும், அனைத்தையும் அந்த தூண் உள்வாங்கிக் கொள்ளும் போலும், மனம் லேசாக, கால்கள் பெரியவரைப் பார்க்க செல்லும், அது யாருனு கேக்குறீங்களா நம்ம குபேரலிங்கம்…….



ஆண்மகனுக்கே உரித்தான கம்பீரம், பழுத்த பழம் என்று சொல்வார்களே அது போல் தோற்றம். பூணூல் அணிந்து ஆஜானுபாகுவாய் சராசரி வேஷ்டியில் அமர்ந்து இருப்பது போல இருக்கும் குபேரலிங்கத்தின் தோற்றம்.

கோவிலுக்குள் ஒரு தனி கோவில் போல் இருக்கும், அவரிடம் வழக்கம் போல பாவ மன்னிப்பு!!! அவரை விடுத்து கால்கள் நேரே முன்னே தான் செல்லும் இன்னும் கொஞ்சம் எனது தாயை ரசிக்க வேண்டுமே! தாய் வீடு வந்தால் போக மனம் வருமா என்ன?



இப்படித் தாங்க என் பயணம் நான் போற ஒவ்வொரு இடத்துலயும் நான் ரசிக்குற விஷயம் நிறைய இருக்கு. அதை எல்லாம் உங்க கூட பகிர்ந்துக்க ஆசை (உன் ஆசைக்கு நாங்க தான் கிடைச்சோமான்னு திட்டக் கூடாது பாவம் தானே நான்!!சும்மா படிங்க, அப்புறம், அடுத்த பயணம் கண்டு புடிங்க க்ளூ புகுந்த வீடு )






 




Allivisalatchi

முதலமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
10,521
Reaction score
27,440
Location
Chennai
அருமை அப்படியே அந்த அகிலாண்டேஸ்வரி தாயையே நேரில் பார்தது மாதிரி இருந்தது அடுத்து என்னோட இஷ்ட தெய்வமான பெருமாள் னு நினைக்கிறேன் சரியா???
 




Dhanuja

SM Exclusive
Joined
Aug 9, 2018
Messages
3,427
Reaction score
7,800
Age
34
Location
Trichy
அருமை அப்படியே அந்த அகிலாண்டேஸ்வரி தாயையே நேரில் பார்தது மாதிரி இருந்தது அடுத்து என்னோட இஷ்ட தெய்வமான பெருமாள் னு நினைக்கிறேன் சரியா???
Correctu
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top