• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

முத்தம் எனும் மிட்டாய்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
பகுதி - 21

அன்று ஆதர்ஷ் வகுப்பெடுத்துக் கொண்டிருந்தபோது நக்ஷத்ராவின் மொபைல் அடிக்கவும் எரிச்சலுற்றவன் “மாதுரி” என்று அவள் வாயசைத்துக் கூறி வெளியே எழுந்து சென்றதும் கோபம் மறந்து வகுப்பை தொடர்ந்தான்.

“எத்தர திவசம் ஆயி நின்னே கண்டுட்டு... எங்ஙனே இண்டு”

அரை வாயிலில் நின்றிருந்த மாதுரி தோழியை நீண்ட நாட்களுக்குப் பிறகு காண்பதால் உற்சாக மிகுதியில் ஓடி வந்து அணைத்துக் கொண்டாள்.

“எவ்வடயா நிண்ட ஹீரோ?”

“ம்ம்கும்ம்... உள்ள பீட்டர் விடுறது எப்படின்னு கிளாஸ் எடுத்துக்கிட்டு இருக்கான்”

“ஹான்?”

“நீ வா. நம்மளு சம்சாரிக்காம். செஷன் கழியான் சமயம் எடுக்கும்” என்ற நக்ஷத்ரா தன்னுடைய அறையில் வகுப்பு நடைபெறுவதால் மாதுரியை MD அறைக்குள் அழைத்துச் சென்றாள்.

“ஹே... இது ஆதர்ஷ்டே முரியல்லே?”

“சபரீஷிடையும்”

அவளை சந்தேகமாக பார்த்த மாதுரி “எந்தா? காரியம் பரா” என்றுக் கேட்க “ஒண்ணுமில்லா... நீ இரிக்கி” என்றவள் நேரே சென்று ஆதர்ஷின் இருக்கையில் அமர்ந்தாள்.

“ம்ம்.... இப்ப மனசிலாயி....”

“எந்தா?”

“வெறுதே டிராமா களிக்கறது மோளே... ஆரா ப்ரொபோஸ் செய்தது? அவனோ? அல்லா நீயோ? எனிக்கு நீயானுன்னா தோணுன்னு...”

“ஞான் அல்லா... அவன் சோய்ச்சதா”

“நீ ஓகே பரஞ்சு அல்லே?”

“ம்ம்” என்றவள் வெட்கப்பட்டு சிரிக்கையில் ஆதர்ஷும் சபரீஷும் உள்ளே நுழைந்தனர். சட்டென்று அவனுடைய இருக்கையிலிருந்து எழுந்து மாதுரியின் அருகில் சென்று நின்றாள்.

“ஹாய் மாதுரி. சாரி உங்கள இங்க கூப்பிட்டதுக்கு. நீங்க பிஸியா...”

“நோ ப்ராப்ளம் ஆதர்ஷ்”

புன்னகையுடன் அவள் அமர நக்ஷத்ரா அவள் பக்கத்து இருக்கையில் அமர்ந்தாள்.

மாதுரி கிளம்பும்வரை தன்னையே அவ்வபோது குருகுருவென்றுப் பார்க்கும் அவன் பார்வையிலிருந்துத் தப்பிக்க தலை குனிந்து அமர வேண்டியதாயிற்று.

அவள் கிளம்பிச் சென்றப் பிறகு இருவரையும் ஒருமுறை பார்த்த சபரீஷ் “அப்பறம்? அவன் சேர்ல தான் உக்காருவீங்களோ?” என்றுக் கேட்க “ஐயோ இவனுக்குத் தெரியுமா? ச்ச... எப்படித் தெரியாம இருக்கும்? ஆதர்ஷ் சொல்லியிருப்பான்...” என்று நினைத்து அதிசயமாக அவனைப் பார்த்தாள்.

“என் சேர்ல தான உட்கார்ந்தா? பரவாயில்ல...”

“மச்சு... எனக்கு தெரியாம கம்பெனிய அவ பேருக்கு மாத்தி எழுதிட மாட்டியே??”

“வேலைய பாருடா. நீ போ. நான் உன்கிட்ட காலையில பேசுறேன்”

மூச்சை இழுத்துப் பிடித்து நின்றவள் விட்டால் போதுமென்று அவளுடைய அறைக்கு ஓடி வந்துவிட்டாள்.

காலையில் பேசுகிறேன் என்று அவன் கூறியதாலோ என்னவோ காரில் அமர்ந்தப் பிறகு அவன் பக்கமே திரும்பாமல் இருந்தாள்.

“எங்க வீட்டுலேருந்து நாளைக்கு வராங்க”

“எல்லாரும் வராங்களா? அப்பா அம்மா? வினோ? அவளும் வராளா?”

“அவங்க வரதுல உனக்கென்ன இவ்வளோ சந்தோஷம்?”

“அவ்... அவங்க வரதுல எனக்கென்ன சந்தோஷம்? ஒண்ணுமில்லையே... வராங்களான்னுக் கேட்டேன். அவ்வளவுதான்”

“அத என் முகத்தப் பார்த்து சொல்லு. ஏன் மூஞ்சியத் திருப்பிக்கிட்டுப் பேசுற?”

“இவ்வளவு நேரம் உன் முகத்தப் பார்த்துதான பேசுனேன்? நான் ஒண்ணும் மூஞ்சியத் திருப்பிக்கல...”

“இப்பயும் என்னைப் பார்த்து பேச மாட்டேங்குறியே... சிரிப்பு வருதா? நக்ஷத்ரா... என்னை பாரு... ஹேய் திரும்புடி...”

“இப்போ என்ன உனக்கு? ஆமா... அவங்க வரதுல எனக்கு சந்தோஷம். ரொம்ப சந்தோஷம் போதுமா?”

“ஏன்?”

“அது அப்படிதான்”

சட்டென்று காரை சாலையோரம் அவன் நிறுத்த புரியாமல் பார்த்தாள். அவள்புறம் திரும்பி அமர்ந்து “எதுக்கு சந்தோஷப்படுறன்னு சொல்லு” என்றான்.

“இது என்ன பிடிவாதம்? உங்க வீட்டுல எல்லாரயும் பார்க்கணும்னு எனக்கு ஆசை இருக்காதா? காரை எடு ஆதர்ஷ்”

“அவங்கள எதுக்கு நீ பார்க்கணும்”

“நான் வாழப்போற வீட்டுல யாரெல்லாம் இருக்காங்கன்னுத் தெரிஞ்சுக்க எனக்கு ஆசை இருக்காதா?”

“இதையும் என் முகத்தப் பார்த்து சொல்ல மாட்டியா?”

“மாட்டேன். நீ கார் ஸ்டார்ட் பண்ணு. லேட் ஆகுது ஆதர்ஷ்”

புடவையை விரலில் சுற்றி விளையாடியபடியே தலை குனிந்து அமர்ந்திருந்தவளை சில நொடிகள் புன்னகையுடன் ரசித்தவன் அவளை அவள் வீட்டில் இறக்கிவிட்டான்.

மதியத்திற்கு மேல் கெஸ்ட் ஹவுஸிற்கு வந்தான் சபரீஷ்.

“என்னடா அதிசயம்? தூங்கலையா?”

“தூக்கம் வரல மச்சு. ஒரு நாள் ஆபீஸ் ஸ்டாப்ஸ் எல்லாரும் சேர்ந்து வெளில டின்னர் போகலாமான்னுக் கேட்க வந்தேன். போலாமா?”

“இந்த வீக் முடியாதுடா. நெக்ஸ்ட் வீக் போகலாம். டீ குடிக்குறியா?”

“நீ டீ போடப் போறியா?”

“வேற யாரு இருக்கா? வேணுமா வேணாமா?”

“கொண்டு வா... தலையெழுத்துடா...”

“அப்படியெல்லாம் அலுத்துக்கிட்டு நீ ஒண்ணும் டீ குடிக்க வேண்டாம்”

“சரி சரி... குடிக்குறேன் எடுத்துட்டு வா”

ஆதர்ஷ் டீ எடுத்து வர சிறிது நேரம் பேசிவிட்டுக் கிளம்பிச் சென்றான் சபரீஷ். மோகனிற்கு அழைத்துக் கிளம்பிவிட்டார்களா என்றுக் கேட்டவன் காலை ஸ்டேஷன் வருவதாகக் கூறி வைத்தான்.

அன்று முழுவதும் அவன் தன்னிடம் ஏதாவது விபரம் கூறுவான் என்று எதஈர்ப்பார்த்து ஏமாந்துப் போனாள் நக்ஷத்ரா.

“எப்போ வராங்க? எப்படி வராங்க? என்னை அவங்கள மீட் பண்ண வைப்பானா? ஒண்ணும் சொல்லல... ச்ச... இப்போ போய் கேட்டா ஏடாகூடமா கேள்விக் கேட்பான். பேசாம சபரீஷ்கிட்ட கேட்டா?? வேண்டாம். அது நல்லா இருக்காது...”

தனக்குள்ளே யோசித்துக் குழம்பியவள் அவன் முகத்தை திரும்பி திரும்பிப் பார்க்க அதை கண்டுக் கொள்ளாமல் அவள் வீட்டில் விட்டுச் சென்றான் ஆதர்ஷ்.

ஸ்டேஷனில் அவனைக் கண்டதும் அவன் பின்னால் தேடிய வினோதினி “என்னண்ணா... அண்ணிய ஸ்டேஷனுக்கே கூட்டிட்டு வந்து அப்பா அம்மா கால்ல விழ வைப்பன்னு நெனச்சேன்... கூட்டிட்டு வரலையா?” என்று சோகமாகக் கேட்டாள்.

“பேசாம வா வினோ... அப்பறம் பார்த்துக்கலாம்”

மோகன் காரில் பெட்டிகளை அடுக்க அவனருகில் வந்த சுஜா “போன வாரம் வீட்டுல அண்ணின்னு வினோ சொன்னதுக்கு அந்த குதி குதிச்ச... இப்போ என்னமோ அப்பறம் பார்த்துக்கலாம்னு சொல்லுற?” என்றுக் கேட்க “நீங்க உட்காருங்க மாம். வீட்டுக்குப் போய் பேசிக்கலாம்” என்று கார் கதவை திறந்து விட்டான்.

அப்போதும் அவர் அவனை கூர்ந்து கவனித்தபடியே அமர டிரைவர் சீட்டில் அமர்ந்து காரை எடுத்தான்.

“நல்ல ஊரு...” என்று மோகன் கூற “ஆமாமா... சூப்பர் ஊரு டாடி” என்றாள் வினோ.

அவள் எதுவும் உளறிவிடுவாளோ என்ற பயத்திலேயே கெஸ்ட் ஹவுஸ் வரை வந்தவன் வீட்டிற்குள் செல்லும் முன் தந்தை கவனிக்காத சமயம் “தயவுசெஞ்சு உன் வாய வெச்சுக்கிட்டு சும்மா இரு. டாடிக்கு இப்போதைக்கு எதுவும் தெரிய வேண்டாம்” என்று எச்சரித்தான்.

“டாடிக்கு என்ன தெரிய வேண்டாம்? டேய்... நெஜமாவே லவ் பண்ணுறியா?”

“கத்தாதடி... உள்ள வா முதல்ல”

“அம்மாகிட்ட சொல்லிட்டியாடா?”

“இன்னும் இல்ல. சொல்லணும். மம்மி விடுற லுக்க பார்த்தா கொஞ்சம் பயமா இருக்கு. கோபமா இருக்காங்களா வினோ?”

“அதெல்லாம் இல்லடா... நீ வீட்டுக்கு வந்தப்போ கேட்டாங்கல்ல... நீ உருப்படியா எதுவும் சொல்லலன்னு கொஞ்சம் காண்டு. அவ்வளவுதான். சமாளிச்சுடலாம்”

“என்ன அண்ணனுக்கும் தங்கச்சிக்கும் குசுகுசுன்னு?”

“சாக்லேட் கேட்டேன் மம்மி”

“வந்ததும் வராததுமா சாக்லேட்... இவன் உன்னையும் சேர்த்து கெடுக்குறான்”

அவர் எரிச்சலுடன் கூறி கிட்செனுள் செல்ல “சத்தியமா உள்குத்தோட தான் பேசுறாங்க. உனக்குதான் இப்போ திட்டு விழுந்துது” என்றாள் வினோ.

“புரியுது...” என்று முனுமுனுத்தவன் ஆழ மூச்சை எடுத்து சமையலறையுள் சென்றான்.

முந்தைய தினம் அவன் பிரிட்ஜில் வாங்கி வைத்திருந்த பாலை சுஜா காய்ச்சிக் கொண்டிருக்க “நான் டீ போடுறேன்மா. நீங்க போய் குளிங்க” என்றான்.

“தேவையில்ல. எந்த பழக்கத்தையும் மாத்த வேண்டாம். நீ டயர்டா இருப்ப... போய் தூங்கு. ஈவ்னிங் சபரீஷ் வீட்டுக்குப் போகணும்”

“போகலாம்மா. நீங்க போய் குளிங்க. நான் டீ போடுறேன்”

திரும்பி அவனை ஒரு பார்வை பார்த்தவர் டீ தூளை தேட டப்பாவை எடுத்து நீட்டியவன் “பேச மாட்டீங்களா மாம்?” என்றுக் கேட்டான்.

“பேசிட்டுதான இருக்கேன்?”

“இவங்க எனக்கு அம்மான்னு அடிக்கடி ப்ரூவ் பண்ணுறாங்க” என்று நினைத்தவன் அவர் கைகளை பற்றி “என்ன கோபம் சொல்லுங்க” என்றான்.

“உனக்கு நக்ஷத்ராவ பிடிச்சிருக்கா?”

“பிடிச்சிருக்கு. ரொம்ப பிடிச்சிருக்கு. நீங்கதான் டாடிகிட்ட பேசணும்”

“தெரியுதுல்ல... நான் தான் உன் டாடிகிட்ட பேசணும்னு... அப்போ நீ ஒழுங்கா என்கிட்ட சொல்லி வெச்சாதான நான் நேரம் பார்த்து அவங்ககிட்ட பேச முடியும். அத விட்டுட்டு... எந்த அம்மாடா பையன்கிட்ட வந்து இவ்வளவு தூரம் கேட்பாங்க? நான் வந்து கேட்கவும் இளக்காரமா தெரியுதா? இப்போ வந்து கெஞ்சுற? எதுக்கு...”

“சாரி மாம். நீங்க கேட்டப்போ... எனக்குப் பிடிச்சிருந்துது. ஆனா எந்தளவுக்குன்னு சரியா தெரியல. இப்போ தெரிஞ்சுக்கிட்டேன். சாரி... நெஜமா உங்ககிட்ட சொல்லக் கூடாதுன்னு எல்லாம் இல்லம்மா. வேற யார்கிட்ட சொல்லப் போறேன்?”

“நக்ஷத்ராகிட்ட சொல்லிட்டியா?”

“...”

“திருட்டு முழி முழிக்குறதுலயே தெரியுது. போ... போய் தூங்கு. ஈவ்னிங் சபரீஷ் வீட்டுக்குப் போயிட்டு அப்பறமா அப்பாகிட்ட கேட்டுப் பார்க்குறேன்”

ஒரு நொடியும் தாமதிக்காமல் வெளியே வந்துவிட்டான்.

“ஷ்ஷ்ஷ்... அம்மாவ சமாளிக்குறது எவ்வளவு கஷ்டமா இருக்கு...”

“என்னண்ணா பேயறஞ்ச மாதிரி வர?”

“நீ போய் குளி போ”

“அப்பா குளிக்குறாங்க. எனக்கு அண்ணி நம்பர் குடுண்ணா. போன்லயாவது பேசுறேன். போட்டோ காமிச்சதோட சரி...”

“நம்பர் எல்லாம் தர முடியாது” என்றவன் “இதுக்கு மேல முழிச்சிருந்தா எல்லா பக்கமும் மாட்டிப்போம் போலயே” என்று நினைத்து அறைக்குள் ஓடிவிட்டான்.

நல்ல உறக்கத்தில் இருந்தவனது மொபைல் அடிக்க சிரமப்பட்டு கண்களை திறந்து எடுத்துப் பார்த்தான். நக்ஷத்ரா அழைத்திருந்தாள். அழைப்பை ஏற்கும் முன் “ஆதர்ஷ்... சீக்கிரம் எழுந்துக் கிளம்பு. எவ்வளவு நேரமா எழுப்புறேன்... நாங்க எல்லாரும் ரெடி” என்று குரல் கொடுத்தார் சுஜா.

மணியை பார்த்தவன் அவசரமாக எழுந்து அழைப்பை ஏற்று “நான் வெளில கிளம்பிட்டு இருக்கேன் நக்ஷத்ரா. வீட்டுக்கு வரும்போது பேசுறேன்” என்றுக் கூறி வைத்துக் குளிக்கச் சென்றான்.

நக்ஷத்ராவின் தவிப்பு இரட்டிப்பானது. நெற்றியில் வழிந்த வியர்வையை துடைத்து அடுத்து என்ன செய்வதென்று யோசிக்க முயன்றாள்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
பகுதி - 22

சபரீஷின் வீட்டினுள் நுழைந்தபோது அங்கே நக்ஷத்ராவையும் அவள் பெற்றோரையும் ஆதர்ஷ் சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை. வந்தவர்களை ரவிச்சந்திரனும் லீலாவும் வரவேற்க ஆதர்ஷை முன்பே தெரிந்ததால் கீதாவும் விஜயனும் எழுந்து நின்று வரவேற்றனர்.

ஆதர்ஷ், சபரீஷ், நக்ஷத்ரா மூவரின் முகத்திலும் ஈயாடவில்லை. பெரியவர்கள் முன் எதுவும் பேச முடியாமல் ஒருவரை ஒருவர் பார்த்து விழித்தபடி நின்றனர்.

நக்ஷத்ரா அனைவரையும் பார்த்து தலையசைக்கும் சாக்கில் மொபைலை பார்க்குமாறு சைகை செய்தாள். ஆதர்ஷ் மொபைலை பாக்கேட்டிலிருந்து எடுக்க சபரீஷும் மொபைலை தான் கை காட்டினான்.

“நாங்க சபரீஷ் வீட்டுக்குப் போறோம். லீலா ஆன்ட்டி இன்வைட் பண்ணி இருக்காங்க. என்னை அங்க வந்து பிக்கப் பண்ணிக்கோ” என்று அவள் மெசேஜ் அனுப்பியிருந்தாள்.

“நக்ஷத்ரா பேமிலியோட வந்திருக்கா. அம்மா இன்வைட் பண்ணி இருக்காங்க” என்று சபரீஷ் மெசேஜ் அனுப்பி இருந்தான். வரும் வழியில் அவனது அழைப்பு வந்தபோது அவன் வீட்டிற்கு தானே செல்கிறோம் என்று அதை ஏற்காமல் விட்டது எவ்வளவு பெரிய தவறென்று ஆதர்ஷ் இப்போது வருந்தினான்.

லீலா அனைவரையும் பரஸ்பரம் அறிமுகம் செய்து வைத்தார். அருகில் அமர்ந்திருந்த மகனிடம் “இவதான நக்ஷத்ரா?” என்று மெல்லக் கேட்டார் சுஜா.

“ம்ம்”

“போட்டோவ விட நேர்ல பார்க்குறப்போ எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. ஆமா... எதுக்கு அவங்க பேரன்ட்ஸ் இப்போ வர சொன்ன? என்ன அவசரம்?”

“எனக்கே தெரியாது மாம். யாருக்கும் தெரியாது. லீலாம்மா வர சொன்னாங்களாம். அவங்க பேமிலி பிரெண்ட்ஸ்”

“நீ இவ்விட வா வினோ” மோகனின் அருகில் அமர்ந்திருந்த வினோதினியை லீலா அழைக்க எழுந்துச் சென்று அவருக்கும் நக்ஷத்ராவிற்கும் நடுவில் அமர்ந்தாள்.

“காலேஜ் இப்போ லீவா? இங்கே கெஸ்ட் ஹவுஸ் எல்லாம் பிடிச்சிருக்கா?”

“இன்னைக்கு மட்டும் லீவ் போட்டிருக்கேன் ஆன்ட்டி. எல்லாமே பிடிச்சிருக்கு”

“ஞான் போய் சாயா எடுத்துட்டு வரேன்” என்று லீலா எழ கீதாவும் அவருடன் சென்றார். மோகன், விஜயன், ரவி மூவரும் பேச சபரீஷ் ஆதர்ஷின் மறுபக்கம் வந்தமர்ந்தான்.

“ஹாய்”

“ஹாய் வினோ. எப்படி இருக்க?”

“நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க?”

“நல்லா இருக்கேன். நீ வருவன்னு தெரிஞ்சிருந்தா சாக்லேட் வாங்கிட்டு வந்திருப்பேன்”

“அண்ணனுக்கு ஏத்த ஜோடி தான் அண்ணி... அப்படி கூப்பிடலாமில்ல?”

அவளுக்கு விஷயம் தெரியும் என்றறிந்தவள் கலக்கத்துடன் திரும்பி ஆதர்ஷை பார்த்தாள். அவன் லேசாக தலையசைத்து திரும்பிவிட்டான்.

“பயப்படாதீங்க அண்ணி. நான் உங்களுக்கு சப்போர்ட் தான். அம்மாவுக்கும் ஓகே”

“அம்மாவுக்கு தெரியுமா?”

“தெரியும். இன்னைக்கு அப்பாகிட்ட பேசுறேன்னு சொல்லிட்டு இருந்தாங்க. அதுக்குள்ள உங்கள இங்கப் பார்ப்போம்னு நினைக்கவே இல்ல”

“எனக்குத் தெரியாது வினோ. திடீருன்னுதான் அம்மா வந்து கிளம்ப சொன்னாங்க”

“இதுவும் நல்லது தான். இல்லன்னா உங்களை இவன் நேர்ல கூட்டிட்டு வந்து காமிச்சிருப்பான்?? ம்ம்ஹும்... சரி உங்க நம்பர் குடுங்க. வந்ததும் அவன்கிட்ட கேட்டேன். குடுக்க மாட்டேன்னு சொல்லிட்டான்”

புன்னகையுடன் இருவரும் மொபைலில் டைப் செய்வதை பார்த்த சபரீஷ் அருகில் அமர்ந்திருக்கும் நண்பனுக்கு மட்டும் கேட்கும் விதத்தில் “நம்பர் நோட் பண்ணுறாளுங்க. செத்த மச்சு...” என்றுக் கூற “அதான்டா நானும் பார்க்குறேன். இந்த வினோ எதுக்கு இப்போ அவகிட்ட போய் உட்கார்ந்தான்னு தெரியல” என்றான்.

“சும்மாவே அவ உன்னை நக்கலடிச்சுட்டே திரியுறா. இதுல வினோ வேற கூட்டு சேர்ந்தா... பாவம்டா நீ”

“நீ வேற ஏன்டா... கொஞ்ச நேரம் பேசாம இரு”

லீலாவும் கீதாவும் அனைவருக்கும் தேநீர் எடுத்து வந்துக் கொடுக்க சுஜா சென்று அவர்களுடன் அமர்ந்து பேச ஆரம்பித்தார்.

“இப்போ என்ன ப்ளான்? எதுக்கு லீலாம்மா அவங்கள இன்வைட் பண்ணாங்க?”

“நீங்க வரீங்கன்னதும் நக்ஷத்ரா வீட்டுலயும் கூப்பிடலாம்... அவங்களும் நம்ம வீட்டுக்கு வந்து ரொம்ப நாளாச்சுன்னு அப்பாகிட்ட சொன்னாங்களாம். அப்பா சரின்னு சொன்னதும் போன் பண்ணி கூப்பிட்டாங்களாம். நான் தூங்கிட்டு இருந்தேன் மச்சு. இவங்க வந்ததுக்கு அப்பறம் தான் எந்திரிச்சேன். எல்லாருக்கும் நைட் டின்னர் எங்க வீட்டுல தான்”

“இது நல்லதுக்குன்னு எடுத்துக்குறதா... தேவையில்லாத பிரச்சனைன்னு எடுத்துக்குறதா தெரியல சபரீஷ்”

“டென்ஷன் ஆவாத. பார்த்துக்கலாம்”

அவள்புறமே செல்லும் பார்வையை தடுக்கவும் முடியாமல் எல்லோர் முன்னிலையிலும் அவளை பார்க்கவும் முடியாமல் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்தான் ஆதர்ஷ். நக்ஷத்ரா எந்த கவலையும் இல்லாமல் வினோதினியுடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்தாள்.

சாப்பாடு செய்ய லீலா எழ சுஜாவும் எழுந்தார். “நீங்க உட்காருங்க” என்று கீதா அவரை தடுக்க “நான் மட்டும் இங்க உட்கார்ந்து என்ன செய்யப் போறேன்? ஹெல்ப் பண்ணுறேன். வாங்க” என்றுக் கூறி மற்ற இருவருடன் சமையலறையுள் சென்றார்.

“உங்கம்மா கீதா ஆன்ட்டிகூட க்ளோஸ் ஆகிடுவாங்க போல?”

“மம்மி ஈஸியா பழகிடுவாங்கடா. எனக்கு டாடி நெனச்சாதான் பயமா இருக்கு”

“சரி... நீ ஏதாவது ப்ளான் வெச்சிருக்கியா மச்சு?”

“எதுக்கு?? அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். எப்படியோ எந்த பிரச்சனையும் இல்லாம நைட் இவங்கள வீட்டுக்குக் கிளப்பி விட்டுட்டா நிம்மதியா இருப்பேன்”

முதலில் ஆண்கள் அனைவரும் அமர்ந்து சாப்பிட்டுவிட நேரமாகிவிட்டதால் பெண்கள் சீக்கிரம் சாப்பிட்டு எழுந்தனர். வினோ நக்ஷத்ராவைவிட்டு நகரவேயில்லை.

“உங்களுக்கு டைம் ஆகுதுல்ல? நீங்க கிளம்புங்க ஆதர்ஷ். நாங்க டேக்ஸி பிடிச்சு கெஸ்ட் ஹவுஸ் போயிடுறோம்” என்று மோகன் கூற “நாங்க டிராப் பண்ணிட்டுப் போறோம். நக்ஷத்ரா அவங்ககூட கிளம்பிடுவா” என்றார் கீதா.

மோகன் சம்மதம் தெரிவிக்க “நீயும் இன்னைக்கு கார்ல வா. நாங்க மட்டும் கார்ல போனா நல்லா இருக்காது” என்று சபரீஷையும் அழைத்தான் ஆதர்ஷ்.

“அதான் நானும் சொல்ல வந்தேன். 2 மினிட்ஸ் இரு. ரெடி ஆகிடுறேன்”

சபரீஷ் தயாராகி வரும்வரை யாரும் பேசவில்லை. அந்த அமைதி ஆதர்ஷின் டென்ஷனை இன்னும் அதிகரித்தது. அவன் வந்ததும் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு வெளியே வந்து காரை எடுத்தான்.

முன்னால் அமரப் போனவளை “பின்னாடி உட்காரு” என்றுக் கூறி ஆதர்ஷ் அருகில் அமர்ந்தான் சபரீஷ். அவன் வீட்டை விட்டு சிறிது தூரம் செல்லும்வரை மூவரும் பேசவில்லை.

ஒரு சிறிய காபி ஷாப்பின் அருகில் காரை நிறுத்தி ஆதர்ஷ் இறங்க இப்போது ஆபீஸ் சென்றாலும் அனைவரும் வந்திருப்பார்கள் பேச முடியாதென்று தெரிந்து மற்ற இருவரும் இறங்கி அவன் பின்னால் சென்றனர்.

“காபி குடிக்குறீங்களா? எனக்கு தலை வலிக்குது”

“எனக்கு வேண்டாம் மச்சு. இப்போதான சாப்பிட்டேன்”

“எனக்கும் ஆர்டர் பண்ணு ஆதர்ஷ்”

“இப்போ எதுக்கு இவ்வளவு டென்ஷன் ஆகுறீங்க? நக்ஷத்ரா உனக்கென்ன ஆச்சு? வீட்டுல வினோகூட நல்லாதான பேசிட்டு இருந்த?”

“அவகூட பேசினாலும் எனக்கு பயமாவே இருந்துது சபரீஷ்” அவள் திரும்பிப் பார்க்க எதிரில் அமர்ந்து சபரீஷ் நண்பனை முறைத்தான்.

இடது கரம் தூக்கி அவள் தோளை சுற்றி கை போட்டு அழுத்தி தலையை இட வலமாக ஆட்டினான். அவன் ஆர்டர் செய்திருந்த காபி வந்துவிட “குடி” என்றுக் கூறி அவள் தோளிலிருந்து கையெடுத்து அவனும் காபி பருகினான்.

அவளுக்கு சமாதானம் சொன்னாலும் அவனுடைய டென்ஷன் இன்னும் குறையவில்லை என்பதை சபரீஷ் நன்கு அறிவான்.

அங்கிருந்துக் கிளம்பும் முன் சுஜாவுக்கு கால் செய்தான் ஆதர்ஷ்.

“வந்துட்டோம் ஆதர்ஷ். அப்பாகிட்ட நான் இப்போ எதுவும் பேசல. காலையில பேசிக்கலாம்”

அன்னை கூறிய பதில் அவனுடைய பதட்டத்தை தணிக்கவில்லை. அமைதியாக காரை நோக்கி நடந்தான்.

அலுவலகம் வந்ததும் “சீக்கிரம் உள்ள வாங்க” என்றுக் கூறி வேகமாக உள்ளே சென்றான் சபரீஷ். நக்ஷத்ரா திரும்பி ஆதர்ஷை பார்த்தாள். அவனும் அவளைதான் பார்த்துக் கொண்டிருந்தான்.

“நீ ஏன் இப்படி இருக்க? உன்னை பார்க்க பார்க்க எனக்கு பயம் அதிகமாகுது ஆதர்ஷ். ஏதாவது பேசு ப்ளீஸ்”

“நான் நார்மல் ஆகிடுவேன் நக்ஷத்ரா. கவலைப்படாத. நீ முதல்ல போ. நான் ரெண்டு நிமிஷம் கழிச்சு வரேன்”

மறுத்து பேச தோன்றாமல் அவனை திரும்பி திரும்பி பார்த்தவண்ணம் உள்ளே சென்றாள். அலைபாயும் மனதை சமன்படுத்த முயன்றவன் அதில் ஓரளவு வெற்றிப் பெற்றப் பிறகு இறங்கி உள்ளே வந்தான்.

“மச்சு... நீ அவகிட்ட பேசுடா. எதுக்கு தேவையில்லாம அவளையும் டென்ஷன் ஆக்குற? உன்னைப் பார்த்து...”

“தெரியும். பேசுறேன்டா. எனக்கு கொஞ்சம் டைம் குடு. என்னமோ... ம்ச்ச்...”

“நீ முதல்ல டென்ஷன் ஆகுறத நிறுத்து”

“விடு சரி ஆகிடும்”

அவன் சொன்னது போல் எளிதில் அவனால் தெளிவடைய முடியவில்லை. அதிகாலை அவளுடன் காரில் செல்லும்போது ஏதாவது பேச வேண்டுமென்று நினைத்தான். என்ன பேசுவதென்று யோசித்து முடிப்பதற்குள் அவள் வீடு வந்துவிட்டது.

அவனை திரும்பியும் பாராமல் அவள் இறங்கப் போக “நக்ஷத்ரா” என்றழைத்தான். அவனை பார்த்தாள்.

“ஐ லவ் யூ”

அவன் புன்னகைக்க அவளும் பதிலுக்கு புன்னகைத்து இறங்கி வீட்டினுள் சென்றாள்.

கெஸ்ட் ஹவுஸ் வந்து சேர்ந்தவன் ஹாலில் அமர்ந்திருந்த தந்தையிடம் எதுவும் பேசாமல் சமையலறையுள் சென்றான்.

“அண்ணா... வந்துட்டியா? அம்மா டாடிகிட்ட சொல்லப் போறாங்க”

அவன் சுஜாவை பார்க்க “நீ எதுவும் பேசாத” என்றவர் டீ கப்புடன் ஹாலிற்கு சென்றார்.

பெருமூச்சுடன் “வா போகலாம்” என்று தங்கையை அழைக்க “நீ போ. அம்மா என்னை வர கூடாதுன்னு சொல்லியிருக்காங்க” என்றாள்.

அவன் தலையசைத்து திரும்ப “எல்லாம் ஓகே ஆகிடும். போண்ணா” என்று அவன் முதுகில் தட்டி தைரியம் கூறினாள்.

அவன் ஹாலிற்கு வந்தபோது “ஆதர்ஷ் கல்யாணம் பத்தி ஏதாவது யோசிச்சு வெச்சிருக்கீங்களா?” என்று பேச்சை ஆரம்பித்தார் சுஜா.

“அவனுக்கு ஓகேன்னா பொண்ணு பார்க்க ஆரம்பிக்கலாம். என்ன ஆதர்ஷ்?”

“நான் ஒரு பொண்ணு பார்த்து வெச்சிருக்கேன். நேத்து சபரீஷ் வீட்டுல பார்த்தோமே... நக்ஷத்ரா. எனக்கு அந்த பொண்ணு ரொம்ப பிடிச்சிருக்குங்க”

“உனக்கு பிடிச்சிருக்கா? இல்ல அவனுக்குப் பிடிச்சிருக்கா?”

“அவனுக்கும் பிடிச்சிருக்கு. அந்த பொண்ணையே ஆதர்ஷுக்கு...”

“கேஸ்ட் வேறன்னாக் கூட பரவாயில்ல சுஜா. இது ஸ்டேட்டே வேற... அதோட அந்த பொண்ணோட பேரன்ட்ஸ் லவ் மேரேஜ். அப்பா மலையாளி தான?”

“அதனால என்னங்க? நீங்க எப்பையிலிருந்து இப்படி கேஸ்ட் எல்லாம் பார்க்க ஆரம்பிச்சீங்க?”

“புரியாம பேசாத சுஜா. ஆல்ரெடி அம்மா தமிழ் அப்பா மலையாளி. இப்போ இவன கல்யாணம் பண்ணி... இது இன்னும் காம்ப்ளிகேட் ஆகும்”

“ஆனா ஆகிட்டுப் போகுது. எனக்கு அந்த பொண்ண பிடிச்சிருக்கு. ஆதர்ஷுக்கு பிடிச்சிருக்கு. அவ இந்த வீட்டு மருமகளா வரணும்னு நான் ஆசைப்படுறேன்”

“எனக்கு விருப்பமில்ல சுஜா”

“என்னங்க நீங்க புரிஞ்சுக்காம பேசிக்கிட்டு... நம்ம...”

“மாம்... போதும்மா”

“உன்னை பேசாதன்னு சொன்னேனா இல்லையா? அமைதியா இரு. நான் முடிவுப் பண்ணிட்டேன். அவளதான் ஆதர்ஷுக்கு கல்யாணம் பண்ணி வைப்பேன்”

“உங்க இஷ்டம்” என்ற மோகன் எழுந்து செல்ல தாயின் அருகில் வந்தான் ஆதர்ஷ்.

“என்னம்மா இப்படி பேசிட்டீங்க? அப்பா பேச்ச மீறி வீட்டுல இதுவரைக்கும் யாராவது எதிர்த்து பேசியிருக்கோமா? இத்தன வருஷத்துல நீங்க டாடிய இப்படி எடுத்தெறிஞ்சு பேசி நான் பார்த்ததே இல்ல மாம். வேணாம் விட்டுடுங்க”

“உன் டாடி பேச்ச மீறி பேசினதில்லன்னா அது அவங்க மேல நம்ம வெச்சிருக்க மரியாதை. நம்பிக்கை. அவங்க சொன்னதெல்லாம் நான் கேட்டதுக்கு அர்த்தம் அவங்க என்னை பேசவே விடலங்குறது இல்ல. அவங்க சொன்ன நல்லது எல்லாத்தையும் நான் ஏத்துக்கிட்டேன்.

இப்போ நான் அவங்கள எடுத்தெறிஞ்சு பேசல ஆதர்ஷ். என் பையனுக்கு நல்லது நடக்கணும்னு பேசினேன். கொஞ்சம் கோபமா பேசியிருக்கலாம். அதுக்காக மரியாதை இல்லாம நான் பேசிடல. அது உன் அப்பாவுக்கும் தெரியும். அவங்க யோசிப்பாங்க. உனக்கு இதெல்லாம் புரிய இன்னும் நாள் ஆகும். நீ போய் தூங்கு. ஏதாவது சாப்பிடுறியா?”

“வேண்டாம் மாம். பட் ப்ளீஸ் டாடிகிட்ட இப்படி பேசாதீங்க”

“அடப்போடா... நாங்க என்ன இப்போ சண்டையா போட்டோம்? நிம்மதியா தூங்கு. கண்டிப்பா அப்பாகிட்ட திரும்ப நான் பேசுறேன்”

சிரிக்க முயன்று தோற்றவனாய் சென்று படுத்தான் ஆதர்ஷ். உறங்க முடியுமென்றுத் தோன்றவில்லை. அறையினுள் வந்த வினோ “நீ தூங்குண்ணா. அம்மா பேசுறேன்னு சொல்லியிருக்காங்கல்ல... கண்டிப்பா அப்பா ஒத்துப்பாங்க. நிம்மதியா தூங்கு” என்றுக் கூறி அவன் நெற்றி வருடினாள்.

சிறு வயதில் அவன் அவளுக்கு இப்படி ஆறுதல் சொல்வது வழக்கம். இன்று தங்கை வளர்ந்து தன்னை உறங்க வைக்க முயல்கிறாள் என்று நினைத்தவன் புன்னகையுடன் கண்களை மூடினான்.

நக்ஷத்ரா உடை மாற்றி படுக்க சென்ற நேரம் “நீ கொஞ்சம் வா. பேசணும்” என்றழைத்தார் கீதா.

“தூக்கம் வருதும்மா. என்ன விஷயம்?”

“வாடி”

விஜயன் அருகில் வந்தமர்ந்தவர் “உட்காரு” என்று எதிர் சோபாவை கை காட்ட அவள் அமர்ந்ததும் கணவரிடம் பேச ஆரம்பித்தார்.

“இந்த தடவ ஊருக்குப் போயிருந்தப்போ அம்மா என்கிட்ட ஒரு விஷயம் கேட்டாங்க. வந்து... நம்ம நக்ஷத்ராவ சந்தோஷுக்கு கட்டி குடுக்க இஷ்டமான்னு...”

விஜயன் மகளை பார்த்தார். கைகளை இறுகப் பற்றி தாயை பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.

“நினக்கு இஷ்டமானோ மோளே?”

“இல்லா அச்சா... எனிக்கு ஓட்டும் இஷ்டம் இல்லா”

பட்டென்று வந்த மகளின் பதிலை கேட்டவர் “மோள்கு இஷ்டமில்லெங்கில் வேண்டா... எந்தா கீதே?” என்றார்.

“இல்லங்க... அம்மா கேட்டப்போ எனக்கும்...”

“வேண்டா கீதா. அவள்கு இஷ்டமில்லாத்த ஜீவிதம் எந்தினா? அம்மையோடு பரஞ்சேக்கு... இது ஷெரியாவில்லான்னு”

கீதா நக்ஷத்ராவை பார்க்க அவர் எதுவும் கேட்கும் முன்னர் எழுந்து அறைக்குள் வந்தாள். மனதில் சுத்தமாக நிம்மதி இல்லாமல் போனது.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
23

மாலை நக்ஷத்ரா கண் விழித்தப் பிறகு கீதா அவளிடம் எதுவும் கேட்கவில்லை. ஆனால் தந்தையும் வீட்டில் இல்லாத சமயம் தாயிடம் எதுவும் பேச வேண்டாமென்று நினைத்து ஆதர்ஷிற்கு கால் செய்தாள்.

“சொல்லு நக்ஷத்ரா”

“இப்போவே வந்து என்னை கூட்டிட்டுப் போ’

“இப்போவா?”

“உடனே வா”

“நான் இப்போதான் குளிக்கப் போறேன். சீக்கிரம் வந்திடுறேன். மணி 6 தான் ஆகுது. அதுக்குள்ள என்னடா?”

“நீ வா. சொல்லுறேன்”

“சரி ரெடியா இரு” என்றவன் மொபைலை வைத்துவிட்டு குளிக்கச் சென்றான்.

அவள் வீட்டின் அருகில் நிறுத்தி அவளுக்கு கால் செய்தபோது அழைப்பு துண்டிக்கப்பட்டது. வெளியே வந்தவளின் முக வாட்டத்தை பார்த்தவன் “காலையில நல்லாதான இருந்தா... இப்போ என்னாச்சு?” என்ற யோசனையுடன் காரை எடுத்தான்.

அலுவலகம் வந்ததும் நேரே அவனுடைய அறைக்கு சென்றாள். கைபையை மேஜை மீது வைத்து அவனை பார்க்க அவள் பின்னால் வந்தவன் லேப் பேகை மேஜை மீது வைத்து அதில் சாய்ந்து நின்று அவளை பார்த்தான்.

“அம்மா என் கல்யாணத்த பத்தி நேத்து பேசுனாங்க. சபரீஷ் வீட்டுலேருந்து வந்ததுக்கப்பறம்”

அவன் எதுவும் பேசவில்லை என்றதும் “சந்தோஷுக்கும் எனக்கும் கல்யாணம் பண்ண பாட்டி கேட்டாங்களாம்” என்றாள்.

சந்தோஷ் என்ற பெயரை கேட்டதும் காரணமின்றி கோபம் தலைக்கேறினாலும் அதை வெளியில் காட்டாது “நீ என்ன சொன்ன?” என்றுக் கேட்டான்.

“அம்மா அப்பாகிட்டதான் கேட்டாங்க. அவங்க அப்படிக் கேட்டதும் எனக்கு என்ன பண்ணுறதுன்னுத் தெரியல. அப்பா என்கிட்ட கேட்டாங்க”

“நீ என்ன சொன்ன நக்ஷத்ரா? எனக்கு வேண்டியது உன்னோட பதில் மட்டும் தான்”

“எனக்கு இதுல சுத்தமா இஷ்டம் இல்லன்னு சொல்லிட்டேன்”

அவன் வலது கரம் நீட்ட அவள் இடது கரத்தை அதில் வைத்தாள். அவளை தன்னருகில் இழுத்து அவள் விரலோடு விரல் கோர்த்துக் கொண்டான்.

அவன் தோளில் தலை சாய்த்து “அப்பா இருந்ததால தப்பிச்சேன். எனக்கு இஷ்டம் இல்லன்னா இந்த கல்யாணம் வேண்டாம்னு பாட்டிகிட்ட சொல்ல சொல்லிட்டாங்க. இருந்தாலும் எனக்கென்னமோ வீட்டுல இருக்கவே பிடிக்கல. அதான் உன்னை உடனே வர சொன்னேன்” என்றாள்.

“எனக்குமே உன்னை பார்க்கணும் போல இருந்துது. சரியா தூங்கவே இல்ல”

“ஏன்?” அவனை நிமிர்ந்துப் பார்த்தாள்.

“அம்மா அப்பாகிட்ட பேசிட்டு இருக்காங்க”

“என்ன சொன்னாங்க?”

ஏற்கனவே கவலையில் இருப்பவளை மேலும் வறுத்த விரும்பாமல் “இப்போதான சொல்லியிருக்காங்க... டாடி எதுவும் சொல்லலயாம். மம்மி பார்த்துப்பாங்க. விடு” என்றான்.

அவள் முகம் அப்போதும் தெளிவடையாமல் இருக்க “ஒண்ணும் ஆகாது நக்ஷத்ரா” என்றான்.

“நிஜமா ஒண்ணும் ஆகாதா?”

“ம்ம்ஹும்”

அவன் அருகில் இருந்தாலே எதுவும் ஆகாதென்று நினைத்தவள் மீண்டும் அவன் தோளில் தலை சாய்த்துக் கொண்டாள்.

“சாப்பிட்டியா?”

“இல்ல”

மணியை பார்த்தவன் “சரி வா. சாப்பிட்டு வரலாம். எப்படியும் இன்னும் ஒன் ஹவர் டைம் இருக்கு” என்றுக் கூற “நீ ஆர்டர் பண்ணு இங்கயே சாப்பிடலாம். எனக்கு இப்போ உன் பக்கத்துலயே இருக்கணும் போலருக்கு” என்றாள்.

வேகமாக மொபைலை எடுத்தவன் மெல்ல அவளை திரும்பிப் பார்த்தான்.

“ஹோட்டல் நம்பர் இல்ல... அதான? அந்த நம்பர என்கிட்டேருந்து வாங்கவே மாட்டியா நீ?”

“அது எதுக்கு எனக்கு? அதான் நீ இருக்கியே... எனக்காக ஆர்டர் பண்ண மாட்டியா?”

“நீ இங்க வந்ததுலேருந்து பண்ணிட்டு தான இருக்கேன்? சொல்லு... என்ன வேணும்?”

அவள் இப்படி பேசுவதே நிம்மதியை அளிக்க அன்று முழுவதும் அவளைப் பார்க்கும்போதெல்லாம் தன் கலக்கத்தை மறைத்து புன்னகைத்தபடி இருந்தான்.

காலை அவளை வீட்டில் இறக்கிவிட்டபோது “இன்னைக்கு லீவ். சோ ஒழுங்கா தூங்கு. அம்மாகிட்ட சண்ட போடாத. அவங்க எது சொன்னாலும் பொறுமையா கேளு. கத்தாத. எதுக்கும் டென்ஷன் ஆகாம இரு” என்றான் ஆதர்ஷ்.

“நீ இருக்கப்போ எனக்கு என்ன டென்ஷன்? நீ என்னை மாதிரி புலம்ப மாட்டேங்குற. எனக்காக சிரிச்சுப் பேசுறன்னு நல்லா தெரியுது. நீ டென்ஷன் ஆகாம இரு. எல்லாம் சரியா போயிடும்”

எவ்வளவுதான் அவள் முன்னால் முகத்தில் எதையும் காட்டிக் கொள்ளக் கூடாது என்று நினைத்தாலும் அவள் தன்னை சரியாகப் புரிந்து வைத்திருப்பதை எண்ணியபோது அவளோடு வாழப் போகும் தன் வாழ்வு நிறைவாக அமையும் என்ற நிம்மதி உண்டானது.

எல்லாம் வீட்டிற்கு வந்து சேரும் வரை மட்டுமே. தந்தையை கண்டதும் அவர் தன்னிடம் நேற்று இரவிலிருந்து பேசாதது உறுத்தியது. தாயை தேடிச் சென்றான். வினோதினியுடன் அவனுடைய அறையில் அமர்ந்திருந்தார்.

“வா ஆதர்ஷ். டீ குடிக்குறியா?”

“அதெல்லாம் வேண்டாம். டாடி என்கிட்ட பேசவே இல்லம்மா. உங்ககிட்டயாவது பேசினாங்களா?”

“அம்மாகிட்ட அவங்க பேசாம இருப்பாங்களாண்ணா? டாடி எப்பயும் போல தான் இருக்காங்க. நீ ஓவரா யோசிக்குறதால உனக்கு தான் எல்லாம் வித்தியாசமா தெரியுது. நீ போய் பேசு”

“அவ சொல்லுறது சரி தான் ஆதர்ஷ். போய் பேசு. அது எப்படி உன்கிட்ட பேசாம போயிடுவாங்கன்னு நானும் பார்க்குறேன்”

“மாம்... நீங்க இப்படி வரிஞ்சுகட்டிக்கிட்டு சண்டைக்கு போறத நிறுத்துங்க முதல்ல”

“இவனுக்கு விளக்குறதுக்குள்ள... டேய் இது சண்டை இல்லன்னு சொல்லுறேனா இல்லையா? நம்பு ஆதர்ஷ். நீ போய் பேசு போ”

தயங்கி தயங்கி ஹால் வரை வந்தவன் சில நொடிகள் அப்படியே நின்று தந்தையை பார்த்தான். ஒரு முடிவுடன் மோகன் அருகில் சென்று “டாடி” என்றழைத்தான்.

“சொல்லு ஆதர்ஷ்”

அவர் முகத்தை திருப்பியிருந்தால் எதற்காக பேசாமல் இருக்கிறீர்கள் என்றுக் கேட்கலாம். அவர் தன்னிடம் பேசுவார் என்று நினைத்திராதவன் ஒரு நொடி விழித்து தொண்டையை சரி செய்தான்.

“அம்மா நேத்து சொன்ன விஷயத்துக்கு நீங்க எதுவும் சொல்லலயே”

“அம்மாகிட்ட சொன்னது தான் உன்கிட்டயும் சொல்லுறேன். இப்போ எல்லாம் ஈஸியா தெரியும். பின்னாடி நிறைய காம்ப்ளிகேஷன்ஸ் வரும். பசங்கள வளர்க்குறதுலேருந்து வீட்டு பழக்க வழக்கம் வரைக்கும்”

“நான் பார்த்துப்பேன் டாடி”

“அந்த பொண்ண அவ்வளவு பிடிச்சிருக்கா?”

இவ்வளவு நேரம் நின்றபடி பேசியவன் அவரருகில் சென்றமர்ந்தான். “பிடிச்சிருக்கு டாடி. நான் எதையும் யோசிக்காம சொல்லல. நான் வீட்டுக்கு வந்தப்போவே அம்மா கேட்டாங்க. அப்போ கூட நான் தெளிவா எதையும் சொல்லல. யோசிக்க நிறைய டைம் எடுத்துக்கிட்டேன். ஆனா இப்போ... நான் பார்த்துப்பேன். எது வந்தாலும் சமாளிச்சுடுவேன் டாடி”

மகன் தன் முகத்தை பார்த்து தெளிவாக பேசியப் பிறகு மோகனிற்கு மறுக்கக் காரணம் கிடைக்கவில்லை. சோபாவிலிருந்து எழுந்து “ஓகே” என்றுக் கூறி அவள் தோளில் தட்டிவிட்டு சென்றார்.

அவர் எழுந்து செல்வதற்காகவேக் காத்திருந்த வினோ ஓடி வந்து “கங்க்ராட்ஸ்டா... ட்ரீட்? சாக்லேட் வாங்கி குடு” என்று அவன் கையை பிடித்துக் குலுக்கினாள்.

“இப்போவும் சாக்லேட் தானா வினோ?”

“போடா. வாங்கி குடு. நான் இந்த விஷயத்த முதல்ல அண்ணிகிட்ட சொல்லிட்டு வரேன். உனக்கு முன்னாடி நான் தான் சொல்லுவேன்”

உள்ளே எழுந்து ஓடியவள் “ஹேய் நான் சொல்லுறேன் வினோ” என்று அவன் கத்தியதை காதில் வாங்கவில்லை.

“பேசிட்டாங்களா? சந்தோஷமா? இதுக்கு நேத்துலேருந்து மூஞ்சிய தூக்கி வெச்சுட்டு உட்கார்ந்திருந்த நீ...”

“நான் பயந்துட்டேன் மாம். இப்போ நிம்மதியா இருக்கு”

புன்னகையுடன் அவனறைக்குள் வந்தபோது “நேத்துலேருந்து அவன் மூஞ்சிய பார்க்க சகிக்கல... ஆபீஸ்லயும் இஞ்சி தின்ன குரங்கு மாதிரியே சுத்தியிருப்பானே... இப்போ தான் சிரிக்குறான் அண்ணி” என்று வினோ பேசியது காதில் விழுந்தது.

“அய்யய்யோ... இதுங்க நம்பர் எக்ஸ்சேஞ் பண்ணப்போவே நெனச்சேன்... என் பேரு டேமேஜ் ஆகும்னு” தலையிலடித்து அவளருகில் வந்தவன் மொபைலை பிடுங்கி காதில் வைத்தான்.

“என்ன இளிப்பு உனக்கு? அவ சொன்னா நீ சிரிப்பியா? கட் பண்ணு நான் என் மொபைலேருந்து கூப்பிடுறேன்”

“கொஞ்ச நேரம் பேச விடமாட்டியாண்ணா? அதுக்குள்ள வந்துட்ட ச்ச...”

புலம்பியபடியே தன் மொபைலை வாங்கிக் கொண்டு அவள் செல்ல தன் மொபைலிலிருந்து நக்ஷத்ராவிற்கு அழைத்தான் ஆதர்ஷ்.

“நான் அவகூட பேசினா உனக்கென்ன? எதுக்கு மொபைல பிடுங்கின?”

“என்னைய கிண்டல் பண்ணுறதுன்னா நீ நல்லாவே பேசுவன்னு எனக்குத் தெரியும். நான் அப்பாகிட்ட நேராவே பேசிட்டேன்”

“வினோ சொன்னா. கொஞ்சம் நிம்மதியா இருக்கு. முழுசா சந்தோஷப்பட முடியல. அம்மா ஏதாவது பேச ஆரம்பிச்சுடுவாங்களோன்னு அவங்கள கண்டாலே ஓடிக்கிட்டு இருக்கேன். பார்க்கலாம்.

ஆபீஸ்ல உன் முகத்தைப் பார்த்து எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துது. அட்லீஸ்ட் உங்க வீட்டுல எந்த பிரச்சனையும் இல்லாம நம்ம கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டா நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து கோவிலுக்கு வரதா வேண்டிக்கிட்டேன். கண்டிப்பா போகணும்”

“கோவிலுக்கா?? பார்க்கலாம். முதல்ல இவங்க இன்னைக்கு ஊருக்குக் கிளம்பட்டும். நீ வீட்டுல ஒழுங்கா இரு. நான் அப்பறம் பேசுறேன். ரொம்ப தூக்கம் வருது. கொஞ்ச நேரம் தூங்கிட்டு எங்கயாவது வெளில கூட்டிட்டுப் போகணும்”

“ஆமா ஆதர்ஷ். அவங்ககூட கொஞ்சம் டைம் ஸ்பென்ட் பண்ணு. நான் அப்பறம் கால் பண்ணுறேன். பை”

மாலை தன் குடும்பத்துடன் அருகிலிருந்த மாலிற்கு சென்றான். ‘அதை வாங்கி தா இதை வாங்கி தா’ என்று பார்ப்பவற்றை எல்லாம் வாங்கினாள் வினோதினி. “இது ரொம்ப அழகா இருக்கு... அண்ணிக்கும் ஒண்ணு வாங்குடா” என்று சிபாரிசு செய்து நக்ஷத்ராவிற்கும் வாங்க வைத்தாள்.

“போதும் வினோ. எதுக்கு இத்தனைய வாங்குற?” என்று சுஜா மிரட்டி அவளை அடக்கி வைத்தார்.

வெளியில் கிளம்பும் முன் நக்ஷத்ராவிற்கும் கிப்ட் வாங்க வேண்டும் என்றுதான் அவன் நினைத்தான். ஆனால் வினோதினி அவனை அலையவிட்டதில் சோர்ந்து “அதான் இவ்வளவு வாங்கிட்டோமே... போதும்” என்று முடிவெடுத்துவிட்டான்.

இரவு அவர்கள் கிளம்பியபோது மீண்டும் தனியாக இருக்க வேண்டுமே என்று அவனுக்கு வருத்தமாக இருந்தது.

நக்ஷத்ரா அமைதியாக இருந்தாள். தாயிடம் பேசவிடாமல் எதுவோ ஒன்று தடுத்தது. தன் திருமணம் குறித்து அவர் பெச்செடுக்கக் கூடும் என்ற பயமாக இருக்கலாம். அறைக்குள்ளேயே அடைந்திருந்தவள் மணியை பார்த்துவிட்டு ஆதர்ஷிற்கு அழைத்தாள்.

“கிளம்பிட்டாங்களா? இனி நீ தனியா இருக்கணுமே?”

“இப்போதான் ஸ்டேஷன்லேருந்து வரேன். அவங்க போனதும் நல்லதுன்னு தோணுது. டாடி என்ன நினைப்பாங்க... மம்மி என்ன சொல்லுவாங்கன்னு யோசிக்காம மைன்ட் ப்ரீயா இருக்கும். ஆனா தனியா இருக்கணுமேன்னு கடுப்பாவும் இருக்கு. ஹ்ம்ம்...”

“எனக்கு வீட்டுல இருக்க போர் அடிக்குது. அம்மாகூடவும் பேசாம ரூம்...”

“எதுக்கு அம்மாகூட பேசாம இருக்க? போய் பேசு நக்ஷத்ரா. அவங்க ஒண்ணும் உன்ன கம்பெல் பண்ண மாட்டாங்க. நீ பேசலன்னா அவங்களுக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கும்? பேசாம இருக்காத”

“ஏன் சந்தோஷ் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னுக் கேட்டா?”

“பிடிக்கலன்னு சொல்லு. சந்தோஷ நான் அப்படி யோசிச்சுப் பார்க்கலன்னு சொல்லு. இது சரி வராதுன்னு சொல்லு. அத விட்டுட்டு... நீ போய் பேசாம இருந்தா சரி ஆகிடுமா? அவங்களா வந்து உன்கிட்ட கேட்க மாட்டாங்களா?”

“கேப்பாங்க தான்... சரி நான் போய் அம்மா என்ன பண்ணுறாங்கன்னுப் பார்க்குறேன். காலையிலிருந்து ரூம் உள்ளயே உட்கார்ந்திருக்கேன். பை”

“பை”

அவள் வெளியே எழுந்து வந்தபோது கீதா ஹாலில் புத்தகம் வாசித்துக் கொண்டிருந்தார். அவளை அவர் திரும்பிப் பார்க்கவில்லை எனவும் அவரருகில் சென்றமர்ந்தாள். அப்போதும் அவர் திரும்பவில்லை.

“பேச மாட்டியாம்மா?”

“புக் படிக்குறது தெரியல?”

“தெரியுது தெரியுது... நீ என்ன அவாய்ட் பண்ணுறது நல்லாவேத் தெரியுது”

“அது நாள் பூரா ரூம் உள்ள உட்கார்ந்திருந்தப்போ உனக்குத் தெரியலையா?”

அவளால் பதில் கூற முடியவில்லை.

“சரி சரி... சமையல் செஞ்சியா? இல்ல இதான் சாக்குன்னு ஜாலியா உட்கார்ந்து புக் படிக்குறியா? எனக்கு பசிக்குது”

“மத்தியானம் வந்து எழுப்பினப்போ பசி தெரியலையா? எல்லாம் உன் இஷ்டத்துக்கே என்னவோ பண்ணு...”

புத்தகத்தை மூடி வைத்து எழுந்தவர் பின்னால் சென்று “தெட்டுப்பட்டி போயதா... கீதே என்னே க்ஷமிக்குமோ?” என்றாள்.

கணவன் மனைவிக்குள் நடக்கும் சண்டையின்போது விஜயன் இதை கேட்டுதான் கீதாவை சமாதானம் செய்வார்.

அவரை போலவே நக்ஷத்ரா கேட்கவும் சிரித்துவிட்டவர் “போடி... போய் பல்லு விளக்கு முதல்ல... எந்திரிச்சதும் நேரா கிட்சன் உள்ள வரா... போ போ...” என்று அவளை விரட்டினார்.

வீட்டிலிருந்த இறுக்கம் தளர்ந்து மனதிலிருந்த பாரம் குறைந்ததை உணர்ந்தவள் “போறேன் போறேன்” என்றுக் கூறி அறையினுள் வந்தாள்.

ஆதர்ஷ் சொன்னது எவ்வளவு சரியென்று அவளுக்கு நன்றாகப் புரிந்தது. தாயிடம் பேசாமல் இருப்பதால் எதுவும் சரியாகப் போவதில்லை. அதே நேரம் திருமணம் குறித்துக் கேள்விக் கேட்டால் தன்னால் தற்போது தன் காதலை பற்றி அவரிடம் கூற முடியுமா என்ற சந்தேகமும் இருந்தது.

கேட்டால் பார்த்துக் கொள்ளலாம். எதையாவது கூறி சமாளித்துவிடலாம் என்று முடிவெடுத்தவள் அதன் பின் கீதாவுடன் எப்போதும் போல் பேசினாள்.

திங்கட்கிழமை மதியம் வரை உறங்கி எழுந்த ஆதர்ஷிற்கு அதற்குமேல் உறக்கம் வரவில்லை. என்ன செய்து பொழுதை கழிப்பதென்று புரியாமல் வீட்டை சுற்றி வந்தான்.

“இன்னைக்கு ஏன் பொழுதேப் போக மாட்டேங்குது?” என்று அலுத்துக் கொண்டவன் நக்ஷத்ராவை அழைப்பதற்காக மொபைலை எடுத்தபோது அவளே அவனை அழைத்தாள்.

“இப்போதான் உனக்கு கால் பண்ணலாம்னு மொபைல் எடுத்தேன்”

“அதெல்லாம் சரி... இப்போ உன்னால கிளம்பி வர முடியுமா? எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. கடைக்குப் போகணும். முடிச்சுட்டு சீக்கிரம் ஆபீஸ் போகலாம்”

“தர்ட்டி மினிட்ஸ். அங்க இருப்பேன்” அழைப்பைத் துண்டித்து அவசரமாக குளித்துக் கிளம்பினான்.

அவன் அவளை ஹோட்டலிற்கு அழைத்து சென்றிருக்கிறான். அது தற்செயலாக நடந்தது தான் என்றாலும் மனதில் அவள் தன்னை எங்கே அழைத்து செல்வாள் என்ற எதிர்ப்பார்ப்பு. அவள் தன்னை முதல் முறையாய் வெளியே செல்ல அழைக்கிறாள் என்ற சந்தோஷத்தில் அவள் வீட்டின் முன்னால் அவளுக்காகக் காத்திருந்தான்.

அவள் சொன்ன வழியில் காரை செலுத்தியவனுக்கு அவள் நிறுத்த சொன்ன கடையை பார்த்ததும் சப்பென்று ஆகிவிட்டது.

“முதல் முதல்ல என்னை வெளிய கூப்பிடுற... நாய் வாங்கவா கூட்டிட்டு வந்த?”

“இல்ல நாய் பிஸ்கட் வாங்க”
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
பகுதி - 24

எத்தனையோ எதிர்ப்பார்ப்புகளுடன் வந்த ஆதர்ஷ் நக்ஷத்ரா தன்னை அழைத்து வந்திருக்கும் கடையை பார்த்ததும் நொந்துவிட்டான்.

“முதல் முதல்ல என்னை வெளிய கூப்பிடுற... நாய் வாங்கவா கூட்டிட்டு வந்த?”

“இல்ல நாய் பிஸ்கட் வாங்க”

“நாய் பிஸ்கட்... ஹே நில்லுடி... என்னைப் பார்த்தா எப்படித் தெரியுது? உங்க வீட்டு நாய்க்கு பிஸ்கட் வாங்க எல்லாம் என்னால டிரைவர் வேலை பார்க்க முடியாது”

“எங்க வீட்டுல நாய் இருக்குறத நீ பார்த்தியா?”

“இல்ல... ஆமா உங்க வீட்டுல நாய் இல்லல்ல... அப்பறம் எதுக்கு?”

“பக்கத்து வீட்டு ஆன்ட்டி நீ வெளில போறப்போ வாங்கிட்டு வந்து தரியான்னுக் கேட்டாங்க. நானும் உன்னோட அவுட்டிங் போன மாதிரி இருக்கட்டுமேன்னுக் கூட்டிட்டு வந்தேன்”

“பக்கத்து வீட்டுக்கா? இதுக்கு பேரு அவுட்டிங்கா? கேட்டுட்டே இருக்கேன்... நீ பாட்டுக்குப் போயிட்டே இருக்க? நான் உள்ள வர மாட்டேன்”

“சரி இங்கயே வெயிட் பண்ணு. வாங்கிட்டு வந்திடுறேன்”

சலித்தபடியே அவள் பின்னால் கடையினுள் நுழைந்தான். நக்ஷத்ரா பிஸ்கட் வாங்கிவிட்டு பணத்தை கொடுத்தாள். சில்லறை இல்லையென கடைக்காரர் கூற “உன்கிட்ட சேஞ்ச் இருக்கா?” என்று ஆதர்ஷிடம் கேட்டாள்.

அவன் மறுப்பாக தலையசைக்க தான் சென்று சில்லறை மாற்றிவிட்டு வருவதாகக் கூறி கடையிலிருந்து வெளியே சென்றார் கடைக்காரர்.

ஆதர்ஷ் கவனமாக கடையை சுற்றிப் பார்த்தான். வாசல்புறம் திரும்பி கண்ணாடி கதவு மூடியிருப்பதை உறுதி செய்துக் கொண்டான்.

அவனையே பார்த்துக் கொண்டிருந்த நக்ஷத்ரா “என்னத்த சுத்தி சுத்தி பார்க்குறான்?” என்று யோசிக்கும்போதே அருகிலிருந்த ஒரு நாய் சங்கிலியை எடுத்து இரண்டு கைகளில் பிடித்து அவள் தலையை சுற்றி போட்டு அருகில் இழுத்தான்.

“ஆதர்ஷ் என்ன பண்ணுற?”

“ம்ம்... ஹிப் செயின் வாங்கப் போறேன். உனக்கு. சைஸ் தெரியணும். அளந்துக்கிட்டிருக்கேன்”

அவள் இடையை சுற்றி சங்கிலியை இறுக்கி பிடித்து நிற்பவனை மிக அருகில் பார்த்தவள் ஒரு நொடி தடுமாறினாள்.

அவன் நிமிரவே இல்லையெனவும் “ஒட்டியானத்துக்கு சைஸா? அதையும் நீ அளக்குற? ம்ம்... இதுக்குதான் கடைய சுத்தி பார்த்தியா? கேமரா எதுவும் இல்ல... ஆளும் இல்லன்னதும் என்னென்ன வேலை பண்ணுற நீ?” என்றாள்.

அவளை நிமிர்ந்துப் பார்த்தவன் “நான் என்ன பண்ணுறேன். சைஸ் நோட் பண்ணிட்டு இருக்கேன். கரெக்ட் பிட் வாங்கணும்” என்றுக் கூறு சங்கிலியை இன்னும் இறுக்க அவள் அவனை இன்னும் நெருங்கி நின்றாள்.

“ஆதர்ஷ் விடு ஆதர்ஷ்... யாராவது வந்துப் பார்த்தா...”

அவள் கண்களை பார்த்தபடியே சங்கிலியை ஒரு கையில் எடுத்தவன் அதை எடுத்த இடத்தில் வைத்தான்.

சில நொடிகளில் கடைக்காரர் வந்து சில்லறையை கொடுக்க கடையை விட்டு வெளியே வந்ததும் “செயின் வெச்சுட்டு வந்துட்ட? அப்பறம் சைஸ் எப்படித் தெரியும்?” என்றுக் கேட்டாள்.

“செயின் தேவையில்ல. கல்யாணத்துக்கு அப்பறம் ஹக் பண்ணி பார்த்து அளவெடுத்துப்பேன். நீ உட்காரு” என்றுக் கூறி காரில் அமர்ந்து ஸ்டார்ட் செய்தான்.

தேவையில்லாமல் கேள்விக் கேட்டுவிட்டோமோ என்று நினைத்தவள் அமைதியாக அவனருகில் அமர்ந்தாள்.

அலுவலகத்தின் முன்னால் காரை நிறுத்தியதும் செக்யூரிட்டி விஷ் செய்ய பதிலுக்கு விஷ் செய்தவன் “மேத்யூ வந்தாச்சுப் போலருக்கு” என்றபடியே உள்ளே நுழைந்தான்.

“ஹே ஸ்வைப் மிஷின்ஸ் பிக்ஸ் பண்ணியாச்சா?”

உள்ளே நுழையும் கதவருகில் இருந்த மிஷினை பார்த்தவன் “ம்ம் நேத்து வந்து பிட் பண்ணிட்டாங்கன்னு சபரீஷ் சொன்னான். இன்னைக்கு மார்னிங் வந்து அட்டெண்டன்ஸ் ரெக்கார்ட் ஆகுதான்னு பார்த்துட்டாங்களாம். மேடம் ஆர்டர் போட்ட வேலை ஒழுங்கா நடந்துடுச்சா?” என்றான்.

“ம்ம் ம்ம்... எல்லாம் ஒழுங்கா நடக்குது. குட்”

ஆதர்ஷ் சிரிக்க அவள் வேகமாக உள்ளே வந்துவிட்டாள். அவளை ரசித்தபடியே மேத்யூவை தேடிச் சென்றவன் அவனிடன் எல்லாம் சரியாய் இருக்கிறதா என்றுக் கேட்டுவிட்டு தன் வேலையை கவனிக்கச் சென்றான்.

அடுக்களையை சுத்தம் செய்துவிட்டு வெளியே வந்த கீதாவின் மொபைல் ஒலித்தது. அழைப்பது சரஸ்வதி என்றதும் ஒரு நொடி யோசித்தவர் அழைப்பை ஏற்று “எப்படிம்மா இருக்கீங்க?” என்றுக் கேட்டார்.

“நல்லா இருக்கேன் கீதா. மாப்பிள்ளையும் நக்ஷத்ராவும் நல்லா இருக்காங்களா?”

“இருக்காங்கம்மா. தூங்கலையா?”

“எங்க... சந்தோஷ் இன்னும் வரல. இன்னும் அரை மணி நேரம் ஆகும் நீங்க தூங்குங்கன்னு இப்போதான் கால் பண்ணான். தூக்கம் வரல. அதான் கால் பண்ணேன்”

“வந்து திட்டப் போறான்மா... இப்போ இடுப்பு வலி எப்படி இருக்கு?”

“ரெண்டு நாள் மருந்து சாப்பிட்டதுல இப்போ தேவலாம் கீதா”

“ஒழுங்கா மருந்து சாப்பிட்டா எல்லாம் சரியாகும். நீங்க வேளா வேளைக்கு கரெக்டா சாப்பிடுங்க”

“அவன மாதிரி நீயும் ஆரம்பிக்காத... அட்வைஸ் பண்ணுறதுக்கு. வெச்சுடட்டுமா?”

சிரிப்புடன் “சரிம்மா. உடம்பப் பார்த்துக்கோங்க” என்றவர் இணைப்பைத் துண்டித்தார்.

தாய் திருமணத்தைக் குறித்து பேசாதது நிம்மதியை தந்தாலும் சீக்கிரம் நக்ஷத்ராவின் பதிலையும் விஜயனின் முடிவையும் அவரிடம் தெரிவித்துவிட வேண்டும் என்று முடிவெடுத்து உறங்கச் சென்றார்.

பத்து மணிக்கு மேல் MD அறையினுள் நுழைந்த மேத்யூ “இன்னைக்கு 2 ஆள்காரு லீவ். கால் ரேட்...” என்று இழுக்க “இத ஏன் முன்னாடியே சொல்லல? யாரு லீவ்? முன்னாடியே லீவ் கேட்டிருந்தாங்களா?” என்றான் ஆதர்ஷ்.

“இல்லா ஆதர்ஷ்”

“நக்ஷத்ரா, முகுந்த் கால் பேசுறாங்களா?”

“பேசுறாங்க”

“அவங்க பேசியும் கால் ரேட்ஸ் கம்மியா இருக்குன்னா... சரி... இப்போ என்ன ஆல்டர்னேட்டிவ் சொல்யூஷன்?”

மேத்யூ அமைதியாக இருக்கவும் திரும்பி சபரீஷை பார்த்தான். “வா மச்சு” என்று அவன் கூற அறையை விட்டு வெளியே வந்தவன் இன்று விடுப்பு எடுத்திருந்தவர்களுள் ஒருவரின் இருக்கையில் சென்றமர சபரீஷ் மற்றொருவரின் இருக்கையில் அமர்ந்தான்.

“மேத்யூ கால்ஸ் மானிட்டர் பண்ணுங்க. எல்லாரும் கால் பேசுனா சரி வராது” ஆணை பிறப்பித்துவிட்டு ஹெட்போன் மாட்டி நம்பர் டயல் செய்ய ஆரம்பித்தான்.

ஒருநொடி அலுவலகத்தில் நிசப்தம் குடிக் கொண்டது. MD இருவரும் தங்களருகில் வந்தமர்ந்து தங்களைப் போலவே வேலை பார்ப்பார்கள் என்று நினைத்துப் பார்த்திராதவர்கள் அவர்களையேப் பார்க்க ஆதர்ஷ் ஹெட்போனை கழட்டி காலால் உந்தி சேரை பின்னுக்கு தள்ளி சுற்றி அமர்ந்திருந்தவர்களை ஒரு பார்வை பார்த்தான்.

அனைவரும் அவரவர் வேலையை கவனிக்க ஆரம்பிக்க மீண்டும் முன்னால் நகர்ந்து ஹெட்போனை மாட்டி கால் பேச ஆரம்பித்தான்.

முதல் ப்ரேக்கிற்கு சற்று முன் அறைக்குள் வந்த மேத்யூவின் மூலம் விபரம் அறிந்த நக்ஷத்ராவிற்கும் ஆச்சரியம். பிரேக்கின்போது அதை அவனிடம் கேட்டேவிட்டாள்.

“கால் பேசுனியா?”

பேன்ட்ரியில் நின்று அவள் அதிசயமாகக் கேட்க அங்கிருந்த மற்றவர்கள் தேநீர் அருந்துவதாக பாவனை செய்தாலும் அவர்கள் இருவரின் பேச்சில் கவனமாய் இருந்தனர். ஆதர்ஷ் அதை உணர்ந்தே இருந்தான்.

“ஏன்? பிபிஓ கம்பெனி வெச்சு நடத்துறவனுக்கு கால் பேசத் தெரியாதா? இப்படி பேசணும் அப்படி பேசணும்னு கிளாஸ் எடுக்கத் தெரிஞ்சவனுக்கு அப்படி பேசவும் தெரியும். 2 பேரு வரலன்னா கால்ஸ் எவ்வளோ குறையும் தெரியுமா? க்ளையன்ட்டுக்கு யார் பதில் சொல்லுறது? முன்னாடியே சொல்லிட்டு லீவ் எடுத்தா ஏதாவது ஆல்டர்னேட் அரேஞ்ச்மென்ட்ஸ் பண்ணலாம். அதெல்லாம் லீவ் எடுக்குறவங்களுக்கு அறிவு இருக்கணும். யார் வரலன்னாலும் சட்டைய மடிச்சு விட்டு உட்கார்ந்து வேலை பார்க்க எனக்குத் தெரியும்”

கொஞ்சம் கோபமாகவே அவன் பேசிச் சென்றது அங்கிருந்தவர்கள் மனதில் ஆழமாய் பதிந்தது. MD இருவரும் பேருக்கு ஏதோ செஷன் எடுக்கிறார்கள், வேலை குறித்து பேசுகிறார்கள் என்றல்லாமல் முழு வேலையும் தெரிந்தவர்கள், அவர்களை எந்த விதத்திலும் ஏமாற்ற முடியாதென்று நன்கு புரிந்தது.

சபரீஷும் அமைதியாக சென்று கால் பேச ஆரம்பித்தான். அதன் பின் அன்று முழுவதும் கால் ரேட்ஸ் என்றுமில்லாத அளவு அதிக அளவில் இருந்தது.

நக்ஷத்ராவிற்கு அவன் கோபம் புரிந்தது. அவன் பேசியது மற்ற ஊழியவர்களிடம் எந்தளவு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை அன்றைய கால் ட்ராபிக் உணர்த்தியது.

அதிகாலை அனைவரும் கிளம்பிச் சென்றப் பிறகு “பயங்கரமான ஆளுதான் ரெண்டுப் பேரும்” என்று அவள் கூற சபரீஷ் சிரித்தான்.

“லீவ் எடுக்குறதுக்கு நம்ம எதுவும் சொல்லுறதில்ல சபரீஷ். பட் இனி யாரும் இன்பார்ம் பண்ணாம லீவ் எடுக்கக் கூடாது. இப்போ ஸ்வைப் மிஷினும் இருக்கு. அட்டெண்டன்ஸ் பக்காவா ட்ராக் பண்ணணும். திஸ் ஷுட் நாட் ஹேப்பன் இன் த ப்யூச்சர்”

“கண்டிப்பா பார்த்துக்கலாம் மச்சு. சரி இன்னைக்கு நீ விட்ட டோஸ் கொஞ்சம் அதிகம் தான். எல்லாரும் மிரண்டிருப்பாங்க. நான் கேட்டேன்ல... எல்லாரையும் ஹோட்டல் கூட்டிட்டுப் போகலாம்னு. நாளைக்குப் போகலாமா?”

“ஆதர்ஷ்... நான் கோவிலுக்குப் போகணும்னு சொன்னேன்ல... என்னைக்குப் போகலாம்?”

“ஹோட்டலுக்குப் போகலாம்... கோவிலுக்குப் போகலாம்... யாரும் வேலைப் பார்க்குற ஐடியால இல்ல... அப்படித்தான?”

“எல்லாம் பார்த்துட்டுதான் இருக்கோம்”

“நீ தான் எங்களுக்கும் சேர்த்துப் பார்க்குறியே... நாளைக்குப் போகலாம் மச்சு. ஒரு ஆதெண்டிக் கேரளா ரெஸ்டாரன்ட் இருக்கு. சூப்பரா இருக்கும். பட் அட்வான்ஸ்டா புக் பண்ணணும். செம கூட்டமா இருக்கும்”

“கேரளா புட்டா??”

“ரொம்ப பண்ணாத... நீ அதுலயே புக் பண்ணு சபரீஷ். எல்லாரும் சேர்ந்து வெளில போறப்போ எல்லாருக்கும் பிடிச்ச இடத்துக்குதான் போகணும்”

“என்னவோ பண்ணுங்க”

ஆதர்ஷ் வெளியே செல்ல “பை சபரீஷ்” என்ற நக்ஷத்ரா அவசரமாக அவன் பின்னால் ஓடினாள்.

சபரீஷ் சொன்ன உணவகத்திற்கு அடுத்த நாள் போவதாக முடிவானதை முகுந்த் அனைவருக்கும் மெசேஜ் அனுப்பித் தெரிவித்தான். கேப் மாலை 6 மணிக்கு வரும் என்றுக் கூறி அனைவரையும் முன்னதாகவே தயாராக இருக்க சொன்னான்.

ஆதர்ஷிற்கு தான் கடைசிவரை இதில் கொஞ்சமும் சம்மதம் இல்லை. இந்த ஊர் சாப்பாடு சுத்தமாக பிடிக்காதபோது அங்கு சென்று எதை சாப்பிடுவதென்று எண்ணினாலும் நக்ஷத்ரா சொன்னது போல் மற்றவர்களுடன் சேர்ந்து செல்லும்போது இது போன்ற விஷயங்களை விட்டுக் கொடுத்துப் போக வேண்டுமென்று மனதை தேற்றிக் கொண்டான்.

சபரீஷ் சொன்னது போல் ரெஸ்டாரன்ட் கூட்டமாக இருந்தது. எல்லா டேபிளும் ரிசர்வ் செய்யப்பட்டிருந்தது. அவர்கள் ஒரு பெரிய டேபிளில் சென்றமர்ந்தனர். டேபிளின் இரு கோடியில் ஆதர்ஷும் சபரீஷும் அமர நக்ஷத்ரா ஆதர்ஷின் அருகில் அமர்ந்தாள்.

மற்றவர்கள் பேசி சிரிக்க அதிகம் பேசி பழக்கமில்லாதவன் அமைதியாக புன்னகையுடன் வேடிக்கை பார்த்தான்.

சபரீஷ் வாய் ஓயாமல் பேச அதற்கு எதிர்மறையாய் ஆதர்ஷ் அமர்ந்திருக்க ஒரு கட்டத்திற்கு மேல் பேச்சு குறைந்தது.

உணவு வந்தப் பிறகு முதல் ஸ்டார்ட்டரை சாப்பிட்டவனுக்கு அது சுத்தமாகப் பிடிக்கவில்லை. தேங்காய் பால் ஊற்றி செய்திருந்ததால் அதன் சுவை பிடிக்காமல் தட்டில் அதை ஒதுக்கி வைத்துவிட்டான்.

அதை கவனித்த நக்ஷத்ரா அதன் பிறகு அவனுக்கான உணவை தானே பார்த்து பார்த்து ஆர்டர் கொடுத்தாள். அதை மற்றவர்கள் கவனிக்காமலும் பார்த்துக் கொண்டாள்.

ஆதர்ஷ் போர்க் நைப் கொண்டு சாப்பிட்டதையும் சிலர் விநோதமாகப் பார்த்தனர். நக்ஷத்ரா அவனருகில் அமர்ந்து அனைத்தையும் குறித்துக் கொண்டாள்.

சாப்பிட்டு முடித்தப் பிறகு சபரீஷ் பேசியதை கேட்டு அனைவரும் சிரிக்க யாருமறியா வண்ணம் நக்ஷத்ராவின் கையை பிடித்துக் கொண்டான். டேபிளின் கீழே குனிந்து அவன் கையை பார்த்தவள் ஒருமுறை அழுத்தி விடுவித்தாள். உணவு ஆர்டர் கொடுத்ததற்கான நன்றி அது என்றுப் புரிந்தது.

அங்கிருந்துக் கிளம்பியப் பிறகு காரில் அவள் அமைதியாக இருக்க எதையோ தீவிரமாக யோசிக்கிறாள் என்று அவனும் அமைதியாக இருந்தான்.

அலுவலகத்தில் வேலை துவங்கிய அரை மணி நேரத்தில் முகுந்திடம் பேசுவதற்காக அறைக்குள் வந்த சபரீஷை கண்டதும் வேகமாக எழுந்து பக்கத்து அறைக்குள் நுழைந்தாள்.

ஆதர்ஷ் அங்கிருந்த கப்போர்டில் எதையோ தேடிக் கொண்டிருக்க அவன் முன்னால் போய் நின்று அவன் கழுத்தை சுற்றி கைகளை போட்டாள்.

“ஹே என்ன பண்ணுற? யாராவது வந்தா என்ன நினைப்பாங்க? சபரீஷ் இப்போ வந்திடுவான். விடு நக்ஷத்ரா”

“ஏன்?? இது நேத்து கடையில என்னை செயின் போட்டு இழுத்தப்போத் தெரியலையா? இப்போ மட்டும் பதறுற?”

“இது ஆபீஸ்... இ...”

“சொல்லுறத அமைதியாக் கேட்டான்னா ரெண்டு நிமிஷத்துல விட்டுட்டு நான் போயிடுவேன். இல்லன்னா...”

அவன் அமைதியாகிவிட்டான். நேற்று அவன் அவளை இழுத்து நெருங்கி நின்றது போல் அவள் இப்போது நெருங்கி நிற்கவில்லை. அவன் கழுத்தை சுற்றிப் பிடித்திருந்தாலும் இருவருக்குமிடையில் சிறிது இடைவெளி இருந்தது. ஆனாலும் அவன் மூளை செயலிழந்தது போல் தோன்றியது.

“இன்னைக்கு நீ ரெஸ்டாரன்ட்ல பண்ணது சரியில்ல. நீ எப்படி சாப்பிடுறங்குறது உன் இஷ்டம். அதுக்காக எல்லாரும் பேசி சிரிக்கும்போது நீ அப்படி அமைதியா இருந்தது மத்தவங்களுக்கு சங்கடமா இருக்கும். நீ பயங்கரமா பேசலைன்னாலும் அட்லீஸ்ட் சபரீஷ் பேசுன எதுக்காவது அப்பப்போ பதில் சொல்லியிருந்திருந்தா போதும். மத்தவங்க உன்னை திரும்பிப் பார்க்குற மாதிரி, வித்தியாசமா பார்க்குற மாதிரி நடந்துக்காத. சரியா?”

அவன் அவளை பதிலுக்கு அணைக்கக் கூட இல்லை. அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவன் ஏதோ சாவி கொடுத்த பொம்மை போல் தலையை மட்டும் லேசாக ஆட்டினான்.

“குட். நாளைக்கு கோவிலுக்கு போகலாம். இப்போ வேலைய பாரு”

அவள் விலகி சென்றப் பிறகு சில நொடிகள் கப்போர்டில் சாய்ந்து நின்று யோசிக்க முயன்று தொற்றுக் கொண்டிருந்தான்.

“நல்லவேளை பதிலுக்கு அவன் எதுவும் பண்ணல... ஷப்பா...” படப்படப்பு குறையாததால் பேன்ட்ரிக்கு சென்று தண்ணீர் அருந்தி வந்தவள் அவளறைக்குள் வந்தபோது சபரீஷ் இன்னும் அங்குதான் இருந்தான்.

முகுந்துடன் பேசியபடியே அவளை ஆராய்ச்சி பார்வை பார்த்தவனிடமிருந்து தப்பி தன் இருப்பிடத்தில் சென்றமர்ந்து கால் பேச ஆரம்பித்தாள்.

அறைக்குள் வந்ததும் ஆதர்ஷின் அருகில் சென்று “நீ சொன்னதெல்லாம் முகுந்த்கிட்ட சொல்லிட்டேன் மச்சு” என்று அவன் கூற “ம்ம்” என்று மட்டும் பதில் கூறினான்.

“என்னமோ சரி இல்லையே... என்ன நடந்துது???”

“என்ன நடக்கணும்? பேசாம உட்காருறியா? எப்போ பாரு... நேத்து லீவ் எடுத்த அந்த ரெண்டு பேரையும் கூப்பிட்டு வார்ன் பண்ண சொன்னனே பண்ணியா?”

“பண்ணிட்டேன் மச்சு. பட் இப்படி எல்லார் முன்னாடியும் கூப்பிட்டு கண்டிச்சிருக்க வேண்டாமோன்னு தோணுது”

“அப்போதான் மத்தவங்களுக்கும் தெரியும். இதுக்கெல்லாம் பாவம் பார்க்கக் கூடாது. நான் கிளம்பினதுக்கப்பறமும் நீ இப்படி தான் இருக்கணும். அதோட இன்னைக்கு ரெஸ்டாரன்ட்ல நீ நிறையவே பேசின. ப்ரெண்ட்லியா இருக்க வேண்டியது தான். ஆனா அடுத்தவங்க அட்வான்டேஜ் எடுத்துக்காத மாதிரி பார்த்துக்கோ”

“புரியுது மச்சி. நான் அவ்வளவு பேசியிருக்கக் கூடாது. அதுவும் நீ அவ்வளோ அமைதியா இருந்தப்போ நானும் பேச்ச கம்மி பண்ணி இருக்கணும். ஹ்ம்ம்... சரி... நான் கேட்டதுக்கு எல்லாரையும் ரெஸ்டாரன்ட் கூட்டிட்டுப் போயிட்ட... நக்ஷத்ரா ஏதோ கோவிலுக்கு போகணும்னு சொன்னாளே... எப்போ கூட்டிட்டு போற?”

“நாளைக்குப் போகலாம்னு சொல்லி இருக்கா”

“போ போ....”

“ஏன்? கோவிலுக்கு போறதுல என்ன?”

“ஒண்ணுமில்ல... போ... போனாதான தெரியும்...”

நண்பன் நக்கலாய் சொல்வதில் ஏதோ உள்குத்து இருப்பதாகப்பட்டது. என்னவென்று எவ்வளவு யோசித்தும் விடைக் கிடைக்கவில்லை. நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று அவனும் விட்டு விட்டான்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
பகுதி - 25

காலை வீட்டின் முன் இறங்கியபோது “ரெடியா இரு. நாலு மணிக்கு கால் பண்ணுறேன். கோவிலுக்குப் போகலாம்” என்றுக் கூறிச் சென்றாள் நக்ஷத்ரா.

வீட்டிற்குள் வந்ததும் உறங்க ஆரம்பித்த ஆதர்ஷ் மாலைவரை எழவில்லை. அழைப்புமணியின் ஓசையில் மெல்ல கண்களை திறந்துப் பார்த்தவன் அது மீண்டும் ஒலிக்க தூக்கக் கலக்கத்தில் எழுந்துச் சென்று கதவை திறந்தான்.

அங்கே சபரீஷுடன் நக்ஷத்ரா நிற்பாள் என்று அவன் சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை. அவளை தினமும் புடவையில் பார்க்கிறான் தான். இருந்தாலும் இன்று அவளை விட்டு பார்வையை திருப்ப பெரும்பாடுப்பட்டான்.

செட் சாரீ அணிந்திருந்தாள். சந்தன நிற புடவையில் தங்க ஜரிகை சேர்ந்திருக்க முடியை தளர்வாய் பின்னி பூ வைத்திருந்தது வித்தியாசமாகத் தெரிந்தது.

“மச்சு வழி விடு... நீ உள்ள போ நக்ஷத்ரா”

சபரீஷ் ஆதர்ஷின் கையை பிடித்து இழுக்க சுயவுணர்வுப் பெற்றவன் “எதுக்குடா அவள இங்கக் கூட்டிட்டு வந்த?” என்று கோபமாகக் கேட்டான்.

“என்னைய எதுக்குடா திட்டுற? கால் பண்ணாளாம். நீ எடுக்கலையாம். டைம் ஆச்சுன்னா. சரி ரெடியா இரு நான் வந்து கூட்டிட்டு வரேன்னு சொல்லி என்கிட்ட இருந்த ஸ்பேர் கீ வெச்சு இங்கேருந்து கார் எடுத்துட்டு போய்... நான் வந்தது கார் எடுத்தது ஏதாவது தெரியுமா உனக்கு? அப்படி தூங்கியிருக்க... உன்னை எப்படி எழுப்ப சொல்லுற? உள்ள வா... வந்து திட்டுறதுன்னா அவள திட்டு”

கடுப்புடன் அவன் உள்ளே செல்ல அப்போதுதான் வீட்டின் வெளியே கார் நிற்பதை கவனித்தவன் கோபம் சற்று குறைந்து உள்ளே வந்தான்.

நண்பன் அருகில் அமர்ந்து “நான் மட்டும் தனியா இருக்கப்போ எதுக்கு இவள இங்க கூட்டிட்டு வந்த? அவ சொன்னா... செஞ்சுடுவியா?” என்று ரகசியமாய் கேட்டான்.

“அத அங்க கேளு மச்சு”

“என்ன ரெண்டு பேரும் வந்ததுலேருந்து ரகசியம் பேசிட்டே இருக்கீங்க?”

“அவனுக்கு நீ இங்க வந்தது பிடிக்கலையாம்?”

“ஏன் ஆதர்ஷ்?”

“எனக்கு தனியா இருக்கணும். இவனையே என் கூட தங்க சொல்லாததுக்கு அதான் காரணம். உன்னை யாரு இப்போ வர சொன்னா?”

சபரீஷிற்கே அவன் பேசியது சுருக்கென்றிருந்தது. அவன் சொல்லும் காரணம் பொய்யென்றுத் தெரிந்த தனக்கே இப்படி இருக்கும்பொழுது நக்ஷத்ராவின் நிலையை எண்ணி வருந்தியவன் “அப்படியெல்லாம் இல்ல நக்ஷத்ரா” என்றான்.

தான் அதிகமாகப் பேசிவிட்டது போல் அவனுக்கும் தோன்ற “தண்ணி எடுத்துட்டு வரேன்” என்றுக் கூறி வேகமாக எழுந்து சமையலறை நோக்கி நடந்தான்.

அவள் தன் பின்னால் வருகிறாள் என்றுணர்ந்தவனுக்கு முந்தைய தினம் அலுவலகத்தில் அவள் செய்தது நினைவு வர “ஐயோ அட்வைஸ் பண்ணுறேன்னு வந்து கட்டிப்பிடிச்சா?” என்ற பயம் தோன்றியது.

“நீ என் பின்னாடி வராத. அங்கயே உட்கார்ந்திரு” சொன்ன வேகத்தில் சமையலறையுள் புகுந்துவிட்டான்.

“அவ்வளவு பயம் இருக்கா? இரு வரேன்” ஓசையில்லாமல் சமையலறையுள் சென்றவள் “எதுக்கு வர வேண்டாம்னு சொன்ன?” என்று அவன் தோள் மீது கை போட்டுக் கேட்டாள்.

“ஏய் அறிவில்ல? சொன்னா புரியாதா? அவன் என்ன நினைப்பான்? நீ பாட்டுக்கு எந்திரிச்சு வர? போடி முதல்ல”

“முடியாது”

அவளை முறைத்து அடித்துக் கொண்டிருந்த மொபைலை பாக்கெட்டிலிருந்து எடுத்துப் பார்த்தான். சுஜா அழைத்திருந்தார். உதட்டின் மீது விரல் வைத்து அவளை அமைதியாக இருக்குமாறு சைகை செய்து அழைப்பை ஏற்றான்.

“தூங்கிட்டு இருந்தியா ஆதர்ஷ்?”

“இல்லம்மா. நக்ஷத்ரா கோவிலுக்கு போகணும்னு சொன்னா. அதான் ரெடி ஆகிட்டு இருக்கேன்”

“அண்ணா கோவிலுக்குப் போறியா?”

“எதுக்கு எப்போ பாரு ஸ்பீக்கர்ல போட்டு பேசுறீங்க ரெண்டு பேரும்? கோவிலுக்கு தான் வினோ போறேன்”

“அம்மா அவன்கிட்ட நீயே பேசு. எனக்கு அண்ணிகிட்ட கொஞ்சம் பேச வேண்டியிருக்கு”

அவள் சொன்னதை கேட்ட நக்ஷத்ரா வெளியில் செல்வதாக சைகை செய்து வேகமாக ஹாலிற்கு வரவும் அவள் மொபைல் அடிக்கவும் சரியாக இருந்தது.

“சொல்லு வினோ”

“அண்ணி அண்ணாவ கோவிலுக்கு கூட்டிட்டுப் போறீங்களா? உங்க ஊர் கோவில்ல வேஷ்டி கட்டணுமே... பேன்ட் போட விட மாட்டாங்களே?”

“ஏன் வினோ?”

“ஐயோ அவனுக்கு வேஷ்டி கட்டவே தெரியாது. போச்சு... சரி இருங்க நான் சபரீஷ் அண்ணாவுக்கு கால் பண்ணி ஹெல்ப் பண்ண சொல்லுறேன்”

அழைப்பைத் துண்டித்த நக்ஷத்ரா “வினோ உனக்கு கால் பண்ணுவா சபரீஷ். நான் உள்ள இருக்கேன்” என்றுக் கூறி மீண்டும் ஆதர்ஷிடம் வந்தாள்.

“அப்படி இல்லம்மா. அவ இன்னும் அவங்க வீட்டுல பேசல. அவங்க வீட்டுல என்ன சொல்லுவாங்கன்னுத் தெரியல”

தங்கள் திருமணம் குறித்து பேசுகிறான் என்றுத் தெரிந்ததும் அவன் பேச்சை அமைதியாக கவனிக்க ஆரம்பித்தாள்.

“நீங்க பேச மாட்டீங்களாம்மா?”

“...”

“சரிம்மா. நான் அவள பேச சொல்லுறேன். அவ பேரன்ட்ஸ் என்ன சொன்னாங்கன்னு சொல்லுறேன் மாம். வெக்குறேன்”

அவன் முகம் யோசனையில் இருக்க “என்னாச்சு? என்ன சொன்னாங்க?” என்றுக் கேட்டாள் நக்ஷத்ரா.

“உங்க வீட்டுல சம்மதம் சொல்லணும்னு சொல்லுறாங்க. சப்போஸ் உன் பேரன்ட்ஸ் ஒத்துக்கலன்னா பிரச்சனை பண்ணி எல்லாம் கல்யாணம் பண்ண முடியாதுன்னு டாடி சொல்லிடுவாங்களாம். அதுக்கு மேல என்னால உன் டாடிய கன்வின்ஸ் பண்ண முடியாது... அவள சீக்கிரமா பேச சொல்லுன்னு சொன்னாங்க”

“சந்தோஷ் பத்தி நீ எதுவும் சொல்லலையா?”

“நான் சொன்னது புரிஞ்சுதா இல்லையா நக்ஷத்ரா? உங்க வீட்டுலயும் அக்செப்ட் பண்ணா ஸ்மூத்தா பேசி கல்யாணம் பண்ணி வைப்பாங்க. அவங்க ஒத்துக்காட்டி பிரச்சனை பண்ணவோ பேசவோ நிக்க மாட்டேன்னு தெளிவா சொல்லுறாங்க. மம்மி சொல்லுறது கரெக்ட் தான். அப்படி ஏதாவது ஆச்சுன்னா டாடிய கன்வின்ஸ் பண்ண முடியாது. உங்க வீட்டுல சீக்கிரமே சொல்லிடணும்”

“எனக்கு 2 டேஸ் டைம் கொடு ஆதர்ஷ். அம்மா இப்போதான் என்கிட்ட பேச ஆரம்பிச்சிருக்காங்க. அவங்க நல்ல மூட்ல இருக்கப்போ சொல்லிடுறேன். இந்த விஷயம் அப்பாகிட்ட சொல்லுறது எனக்கு இன்னும் ஈஸி”

“நான் உள்ள வரலாமா மச்சு? இல்ல இன்னும் டைம் வேணுமா?”

“வந்துத் தொலடா”

இருவரின் முகமும் வாடியிருக்க “சண்டையா?” என்றுக் கேட்டான் சபரீஷ்.

“அம்மா பேசுனாங்க. சப்போஸ் இவ வீட்டுல ஒத்துக்கலன்னா என்ன பண்ணுவீங்கன்னு கேட்டேன். ஒத்துக்கிட்டா கல்யாணம் இல்லன்னா என்னால எதுவும் பண்ண முடியாதுன்னு சொல்லிட்டாங்க”

“அவங்க வீட்டுல ஒத்துக்காம போறதுக்கு சான்ஸ் இல்ல மச்சு. அவங்களே லவ் மேரேஜ் தான?”

ஆதர்ஷ் அவளை பார்க்க “சந்தோஷ் கல்யாணம் பண்ணிக்க ஓகேவான்னு அம்மா கேட்டாங்க சபரீஷ். ஊருக்குப் போயிருந்தப்போ பாட்டி கேட்டாங்களாம்” என்றாள்.

“ஓஹ்ஹ்...” தலைகுனிந்து நிற்கும் இருவரையும் பார்த்தவன் இப்படியே விட்டால் சரிவராதென்று எண்ணி ஹாலிற்கு சென்று சோபாவில் தான் வைத்த கவரை எடுத்து வந்து ஆதர்ஷிடம் நீட்டினான்.

“இது என்ன?”

“வேஷ்டி”

ஆதர்ஷின் முகம் கலவரமடையத் துவங்கியது.

“இது எதுக்கு என்கிட்ட குடுக்குற?”

“இத கட்டிட்டுதான் கோவிலுக்குப் போகணும்”

“எனக்கு இதெல்லாம் கட்டத் தெரியாது”

“அத வினோ இப்போதான் கால் பண்ணி சொல்லி உனக்கு ஹெல்ப் பண்ண சொன்னா... வெட்கமா இல்ல? சின்ன புள்ளைக்கெல்லாம் தெரிஞ்சிருக்கு... வா... கட்டி விடுறேன்”

எவ்வளவு முயன்றும் அடக்க முடியாமல் நக்ஷத்ரா குலுங்கி குலுங்கி சிரிக்க ஆரம்பித்தாள்.

“சரி வா” அங்கிருந்து தப்பித்தால் போதுமென்று சபரீஷை இழுத்துக் கொண்டு வெளியே சென்றான்.

சிறிது நேரம் கழித்து அறையிலிருந்து வெளியே வந்தவனை முதல்முறை வேஷ்டியில் பார்த்தவள் “சூப்பரா இருக்கு” என்றுக் கூற புன்னகையுடன் ஓரடி எடுத்து வைத்தான். வேஷ்டி தடுக்கியது.

அவன் அதை தூக்கி பிடிக்க முயல “எனக்கு கொஞ்சம் தண்ணி மட்டும் வேணும்” என்றாள் நக்ஷத்ரா.

ஆதர்ஷ் வேகமாக நிமிர “நீ மெதுவா வேஷ்டிய தூக்கிப் பிடிச்சு போய் உட்காரு. நான் கொண்டு வந்து குடுத்துக்குறேன். பார்த்து மச்சு... விழுந்து வெச்சுடாத. எனக்கு பசிக்குது... பிஸ்கட்டும் எடுத்துட்டு வரேன்” என்று எச்சரித்துவிட்டு சென்றான் சபரீஷ்.

எடுத்து வைத்த ஒவ்வொரு அடியிலும் வேஷ்டி தடுக்க அதனுடன் சண்டையிட்டு எப்படியோ சோபாவில் அவளருகில் வந்தமர்ந்தவன் பெருமூச்சுவிட்டான்.

சபரீஷ் எடுத்து வந்து கொடுத்த க்ளாஸை வாங்கியவள் தண்ணீர் பருக டேபிள் மீது பிஸ்கட் தட்டை வைத்தவன் ஆதர்ஷுடன் பேச ஆரம்பித்தான்.

தட்டிலிருந்து ஒரு பிஸ்கட்டை எடுத்த ஆதர்ஷ் அதை கடித்துவிட்டு தட்டில் ஆள்காட்டி விரலால் பிஸ்கட்டை தட்டினான்.

“இவன் இம்சை தாங்க முடியலடா சாமி... பிஸ்கட் கூட மேல சிந்தக் கூடாதா? அதை கடிச்சுட்டு தட்டுல வேற தட்டிவிட்டுக்குறான்”

தண்ணீர் பருகி முடித்து க்ளாஸை முன்னால் இருந்த டேபிள் மீது அவள் வைக்கப் போக அவசரமாக க்ளாஸ் வைப்பதற்கு உபயோகப்படுத்தும் சிறிய மேட்டை எடுத்து அவள் வைக்கப் போன இடத்தில் நகர்த்தி வைத்தான்.

“அவ்வளவு சுத்தம்ம்ம்ம்... ம்ம்... க்ளாஸ் டேபிள் மேல வெச்சா தண்ணி அச்சு தெரியும்னு மேட் தூக்கி வைக்குற? நீயெல்லாம் ஒரு மீட்டிங் ஹால்குள்ள உட்கார்ந்திருந்தா என்ன செய்வ? யாரெல்லாம் தண்ணி குடிக்குறாங்களோ அவங்கல்லாம் க்ளாஸ் கீழ வைக்குறதுக்கு முன்னாடி மேட்ட தூக்கி தூக்கி போடுவியா? கீழ வெக்காதீங்க.....ன்னு”

மனதிற்குள் எண்ணி பார்த்தவளுக்கு சிரிப்பு வந்துவிட பேசிக் கொண்டிருந்த இருவரும் அவளைத் திரும்பிப் பார்த்தனர்.

“இவன இப்படியே விட்டா வழிக்கு வர மாட்டான்” என்று நினைத்தவள் “நீ கிளம்பு சபரீஷ். நாங்க கோவிலுக்குப் போயிட்டு வரோம். கார் எடுத்துட்டு போ. நாங்க ஆட்டோல போயிக்குறோம்” என்றாள்.

“கோவிலுக்கு வா” என்றழைத்தவள் இப்போது இப்படி கூறுவதற்கு ஏதாவது காரணமிருக்கும் என்றெண்ணியவனும் “சரி மச்சு. நான் கிளம்புறேன்” என்றான்.

“ஹே கார் இல்லாம ஆட்டோலையா? வேஷ்டி கட்டிக்கிட்டா? விளையாடுறியா? நீ கார் விட்டுட்டுப் போடா”

“நீ போ சபரீஷ். நான் பார்த்துக்குறேன்”

“நான் கிளம்புறேன். நீ அவகிட்ட பேசிக்கோ” என்றவன் விடுவிடுவென்று கார் சாவியுடன் வெளியே வந்துவிட்டான்.

“எதுக்கு இப்படி பண்ணுற நீ? இன்னைக்கு என்னை மொத்தமா படுத்தி எடுக்கணும்னு முடிவுப் பண்ணிட்டு தான் வந்திருக்கியா?”

“டைம் ஆச்சு. நீ வேற கரெக்ட் டைமுக்கு ஆபீஸ் போகணும்னு படுத்துவ. வா மெயின் ரோட் போய் ஆட்டோ பிடிச்சுப் போயிடலாம்”

அவன் பதிலை எதிர்ப்பாராமல் அவள் எழுந்து வாசல் நோக்கி செல்ல வேறு வழியின்றி தட்டுதடுமாறி தடுக்கி விழாமல் எப்படியோ வாசல் வரை வந்துவிட்டான்.

வீட்டை பூட்டி தெருவில் நடக்க ஆரம்பித்தவனால் வேகமாக நடக்க முடியவில்லை. எதிரில் நடந்து வந்தவர் மொபைலில் பேசியபடியே காலை தூக்கி மறுகையால் வேஷ்டியை பிடித்தபடி நடந்ததைக் கண்டான்.

காலை தூக்கி வேஷ்டியை பிடிக்க முயன்றவனால் அது முடியாமல் போக சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு நடப்பதை நிறுத்தி குனிந்து வேஷ்டியை ஒரு கையில் பிடித்துக் கொண்டான்.

அவனை அருகில் காணாது நக்ஷத்ரா திரும்பிப் பார்க்க தான் நின்றது தெரியாமல் சமாளித்து வேகமாக அவளருகில் வந்தான்.

“எதுக்கு நிக்குற? டைம் ஆகுது வா”

“நல்லா சமாளிக்குற...”

“ம்ம்??”

“ஆட்டோ வருது. கைய காட்டு”

அவன் கை காட்ட கோவிலின் பெயரை கூறி அதில் ஏறியமர்ந்தாள்.

“ஒண்ணும் புரியமாட்டேங்குது” முனகியபடியே ஆதர்ஷ் ஏரியமர்ந்தான்.

“சார் தமிழா? எனிக்கு புரியும்”

ஆட்டோ ஓட்டுனர் சொன்னதை கேட்டு அவன் விழிக்க, நக்ஷத்ரா “பாரு... அவருக்கு தமிழ் தெரிஞ்சிருக்கு. நீ மலையாளம் கத்துக்க வேண்டியது தான?” என்று மெல்லிய குரலில் வினவினாள்.

“ரொம்ப முக்கியம்” என்றவன் கோவில் வரும்வரை பேசவில்லை. ஆட்டோவிலிருந்து இறங்கியதும் முதல் வேலையாக குனிந்து வேஷ்டியின் ஒரு முனையை ஒரு கையில் பிடித்துக் கொண்டான். பர்ஸை எடுக்க பக்கெட்டில் கை விட முயன்றபோது தான் பேன்ட் அணியாதது நினைவு வந்தது.

“பர்ஸ் எடுத்துட்டு வரலையா?”

“பணத்த குடுத்துட்டு வா. இளிச்சுக்கிட்டே இருக்காத”

பல்லைக் கடித்தவனை கண்டுக் கொள்ளாது ஹேன்ட் பேகிலிருந்து பணத்தை எடுத்து கொடுத்துவிட்டு அவனுடன் நடந்தாள்.

அர்ச்சனை தட்டு ஒன்றை வாங்கிவிட்டு அதற்கான பணத்தை ஒற்றை கையில் எடுக்க சிரமப்பட்டவள் “இத பிடி” என்றுக் கூற இரண்டு கையாலும் வாங்குவதற்காக கைகளை நீட்ட பிடித்திருந்த வேஷ்டி நழுவியது.

“ஐயோ..... இப்போ இத வேற தூக்கிப் பிடிக்கணும். ச்சை... எப்படி தான் இத கட்டிட்டு அசால்ட்டா நடக்குறாங்களோ... இவளுக்கு வேற வேலையே இல்லையா?” புலம்பியபடியே நின்றவனின் கையிலிருந்து தட்டை வாங்கியவள் “என்னாச்சு?” என்றுக் கேட்க மறுப்பாக தலையசைத்து உள்ளே சென்றான்.

சுற்றி நடக்கும் ஆண்கள் அனைவரையும் கவனமாக கவனித்தவனால் அவர்களை போல் நடந்தபடியே ஒற்றை காலை தூக்கி வேஷ்டியை கையில் பிடிக்க முடியவில்லை.

“எப்படி கேட்ச் பண்ணுறாங்கன்னேப் புரிய மாட்டேங்குது. இவ வேற திரும்பிப் பார்க்காம நடந்துக்கிட்டே இருக்கா. இவ முடி பின்னினாலும் அழகா தான் இருக்கு. இன்னைக்கு தான் டிபிக்கல் மலையாளி மாதிரி இருக்கா. சபரீஷ் இருந்ததால சரியா பார்க்கக் கூட முடியல. இந்த வேஷ்டி ஒண்ணு... நொண்டி அடிச்சு நொண்டி அடிச்சு நடக்க வேண்டியிருக்கு... ம்ம்ச்ச்... ஒரு இடமா நின்னா மட்டும்தான் இத தூக்கிப் பிடிக்க முடியும்” என்று நினைத்தவன் “நக்ஷத்ரா” என்றழைத்தான்.

அவள் நின்று திரும்பிப் பார்க்கும் இடைவேளியில் சட்டென்று குனிந்து வேஷ்டியை கையில் பிடித்தவன் “கொஞ்சம் மெதுவா நட ப்ளீஸ்” என்றான்.

“சரி சரி” என்றவள் அவனுடன் சேர்ந்து நடந்து சென்று அர்ச்சனை தட்டை நீட்டினாள். தீபாராதனை காட்டிய பூசாரி அதை ஓர் மூலையில் வைத்துவிட்டு அதனருகில் நிற்க அனைவரும் வருசையில் சென்று கண்களில் ஒற்றி அவரிடம் சந்தனம் பெற்றுக் கொண்டனர்.

“நம்மதான் போய் சந்தனம் வாங்கிக்கணுமா? அவரு வந்து குடுக்க மாட்டாரா?”

“அதெல்லாம் குடுக்க மாட்டாங்க. பேசாம வா”

சந்தனத்தை சிறிய வாழையிலை துண்டில் வைத்து தூக்கிப் போட அதை பிடித்து நகர்ந்து வந்தவன் “ஹேய்... என்ன தூக்கி போடுறாங்க? கையில குடுக்க மாட்டாங்களா? கொஞ்சம் கூட மரியாதை இல்லாம” என்று அலுத்துக் கொண்டான்.

“நீ கொஞ்ச நேரம் புலம்பாம இருக்கியா?” கையிலிருந்த சந்தனத்திலிருந்து கொஞ்சம் எடுத்தவள் அவன் நெற்றியில் சிறு கீற்றாய் வைத்தாள்.

முதல்முறை சந்தனம் வைத்து அவன் முகத்தைப் பார்த்தவள் பார்த்தபடியே நிற்க “அவ்வளவு அழகா இருக்கேனா?” என்றுக் குறும்பாகக் கேட்டான்.

“நெனப்புதான்... வா வா”

தன் கையிலிருந்த சந்தனத்தை அவளிடம் கொடுத்தான். பிரசாதம் கொடுக்கும் இடத்திற்கு சென்றபோது சிறிய பேப்பர் கப்பில் சர்க்கரை பொங்கலும் பிளாஸ்டிக் ஸ்பூனும் கொடுத்தனர்.

“நல்லவேளை ஸ்பூன் குடுத்துட்டாங்க”

“இல்லன்னா நீ சாப்பிட மாட்டியா?”

“கையிலையா? நோ வே... எனக்கு ஸ்பூன் போர்க் ஏதாவது வேணும்பா”

“தவளை தன் வாயாலயே கெட்டுச்சாம்... அது எப்படி நீ கையில சாப்பிட மாட்டேன்னு நானும் பார்க்குறேன்” என்று நினைத்தவள் “சரி கிளம்பலாம். கெஸ்ட் ஹவுஸ் போய் நீ ட்ரெஸ் சேஞ்ச் பண்ணு. சாப்பிட்டு ஆபீஸ் போவோம்” என்றாள்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
பகுதி - 26

கோயில் வாயிலுக்கு வந்தப் பிறகு தான் ஆதர்ஷின் கையை கவனித்த நக்ஷத்ரா “இன்னுமா நீ இந்த கப் தூக்கிப் போடல?” என்றுக் கேட்டாள். சர்க்கரை பொங்கல் சாப்பிட்டு முடித்த கப்பை கையிலேயே வைத்திருந்தான்.

“உள்ள வேஸ்ட் பாஸ்கெட் இல்லையே...”

“கஷ்டம்... நான் ஒரு கவர் உள்ள போட்டேனே பார்க்கலையா?”

“அதான் இங்க வேஸ்ட் பாஸ்கெட் இருக்குல்ல? இதுல போட்டிடுறேன்” வெளியே இருந்த குப்பைதொட்டியில் கப்பை கசக்கிப் போட்டுவிட்டு காரை எடுத்தான்.

கெஸ்ட் ஹவுஸ் வந்ததும் “2 மினிட்ஸ்” என்று அவளை ஹாலில் அமர செய்து படுக்கையறைக்குள் சென்று கதவை தாழிட்டான்.

“ஷப்பா... எப்படிதான் இதை கட்டிட்டு நாள் பூரா இருக்காங்களோ... ரெண்டு மணி நேரம் கூட நம்மளால தாக்குப் பிடிக்க முடியல” புலம்பியபடியே வேஷ்டியை கழட்டி வீசிவிட்டு உடை மாற்றினான்.

வெளியே வந்தவனைப் பார்த்ததும் “வேஷ்டி உனக்கு அழகா இருக்கு. நீ ஊருக்குப் போயிருந்தப்போ பர்ஸ்ட் மன்த் சாலரி வந்துதுல்ல... அப்போவே உனக்கு ஏதாவது வாங்கி தரணும்னு தோணுச்சு. கோவிலுக்குப் போறோம்னதும் அதுலேருந்து தான் காசு எடுத்து பட்டு வேஷ்டி வாங்கிட்டு வந்தேன் இன்னைக்கு. சபரீஷ் கூடவே இருந்ததால அவனுக்கும் ஒரு ஷர்ட் எடுத்துக் கொடுத்தேன்” என்றாள்.

“ஒரே ஒரு நிமிஷம்... இப்போ வந்திடுறேன்”

அறைக்குள் ஓடி வந்தவன் சற்று முன் கழட்டி கடுப்பில் வீசியெறிந்திருந்த வேஷ்டி சட்டையை எடுத்து நேர்த்தியாக மடித்து மெத்தை மீது வைத்து வெளியே வந்தான்.

“என்னாச்சு? எதுக்கு அவசரமா ஓடுன?”

“ம்ம்ஹும்... வா. ஹோட்டல் போயிட்டு சீக்கிரம் கிளம்புவோம்”

“ஆதர்ஷ்... நீ தினம் மார்னிங் எங்க சாப்பிடுற?”

“அது... பக்கத்துல ஒரு ஹோட்டல். இங்க வந்தன்னைக்கு வேற வழி இல்லாம சாப்பிட்டேன். அப்பறம் அதுவே பழகிடுச்சு. நம்ம வேற நல்ல ஹோட்டலுக்குப் போகலாம். அங்க வேண்டாம்”

“பரவாயில்ல அங்கயேப் போகலாம். நீ சாப்பிடுற சாப்பாடு எப்படி இருக்குன்னு நானும் டேஸ்ட் பண்ணிப் பார்க்குறேன்”

அரை மனதுடன் தலையசைத்தவன் வீட்டைப் பூட்டி தினமும் அவன் சாப்பிடும் ஹோட்டலின் முன் காரை நிறுத்தினான்.

இருவரும் ஒரு டேபிளில் அமர்ந்து வெகு நேரமாகியும் யாரும் வந்து ஆர்டர் எடுக்கவில்லை.

“ஏன் யாரும் நம்மகிட்ட மட்டும் வந்து ஆர்டர் எடுக்க மாட்டேங்குறாங்க?”

“என்னை கேட்டா?”

தலையை நிமிர்த்தாமல் மொபைலில் எதையோ தீவிரமாக ஆராய்ந்துக் கொண்டிருந்தவனை சந்தேகமாகப் பார்த்தாள்.

சில நிமிடங்களில் அவன் முன்னால் ஒரு ப்ளேட் இட்லியும் இரண்டு ஸ்பூனையும் எடுத்து வந்து வைத்த சர்வர் “மோளே இட்லி கழிக்குன்னோ?” என்றுக் கேட்க “தினம் இத மட்டும்தான் சாப்பிட்டியா?” என்று ஆதர்ஷிடம் கேட்டாள் நக்ஷத்ரா.

“அவர் சொல்லுற வேற எதுவும் எனக்குப் புரியல”

“அதெந்தா சாரே... முன்பே சொல்லி இருந்தா ஞான் வேற கொடுத்திருக்கும். இவ்வட நல்ல ஒண்ணாந்தரம் புட்டும் கடலக்கரியும் கிட்டும். வேணோ?”

அவன் விழிக்க “சேட்டா இட்லி வேண்டா. ரண்டு ப்ளேட் புட்டு கொடுத்தா மதி” என்றாள்.

“தே இப்ப கொண்டு வெரா”

இட்லி தட்டை எடுத்துக் கொண்டு அவர் நகர “எப்படி தினம் அதையே சாப்பிட்ட? எதாவது ஒரு டிஷ் மாத்தி ட்ரை பண்ணி இருக்கலாமே?” என்றுக் கேட்டாள்.

“மாத்தி ட்ரை பண்ணி நல்லா இல்லன்னா? அதான்”

“இன்னைக்கு சாப்பிட்டுப் பாரு. நல்லா இருக்கும்”

இரண்டு பிளேட்டை எடுத்து வந்து வைத்தவர் “ஸ்பூன் மறந்நு... ஒரு மிநிட்...” என்று நகரப் போக “ஸ்பூன் வேண்டா சேட்டா” என்றாள் அவசரமாக.

ஒருமுறை இருவரையும் மாறி மாறி பார்த்தவர் “நன்னாயிட்டிண்டு” என்றுக் கூறி சிரித்துவிட்டுச் சென்றார்.

“எதுக்கு சிரிக்குறாரு?”

“உன் நெத்தில இருக்க சந்தனத்தையும் என்னையும் பார்த்து கெஸ் பண்ணியிருப்பாரு”

நெற்றியில் கை வைக்கப் போனவனை “நல்லா இருக்கு ஆதர்ஷ். அப்படியே இருக்கட்டும்” என்றுத் தடுத்தாள்.

“எதுக்கு ஸ்பூன் வேண்டாம்னு சொன்ன? இப்போ நான் எப்படி சாப்பிடுறது?”

“இப்படிதான்” புட்டை கையில் எடுத்து வாயில் போட்டாள்.

“விளையாடாத. எனக்கு கையில சாப்பிட்டு அவ்வளவு பழக்கம் இல்ல. இது வேற உதிருது. நான் எடுத்து வாய்ல போடுறதுக்குள்ள எல்லாம் கீழ சிந்திடும்”

“சாப்பிட சொல்லிதான் தர முடியும். ஊட்டியா விட முடியும்? சூப்பரா இருக்குத் தெரியுமா?”

எதுவும் பேசாமல் சில நொடிகள் அவளை முறைத்தபடி அமர்ந்திருந்தான். அவள் தன் போக்கில் சாப்பிட “நக்ஷத்ரா ப்ளீஸ். நீதான புது டிஷ் ட்ரை பண்ணுன்னு சொன்ன? இப்போ சாப்பிட விடாம பண்ணா என்ன அர்த்தம்? ஸ்பூன் வேணும்” என்று கெஞ்சுதலாகக் கேட்டான்.

“சாப்பிடு ஆதர்ஷ். ஸ்பூன் கிடையாது”

மேலும் சில நொடிகள் அமைதியாய் அமர்ந்து அவள் சாப்பிடுவதை வேடிக்கைப் பார்த்தான்.

“நீ பாதி சாப்பிட்டு முடிச்சுட்ட. எனக்கு பசிக்குது. டிஷ் வேற பார்க்க நல்லா இருக்கு. டேஸ்ட் பண்ணவாவது விடேன்... ஸ்பூன் கேளு ப்ளீஸ்”

“முடியாது ஆதர்ஷ். வீட்டுல நீ ஸ்பூன்ல சாப்பிடு போர்க்ல சாப்பிடு எப்படி வேணா சாப்பிடு. அன்னைக்கு எங்க வீட்டுல ப்ரூட் பவுல் குடுத்தப்போ நானே போர்க் எடுத்துட்டு வந்து தரல? அதுக்காக வெளில வந்தாலும் அடுத்தவங்க வேடிக்கை பார்த்தாலும் என் பழக்கத்த நான் மாத்திக்க மாட்டேன்னு இப்படி பண்ணாத. அன்னைக்கு ஸ்டாப்ஸ்கூட சாப்பிட போனப்போ எத்தனை பேரு நீ சாப்பிடுறத பார்த்து கிண்டல் பண்ணாங்க தெரியுமா? ஸ்பூன் இல்லன்னாலும் நீ சாப்பிடணும். நிஜமாவே சூப்பரா இருக்கு. டைம் ஆச்சு. சாப்பிடு”

அவளை முறைத்தவன் விருட்டென்று எழ “அய்யய்யோ பசிக்குதுன்னு சொன்னானே... ஓவரா பேசி சாப்பிட விடாம பண்ணிட்டோமோ?” என்றெண்ணி அவனைப் பார்த்தாள். வாஷ்பேசினில் சென்று கை கழுவி வந்தமர்ந்தவன் தட்டை வெறித்தபடி இருந்தான்.

நக்ஷத்ரா அவனை கவனிக்காததை போல் பாவனை செய்து சாப்பிட அவள் சாப்பிடுவது போல் கையில் பிட்டை எடுத்து வாயில் போட்டான். இரண்டு முறை தடுமாறியவனுக்கு பிறகு புட்டை எப்படி பிடித்து சாப்பிட்டால் உதிராது என்பது பிடிபட வேகமாக சாப்பிட ஆரம்பித்தான்.

“வேறு எந்தெங்கிலும் வேணோ?”

நக்ஷத்ரா ஆதர்ஷை பார்த்தாள்.

“எனக்கு இப்பயும் பசிக்குது. இங்க வேற என்ன நல்லா இருக்கும்னுக் கேளு”

“இப்போ நூல்புட்டும் கடலைக்கறியும் இண்டு. கொண்டு வெரட்டே?”

“நூல் புட்டுனா இடியாப்பம்” என்று விளக்கினாள் நக்ஷத்ரா.

அவர் தன்னிடம் கேள்விக் கேட்க “எடுத்துட்டு வாங்க. 2 ப்ளேட்” என்று நேரடியாக அவரிடமே பதில் கூறினான்.

“ஹ்ம்ம்... இப்போ எப்படி அவர்கிட்ட பேசுற? எப்படி புது டிஷ் ட்ரை பண்ணுற? எப்படி கையில சாப்பிடுற? இதெல்லாம் நீயா பண்ண மாட்டியா?”

“நீ இல்லன்னா இன்னைக்கும் செஞ்சிருக்க மாட்டேன்”

“ஏழு வயசு வரைக்கும் லண்டன்ல வளர்ந்ததுக்கு இந்த பாடா?”

“என்ன நீ இதுக்கே அலுத்துக்குற? வந்து எங்கம்மாகிட்ட கேட்டுப் பாரு... அப்போ தெரியும்”

“பாவம் அவங்க... உன்னை வெச்சு எப்படிதான் சமாளிக்குறாங்களோ...”

“இதையே சாக்கா வெச்சு என்னோட எல்லா பழக்கத்தையும் மாத்த நினைக்காத. கோவம் தான் வரும்”

“தேவையில்ல. இடத்துக்கு ஏத்த மாதிரி அட்ஜஸ்ட் பண்ணிக்கோ. அது போதும். வீட்டுல நானே உனக்கு ஸ்பூன் கொண்டு வந்துக் குடுத்திடுறேன்”

“வந்ததுலேருந்து வீட்டுல வீட்டுலன்னு சொல்லுறியே... யார் வீட்டுல நக்ஷத்ரா?”

அவள் பதில் சொல்லத் தடுமாறுவதை அவன் ரசிக்க இடியாப்பம் வந்தது.

“இதையும் ஒழுங்கா சாப்பிடு”

“நான் கேட்டக் கேள்விக்கு பதில் சொல்லு”

“எல்லாம் நம்ம வீட்டுல தான். நீ சீக்கிரம் சாப்பிடு”

அதன்பின் அவனை நிமிர்ந்தேப் பார்க்காமல் சாப்பிட்டு எழுந்தவள் அலுவலகம் வந்ததும் நேரே தனதறைக்குள் சென்றுவிட்டாள்.

“ஹே என்ன மச்சு சந்தனத்தோடயே வந்துட்ட? நல்லாதான் இருக்கு. இப்போவே மாற ஆரம்பிச்சுட்ட... நடத்து நடத்து...”

“உங்க ஊர் கோவில்ல இதுதான்டா குடுக்குறாங்க”

“அப்படியா???”

ஆதர்ஷ் சிரிப்புடன் தன் இருக்கையில் சென்றமர்ந்தான்.

“கோவப்படுவன்னுப் பார்த்தா... நீ ஆளே சரியில்ல...” புலம்பியபடி சபரீஷும் அவனருகில் வந்தமர்ந்தான்.

முதல் பிரேக்கின்போது கதவை தட்டிவிட்டு உள்ளே நுழைந்த நக்ஷத்ராவின் முகம் சரியில்லாததைக் கண்டு “என்னாச்சு?” என்றுக் கேட்டான் ஆதர்ஷ்.

“நான் டீ குடிச்சுட்டு வரேன்” என்ற சபரீஷ் நாசுக்காய் எழுந்து அறையிலிருந்து வெளியேறினான்.

“அம்மா கால் பண்ணாங்க”

“சரி”

“சந்தோஷ் நாளைக்கு காலையில வரானாம்”

“சரி”

“என்ன எல்லாத்துக்கும் சரி சரி சொல்லுற? அவன் எதுக்கு இப்போ வரான்னுத் தெரியல. எப்பவும் 3 மாசத்துக்கு ஒரு தடவ தான் வருவான். இப்போ எதுக்கு திடீர்னு வரான்? அவன் வரத எப்பயும் அம்மா என்கிட்ட சொல்ல மாட்டாங்க. இப்போ என்ன புதுசா நாளைக்கு வரான்னு கால் பண்ணி சொல்லுறாங்க?”

“என்னைக் கேட்டா? உங்கம்மாகிட்ட கேட்க வேண்டியது தான?”

“நான் சீரியஸா பேசுறேன் ஆதர்ஷ்”

“நானும் சீரியஸா தான் சொல்லுறேன். அம்மாகிட்டயே கேட்டிருக்கணும். என்னை கேட்டா எனக்கு எப்படி தெரியும்?”

“ஒருவேளை அவன் நேரடியா என்கிட்ட கல்யாணத்தை பத்தி பேசினா?”

“ரொம்ப நல்லதா போச்சு. இஷ்டம் இல்லன்னு நீயும் நேரடியா சொல்லிடு”

“ஹர்ட் பண்ண மாதிரி இருக்காதா?”

“பிடிக்கலன்னாலும் சேர்ந்து வாழப் போறியா? இல்ல... இப்போ சொல்லாம அவனும் உன்னை விரும்ப ஆரம்பிச்சு... அதுக்கப்பறம் முடியாதுன்னு சொல்லப் போறியா?”

“ஒருவேளை அவன்... இப்போ... அவன்... என்னை...”

“அவன் இப்போ உன்னை லவ் பண்ணிட்டு இருந்தா என்ன பண்ணுறது? அதான?”

நக்ஷத்ரா அவனை கலவரமாகப் பார்க்க “அவனுக்கு வாழ்க்கை குடு நக்ஷத்ரா. நம்ம மத்தவங்கள ஹர்ட் பண்ண முடியாதுல்ல?” என்றான்.

அவள் அவன் நெஞ்சில் ஓங்கி அடிக்க “அம்மா... வலிக்குது. எதுக்கு அடிக்குற?” என்று அவள் அடித்த இடத்தை தடவியபடியேக் கேட்டான்.

“உன்னையெல்லாம் அடிக்காம?” மறுபக்கம் ஓங்கி அடித்தாள்.

“ஹேய் என்ன விட்டா அடிச்சுக்கிட்டேப் போற? வலிக்குது நக்ஷத்ரா. இப்போ பீலிங்க்ஸ் எல்லாம் போச்சா?”

“எனக்கு கோவம் தான் வருது”

“கோவம் எல்லாம் கொறச்சிடலாம். இங்க வா”

அவன் நீட்டிய இரண்டு கைகளிலும் தன் இரு கைகளை வைத்தாள். “அப்படி எல்லாம் எதுவும் இருக்காது. நீ எப்போ பாரு டென்ஷன் ஆகிட்டே இருக்காத”

“எப்படி சொல்லுற?”

“அவன் லவ் பண்ணுறதா இருந்தா இந்நேரம் உன் பதில் என்னன்னுக் கேட்டிருப்பான். கேட்டானா? இல்லையே...”

“ஓஹோ... அப்போ ப்ராப்ளம் எதுவும் வராதுல்ல?”

“அப்படி சொல்லிட முடியாது. தெரியல... பார்க்கலாம். எது வந்தாலும் சமாளிச்சுடலாம் நக்ஷத்ரா. நீ இப்படி பயந்துட்டே இருந்தா எப்படி உங்க வீட்டுல என்னை பத்தி சொல்லுவ? பேசி கன்வின்ஸ் பண்ணுவ? அம்மா சொன்னது ஞாபகம் இருக்கா? உங்க வீட்டுலயும் ஒத்துக்கணும். அதுக்கு நீதான் பேசணும். நான் வந்து உங்க பொண்ண எனக்கு பிடிச்சிருக்குன்னு வேணா சொல்லலாம். ஆனா அதுக்கு அப்பறம் அவங்கள ஒத்துக்க வைக்கிறது உன் கையில தான் இருக்கு. மரமண்டைக்கு புரியுதா?”

“விடு கைய... நான் மரமண்டையா? எல்லாம் எனக்கு பேச தெரியும். ஹ்ம்ம்...”

சிலிப்பிக் கொண்டு வெளியே செல்பவளை புன்னகையுடன் பார்த்தவன் “இத எப்படி சமாளிக்குறது தெரியலயே...” என்று முனகியபடியே தன் இருக்கையில் சென்றமர்ந்தான்.

சபரீஷ் அவனிடம் எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை. அவ்வபோது நண்பனின் முகம் யோசனையில் இருப்பதை கவனித்தான்.

காலை அலுவலகத்திலிருந்து கிளம்பும்பொழுது “இவன் என்னமோ அம்மா பிரச்சனை பண்ண மாட்டாங்கன்னு சொல்லுறான்... அவ என்னமோ சந்தோஷ கல்யாணம் பண்ணிக்க சொல்லுறாங்கன்னு சொல்லுறா... இது எப்படி சரி வரும்?” என்று ஆதர்ஷ் நக்ஷத்ராவை குறித்தே யோசித்துக் கொண்டிருந்தான்.

வீட்டினுள் நுழைந்ததும் எதிர்ப்பட்ட ரவிச்சந்திரன் “மோனு வந்நோ?” என்றுக் கூற சட்டென்று அந்த யோசனை தோன்றியது.

“எனிக்கு கொறச்சு சம்சாரிக்கானிண்டு. அச்சன் இப்போ ப்ரீயானோ?”

“பிரத்யேகிச்ச பணி ஒண்ணுமில்லா. காரியம் பரா”

“இரிக்கி”

“எந்தா? பிரஷ்ணம் எந்தெங்கிலும்...”

“இல்லா... அது... ஆதர்ஷினே குறிச்சு நிங்களுடே ஒபினியன் எந்தா?”

“நல்ல செருக்கனா” அவர்கள் ஹாலில் அமர்ந்து பேசுவதைக் கண்ட லீலா அடுக்களையிலிருந்து வந்து மகனருகில் அமர்ந்துக் கூறினார்.

“அம்மைக்கு நக்ஷத்ரா இஷ்டமல்லே?”

“பின்னே... எனிக்கு வளர இஷ்டமானு...”

“சபரீஷ் நீ காரியம் பரா”

தந்தையின் குரலில் இருந்த வித்தியாசத்திலேயே அவர் கண்டுக் கொண்டார் என்றுணர்ந்தவன் நேரடியாகக் கேட்டுவிடுவதென்று முடிவெடுத்தான்.

“ஆதர்ஷினே நக்ஷத்ராவினு ஆலோஜிக்கான்னு தோனுன்னு...”

“ஆஹா... சத்யம் பரஞ்ஞா அவரு நம்மள்டே வீட்டிலேக்கு வந்நப்போ எனிக்கும் இதானு தோணியது...”

தாய் கூறிய பதிலில் கொஞ்சம் தைரியம் வர தந்தையைப் பார்த்தான்.

“அவர்ட லைப் அவரு தீர்மானிக்கட்டே...”

“சப்போஸ் நக்ஷத்ராவிடே வீட்டிலு சம்சாரிக்கேண்டி வந்நா நிங்கள் ஆதர்ஷினே குறிச்சு பரயோ?”

“ஷெரிக்கும்”

“தேங்க்ஸ் அச்சா”

“இப்போ மோனு போய் ரெஸ்ட் எடுக்கு”

ரவிசந்திரன் எழுந்து செல்ல “பரயடா... அவரு தம்மில்... லவ் அங்ஙனே எந்தெங்கிலும்...” என்று இழுத்தார் லீலா.

இதற்கு மேல் அங்கே அமர்ந்திருந்தால் அவர் தன வாயை கிளறுவார் என்று “இல்லா அம்மே... எனிக்கு உறக்கம் வெருந்நு...” என்று வேகமாக உள்ளே எழுந்துச் சென்றுவிட்டான்.

நக்ஷத்ராவின் வீட்டருகில் ஆதர்ஷ் காரை நிறுத்துவதற்கும் சந்தோஷ் டேக்ஸியில் வந்திறங்குவதற்கும் சரியாய் இருந்தது. நக்ஷத்ரா காரை விட்டிறங்கினாள். அவனை பார்த்ததும் ஆதர்ஷும் காரை அணைத்துவிட்டு இறங்க இருவரையும் பார்த்தபடியே டேக்ஸிக்கு பணத்தை எடுத்துக் கொடுத்தான் சந்தோஷ்.

ஆதர்ஷும் இறங்கிவிட்டதைக் கண்ட நக்ஷத்ரா அவன் இப்போது எதுவும் பேசிவிடக் கூடாதே என்ற பதட்டத்தில் அவனை பார்த்தபடியே மெதுவாக கேட்டை நோக்கி நடந்தாள்.

“உள்ள போ நக்ஷத்ரா”

சந்தோஷ் கூற ஆதர்ஷை ஒருமுறை திரும்பிப் பார்த்துவிட்டு உள்ளே சென்றாள். அவள் சென்றதும் ஆதர்ஷ் காரில் அமர்ந்தான். அவனை திரும்பியும் பாராமல் அவள் பின்னால் சென்றான் சந்தோஷ்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
பகுதி - 27

மெத்தையில் படுத்திருந்த ஆதர்ஷிற்கு சுத்தமாக உறக்கம் வரவில்லை. நேற்று நக்ஷத்ரா கவலையுடன் கூறியதும் இன்று காலையில் சந்தோஷை நேரில் பார்த்ததும் அவன் மனதில் பல குழப்பங்களை உண்டாக்கியிருந்தது.

நக்ஷத்ராவிடம் பேசவேண்டும் போல் இருந்தது. இந்நேரம் அவள் உறங்கியிருப்பாள் என்று அந்த எண்ணத்தையும் கைவிட்டான்.

வினோதினியின் நினைவு வந்தது. சென்னை சென்றப் பிறகு அவள் அவனிடம் பேசாதது உறுத்த மொபைலை எடுத்து அவள் எண்ணிற்கு அழைத்தான்.

“சொல்லுடா... தூங்காம என்ன பண்ணுற?

“தூக்கம் வரல. நீ என்ன பண்ணுற?”

“காலேஜ் லீவ். இப்போதான் எந்திரிச்சேன்”

“இப்போ எல்லாம் நீ எனக்கு கால் பண்ணுறதே இல்ல வினோ”

“அண்ணிகிட்ட பேசிட்டுதான்டா இருக்கேன்...”

“...”

“சாரிண்ணா... நான் அவங்ககிட்ட பேசி... உன்னை பத்தி விசாரிச்சிடுவேன். திரும்ப உனக்கு கால் பண்ணணும்னுத் தோணல. அண்ணி சொல்லலையா?”

“ம்ம்ஹும். நீ என்கிட்ட சொல்லுவன்னு அவ நெனச்சிருப்பா”

வினோ சிரிக்க கடுப்பானான்.

“எதுக்கு சிரிக்குற? ரெண்டு பேரும் என்கிட்ட எதுவும் சொல்லுறதில்ல... என்னதான் நெனச்சுட்டு இருக்கீங்க? உனக்கு அவகூட பேச நேரம் இருக்கு... எனக்கு கால் பண்ண முடியாது. அப்படிதான?”

“நீ ஏன்டா கோவப்படுற? இனிமே டெய்லி கால் பண்ணி டார்ச்சர் பண்ணுறேன். போதுமா? சரீ.... வேஷ்டி கட்டிட்டுதான் கோவிலுக்குப் போனியா? சபரீஷ் அண்ணா ஹெல்ப் பண்ணாங்களா? உனக்காக நான் அவங்ககிட்ட ரெகமென்ட் பண்ணேன் தெரியுமா? ஒரு தேங்க்ஸ் சொல்லுறியா? திட்டிகிட்டே இருக்க?”

“ம்ம்... ம்ம்... நேத்து ஈவ்னிங் புல்லா அவஸ்தைப்பட்டேன்”

“போட்டோ எங்க?”

“என்ன போட்டோ?”

“அடப்பாவி... முதல் தடவ கோவிலுக்குப் போயிருக்க... வேஷ்டி கட்டியிருக்க... அண்ணி வேற செட் சாரீ கட்டியிருந்தாங்களாம்... போன்ல சொன்னாங்க. சேர்ந்து நின்னு ஒரு போட்டோ கூட எடுக்கலையா?”

அவள் கேட்டப் பிறகுதான் ஆதர்ஷ் யோசித்தான்... இதுவரை அவனும் நக்ஷத்ராவும் சேர்ந்து போட்டோ எடுத்ததே இல்லை என்று.

“நாங்க சேர்ந்து போட்டோ எடுத்ததே இல்லையே...”

“ஆனாலும் நீ இவ்வளவு பேக்கா இருக்கக் கூடாதுண்ணா... உனக்கேத் தெரியாம அண்ணி நேத்து உன்கூட நின்னு செல்பி எடுத்திருக்காங்க... ஈவ்னிங்கே எனக்கு அனுப்பிட்டாங்க. இரு அனுப்புறேன்”

“இது எப்போ நடந்துது?”

“ம்ம்... நீ அவங்க பக்கத்துல உட்கார்ந்து மும்முரமா சர்க்கரை பொங்கல் சாப்பிட்டப்போ நடந்துது... கீழ உட்கார்ந்துட்டு எந்திரிக்க ரொம்ப திணறுனியாமே...”

“இதெல்லாம் வேற சொல்லி வெச்சிருக்காளா?”

“அண்ணி போட்டோ காமிக்கலையா?”

நேற்று இரவு கீதா கால் செய்ததிலிருந்து அவள் கவலையில் இருந்தது நினைவு வந்தது. அந்த கலக்கத்தில் இதை மறந்திருக்கலாம் என்று நினைத்தவனுக்கு காலை சந்தோஷை பார்த்ததும் நினைவு வந்தது.

“போட்டோ வந்துதா? என்ன சைலென்ட் ஆயிட்ட?”

“இரு பார்க்குறேன்”

மொபைலை காதிலிருந்து எடுத்து வினோதினி அனுப்பியிருந்த போட்டோவை பார்த்தான். நக்ஷத்ரா சிரித்தபடி அவனருகில் அமர்ந்திருக்க அவனோ குனிந்த தலை நிமிராமல் ஸ்பூனில் சர்க்கரை பொங்கலை எடுத்துக் கொண்டிருந்தான்.

“ச்ச... இப்படியா அவள கூட கவனிக்காம சாப்பிடுவோம்...”

தலையிலடித்துக் கொண்டவன் “நல்லா இருக்கு வினோ. சரி நான் தூங்குறேன்” என்றான்.

“தூங்குறதுக்கு முன்னாடி சாக்லேட் ஆர்டர் பண்ணிட்டுத் தூங்கு”

“இத மட்டும் மறந்திடாத...”

“டேய் அதான் டெய்லி கால் பண்ணுறேன்னு சொல்லிட்டேன்ல... ஆர்டர் பண்ணுடா. பை”

புன்னகையுடன் காலை கட் செய்து போட்டோவிலிருந்த தன்னவளை ரசிக்க ஆரம்பித்தான். எப்போது எடுத்தாள் என்று எவ்வளவு யோசித்தும் அதை அவன் கவனித்ததாக நினைவு வரவில்லை.

வீட்டினுள் நுழைந்த நக்ஷத்ராவின் பின்னால் வந்த சந்தோஷ் அவளிடம் பேச வர நேரே சமையலறைக்குள் புகுந்துக் கொண்டாள்.

தோசை சுட்டு அடுக்கிக் கொண்டிருந்த கீதா “வந்துட்டியா? சாப்பிடு வா” என்றார்.

“தூக்கம் வருதும்மா. அப்பறம் சாப்பிடுறேன்”

அடுக்களைக்குள் நுழைந்தவனைக் கடந்து அவளுடைய அறைக்குள் சென்றாள்.

“சந்தோஷ்... நீ எப்போ வந்த? ஏய்... அவன் வந்துட்டான்னு சொல்ல மாட்டியா? நீ பாட்டுக்குப் போற? வர வர இவ போக்கே சரியில்ல... நீ குளிச்சுட்டு வரியா சந்தோஷ்? நான் அவங்களுக்கு முதல்ல சாப்பாடு போட்டுடுறேன். லேட்டாச்சுன்னா கத்துவாங்க”

“நீ அத்தான கவனிக்கா...நான் இப்போதான வந்தேன்... குளிச்சுட்டு கொஞ்ச நேரம் கழிச்சு சாப்பிடுறேன்”

வெளியே வந்தவன் மூடியிருந்த நக்ஷத்ராவின் அறை கதவை பார்த்தபடியே மற்றொரு அறைக்குள் சென்றான்.

மாலை வரை வெளியில் வராமல் இருந்த நக்ஷத்ரா அலுவலகம் செல்லத் தயாராகியப் பிறகே அறை கதவை திறந்தாள்.

சந்தோஷ் அவளிடம் பேச வர அவசரமாக அவனைக் கடந்து சென்றாள். அவள் திரும்பி வந்தபோது அவளுடைய அறை கதவில் சாய்ந்து `நின்றவனைப் பார்த்ததும் உள்ளுக்குள் உதறல் எடுத்தது.

“எதுக்கு என்னை அவாயிட் பண்ணுற?”

“இல்லையே...”

“ஹ்ம்ம்... நான் இப்போ என்ன கேட்க வந்தேன்னுத் தெரியுமா?”

“எ... என்ன?”

“நான் திரும்பி ஊருக்கு போறதுக்கு டிக்கெட் புக் பண்ணணும். உன்னோட லேப் தர முடியுமான்னு கேட்க வந்தேன்”

வேகமாக சென்று தன் லேப்பை எடுத்து வந்து நீட்டினாள். அதை வாங்காமல் அவன் அவளையேப் பார்க்க வெளியே கார் வந்து நிற்கும் சப்தமும் ஹார்ன் சப்தமும் கேட்டது.

லேப்பை சோபா மீது வைத்தவள் “நான் போகணும்” என்றாள்.

சட்டென்று கோபம் எட்டிப்பார்க்க “எதுக்கு ஓடுற? இன்னைக்கு நான் டிராப் பண்ணுறேன். நில்லு” என்றான்.

“விளையாடுறியா? வழி விடு”

“நான் ட்ராப் பண்ணுறேன்னு சொல்லுறேன்ல?”

நக்ஷத்ரா அவன் பேசுவதை காதில் வாங்காமல் விடுவிடுவென்று நடக்க அவள் பின்னால் வாசல் வரை வந்தவன் காரில் ஆதர்ஷ் அமர்ந்திருப்பதைக் கண்டான்.

வீட்டிலிருந்து வெளியே வந்த இருவரையும் பார்த்ததும் காரிலிருந்து இறங்கினான் ஆதர்ஷ். நக்ஷத்ராவை விடுத்து அவனருகில் வந்த சந்தோஷ் “நான் அவள ட்ராப் பண்ணிக்குறேன். நீ கிளம்பு” என்றான்.

“உள்ள வா பேசலாம்... நக்ஷத்ரா வா” என்ற ஆதர்ஷ் திரும்பியும் பாராமல் உள்ளே சென்றான்.

சப்தம் கேட்டு கீதாவும் விஜயனும் ஹாலிற்கு வந்தனர். நேரே விஜயனிடம் சென்ற ஆதர்ஷ் “எனக்கு உங்க பொண்ண பிடிச்சிருக்கு. எங்களுக்கு கல்யாணம் பண்ணி வெப்பீங்களா?” என்றுக் கேட்டான்.

“எனக்குப் பிடிக்கல” என்றான் சந்தோஷ்.

“உன்கிட்டக் கேட்கல”

“சந்தோஷ் ப்ளீஸ்... பேசாம இரு...” என்றுக் கெஞ்சினாள் நக்ஷத்ரா.

இருவரையும் தீர்க்கமாய் பார்த்த சந்தோஷ் “உள்ள வாங்க. அக்கா, அத்தான் இதுல நீங்க தலையிடாதீங்க” என்றுக் கூறி அவளுடைய அறைக்குள் சென்று அவர்கள் உள்ளே வந்ததும் கதவை தாழிட்டான்.

“அவள லவ் பண்ணுறியா?”

“நானும்தான் சந்தோஷ் லவ் பண்ணுறேன்”

“உன்னைக் கேட்கல. வாய திறக்காத”

சந்தோஷ் கத்த ஆதர்ஷ் அவள் கையை பிடித்து அவன் பின்னால் இழுத்து “எதுவா இருந்தாலும் என்கிட்ட பேசு. எதுக்கு அவகிட்ட கத்துற?” என்றான்.

சந்தோஷ் திரும்பி அவனை பார்த்தான் பின் அவன் கையை பார்த்தான். அவள் கையை இன்னும் பிடித்திருப்பதைப் பார்த்ததும் கோபம் குறைந்து அமைதியாக நின்றான்.

“எனக்கு அவள பிடிச்சிருக்கு. எங்க வீட்டுலக் கூடப் பேசிட்டேன். அவங்களுக்கும் பிடிச்சிருக்கு. உங்க வீட்டுல பேச கரெக்ட் டைம் எதுன்னுத் தெரியாம முழிச்சேன்... இப்படிக் கேட்க வைப்பன்னு எதிர்ப்பார்க்கல... உன்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லிக் கேட்டாங்களாம். உனக்கு அவள... அவள பிடிச்சிருக்கா? அதனாலதான் இப்படியெல்லாம் பண்ணுறியா?”

“வீட்டுல அம்மா கேட்டாங்க. அவங்க சொல்லுற எந்த பொண்ணா இருந்தாலும் எனக்கு ஓகேனு தான் சொன்னேன். நக்ஷத்ராவ தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு நான் நினைக்கல”

அவன் சொன்ன பதிலை கேட்டப் பிறகு நிம்மதியடைந்தான் ஆதர்ஷ். ஏதோ மனதிலிருந்து பெரிய பாரம் இறங்கியதாகத் தோன்றியது.

இரு ஆண்களும் அமைதியாக நிற்க “சந்தோஷ்... உனக்கு ஆதர்ஷ பிடிக்கலையா?” என்று மெல்லக் கேட்டாள் நக்ஷத்ரா.

குனிந்து அவள் கையை இன்னும் விடாமல் பற்றியிருக்கும் அவன் கையை பார்த்தான். “இப்போ வரைக்கும் அவன் உன் கைய விடல... நீயும் அவன் பின்னாடி நின்னுதான் இந்த கேள்வியக் கேட்குற... நீ நம்ம வீட்டு பொண்ணு. எனக்கு அக்கறை இருக்கு. நல்லா பார்த்துக்க மாட்டானோன்னு பயந்தேன். சும்மா டைம் பாஸ்கு பேசி பழகுறான்னு கோபம் இருந்துது. அவன் அத்தான்கிட்ட கேட்டப்போ கோபம் போயிடுச்சு. இப்போ சந்தேகம் இல்ல. இனி...”

“அப்போ நீயே அம்மாகிட்ட பேசுறியா?”

இருவரும் சட்டென்று அவளை நிமிர்ந்துப் பார்த்தனர்.

“இல்ல... நீ சொன்னா அம்மா கேப்பாங்க... அப்படியே... பாட்டிகிட்டயும்...”

“பாத்தியா இவ சாமர்த்தியத்த? கொஞ்சம் கேர்புல்லாவே இரு”

தலையை ஆமோதிப்பாக ஆட்டிய ஆதர்ஷ் “எதுக்கும் பார்த்தே இருக்கேன்” என்றுக் கூற இருவரும் அறையை விட்டு வெளியேறத் துவங்கினர்.

இருவரையும் ஆச்சரியமாகப் பார்த்தவள் ஆதர்ஷின் சட்டையை பிடித்து இழுத்து “என்ன அவன்கூட கூட்டு சேர்ந்து என்னை டீல்ல விட்டுட்ட?” என்று ராசியமாகக் கேட்டாள்.

“நீ பண்ணல? வினோகூட சேர்ந்து...” அவனை முறைக்க ஆரம்பித்தவளை பார்த்து புன்னகைத்தவன் ஹாலிற்கு வந்தான்.

கீதாவும் விஜயனும் மூவரையும் பார்த்தனர். வீட்டிற்குள் நுழைந்ததும் பட்டென்று பேச முடிந்த ஆதர்ஷால் இப்போது பேச முடியாமல் அமைதியாக நின்றான்.

நக்ஷத்ரா “யாராவது பேசட்டும். நான் வாய திறக்க மாட்டேன்” என்ற நினைப்பில் நின்றாள்.

இவர்கள் பேசாததால் கீதாவிடம் சென்ற சந்தோஷ் “அக்கா நக்ஷத்ராவ ஆதர்ஷுக்கு குடுப்பியா?” என்றுக் கேட்க அவர் விஜயனை பார்த்தார்.

“நீ எந்தா சந்தோஷ் பரயுன்னு? நினக்கு ஓகேயானோ?”

“தாராளமா கல்யாணம் பண்ணி வைக்கலாம் அத்தான்”

“எந்நா ஷெரி”
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
பகுதி - 28

இரண்டு தண்ணீர் பாட்டிலை வாங்கிய ஆதர்ஷ் அருகில் நின்ற ரயிலில் ஏறினான். உள்ளே சுஜா, மோகன், வினோ அமர்ந்திருந்தனர். தண்ணீர் பாட்டிலை அன்னையிடம் நீட்டியவனுக்கு பிபிஓ கம்பெனி துவங்குவதற்காக தான் முதல் முறை திருவனந்தபுரத்திற்கு பயணமானது நினைவு வந்தது.

“அண்ணா... அண்ணி கால் பண்ணாங்களாம்... நீ எடுக்கவே இல்லையாம்...”

வினோதினி ஆரம்பிக்க “ஷப்பா... கல்யாணம் பிக்ஸ் ஆனதுலேருந்து இவ தொல்ல தாங்க முடியல... இவகிட்டேருந்து தப்பிக்குறதுக்குள்ள நான் படுற பாடு” என்று நினைத்தவன் “எனக்கு தூக்கம் வருது” என்றுக் கூறி படுத்துவிட்டான்.

“எஸ்கேப் ஆகிட்டே இருக்க நீ” வினோ கூறியதைக் கேட்டு சுஜா சிரிக்க மோகன் இவையனைத்தையும் ஒரு பார்வையாளராய் மட்டும் பார்த்தார்.

திருமணத்தன்று காலை அனைவரும் பரப்பரப்பாய் ஏதோ ஒரு வேலையை பார்த்துக் கொண்டிருக்க தன்னுடைய வேஷ்டியை சரியாய் கட்டுவது ஒன்று மட்டுமே ஆதர்ஷிற்கு வேலையாய் இருந்தது.

சந்தோஷ் அவனுக்கு உதவிக் கொண்டிருந்தான். ஆதர்ஷ் மொபைலில் ஏதோ பார்த்துக் கொண்டிருக்க “நக்ஷத்ரா என்னோட அக்கா பொண்ணு” என்றான்.

“ம்ம்?? ஆமா”

“அவள கேள்விக் கேட்க கண்டிக்க எனக்கு உரிமை இருக்கு. என்னைக்கும். அன்னைக்கு பண்ண மாதிரி அவ கைய பிடிச்சு இழுத்து பின்னாடி ஒளிச்சு வெச்சுகுற வேலையெல்லாம் வேண்டாம்”

“கேட்டுக்கோ... தாராளமா திட்டிக்கோ. ஆனா என் முன்னாடி திட்டுனா கண்டிப்பா நான் கேள்விக் கேட்பேன். உன் அக்கா பொண்ணா இருக்கலாம். பட் என்னோட வைப். அவள பார்த்துக்க வேண்டியது என் பொறுப்பு”

“அது அன்னைக்கேத் தெரிஞ்சுது. ஒருவேளை... அவள எங்ககிட்டேருந்து பிரிச்சு உன்கூட கூட்டிட்டு...”

“ச்ச இல்ல சந்தோஷ்... அப்படியெல்லாம் நான் நெனைக்கல. எங்க வீட்டுலயும் விட மாட்டாங்க. அவ வீட்டுலயும் ஒத்துக்கணும்னு ஸ்ட்ராங்கா சொல்லிட்டாங்க”

அன்று ஆதர்ஷ் பேசிய விதத்தை வைத்துதான் அவனுடைய அத்தானிடம் நக்ஷத்ராவை அவனுக்கு திருமணம் செய்துத் தர கூறினான். அதன் பின்பும் மனதில் சில சந்தேகங்கள் இருக்க இன்று அதுவும் தீர்ந்துப் போனது.

மணமகன் அறைக்குள் வந்த சபரீஷ் “மச்சு...இப்போதான நான் கட்டிவிட்டுட்டுப் போனேன்...” என்று அலறினான்.

“நீ வேற... இங்கப் பாரு... 2 பெல்ட் போட்டிருக்கான் வேஷ்டி அவுறாம இருக்க...”

“கஷ்டம்டா... அதெல்லாம் ஒண்ணும் கழண்டு விழாது மச்சு...”

“விழுந்துட்டா என்ன பண்ணுவ? எனக்கு இப்போவும் டவுட்டா தான் இருக்கு”

“இன்னுமா???”

“போங்கடா... அவனவன் கஷ்டம் அவனவனுக்கு தான் தெரியும்”

“சரி சரி வா...”

ஆதர்ஷ் நடந்தபடி காலை தூக்கி வேஷ்டியை பிடிக்க முயல அது முடியாமல் போனது.

“இத மட்டும் கேட்ச் பிடிக்கவே முடியல ச்ச...”

கேரளத்து முறைப்படி எளிமையான திருமணத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். தாலி கட்டி முடித்தப் பிறகே நக்ஷத்ராவிற்கு நிம்மதியானது. பெற்றோர்கள் சம்மதித்து நிச்சயித்த திருமணம் என்றாலும் உள்ளுக்குள் இருந்த நடுக்கம் குறையவில்லை.

மாதுரியும் வினோதினியும் சேர்ந்து அவளை ஒரு வழி செய்துக் கொண்டிருந்தனர். மணப்பெண் தோழிகள் என்ற பெயரில் அவளை விட்டு சிறிதும் நகராமல் இருந்தவர்கள் கிண்டல் செய்ய போட்டோ, வீடியோ எடுப்பதால் சிரமப்பட்டு சிரிப்பை அடக்கிக் கொண்டிருந்தாள்.

அவள் படும் அவஸ்தையை பார்த்த சுஜா இருவருக்கும் ஆளுக்கொரு வேலையை கொடுத்து அவளை விட்டு அகல செய்தார்.

புன்னகையுடன் நகர்ந்து சென்றவர் “நான் இருக்கிறேன் கவலைப்படாதே” என்று சொல்லாமல் சொல்லி சென்றது போல் இருந்தது.

சரஸ்வதியிடம் ஆசீர்வாதம் வாங்கியபோது “நூறு வருஷம் நல்லா இருங்க...” என்று வாழ்த்தியவர் அருகில் நின்ற மகனிடம் “நீயும் இப்படி சீக்கிரம் கல்யாணம் பண்ணா எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கும் தெரியுமா?” என்றார்.

“பொண்ணு பாருங்கம்மா. அது உங்க வேலை... எவ்வளவு சீக்கிரம் பார்க்குறீங்களோ அவ்வளவு சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்குறேன்”

“அதெல்லாம் நீங்க கவலையே படாதீங்கம்மா... நக்ஷத்ராவும் போயிட்டா எனக்கு வீட்டுல வேற என்ன வேலை? என் தம்பிக்கு நான் தேட மாட்டேனா? கூடிய சீக்கிரம் இவனையும் உங்க கால்ல விழ வைக்கிறேன்” என்று உறுதியளித்தார் கீதா.

“பாரு கா பாரு...” என்றவன் சிரிப்புடன் நகர்ந்துவிட்டான்.

மணமக்களை சாப்பிட அழைத்துச் சென்றனர். உணவும் கேரளத்து முறைப்படியே சமைக்கப்பட்டிருந்தது. சபரீஷும் சந்தோஷும் ஆதர்ஷை கவனிக்கிறேன் என்று கொட்டை கொட்டையாய் இருந்த கேரளத்து அரிசியை இலை நிறைய பரிமாறினர்.

“சாப்பிடுங்க மாப்ள” என்றவர்களை கொலைவெறியுடன் பார்த்தான் ஆதர்ஷ்.

இலையை தொடாமல் இருந்தவனை மணப்பெண்ணிற்கு ஊட்டிவிட சொல்லி போட்டோக்ராபர் கூற ஸ்வீட்டை எடுத்து அவளுக்கு ஊட்டினான்.

அவளும் பதிலுக்கு ஸ்வீட் ஊட்டுவாள் என்று அவன் நினைத்திருக்க சாதத்தில் அவியலை பிசைந்து பெரிய கவளத்தை எடுத்து அவனுக்குக் கொடுத்து சிரித்தாள்.

வேறு வழியில்லாமல் அதை மென்றவன் “பாவி... ஸ்வீட் ஊட்ட வேண்டியதுதான... இந்த அரிசி இறங்கவே மாட்டேங்குது...” என்று மெல்லியக் குரலில் கூறினான்.

“சாப்பிட்டுப் பழகு”

“நெவர். என்ன ஆனாலும் இதெல்லாம் நான் சாப்பிட மாட்டேன்”

“பார்க்கலாம் பார்க்கலாம்”

அதற்கு மேல் அவர்கள் பேச்சை தொடரவிடாமல் அருகில் யாராவது நின்றுக் கொண்டே இருந்தனர். சந்தோஷும் சபரீஷும் மனமக்களைவிட்டு நகர்ந்து மற்றவர்களுக்கு பரிமாற ஆரம்பித்தனர்.

“நான் காலையிலிருந்து சாக்கி சாப்பிடவே இல்ல அண்ணா”

அவள் இலையில் பறிமாறியவர்களிடம் பாவமாய் முகத்தை வைத்துக் கூறினாள் வினோதினி. இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“நீ சாப்பிடு வினோ. இதோ வரேன்”

“சாப்பிடும்மா வரேன்”

மண்டபத்தைவிட்டு வெளியே சென்று ஆளுக்கு ஒரு பெரிய சாக்லேட்டை வாங்கி வந்து அவள் இலையருகில் வைத்தனர்.

“வாவ்... இனிமே 3 அண்ணன் சாக்கி வாங்கி தருவாங்க போலயே...”

“நாங்க வாங்கி தருவோம்... வரவன் வாங்கி தருவானா தெரியல...”

“இப்படியே சாக்லேட்டா சாப்பிட்டா பூசணிக்கா மாதிரி ஆகிடுவ பாரு”

“வாங்கி தரதையும் வாங்கி குடுத்துட்டு ஓவரா பேசாதீங்க... போங்க... ரெண்டு பேரும் போய் பந்திய கவனிங்க”

அவள் சொன்னதைக் கேட்டு சிரித்தபடி நகர்ந்துவிட்டனர் இருவரும்.

அலுவலக ஊழியர்கள் அனைவரும் வந்து வாழ்த்தி பரிசு கொடுத்துவிட்டுச் சென்றனர்.

மெதுவாக நக்ஷத்ராவின் காதருகில் குனிந்தவன் “இனி ஆபீஸ் போவியா?” என்றுக் கேட்க “சென்னைல வெட்டியா இருப்பேன்னு நெனச்சியா? தினம் வந்து உன் பக்கத்துலயே தான் உட்கார்ந்திருப்பேன்” என்றாள்.

“அப்போ இனி எனக்கு நிம்மதி இல்ல?”

“இப்போ மட்டும் நிம்மதியாவா இருக்க?”

“அதெல்லாம் என்னைக்கோ போச்சு”

“ம்ம்???”

“பேசாம நில்லுங்க ரெண்டுப் பேரும்” சுஜா வந்து அதட்டிவிட்டுச் சென்றப் பிறகு எதுவும் பேசாமல் அமைதியாகினர்.

ஆதர்ஷ் தங்கியிருந்த கெஸ்ட் ஹவுஸில் தான் மணமகனின் சொந்தங்கள் தங்கியிருந்தனர்.

மாலை ஆதர்ஷின் அறையினுள் வந்த சுஜா “நக்ஷத்ராவோட அத்தை ஏதோ கேட்குறாங்க... அதி... அத்... ஏதோ ஒரு வார்த்தை சொன்னாங்க. புரியவே இல்ல. உனக்கு தெரியுமா?” என்றுக் கேட்டார்.

“போங்க மாம். காலையில அவளோட சித்தப்பா வந்து ‘காபி குடிச்சோ?’னுக் கேட்டாரு. அத மட்டும்தான குடுக்குறீங்கன்னு நெனச்சு ‘2 காபி குடிச்சுட்டேன்’னு சொன்னேன். சிரிச்சுக்கிட்டே போய் டிபன் எடுத்துட்டு வந்துக் குடுத்தாரு. அவரு சாப்பிட்டியான்னுக் கேட்டாறாம்... சந்தோஷ் சொன்னான்”

“என்னமோ... ஒண்ணும் புரியல... உன் மாமியார் எங்க போனாங்களோ... அவங்க தான் 2 நாளா எனக்கு ட்ரான்ஸ்லேட் பண்ணுறாங்க”

“போய் அவங்களையே தேடி அவங்ககிட்டயே கேளுங்க மாம்”

“ஏன்டா... லவ் பண்ணி கல்யாணம் பண்ணியிருக்க... பாஷை கத்துக்க மாட்டியா?”

“அவகிட்ட தமிழ்ல பேசுறதுக்கு மலையாளம் எதுக்கு கத்துக்கணும்?”

“நல்லா பேசுறடா...” என்றவர் கீதாவை தேடிச் சென்றார்.

இரவு அறைக்குள் குறுக்கும் நெடுக்கும் நடைப்பழகிக் கொண்டிருந்தான் ஆதர்ஷ். உண்மையில் வேஷ்டி கட்டி நடக்க பழகிக் கொண்டிருந்தான் என்று தான் கூற வேண்டும்.

கதவு திறக்கும் ஓசையில் வேகமாக மெத்தையில் அமர்ந்தவன் உள்ளே நுழைந்த நக்ஷத்ராவை ரசனையுடன் பார்த்தான்.

கதவு தாழிடப்பட்டதும் மெத்தையிலிருந்து எழுந்து சட்டையின் முதலிரண்டு பட்டனை கழட்டி போட்டிருந்த 2 பெல்ட்டையும் அவன் அவிழ்க்க மிரண்டுப் போனவள் “என்ன பண்ணுற ஆதர்ஷ்?” என்றாள்.

“ம்ம்... மனுஷன் போடுவானா இந்த ட்ரெஸ்ஸ? ஷப்பா... இப்போதான் ப்ரீயா இருக்கு...”

வேஷ்டியையும் சட்டையையும் கழட்டி கட்டிலின் ஒரு ஓரத்தில் வைத்தவனை ஆச்சரியமாகப் பார்த்தாள்.

“அடபாவி... உள்ள ட்ராக் பேன்ட் டீஷர்ட் எல்லாம் வேற போட்டிருந்தியா?”

“காலையில எப்படியோ மேனேஜ் பண்ணிட்டேன். ஈவ்னிங் வீட்டுக்கு வந்ததுலேருந்து அநீஸியாவே இருந்துதா... அதான்”

இன் செய்திருந்த டிஷர்ட்டை வெளியே எடுத்துவிட்டபடி “நீ வந்து உட்காரு வா...” என்று மெத்தையை கை காட்டினான்.

அவ்வளவு நேரம் இயல்பாக பேசியவள் தயக்கத்துடன் மெல்ல நடந்து வந்து அவனருகில் மெத்தையில் அமர்ந்தாள்.

சில நொடிகள் அவளையேப் பார்த்தவன் முதல் முறையாய் கை நீட்டி அவள் கூந்தலினுள் விரல்களால் அலைந்தான்.

எவ்வளவுதான் சாதாரணமாக இருப்பதுப் போல் காட்டிக் கொண்டாலும் அவளால் நெளியாமல் இருக்க முடியவில்லை.

“எனக்கு உன் முடி பிடிக்கும். முதல் நாள் பார்த்தப்பயிலிருந்து... நீ எப்போ எனக்கு முன்னாடி நடந்தாலும் உன் முடியதான் பார்ப்பேன்”

சட்டென்று அவனை திரும்பிப் பார்த்தாள்.

“அதுக்காக உன்னை சைட் அடிச்சேன்னு இல்ல... பிடிக்கும்”

அவள் அப்போதும் அமைதியாக இருக்க “உனக்கு என்கிட்ட என்ன பிடிக்கும்?” என்றுக் கேட்டான்.

“அப்படியெல்லாம் எதுவும் இல்ல...”

“எதுவும் இல்லையா?? அப்பறம் எப்படி லவ் பண்ண?”

“நான் என்னைக்கு ஐ லவ் யூ சொன்னேன்?”

சில நொடிகள் யோசித்தவன் “நீ சொன்னதே இல்லல்ல???” என்று அவளிடமே கேட்டான்.

“அப்போ நான் உன்னை லவ் பண்ணவே இல்லைன்னு தான அர்த்தம்?”

“ம்ம்... விட்டா நீ ஓவரா பேசுற... இதுக்கு மேல உன்னை பேச விடுறது நல்லதுக்கில்ல...”

தன் மனம் கவர்ந்தவளினுள் தன்னை தொலைத்து அவளை அறியும் முயற்சியில் இறங்கினான் ஆதர்ஷ். தன்னவனின் தேடலுக்கு தன்னையே தந்தாள் நக்ஷத்ரா.
 




Sugaaa

முதலமைச்சர்
Joined
Jun 23, 2019
Messages
6,398
Reaction score
22,045
Location
Tamil Nadu
MEME-20210921-100159.jpg

😍😍😍😍😍😍😍😍....

🌷முத்தம் எனும் மிட்டாய்... அவ்வளவு தித்திப்பு...😜

😜வாய் தித்திக்கவில்லை... மனமெல்லாம் தித்திப்பு...

🌷மென்மையான... விறுவிறுப்பான... அழகான காதல்...

🌷கதை வாசிக்க ஆரம்பித்த இரண்டு நாட்களாய் என் மனதில் சந்தோஷங்கள்...
1a0cb6746a9ee63f21ed2db48ab92eb3.jpg

💐💐💐💐

🌷இதை சொல்லியே ஆகனும்...

🌷Sm tamil novels.. பற்றி கதை இப்படி தொடர்ந்து வாசிக்க அவ்ளோளோளோ நல்லாருக்கு...

🌷இவ்ளோ சந்தோஷங்கள் தரும் sm tamil novels க்கு நன்றி... நன்றி... நன்றி...​
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top