• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

முத்தம் எனும் மிட்டாய்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
பகுதி - 11

நக்ஷத்ரா வீட்டினுள் நுழைந்ததும் முதலில் கண்டது அவளுடைய மாமா சந்தோஷை தான்.

“ஹாய்... எப்போ வந்த?”

“மரியாதைக்கு ஸம்ஸாரிக்கணம் மோளே...” என்று விஜயன் எச்சரிக்க “விடுங்கத்தான்... அவ எப்பயும் பேரு சொல்லிதான பேசுறா… நீ சொல்லு நக்ஷத்ரா... என்னையெல்லாம் மறந்துட்ட தான?” என்றான் சந்தோஷ்.

“எந்து வேணெங்கிலும் செய்தோ” என்ற விஜயன் எழுந்து குளிக்க சென்றார்.

“நானா மறந்தேன்? நீயெல்லாம் எதுக்கு இருக்க? தெண்டம். ஒரு போன், மெசேஜ், மெயில்... ம்ம்ஹும்... எதுவும் கிடையாது. அப்பறம் உன்னை எப்படி நியாபகம் வெச்சுக்குறது?”

“வந்ததும் அவன எதுக்குடி வம்பிழுக்குற? போய் பல்லு வெளக்கிட்டு வா... காபி தரேன். இந்தாடா...”

கீதா அவனிடம் நீட்டிய காபியை பிடுங்கியவள் “அதெல்லாம் நைட் வெளக்கிட்டு தான போனேன்... நீ அவனுக்கு வேற எடுத்துட்டு வா” என்றாள்.

“வர வர உனக்கு...”

“எனக்கு வேற எடுத்துட்டு வாங்கக்கா... அவ டயர்டா வந்திருப்பா...”

“நீயும்தானடா ஊருலேருந்து வந்த? உனக்கு டயர்டா இருக்காதா?”

“ம்மா... காது வலிக்குது... போம்மா...”

“இரு உன்னை அப்பறம் வெச்சுக்குறேன்...” மகளை முறைத்தபடியே உள்ளே சென்றார் கீதா.

“என்ன திடீர்னு வந்திருக்க?”

“எப்பயும் போலதான்... சூப்பர்மார்க்கெட் விஸிட் பண்ண வந்தேன்”

சந்தோஷ் அவனது நண்பர்கள் இருவருடன் சேர்ந்து சூப்பர்மார்க்கெட் ஒன்றை நடத்தி வருகிறான். அதன் கிளைகள் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களிலும் திருவனந்தபுரம் மற்றும் கோழிகோட்டிலும் இருந்தன.

தன் அக்காவின் வீடு திருவனந்தபுரத்தில் இருப்பதால் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்க்கு ஒருமுறை வந்து கடையை பார்த்துவிட்டு செல்வான்.

அவள் காபியை பருக “அவன கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கவிடு. அப்பா இப்போ கிளம்பிடுவாங்க. நீ போய் ட்ரெஸ் மாத்திட்டு வந்து அவங்களோடவே சாப்பிடு. அப்பறம் தூங்க அரம்பிச்சன்னா என்னால எழுப்ப முடியலம்மா தாயே...” புலம்பியபடியே காபியை தம்பியின் கையில் கொடுத்தார் கீதா.

“சரிம்மா...” என்றவள் அறைக்குள் செல்ல அவள் பின்னோடு வந்தவர் “எத்தன தடவடி சொல்லுறது? மாமான்னு கூப்பிடுன்னு... அவன போய் பேரு சொல்லி பேசுற?” என்றார் கோபமாக.

“அவன் என்னைவிட ஆறு வயசுதான் பெரியவன். சின்ன வயசுலேருந்து சந்தோஷ்னு கூப்பிட்டே பழகிட்டேன்... இப்போ வந்து மா....மா..... ன்னு எப்படி கூப்பிடுறது?”

“வாய் நீண்டுக்கிட்டே போகுது உனக்கு...”

அவர் கூறியது காதில் விழாதது போல் மாற்றுடையுடன் குளியலறைக்குள் சென்ற நக்ஷத்ரா சாப்பிட்டு முடித்தவுடன் தூக்கம் வருவதாகக் கூறி அறைக்குள் சென்றுவிட்டாள்.

“நீ உறங்குனில்லே?” என்றுக் கேட்டார் லீலா.

அதிகாலை வந்தவுடன் குளித்த சபரீஷ் இப்போது எங்கோ வெளியே செல்லத் தயாராவதை பார்த்ததும் அவருக்குக் குழப்பம்.

“இல்லா... ஞான் ஆதர்ஷ் காணான் போகுன்னு... பை” என்றவன் பைக்கை எடுத்து கெஸ்ட் ஹவுஸ் வந்து சேர்ந்தான்.

ஆதர்ஷும் உறங்காமல் விழித்தே இருந்தான்.

“என்ன மச்சு... தூங்கலையா?”

உள்ளே நுழைந்ததும் அவன் டோஸ்ட் செய்து வைத்திருந்த ப்ரெட் ஸ்லைஸ் ஒன்றை எடுத்து வாயிற்குள் திணித்தான்.

“டேய் அது எனக்காக நான் செஞ்சது... உனக்கு அம்மா வெரைட்டி வெரைட்டியா சமைச்சு குடுத்திருப்பாங்களே? அப்பறம் எதுக்குடா பிடுங்கி சாப்பிடுற?”

“நான் என்ன உன் கையிலிருந்தா பிடுங்கி சாப்பிட்டேன்? தட்டுல இருந்தது தான? வீட்டுல சாப்பிடல. ரெண்டு ஸ்லைஸ் டோஸ்ட் பண்ணி குடுத்தா ஒண்ணும் கொறஞ்சு போயிட மாட்ட”

“இருக்குறது நாலு ஸ்லைஸ்”

“வேற வாங்கி வெக்க வேண்டியது தான?”

“அதுக்கு கடைக்கு போகணும்... டயர்டா இருக்கு...”

“நான் வாங்கிட்டு வந்து தரேன் மச்சு...”

வேண்டாம் என்று ஆதர்ஷ் கத்தியதை காதில் வாங்காமல் தெரு முனையில் இருந்த மளிகை கடைக்கு பைக் எடுத்து சென்று ஒரு பேக்கட் ப்ரெட் வாங்கி வந்தான்.

“என்னதிது?? இந்த ப்ரெட் எல்லாம் நான் சாப்பிட மாட்டேன். கஷ்டப்பட்டு பேக்கரிலேருந்து வாங்கிட்டு வந்தா... அத நீ முழுங்கிட்டு இப்போ எனக்கு லோக்கல் ப்ரெட் வாங்கிட்டு வந்து குடுக்குறியா?”

“ஆமா... பேக்கரில மட்டும் பாரின் ப்ரெட் விக்குறாங்க... அத இவரு கஷ்டப்பட்டு வாங்கிட்டு வந்தாரு... இங்க பாரு... உன்னால இத சாப்பிட முடியாதுன்னா அதுல மீதி இருக்க 3 ஸ்லைஸ் நீ சாப்பிட்டு எனக்கு இது டோஸ்ட் பண்ணி குடு. பசிக்குது” அவன் பதில் கூறும் முன் ஹாலிற்கு வந்தமறந்தான்.

இருந்த ப்ரெட் அனைத்தையும் டோஸ்ட் செய்து எடுத்து வந்தான் ஆதர்ஷ். “இன்னைக்கு நைட் வெளில போய் சாப்பிடலாமா?”

“8 மணிக்கு ஆபீஸ்ல இருக்கணும். அதோட நக்ஷத்ராவையும் நான் தான் கூட்டிட்டுப் போகணும். அப்பறம் எப்படி போறது?”

“ஒரு நாள் நக்ஷத்ராவ கேப்ல வர சொல்லுவோம். இதுல என்ன இருக்கு?”

“அது நல்லா இருக்காது சபரீஷ். நான் கூட்டிட்டு போறேன்னு சொல்லிட்டு இப்போ கேப்ல போக சொன்னா...”

“என்னமோ ஆயுசுக்கும் நீ கூட்டிட்டு போகப் போற மாதிரி... நீ கிளம்பிட்டா அவ கேப்ல தான வருவா?”

“ஏன் அப்போ நீ கூட்டிட்டு போக மாட்டியா?”

“அது என்ன அவ மட்டும் ஸ்பெஷல்? மத்த ஸ்டாப்ஸ் எல்லாம் கேப்ல வரப்போ அவள மட்டும் எதுக்கு நான் கூட்டிட்டு வரணும்?”

“என்ன கேட்டா? நீதானடா சொன்ன... அப்பா பிரெண்டோட பொண்ணு நல்லா பாத்துக்கணும்னு...”

“சரி... அப்படின்னா இப்போவே என்கூட அனுப்பி இருக்க வேண்டியது தான? எதுக்கு நீ டிராப் பண்ணுற?”

“கார் என்கிட்ட இருக்கு. உன்கூட பைக்ல வர முடியுமா?”

“பைக் நீ எடுத்துக்கிட்டு கார் என்கிட்ட...”

“ஹோட்டல் போலாம்டா... போலாம். எத்தன மணிக்கு ரெடியா இருக்கணும் சொல்லு. அவள கேப்ல வர சொல்லிடுறேன். கேப் டிரைவர்கிட்ட அவ வீட்டு அட்ரெஸ் சொல்லிடு”

வேகமாக தட்டை எடுத்து உள்ளே செல்லும் நன்பனை ஆராய்ச்சி பார்வை பார்த்தான் சபரீஷ்.

சமையலறையிலிருந்து வெளியே வந்தவன் “நான் தூங்கப் போறேன்” என்றுக் கூறி அறைக்குள் சென்றுவிட “போடா போ” என்றவனும் சோபாவில் படுத்து உறங்க ஆரம்பித்தான்.

மாலை கண் விழித்த நக்ஷத்ரா குளித்து வெளியே வந்தபோது சந்தோஷ் வெளியே செல்லத் தயாராகிக் கொண்டிருந்தான்.

“கிளம்பிட்டியா?”

“கடைய போய் பார்த்துட்டு அப்படியே நைட் ஊருக்குக் கிளம்பிடுவேன் நக்ஷத்ரா. நீ எத்தன மணிக்கு கிளம்புவ?”

“7 மணிக்கு. ஆதர்ஷ் வந்து கூட்டிட்டுப் போவான்”

“ஆதர்ஷா?”

“கம்பெனி MD”

“என்னமோ... சரி இன்னைக்கு நானே டிராப் பண்ணிட்டு போறேன்”

“இல்லல்ல... நீ இப்போ...”

“அதெல்லாம் ஒரு கஷ்டமும் இல்ல. ஒரு மணி நேரம் லேட்டா போறதுல ஒண்ணும் ஆகிடாது. அக்காகிட்ட சொல்லிடுறேன். நீ இன்னைக்கு என்கூட வருவன்னு உன் MD... அவன்கிட்ட சொல்லிடு...”

இது என்னடா புது குழப்பம் என்று நினைத்தவள் தான் என்ன சமாதானம் சொன்னாலும் சந்தோஷ் கூறுவதை மீறி அம்மா தன் பேச்சை கேட்க மாட்டார் என்று நன்கு அறிந்ததால் வேறு வழியின்றி மொபைலை எடுத்தாள்.

நல்ல உறக்கத்தில் இருந்த சபரீஷின் மொபைல் அடிக்கவும் மெல்ல கண் விழித்து டேபிள் மீதிருந்ததை எடுத்து ஆன் செய்தான்.

“சபரீஷ் இன்னு எனிக்கு லீவ் தெரான் பட்டோ? மம்மிக்கு வையாண்டு ஆயி... ஹாஸ்பிட்டல் போகேண்டி வன்னு”

மேத்யூ கூறியதை கேட்டவன் “ஷூர் மேத்யூ. கொழப்பம் இல்லா. அம்மையே நோக்கிக்கோ” என்றுக் கூறி இணைப்பை துண்டித்தான்.

சோம்பல் முறித்து சோபாவிலிருந்து எழுந்து ஆதர்ஷை தேடி அவன் அறைக்குள் சென்றபோது அவனுடைய மொபைல் அடித்துக் கொண்டிருந்தது. வேகமாக எழுந்து அதை எடுத்த ஆதர்ஷ் “சொல்லு நக்ஷத்ரா” என்றான்.

“இன்னைக்கு ஆபீஸுக்கு நான் வந்துடுறேன் ஆதர்ஷ். நீ என்னை பிக்கப் பண்ண வர வேண்டாம்னு சொல்லதான் கூப்பிட்டேன்”

தான் அவளிடம் கூற நினைத்ததை அவளே அழைத்துக் கூறியதும் மறுப்பேதும் கூறாமல் “ஓகே நக்ஷத்ரா” என்று அழைப்பைத் துண்டித்தான்.

“என்னடா சொன்னா?”

“இன்னைக்கு நான் பிக்கப் பண்ண வர வேண்டாம்னு சொன்னா. அவளே வந்துடுவாளாம்”

“அவ எப்படி வருவா?”

“எப்படியோ வரட்டும். நம்மதான் ஹோட்டல் போறோமே...”

“இல்லடா. இன்னைக்கு போக முடியாது. மேத்யூ அம்மாவுக்கு உடம்பு சரியில்லையாம். ஹாஸ்பிட்டல்ல இருக்கானாம். லீவ் வேணும்னு கேட்டான். சோ நம்ம ரெண்டு பேரும் தான் சீக்கிரம் போய் அவனோட வேலை எல்லாம் பார்க்கணும். ஹோட்டல் நாளைக்குப் போகலாம். மணி ஆகிடுச்சு. நான் வீட்டுக்கு போய் குளிச்சு கிளம்பி வரேன். நீயும் கிளம்பு”

ஆதர்ஷின் பதிலை எதிர்ப்பார்க்காமல் கிளம்பிச் சென்றான் சபரீஷ்.

சில நாட்கள் நக்ஷத்ராவின் அருகில் இருக்கலாம் என்று நினைத்ததே அவளுடன் தினமும் செல்லும் கார் பயணத்தை உத்தேசித்து தான். அதுவும் இன்று இல்லையென்றாகிவிட்டது.

சரி நண்பனுடன் வெளியே செல்லலாம் என்றால் அதுவும் தடைப்பட்டவுடன் எரிச்சல் தோன்ற மொபைலை மெத்தையில் விட்டெறிந்து குளியலறைக்குள் சென்றான்.

“போகலாமா?” என்று சந்தோஷ் கேட்க “போகலாம் போகலாம். பை மா” என்று வெறுப்புடன் கூறி விடுவிடுவென்று வீட்டை விட்டு வெளியே வந்து செருப்பை மாட்டினாள் நக்ஷத்ரா.

“இவளுக்கு இன்னைக்கு என்ன வந்துதுன்னு தெரியலயே... என்னமோ போ... பார்த்து போயிட்டு வாடா” என்று தம்பிக்கு விடை கொடுத்தனுப்பினார் கீதா.

அவர்களுக்காக காத்திருந்த கால் டேக்ஸியில் ஏறி இருவரும் அமர டேக்ஸி அவளுடைய அலுவலகம் நோக்கி சென்றது.

காரை அலுவலகத்தின் முன்னால் நிறுத்தி கதவை ஓங்கி அறைந்து மூடிய ஆதர்ஷ் வேகமாக உள்ளே சென்றான்.

“வா மச்சு... நான் வந்து இருபது நிமிஷம் ஆச்சு. நீ என்ன இவ்வளவு லேட்டா வர? இன்னும் பத்து நிமிஷத்துல கேப் வந்துடும். ஆமா... என்ன வெறும் கைய வீசிட்டு வர? லேப் எங்கடா?”

சபரீஷ் கேட்டப் பிறகே அதை உணர்ந்தவன் தலையிலடித்து “கார்ல இருக்கு” என்றுக் கூறி வெளியே வந்தான். முன்னிருக்கையிலிருந்த பேகை எடுத்து நிமிர்ந்தபோது சற்று தள்ளி வந்து நின்ற கேபிலிருந்து நக்ஷத்ரா இறங்கினாள்.

“டேக் கேர் நக்ஷத்ரா. டெய்லி நைட் அண்ட் எர்லி மார்னிங் ட்ராவெல் பண்ணுற. பத்திரமா இரு” சந்தோஷ் பின்னிருக்கையில் அமர்ந்து கூற குனிந்து நின்று அவனுக்குத் தலையசைத்தாள்.

“நக்ஷத்ரா” அதட்டலாய் கேட்ட குரலில் சட்டேன்றுத் திரும்பிப் பார்த்தவள் ஆதர்ஷ் நிற்பதை கவனித்து “நீ கிளம்பு சந்தோஷ்” என்றுக் கூறி அவனிடம் சென்றாள்.

“நான் பேசிக்கிட்டே இருக்கேன்... இவ பாட்டுக்கு போறா” கோபமாக அங்கே நின்றவனைப் பார்த்தான்.

“நைட் இந்த நேரத்துக்கு எதுக்கு இப்படி வெளில நின்னு பேசுற? யாரவன்?”

“என்னோட மாமா ஆதர்ஷ். சந்தோஷ். என்னை டிராப்...”

“நக்ஷத்ரா” காரிலிருந்து இறங்கி வெளியே நின்று சந்தோஷ் கோபமாய் அழைக்க “ஒரு நிமிஷம்” என்று அவசரமாய் அவனருகில் ஓடினாள்.

“யாரவன்? ரோட்ல நின்னு அவன்கூட உனக்கென்ன பேச்சு?”

“என்னோட MD சந்தோஷ். ஆதர்ஷ். தினம் அவனோட தான்...”

“நக்ஷத்ரா”

“ஏன்டா இப்படி மாறி மாறி என் பேர ஏலம் போட்டு உயிரை வாங்குறீங்க?” என்று நினைத்து “நீ கிளம்பு பை” என்று சந்தோஷிடம் கூறி ஆதர்ஷை கடந்து செல்லும்போது “உள்ள வா” என்று அடிக் குரலில் கூறி அலுவலகத்தினுள் சென்றாள்.

ஆதர்ஷை முறைத்த சந்தோஷ் காரில் ஏறிக் கிளம்ப சில நொடிகள் ஆயின. ஆதர்ஷும் சளைக்காமல் பதிலுக்கு முறைத்துவிட்டே உள்ளே வந்தான்.

அவன் கண்கள் முதலில் அவளை தான் தேடின. சபரீஷ் பேன்ட்ரியில் தேநீர் கலந்துக் கொண்டிருக்க அவளுடைய அறை கதவை தட்டிவிட்டு உள்ளே நுழைந்து கதவை மூடினான்.

“எதுக்கு ஆதர்ஷ் உனக்கு இவ்வளவு கோபம்?”

“ரோட்ல... நைட் டைம்ல... அதும் கேப்ல உட்கார்ந்து ஒரு பொண்ணுகிட்ட பேசுறானே... அறிவு வேண்டாம்?”

“அவன் என்னை சேப்பா இருக்க சொல்லிட்டு இருந்தான் ஆதர்ஷ். அதோட நாங்க ஒண்ணும் ரொம்ப நேரம் நின்னு பேசலையே?”

“எவ்வளவு நேரம் நின்னு பேசுனாலும் தப்புதான் நக்ஷத்ரா. அப்படி அதிகாரமா கூப்பிடுறான்?”

“நீயும் அதட்டி தான கூப்பிட்ட? எதுக்கு ரோட்ல நின்னு பேசுற? உள்ள போன்னு சொல்லதான் கூப்பிட்டான். நீயும் அதைதான சொன்ன?”

“அதை சொல்லுறவனுக்கு அறிவு வேணும்... அவனும் ரோட்ல நிக்க வெச்சு தான பேசுனான்? அப்போ தெரியலையா?”

“நீயும் ரோட்ல... ஆதர்ஷ்... ப்ளீஸ் ஸ்டாப் இட். என்னாச்சு உனக்கு? எதுக்கு இப்படி சம்பந்தமே இல்லாம இவ்வளவுக் கோபப்படுற? அவன் என் மேல இருக்க அக்கறையில சொன்னான்”

“எனக்கு இல்லையா? அக்கறை இல்லாமதான் உன்னை உள்ளப் போக சொன்னேனா? உன்...”

“உனக்கெதுக்கு அக்கறை?”

“என்... எனக்கு ஏன் இருக்காது? என்னோட எல்லா ஸ்டாப்ஸ் மேலயும் எனக்கு அக்கறை இருக்கு நக்ஷத்ரா. இது என்ன கேள்வி?”

“அப்போ உன்னோட ஸ்டாப்ஸ் எந்த பொண்ணு இப்படி வெளில நின்னு ஒரு பையனோட பேசினாலும் நீ இப்படி தான் கோபப்படுவ. அப்படிதான?”

“ஆ... ஆமா... பேசி டைம் வேஸ்ட் பண்ணாத. நவ் கெட் பேக் டு வர்க்” எரிச்சலுடன் கூறியவன் அறையை விட்டு வெளியேற அவன் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
பகுதி - 12

நக்ஷத்ராவின் அறையிலிருந்து வெளியேறியவனைக் கூர்ந்து கவனித்த சபரீஷ் “என்ன ஆதர்ஷ்? முகமெல்லாம் வெளிறி போயிருக்கு?” என்றுக் கேட்க “எதுக்கு எல்லாரும் காலையிலிருந்து கேள்வியா கேட்குறீங்க? ச்சை....” என்று எரிச்சலுடன் கூறி தன்னுடைய அறைக்குள் சென்றான்.

மூடியிருந்த இரண்டு அறை கதவையும் மாறி மாறி பார்த்தவன் தோளை குலுக்கி காலியாகியிருந்த டீ கப்பை கழுவ பேன்ட்ரிக்கு சென்றான்.

அன்று ஆதர்ஷ் கூறியிருந்தபடி அனைவருக்குமான இரவு உணவு அலுவலகத்தில் வழங்கப்பட்டது. நக்ஷத்ரா ஆர்டர் கொடுத்திருந்த உணவு வந்ததும் அனைவரும் பேன்ட்ரியில் சென்று சாப்பிட்டனர்.

அவளொரு மூலையிலும் ஆதர்ஷ் ஒரு மூலையிலும் அமைந்து சாப்பிட சபரீஷ் இருவரையும் கவனித்துக் கொண்டுதான் இருந்தான்.

மேத்யூ இல்லாததால் அவன் சரிப் பார்க்க வேண்டியதனைத்தையும் சபரீஷ் செய்து முடித்திருந்தான்.

செய்வதற்கு ஒன்றுமில்லாதபோதும் முக்கியமான வேலையில் மூழ்கியிருப்பது போல் பாவனை செய்த ஆதர்ஷின் மனம் அலைபாய்ந்துக் கொண்டிருந்தது.

“காலையில என்னடான்னா அவன் அத்தன கேள்வி கேட்டான். இப்போ... இவகிட்ட பேச போனாலும் கேள்வியாக் கேட்குறா... என்னதான் நெனச்சுட்டு இருக்காங்க எல்லாரும்? நான் தப்பு ஒண்ணும் பண்ணலையே”

எதேச்சையாய் திரும்பியபோது அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்து தன்னையே பார்த்துக் கொண்டிருந்த நண்பனை கண்டவன் “இவன் எப்போ வந்தான்னு தெரியலயே... மறுபடியும் கேள்வி கேட்க ஆரம்பிக்கட்டும்... செத்தான்” என்று நினைத்து அமைதியாக நோட்பேடில் எதையோ கிறுக்கினான்.

சபரீஷ் எதுவும் கேட்காததே நிம்மதியை அளித்தது.

அன்று மேலும் இருவர் சோஷியல் செக்யூரிட்டி நம்பர் வாங்கினர். சபரீஷிற்கு அதில் மிகுந்த மகிழ்ச்சி. அவனுடன் முகுந்தையும் நக்ஷத்ராவையும் சந்திக்க வந்தான் ஆதர்ஷ்.

“ஸ்டார்ட் பண்ணி ஒரு வாரத்துக்குள்ள இத்தன நம்பர் வாங்கியிருக்குறது பெரிய விஷயம் தான். கண்டிப்பா ட்ரீட் குடுக்கணும். அப்போதான் அவங்கள நம்ம என்கரேஜ் பண்ணுறோம்னு தெரியும்”

“இப்போ புறத்து போயி புட் கழிக்கானுள்ள சமயம் இல்லா. ப்ராஜக்ட் துடங்கிட்டு ஒரு ஆழ்ச்சையே ஆயிட்டுள்ளு”

“ம்ம்... ஷெரியானு” என்று சபரீஷ் கூற தான் புரியாமல் விழிப்பதை யாரும் கவனிக்கும் முன் “டின்னர் ஆர்டர் பண்ணுவோமா?” என்றுக் கேட்டான் ஆதர்ஷ்.

“ட்ரீட்னு சொல்லி டின்னர் அரேஞ்ச் பண்ணா இன்னைக்கு மாதிரி அது ஒரு நாளோட முடிஞ்சுடும். அதுக்கு பதிலா டெய்லி குடுக்குற ஸ்நாக்ஸ்ல ஏதாவது சேர்க்கலாம். ஒரு சேஞ்சா இருக்கும். கேக் குடுக்கலாமா?”

“குட் ஐடியா நக்ஷத்ரா. ஒரு சின்ன கன்செஷன். யாருக்கு என்ன சாப்பிட பிடிக்கும்னு கேட்டு... அதுல டெய்லி நம்மளால எது வாங்கி வைக்க முடியும்னு பார்த்து அதை ப்ரொவைட் பண்ணலாம்”

“ஈ ஐடியா சூப்பர் ஆதர்ஷ். ஐ வில் கெட் தெ டீட்டையில்ஸ்” முகுந்த் வெளியே செல்ல ஆதர்ஷின் மொபைல் அடித்தது.

“டேய் அண்ணா... இன்னும் ஒரு மாசத்துக்கு வர மாட்டியாமே... அம்மா இப்போதான் சொன்னாங்க. நீ இன்னைக்கு வந்துடுவன்னு ஆசையா வெயிட் பண்ணேன். ம்ச்ச்...”

“நீ எதுக்கு ஆசையா வெயிட் பண்ணியிருப்பன்னு எனக்கு தெரியும் வினோ. புளுகாத”

“ஹிஹி... கண்டுப்பிடிச்சுட்டியா? சரி சரி... சாக்கி வாங்கி அனுப்பிடு”

“எவ்வளோ சாக்கி சாப்பிடுவ? கடைசில பூசணிக்கா மாதிரி ஆகப் போற பாருடி...”

“கண்ணு வெக்காதடா. நானே இவ்வளவு சாப்பிடுறதுக்கு குண்டாகாம இருக்கனேன்னு சந்தோஷப்பட்டுட்டு இருக்கேன்”

“சரி சரி வாங்கி அனுப்புறேன்”

புன்னகையுடன் அழைப்பைத் துண்டித்தவனையே கவனித்துக் கொண்டிருந்த நக்ஷத்ரா அருகில் நின்றவனிடம் “அது என்ன சபரீஷ் எப்போ பார்த்தாலும் சாக்லேட் வாங்கி அனுப்புறான்?” என்றுத் தாழ்ந்த குரலில் கேட்டாள்.

“வினோ எப்பயும் அவன்கிட்ட மட்டும் தான் சாக்லேட் வாங்கி தர சொல்லி கேப்பா... எனக்குத் தெரிஞ்சு அவனும் அவளுக்கு மட்டும் தான் வாங்கி தருவான்”

“ஓஹோ...” என்று ராகம் பாடியவளுக்கு திடீரென்று அந்த எண்ணம் தோன்ற “ஆதர்ஷ் எனக்கு சாக்லேட் வாங்கி குடு” என்றாள்.

ஆதர்ஷ் செய்வதறியாது விழிக்க ஒரு நிமிடம் அவளை ஆச்சரியமாகப் பார்த்த சபரீஷ் சிரிக்க ஆரம்பித்தான்.

“வாங்கி குடு ஆதர்ஷ்”

“ம்ம்... டேய் சபரீஷ்... அவளுக்கு வாங்கிக் குடுத்துடுடா”

“ஹை... இது நல்லாயிருக்கே... மத்தவங்களுக்கு என்ன வேணும்னு கேட்க சொன்ன? அவங்களுக்கெல்லாம் நீ வாங்கி தருவ... எனக்கு மட்டும் வாங்கி தர மாட்டியா?”

“அதான் வாங்கித் தர சொல்லிட்டேன்ல? டேய் எவ்வளோ வேணுமோ கேட்டு வாங்கிக் குடுத்துடு”

“ஆமா... பெரிய தாராள பிரபு... எவ்வளோ வேணுமோ வாங்கிக் குடாம். காசு நான் தான குடுக்கப் போறேன்? எல்லாம் நேரம்டா. சொல்லு நக்ஷத்ரா... என்ன சாக்லேட் வேணும்? எத்தன வேணும்?”

ஆதர்ஷையே பார்த்தவள் “அப்பறம் சொல்லுறேன். இப்போ ப்ரேக் டைம் தான... டீ குடிக்க போலாமா?” என்று சபரீஷிடம் கேட்டாள்.

“வா வா மண்டக் காயுது” என்றவன் அவளுடன் வெளியேற நிம்மதி பெருமூச்சு விட்டான் ஆதர்ஷ்.

புதனன்று அதிகாலை அனைவரும் கேபில் கிளம்பிச் சென்றப் பின் சபரீஷ் பைக்கில் புறப்பட்டான்.

“நான் டிராப் பண்ணணுமா? இல்ல... மாமா சித்தப்பா யாராவது வராங்களா?”

“கேப் போயிடுச்சு. அப்பறம் நான் எப்படி போவேன்? சந்தோஷ் ஊருக்குப் போயிட்டான்”

அவளை கூர்ந்து நோக்கியவன் தலையை மட்டும் ஆட்டி காரில் அமர அவளும் அமர்ந்ததும் அமைதியாய் காரை எடுத்தான்.

உறங்கும்பொழுது மட்டும் நேரம் எப்படித்தான் இறக்கை கட்டி பறக்குமோ? சபரீஷ் கண் விழித்தபோது மாலையாகியிருந்தது. மொபைலை துழாவி எடுத்து ஆதர்ஷிற்கு கால் செய்தான்.

“நேத்து ஹோட்டல் போக முடியாம போச்சு. இன்னைக்கு மேத்யூ வந்திடுறேன்னு சொல்லிட்டான். சோ ரெடியா இரு. இன்னும் 20 மினிட்ஸ்ல அங்க இருப்பேன்”

சொன்னது போலவே கெஸ்ட் ஹவுஸ் வந்து சேர்ந்தவன் “பைக் இங்கயே இருக்கட்டும். நம்ம கார்ல போயிடலாம்” என்றான்.

“நக்ஷத்ரா? அவள மறந்தேப் போயிட்டேன். இரு கால் பண்ணி சொல்லிடுறேன்”

“விடு நேர்ல சொல்லிக்கலாம்”

“நேர்லயா???”

“அது... கிளம்பும்போது அப்பா ரொம்ப சொன்னாங்கடா... கேனடாலேருந்து வந்ததுக்கு அப்பறம் அவ வீட்டுக்குப் போய் பார்க்கவே இல்ல. டைம் கிடைக்கல... என்ன செய்ய? நான் போய் பேசினதால தான் அவ வீட்டுல வேலைக்கு அனுப்பினாங்க. இப்போ போய் பார்க்கக் கூட இல்லன்னா தப்பா நெனச்சுப்பாங்கல்ல?”

“அதுக்கு??? நீ போயிட்டு வா”

“ஜஸ்ட் டென் மினிட்ஸ் தான் மச்சு... உடனே கிளம்பிடலாம்டா”

“அங்க எதுக்குடா என்னை கூப்பிடுற? நீ அவங்க வீட்டுக்கு பைக்ல போ. அங்கேருந்து கிளம்பும்போது கால் பண்ணு. நான் நேரா ஹோட்டல் வந்திடுறேன்”

“அதான் பத்தே நிமிஷம்னு சொல்லுறேன்ல? ஓவரா பண்ணாத. தெரியாத யாரோ வீட்டுக்கா கூப்பிடுறேன்? நக்ஷத்ரா வீட்டுக்கு தான? நீ கார் எடு”

அவன் வீட்டை பூட்ட ஆரம்பிக்க “விட மாட்டான் போலயே... அவங்க வீட்ல போய் என்னத்த பேச? அவள தெரியும்னா அதுக்காக அவ வீட்டுக்குப் போகணுமா? டெய்லி போயிட்டு தான் இருக்கோம்... ஆனா அப்பயும் அவ உள்ளக் கூப்ப்ட்டப்போ எல்லாம் எதையாவது சொல்லி எஸ் ஆகி வந்தா... இவன் இப்படி மாட்டி விட்டுட்டானே” என்று மனதிற்குள் புலம்பியபடி காரை எடுத்தான்.

அவள் வீட்டின் முன் காரை நிறுத்தியப் பிறகும் “நீ போயிட்டு வா. நான் இங்கயே வெயிட் பண்ணுறேன்” என்றவனை “ரொம்ப பண்ணாதடா. டென் மினிட்ஸ். போறோம். பேசுறோம். அவள கேப்ல போக சொல்லிட்டு நம்ம கெளம்பிட்டே இருக்கோம். வா வா. டைம் ஆகுது” என்று கையை பிடித்து உள்ளே இழுத்துச் சென்றான்.

முதலில் எதிர்ப்பட்ட விஜயனிடம் சபரீஷ் மலையாளத்தில் பேச ஆரம்பிக்க “சுத்தம்... இதுக்குதான் நான் எங்கயும் வரலன்னு சொன்னேன். ஒண்ணும் புரியாம எவ்வளவு நேரம் இவங்க மூஞ்சிய பார்த்துட்டு உட்கார்ந்திருக்குறது? நக்ஷத்ரா வேற ஆள காணும்...” என்று அவளை தேடினான்.

அடுத்து வந்த கீதா சபரீஷை விசாரித்துவிட்டு “இது ஆரா?” என்றுக் கேட்க “ஆதர்ஷ். எண்ட பார்ட்னர். அவன் தமிழ்தான் ஆன்ட்டி” என்று அறிமுகம் செய்து வைத்து விஜயனுடன் தன் பேச்சை தொடர்ந்தான்.

“அப்படியாப்பா? நல்லா இருக்கியா?”

“ம்ம்” என்று தலையசைத்தவன் “அய்யய்யோ இவங்க தமிழா? இவங்க பாட்டுக்கு உட்கார்ந்து பேச ஆரம்பிச்சா என்னத்த பேச? நக்ஷத்ரா... சீக்கிரம் வா” என்று வேண்டிக் கொண்டிருந்தான்.

அவன் அழைத்தது கேட்டதோ என்னவோ... பளிச்சென்ற புன்னகையுடன் “ஆஹா... இதாரா?” என்றபடி தந்தையின் அருகில் வந்தமர்ந்தாள்.

சபரீஷ் புன்னகைக்க “எத்தர ப்ராவிஷம் விளிச்சுட்டும் ஒரு ஆளுக்கு அகத்து வெரான் தால்பரியம் இல்லாது போயி... இப்பழா வெரான் சாதிச்சது?” என்று ஆதர்ஷிடம் கேட்டாள்.

“பாவி... இத்தன நாளையில ஒரு நாளாவது என்கிட்ட மலையாளத்துல பேசியிருக்கியாடி? இன்னைக்கு ஏன்டி எல்லார் முன்னாடியும் பேசி என் மானத்த வாங்குற? நீ என்ன பேசுனன்னு புரிஞ்சாதான நான் பதில் சொல்லுறதுக்கு?”

அவன் விழிப்பதை பார்த்த சபரீஷ் நண்பனை காப்பாற்ற எண்ணி “இன்னைக்கும் கைய பிடிச்சுதான் இழுத்துட்டு வந்திருக்கேன்” என்றான்.

கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி “டைம் ஆச்சு. நாங்கக் கிளம்புறோம்” என்றுக் கூறியது மட்டுமல்லாமல் இருக்கையிலிருந்து எழவும் செய்தான் ஆதர்ஷ்.

இதற்கு மேல் அமர்ந்திருந்தால் அது நன்றாக இருக்காதென்பதால் சபரீஷும் எழுந்து “நாங்க கிளம்புறோம். நக்ஷத்ரா நீ இன்னைக்கு மட்டும் கேப்ல வர முடியுமா?” என்றான்.

“ஓகே. ஆனா ஏன்?” என்றவள் ஆதர்ஷை பார்க்க “நாங்க ஹோட்டலுக்கு போயிட்டு ஆபீஸ் வந்திடுவோம்” என்றான்.

கீதாவும் விஜயனும் அமைதியாய் இருந்தாலும் அந்த அறையில் ஏதோ ஒரு இறுக்கம் இருப்பதாய் தோன்ற “நீயும் வரியா நக்ஷத்ரா?” என்றுக் கேட்டான் சபரீஷ்.

ஆதர்ஷ் சட்டென்று அவனை திரும்பிப் பார்க்க “ம்ம்... வரலாம்..... எனக்கும் வீட்டுல போர் அடிக்குது. பகல் முழுக்க தூங்கி... நைட் புல்லா வர்க் பண்ணி... ஓகே. நான் வரேன். பிப்டீன் மினிட்ஸ். ரெடி ஆகிடுறேன்” என்றவள் எழுந்து உள்ளே சென்றாள்.

“அய்யய்யோ... ஒரு பேச்சுக்கு கூப்பிட்டா வரேன்னு சொல்லுறாளே... செத்தேன்” மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டவன் தலை குனிந்து அமர்ந்தான்.

“உட்காருங்க” என்று கீதா கூற மீண்டும் இருக்கையில் அமர்ந்தவன் நண்பனை முறைக்க ஆரம்பித்தான்.

நக்ஷத்ரா தயாராகி வரும்வரை சபரீஷ் பேசவுமில்லை தலையை நிமிர்த்தவும் இல்லை.

“போகலாமா?” என்றுக் கேட்டவள் முதல் முறையாய் சுடிதார் அணிந்திருந்தாள்.

அவளுடைய பெற்றோர் முன்னால் அவளை சரியாகப் பார்க்கக் கூட முடியாமல் அவர்களுக்கு தலையசைத்து வெளியே வந்தான் ஆதர்ஷ்.

மற்ற இருவரும் வந்ததும் அவன் காரை கிளப்ப வழக்கம் போல் அவன் அருகில் அமர்ந்தாள் நக்ஷத்ரா. “இவன் பக்கத்துல உட்கார்ந்து எவன் வாங்கிக் கட்டிக்குறது?” என்று நினைத்த சபரீஷும் நிம்மதியுடன் பின்னிருக்கையில் அமர்ந்தான்.

அவர்கள் சென்றது ஒரு மூன்று நட்சத்திர ஹோட்டலிற்கு. “இவ்வளவு பெரிய ஹோட்டலுக்கு தான் வரணுமா?” என்று நினைத்தவள் ஆண்கள் இருவருக்கும் முன்னால் உள்ளே நுழைந்தாள்.

“சுடிதார் போட்டாலும் அழகா இருக்கா. இப்பயும் இப்படி லூஸ் ஹேர் விட்டிருக்குறது சூப்பரா இருக்கு” அவள் வீட்டில் அவளுடைய பெற்றோர் முன்னால் அவளை சரியாக கவனிக்க முடியவில்லையே என்றிருந்த ஆதர்ஷின் மனத்தாங்கல் மறைந்தது.

மூவரும் ஒரு டேபிளில் அமர்ந்ததும் அதன் மீதிருந்த நேப்கினை எடுத்து சட்டை காலரில் கழுத்தடியில் சொருகியவனை விநோதமாகப் பார்த்து அதை மறைக்க குனிந்து ஸ்பூனை ஆராயத் துவங்கினாள்.

அவன் ஆர்டர் கொடுத்த உணவு பொருட்களும் அவளுக்கு அவ்வளவு பிடித்தம் இல்லாதவை. “குதர்க்கமான டேஸ்ட் இவனுக்கு... நல்லவேளை நமக்கும் சேர்த்து ஆர்டர் குடுக்காம இருந்தானே” அவனிடமிருந்து பார்வையை விளக்க முயன்று தோற்றுக் கொண்டிருந்தாள்.

சபரீஷ் அவர்கள் இருவரையும் கவனித்தானே தவிர எதுவும் பேசவில்லை. உணவு வருவதற்கு ஆன இருபது நிமிடங்களுக்கும் அங்கே அமைதி.

நக்ஷத்ரா சுற்றி வேடிக்கை பார்க்க முயன்றாள். ஸ்பூனை நகற்றும் சப்தம் கூட பேரொலியாய் கேட்கும் அளவிற்கு அமைதியான சூழல்.

சரி நண்பர்கள் இருவரும் ஏதேனும் பேசுவார்கள் அதை கேட்கலாம் என்றால் இருவரும் மொபைலை ஆராய்ந்துக் கொண்டிருந்தனர்.

“போங்கடா... நீங்களும் உங்க மொபைலும்” தன்னுடைய கைபயிலிருந்து மொபைலை எடுத்து அவளும் கேம்ஸ் விளையாட ஆரம்பித்தாள்.

அவ்வபோது நிமிர்ந்து பார்த்தவள் யாரும் தன்னை சட்டை செய்யவில்லை என்றதும் மீண்டும் குனிந்து விடுவாள்.

உணவை எடுத்து வந்து பரிமாறி சென்றனர். சாப்பிடும்போதாவது பேசுவார்கள் என்றெண்ணியவள் ஸ்பூனில் பிரைட் ரைஸை எடுத்து வாயில் போட்டு நிமிர்ந்தபோது ஆதர்ஷ் போர்க்கும் ஸ்பூனும் கொண்டு மஷ்ரூமை நறுக்கி வாயில் திணித்தான்.

“கழுத்துல நேப்கின்... ரெண்டு கையிலயும் போர்க்... ஸ்பூன்... ஐயோ...... இவனோட எல்லாம் எப்படி இந்த சபரீஷ் சாப்பிட வரான்?”

அவள் அவன்புறம் திரும்பியபோது வாயை பொத்தி கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்க முயன்றுக் கொண்டிருந்தான். நால்வர் அமரும்படி இருந்த டேபிளில் அவனும் நக்ஷத்ராவும் ஒரு பக்கமும் ஆதர்ஷ் அவர்களுக்கு எதிரிலும் அமர்ந்திருந்தனர்.

“எதுக்கு சிரிக்குற?” தன்னருகில் குனிந்து தாழ்ந்த குரலில் கேட்டவளை பார்த்தவனுக்கு மேலும் சிரிப்பு வர அவசரமாக தண்ணீர் எடுத்து பருகினான்.

“எதுக்கு சிரிக்குறன்னு சொல்லிட்டு சிரி”

“சரி சரி... கோவப்படாத. இன்னைக்கு தான் இவன் சாப்பிடுறத பார்க்குறியா? ஆபீஸ்ல உட்கார்ந்து சாப்பிட்டதில்லையா?”

“ஆபீஸ்ல... ஒரு நாள் சேர்ந்து சாப்பிட்டோம். ஆனா... எனக்கு ஞாபகம் இல்லையே... நான் சரியா கவனிக்கல”

“அவன் எப்பவும் இப்படி தான் சாப்பிடுவான்”

“ஏன்? பெரிய வெள்ளைக்கார துறையா?”

“ஹேய்... என்ன என் பிரெண்ட கிண்டல் பண்ணுற? அவன் ஏழு வயசு வரைக்கும் லண்டன்ல வளர்ந்தான் தெரியுமா?”

“அதுக்காக இப்படியா? பிரின்ஸ் ஒண்ணும் இல்லையே? இப்பயும் பாரு... நம்ம ரெண்டு பேரும் குசு குசுன்னு பேசுறோமே... நிமிர்ந்தாவது பார்க்குறானா? இதுக்கு எதுக்கு ஹோட்டலுக்கு வரணும்? நீ எப்படி அவன்கூட சுத்துற?”

மெல்லிதாய் சிரித்தவன் “ஒரு சில விஷயத்துல நான் அவன மாத்தணும்னு நினைக்க மாட்டேன். அவனும் என்னை மாத்தணும்னு நினைக்க மாட்டான். அவன் பேசலையே தவிர நம்ம பேசுறதுக்கு ஏதாவது சொன்னானா? இல்லையே... அவனுக்கான பர்ஸனல் ஸ்பேஸ் அவன் மெயின்டெயின் பண்ணுவான் நக்ஷத்ரா... எப்பவும்” என்றான்.

யோசனையுடன் அவனை நிமிர்ந்துப பார்த்தாள் நக்ஷத்ரா. “பர்ஸனல் ஸ்பேஸ் மெயின்டெயின் பண்ணுவானா? என்கிட்டயுமா? ச்ச... இது என்ன இப்படி யோசிக்குறோம்? அவன் நம்மகிட்டேருந்து ஒதுங்கி இருந்தா நமக்கென்ன வந்துது?” தோளைக் குலுக்கி சாப்பிட ஆரம்பித்தாள்.

பில் எடுத்து வந்து வைத்ததும் தன்னுடைய கிரெடிட் கார்டை எடுத்துக் கொடுத்தான் ஆதர்ஷ். கடைசியாக ஒரு சிறிய ப்ளேட்டில் மூன்று சாக்லேட்டும் கொஞ்சம் சோம்பும் எடுத்து வந்து வைத்து “தேங்க்ஸ் பார் விஸிட்டிங் அஸ்” என்றுக் கூறிச் சென்றனர்.

சாக்லேட்டை பார்த்தவள் வேகமாக அதை எடுக்க கை நீட்ட அவசரமாக மூன்றையும் எடுத்து தன் பேன்ட் பாக்கெட்டில் வைத்து எழுந்து வெளியே சென்றான் ஆதர்ஷ்.

ஏமாற்றமும் ஆச்சரியமும் சேர அவள் அவன் முதுகையே வெறிக்க “வா போகலாம். லேட் ஆனா அதுக்கும் கத்துவான்” என்றான் சபரீஷ்.

கார் அருகில் வந்தவளால் அதற்கு அமைதியாக இருக்க முடியவில்லை. “கஞ்சுஸ்... நீ தான் சாக்லேட் வாங்கி தர மாட்ட? ஹோட்டல்ல ஓசில தான குடுத்தாங்க? அதக் கூட என்னை சாப்பிட விட மாட்டியா? எனக்கு என் பங்கு வேணும். குடு”

“இன்னைக்கு சாப்பிட்டதுக்கு பில் நான் குடுத்தேன். அப்படின்னா இந்த சாக்லேட்டும் நான் உனக்கு வாங்கி தர மாதிரி தான்”

“அடப்பாவி....”

“அவன்கிட்டேருந்து நீ சாக்லேட் வாங்கிடுப் பார்ப்போம். அதெல்லாம் நடக்காது நக்ஷத்ரா. நாங்க எத்தன தடவ ட்ரை பண்ணியிருப்போம்?”

ஆதர்ஷையே பார்த்தபடி அவள் அமர காரை அலுவலகம் நோக்கி செலுத்தினான்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
பகுதி - 13

அன்றிரவு கால் ரேட் அதிகமாக இருந்தது. நக்ஷத்ராவும் முகுந்தும் கூட கால் பேச ஆதர்ஷும் சபரீஷும் கால்ஸ் மானிட்டர் செய்தனர்.

“ஹோட்டல் போய் புல் கட்டு கட்டிட்டு வந்து உட்கார்ந்து இப்படி வேலை பார்க்க வெக்குறியேடா... இதெல்லாம் உனக்கே அநியாயமா தெரியல?” என்று புலம்பியபடியே வேலை பார்க்கும் நண்பனுக்கு பதிலாய் ஒரு புன்னகை மட்டுமே...

முதல் ப்ரேக் முடிந்த சமயம் அறைக்குள் நுழைந்த பெண்ணை கேள்வியாகப் பார்த்தனர் இருவரும். தனக்கு இரண்டு நாட்கள் லீவ் வேண்டுமென்றுக் கேட்டாள். ஆதர்ஷ் அதை அவளுடைய லீடிடம் கேட்க சொல்ல நக்ஷத்ரா தான் அவனிடம் கேட்க சொன்னதாக கூறினாள்.

சில நொடிகள் யோசித்தவன் ஏன் எதற்கென்று கேள்விகள் கேட்டப் பிறகு விடுப்பு எடுக்க அவளுக்கு சம்மதம் கூறி அனுப்பி வைத்தான்.

“லீவ் கேட்டா குடுக்க வேண்டியது தான? அத எதுக்கு நம்மகிட்ட கேட்க சொல்லி அனுப்பி வைக்குறா? அப்பறம் எதுக்கு இவள லீட்னு அப்பாயின்ட் பண்ணி வெச்சிருக்கோம்? இதெல்லாம் அவளே பார்த்துக்க வேண்டியது தான?”

“ஏன்??? இத அவகிட்டயே கேட்க வேண்டியது தான? அட... உன் பக்கத்துலயே போன் இருக்கே... அவ டெஸ்க்குக்கு கால் பண்ணேன்??”

“அய்யய்யோ... அவளுக்கு கால் பண்ணவா? நீ வேற... போன் கொண்டு வந்து பிக்ஸ் பண்ண அன்னைக்கு லைன் க்ளியரா இருக்கான்னு செக் பண்ண சொன்னாங்க. நானும் அவ உட்கார்ந்திருந்த டெஸ்க் போனுக்கு கால் பண்ணேன். ஷப்பா...... ஏதாவது பேசுன்னு சொன்னது தான்டா... நிறுத்தாம பத்து நிமிஷத்துக்கு பேசிக்கிட்டே இருக்கா.... நம்மளால முடியாதுடா. நான் கால் பண்ண மாட்டேன். ம்ம்ஹும்ம்...”

போனையே பார்த்து பேசியவன் கதவு தட்டப்படுவதையோ உள்ளே நுழைந்த நக்ஷத்ராவையோ கவனிக்கவில்லை. அவன் பேச்சை நிறுத்த சபரீஷும் அவன் சேரை எத்தனையோ முறை உலுக்கிப் பார்த்தான். அதுவும் பலனளிக்கவில்லை.

கடைசியாக ஆதர்ஷ் நிமிர்ந்தபோது அவன் எதிரில் கை கட்டி நின்றிருந்தவளை கண்டதும் சட்டென்று திரும்பி நண்பனை பார்த்தான்.

“எத்தன தடவடா சேர தட்டுறது?” அவனுக்கு மட்டும் கேட்கும்படி கூறியவனை முறைக்க முடியாமல் மெல்ல நிமிர்ந்துப் பார்த்தான்.

அவள் அசையாமல் நின்று அவனையே பார்க்க வேகமாக “உட்காரு நக்ஷத்ரா” என்றான். சேரை நகர்த்தி அமர்ந்தவள் கையிலிருந்த மொபைலை டேபிள் மீது வைத்து இருவரையும் பார்த்து பேச ஆரம்பித்தாள்.

“தேவிகா வந்து லீவ் கேட்டாளா?”

“ம்ம்”

“அவ நம்மக்கிட்ட வந்து பெர்மிஷன் கேட்டு லீவ் போடுறா ஓகே. நாளைக்கு சொல்லாம யாரும் லீவ் போட்டா எப்படி ட்ராக் பண்ணுறது? மேத்யூ தினம் ஹெட் கவுன்ட் எடுக்குறாரு. இருந்தாலும் ப்ராப்பர் அட்டெண்டன்ஸ் சிஸ்டம் வேணும்.

அதுக்கு என்ட்ரன்ஸ்ல ஸ்வைப் மஷின்ஸ் வெக்கணும். ஐடி கார்ட் அதுல ஸ்வைப் பண்ண சொல்லி எல்லாரோட இன், அவுட் டைம் ரெக்கார்ட் பண்ணணும். மன்த்லி இத்தன நாளைக்கு மேல லீவ் எடுத்தா சேலரி கட் ஆகும்னு தெரிஞ்சா தான் லீவ் எடுக்க யோசிப்பாங்க.

சபரீஷ்... இது பத்தி விசாரிச்சு சீக்கிரம் யாரையாவது கூப்பிட்டு மஷின் பிக்ஸ் பண்ண சொல்லு. ஆதர்ஷ்...” ஒரு நொடி அவனை மேலும் கீழும் பார்த்தவள் “வழக்கம் போல எல்லாத்துக்கும் பே பண்ணிடு” என்றுக் கூறி யாருடைய பதிலையும் எதிர்ப்பார்க்காமல் எழுந்து வெளியே சென்றாள்.

“பத்தியா... என்ன திமிரா பேசிட்டு போறா பாரு. நான் பே பண்ண மட்டும் தான் இருக்கேன்னு நக்கலடிச்சுட்டு போறா... இந்த ஊருல யாரையும் தெரியாதுன்னு உன்கிட்டயும் இவகிட்டயும் ஹெல்ப் கேட்டா... என்னமோ ஓவரா பேசுறா?

நானும் பிபிஓ கம்பெனி வெச்சிருக்கேன். சென்னையில வந்து பார்க்க சொல்லு. கொஞ்சம் விட்டா ஒண்ணும் தெரியாதுன்னு சொல்லிடுவா போலயே...

இப்போக்கூட பார்த்தல்ல... உட்காருன்னு மட்டும் தான் சொன்னேன். அவ பாட்டுக்கு பேசிட்டே போறா. கடைசியா மேடம் ஆர்டர் போட்டுட்டு போறாங்க வேற. இவளா MD?”

அவன் திரும்பியபோது மீண்டும் நக்ஷத்ரா அவன் முன்னால் நின்றிருந்தாள். மேஜை மீதிருந்த மொபைலை கையிலெடுத்தவள் “உனக்கு நிஜமாவே எல்லாம் தெரியுமா ஆதர்ஷ்?” என்று ஆச்சரியமாகக் கேட்டு வெளியே சென்றுவிட்டாள்.

அவன் கோபமாய் திரும்பியபோது சபரீஷ் சிரித்துக் கொண்டிருந்தான்.

“அவ நக்கலடிச்சுட்டே இருக்கா... நீ உட்கார்ந்து சிரிக்குறியா?”

“என்னையே எதுக்குடா திட்டுற? அவள திட்ட வேண்டியது தான? சும்மா தான சொல்லுறா... வேலைய பாரு. அவ சொன்னது கரெக்ட். ஸ்வைப் மஷின்ஸ் வேணும். இன்னைக்கே விசாரிக்குறேன்”

“யாரையும் ஒண்ணும் சொல்ல முடியல... ச்ச...”

அன்று அதிகாலை கிளம்பியதிலிருந்து நக்ஷத்ராவின் பக்கமே திரும்பாமல் காரை எடுத்தான் ஆதர்ஷ். அருகில் ஒருத்தி அமர்ந்திருப்பதாகவே காட்டிக் கொள்ளாதவனை பார்க்க அவளுக்கு சிரிப்பு வந்தது.

“அமைதியா வர? கம்பெனிய டெவலப் பண்ணுறது பத்தி பலத்த யோசனையோ?”

அவளை முறைத்து சாலையில் கவனம் வைத்தான்.

“பாருடா... பேச மாட்டீங்களோ?”

“உனக்கு என்னதான் வேணும் இப்போ?”

வலது காலை மடக்கி அவன்புறம் திரும்பி அமர்ந்தாள். “கொஞ்ச நாளைக்கு லீவ் எல்லாம் நீயே குடு ஆதர்ஷ். அப்போதான் லீவ் வேணும்னா MDகிட்ட நேரடியா பேச வேண்டியிருக்கும்... கேள்வி கேட்பாங்கன்னு கொஞ்சம் தயக்கம் இருக்கும். போக போக நானோ முகுந்தோ பார்த்துக்குறோம். சபரீஷ் கேட்டதும் சரின்னு சொல்லிடுவான். அதனால தான் நான் அவன்கிட்ட கேட்க சொல்லாம உன்கிட்ட கேட்க சொன்னேன்”

“ஹ்ம்ம்... யோசிக்குறதெல்லாம் சரி. அத முன்னாடியே சொல்லணும்னு தோணலையா? நீ பாட்டுக்கு யோசிச்சு நீயா முடிவு பண்ணிக்குற?”

“நான் எதுக்கு சொல்லணும்?”

நேராக திரும்பி அமர்ந்தவளை பார்த்தவன் “எல்லாம் உன் இஷ்டத்துக்கே செய்” என்றான்.

அவளுடைய வீட்டின் அருகில் காரை நிறுத்தியப் பிறகும் இறங்காமல் அமர்ந்திருந்தாள்.

“வீடு வந்துடுச்சு நக்ஷத்ரா”

“தெரியுது”

என்னவோ செய்துக் கொள் என்பது போல் கையை கட்டி அமர்ந்துவிட்டான்.

“உனக்கு கோவம் போகலையா?”

“நீ எல்லாமே நல்லா யோசிச்சு சரியா செய்யுற. அப்பறம் எதுக்கு கோபப்படணும்? எனக்கு கோபம் எல்லாம் இல்ல”

“நிஜமாவா?”

திரும்பி அவளை தீர்க்கமாகப் பார்த்தான் ஆதர்ஷ்.

“சரி கோபம் இல்லன்னு நான் நம்பணும்னா நைட் ஹோட்டல்ல எடுத்து ஒளிச்சு வெச்சியே சாக்லேட்... அதுல ஒண்ணு குடு”

“அதெல்லாம் நைட்டே சாப்பிட்டுட்டேன்”

“சாப்... உன்கிட்டப் போய் கேட்டேன் பாரு... என்னை சொல்லணும். கஞ்சுஸ்” தலையிலடித்தபடி காரை விட்டிறங்கி வேகமாக கேட்டை திறந்து வீட்டினுள் சென்றவளை பார்த்தவனின் முகத்தில் புன்னகை மலர்ந்தது.

“போடி... சாக்லேட் எல்லாம் தர முடியாது” அவளுக்குக் கேட்காதென்றுத் தெரிந்தபோதிலும் மெல்லியக் குரலில் கூறி காரை கிளப்பினான்.

மங்கிய ஒளியும் குளிர்ந்த காற்றும் தன்னிடம் முறுக்கிக் கொண்டு செல்லும் பெண்ணும் சேர்ந்து அந்த காலை வேளை அழகானதாய் தெரிந்தது.

வீட்டினுள் நுழைந்ததும் உடைகூட மாற்றாமல் சென்று மெத்தையில் விழுந்த சபரீஷின் பின்னால் வந்த லீலா “எப்ப நோக்கியாலும் போத்துபோல இங்ஙனே உறங்கியாலு எந்து செய்யானா? கழிச்சுட்டு உறங்கு மோனே” என்றார்.

“விஷக்குனில்லா அம்மே. உச்சைக்கு கழிக்காம்”

“சபரீஷ்” என்றழைத்தபடி ரவிச்சந்திரன் அறையினுள் வர மெத்தையில் எழுந்தமர்ந்தான்.

“இன்னு எண்ட பிரெண்ட் மோனுடே ரிசப்ஷனா... ஈவ்னிங் ஞானும் அம்மையும் போகணம். ஆதர்ஷோடு கார் சோயிக்கான் பட்டோ? நிங்கள் ரெண்டு பேரும் பைக்கிலு போவான் பட்டுமோ?”

“அதொண்ணும் கொழப்பமில்லா அச்சா. ஞான் அவன்டடுத்து பரஞ்சிட்டு கார் எடுத்துட்டு வெராம்”

“அப்போ ஷெரி”

“உச்சைக்கு கழிக்கணம்” மிரட்டிவிட்டு சென்றார் லீலா.

“நோக்காம்” கத்திவிட்டு மொபைலை எடுத்து ஆதர்ஷின் எண்ணிற்கு அழைத்தான்.

“இப்போதான்டா தூங்க போறேன். எதுக்கு கால் பண்ணி டிஸ்டர்ப் பண்ணுற?”

“உன் இம்சை தாங்க முடியலடா. தூங்கிடாத. நான் இப்போ அங்க வரேன். அத சொல்லதான் கால் பண்ணேன்”

அடுத்த பத்தாவது நிமிடம் கெஸ்ட் ஹவுஸில் இருந்தான் சபரீஷ்.

“எதுக்குடா இவ்வளவு அவசரமா வந்த?”

“கார் சாவி குடு”

“அது எதுக்கு உனக்கு?”

“டேய்... கார் என்னுது”

“ஆன்... ஆன்... தெரியும். இப்போ எதுக்கு கார் சாவி கேட்குற?”

“இன்னைக்கு ஒரு நாள் என்கூட பைக்ல வா”

“அப்போ நக்ஷத்ரா?”

“அவ கேப்ல வரட்டும்”

“அதெல்லாம் முடியாது. நீ பைக்ல போ. நான் அவள கூட்டிட்டு தான் வருவேன்”

“அப்பாவையும் அம்மாவையும் டேக்ஸி பிடிச்சு போக சொல்லவா? கார் நான் எனக்காகக் கேட்கல. அவங்க ஏதோ ரிசப்ஷனுக்கு போகணுமாம். இன்னைக்கு ஒரு நாள் குடுப்பியான்னு அப்பா கேட்க சொன்னாங்க. குடுக்க முடியாதாம்னு சொல்லிடவா?”

“அப்பா கேட்டாங்களா? இத முதல்லயே சொல்ல வேண்டியதுதான?” வேகமாக உள்ளே சென்று சாவியை எடுத்து வந்து நீட்டினான்.

“ஏழு மணிக்கு ரெடியா இரு. வந்து பிக்கப் பண்ணிக்குறேன்”

“இல்ல... நான் டேக்ஸி பிடிச்சு வந்துக்குறேன். அப்படியே நக்ஷத்ராவையும் கூட்டிட்டு வந்திடுறேன்”

சுவற்றில் தாளம் போட்டபடியே அவனை ஏற இறங்கப் பார்த்தவன் “என்ன ஆனாலும் அவள நீ உன்கூடவே தான் கூட்டிட்டு வருவ?” என்று ஒவ்வொரு வார்த்தையாக நிறுத்தி அழுத்தி கேட்டான்.

“ம்ம்ச்ச்... அவள எப்படி தனியா வர சொல்ல முடியும்?”

“கேப்ல தான் மச்சு வர சொல்லுறேன். துணைக்கு நிறைய ஆள் இருப்பாங்க. முகுந்த் கூட டெய்லி கேப்ல தான் வரான்”

“நான் இருக்க வரைக்கும் நானே கூட்டிட்டு வரேன்”

“விட மாட்ட?”

“தாளம் போடுறத நிறுத்து நீ முதல்ல. கிளம்பு. எனக்கு தூக்கம் வருது. கார் வெளில எடுத்துட்டு கேட் மூடிட்டு போ. நான் இந்த கதவு லாக் பண்ணிக்குறேன்” சொன்னதோடு மட்டுமல்லாமல் வேகமாக கதவை பூட்டவும் செய்தான் ஆதர்ஷ்.

“எல்லாம் நேரம்டா... கழுத்தைப் பிடிச்சு வெளில தள்ளாதக் குறையா அனுப்புறல்ல? இருடி... சீக்கிரம் வந்து என்கிட்ட கெஞ்சுவ... அன்னைக்கு கவனிச்சுக்குறேன்”

புலம்பியபடியே கேட்டை திறந்து காரை வெளியே எடுத்து நிறுத்தி கேட்டை மூடிவிட்டு மீண்டும் காரை கிளப்பி வீடு வந்து சேர்ந்தான் சபரீஷ்.

இரவு நக்ஷத்ராவுடைய வீட்டின் முன் டேக்ஸியில் அமர்ந்திருந்தவனைக் கண்டவள் அமைதியாகப் பின்னிருக்கையில் அவனருகில் அமர்ந்தாள். சிறிது தூரம் சென்றப் பிறகும் அவனாக எதுவும் கூறாததால் “ஏன் டேக்ஸில வந்திருக்க?” என்றுக் கேட்டாள்.

“சபரீஷ் வீட்டுல வெளியப் போறாங்களாம். கார் கேட்டாங்க. குடுத்துட்டேன்”

“ஓஹ்ஹ்ஹ்...”

சில நொடிகள் வெளியே வேடிக்கைப் பார்த்தவள் “அப்படின்னா நீ அவனோட பைக்ல போகலையா?” என்றுக் கேட்டாள்.

“எல்லாரும் ஏன் கேள்வியா கேக்குறாங்க?” மனதிற்குள் நொந்தவன் திரும்பி அவளை பார்த்தான்.

அந்த பார்வையில் கோபமில்லை. எரிச்சலில்லை. கனிவு இல்லை. அவள் கேட்டக் கேள்விக்கான பதிலும் இல்லை.

அவளால் அவன் பார்வையை அதற்கு மேல் சந்திக்க முடியாமல் முகத்தை திருப்பிவிட்டாள்.

மனதில் எந்த சஞ்சலமும் தோன்றாமல் அமைதி குடிக் கொண்டது. அது சற்று முன் அவன் பார்வை கொடுத்த அமைதியாகக் கூட இருக்கலாம். காரணத்தை ஆராய முற்படாமல் அதை அவள் மனம் ரசிக்கவே செய்தது.

ஆதர்ஷ் அவள் திரும்பியப் பிறகும் அவளிடமிருந்து பார்வையை விளக்க மனமில்லாமல் அமர்ந்திருந்தான்.

தினம் கார் ஓட்டும் பொறுப்பிருப்பதால் அவளை தொடர்ந்து இப்படி பார்த்துக் கொண்டே இருக்கும் சந்தர்ப்பம் கிடைக்காமல் போனது குறித்து அவன் மனம் குறைப்பட்டது.

டேக்ஸியில் செல்வதால் டிரைவர் தங்களை கவனிக்கக்கூடுமென்று அவ்வபோது திரும்பி வேடிக்கைப் பார்க்க முயன்றான். ஆனால் அது முடியாமல் போனது.

அலுவலகம் வந்து சேர்ந்தபோது இந்த அவஸ்தையிலிருந்து விடுப்பட்ட நிம்மதியும் அவளை இனி எப்போது இப்படி அருகில் காண்போம் என்ற ஏக்கமும் ஒருசேர தோன்றி அவனைக் குழப்பியது.

டேக்ஸியிலிருந்து இறங்கியதும் இருவருமே பணத்தை எடுத்து நீட்ட “நீ உள்ள போ. நான் குடுத்துக்குறேன்” என்றான் ஆதர்ஷ்.

தலையசைத்து இரண்டடி நடந்தவளுக்கு “நான் பே பண்ண மட்டும் தான் இருக்கேன்னு நக்கலடிச்சுட்டு போறா...” என்று முந்தைய தினம் அவன் கூறியது நினைவு வந்து திரும்பி அவனை பார்த்தாள். அவனும் அப்போது அதே விஷயத்தை யோசித்து அவளை நிமிர்ந்துப் பார்த்தான்.

நக்ஷத்ராவிற்கு சிரிப்பு வந்துவிட அவளை முறைக்க முயன்றவனுக்கும் சிரிப்பு வந்துவிட்டது.

“இவன் சிரிக்கும்போதே எஸ் ஆகிடணும்பா... இல்லன்னா நேத்து மாதிரி பொரிஞ்சு தள்ள ஆரம்பிச்சிடுவான்”

அதற்கு மேல் அங்கே நிற்காமல் வேகமாக உள்ளே சென்றவளை பின் தொடர்ந்து சென்றான் ஆதர்ஷ்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
பகுதி - 14

வேலையில் மூழ்கியிருந்த ஆதர்ஷ் திடீரென்று நினைவு வந்தவனாய் “சபரீஷ்... ஸ்டாப்ஸ்கிட்ட டெய்லி வாங்கி வெக்க வேண்டிய ஸ்நாக்ஸ் பத்தி கேக்க சொன்னோமே... அது என்னாச்சு? இப்போ எந்த ஐட்டம் எக்ஸ்ட்ராவா வாங்கி வெக்குறோம்?” என்றுக் கேட்டான்.

“தெரிலயே மச்சு... முகுந்த் அன்னைக்கு எல்லார்கிட்டயும் கேட்குறேன்னு சொன்னான். அதுக்கப்பறம் லிஸ்ட் எதுவும் குடுக்கலையே... அவன்கிட்ட தான் கேட்கணும். இல்ல நக்ஷத்ராவுக்கு தெரிஞ்சிருக்கும்”

“சரி... நானும் ரொம்ப நேரமா உட்காந்திருக்கேன். போய் கேட்டுட்டு வந்திடுறேன்”

“ஆமாமா... ரொம்ப நேரமா நீ மட்டும் தான் உட்கார்ந்திருக்க”

லேப்பில் ஏதோ டைப் செய்தபடியே கூறியவனை பார்த்து “என்ன?” என்றான்.

“ஒண்ணுமில்ல... போ... போய் கேட்டுட்டு வா”

“வர வர உன் பேச்சே சரியில்லையே...”

“வர வர நீ செய்யுறதெல்லாம் கூட ஒண்ணும் சரியாப் படல”

இதற்கு மேல் அவனிடம் வாய் கொடுப்பது நல்லதல்ல என்றுத் தோன்ற அமைதியாக கதவை திறந்து வெளியே வந்தான் ஆதர்ஷ்.

அருகிலிருந்த அறைக்குள் அவன் நுழைந்தபோது நக்ஷத்ரா யாருடனோ மொபைலில் பேசிக் கொண்டிருந்தாள்.

முகுந்திடம் சென்றவன் ஸ்நாக்ஸ் குறித்துக் கேட்க எல்லோரிடமும் கேட்டு வாங்கிய லிஸ்டை நக்ஷத்ராவிற்கு மெயில் அனுப்பிவிட்டதாகக் கூறினான்.

அவனிடம் சரியென்றுக் கூறி அவளருகில் வந்தபோது “இல்ல சந்தோஷ். அம்மாகிட்ட சொல்லிடுறேன்” என்று அவள் பேசியது காதில் விழுந்தது.

சந்தோஷ்... அந்த பெயரை கேட்ட மாத்திரத்தில் ஆதர்ஷ் தான் கேட்க வந்த விஷயத்தை மறந்தான்.

கோபம் தலைக்கேற “வர்க் டைம்ல பர்ஸனல் கால் பேசக் கூடாதுன்னு உனக்குத் தெரியாது?” என்று அடிக் குரலில் கேட்டவனை பார்த்ததும் “அப்பறம் கூப்பிடுறேன் சந்தோஷ்” என்று அழைப்பைத் துண்டித்தாள். அப்போதும் அவன் அவளை முறைத்துக் கொண்டிருந்தான்.

“பாட்டிக்கு உடம்பு சரியில்லையாம். பயப்படுற மாதிரி...”

“போன் பேசக் கூடாது”

“ஆதர்ஷ் நான் சொல்லுறத...”

“நான் சொல்லுறத நீ கேளு நக்ஷத்ரா. எல்லா விஷயத்துலயும் நீ சொல்லுறதயே நான் கேட்க முடியாது”

“போன் பேசக் கூடாதுன்னு எனக்கும் தெரியும் ஆதர்ஷ். அவ...”

“அப்பறம் எதுக்கு பேசுன?”

“அதான் சொல்லுறேனே... பாட்டிக்கு...”

“எதுவா இருந்தாலும் பர்ஸனல் கால் இனி பேசாத”

முடிவாய் கூறி அறையை விட்டு வெளியேறிவிட்டான். முகுந்த் கால்ஸ் மானிட்டர் செய்துக் கொண்டிருந்ததால் அவர்களின் இந்த உரையாடல் அவனுக்குக் கேட்டிருக்க வாய்ப்பில்லை என்பதை அவளறிவாள்.

வேகமாக அறையை விட்டு வெளியே வந்தவள் அவனறை கதவை திறந்துப் பார்த்தாள். அங்கு சபரீஷ் மட்டுமே அமர்ந்திருக்க “சாரி” என்றுக் கூறி அலுவலகத்தை விட்டு வெளியே வந்து எட்டிப் பார்த்தாள்.

ஆதர்ஷ் அவனுடைய கார் மீது சாய்ந்து நின்று பலத்த யோசனையில் இருந்தான். படியிலிறங்கி அவனருகில் சென்று “ஆதர்ஷ் நான்...” என்று அவள் ஆரம்பிக்க “எதுவும் சொல்லத் தேவையில்ல” என்றவன் விடுவிடுவென்று தெருவில் நடந்தான்.

“நில்லு ஆதர்ஷ்”

“உள்ள போ நக்ஷத்ரா. என் பின்னாடி வராத. மணி 12 ஆகப் போகுது. இந்த நேரத்துல நான் ரோட்ல நிக்கலாம். நீ வரக் கூடாது. போ...”

“நீ ஒரு நிமிஷம் நில்லு. எதுக்கு இப்படி என்னை திரும்பிக் கூடப் பார்த்துப் பேச மாட்டேங்குற? உனக்கு எதுக்கு இவ்வளவு கோபம்?”

“நீ மத்த ஸ்டாப்ஸ்கு ரோல் மாடலா இருக்க வேண்டியவ. நீயே இப்படி போன் பேசிட்டு உட்கார்ந்திருந்தா மத்தவங்க எப்படி ஒழுங்கா வேலை பார்ப்பாங்க? நீ முதல்ல போ நக்ஷத்ரா”

“எமர்ஜென்ஸின்னு தான் பேசுனேன். யாரா இருந்தாலும் அப்படி பேசுறது தப்பில்ல தான? நில்லு ஆதர்ஷ். நில்லுன்னு சொல்லுறேன்ல...”

கொஞ்சம் சத்தமாகவே சொன்னவள் அவன் வேகத்திற்கு ஈடுக் கொடுத்து வேகமாக ஓடி அவன் முன்னால் நின்று “நிக்க மாட்டியா?” என்று இரு கைகளையும் அவன் முன்னால் நீட்டினாள்.

குனிந்து அவள் கைகளை பார்த்தவன் “நடு ராத்திரில... நடு ரோட்டுல வெச்சு ஒருத்தன வழி மரிக்குறியே... என்ன பொண்ணு நீ?” என்றுக் கேட்டான்.

“நடு ராத்திரின்னுக் கூடப் பார்க்காம ஒருத்தி உன் பின்னாடியே வராளே... அவ என்ன சொல்ல வரான்னுக் கூட காது கொடுத்துக் கேட்காம நீ பாட்டுக்கு பேசிட்டேப் போறியே... என்ன மனுஷன்டா நீ?”

தன்னைவிட கோபமாய் கேட்டவளின் கேள்விக்கு விடை கூற முடியாமல் அமைதியாக நின்றான்.

“பாட்டிக்கு உடம்பு சரியில்ல. ஹாஸ்பிட்டல்ல சேர்த்திருக்காங்க. பயப்படுற மாதிரி எதுவும் இல்ல. இருந்தாலும் தகவல் சொல்லணும்னு சந்தோஷ் கால் பண்ணான். இந்த நேரத்துல அம்மாவுக்கு கால் பண்ணா கண்டிப்பா பயப்படுவாங்கன்னு எனக்கு கால் பண்ணான். போதுமா?”

“இத எதுக்கு என்கிட்ட சொல்லுற?”

அலட்சியமாய் தன்னை கடந்து சென்றவனின் தோளை பிடித்து திருப்பினாள்.

“உனக்கு எதுக்கு இவ்வளவு கோபம்? நான் போன் பேசுனது தப்பா? இல்ல... சந்தொஷ்கூட பேசினது தப்பா?”

உடனே பதில் கூறாமல் அவளை கூர்ந்து கவனித்தவன் “எந்த உரிமையில என்கிட்ட இப்படியெல்லாம் கேள்விக் கேட்குற?” என்றுக் கேட்டான்.

“நீ எந்த உரிமையில கோச்சுக்கிட்டு வெளிய வந்த?” தீர்க்கமாய் வந்தது பதில் கேள்வி.

“சாரி. நீ போன் பேசுனது முகுந்த் முன்னாடி. அட்லீஸ்ட் வெளிய போய் பேசியிருக்கலாம். அத பார்த்ததும் வந்த கோபத்துல திட்டிட்டேன். சாரி...”

“நீ உள்ள நுழைஞ்சப்பவே நான் பேசிட்டு இருந்தத நீ பார்த்த. அப்போவே திட்டாம எதுக்கு என்கிட்ட வந்து நான் பேசுனத கேட்டதுக்கு அப்பறம் திட்டுன?”

“நீ ஏன் எப்போ பார்த்தாலும் கேள்வியா கேட்குற? சாரி சொல்லிட்டேன்ல? இதுக்கு மேல என்ன பண்ணணும்?”

“எது கேட்டாலும் கத்த வேண்டியது” முனகியபடியே அவனை கடந்து அலுவலகம் நோக்கி நடந்தாள்.

அமைதியாக அவளுடன் நடந்தவன் அப்போது தான் அந்த தெருவின் முனை வரை தாங்கள் வந்துவிட்டதை கவனித்தான்.

கோபத்தில் இருவரும் வேகமாக நடந்தபோது தெரியாத தூரம் இப்போது மெதுவாக நடந்தபோது தெரிந்தது.

நடையின் வேகத்தை கூட்ட அவள் முனையவில்லை. அவள் வேகத்தை இன்னும் குறைக்கவென்றே அவன் மெதுவாக நடந்தான். அவனுடன் நடப்பதற்காகவே நடையின் வேகத்தை இன்னும் மட்டுப்படுத்தினாள்.

நள்ளிரவு நேரத்தில் யாருமற்ற சாலையில் தெருவிளக்கின் ஒளியும் நிலவொளியும் மட்டுமே துணையிருக்க இருவரும் தலையை நிமிர்த்தாமல் நடந்தனர்.

அலுவலகத்தை நெருங்க நெருங்க அதர்ஷை குற்றவுணர்வு தாக்கியது.

“சாரி நக்ஷத்ரா. அவ்வளவு கோபமா பேசியிருக்கக் கூடாது. அதவிட பெரிய தப்பு இந்த நேரத்துல இப்படி உன்னை ரோட்ல நடக்க வெக்குறது?”

அவனை திரும்பிப் பார்த்தாள். “நீ ஏன் என்கிட்ட மட்டும் இப்படி கோபப்படுற? அடிக்கடி கத்துற? சபரீஷ்கிட்டயோ வேற யார்கிட்டையும் நீ இப்படி சத்தம் போட்டு நான் பார்த்ததில்ல. எனக்குத் தெரியாமக் கூட இருக்கலாம். பட்... நீ ஏன் என்னை திட்டிட்டே இருக்க?”

அழகாக புன்னகைத்து தலை குனிந்துவிட்டான் ஆதர்ஷ். சில நொடிகள் அதை ரசித்த நக்ஷத்ராவால் அதற்கு மேல் கேள்விக் கேட்க முடியவில்லை. உதட்டை கடித்து தலை குனிந்தவள் அவனுக்கு முன்னால் அலுவலகத்தினுள் சென்றாள்.

அவனைக் கண்டதும் “நக்ஷத்ரா வந்தா... உன்ன பார்க்கதான் வந்தான்னு நினைக்குறேன்” என்றான் சபரீஷ்.

சாவதானமாய் நாற்காலியில் வந்தமர்ந்தவன் “தெரியும். பார்த்துட்டுதான் வரேன்” என்றான்.

“பார்த்துட்டுதான் வரியா? இவ்வளவு நேரமாவா? டேய் அவள வேலை பார்க்க விடுடா... போய் அவ பக்கத்துலயே உட்கார்ந்திருந்தியாக்கும்?”

கிண்டலாய் நண்பன் கேட்டக் கேள்வி அவன் குற்றவுணர்வை மேலும் அதிகப்படுத்தியது.

“இல்லடா... நான் கோவமா பேசிட்டு வெளிய போயிட்டேன். என்னை சமாதானம் பண்ணுறேன்னு... அவளும் வெளிய வந்து...”

“வெளியன்னா? எங்க ரோட்ல நின்னீங்களா? டேய் என்ன விளையாடுறியா? மணி என்னன்னுத் தெரியுமா? அறிவிருக்காடா உனக்கு? ஏதோ பேசிக்குறீங்க... அடிச்சுக்குறீங்க... எதுலயும் தலையிடக் கூடாதுன்னு நெனச்சா... உன்னை நம்பிதானடா அவ தினம் உன்கூடவே வரதுக்கெல்லாம் நான் எதுவும் சொல்லாம இருக்கேன்? ஏன் ஆதர்ஷ் இப்படி பண்ணுற?

இந்த மாதிரி வினோ பண்ணா சும்மா இருந்திடுவியா? சொல்லு... அவ உன்கிட்ட நல்லா பேசுறாங்கறதுக்காக உன் இஷ்டத்துக்கு என்ன வேணா செய்வியா?

நீங்க பாட்டுக்கு போனேன்னு சொல்லுறீங்க... ஆபீஸ்ல இருக்க யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க? யோசிக்கவே மாட்டியா நீ?”

சபரீஷின் ஒவ்வொரு கேள்வியும் சாட்டையடியாய் விழ தான் செய்த தவறின் வீரியம் புரிந்தது.

“இல்லடா... எனக்கு ஏதோ கோபம் வந்துடுச்சு. அப்பயும் அவள உள்ள போக சொன்னேன்... அவதான் கேட்காம என் பின்னாடியே வந்து... சாரிடா. அவக்கிட்டையும் சாரி சொல்லிட்டேன். இருந்தாலும் நான் பண்ணது பெரிய தப்புதான். கண்டிப்பா இனி இப்படி எதுவும் நடக்காது. சாரி சபரீஷ்”

ஆதர்ஷ் செய்தது தவரென்றபோதிலும் அவனைப் பற்றி நன்கு அறிந்தவனாதலால் அதற்கு மேல் அந்த விஷயத்தை பெரிதுப்படுத்த அவன் விரும்பவில்லை.

“சரி விடு. பட் இனி இப்படி ஏதாவது நடந்துதுன்னா அவ உன்கூட கார்ல வரதுக்கு நான் ஒத்துக்க மாட்டேன். நான் ரொம்ப சீரியஸா சொல்றேன். ஞாபகம் வெச்சுக்கோ”

“இல்லடா. இப்படி நடந்துக்க மாட்டேன். அவ என் பொறுப்பு. நானே அவ பேரு கெடுற மாதிரி நடந்துக்க மாட்டேன்”

“உன்ன பத்தி எனக்கு நல்லா தெரியும். ஆனா இப்போ எல்லாம் ஏன் நீ நீயா இல்லைன்னுதான் புரிய மாட்டேங்குது”

ஆதர்ஷ் யோசனையில் ஆழ்ந்துவிட சபரீஷ் அதற்கு மேல் எதுவும் கேட்காமல் அமைதியானான். அதிகாலை பிரேக்கின்போதும் அவன் இருக்கையிலிருந்து எழவில்லை.

சபரீஷ் பேன்ட்ரி சென்றபோது அவனை பார்தது புன்னகைத்த நக்ஷத்ரா அவன் பின்னால் ஆதர்ஷை தேடினாள். அவனுக்கும் அது தெரிந்தே இருந்தது. இருப்பினும் எதுவும் பேசாமல் தேநீர் எடுத்து வெளியே வந்துவிட்டான்.

அரை மணி நேரம் தனியே அமர்ந்து யோசித்த ஆதர்ஷிற்கு தலை வலியெடுத்தது. ஐந்து மணி வரை காத்திருந்தவன் அனைவரும் புறப்பட்டுச் சென்றதும் நேராக பேன்ட்ரிக்கு சென்றான்.

சபரீஷிற்கும் தேநீர் அருந்த வேண்டும் என்றுத் தோன்ற அவனுடன் சென்றான். தன் கைபையை எடுத்து அறையை விட்டு வெளியே வந்த நக்ஷத்ரா இருவரையும் பேன்ட்ரியில் பார்த்து அங்கே வந்தாள்.

மூவரும் ஆளுக்கொரு டேபிளில் அமர்ந்திருந்தனர். யாரும் பேசுவது போல் தெரியாததால் “உங்க ரெண்டுப் பேருக்கும் ஏதாவது சண்டையா?” என்றுக் கேட்டான் சபரீஷ்.

“இல்லையே” என்று ஒரே குரலில் கூறினர் இருவரும்.

“ஹ்ம்ம்... சரி அப்போ நான் நம்பி கிளம்பவா?”

“போடா” என்று ஆதர்ஷ் கூற நக்ஷத்ரா அமைதியாக அமர்ந்திருந்தாள்.

“சரி நீ டேக்ஸி புக் பண்ணிட்டியா?”

“பண்ணிட்டேன். இன்னும் டென் மினிட்ஸ்ல வந்துடும்”

“ஓகே பை. பை நக்ஷத்ரா” என்றவன் சிறிது தூரம் சென்றதும் “சபரீஷ்” என்றழைத்து மீதமிருந்த தேநீரை ஒரே மடக்கில் பருகி கப்பை அவசரமாக கழுவி வைத்துவிட்டு அவனிடம் வந்தான்.

“என்ன மச்சு?”

“செக்யூரிட்டி எங்கடா? எப்போ சொன்னேன் உன்கிட்ட? டெய்லி மார்னிங் ஷிப்ட் ஒரு செக்யூரிட்டி நைட் ஷிப்ட் ஒரு செக்யூரிட்டி போடணும்னு... இன்னுமா நீ சொல்லி வைக்கல?”

“ஐயோ... மறந்தேப் போயிட்டேன் மச்சு...”

“சூப்பர். இவ்வளவு பெரிய ஆபீஸுக்கு ஒரு செக்யூரிட்டி கூட கிடையாது. எவனாவது பூட்ட ஒடச்சு எல்லாத்தையும் தூக்கிட்டுப் போகப் போறான். அன்னைக்குத் தெரியும்”

“டேய் வர்க் டென்ஷன்ல மறந்துட்டேன்டா”

“உன்னயெல்லாம் நம்பிதான்டா பார்ட்னரா சேர்த்துக்கணும்”

“அடங்குடா... கேனடா போகுறதுக்கு முன்னாடி ஒரு செக்யூரிட்டி ஏஜென்ஸிகிட்ட பேசியிருந்தேன். வர்க் ஸ்டார்ட் ஆகுற டேட் கன்பார்மா தெரியாததால வந்து சொல்லுறேன்னு சொல்லி வெச்சிருந்தேன். அப்பறம் அத சுத்தமா மறந்துட்டேன். திரும்ப கால் பண்ணி இன்னைக்கு நைட்லேருந்து செக்யூரிட்டி வேணும்னு சொல்லிடுறேன்”

நக்ஷத்ரா புன்னகையுடன் இவர்களது உரையாடலை கேட்டுக் கொண்டிருந்தாள்.

“அங்கப் பாரு... நம்ம அடிச்சுக்குறத பார்த்து ஒருத்தி சிரிக்குறா... எல்லாம் நேரம். சரி கார் வந்த சத்தம் கேட்குது. டேக்ஸி வந்துடுச்சுன்னு நினைக்குறேன். சாவி குடு. நான் லாக் பண்ணிக்குறேன். நீங்கக் கிளம்புங்க. எப்படியும் என் கார் கொண்டு வந்துக் குடுக்கணும். அப்போ சாவி தரேன்”

சரியென்ற இருவரும் டேக்ஸியில் சென்று அமர்ந்தனர். ஆதர்ஷ் அவள் வீட்டு முகவரியை கூறி முதலில் அங்கு செல்ல சொன்னான்.

ஏதாவது பேச வேண்டுமென்று இருவருக்குமே தோன்ற என்ன பேசுவதென்று தெரியவில்லை. ஒருவர் பார்க்காதபோது மற்றவர் பார்ப்பதும் அவர் பார்த்துவிட்டால் திரும்பி வேடிக்கைப் பார்ப்பதுமாக அவள் வீடும் வந்தது.

காரை விட்டிரங்கியவள் கதவை மூடி குனிந்து அவனைப் பார்த்தாள். அப்போதும் பேச வார்த்தை வராமல் “பை” என்றாள்.

லேசாக தலையசைத்தவன் “சாரி” என்று மட்டும் கூற அப்போது அவனுடைய அந்த ஒற்றை வார்த்தை மட்டுமே அவளுக்கு போதுமானதாய் இருந்தது.

கெஸ்ட் ஹவுஸ் முகவரியை அவன் கூற கார் கிளம்பியது.

டேக்ஸி கண்ணை விட்டு மறையும் வரை நின்று பார்த்துக் கொண்டிருந்தாள் நக்ஷத்ரா. அவள் கண்ணை விட்டு மறைந்தப் பிறகும் அவள் நினைவுகள் மறையாமல் இருப்பதன் காரணத்தை ஆராய்ந்துக் கொண்டிருந்தான் ஆதர்ஷ்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
பகுதி - 15

வீட்டிற்குள் நுழைந்த நக்ஷத்ரா கீதாவை தேடினாள். அடுக்களையில் சமையல் வேலைகளை துவங்கியிருந்தவரின் அருகில் சென்று இரவு சந்தோஷ் கூறியதை அவரிடம் தெரிவித்தாள்.

“ஐயோ என்னாச்சுன்னுத் தெரியலயே...”

“பதறாதம்மா. அதான் ஒண்ணும் இல்லன்னு சந்தோஷ் சொன்னானே...”

“போடி... எதுவும் இல்லைன்னா என்னத்துக்கு ராத்திரி அந்நேரத்துக்கு ஹாஸ்பிட்டல் போகணும்? அத உனக்கு கால் பண்ணி சொல்லணும்?”

இனி என்ன சமாதானம் சொன்னாலும் அவர் கேட்கப் போவதில்லையென்று அவளுக்கு நன்றாகத் தெரியும். உடை மாற்றி முகம் கழுவி படுத்தவளுக்கு உறக்கம் வரவில்லை.

“பை சொன்னா சாரி சொல்லுறான். அவ்வளவு பீல் பண்ணுறவன் எதுக்கு சொல்ல சொல்ல கேட்காமப் போகணும்? இப்படி கெஞ்ச விட்டுட்டானே... ச்ச...

இவன் ஏன் நம்மள எப்ப பார்த்தாலும் திட்டிக்கிட்டே இருக்கான்? இன்னைக்கு ஏதோ கொஞ்சம் தைரியம் வந்து ஏன் திட்டுறன்னு கேட்டா சிரிக்குறான்... என்ன கொழுப்பிருக்கும்?

அவனோட சிரிப்பும் அழகுதான். நம்மளால தான் அவன் முகத்தைப் பார்க்க முடியாம போச்சு.

எந்த உரிமையில என்கிட்ட கேள்விக் கேட்குறன்னு கேட்டானே... நம்ம ஏன் இவன்கிட்ட ஓவரா பேசுறோம்? அவன் கேட்ட மாதிரி எந்த உரிமையில கேள்விக் கேட்குறோம்? ஒருவேளை...”

“நக்ஷத்ரா...”

அவள் சிந்தனையைக் கலைத்தது கீதாவின் குரல். சலிப்புடன் மெத்தையில் எழுந்தமர்ந்தாள். கையில் மொபைலுடன் அறைக்குள் வந்தவர் “இந்தா பாட்டி பேசணுமாம்” என்று அவளிடம் நீட்டினார்.

“பாட்டி... நல்லாயிருக்கீங்களா?”

“நான் நல்லா இருக்கேன்டா... வயசாகிடுச்சுல்ல... அதான் அப்பப்போ முடியாமப் போயிடுது. சந்தோஷ் தான் இப்போவே ஹாஸ்பிட்டல் போகணும்னு ராத்தியோட ராத்திரியா என்னை இங்க கொண்டு வந்து அட்மிட் பண்ணிட்டான்”

“அதெல்லாம் நம்ம ஹெல்த் நம்ம தான பாட்டி பார்த்துக்கணும்? சந்தோஷ் பண்ணது தான் சரி. நீங்க அதிகம் பேசாம ரெஸ்ட் எடுங்க. நான் அம்மாவ அப்பறம் பேச சொல்லுறேன். வெச்சுடவா?”

“இரு இரு... சந்தோஷ் ஏதோ பேசணுமாம். குடுக்குறேன்...”

இவன் தன்னிடம் என்ன பேச வேண்டும் என்று அவள் யோசிக்கும்போதே “ஹலோ” என்றான் சந்தோஷ்.

“சொல்லு சந்தோஷ்”

“அம்மா எதுவும் சொல்லலயே தவிர அவங்களுக்கு உன்னையும் அக்காவையும் பார்க்கணும்னு ஆசை இருக்கு நக்ஷத்ரா. ஒரு தடவ நீயும் அக்காவும் வந்துட்டுப் போங்களேன்... அம்மா சந்தோஷப்படுவாங்க”

“ஊருக்கா... என்னால இப்போ லீவ் எடுக்க முடியாது சந்தோஷ். அம்மாவ அனுப்பி வைக்குறேன். என்னால இங்க தனியா சமாளிச்சுக்க முடியும்”

“ஏன்? பாட்டிக்கு உடம்பு சரியில்லன்னு சொன்னாக் கூட லீவ் தர மாட்டானா உன் MD? அப்படியென்ன பெரிய வேலை?”

“ராத்திரி அவன் கத்துனான். இப்போ இவனா? என்னை பார்த்தா எப்படித் தெரியுதோ...” என்று நினைத்தவள் “லீவ் கேட்டா குடுப்பாங்க. ஆனா அது நல்லா இருக்காது சந்தோஷ். கொஞ்ச நாள் போகட்டும். நானே வரேன்” என்று தன்மையாகக் கூறி அழைப்பைத் துண்டித்தாள்.

கோபமாக மொபைலை பார்த்தபடி அருகில் வந்தவனைக் கண்டதும் “என்னடா பேசுன? எனக்குக் கேட்கக் கூடாதுன்னு தள்ளி போய் நின்னு பேசுற அளவுக்கு என்ன ரகசியம்? இப்போ எதுக்கு கோபமா வர? நக்ஷத்ராவ எதுவும் சொல்லாதப்பா” என்றார் அவன் அன்னை சரஸ்வதி.

“அதெல்லாம் ஒண்ணுமில்லமா. ஊருக்கு வர சொன்னேன். அக்காவ மட்டும் அனுப்பி வைக்குறேன்னு சொன்னா. அவளால இப்போ லீவ் எடுக்க முடியாதாம். அப்பறம் வராளாம்”

“இவ்வளவுதான? விடுப்பா... அவளுக்கு மட்டும் இங்க வரணும்னு ஆசை இருக்காதா என்ன? அதான் அப்பறம் வரேன்னு சொன்னால்ல?”

“என்னவோ நீங்கதான் சொல்லிக்கணும். நான் போய் டாக்டர் பார்த்துட்டு வரேன்” தாயின் பதிலை எதிர்ப்பாராமல் வேகமாக சென்றுவிட்டான் சந்தோஷ்.

“மா... நீ ஒரு நாலு நாளைக்கு போய் பாட்டிய பார்த்துட்டு வா. சந்தோஷ் கூப்பிட்டான். நான் உன்னை மட்டும் இப்போ அனுப்பி வைக்குறேன்னு சொல்லிட்டேன்”

“நீயும் வா நக்ஷ்த்ரா. பாட்டி சந்தோஷப்படுவாங்க”

“நான் கொஞ்ச நாள் கழிச்சு போய் பார்த்துக்குறேன்மா. இப்போ லீவ் எடுக்க முடியாது”

“லீவ் கூட எடுக்க முடியாதுன்னா எதுக்கு இப்படி ஒரு வேலைக்குப் போகணும்? சொன்னா அப்பாவும் பொண்ணும் கேட்டாதான? எல்லாம் உங்க இஷ்டத்துக்கே பண்ணுங்க... நான் கிளம்பி போறேன். ரெண்டு பேரும் எக்கேடும் கெட்டு போங்க”

அவளுக்கு எரிச்சல் வந்தது. “இத்தன நாள் எதுவும் சொல்லாம ஒழுங்கா இருந்தாங்க. இந்த சந்தோஷ சொல்லணும்... இப்போ எதுக்கு ஊருக்கு வர சொல்லுறான்? பாட்டிக்கு முடியல தான். அதுக்குன்னு சொன்னா புரிஞ்சுக்க மாட்டானா? இப்போ தேவையில்லாம அம்மா வேலைக்குப் போகணுமான்னு கேட்டுட்டுப் போறாங்க... ச்ச... கொஞ்ச நாள் நிம்மதியா இருக்க விட மாட்டாங்களே...” மெத்தையில் கவிழ்ந்துப் படுத்து உறங்க முயன்றாள்.

அன்றிரவு அணிந்து செல்ல வேண்டிய உடையை பெட்டிக்குள் தேடிக் கொண்டிருந்தான் ஆதர்ஷ். சபரீஷ் எப்போதும் ஏற்பாடு செய்யும் தோபியிடம் கொடுத்து உடையை சலவை செய்து அயர்ன் செய்து வாங்கி வைத்திருந்தான்.

“எத்தன நாளைக்குதான் இதையே திரும்ப திரும்ப போடுறது? இந்த சபரீஷ் இப்படி பண்ணுவான்னு எனக்கென்னத் தெரியும்? நாலு நாள் இருந்துட்டுக் கிளம்பிடலாம்னு நெனச்சா... எதுக்கும் இருக்கட்டும்னு ஒரு வாரத்துக்கு ட்ரெஸ் எடுத்துட்டு வந்தது நல்லதாப் போச்சு...

ஆனாலும் இத வெச்சு எத்தன நாளைக்கு சமாளிக்க முடியும்? நடுவுல ஒரு தடவ சென்னை போனா என்ன? நாளைக்கு நாளான்னிக்கு லீவ் தான். வீட்டுக்குப் போய் டிரஸ் எல்லாம் எடுத்துட்டு வந்துடுவோமா?

வேணாம்... அதெல்லாம் அப்பறம் பார்த்துக்கலாம். வேணும்னா ட்ரெஸ் வாங்கிக்கலாம். நமக்கு ஏன் இங்கேருந்துப் போக மனசே வர மாட்டேங்குது? நமக்குதான் இந்த ஊரேப் பிடிக்காதே...”

பெட்டியை மூடி ஓரமாக எடுத்து வைத்தவன் மெத்தையில் வந்து படுத்தான். “இன்னைக்கு கொஞ்சம் அதிகமாவேக் கோபப்பட்டுட்டோமோ? நமக்கு எதுக்குக் கோபம் வந்துது? அவளும் இதையே தான கேட்டா... நம்மளால தான் பதில் சொல்ல முடியல. இப்படியா நேரடியாக் கேட்பா...

அவ்வளவு கோபம் இருந்தப்போவும் அவள உள்ள போக சொன்னேன். அவதான் கேட்கல. ஆனாலும் அப்படி நடந்துக்கிட்டது தப்புதான? சபரீஷ் கேட்டதுலயும் நியாயம் இருக்கு. ஐ வில் நெவர் டூ திஸ் அகைன்.

அவகிட்ட மட்டும் எந்த உரிமையில கோபப்படுறோம்? தெரியல... அவ கடுப்பேத்துறா... நமக்குக் கோபம் வருது. இது என்ன பெரிய விஷயம்?” போர்வையை இழுத்து போர்த்தியவன் வேறு எதை பற்றியும் யோசிக்காமல் உறங்க ஆரம்பித்தான்.

அலாரம் அடித்ததும் எரிச்சலுடன் அதை அணைத்த சபரீஷ் “ச்ச...” என்று சலிப்புடன் கூறி மெத்தையிலிருந்து எழுந்தான்.

அவன் ஹாலிற்கு வந்தபோது “மோனே... தே கார் கீ. ஆதர்ஷின்டடுத்து கொடுக்கு” என்றார் ரவிச்சந்திரன்.

“ஓ... இது மறந்நு போயி... ஞான் கொடுக்காம் அச்சா” என்றவன் விரைந்து குளிக்கச் சென்றான்.

ஆதர்ஷ் அருகிலிருந்த ஹோட்டலில் சாப்பிட்டு வீடு வந்து சேரவும் சபரீஷ் வரவும் சரியாக இருந்தது.

காரை விட்டிரங்கியவன் “இந்தா கீ. நீ போகும்போது என்னை வீட்டுல டிராப் பண்ணிட்டுப் போ. நான் பைக் எடுத்துட்டு வந்திடுறேன்” என்று சாவியை நீட்டினான்.

“நாலு தெரு தள்ளி இருக்க வீட்டுக்கு நடந்துப் போக மாட்டியா?”

“என் கார உங்கிட்ட குடுத்துட்டு நான் எதுக்குடா நடந்துப் போகணும். ஊருல இருக்கவங்களுக்கெல்லாம் டிரைவர் வேலை பார்க்குறல்ல? எனக்கு ஒரு நாள் பாரு. ஒண்ணும் கொறஞ்சு போயிட மாட்ட”

“இவன் பேச்சே சரியில்ல... இவன்கிட்ட கேர்புல்லா தான் இருக்கணும்” என்று நினைத்த ஆதர்ஷ் அமைதியாக வீட்டினுள் சென்றான்.

“வாய திறந்துடாத... பார்க்கலாம்டா எத்தன நாளைக்குன்னு” என்று முனகியபடியே அவன் பின்னால் சென்றவன் சோபாவில் அமர்ந்தான்.

அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு அவன் பக்கமே திரும்பாமல் தன் வேலைகளை கவனித்தான் ஆதர்ஷ்.

7 மணி ஆனதும் “சரி வா உன்னை விட்டுட்டு நான் போறேன்” என்று அவன் கூற “க்ளாக் கரெக்டா ஓடுதோ இல்லையோ... நீ டான்னு கிளம்பிடு. வந்துத் தொல... உன்னயெல்லாம் பக்கத்துல வெச்சுக்கிட்டு வெட்டியா இருக்கணும்னு நெனச்சா முடியுமா?” என்று புலம்பியபடி எழுந்தான் சபரீஷ்.

அவனுடைய வீட்டில் இறக்கிவிட்டு நக்ஷத்ராவின் வீடு நோக்கி சென்றபோது அவனுடைய மொபைல் ஒலித்தது. காரை சாலையோரம் நிறுத்தி காலை அட்டென்ட் செய்தான்.

“ஆதர்ஷ் நான் இப்போ வீட்டுல இல்ல. அம்மா கோவில் போயே ஆகணும்னு சொல்லிட்டாங்க. இங்க லேட் ஆகிடுச்சு. நான் இங்கேருந்து வீட்டுக்கு நடந்துப் போகணும்னா எப்படியும் இருபது நிமிஷம் ஆகிடும். ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா?”

“சொல்லு”

“எங்க வீட்டுக்கு முன்னாடி ரெண்டு தெரு தள்ளி ஒரு ஹோட்டல் இருக்கும் அது பக்கத்துல இருக்க ஸ்ட்ரீட்ல தான் கோவில் இருக்கு. நீ அங்க வரியா ப்ளீஸ்”

“இன்னும் பைவ் மினிட்ஸ்ல அங்க இருப்பேன். வெளில வந்து நில்லு. என்னை வெயிட் பண்ண வைக்காத”

“இல்ல நான் வெளில தான் வந்துட்டு இருக்கேன். நீ வா”

“பெரிய மகாராணி... இவள வீட்டுலேருந்து போனாப் போகுதுன்னு பிக்கப் பண்ணா... சபரீஷ் சொன்ன மாதிரி டிரைவர் வேலை பார்க்க வெச்சிடுவா போலருக்கே...”

அவள் சொன்ன கோவில் முன்னால் காரை நிறுத்தி இறங்கியவன் கீதாவை பார்த்து லேசாகப் புன்னகைத்தான். அவர்கள் அருகில் வந்ததும் “நான் வேணா உங்கள வீட்டுல டிராப் பண்ணிடட்டுமா?” என்று மரியாதைக்காகக் கேட்டான்.

“அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்... வீட்டுல பேசாம தூங்கிட்டு இருந்தவள எழுப்பி கோவிலுக்கு வான்னு டார்ச்சர் பண்ணி இழுத்துட்டு வந்தவங்கள டிராப் வேற பண்ணணுமா? நடந்துப் போகட்டும்”

பொருமியபடியே காரில் சென்று அமர்ந்துவிட்டாள் நக்ஷத்ரா. அவளுடைய தாய் என்பதால் எளிதாக அவள் பேசி சென்றுவிட்டாள். ஆனால் அவனுக்கு தான் தர்மசங்கடமாகியது.

இப்போது கீதாவை வற்புறுத்தி அழைத்து செல்ல வேண்டுமா? இல்லை அவனும் அவளைப் போலவே காரில் சென்று அமர்ந்துக் கிளம்ப வேண்டுமா?

அவனை காக்கவென்றே “நான் போயிக்குவேன் தம்பி. நீங்கக் கிளம்புங்க. நேரம் ஆகியிருக்கும். சாரி என்னால தான் லேட் ஆகிடுச்சு” என்றார் கீதா.

அப்போது தான் அவனுக்கு நிம்மதியானது. வேகமாக தலையசைத்து காரில் அமர்ந்து அவளை பார்த்தான்.

“என்னை எதுக்கு பார்க்குற? கிளம்புப் போகலாம்”

சிறிது தூரம் சென்றப் பிறகு “நீ பாட்டுக்கு என் முன்னாடி இப்படி பேசுறியே.... உங்கம்மாவுக்கு கஷ்டமா இருக்காதா? தப்பா நினைக்க மாட்டாங்களா?” என்று அவளிடம் கேட்டான்.

“அதெல்லாம் ஒண்ணும் நினைக்க மாட்டாங்க. அதோட நான் ஒண்ணும் எல்லார் முன்னாடியும் அவங்கள இப்படி பேசிட மாட்டேன்... அதனால அவ...”

“எல்லார் முன்னாடியும் பேச மாட்டன்னா அப்போ என் முன்னாடி எதுக்கு அப்படி பேசுன?”

அவ்வளவுதான். அவள் அமைதியாகிவிட அவனும் சிறிது நேரம் எதுவும் கேட்கவில்லை.

“நான் ஏதாவது கேட்டா மட்டும் அமைதியாகிடுற... ஆனா என்கிட்ட கேள்வியா கேட்குற. ஏன் நக்ஷத்ரா?”

“நான் கேட்குற கேள்வி எதுக்காவது நீ பதில் சொல்லுறியா?”

அலுவலகம் வந்துவிட காரை விட்டிறங்கியவள் உள்ளே சென்றாள்.

“எங்க அவன்? பின்னாடி வரானா? இல்ல நேத்து மாதிரி கோச்சுட்டு எங்கயாவதுப் போயிட்டானா? நீங்க இப்படி தனித் தனியா வந்தாலே எனக்கு பீதி ஆகுது”

சபரீஷ் சொன்னதைக் கேட்டு சிரித்தவள் நேற்று நடந்தவற்றை ஆதர்ஷ் நண்பனிடம் கூறிவிட்டான் என்றுத் தெரிந்துக் கொண்டாள்.

ஆதர்ஷை பார்த்ததும் ஏனோ அவனை வம்பிழுக்கத் தோன்ற “அதெல்லாம் நேத்தே சாக்லேட் குடுத்து சமாதானம் பண்ணிட்டான்” என்றாள்.

“இவனா? சாக்லேட்டா?? வாய்ப்பே இல்ல... நீ வேற எதை சொல்லியிருந்தாலும் நம்பியிருப்பேன். இப்படி சொல்லி நீயே மாட்டிக்கிட்டியே... மச்சு... சாக்லேட் குடுத்த?”

அவன் இல்லையென்று தலையாட்ட “அது ஏன் நீ வினோ தவிர வேற யாருக்கும் சாக்லேட் தர மாட்ட?” என்றாள் நக்ஷத்ரா.

சபரீஷ் சிரித்தபடியே “எத்தரையோ பிராவிஷம் சோதிச்சிட்டும் அவன் உத்தரம் பரஞ்சிட்டில்லா” என்றான்.

“வினோ என்கிட்ட முதல் முதல்ல கேட்டது ‘ஆக்கி’ன்னு சாக்லேட்ட தான். அம்மா சொன்னாங்க... உன்கிட்ட தான்டா கேட்குறா... எங்க யார்கிட்டயும் கேட்டதில்லன்னு. என்னமோ நான் அவளுக்கு ரொம்ப முக்கியம்னு அப்போ தோணுச்சு. வேற யார் வாங்கித் தரலன்னாலும் அவ எப்போ கேட்டாலும் நான் அவளுக்கு சாக்லேட் வாங்கித் தரணும்னு அப்போவே முடிவுப் பண்ணிட்டேன்.

அவள எனக்கு ரொம்ப பிடிக்கும் நக்ஷத்ரா... அவ பிறந்தப்போ ஹாஸ்பிட்டல் போய் பார்த்தது இன்னும் எனக்கு நியாபகம் இருக்கு. குட்டி ரோஸ் போக்கே மாதிரி... எனக்கு சொல்லத் தெரியல... அவ்வளோ க்யூட்டா இருந்தா.

அவளுக்கு சாக்லேட் வாங்கி தர ஆரம்பிச்சதுக்கபறம் என்னமோ அது நான் எனக்கு ரொம்ப பிடிச்சவங்களுக்காக செய்யுற ஒரு விஷயமா மனசுல பதிஞ்சுடுச்சு.

பிரெண்ட்ஸ் கேட்கும்போது கிண்டலுக்காக வம்பிழுக்கக் கேட்பாங்க... அதனால அவங்களுக்கு வாங்கி தரணும்னு தோணுனதில்ல”

ஆதர்ஷ் அவ்விடத்தை விட்டு நகர்ந்துவிட அவள் அவனையேப் பார்த்தபடி நின்றிருந்தாள்.

சபரீஷ் முதலில் அவன் பேச ஆரம்பித்தபோது கிண்டல் செய்யவே நினைத்திருந்தான். ஆனால் அவன் பேசிய விஷயத்தைக் கேட்டவன் யோசனையில் மூழ்கினான்.

நக்ஷத்ரா இரண்டடி எடுத்து வைத்ததும் “ஆதர்ஷ் இப்படியெல்லாம் பேசி நான் கேட்டதில்ல நக்ஷத்ரா. யார்கிட்டயும். இந்த ரீஸன் அவன் உன்கிட்ட சொன்னது. என்கிட்ட இல்ல... எவ்வளவு கிண்டல் பண்ணி எத்தன தடவ கேட்டிருப்போம்... அவன் சிரிச்சு மழுப்பிடுவான்.

இன்னைக்கு அவன் உன்கிட்ட பேசுன விஷயம் அவன் கண்டிப்பா யாரோடையும் ஷேர் பண்ணியிருக்க மாட்டான்னு எனக்கு நல்லா தெரியும்” என்றவன் அதற்கு மேல் அவளே யோசிக்கட்டும் என்று நகர்ந்து சென்றுவிட்டான்.

அவள் ஒரு அடியும் நகரவில்லை. அவள் மனதில் பல கேள்விகள் எழுந்தபோதும் கிடைத்த பதில் அனைத்தும் சந்தோஷத்தையே கொடுத்தன. அவன் சென்ற வழியை பார்த்தவள் புன்னகையுடன் தன்னுடைய அறைக்குள் சென்றாள்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
பகுதி - 16

வேலை செய்தபோதும் நக்ஷத்ராவின் மனம் ஆதர்ஷையே தான் சுற்றி வந்தது. ஒரு வாரமாய் செய்யும் அதே வேலை தான். ஆனால் இன்று அதையே ரசித்து செய்வது போன்றதொரு தோற்றம்.

ஆதர்ஷ் அறைக்குள் அமர்ந்திருக்கப் பிடிக்காமல் வெளியே ரவுண்ட்ஸ் சென்று அனைவரையும் அருகில் நின்று சிறிது நேரம் கவனித்தான். பின் சர்வர் ரூமினுள் சென்று ரெக்கார்ட் செய்யப்பட்டிருந்த கால்ஸ், கேமரா விஷுவல்ஸ் அனைத்தையும் சரி பார்த்தான்.

முதல் பிரேக்கின்போது அங்கு வந்த சபரீஷ் “என்ன மச்சு பண்ணுற? உன்னை ஆள காணும்னதும் நக்ஷத்ராகூட பேசிட்டு இருப்பன்னு நெனச்சேன்” என்றான்.

“எதுக்கு நீ அப்படியெல்லாம் நினைக்குற? எனக்கு அவகிட்ட பேச எதுவும் இல்ல”

“ஓஹோ...”

“நானும் கொஞ்ச நாளா பார்க்குறேன்... நீ எதுக்கு என்கிட்ட இப்படியே பேசுற?”

“நானும் கொஞ்ச நாளா உன்னை பார்த்துட்டு தான் இருக்கேன். வித்தியாச வித்தியாசமா என்னென்னமோ செய்யுற... என்ன விஷயம்?”

“என்ன விஷயம்?”

“உனக்கு நக்ஷத்ராவ பிடிச்சிருக்குதான?”

“இல்லையே...”

“அவ செய்யுற வேலை எதுலயும் தலையிட மாட்டேங்குற... எத கேட்டாலும் நக்ஷத்ரா பார்த்துப்பான்னு சொல்லுற... இதுக்கெல்லாம் என்ன அர்த்தம்?”

“அவ ஒழுங்கா வேலை பார்க்குறான்னு அர்த்தம். எனக்கு ஸாடிஸ்பேக்டரியா இருக்குன்னு அர்த்தம்”

“டேய்... உண்மைய சொல்லு உனக்கு அவள பிடிக்கல?”

“எதுக்கு பிடிக்கணும்?”

“மகனே என்னைக்காவது ஒரு நாள் என்கிட்ட வந்து நிப்படா... என்னால அவ வீட்டுல எல்லாம் பேச முடியாதுபா... என்னை நம்பி தான் அவள இங்க அனுப்ப்பியிருக்காங்க. நானே போய் என் பிரெண்ட் உங்க பொண்ண லவ் பண்ணுறான்னு சொன்னா மொத்துவாங்க”

“அதெல்லாம் நீ ஒண்ணும் பேச தேவையில்ல”

“ஏன்? நீயே பேசிக்குறேன்னு சொல்லுறியா? மச்சு உன்னால அவகிட்ட அவ பாஷையில லவ் பண்ணுறேன்னு கூட சொல்ல முடியாதுடா. அவ பேசுறது உனக்கு புரியாது. நீ எப்படி சொல்லி... எப்படி...”

“ஐ லவ் யூன்னு சொன்னா எல்லாருக்கும் புரியும். இத நான் மலையாளத்துல தான் சொல்லணும்னு அவசியம் இல்லையே... அவ தமிழ்ல தான பேசுறா?”

“அப்படி வா வழிக்கு... அப்போ லவ் பண்ணுற?”

“அதெல்லாம் இல்லடா. தொன தொனன்னு பேசாம போய் வேலைய பாரு”

“ப்ரேக் டைம்ல என்னத்தடா வேலைய பார்க்க? நீ எங்க எஸ்கேப் ஆகுற?”

“நான் என்ன உன்னை மாதிரி வெட்டி பயலா?”

“புள்ளி வெல்லிய கலெக்டரா...” முனகியபடியே அவனுடன் சென்றான் சபரீஷ்.

சர்வர் ரூமிலிருந்து வெளியே வந்தபோது நக்ஷத்ரா ஆதர்ஷை பார்த்து புன்னகைக்க பதிலுக்கு புன்னகைத்தவன் அவளையே பார்த்தபடி நடந்தான்.

“மச்சு... இது ஆபீஸ். யாராவது பார்த்தா தப்பா நினைப்பாங்க. நேரா பார்த்து நட. இந்த லுக்கு விடுறதுக்கு ஒண்ணும் கொறச்சலில்ல...”

வெறுப்புடன் நண்பனை திரும்பிப் பார்த்து வேகமாக அறைக்குள் சென்றான். அவனைப் பார்த்து சிரித்தவன் இது சரி வருமா என்ற யோசனையிலேயே அன்றைய பொழுதைக் கடத்தினான்.

சபரீஷ் சொல்லி வைத்திருந்த இடத்திலிருந்து செக்யூரிட்டி இருவரை அனுப்பியிருந்தனர். அவர்களை பற்றிய விபரங்களை கேட்டு யார் எந்த ஷிப்டில் வர வேண்டும் என்றுக் கூறி ஒருவரை பகல் நேர காவலுக்கு இருக்க சொன்னான்.

கடந்த வாரம் விடுமுறை வழங்காததால் இந்த வாரம் சனி ஞாயிறு இரண்டு நாட்கள் விடுமுறை என்று அறிவித்திருந்தனர். அடுத்த வாரத்திலிருந்து ஞாயிறு மட்டுமே விடுமுறை என்றும் தெரிவிக்கப்பட்டது.

காரில் அமர்ந்து அவ்வபோது தன்னை திரும்பி திரும்பி பார்க்கும் ஆதர்ஷிடம் “ஏதாவது சொல்லணுமா? எதுக்கு என்னையே பார்த்துட்டு இருக்க?” என்றுக் கேட்டாள் நக்ஷத்ரா.

“ஒண்ணுமில்ல...”

அவள் திரும்பி வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்ததும் “வீக்கென்ட் என்ன பண்ணுவ?” என்றுக் கேட்டான்.

“அம்மா இன்னைக்கு நைட் ஊருக்குப் போறாங்க. பாட்டிய பார்க்க. சோ அப்பாவுக்கும் எனக்கும் சமையல் நான் தான். அதுக்கே நேரம் சரியா இருக்கும். மீதி இருக்க நேரம் தூங்குவேன். டைம் கெடச்சா பெயின்ட் பண்ணுவேன்”

“நீ வரைவியா?”

“ம்ம்... சின்ன வயசுலேருந்து வரையுறது பிடிக்கும்”

ஆதர்ஷ் சிரிக்க ஆரம்பித்தான்.

“எதுக்கு சிரிக்குற? கிண்டலா இருக்கா? வரையுறது கேவலமா?”

“இல்லல்ல... நான் கேவலமா வரைவேன். அத யோசிச்சேன். சிரிப்பு வந்துடுச்சு. ஸ்கூல்ல என் ரெக்கார்ட் நோட் எல்லாம் அம்மாகிட்ட குடுத்து தான் வரஞ்சு தர சொல்லுவேன். டாடி பார்த்தா திட்டுவாங்க. அவங்களுக்கு தெரியாம மம்மி முடிச்சுக் குடுப்பாங்க. ஒரு ஸ்டேஜ்ல வினோ கூட வரஞ்சு குடுத்திருக்கா. எக்ஸாம் ஹால்ல உட்கார்ந்து திணறுவேன். அதுக்கெல்லாம் டேலன்ட் வேணும் நக்ஷத்ரா. இட்ஸ் எ கிப்ட்”

அவள் சிரிக்க ஆரம்பித்தாள்.

“இப்போ நீ எதுக்கு சிரிக்குற?”

“எக்ஸாம் ஹல்ல உட்கார்ந்து திணறுவேன்னு சொன்னியே... நீ எப்படி வரஞ்சிருப்பன்னு யோசிச்சுப் பார்த்தேன்” என்றவள் இன்னும் பெரிதாக சிரிக்க ஆரம்பித்தாள்.

“கஷ்டம் தான். நான் அமீபா வரஞ்சா கூட வாட் இஸ் திஸ்னு கேட்பாங்க. இதுக்காகவே 12த்ல பயாலஜி வேண்டவே வேண்டாம்னு சொல்லிட்டேன். அப்போ இருந்து ஆரம்பிச்ச இண்டரெஸ்ட்... கம்ப்யூட்டர் மேல. இப்போ நான் செய்யுற இந்த வேலைய பிடிச்சு செய்ய ரீசன் அது தான்”

அவள் அமைதியாகிவிட்டாள். இரவு சபரீஷ் சொன்னது நினைவு வந்தது. “இன்னைக்கு அவன் உன்கிட்ட பேசுன விஷயம் அவன் கண்டிப்பா யாரோடையும் ஷேர் பண்ணியிருக்க மாட்டான்னு எனக்கு நல்லா தெரியும்”

இவன் ஏன் தன்னிடம் மட்டும் இப்படி மனம் விட்டுப் பேசுகிறான்? என்னை அவனுக்கு நெருக்கமானவளாக நினைக்கிறானா? இவனுக்கு நான் யார்?

அவளுடைய யோசனையை கலைத்தது அவனுடைய அழைப்பு.

“வீடு வந்திடுச்சு. என்ன பயங்கரமா யோசிக்குற?”

அவனை கூர்ந்துப் பார்த்தவள் மறுப்பாக தலையசைத்து காரிலிருந்து இறங்கி வீட்டினுள் சென்றாள்.

“பை சொல்ல மாட்டாளா? என்னாச்சு இன்னைக்கு இவளுக்கு?” சில நொடிகள் அவள் வீட்டையேப் பார்த்திருந்தவன் கெஸ்ட் ஹவுஸ் வந்து சேர்ந்தான்.

சிறிது நேரம் உறங்கி எழுந்தவனுக்கு அதன் பிறகு என்ன செய்து பொழுதை கழிப்பதென்றுத் தெரியவில்லை. சபரீஷை அழைத்து “எனக்கு போர் அடிக்குது” என்றான்.

“இருக்குறது 2 நாள் லீவ். தூங்க விடு”

“இவ்வளவு நேரம் தூங்கிட்டு தான இருந்திருப்ப? எனக்கு போர் அடிக்குது”

“ஷடா... இரு நான் கிளம்பி வரேன். ஹார்ட் டிஸ்க்ல நிறைய படம் இருக்கு. நீ அத பாரு. நான் தூங்குறேன்”

அடுத்த பதினைந்தாவது நிமிடம் அங்கிருந்தான் சபரீஷ்.

“எதுக்குடா பையெல்லாம் எடுத்துட்டு வந்திருக்க?”

“உன் தொல்லை தாங்க முடியல மச்சு. நான் இப்போ வீட்டுக்கு போனா திரும்ப எதுக்காவது கால் பண்ணி கூப்பிடுவ. என்னால அலைய முடியாது. இருக்க ரெண்டு நாள் நிம்மதியா தூங்கணும். இந்தா பிடி ஹார்ட் டிஸ்க். நான் போய் படுக்குறேன். எழுப்பின... கொன்னுடுவேன்”

பையுடன் அறைக்குள் செல்பவனை பார்த்து சிரித்து லேப்டாப்பை ஆன் செய்தான் ஆதர்ஷ். அவன் கொண்டு வந்திருந்த ஹார்ட் டிஸ்கில் நிறைய படங்கள் இருக்க தான் முன்பே பார்த்த, பிடித்த ஆங்கில படம் ஒன்றை தேர்வு செய்து பார்க்க ஆரம்பித்தான்.

அது முடிந்த சமயம் பசியெடுத்தது. மதிய உணவை வாங்கி வர தயாரானவன் சபரீஷை எழுப்பி “நீ என்ன சாப்பிடுற?” என்றுக் கேட்டான்.

“இன்னும் ரெண்டு நிமிஷம் என் கண்ணு முன்னாடி நின்னா உன்னை கடிச்சு சாப்பிட்டுடுவேன். போடா... எனக்கு பசிச்சா நான் சாப்பிட்டுக்குறேன்...”

தூக்கக் கலக்கத்தில் கத்தியவனை பார்த்து தலையில் அடித்து அவனுடைய பைக்கை எடுத்துக் கொண்டு வெளியே சென்று சாப்பிட்டு வந்தான்.

பார்க்க நிறைய படங்கள் இருந்தன. லேப்பை வெறித்தபடி அமர்ந்திருந்தானேத் தவிர அதில் மனம் லயிக்கவில்லை.

“ச்ச... இன்னைக்கு ஆபீஸ் இல்ல. இருந்திருந்தா நக்ஷத்ராவ பார்க்கலாம்” மீண்டும் மீண்டும் இந்த எண்ணம் தோன்றி அவனை சலிப்படைய செய்தது.

சபரீஷை எழுப்பலாம் என்று நினைத்தவனுக்கு சாப்பிடாமல் கூட உறங்குபவனை எழுப்பவும் மனம் வரவில்லை. மொபைலை கையில் எடுத்து அவள் எண்ணை தேடி எடுப்பதும் பின் மொபைலை லாக் செய்து வைப்பதுமாக சில நிமிடங்களை கடத்தினான்.

சில நொடிகள் மொபைலை அமைதியாகப் பார்த்தவன் பெருமூச்சுடன் அவள் எண்ணிற்கு அழைத்தான். இரண்டு ரிங்கில் எடுத்தவள் “சாப்பிடுறேன் ஆதர்ஷ். 2 மினிட்ஸ். கூப்பிடுறேன்” என்றுக் கூறி அழைப்பைத் துண்டித்தாள்.

இரண்டு நிமிடங்களுக்கான நீளத்தை வாழ்வில் முதல் முறை உணர்ந்ததை போல் இருந்தது. அவள் உணவுண்டு முடித்து அழைப்பாள் என்றாலும் இருப்புக் கொள்ளவில்லை.

மொபைல் அடித்ததும் அவசரமாய் எடுத்துப் பார்த்தவன் அழைப்பது சுஜா எனவும் “ஏதாவது முக்கியமான விஷயமாம்மா?” என்று அவசரமாகக் கேட்டான்.

“ஏன்டா பறக்குற? இரு அப்பா உன்கிட்ட பேசணுமாம்”

அப்பா என்றதும் அமைதியானான் ஆதர்ஷ். மோகன் “எப்படி இருக்க ஆதர்ஷ்? போன் பண்ணுறதே இல்ல?” என்றுக் கேட்டார்.

“கொஞ்சம் பிஸி டாடி. சொல்லுங்க...”

“நம்மளோட கிராண்ட்ஸ் பிராஜக்ட் காண்ட்ராக்ட் முடியப் போகுது. அது அடுத்த வாரம் ரென்யூ பண்ணணும். இங்கிருந்து கிளம்புறதுக்கு முன்னாடி நீ சொன்னது தான். ஒரு தடவ ஞாபகப்படுத்த கூப்பிட்டேன். நீ வேற ஒரு மாசம் அங்க இருக்கப் போறதா சொல்லியிருக்க... நாலு நாள் மட்டும் சென்னை வா”

இதை எப்படி மறந்தோம் என்று தலையிலடித்துக் கொண்டான். தன்னுடைய வேலைகளை மறக்கும் அளவிற்கா தான் இருக்கிறோம் என்றெண்ணியவன் “சைன் பண்ண க்ளயன்ட் சைட்லேருந்து யாரு டாடி வராங்க?” என்றுக் கேட்டான்.

“எனக்கு எப்படிப்பா தெரியும்? இந்த பிராஜக்ட் நீதான் பார்த்துக்குற... நான் இது வர அவங்கள்ட பேசினதில்லையே... நீ பேசுறது தான் முறை. கேட்டு சொல்லு. யார் எப்போ வராங்க? நீ எப்போ வர?”

“நான் இன்னும் ஒன் அவர்ல சொல்லுறேன் டாடி”

“சரி. அம்மா பேசணுமாம்” மொபைலை சுஜாவின் கையில் கொடுத்து நகர்ந்துவிட்டார் மோகன். சரியாக அந்த நேரம் நக்ஷத்ரா அவன் மொபைலிற்கு அழைத்தாள். செகன்ட் காலை பார்த்தவனால் இப்போது பேச முடியாதென்றுத் தெரிந்து மொபைலை மீண்டும் காதில் வைத்தான்.

“ஆதர்ஷ்... வினோ நச்சு பண்ணிட்டே இருக்கா... நக்ஷத்ராவோட போட்டோ ஏதாவது இருந்தா அனுப்பி வையேன். எனக்குமே பார்க்கணும் போல இருக்கு”

“ம்மா... அவதான் ஏதோ ஒளறிட்டே இருக்கான்னா நீங்களும் ஏன்மா இப்படி பண்ணுறீங்க?”

“போட்டோதான கேட்குறேன்? உன்னை என்ன பொண்ண தூக்கிட்டு வந்து காமின்னா சொல்லுறேன்”

சுஜா எரிச்சலுடன் கேட்க ஆதர்ஷிற்கு சிரிப்பு வந்துவிட்டது. அதை அவர் கண்டுக்கொள்ளும் முன் “சரி அனுப்பி வைக்குறேன்” என்றுக் கூறி அழைப்பைத் துண்டித்தான்.

நக்ஷத்ராவிற்கு அழைக்க வேண்டும். மோகன் கேட்டது மிக முக்கியமான தகவல். யாரிடம் முதலில் பேசுவதென்று யோசித்தவன் “வேலை சம்பந்தமா பேச ஆரம்பிச்சா அது இப்போதைக்கு முடியாது” என்று அவளுக்கு அழைத்தான்.

“சொல்லு ஆதர்ஷ்”

என்ன சொல்வது? பேச விஷயம் ஒன்றுமில்லாமல் அவளுக்கு அழைத்துவிட்டு இப்போது அவள் கேட்டதும் விழித்தான்.

“ஹலோ ஆதர்ஷ்?”

“ஹான்... சாப்பிட்டியா?”

“சாப்பிட்டுதான் கால் பண்ணுறேன்”

“நீதான் சமைப்பன்னு சொன்னல்ல... என்ன செஞ்ச?”

“இங்க கீ ரைஸ் கொஞ்சம் வித்தியாசமா செய்வோம். ட்ரைட் ப்ரூட்ஸ் எல்லாம் போட்டு. அதுவும் சிக்கன் கரியும் செஞ்சேன்”

அப்போது தான் சாப்பிட்டு முடித்து வந்திருந்தாலும் பசியெடுத்தது.

“நல்லா சமைப்பியா?”

“ம்ம்... ஆனா அடிக்கடி கிட்சென் பக்கம் போக மாட்டேன்”

இப்படியே பேசிக் கொண்டே இருக்க மனம் ஏங்கினாலும் “சரி நான் அப்பறம் பேசுறேன்” என்றான் ஆதர்ஷ்.

“எதுக்கு கால் பண்ணன்னு சொல்லவே இல்ல?”

“சென்னை போக வேண்டியிருக்கும். அங்க பிராஜக்ட் காண்ட்ராக்ட் ரென்யூ பண்ணணும். நான் தான் சைன் பண்ணணும். எப்போ போவேன்னுத் தெரில. அத சொல்ல தான் கூப்பிட்டேன்”

“ஓஹ்ஹ்...”

அத்தோடு அவர்கள் பேச்சு நின்றது.

“பை”

“பை”

தன்னுடைய க்ளயண்டை அழைத்து பேசியவன் விபரம் கூறுவதற்காக மோகனை அழைத்தான். “அவங்க புதன் அன்னைக்கு வரேன்னு சொல்லியிருக்காங்க டாடி. மண்டே ட்யூஸ்டே எனக்கு வேலை இருக்கும். நான் நாளைக்கேக் கிளம்பி வரேன்”

“ஓகே ஆதர்ஷ். டிக்கெட் புக் பண்ணிடு. பை”

திருவனந்தபுரத்தை விட்டு செல்ல மனம் முரண்டியது. “ச்ச இப்போதான் இந்த வேலையெல்லாம் வரும். எப்படியும் ஒரு மாசம் கழிச்சு போய் தான் ஆகணும். அது வரைக்குமாவது நிம்மதியா இருக்க விடுறாங்களா?”

எழுந்து வேகமாக அறைக்குள் சென்று “சபரீஷ்... டேய் சபரீஷ் எழுந்திரிடா” என்றுக் கத்தினான்.

“ஏன்டா...”

“டேய் கடுப்பேத்தாத... நான் நாளைக்கு கிளம்புறேன். அங்க பிராஜக்ட் ரென்யூவல் காண்ட்ராக்ட் சைன் பண்ணணும்”

“ஓ... எப்போ வருவ?”

“புதன்கிழமை முடியும். அதுக்கப்பறம் கிளம்பி வந்திடுறேன். எப்போன்னு கரெக்டா சொல்ல முடியாது”

“சரி டிக்கெட் புக் பண்ணிட்டியா? நாளைக்கு நைட் கிளம்புறியா?”

“ம்ம்ச்ச் இல்ல. காலையிலயே கிளம்புறேன். அப்போதான் மண்டே ஆபீஸ் போக முடியும்”

“அதுக்கு எதுக்கு இவ்வளவு அலுத்துக்குற?”

“போடா...”

அவனையே உற்று நோக்கியவன் “ஹ்ம்ம்... நக்ஷத்ராவ பார்க்க முடியாதுல்ல?” என்றுக் கேட்க “வாய மூடு” என்றுக் கத்தியவன் அவள் எண்ணிற்கு அழைத்தான்.

“நான் நாளைக்கு மார்னிங் கிளம்புறேன். திரும்பி வர வீக்கென்ட் ஆகிடும்”

“ம்ம்... போய் தான் ஆகணும் இல்ல..”

“ம்ம்”

“ஒண்ணு பண்ணு... நைட் டின்னருக்கு வீட்டுக்கு வா. சபரீஷும் கூப்பிட்டேன்னு சொல்லு. ரெண்டுப் பேரும் வாங்க”

“அதெல்லாம் வேண்டாம் நக்ஷத்ரா”

“என் சமையல் சாப்பிட அவ்வளவு பயமா? நிஜமா நல்லா சமைப்பேன்”

மனம் லேசாக “சரி வரோம். எப்போன்னு டைம் கால் பண்ணி சொல்லுறேன்” என்றுக் கூறி அழைப்பைத் துண்டித்து அவன் திரும்பியபோது “கடுப்படிக்கிறது கத்துறது எல்லாம் இங்க தான். அங்க பேசும்போது கோபமே வர மாட்டேங்குது... எப்படின்னு தான் புரியல...” என்று புலம்பியபடியே எழுந்து குளியலறைக்குள் சென்றான் சபரீஷ்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
பகுதி - 17

குளித்து முடித்து சபரீஷ் ஹாலிற்கு வந்தபோது வெளியே செல்லத் தயாராகி அமர்ந்திருந்தான் ஆதர்ஷ்.

“எங்க மச்சு கிளம்பிட்ட?”

“நக்ஷத்ரா வீட்டுக்கு. அவ...”

“என்னது அவ வீட்டுக்குப் போறியா? எனக்கு அடி வாங்கிக் குடுக்காம அடங்க மாட்டியா நீ?”

“கத்தாதடா. டின்னருக்கு உன்னையும் என்னையும் இன்வைட் பண்ணி இருக்கா. சீக்கிரம் ரெடி ஆகு”

“அதுக்கு நான் எதுக்கு? நீ மட்டும் போக வேண்டியது தான?”

“ரெடி ஆகு. லேட் பண்ணாத”

வேறு வழியின்றி உள்ளே சென்றுத் தயாராகி வந்தான். ஆதர்ஷ் காரை ஓட்ட அப்போதும் உறங்கியபடியே வந்தவனை பார்க்க சிரிப்பாக இருந்தது.

“டேய் எந்திரிடா... வீடு வந்துடுச்சு. எவ்வளவு நேரம் தான் தூங்குவ காலையிலிருந்து...”

கண்ணைக் கசக்கியபடி எழுந்து அரை தூக்கத்தில் வீட்டினுள் நுழைந்தான். விஜயன் அவர்களை வரவேற்றார்.

அவருடன் சபரீஷ் மலையாளத்தில் உரையாட நக்ஷத்ராவை இன்னும் காணாமல் “சத்தம் கேட்டும் வந்துப் பார்க்க மாட்டாளா?” என்றெண்ணியவன் மொபைலை எடுத்து அவளுக்கு மெசேஜ் அனுப்பினான்.

வேகமாக சமையலறையிலிருந்து வெளியே வந்து “ஹாய்... 5 மினிட்ஸ்” என்றுக் கூறி சென்றாள்.

என்னதான் அவள் தனக்காக சமைக்கிறாள் என்றுத் தெரிந்தாலும் இப்படி தனியே அமர்ந்திருக்க வேண்டியிருக்கிறதே என்று நொந்தான். எழுந்து சமையலறையுள் செல்லலாமா என்று யோசிக்கும் அளவிற்கு அவன் பொறுமை பறந்திருந்தது.

சொன்னது போல் ஐந்து நிமிடங்களில் வெளியே வந்தவள் “சாப்பிடலாம்” என்றாள்.

“இவ என்ன வந்ததும் சாப்பிட சொல்லுறா... கொஞ்ச நேரம் உட்கார்ந்து பேசுவான்னுப் பார்த்தா...” மற்ற இருவரும் எழ அவளை முறைத்தபடியே எழுந்தான் ஆதர்ஷ்.

அவன் முக மாற்றத்தை கவனித்தவள் மெதுவாக நடந்து சற்றே பின் தங்கி அவனருகில் வந்து “என்னாச்சு? எதுக்கு முறைக்குற?” என்று தாழ்ந்த குரலில் கேட்டாள்.

“கொஞ்ச நேரம் பேச மாட்டியா? ஏதோ நாங்க வந்ததே சாப்பிட மட்டும்தாங்குற மாதிரி உடனே சாப்பிடக் கூப்பிடுற?”

“சாப்பிட தானே உங்கள கூப்பிட்டேன்?”

அவன் மீண்டும் முறைக்கவும் “ஆறிடும் ஆதர்ஷ். சாப்பிட்டு பேசலாம். சரியா?” என்று இறங்கி வந்து சமாதானம் செய்தாள். சிறு புன்னகையுடன் டைனிங் டேபிளில் சென்றமர்ந்தான்.

முதலில் பழம்பொரி ஒன்றை எடுத்து வந்து சிறிய தட்டில் வைத்தாள்.

“என்னதிது?”

“பழம்பொரி”

“அப்படின்னா?”

“இவனுக்குப் போய் விளக்கம் சொல்லுற பாரு... அது நீளமா இருக்க ஸ்வீட். வாழைப்பழத்துல செய்வாங்க. சாப்பிடு மச்சு தெரியும்”

“கழிக்கு... நல்லா இண்டாவும்”

அதற்கு மேல் கேள்விக் கேட்க முடியாமல் தட்டை பார்த்தவன் “நைப் வேணும்” என்றான்.

“டேய் கையில சாப்பிடுடா” என்று சபரீஷ் எரிச்சலுடன் கூற “நீ சாப்பிடு. திஷ்யூ எடுத்துட்டு வந்து தரேன்” என்ற நக்ஷத்ரா உள்ளே சென்று திஷ்யூ பேப்பர் ஒன்றை எடுத்து வந்துக் கொடுத்தாள்.

இரவு உணவிற்கு சப்பாத்தியும் பெப்பர் சிக்கனும் செய்திருந்தாள். மூவருக்கும் பரிமாறிவிட்டு டேபிளை சுற்றி வந்து அவன் அருகில் அவள் அமர்ந்தபோது அவர்கள் எதிரில் அமர்ந்திருந்த சபரீஷ் யாரும் கவனிக்காத நேரம் வாயில் கை வைத்து “அடபாவி” என்றான்.

நக்ஷத்ரா பார்த்துவிடுவாளோ என்று அவசரமாக அவளை திரும்பிப் பார்த்தவன் நண்பனை பேசாமல் இருக்குமாறு சைகை செய்து எச்சரிக்க தலையாட்டியபடியே அவன் குனிந்துவிட்டான்.

அருகில் அமர்ந்து அவனுக்குப் பார்த்துப் பார்த்து பரிமாறியவள் சீக்கிரம் சாப்பிட்டு எழுந்துச் சென்று எல்லோருக்கும் ஒரு கின்னத்தில் நறுக்கிய பழங்களும் ஐஸ்க்ரீமும் எடுத்து வந்து வைத்தாள்.

கின்னத்திலேயே சிறிய ஸ்பூன் ஒன்று இருக்க ஆதர்ஷ் முன்னால் இருந்த கப்பை பார்த்தவள் மீண்டும் உள்ளே ஓடி சென்று போர்க் ஒன்றை எடுத்து வந்து கொடுத்தாள்.

இதை பார்த்த சபரீஷ் “என்னதிது?” என்று வாயசைத்துக் கேட்க லேசாக தோளை குலுக்கி இப்போதும் அவள் கவனித்துவிட்டாளா என்றுப் பார்த்துவிட்டு சாப்பிட ஆரம்பித்தான்.

அவர்கள் எழுந்ததும் நக்ஷத்ரா அனைத்தையும் எடுத்து வைக்க விஜயன் ஆதர்ஷிடம் கம்பெனி குறித்துக் கேட்க ஆரம்பித்தார். “இவரும் இவரு தமிழும்” என்று நினைத்தவன் ஆங்கிலத்தில் உரையாடத் துவங்கினான்.

நக்ஷத்ரா அவனருகில் வந்தமர்ந்து “சொல்லு... எப்போ கிளம்புற?” என்றுக் கேட்க விஜயன் திரும்பி சபரீஷிடம் பேச ஆரம்பித்தார்.

“தப்பிச்சேன்” என்று நினைத்தவன் “மார்னிங்” என்றான்.

“அதான் சொன்னியே... எத்தன மணிக்கு? எதுலப் போற?”

“இன்னும் புக் பண்ணல”

“ஏன்?”

“சபரீஷ் எழுந்ததும் புக் பண்ணலாம்னு நெனச்சேன். அதுக்குள்ள நீ உங்க வீட்டுக்குக் கூப்பிட்டியா... அதான் கிளம்பி வந்துட்டோம்”

“சரி இரு. என் லேப் எடுத்துட்டு வரேன். புக் பண்ணிடு. இப்போவே லேட். இதுக்கப்பறம் டிக்கெட் கிடைக்காது. வீக்கென்ட் வேற”

எழுந்து செல்லும் அவளையே முறைத்தவன் திரும்பியபோது சபரீஷ் விஜயனுடன் பேசியபடியே அவனைப் பார்த்து நக்கலாக சிரிக்க மேலும் கடுப்பானான்.

சுஜா நக்ஷத்ராவின் போட்டோ கேட்டது நினைவு வந்தது. வேகமாக மொபைலை எடுத்தவன் “ம்ம்ஹும்... இப்போ போட்டோ எடுக்க முடியாது. அதோட இப்படி திருட்டுத்தனமா போட்டோ எடுக்குறது தப்பு...” என்று அதை மீண்டும் உள்ளே வைத்தான்.

“இந்தா... புக் பண்ணிக்கோ”

“என்னை ஊருக்கு துரத்தி விடுறதுல உனக்கு அவ்வளவு சந்தோஷமா?”

“அப்படியெல்லாம் இல்லையே... இனி நான் கேப்ல போகணும். கடுப்பா இருக்கும்”

“உனக்கு டிரைவர் வேலை பார்க்க தான் நான் இருக்கேனா?”

“நீ எதுக்கு கடுப்பாகுற? கோபப்பட வேண்டியது நான். ஒரு மாசம் இருக்கேன்னு சொல்லி ஆசை காமிச்சுட்டு இப்போ பொசுக்குன்னு கிளம்பிட்டு கோபம் வேற...”

“என்ன முனகுற?”

“ஒண்ணும் இல்லப்பா... புக் பண்ணு”

அவள் முனுமுனுத்தது முழுதாகக் கேட்காவிட்டாலும் என்ன கூறினாள் என்று அவனால் எளிதில் ஊகிக்க முடிந்தது. புன்னகையுடன் லேப்பை வாங்கி ட்ரெயினில் டிக்கெட் புக் செய்தான்.

“கிளம்பலாமா? டைம் ஆச்சு”

மெல்லிய குரலில் “ஏன்டா பறக்குற?” என்று ஆதர்ஷ் கேட்க “மச்சு மணிய பாரு... கிளம்புடா போதும். வேணும்னா வீட்டுக்கு போய் போன்ல கண்டின்யூ பண்ணிக்கோ. இதுக்கும் மேல நான் அங்கிள்கிட்ட என்னத்தடா பேச?” என்று பல்லை கடித்தான் சபரீஷ்.

“சரி. நாங்க கிளம்புறோம். போய் கால் பண்ணுறேன்”

“அடப்பாவி... ஒரு பேச்சுக்கு சொன்னா கால் பண்ணுறேன்னு சொல்லுற?”

“சும்மா இருடா... பை நக்ஷத்ரா. வரேன் அங்கிள்”

நக்ஷத்ரா வெளியே வந்து கேட் அருகில் நின்று காரில் கிளம்பியவர்களுக்கு கையசைத்தாள்.

“என்னால முடியல... இப்போ எதுக்கு இவங்க வீட்டுக்கு சாப்பிட வந்தோம்?”

“என்னை கேட்டா? அதை எதுக்கு சாப்பிட்டு முடிச்சுட்டுக் கேட்குற? அவ தான் கூப்பிட்டா. எதுக்குக் கூப்பிட்டான்னு அவகிட்ட கேட்டிருக்க வேண்டியது தான?”

“ஹ்ம்ம்... அப்பறம்... உனக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்ல...”

“நான் என்னடா பண்ணேன்?”

“உலக மகா நடிப்புடா சாமி... சரி அது என்ன உனக்கு மட்டும் ஸ்பெஷலா போர்க் கொண்டு வந்து வெச்சா?”

“அதுவும் நானா கேட்டேன்?”

“டேய்... அவ டிக்கெட் புக் பண்ண சொன்னதுக்கு எதுக்கு அவள முறச்ச?”

“நான் எப்போ முறைச்சேன்?”

“போடா டேய்... மனுஷன் பேசுவான் உன்கிட்ட... எப்படியிருந்தாலும் தெரியாமயா போயிடும்... பார்த்துக்கலாம்டா”

வீட்டிற்குள் வந்ததும் உடை மாற்றி மொபைலை எடுத்துக் கொண்டு வீட்டின் வெளியே செல்பவனையே பார்த்தான் சபரீஷ். ஆதர்ஷ் அவன் பக்கமேத் திரும்பாது தலை குனிந்து நக்ஷத்ராவின் எண்ணை டயல் செய்தபடி போர்ட்டிகோவிற்கு வந்தான்.

“சொல்லு எதுக்கு கால் பண்ண”

“பேசலாம்னுதான். சரி... எனக்கு உன் போட்டோ மெயில் பண்ணு”

“எதுக்கு?”

“அது... வந்து... ஒவ்வொரு மாசமும் ஒரு பெஸ்ட் எம்ப்ளாயீ செலக்ட் பண்ணி அவங்கள அப்ரிஷியேட் பண்ணி டீம்க்கு மெயில் பண்ண... இந்த மன்த் நீ தான் பெஸ்ட் எம்ப்ளாயீ”

“ஓகே அனுப்புறேன்”

“இப்போ அனுப்பு”

“இப்போவேவா?”

“உடனே”

“அப்படி என்ன அவசரம்? இரு தேடி சென்ட் பண்ணுறேன்”

வேகமாக வீட்டினுள் வந்தவன் தன் லேப்டாப்பை தேட அதில் சபரீஷ் ஏதோ பார்த்துக் கொண்டிருக்க அவன் கையிலிருந்து லேப்பை அவசரமாகப் பிடுங்கி அறையினுள் சென்றான்.

“ஒரு பேச்சுக்கு குடுன்னு கேட்குறானா? மதிக்குறதே கிடையாது” என்று புலம்பியவன் மொபைலில் கேம்ஸ் விளையாட ஆரம்பித்தான்.

நக்ஷத்ரா அனுப்பிய மெயிலை ஓபன் செய்தவன் அவள் புகைப்படத்தை இரண்டு நொடி ரசித்துவிட்டு போட்டோவை மட்டும் எடுத்து வினோவின் ஐடிக்கு பார்வர்ட் செய்தான்.

“அனுப்பிட்டேன் ஆதர்ஷ்”

“ம்ம் அனுப்பிட்டேன்”

“அனுப்பிட்டியா? நான் தான் உனக்கு அனுப்பியிருக்கேன்”

“ஹான்... அதான்... பார்த்துட்டேன்னு சொல்ல வந்தேன்”

வினோதினியிடமிருந்து கால் வந்தது. “வீட்டுலேருந்து கூப்பிடுறாங்க நக்ஷத்ரா. மார்னிங் கிளம்பும்போது கால் பண்ணுறேன். குட நைட்”

“குட நைட் ஆதர்ஷ்”

“...”

“ஆதர்ஷ்...”

“ம்ம்”

“சீக்கிரம் வந்துடுவியா?”

“ஏன் கேட்குற?”

“ம்ம்... என்னால ரொம்ப நாள் கேப்ல போய் கஷ்டப்பட முடியாது அதுக்கு தான். பை”

அவள் கடுப்புடன் கூறி காலை கட் செய்ய சிரிப்புடன் வினோவுக்கு கால் செய்தான்.

“அண்ணா அண்ணி சூப்பர்”

“ஏய்... அண்ணின்னு எல்லாம் சொன்ன... லூசு மாதிரி... போட்டோ கேட்ட அனுப்பிட்டேன். இனி என்னை தொல்லை பண்ணக் கூடாது”

“நீ எதுக்குடா அவள திட்டுற? நானே சொல்லுறேன். எனக்கு பொண்ண பிடிச்சிருக்கு. உனக்கு பிடிக்கல?”

“ம்மா... இதுக்கு தான்மா உங்ககிட்ட எல்லாம் எதுவும் சொல்லுறதில்ல... போட்டோ கேட்டீங்க அனுப்பிட்டேன். இதோட விட்டுடுங்க”

அறைக்குள் வந்த சபரீஷின் காதில் அவன் பேசியது விழ “என்னது போட்டோ அனுப்புனியா?” என்று அலறி ஓடி வந்து அவன் லேப்பை பார்த்தான்.

“நான் காலையில கிளம்பிட்டு கால் பண்ணுறேன்” அவசரமாக காலை கட் செய்தான் ஆதர்ஷ்.

“போட்டோ எப்போடா வாங்குன? அவ அனுப்பினாளா? இல்ல நீயே எடுத்தியா?”

“அனுப்புனா. இப்போதான்”

“என்ன சொல்லி கேட்ட?” அவளிடம் சொன்ன அதே காரணத்தை கூறினான்.

“நீ பெரிய தில்லாலங்கடியா இருப்ப போலயே... ம்ம்ஹும்... இது சரி வராது... போட்டோ அனுப்புனது அனுப்புன... அப்பறம் எதுக்கு அம்மாகிட்ட கோபமா பேசுன?”

“அவங்க அவள பார்க்கணும்னு கேட்டாங்க. போட்டோ வாங்கி அனுப்பினேன். அவ்வளவு தான். போய் தூங்கு. காலையில நீ தான் என்னை டிராப் பண்ணணும். எனக்கு பேக் பண்ணுற வேலை இருக்கு”

தன் போக்கில் பெட்டியில் துணிகளை அடுக்க ஆரம்பித்தான் ஆதர்ஷ். அதற்கு மேல் கேட்டாலும் பதில் எதுவும் வராதென்றுத் தெரிந்து வெளியே சென்றுவிட்டான் சபரீஷ்.

காலை ஸ்டேஷனில் ட்ரெயின் ஏறியதும் முதல் வேலையாய் நக்ஷத்ராவை அழைத்தான்.

“கிளம்பிட்டியா? எல்லாம் மறக்காம எடுத்து வெச்சுக்ககிட்டியா? எதுக்கு ட்ரெயின்ல போற? கிட்டத்தட்ட பதினேழு மணி நேர ட்ராவல்... பேசாம ப்ளைட்ல போக வேண்டியது தான?”

“சபரீஷும் கேட்டான். எனக்கென்னமோ இது பிடிச்சிருக்கு. நீ எந்திரிச்சுட்டியா? இல்ல நான் எழுப்பிட்டேனா?”

“அதெல்லாம் எப்பமோ எழுந்துட்டேன். நீ கிளம்பிட்டு இருப்ப டிஸ்டர்ப் பண்ண வேண்டாமேன்னு தான் கால் பண்ணல. டீ குடிக்குறேன்”

“நீ நிஜமாவே நல்லா சமைக்குற. நேத்து சொல்ல டைம் கிடைக்கல. கிட்சன் பக்கம் அடிக்கடி போக மாட்டேன்னு சொன்ன... அப்பறம் எப்படி இதெல்லாம் கத்துக்கிட்ட?”

“இண்டரெஸ்ட் இருந்தா தானா வரும். இத எல்லாம் கத்துக்கணும்னு அவசியம் இல்ல ஆதர்ஷ். எனக்கு சமைக்க பிடிக்கும்”

“நாளைக்கு ஈவ்னிங் சபரீஷ் வந்து பிக்கப் பண்ணிக்குவான். கேப்ல போகாத. மார்னிங் அவனே டிராப் பண்ணிடுவான். ஆபீஸ் போயிட்டு கால் பண்ணு. வீட்டுக்கு வந்துட்டும் கால் பண்ணி சொல்லு. அப்...”

“சபரீஷ் கூட தான போகப் போறேன்... அப்பறம் எதுக்கு கால் பண்ணி சொல்ல சொல்லுற? அவன் பத்திரமா கூட்டிட்டுப் போக மாட்டானா?”

“அவன் ஒழுங்கா கூட்டிட்டு போவான். ஆனா என்னை தவிர வேற யார் கூட நீ போனாலும் எனக்கு நிம்மதி இருக்காது”

“ஏன்?”

“கேள்வியெல்லாம் கேட்காத... சொன்னத செய். நான் கொஞ்ச நேரம் தூங்கப் போறேன். நைட் பேக் பண்ணிட்டு தூங்க லேட் ஆகிடுச்சு. இப்போவும் சீக்கிரம் எழுந்துட்டேன். பை”

“...”

“பை சொன்னேன்”

“நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லலயே... பை தான சொன்ன...”

“சரி பை”

அவன் இணைப்பை துண்டித்துவிட “இவன் சொல்லுறதெல்லாம் நான் கேட்கணும். இவன் கேட்குறதுக்கெல்லாம் பதில் சொல்லணும். இவன் மட்டும் எதுவும் சொல்லமாட்டான். ஹ்ம்ம்... கால் பண்ணட்டும்... எடுக்க மாட்டேன்”

பொருமியபடி மொபைலை கீழே வைத்தவளால் அடுத்த மூன்று மணி நேரத்தில் அவன் அழைத்தபோது ஓடி வந்து எடுக்காமல் இருக்க முடியவில்லை.

“ட்யூஸ்டே எல்லாருக்கும் சேலரி கிரெடிட் பண்ணணும். சபரீஷ்கிட்ட போன வாரம் சொல்லியிருந்தேன். நேத்து ரிமைன்ட் பண்ணணும்னு நெனச்சு உங்க வீட்டுக்கு வந்ததுல மறந்துட்டேன். இப்போ கால் பண்ணா பிஸியா இருக்கு. யாருகிட்ட வெட்டி அரட்டை அடிக்குறான்னு தெரியல.

இந்த மன்த் புல் சேலரி போடாம எத்தன வர்க்கிங் டேஸ் இருந்துதோ அதுக்கு மட்டும் கேல்குலேட் பண்ணி போடணும். அதெல்லாம் அவனுக்கு நியாபகம் இருக்கோ இல்லையோ... நீ அவன்கிட்ட சொல்லி கொஞ்சம் பார்த்துக்கோ”

பெருமூச்சொன்றை வெளியேற்றியவள் “பாத்துக்குறேன். நல்ல்லா பார்த்துக்குறேன். அதான என் வேலையே...” என்றுக் கூறி அழைப்பைத் துண்டித்தாள்.

“கொஞ்சம்கூட பொறுப்பே இல்லாம பதில் சொல்லுறா...” என்று நினைத்தவன் அடுத்து சபரீஷிற்கு அழைக்கலாமா என்று யோசித்தான்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
பகுதி - 18

வீட்டிற்குள் நுழைந்ததும் தாயும் தங்கையும் எதுவும் பேசும் முன்னால் “எனக்கு டயர்டா இருக்கு. நான் தூங்குறேன். காலையில வேலை இருக்கு” என்றுக் கூறி தன் அறைக்குள் சென்று கதவை தாழ்போட்டுவிட்டான் ஆதர்ஷ்.

“முன்னெச்சரிக்கையா எஸ்கேப் ஆகுறான் பாருங்கம்மா”

“விடுடி... நாலு நாள் இங்கதான இருக்கப் போறான்... எப்படி தப்பிக்குறான்னுப் பார்க்குறேன்”

சுஜாவும் வினோதினியும் பேசிக் கொண்டிருக்கும்போதே கதவை திறந்து மெல்ல வெளியே வந்தவன் அவளிடம் தான் வாங்கி வந்த சாக்லேட்டை கொடுத்துவிட்டு வேகமாக உள்ளே சென்றுவிட்டான்.

“ஹை... மறக்காம வாங்கிட்டு வந்திருக்கான்மா. நான்கூட அவன் எந்திரிச்சதும் சண்டை போடணும்னு நெனச்சேன்”

“சாக்லேட் வாங்கி குடுத்துட்டான்ல... இனி உன் அண்ணன் தெய்வம்னு சொல்வியே... உன்னையெல்லாம் நம்பி ஒரு காரியம் பண்ண முடியாது வினோ”

“அப்படியெல்லாம் சொல்லாதம்மா... நாளைக்குப் பாரு... அவன நிக்க வெச்சு கேக்குற கேள்வில... பார்த்துட்டே இரும்மா...”

சாக்லேட்டுடன் எழுந்து செல்லும் மகளை பார்த்து தலையில் அடித்து சமையலறையுள் சென்றார் சுஜா.

குளித்துவிட்டு வந்து மொபைலை எடுத்தவன் அதில் இருந்த நக்ஷத்ராவின் மிஸ்ட் காலை பார்த்ததும் தலை துவட்டியபடியே அவள் எண்ணிற்கு அழைத்தான்.

“வீட்டுக்கு போயிட்டியா? போனதும் கால் பண்ணுறேன்னு சொல்லிட்டு ஒரு மெசேஜ் கூட அனுப்ப மாட்டியா? நான் இப்போதான் சபரீஷ்கூட ஆபீஸ் வந்தேன். சாப்பிட்டியா? காலையில எப்போ ஆபீஸ் போவ?”

“இப்படி கேள்வியா கேட்டன்னா கால் கட் பண்ணிடுவேன். எதுக்கு இத்தனை அவசரம்? எல்லாத்தையும் ஒரேடியா கேட்கணுமா?”

“இவன் என்ன... விட்டா மிரட்டுறான்...” என்றெண்ணியவள் “வெச்சுட்டு போ” என்றாள்.

காலை கட் செய்துவிடலாமா என்று நினைத்தவன் அதை செய்ய மனம் வராமல் “இப்போதான் வீட்டுக்கு வந்து குளிச்சேன். கால் பண்ணலாம்னு மொபைல் எடுத்தப்போ உன் மிஸ்ட் கால் பார்த்தேன். பசிக்கல. சாப்பிடல. காலையில 9கு ஆபீஸ் போவேன்”

“ம்ம்”

“நீ எதுக்கு இன்னைக்கு சீக்கிரம் வந்த? அம்மா ஊருலேருந்து வந்துட்டாங்களா? நான் சொன்ன விஷயமெல்லாம் சபரீஷ்கிட்ட சொல்லிட்டியா?”

“இப்போ நீ மட்டும் கேள்வியா கேட்கலையா?”

“கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு”

“சபரீஷுக்கு ஏதோ வேலை இருக்குன்னு சீக்கிரம் கூட்டிட்டு வந்துட்டான். அவன்கிட்ட எல்லாம் சொல்லிட்டேன். அம்மா நாளைக்கு வருவாங்க”

“நீ சாப்பிட்டியா?”

“இல்ல”

“ஏன்? அப்பறம் அன்னைக்கு மாதிரி பசியில தண்ணி குடிக்கவா? டின்னர் வாங்கிட்டு வரதுக்கு நானும் இல்லை தெரியுமா? இப்ப...”

“சீக்கிரம் வந்ததால பேக் பண்ணி எடுத்துட்டு வந்துட்டேன் ஆதர்ஷ். இப்போ சாப்பிடுவேன். நீ இல்லன்னா... இங்க எனக்கு டின்னர் வாங்கிட்டு வந்து குடுக்க யாருமே இல்லையா என்ன?”

சில நொடிகளுக்குப் பிறகும் பதில் வராமல் போகவே மொபைலை காதிலிருந்து எடுத்துப் பார்த்தாள். அழைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது.

“எதுவும் சொல்லாம வெச்சுட்டானா? நான் இப்போ என்ன சொல்லிட்டேன்னு கட் பண்ணான்? எப்போ பாரு எதுக்கு என்கிட்ட கோபப்பட்டுட்டே இருக்கான்?”

அவள் யோசனையில் இருக்க மொபைல் அடித்தது. அழைப்பை ஏற்றவள் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள். அழைத்தவனும் சில நொடிகள் பேசவில்லை.

“பேச மாட்டியா?”

“ஏன்? நீ திரும்பவும் கட் பண்ணவா?”

“சாரி”

“தேவையில்ல”

“சாரி நக்ஷத்ரா”

“ம்ம்... நீ எதுக்கு என்னை திட்டிட்டே இருக்க?”

அவன் சிரிக்கும் சப்தம் மெல்லிதாகக் கேட்டது. காரணமின்றி அவள் உதடுகளும் புன்னகையில் விரிய “நான் சாப்பிட்டு வர்க் ஸ்டார்ட் பண்ணுறேன். குட் நைட். காலையிலயாவது பேசுவியா?” என்றாள்.

“நைட் பேசுறேன். மார்னிங் நீ ஒழுங்கா தூங்கு. எனக்கும் வேலை இருக்கும். வீட்டுக்குப் போயிட்டு ஒரு மெசேஜ் மட்டும் அனுப்பு. குட் நைட்”

“எதுக்கு அனுப்பணும்னுக் கேட்டாலும் சொல்ல மாட்டான்” என்று முனகியபடியே அழைப்பைத் துண்டித்தாள். புன்னகையுடன் துண்டை சேரில் விரித்துப் போட்டவன் நிம்மதியாக உறங்க ஆரம்பித்தான்.

இரவு அவளுடன் பேசிவிட்டு உறங்கியதாலோ என்னவோ கண் விழிக்கும்போழுதே மனம் முழுவதும் அவள் நினைவு. குளித்துவிட்டு முதல் வேலையாக லேப்பை ஆன் செய்து அவளுடைய புகைபடத்தை பார்த்தான். இரண்டு வாரங்களாக தினம் பார்க்கும் முகம் என்றாலும் துளியும் அலுக்கவில்லை.

“ஆதர்ஷ் இன்னும் என்ன பண்ணுற? சாப்பிட வா”

சுஜாவின் குரலில் அவசரமாக லேப்பை அணைத்து “வரேன்” என்று குரல் கொடுத்து அறையை விட்டு வெளியே வந்தான். வினோவும் சுஜாவும் அவனுக்காக டைனிங் டேபிளில் காத்திருந்தனர்.

காலை எழுந்தது முதல் செய்வதற்கு ஒரு வேலையும் இல்லாமல் சோம்பல் முறித்தபடி வீட்டு வாசலில் வந்தமர்ந்தார் கீதா. சிறிது நேரத்தில் டீயுடன் வெளியே வந்த சரஸ்வதி மகள் கையில் ஒரு க்ளாஸை கொடுத்துவிட்டு அவர் அருகிலேயே மெல்ல படியில் அமர்ந்தார்.

“கஷ்டமா இருந்தா உள்ள சேர்ல உட்காரலாம்மா... எதுக்கு கீழ உட்காருறீங்க? சந்தோஷ் பார்த்தா திட்டுவான்”

“கொஞ்ச நேரம் வெளி காத்து படட்டுமே... எப்போ பாரு வீட்டுக்குள்ளயே அடைஞ்சு கெடக்க முடியுமா? இவன விட்டா என்னை ஹாஸ்பிட்டல்லயே தங்க வெச்சுடுவான்”

சிரிப்புடன் “அவன் அவ்வளவு பண்ணலன்னா நீங்களும் ஒழுங்கா வேலை செய்யாம ரெஸ்ட் எடுக்க மாட்டீங்க. இப்போ எதுக்கும்மா டீ போட்டீங்க? நான் போட்டிருக்க மாட்டேனா?” என்றார் கீதா.

“குடி குடி... வீட்டுக்குப் போனா இந்த டீ போட்டு குடுக்கவும் உனக்கு ஆள் இருக்காது. நீதான் போட்டுக்கணும்”

“வாஸ்தவம் தான். காலை நேரம் நிக்க நேரமிருக்காது. நக்ஷத்ரா அப்பா கிளம்புறதுக்குள்ள டிபன் செஞ்சு லஞ்ச் பேக் பண்ணி... இப்படி நிதானமா உட்கார்ந்து டீ குடிக்குறதெல்லாம் நெனச்சுக் கூட பார்க்க முடியாது. எத்தன வருஷம் ஆனாலும் அம்மா வீடு அம்மா வீடு தான் இல்ல...”

“நீ புலம்புற அளவுக்கு மாப்பிள்ளை ஒண்ணும் உன்னை கொடுமை படுத்திடல... அம்மாவ கண்டதும் புருஷன குறை சொல்ல தோணுதோ? நக்ஷத்ரா ஏதாவது உதவி பண்ணுவாளா?”

“குறைன்னு இல்ல... எப்பவோ ஒரு நாள் இப்படி வெட்டியா பொழுதை கழிக்க நெனச்சாலும் முடியலயேங்குற ஆதங்கம். அவங்க ஹெல்ப் எல்லாம் செய்வாங்க தான். அவ எனக்கு முடியாம இருக்க நேரம் எல்லாமே செய்வாம்மா... மத்த நேரம் நம்ம தொண்டை தண்ணிதான் வத்திப் போகும். அவள அசைக்கக் கூட முடியாது”

“விடு கீதா... உன் வயசுல அவளும் உன்னை மாதிரியே வெட்டியா இருக்க முடியலன்னு பீல் பண்ணுவா. கல்யாணம் குழந்தைன்னு ஆகிட்டா பொறுப்பு தானா வந்துட்டுப் போகுது”

“ம்மா... எத்தன தடவ சொன்னாலும் கேட்க மாட்டீங்களா? எதுக்கு கீழ உட்கார்ந்தீங்க? அப்பறம் இடுப்பு வலிக்குது குனிய முடியலன்னு புலம்ப வேண்டியது. எழுந்து சேர்ல உட்காருங்கம்மா”

கத்தியபடியே வந்தான் சந்தோஷ். வெளியே செல்லத் தயாராகி வந்தவனைக் கண்டதும் அவன் செல்வதற்கு வழி விடுவதற்காக எழுந்தார் கீதா.

“சும்மா சத்தம் போட்டுட்டே இருக்காத. சாப்பிடாமக் கூட எங்க கிளம்பிட்ட?”

“கடைக்கு சரக்கு வந்திருக்கு. போய் பார்த்துட்டு வந்திடுறேன்மா. நீங்க ரெண்டு பேரும் சாப்பிடுங்க. நான் வர லேட் ஆகும். நீ எப்போ கா கிளம்பணும்?”

“2 மணிக்கு பஸ் சந்தோஷ்”

“அதுக்குள்ள வந்திடுவேன் கா. ரெடியா இரு. வரேன் மா”

அவன் பைக்கில் புறப்பட மீண்டும் தாயின் அருகில் அமர்ந்தார் கீதா. “நேரம் காலம் ஒண்ணும் கிடையாது. இஷ்டத்துக்குப் போக வேண்டியது. இஷ்டத்துக்கு வர வேண்டியது. கேட்க ஆள் இல்ல... வேற என்ன... உடம்ப பார்த்துக்கோன்னு என்னை இந்த கத்து கத்துறானே... இவன் ஒழுங்கா வேளா வேளைக்கு சாப்பிடுறானா?”

“அவன் என்ன சின்ன குழந்தையாம்மா... அவன அவன் பார்த்துப்பான்”

“என்னமோ... கீதா... வந்து... எனக்கு ஒரு எண்ணம்... நம்ம நக்ஷத்ராவ சந்தோஷுக்கு முடிச்சா என்ன? முறை இருந்தா கட்டி வெச்சே ஆகணும்னு அவசியமில்ல. நான் அதுக்காகக் கேட்கல. ரெண்டுப் பேருக்கும் ஒத்துப் போகும்னு தோணுது.

அது மட்டுமில்லாம... நீயும் காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்ட. எங்க சம்மதத்தோடதான். உன் அப்பா இருந்த வரைக்கும் எனக்கு எதுவும் தோணல... ஆனா இப்போ... பொண்ண பெத்து வெச்சிருக்கியே... நம்ம பக்கம் மாப்பிள்ளை தேடுவியா? இல்லை மாப்பிள்ளை சைட் பார்ப்பியா? எங்க போனாலும் கலப்பு கல்யாணமான்னு கேட்பாங்க.

இந்த காலத்துல இது ஒரு பெரிய பிரச்சனை இல்லைன்னாலும் என் மனசுல இருக்குறத நான் சொல்லிட்டேன். கட்டாயம் இல்ல. முதல்ல அவங்க ரெண்டு பேருக்கும் சம்மதம் இருக்கணும். அதுக்கு முன்னாடி உனக்கு இதுல விருப்பம் இருக்கான்னு தெரியணும். நீ என்ன கீதா நினைக்குற? கேட்டது தப்பா இருந்தா...”

“இல்லம்மா... இதையெல்லாம் நானும் யோசிக்காம இல்ல. என்ன தான் லவ் மேரேஜ் எல்லாம் இப்போ சர்வ சாதாரணமா ஆயிடுச்சுன்னாலும்... பிள்ளைகளுக்கு கல்யாணம்னு வரும்போது இதெல்லாம் பார்க்குறாங்க தான்.

அதோட சந்தோஷுக்கு குடுக்குறதுல எனக்கு என்னம்மா தயக்கம்? நக்ஷத்ராவ நல்லாவே பார்த்துப்பான். வெளியில கட்டி குடுத்துட்டு நல்லா இருக்கணுமேன்னு பதறுறத விட இங்க அனுப்பிட்டு நிம்மதியா இருப்பேன்.

நீ சொன்ன மாதிரி அவங்க ரெண்டு பேரு மனசுலயும் என்ன இருக்குன்னு தெரியணும். இதுக்கு அவ அப்பா என்ன சொல்லுவாங்கன்னுத் தெரியல. கொஞ்சம் டைம் குடும்மா. ஊருக்குப் போயிட்டு நேரம் பார்த்து பேசிட்டு சொல்லுறேன்”

“எடுத்தோம் கவிழ்த்தோம்னு முடிவெடுக்குற விஷயமில்ல கீதா. பெத்தவங்க நம்ம ஆயிரம் ஆசப்படலாம். பிள்ளைங்க சந்தோஷம் தான் முக்கியம். இது உன் அப்பா சொன்னது. நீ காதலிக்குறேன்னு வந்து சொன்னப்போ நான் தான் கோபப்பட்டேனே தவிர உன் அப்பா உன்னை பத்தி மட்டும் தான் யோசிச்சாங்க. இன்னைக்கு உன்னை நெனச்சு கவலைப்படாம நான் நிம்மதியா இருக்கேன்.

நீ பொறுமையா பேசிட்டு சொல்லு. நேரம் ஆச்சு வா சாப்பிடலாம். இன்னும் கொஞ்ச நேரத்துல கால் பண்ணி சாப்பிடியான்னு கேட்டு அதுக்கும் திட்டுவான். இவன்கிட்ட திட்டு வாங்குறதே பொழப்பாப் போச்சு”

புலம்பியபடி கையை ஊன்றி சிரமப்பட்டு எழும் அன்னைக்கு உதவிய கீதாவின் மனதிலும் அவர் சொன்னது நடந்தால் என்ற ஆசை பிறந்தது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு வீட்டில் உணவுண்பது போல் இருந்தது ஆதர்ஷிற்கு. திருவனந்தபுரத்தில் இருந்தபோதும் தினம் இட்லி தான் சாப்பிட்டானென்றாலும் இப்போது தாயின் கையால் செய்து பரிமாறப்பட்டதை சாப்பிடுவதில் தனி ஆனந்தம். ஒருவேளை ஹோட்டலில் ஸ்பூன் மட்டுமே கொடுத்தார்கள் கத்தியும் போர்க்கும் கொடுக்கவில்லை என்றக் காரணமாகக் கூட இருக்கலாம்.

சுஜா கன்னத்தில் கை வைத்து அவனையே பார்க்க அவர் தோளை சுரண்டி “கேளும்மா” என்றாள் வினோதினி.

“அப்பறம் ஆதர்ஷ்... உன் ட்ரிப் எப்படி இருந்துது? ப்ராஜக்ட் எல்லாம் எப்படி போகுது?”

“ம்மா... நீ என்னம்மா அப்பா மாதிரி கேள்விக் கேட்குற? உன்னை என்ன கேட்க சொன்னா...”

“இருடி”

குசுகுசுவென பேசிக் கொள்ளும் இருவரையும் நிமிர்ந்துப் பார்த்தவன் “ம்ம்” என்று மட்டும் கூறி குனிந்து சாப்பிட ஆரம்பித்தான்.

“அங்க ஊரெல்லாம் எப்படிண்ணா இருக்கு?”

“ம்ம்”

இப்போது சுஜா வினோவை முறைத்தார்.

“இங்க வந்ததுக்கப்பறம் நக்ஷத்ராகிட்ட பேசுனியா?”

“ம்ம்”

அவன் பதில் கூறும் விதத்தில் கடுப்பான வினோ “எனக்கு நக்ஷத்ராகிட்ட பேசணும்” என்றுக் கூற அவனுக்கு சட்டென்று புரை ஏறியது.

தண்ணீர் அருந்தி தன்னை ஆசுவாசப்படுத்தியவன் “லூசு மாதிரி பேசாத... அவகிட்ட நீ என்ன பேசணும்?” என்றான்.

“இப்போ மட்டும் பேச்சு வருதோ? எனக்குமே அவகிட்ட பேசணும் ஆதர்ஷ். கால் பண்ணு”

“இவன்கிட்ட எதுக்கும்மா கேட்கணும்? தோ... அவன் மொபைல் இருக்குல்ல...”

“வினோ விளையாடாத... மொபைல் குடுடி முதல்ல...”

“நம்பர் என்னன்னு சேவ் பண்ணியிருக்க? நக்ஷத்ராவா இல்ல... டார்லிங் டியர் செல்ல பேரு... ஹான் இருக்கு... நக்ஷத்ரான்னு தான் சேவ் பண்ணியிருக்க”

“வினோ நில்லு ஓடாத... ம்மா நீங்களும் என்ன உட்கார்ந்து வேடிக்கை பார்க்குறீங்க? மொபைல குடுக்க சொல்லுங்கம்மா”

“நான் எதுவும் சொல்ல மாட்டேன்”

“வினோ நில்லு வினோ...”

“ரிங் போகுதுடா அண்ணா”

“அடி வாங்காதடி...”

“ஹலோ” ஓடுவதை நிறுத்தி ஓரிடத்தில் நின்று வினோ கூற அவள் கையிலிருந்த மொபைலை தாவி பிடுங்கினான் ஆதர்ஷ்.

“ஆதர்ஷ்??”

“சாரி நக்ஷத்ரா. வீட்டுல நம்பர் மாத்தி டயல் பண்ணிட்டாங்க. நீ தூங்கு. நைட் பேசுறேன்”

“ஆபீஸ் கிளம்பிட்டியா?”

ம்ம்... நீ தூங்கு. பை”

மொபைலை பாக்கெட்டில் வைத்தவன் “அறிவில்லையா உனக்கு?” என்று கத்த “சும்மா அவள கத்தாத ஆதர்ஷ். உனக்கு அந்த பொண்ண பிடிச்சிருக்கா இல்லையான்னு எங்களுக்கு தெரிஞ்சுக்கணும்” என்றுக் கூறி எழுந்தார் சுஜா.

“நீங்க என்னம்மா அவகூட சேர்ந்துக்கிட்டு சின்ன புள்ள மாதிரி... அவள கண்டிக்குறத விட்டுட்டு வேடிக்கை பார்க்குறது கொஞ்சம் கூட நல்லாயில்ல மாம்”

“அப்போ பிடிச்சிருக்கு... பிடிக்கல... ரெண்டுல ஒண்ணு சொல்லு. நீ சொல்லுறதுக்கு ஏத்த மாதிரி தான் நானும் அப்பாகிட்ட பேச முடியும். எனக்கு என் பையன் லைப் முக்கியம். அதுக்காக வினோ செஞ்சது தப்பு தான். அத உட்கார்ந்து வேடிக்கை பார்த்ததும் நான் செஞ்ச தப்புதான் ஒத்துக்குறேன். உன்னை பேச வைக்க வேற வழி தெரியல. சொல்லு. பிடிச்சிருக்கா?”

தன் தாயின் பொறுமையை கண்டு வியந்த தருணங்கள் வாழ்வில் பல இருந்தன. இப்போதும் அவர் பேச்சை கேட்டு அமைதியானவன் “இப்போ எதுக்கு இத தெரிஞ்சுக்கிட்டே ஆகணும்னு அடம் பிடிக்குறீங்க” என்றான்.

“நான் சொல்ல வேண்டியத தெளிவா சொல்லிட்டேன். நீ தான் வாய திறக்க மாட்டேன்னு அடம் பிடிக்குற”

“சொல்லேன்டா... இவ்வளோ தூரம் கேட்குறோம்ல?”

இருவரையும் மாறி மாறி பார்த்தவன் “அவ செய்யுற வேலை பிடிச்சிருக்கு. பெர்பெக்ஷனிஸ்ட். எந்த குறையும் கண்டுப்பிடிக்க முடியாது. நான் சொல்லுறதுக்கு முன்னாடியே நான் சொல்ல வரத புரிஞ்சுக்குறது பிடிச்சிருக்கு.

அவ மேல நம்பிக்கையிருக்கு, இப்போவும் சபரீஷ்கூட அவ இருக்குறதால தான் அங்க வேலை எல்லாம் ஒழுங்கா நடக்கும்னு நான் இங்க நிம்மதியா இருக்கேன். நல்ல பொண்ணு” என்றுக் கூறி அறைக்குள் சென்றுவிட்டான்.

“ம்மா... ஏதாவது புரிஞ்சுது?”

“அதிங்கப்பிரசங்கி... போய் காலேஜ் கிளம்புற வேலைய பாரு... காலங்காத்தால ஆளாளுக்கு மண்டக்காய வெச்சுக்கிட்டு...”

அவளை திட்டி சுஜா அகன்றுவிட “அவன் பிடிச்சிருக்குன்னு நேரா சொல்ல மாட்டான்... நீங்க புரியலன்னு நேரா சொல்லாதீங்க... நல்ல குடும்பம் எனக்கு” என்று முனகியபடி கல்லூரிக்கு செல்ல தயாராக ஆரம்பித்தாள்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
பகுதி - 19

வேலையில் ஆழ்ந்திருந்தாலும் காலை வீட்டில் நடந்த பேச்சுவார்த்தை நினைவிலிருந்து நீங்கவே இல்லை. எவ்வளவு முயன்றும் வேலையில் நூறு சதவிகிதம் கவனம் செலுத்த முடியாமல் தடுமாற்றத்துடன் மதியம் வரை நேரத்தை நெட்டித் தள்ளிய ஆதர்ஷ் தனது நாற்காலியில் சாய்ந்தமர்ந்தான்.

மனதின் சஞ்சலங்களுக்குக் காரணமானவளே அதற்கு தீர்வும் என்று நினைத்து நக்ஷத்ராவிற்கு அழைத்தான். உறங்கிக் கொண்டிருப்பாளோ... எழுப்பி விடுவோமோ என்ற பதற்றத்துடன் அவள் அழைப்பை ஏற்கக் காத்திருந்தான்.

“என்ன இந்த நேரத்துல கால் பண்ணுற? வர்க் முடிஞ்சுதா?”

தெளிவான அவள் குரலைக் கேட்டப் பிறகு மனம் நிம்மதியடைய “நீ ஏன் முழிச்சிருக்க?” என்றுக் கேட்டான்.

“தெரியல... தூக்கமே வர மாட்டேங்குது. இவ்வளவு நேரம் ஏதோ கொஞ்சம் தூங்கினேன். இப்போ சுத்தமா தூக்கம் போச்சு”

“இப்படி தூங்காம இருந்தா ரொம்ப கஷ்டப்படுவ”

“அட்வைஸ் பண்ணதான் கால் பண்ணியா?”

“ம்ம்ஹும்ம்... வந்ததுலேருந்து ரொம்ப பிஸி. தலை வலிக்குது. அதான்...”

“டேப்லட் போட்டியா? ரெஸ்ட் எடுக்கலாம்ல?”

“இன்னும் 2 3 ஹார்ஸ் வர்க். முடிஞ்சதும் வீட்டுக்குக் கிளம்பிடுவேன். உன்னை ரொம்பவே மிஸ் பண்ணுறேன் நக்ஷத்ரா”

பதில் கூற முடியாமல் தலை குனிந்து தலையணை நுனியை திருக ஆரம்பித்தாள்.

“நீ இருந்திருந்தா இந்த வேலையெல்லாம் நீயே செஞ்சிருப்ப... எனக்கும் கூட ஹெல்ப் பண்ண ஆள் இருக்க தைரியம் இருக்கும். இப்போ எல்லாம் நானே தனியாப் பார்க்க வேண்டியிருக்கு”

தலையிலடித்துக் கொண்டவள் “இதுக்கு தான் என்னை மிஸ் பண்ணுறியா? உனக்கு ஹெல்ப் பண்ணுறது மட்டும் தான் எனக்கு வேலையா?” என்றாள்.

“ம்ம்... நான் செய்ய நினைக்குறத நீ எனக்கு முன்னாடியே யோசிச்சு செஞ்சிடுவ. நான் இன்னும் லஞ்ச் சாப்பிடல. நீ இருந்திருந்தா சாப்பிட சொல்லி லஞ்ச் ஆர்டர் பண்ணியிருப்ப.

2 3 ஹார்ஸ் வர்க்குன்னு சொல்லுறேனேத் தவிர இது எப்போ முடியும்னு எனக்கேத் தெரியாது. வேலை பார்க்க ஆரம்பிச்சா இருட்டினது கூட தெரியாம உட்கார்ந்திருப்பேனே... நீ இருந்தா லைட் போட்டுவிட்டு சீக்கிரம் கிளம்ப சொல்லுவ.

நான் சென்னை வந்து இன்னும் ஒன் டே கூட ஆகல. இப்போவே நிறைய விஷயத்துல உன்னை மிஸ் பண்ணுறேன் நக்ஷத்ரா”

தான் ஏன் அவனருகில் இல்லை என்ற ஏக்கமும் எப்படியாவது அவனிடம் சென்று சேர்ந்துவிட வேண்டும் என்ற வேகமும் தோன்ற பேச மட்டும் வார்த்தைகளின்றி அமைதியாக இருந்தாள்.

அவள் ஏதாவது கூறுவாள் என்று ஆவலாக எதிர்ப்பார்த்த்வன் அவள் மௌனத்தில் சோர்ந்து “பை” என்றான்.

“முதல்ல சாப்பிட்டு அப்பறம் வேலை பாரு. இங்க இருந்த வரைக்கும் தான் ஆர்டர் பண்ணுறதுக்கு ஹோட்டல் நம்பர் என்கிட்டேருந்து நீ வாங்கவே இல்ல... நான் ஆர்டர் பண்ணேன். இப்போ அங்க இருக்க ஹோட்டல் நம்பர்ஸ் உன்கிட்ட இருக்கும்தான? நான் கட் பண்ணதும் ஒழுங்கா கால் பண்ணி என்ன வேணுமோ ஆர்டர் பண்ணி சாப்பிடு ஆதர்ஷ். ஈவ்னிங் கால் பண்ணுறேன். சீக்கிரம் கிளம்பி போய் தூங்கி ரெஸ்ட் எடு. வேலை எங்கயும் ஓடி போயிடாது. பை”

மொபைலை இறுகப் பிடித்தபடி மெத்தையில் அமர்ந்திருந்தாள் நக்ஷத்ரா. அவன் என்ன கேட்டான்... தான் என்னக் கூறினோம்... புரிந்து தான் பேசினோமா... மனதில் பல கேள்விகள் எழ பேசியது தவறென்று மட்டும் தோன்றவில்லை.

ஆதர்ஷ் உணவிற்கு ஆர்டர் கொடுத்தான். லேப்பில் அவள் புகைப்படத்தை பார்த்து புன்னகையுடன் “நல்லா மிரட்டுற...” என்றுக் கூறி தான் தயார் செய்துக் கொண்டிருந்த டாகுமெண்ட்டை எடுத்து படிக்கத் துவங்கினான்.

இப்போது வேலை பளு தெரியவில்லை. தன்னைப் பற்றி அக்கறை கொள்ளவும் ஒருத்தி இருக்கிறாள் என்ற எண்ணம் உற்சாகத்தை தந்தது.

மொபைல் ஒலிக்க அதை எடுத்துப் பார்த்தார் மோகன்.

“சொல்லு சபரீஷ். எப்படியிருக்க?”

“நல்லாயிருக்கேன் அங்கிள். நீங்க எல்லாரும் எப்படி இருக்கீங்க?”

“நல்லா இருக்கோம்பா. அங்க எதுவும் ப்ராப்ளமா? ஆதர்ஷ் ஆபீஸ்ல இருக்கான்”

“இல்ல அங்கிள். நான் உங்ககிட்ட பேசதான் கூப்பிட்டேன். நீங்க, ஆன்ட்டி, வினோ எல்லாரும் ஒரு தடவ இங்க வாங்க அங்கிள். ஆதர்ஷ் திரும்பி வந்தா ஒரு மாசம் இங்க தான் இருக்கப் போறான். இந்த சான்ஸ் விட்டா அப்பறம் நீங்க எப்போ வருவீங்க?

அப்பாவும் அம்மாவும் உங்கள எல்லாம் பார்க்கணும்னு சொன்னாங்க. நான் அங்க வந்திருக்கேன் ஆதர்ஷ் இங்க வந்து தங்குறான்... எங்க பேரன்ட்ஸ் நீங்க மீட் பண்ணதே இல்லையே... அவன் திரும்பி வரப்போ அவனோடவே வாங்களேன். அட்லீஸ்ட் 2 டேஸ் ஸ்டே பண்ணிட்டுப் போங்க அங்கிள்”

“நீ சொல்லுறதும் சரி தான் சபரீஷ். இப்போ உடனே வர முடியுமான்னு தெரியல. வினோ காலேஜ் இருக்கு. நான் வீட்டுல பேசிட்டு சொல்லுறேன்பா. கண்டிப்பா வரோம்”

“ஓகே அங்கிள். வெக்குறேன்”

அவன் அழைத்ததை சுஜாவிடமும் வினோவிடமும் மோகன் கூறிக் கொண்டிருந்த சமயம் உள்ளே நுழைந்தான் ஆதர்ஷ். அவனிடமும் விபரம் கூறினார்.

“நான் இப்போ அவசரமா கிளம்பி வந்திருக்கலன்னா நானே நேர்ல போய் அவங்கள நம்ம வீட்டுக்கு கூப்பிட்டிருப்பேன். நான் திரும்பி போறப்போ உங்களுக்கும் சேர்த்து டிக்கெட் புக் பண்ணவா?”

“இந்த வாரம் ஒரு முக்கியமான கல்யாணம் இருக்கு ஆதர்ஷ். போகலன்னா தப்பா நினைப்பாங்க. நாங்க அடுத்த வாரத்துல வரோம்”

“அம்மா சொல்லுற மாதிரி நாங்க அடுத்த வாரம் வரோம்ணா. எனக்கும் காலேஜ் லீவ் போட முடியாது”

“சரி. நான் கொஞ்ச நேரம் தூங்குறேன். 8கு எழுப்புங்க மம்மி”

அறைக்குள் வந்தபோது சபரீஷ் அழைத்தான். “பிஸியா மச்சு? காலையில கால் பண்ணுவன்னு நெனச்சேன்... நைட் நக்ஷத்ராகிட்ட பேசுனியாம். மார்னிங் டிராப் பண்ணப்போ சொன்னா...”

“ஆபீஸ் போனதுக்கப்பறம் கால் பண்ண டைம் இல்ல. அப்படியே பண்ணாலும் நீ தூங்கிட்டு இருப்ப... உன்கிட்ட யாரு திட்டு வாங்குறது? அப்பாவுக்கு கால் பண்ணி வீட்டுக்குக் கூப்பிட்டியாம்...”

“அத பத்தி சொல்ல தான் கால் பண்ணேன். அங்கிள் என்ன சொன்னாங்க?”

“இந்த வாரம் ஏதோ கல்யாணத்துக்கு போகணும்னு அம்மா சொன்னாங்க. வினோவுக்கு காலேஜ் இருக்காம். அடுத்த வாரம் கிளம்பி வரேன்னு சொன்னாங்க. டாடி உனக்கு கால் பண்ணி சொல்லுவாங்கடா”

“ம்ம் ம்ம்... அப்படியே நக்ஷத்ராவ அவங்களுக்கு இன்ட்ரொட்யூஸ் பண்ணி வைக்க வசதியா இருக்கும்”

“அவள எதுக்கு இன்ட்ரொட்யூஸ் பண்ணி வைக்கணும்?”

“நீ இப்படியே பேசிட்டு திரி... கடைசியில ஹெல்ப் பண்ணுறதுக்கு ஒருத்தரும் இருக்க மாட்டாங்க... பார்த்துக்கோ பா...”

“அதெல்லாம் ஒண்ணும் தேவையில்ல. நீ போய் கிளம்புற வழிய பாரு. நக்ஷத்ரா உனக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பா”

“எல்லாம் எங்களுக்குத் தெரியும். அடங்கு”

சபரீஷ் இணைப்பைத் துண்டித்ததும் உடை மாற்றி உறங்க முயன்றான் ஆதர்ஷ். உறக்கம் வரவில்லை.

“நம்மள ஆளாளுக்கு மிரட்டுறாங்களே... எதுக்கு? ஒருவேளை அவங்கல்லாம் சொல்லுற மாதிரி கெஞ்ச வேண்டி வந்துடுமோ? ம்ம்ஹும் எதையும் நெகடிவ்வா யோசிக்கக் கூடாது” கவிழ்ந்து படுத்து கண்களை மூடினான்.

இரவு கீதா வீட்டிற்கு வந்ததும் “அப்பாடா... இனி நான் சமைக்க வேண்டாம். காலையில டயர்டா வந்து தூங்க முடியாம... எவ்வளவு அவஸ்தைபட்டேன் தெரியுமா? நீ என்னடான்னா உங்க அம்மா வீட்டுல போய் ஜாலியா இருந்துட்டு வர...” என்றாள் நக்ஷத்ரா.

“எல்லாம் செஞ்சுப் பழகு. நாளைக்கே கல்யாணம் பண்ணி போனா செஞ்சு தான ஆகணும்? இதுக்கெல்லாம் சலிச்சுக்கிட்டா ஆச்சா?”

“அடப்போம்ம்மா... சபரீஷ் வந்துட்டான். நான் கிளம்புறேன்”

“ஆதர்ஷ் வரலையா?”

“அவன் சென்னை போயிருக்கான். இந்த வாரம் வந்திடுவான். என்ன அக்கறையா விசாரிக்குற?”

“எப்பயும் அந்த தம்பி தான வந்து கூட்டிட்டுப் போகும்... அதான் கேட்டேன். அமைதியான பையன்”

“அவன் அமைதி எனக்குதான தெரியும்” என்று நினைத்தவள் “பை மா” என்றுக் கூறி வேகமாக வீட்டை விட்டு வெளியே வந்தாள்.

“என்ன வீட்டுக்குள்ளேருந்து ஓடி வர?”

“இல்லன்னா அம்மாவ சமாளிக்க முடியாது சபரீஷ்”

“ஆதர்ஷ் அப்பறம் கூப்பிட்டானா?”

“ம்ம்... லஞ்ச் அப்போ பேசினான். பாவம் நிறைய வேலை போலருக்கு”

“அந்த கூமுட்டைக்கு என்கிட்ட பேச மட்டும் நேரம் இல்லை போலருக்கு” என்று நினைத்தவன் “ம்ம்... நான் இப்போ பேசினேன். அவனோட பேரன்ட்ஸ் இங்க வர சொல்லி இன்வைட் பண்ணேன். அடுத்த வாரம் வரேன்னு சொல்லியிருக்காங்க” என்றான்.

“அப்படியா? நல்ல விஷயம் தான்”

“எதுக்கு?”

“என்ன எதுக்கு?”

“நல்ல விஷயம்னு சொன்னியே... எதுக்குன்னு கேட்டேன்”

“இது என்ன கேள்வி? நான் வேற என்ன சொல்லணும்?”

“அவன அடிச்சு கேட்டே சொல்லல... உன்னை அப்படியெல்லாம் என்னால கேட்க முடியுமா என்ன? நடத்துங்க...” என்று நினைத்தவன் அமைதியாக காரை செலுத்தினான்.

அலுவலகம் வந்துவிட்டதை ஆதர்ஷிற்கு மெசேஜ் அனுப்பினாள் நக்ஷத்ரா. நாளை காலை அலுவலகத்திற்கு செல்ல வேண்டும் என்பதால் உறங்க செல்வதாக பதில் அனுப்பினான்.

இரவு பத்து மணிக்கு மேல் வீட்டிற்கு வந்தான் சந்தோஷ். காலை வெளியேக் கிளம்பிச் சென்றவன் மதியம் தமக்கையை பேருந்து நிலையத்தில் கொண்டு விடுவதற்காக வீட்டிற்கு வந்தான். அப்போதும் சாப்பிடவில்லை. கீதாவை பஸ் ஏற்றிவிட்டு மீண்டும் கடைக்கு சென்றவன் இப்போது தான் வீட்டிற்கு வருகிறான்.

மகன் அவசரமாக அள்ளி சாப்பிடுவதை பார்த்த சரஸ்வதி “இப்படி சாப்பிடக் கூட நேரமில்லாம எதுக்கு அலையணும்? முதல்ல நீ உன் உடம்பப் பார்த்துக்கோ... அப்பறம் வந்து என்னை திட்டு” என்றார்.

பதிலேதும் கூறாமல் அவரை பார்த்து புன்னகைத்தான்.

“நான் கேட்டா நீ என்னைக்கு பதில் சொல்லியிருக்க? உனக்கு கல்யாணம் பண்ணி வெச்சுடலாம்னு யோசிக்குறேன். வர...”

“இப்போ என்னம்மா அவசரம்?”

“கல்யாணம் பண்ணுற வயசு தான? உன் பிரெண்ட்ஸ் எல்லாம் பண்ணிக்கல? நீ யாரையாவது பார்த்து வெச்சிருகன்னா சொல்லு... பேசி முடிக்கலாம். உன் அக்கா வந்து சொன்னப்போ உன் அப்பா ஒத்துக்கிட்டாங்க. இப்போ நீ சொன்னாலும் நான் ஒத்துக்குவேன். சொல்லு...”

“அதுக்கெல்லாம் எனக்கெங்கம்மா நேரம் இருக்கு?” சாப்பிட்டு முடித்தவன் கை கழுவ எழுந்து செல்ல “அது சரி...” என்றபடி அவன் பின்னால் சென்றார் சரஸ்வதி.

“நக்ஷத்ராவ பத்தி நீ என்ன நினைக்குற?”

“அவளுக்கென்னம்மா?”

“காலையில அக்காகிட்ட அவள உனக்கு குடுக்க இஷ்டமான்னு கேட்டேன். அவளுக்கு விருப்பம் தான். அத்தான்கிட்டயும் நக்ஷத்ராகிட்டயும் கேட்டுட்டு சொல்லுறேன்னு சொல்லியிருக்கா. உனக்கு விருப்பமா சந்தோஷ்?”

“நான் இது வரைக்கும் என் கல்யாணத்த பத்தி யோசிச்சதே இல்லம்மா. நீங்க பார்த்து யார சொன்னாலும் எனக்கு ஓகே. நாளைக்கும் சரக்கு வரும். கடைக்கு சீக்கிரம் போகணும். நான் தூங்குறேன்மா”

அவன் சென்று படுத்துவிட அவனுடைய பதில் சரஸ்வதியை பெருமிதம் கொள்ளச் செய்தது.

செவ்வாய் காலை அலுவலகம் சென்றப் பிறகு அன்றிரவு வீட்டிற்கு வரவும் ஆதர்ஷிற்கு நேரமில்லாமல் போனது. நக்ஷத்ராவிற்கு அழைக்க நினைத்தவன் மொபைலை எடுத்தபோதெல்லாம் ஏதோ ஒரு வேலை வந்து தடுத்தது.

இரவு ஊழியர்கள் அனைவரும் வந்துவிட மோகனும் வந்து சேர்ந்தார். “நீ வீட்டுக்குப் போகலையா ஆதர்ஷ்? மார்னிங் க்ளயன்ட்ஸ் வந்திடுவாங்கல்ல?”

“வேலை இருக்கு டாடி. நாளைக்கு வரவங்ககிட்ட அக்கவுண்ட்ஸ் எல்லாம் காமிக்கணும். அது கொஞ்சம் பெண்டிங் இருக்கு. முடிச்சதும் எர்லி மார்னிங் கிளம்பி போயிட்டு ரெப்ரெஷ் பண்ணிட்டு வந்திடுறேன்”

சிறிது நேரத்தில் நக்ஷத்ராவிடமிருந்து மெசேஜ் வந்தது. அவள் அலுவலகத்திற்கு வந்து செர்ந்துவிட்டதை அனுப்பியிருப்பாள் என்று ஊகித்தவன் அதை படிக்கவும் நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருந்தான்.

தந்தையிடம் சொன்னது போல் அதிகாலை வீட்டிற்கு சென்று குளித்துத் தயாராகி மீண்டும் அலுவலகத்திற்கு வந்தான். அன்று முழுவதும் மொபைலை அணைத்து வைத்திருந்தவன் வீட்டிற்கு செல்ல இரவாகியது.

அடுத்த நாள் திருவனந்தபுரம் கிளம்ப டிக்கட் புக் செய்யவில்லை. அதற்கு மேல் லேப்பை எடுத்து புக் செய்ய தெம்பில்லை. சோர்ந்து போய் மெத்தையில் விழுந்தான்.

அவன் உறங்க ஆரம்பித்த சமயம் மொபைல் அடித்தது. எரிச்சலுடன் எடுத்துப் பார்த்தவன் நக்ஷத்ராவின் பெயரை பார்த்ததும் அழைப்பை ஏற்று “ஹலோ” என்றான்.

அந்த ஒற்றை வார்த்தையில் அவனுடைய களைப்பின் அளவை உணர்ந்தவள் “சாரி தூங்கிட்டியா? நேத்திலிருந்து காலும் பண்ணல மெசேஜும் பண்ணல. இன்னைக்கு காண்ட்ராக்ட் சைன் பண்னிட்டியான்னு கேட்க தான் கால் பண்ணேன்” என்றாள் அவசராமாக.

“இந்த வாட்டி 3 இயர்ஸ்கு ரென்யூ பண்ணிட்டாங்க நக்ஷத்ரா. ஐ அம் சோ ஹாப்பி. மார்னிங்லேருந்து ரொம்ப பிஸி. மொபைல் ஆப் பண்ணிட்டேன். நாளைக்கு வரதுக்கு டிக்கெட் புக் பண்ணல. பிரைடே கிளம்பி வரேன். சாட்டர்டே பார்க்கலாம். ஆபீஸ் வந்துட்டியா?”

“இப்போதான். நீ நல்லா தூங்கு. கங்க்ராட்ஸ்” என்றுக் கூறி வைத்தவளுக்கு இன்னும் இரண்டு நாட்கள் அவனை பார்க்க முடியாதே என்ற ஏக்கம் தோன்றியது.

ஆதர்ஷ் வெள்ளிக் கிழமை காலையே ட்ரெயினில் கிளம்ப எண்ணினான். ஆனால் வேறு வேலை இருந்ததால் சனியன்று கிளம்பும்படி ஆனது.

“ட்ரெயின்ல போய்... டே புல்லா ட்ராவல் பண்ணி... உடனே ஆபீஸுக்கு கிளம்பி... நோ... எவ்வளவு நேரம் ட்ராவல் பண்ணுறது? எனக்கு பொறுமை இல்லை” ப்ளைட்டில் டிக்கெட் புக் செய்தான்.

வெள்ளியன்று மாலையுடன் அவன் வேலை முடிந்துவிட “சபரீஷ் வீட்டுக்கு ஏதாவது வாங்கிட்டுப் போ ஆதர்ஷ். உனக்கு இப்போ டைம் இருக்குல்ல?” என்றார் சுஜா.

அவர் சொல்வதும் சரியென்றுத் தோன்ற கடைக்குச் சென்று தனக்குப் பிடித்தவற்றை வாங்கினான். நக்ஷத்ராவின் நினைவு வந்தது. இரண்டு நாட்களாக அவளிடம் பேசக் கூட முடியாமல் தவித்ததை எண்ணிப் பார்த்தான். “நாளைக்கு நைட் தான் அவள பார்க்க முடியும்... ச்ச...” புலம்பியபடியே அவளுக்கும் கிப்ட் வாங்கினான்.

“என்னது ப்ளைட்ல வரப் போறியா?” என்று அதிசயித்த நண்பனிடம் “ஆமா... நாள் பூரா வேஸ்ட் பண்ண முடியாது” என்றான் ஆதர்ஷ்.

“இது எப்பையிலிருந்து?”

“சரி நான் வெக்குறேன். வந்து கால் பண்ணுறேன். ஏர்போர்ட் வந்து பிக்கப் பண்ணிக்கோ”

அழைப்பைத் துண்டித்து கிளம்ப ஆரம்பித்தான். மனம் முழுக்க நக்ஷத்ராவை காணப் போகும் சந்தோஷம் நிறைந்திருந்தது.

அவன் கிளம்புவதற்கு முன் அவனுடைய அறைக்குள் வந்தாள் வினோதினி. “எல்லாம் எடுத்து வெச்சுக்கிட்டியா? ஒரு மாசம் கழிச்சு தான் வருவியா?”

“ம்ம்”

“நிஜமாவே எனக்கு அவங்கள பிடிச்சிருக்கு ஆதர்ஷ். அம்மாவுக்கும் தான். நீ வந்தன்னைக்கு சும்மா வம்பிழுத்தேனே தவிர... உனக்கும் பிடிச்சிருக்கும்னு நெனச்சேன்... ஆனா அப்படி விளையாடி டென்ஷன் பண்ணதுக்கு சாரி”

“சாரி எல்லாம் எதுக்கு வினோ சொல்லுற? எனக்கு கோபம் இல்லடா. நான் கிளம்புறேன். பை”

புன்னகையுடன் அவனை வழியனுப்பி வைத்தவள் சுஜாவிடம் “உனக்கு நக்ஷத்ராவ பிடிச்சிருக்குதான?” என்று உறுதி செய்துக் கொள்ள மீண்டும் கேட்டாள். பதிலேதும் கூறாமல் வீட்டினுள் சென்றுவிட்டார்.

மாலைக்கு மேல் ஆதர்ஷிற்கு இருப்புக் கொள்ளவில்லை. கெஸ்ட் ஹவுஸ் வந்ததிலிருந்து கடிகாரத்தை பார்த்துக் கொண்டே தான் இருக்கிறான். ஏனோ இன்று அது ஓடவே இல்லையோ என்ற சந்தேகம் தோன்றியது.

திருவனந்தபுரம் வந்தப் பிறகு நக்ஷத்ராவிடம் பேசவுமில்லை. தான் வந்து சேர்ந்ததை சபரீஷை அவளிடம் கூற சொல்லிவிட்டான். இரவு குளித்து தயாரானவன் அவள் எண்ணிற்கு அழைத்துவிட்டு அவள் எடுப்பதற்காகக் காத்திருந்தான்.

“ஆதர்ஷ்... எப்போ வந்த? ரெடி ஆகிட்டியா? நீ தான இப்போ வீட்டுக்கு வருவ? இல்லை சபரீஷ் வருவானா? அவனும் போன் எடுக்க மாட்டேங்குறான். எப்போ வர?”

அவள் குரலில் இருந்த பதட்டம் உணர்ந்து மனம் குதூகலிக்க “20 மினிட்ஸ்ல அங்க இருப்பேன்” என்று மட்டும் கூறி வைத்தான்.

அவள் வீட்டின் முன் காரை நிறுத்தி அவளுக்காகக் காத்திருந்த ஒவ்வொரு நொடியும் அவளை காணும் ஆவல் அதிகரித்தது. வீட்டிலிருந்து வெளியே வந்து காரில் தன்னருகில் அமரும் வரை அவளையே பார்த்தவன் காரை எடுக்காமல் தலையை பின்னால் சீட்டில் சாய்த்து அவளை பார்த்தபடி அமர்ந்திருந்தான்.

அவனை காணும் வரை எப்போது பார்ப்போம் என்று ஏங்கியவளால் அவனைக் கண்டப் பிறகு நிமிர்ந்து பார்க்க முடியவில்லை. அதுவும் இப்படி தன்னையே வைத்த கண் எடுக்காமல் பார்க்கும் அவன் பார்வை புதிதாகத் தெரிந்தது.

சில நொடிகளுக்குப் பிறகு காரை எடுத்தவன் அலுவலகம் வந்தப் பிறகும் அவளிடம் ஒரு வார்த்தை பேசவில்லை.

பிரேக்கின்போது அவளை பார்த்துவிட்டு அமைதியாக செல்பவனின் பின்னால் வந்த சபரீஷ் “அவகிட்ட பேச மாட்டேங்குற? மறுபடியும் சண்டையா மச்சு?” என்று சந்தேகமாகக் கேட்க புன்னகையுடன் இல்லையென்று தலையசைத்தான்.

அதிகாலை அனைவரும் கிளம்பிச் சென்றதும் மீண்டும் அவனிடம் வந்த சபரீஷ் “நெஜமா சண்டை இல்லையா?” என்றுக் கேட்க “கெளம்புடா... அதெல்லாம் இல்லை” என்றுக் கூறி அவனை அனுப்பி வைத்தான்.

எஞ்சியிருப்பது அவனும் அவளும் மட்டுமே. நக்ஷத்ரா அவளுடைய அறைக்குள்ளேயே அமர்ந்திருந்தாள். எப்போதும் அவள் எழுந்துச் சென்று அவன் கிளம்பிவிட்டானா என்றுப் பார்ப்பது வழக்கம். இன்று அவன் முன்னால் சென்று நிற்க முடியாமல் ஏதோவொன்று அவளை தடுக்க அவன் வந்து அழைப்பதற்காகக் காத்திருந்தாள்.

அவள் வந்து தன்னை அழைப்பாள் என்றுக் காத்திருந்த ஆதர்ஷ் நீண்ட நேரமாகியும் அவளைக் காணாது அவளுடைய டெஸ்க் போனிற்கு அழைத்தான்.

அழைப்பது அவனென்றுத் தெரியும். சில நொடிகள் போனையே பார்த்தவள் ரிசீவரை எடுத்து “சொல்லு” என்றாள்.

“நீ இங்க வா”

“இப்போ எதுக்குக் கூப்பிடுறான்? கிளம்ப வேண்டியது தான?”

அலுத்துக் கொண்டாலும் எழுந்து அவனறைக்குள் சென்றாள். லேப் பேகிலிருந்து ஒரு பாக்ஸை எடுத்தவன் அவளருகில் வந்து அதை நீட்டினான்.

பாக்ஸை பார்த்தவளுக்கு ஆச்சரியம். அதை வாங்கியவள் விழி விரித்து அவனை பார்த்தாள். அவள் முக மாற்றங்களை ரசித்துக் கொண்டிருந்தான்.

பாக்ஸ் முழுவதும் சாக்லேட். ஓரடி முன்னால் எடுத்து வைத்து அதையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவளின் அருகில் சென்றான். அவள் நிமிரவில்லை.

அவள் முகத்தையே பார்த்திருந்தவன் வலது கரம் நீட்டி அவள் கன்னம் பற்றி குனிந்து இட கன்னத்தில் மென்மையாய் முத்தமிட்டு “ஐ லவ் யூ” என்றான்.

ஒரு நொடி கண்களை இறுக மூடி திறந்தவள் அவன் கண்களை நேராய் பார்த்து “நான் இப்போ ஓங்கி அரஞ்சா என்ன செய்வ?” என்றுக் கேட்க அவள் கன்னத்திலிருந்து கையெடுத்து இரண்டடி பின்னால் நகர்ந்தான்.

ஒருமுறை அறை கதவை பார்த்துவிட்டு “வெளிய யாரும் இல்ல... நீயும் நானும் மட்டும் தான். நீ அரஞ்சா உனக்கு நான் சொன்னது செஞ்சது எதுவும் பிடிக்கலன்னு அர்த்தம். சாரின்னு சொல்லி யோசிக்காம கால்ல விழுந்திடுவேன்” என்றான்.

அவன் கூறிய பதிலும் கலக்கத்துடன் பார்க்கும் பார்வையும் சிரிப்பை வரவழைக்க சற்று முன் அவன் கொடுத்த முத்தம் வெட்கத்தை தர சட்டென்று தலை குனிந்து சிரித்தபடியே அறையை விட்டு வெளியே ஓடினாள்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
பகுதி - 20

நக்ஷத்ரா வாய் திறந்து பதில் கூறாதது ஆதர்ஷிற்கு வருத்தத்தை அளிக்கவில்லை. அவள் சிரித்ததையே சம்மதமாக கருதினான். லேப்டாப் பேகை எடுத்துக் கொண்டு அவன் வெளியே வந்தபோது நக்ஷத்ரா அறை வாயிலில் காத்திருந்தாள்.

அவன் முன்னே நடக்க அமைதியாக பின் தொடர்ந்தவள் அவன் அலுவலகத்தை பூட்டும் வரை கார் அருகில் காத்திருந்தாள்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு அதிகாலை வேளை அவளுடனான கார் பயணம். குளிர்ந்த காற்று வீச காரினுள் நிலவிய அமைதியையும் மனம் ரசித்தது.

அமைதியான பயணத்தின் முடிவில் அவள் வீட்டருகில் கார் நின்றதும் உடனே இறங்காமல் தலை குனிந்து அமர்ந்திருந்தாள். என்றுமில்லாமல் இன்று மனதில் சிறு தடுமாற்றம். சில நொடிகளுக்குப் பிறகு தயங்கி மெல்ல அவனை திரும்பிப் பார்த்தபோது அவன் அவளையே பார்க்க “பை” என்றாள்.

லேசாக தலையசைத்தான். அதற்கு மேல் அவனருகில் அமர்ந்திருக்க முடியாமல் வேகமாக இறங்கி வீட்டினுள் சென்றாள்.

கெஸ்ட் ஹவுஸ் வந்தவன் உறங்கும் எண்ணமில்லாமல் ஹாலிலேயே அமர்ந்தான். இரவு கிளம்பும்போது சபரீஷ் வீட்டினருக்கு வாங்கியவற்றை சோபாவில் வைத்துச் சென்றது கண்களில் பட்டது.

“அவன் வீட்டுக்குப் போய் இதெல்லாம் குடுக்கணும்... பேசாம இப்போவே கிளம்பி போனா என்ன?”

நினைத்ததை உடனே செய்து முடிக்க எண்ணி குளித்து வந்து பெட்டியை திறந்தான். இம்முறை ஒரு மாதத்திற்கான உடைகளை வீட்டிலிருந்து எடுத்து வந்திருந்ததால் அவற்றுள் ஒன்றை தேர்வு செய்து அணிந்துக் கிளம்பினான்.

“என்னடா இந்த நேரத்துல வந்திருக்க? தூங்கல?”

வாசலில் நின்றிருந்த சபரீஷ் கேட்க “தூக்கம் வரலடா. உங்களுக்காக வாங்கிட்டு வந்தது எல்லாம் குடுத்துட்டுப் போகலாம்னு வந்தேன்” என்றான்.

“எதுக்கு மச்சு அதெல்லாம்? உள்ள வா”

“எங்க அம்மாவும் அப்பாவும் காணும்?”

“அவங்க இப்போதான் வெளில கிளம்பிப் போனாங்க. அவங்கள வழியனுப்ப தான் நான் வாசல்ல நின்னேன்”

“இந்தா.... இதுல உனக்கு ஷர்ட் இருக்கு. அவங்களுக்கும் டிரஸ் இருக்கு”

அவன் தனக்காக வாங்கி வந்திருந்த ஷர்ட்டை பிரித்தபடி “நல்லா இருக்கு. நக்ஷத்ராவுக்கு எதுவும் வாங்கிட்டு வரலையா? எங்க எல்லாருக்கும் வாங்கிட்டு வந்திருக்க?” என்றுக் கேட்டான்.

“இப்போ ஆபீஸ்லேருந்து கிளம்புறதுக்கு முன்னாடி தான் குடுத்தேன்”

“என்னது? அவளுக்கும் டிரஸ்ஸா?”

“இல்ல... சாக்லேட் பாக்ஸ்”

கையிலிருந்த கவரை அருகில் வைத்து சோபாவில் சாய்ந்தமர்ந்து கை கட்டி நண்பனை பார்த்தான் சபரீஷ்.

அவன் பார்வைக்கான அர்த்தம் புரிந்தே இருந்தாலும் சில நொடிகள் அமைதியாக இருந்தவன் “எனக்கு அவள பிடிச்சிருக்கு” என்றான்.

அப்போதும் சபரீஷ் பேசாமல் இருக்க “அவகிட்ட சொல்லிட்டேன்” என்றான்.

“என்ன சொன்னா?”

“அடிக்கல... திட்டல... சிரிச்சா...”

“மச்சுசுசுசு...... கங்க்ராட்ஸ்டா... நக்ஷத்ரா நல்ல பொண்ணுடா... உனக்கேத்த பொண்ணு... ஆனாலும் நீ லவ் பண்ணுவன்னு இத்தன வருஷத்துல நான் நெனச்சு கூட பார்க்கல. நீ அவள விட்ட லுக்குலயே தெரியும்டா... எத்தன நாள் இல்ல இல்லன்னு சாதிச்ச... சரி சரி... சீக்கிரம் மலயாளம் படிக்குற வழியப் பாரு”

“மலயாளமா? சான்சே இல்ல... அவளுக்கு தமிழ் தெரியும். அது போதும்”

“உங்க வீட்டுல சீக்கிரம் சொல்லுடா”

“நீ வேற... நான் இந்தளவுக்கு அவள நோட் பண்ணுறதுக்கு காரணமே வினோ பேசுன பேச்சு தான்... அவ சொல்லி அம்மாவுக்கும் டவுட் இருக்கு. இந்த தடவ கேட்டாங்க. நான் டைரெக்டா எதுவும் பதில் சொல்லல...”

“நீ எப்படி பதில் சொல்லியிருப்பன்னு எனக்குத் தெரியும். விடு... அடுத்த வாரம் வராங்கல்ல... அப்போ சொல்லிடு”

“அம்மாவும் வினோவும் வரது அவள பார்க்கன்னு எனக்குத் தெரியும். அப்பாகிட்ட பேசணும்... அம்மாவால தான் முடியும்”

“கால்ல விழுந்துடு... வேற வழியே இல்ல... நீ என் கால்லயே விழ வேண்டியது இருக்கும். பார்த்துக்கோ...”

“போடா... அவ வீட்டுல நானே பேசிக்குவேன்”

“எப்ப்ப்ப்படி பேசுவ பாரு... சரி அதெல்லாம் போகட்டும். ட்ரீட் மச்சு... லவ் பண்ணுற... அத அந்த பொண்ணுகிட்ட சொல்ல வேற செஞ்சுட்ட...”

“முடியாதுன்னு சொன்னா விடவா போற? என்ன வேணும் சொல்லித்தொல”

“சலிச்சுக்கிட்டா விட்டுவேன்னு நினைக்காத. படத்துக்குப் போகலாம்”

“சரி கிளம்பு”

“தோடா... இப்போ போறதுக்கா ட்ரீட் கேட்குறேன். இன்னைக்கு சண்டே. ஆபீஸ் லீவ். சோ நம்ம நாளைக்கு நைட் ஷோ போறோம்”

“நாளைக்கு ஆபீஸ் இருக்கு”

“கட் அடிங்குறேன்... காலேஜ் டேஸ்ல எத்தன நாள் கட் அடிக்க கெஞ்ச விட்டிருக்க? இப்போ ஆபீஸ் கட் அடிச்சுட்டு படத்துக்கு வாடா”

“டேய்... இதென்ன சின்ன...”

“அதெல்லாம் எனக்குத் தெரியாது. நாளைக்கு நைட் ஷோ போறோம். சும்மாவே நக்ஷத்ராவ நான் தான் ஆபீஸ்ல டிராப் பண்ணுவேன்னு குதிப்ப... இப்போ சுத்தம்... நீ என்ன பண்ணுற... நைட் அவள டிராப் பண்ணிட்டு தியேட்டர் வந்துடுற. நான் நேரா தியேட்டருக்கு போயிடுறேன்”

“அவகிட்ட என்னன்னு சொல்லிட்டு வரது?”

“அது உன் பிரச்சனை. இப்போ கிளம்பு. நான் தூங்கணும்”

சபரீஷை முறைத்தபடியே எழுந்து கெஸ்ட் ஹவுஸ் வந்தவன் நக்ஷத்ராவிடம் என்ன காரணம் கூறுவதென்று அன்று முழுவதும் யோசித்தான்.

இரவு உறங்க செல்லும் முன் மொபைலை எடுத்து அவள் மெசேஜ் அனுப்பியிருக்கிறாளா என்றுப் பார்த்தான். எதுவும் இல்லை. அவன் ஏதாவது அனுப்பலாம் என்றால் என்ன அனுப்புவதென்றுத் தெரியவில்லை. சில நொடிகள் மொபைலையே பார்த்துக் கொண்டிருந்தவன் “குட நைட்” என்று அனுப்பினான்.

“தூக்கம் வரல” என்று பதில் வந்தது.

அவன் எதிர்ப்பார்த்த பதிலும் அது தானோ?

“ஏன்?” என்று அனுப்பினான். அவளிடமிருந்து பதில் வரவில்லை எனவும் அவள் எண்ணிற்கு அழைத்தான்.

“ஏன் தூக்கம் வரல?”

“வரல... நீ தூங்கலையா?”

“பகல் முழுக்க தூங்கிட்டேன்”

“நானும் ஒரு வாரம் கழிச்சு இன்னைக்கு தான் நிம்மதியா தூங்கினேன். அதான் இப்போ தூக்கம் வரல”

“ஒரு வாரம் என்னாச்சு? தூங்க வேண்டியது தான?”

“நீ ஒழுங்கா தூங்கினியா?”

“ம்ம்ஹும்... என்னால வீட்டுல இருக்கவே முடியல. எப்போடா வேலை முடியும்... கிளம்பி வந்து உன்னை பார்ப்பேன்னு இருந்துது. பகல் முழுக்க ஆபீஸ்ல பிஸியா இருந்துட்டு நைட் ரெஸ்ட் எடுக்கலாம்னு நெனச்சா உன் ஞாபகம் வரும். இந்நேரம் அங்க இருந்திருந்தா உன்கூட கார்ல போயிட்டு இருப்பேன்... ஆபீஸ்ல உன்கூட இருப்பேன்னுத் தோணும். அதையெல்லாம் விட்டுட்டு இப்படி வீட்டுல படுத்து தூங்க வேண்டியிருக்கேன்னு கடுப்பாகும்”

தான் தூங்காததற்கும் இது தான் காரணமென்றாலும் அவனால் மட்டும் எப்படி அதை பளிச்சென்று கூற முடிகிறதென்று வியந்தாள். பதில் கூற நினைத்தபோது வார்த்தைகளனைத்தும் தொண்டைக் குழியில் சிக்கித் தவித்தன.

எப்போதும் அவள் அமைதியாய் இருக்கும் நேரங்களில் கேள்விக் கேட்டு பேச வைப்பவனுக்கு இப்போது எதுவும் பேசாத அவளது மௌனமே தேவைப்பட்டது.

வார்த்தைகள் உணர்த்த முடியாததை சில நேரங்களில் மௌனத்தால் உணர்த்த முடியும். சப்தங்களற்ற மௌனம் கூச்சலிடும் வார்த்தைகளை மனதால் உணர முடியும். அவன் உணர்ந்தான்.

நிமிடங்கள் பல கரைந்தப் பிறகு “தூங்கு நக்ஷத்ரா” என்றவன் அழைப்பைத் துண்டிக்க மெத்தையில் படுத்து கண்களை மூடியவளுக்கு அவன் பேசிய வார்த்தைகள் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தன.

திங்களிரவு அவள் வீட்டிற்கு செல்லும் வரை ஆதர்ஷ் அவளை தொடர்புக் கொள்ளவில்லை. வீட்டின் வெளியே அவனைக் கண்டவள் புன்னகையுடன் அவனருகில் வந்தமர்ந்தாள். பதிலுக்கு புன்னகைத்தவனுக்கு அவளிடம் என்ன காரணம் சொல்லிவிட்டு நண்பனுடன் படத்திற்கு செல்வதென்ற குழப்பம்.

காரிலிருந்து இறங்கியவள் அவன் இன்னும் இறங்காமல் இருப்பது கண்டு “என்னாச்சு?” என்றுக் கேட்க “சபரீஷ் ஒரு முக்கியமான வேலை இருக்குன்னு சொன்னான். நான் போய் பார்த்துட்டு அவனோட வரேன். லேட் ஆகும். நீ கொஞ்சம் பார்த்துக்கோ” என்றான்.

தெருவில் நின்று கேள்விக் கேட்க விரும்பாமல் சரியென்று உள்ளே சென்றாள்.

“பேசாம உண்மைய சொல்லி இருக்கலாமோ? ச்ச... வேணாம். பொறுப்பே இல்லாம ஊர் சுத்துறேன்னு நினைப்பா... எல்லாம் இந்த சபரீஷால வந்தது. இப்போ படத்துக்குப் போகலன்னா என்னவாம்”

புலம்பியபடியே திரையரங்கம் வந்து சேர்ந்தான் ஆதர்ஷ். அவனுக்காக வாயிலில் காத்திருந்தவன் “சீக்கிரம் வா... எவ்வளவு நேரம் வெயிட் பண்ணுறது?” என்று திட்டி அவனை உள்ளே இழுத்துச் சென்றான்.

நக்ஷத்ராவும் முகுந்தும் அமரும் அறைக்குள் நுழைந்தான் மேத்யூ. “நக்ஷத்ரா எனிக்கு நாள லீவ் வேணம். சபரீஷினே விளிச்சு பரயான்னு நோக்கியா மொபைல் நாட் ரீச்சபிளா... ஆதர்ஷும் ஆபீசிலு காணுனில்லா. இப்ப அதர்ஷினு விளிக்கனோ... அதோ...”

“அவரு ரெண்டாளும் புறத்து போயிருக்கியா... ஞான் விளிச்சு நோக்கிட்டு பரயாம் மேத்யூ”

“தேங்க்ஸ்” என்றவன் வெளியேற “எங்க போனாங்க ரெண்டுப் பேரும்...” என்ற யோசனையுடன் ஆதர்ஷின் எண்ணிற்கு அழைத்தாள்.

படம் க்ளைமேக்ஸை நெருங்கியிருந்த சமயம் மொபைல் அடிக்கவும் அவள் எண்ணை பார்த்தவன் “மாட்டுனேன்” என்று தலையிலடித்துக் கொண்டான்.

அவன் மொபைலை எட்டிப்பார்த்த சபரீஷ் “எதுக்கு பதறுற? கால் கட் பண்ணிட்டு இன்னும் 20 மினிட்ஸ்ல வந்திடுவேன்னு மெசேஜ் அனுப்பு” என்றுக் கூறி திரும்பிவிட்டான்.

“எல்லாம் உன்னால வந்ததுடா” நண்பனை திட்டியவன் அவன் கூறியது போலவே செய்தான்.

மெசேஜை படித்தவள் “இத கால் அட்டென்ட் பண்ணி சொல்ல வேண்டியது தான? அப்படி என்ன பண்ணுறான்?” என்ற யோசனையுடன் வேலையை கவனிக்கத் துவங்கினாள்.

அலுவலகம் வந்து சேர்ந்தவுடன் “நான் போய் அவ எதுக்கு கால் பண்ணான்னு கேட்டுட்டு வரேன்” என்றுக் கூறி அவளுடைய அறைக்குள் சென்றான் சபரீஷ். அவனைக் கண்டதும் மேத்யூ லீவ் கேட்டதை கூறி எங்கே சென்றார்கள் என்றுக் கேட்டாள் நக்ஷத்ரா.

“ஒரு முக்கியமான வேலை இருந்துது. சரி நான் போய் மேத்யூகிட்ட பேசுறேன்” என்று அவசரமாக வெளியே வந்தவன் லீவ் எடுத்துக் கொள்ள சம்மதம் தெரிவித்தான்.

ஆதர்ஷ் கால் பேசுபவர்களின் அருகில் நின்று கவனித்துக் கொண்டிருக்க அவனிடம் சென்று “எல்லாம் ஓகேவா?” என்றுக் கேட்டான்.

“இப்போதைக்கு ஓகே தான். பட் ஒரு செஷன் கண்டக்ட் பண்ணணும். இன்னும் கொஞ்சம் இம்ப்ரூவ் பண்ணுறதுக்கு“

“நாளையிளிருந்துக் கூட பண்ணலாம். டைம் சொல்லு. அனௌன்ஸ் பண்ணிடலாம்“

“8-9. 2 டேஸ் செஷன். நாளைக்கு நீ கால்ஸ் பத்தி எடு. நாளன்னைக்கு நான் ஸ்பீச் ஓரியென்டட் செஷன் ஒண்ணு எடுக்குறேன். நான் போனதுக்கு அப்பறம் இதே மாதிரி ரெகுலர் செஷன்ஸ் அப்பப்போ கண்டக்ட் பண்ணு“

“டன். அப்பறம் நக்ஷத்ரா எங்க போனீங்கன்னுக் கேட்டா. நான் எதுவும் சொல்லல. சமாளிச்சுக்கோ“

“இதுக்குதான் நான் வரலன்னு சொன்னேன். மானத்த வாங்கு“ புலம்பியபடியே அறைக்குள் சென்றவனது மொபைல் அடித்தது.

“சொல்லுங்க டாடி“

“நாங்க இந்த வாரம் வெள்ளிக்கிழமை வரோம் ஆதர்ஷ். வீக்கென்ட் உன்னோட இருக்கோம். அத சொல்லதான் கால் பண்ணேன்“

“ஓகே டாடி. நான் வந்து பிக்கப் பண்ணிக்குறேன். பை“

காலை கட் செய்தபோது நக்ஷத்ராவின் அழைப்பு வந்தது. முதலில் தயங்கி பின் அழைப்பை ஏற்றான்.

“பேன்ட்ரிக்கு வா“

“பெரிய மகாராணி... ஆர்டர் பண்ணுறா“ முனகியபடியே அறையை விட்டு வெளியே வந்தவன் பேன்ட்ரியில் அவள் நிற்பதைக் கண்டு அங்கே சென்றான்.

அவன் கையில் டீ கப்பை கொடுத்து ஒரு டேபிளில் சென்றமர்ந்தாள். தேநீர் பருகுபவளின் எதிரில் அமர்ந்தவன் அவளையேப் பார்க்க “படத்துக்குப் போனியா?“ என்றுக் கேட்டாள்.

“உனக்கெப்படி தெரியும்?“

“அப்போ நிஜமா படத்துக்குதான் போனியா? இதான் முக்கியமான வேலையா?“

“ம்ம்ச்ச்... எப்படி தெரியும்?“

“அதான் சபரீஷ் வந்ததுலேருந்து அந்த படத்துல வர பாட்ட விசில் அடிச்சுட்டே சுத்துறானே... நீ திருட்டு முழி முழிக்குற... ஒரு கெஸ் தான்“

தலை குனிந்து “ம்ம்“ என்றான்.

“அறிவில்ல உனக்கு? நீ இந்த கம்பெனி MD. மத்தவங்களுக்கு ரோல் மாடலா இருக்க வேண்டியவன். நீயே இப்படி பொறுப்பில்லாம ஆபீஸ் டைம்ல சினிமாவுக்கு போயிட்டு வந்தா என்ன அர்த்தம்?”

கப்பையே பார்த்துக் கொண்டிருந்தவன் ஏதோ சந்தேகம் தோன்ற நிமிர்ந்து அவள் முகம் பார்த்தான். உதட்டை கடித்து சிரிப்பை அடக்கிக் கொண்டிருந்தாள்.

“உன்கிட்ட நான் சொன்ன டையலாக் எனக்கேவா?” அவளை முறைத்து அவசரமாக தேநீரை பருகி “கப் நீயே கழுவி வை” என்றுக் கூறி எழுந்துச் சென்றான்.

“இதான் சாக்குன்னு கப் கழுவாம போறத பாரு...” பொறுமையாக தன்னுடைய தேநீரை பருகியவள் இரண்டு கப்பையும் கழுவி வைத்துவிட்டு வந்தாள்.

அன்று காலை கிளம்புவதற்கு முன் அடுத்து இரண்டு நாட்கள் செஷன் இருப்பதாக முகுந்த் அனைவருக்கும் மெயில் அனுப்பினான்.

சபரீஷ் ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டிருக்கும் நக்ஷத்ராவையும் ஆதர்ஷையும் பார்த்தும் எதுவும் கேட்காமல் புன்னகையுடன் கிளம்பிச் சென்றான்.

காரில் ஏறும்வரை அவனை முறைத்தவளால் அதற்கு மேல் முடியாமல் சிரிக்க ஆரம்பிக்க அவனுக்கும் சிரிப்பு வந்தது.

வீடு வந்ததும் “பை” என்றுக் கூறி உள்ளே செல்பவளை பார்த்து கையசைத்தவன் அங்கிருந்துக் கிளம்பினான்.

அன்றிரவு தான் எடுக்க வேண்டிய செஷனிற்கு தயார் செய்த சபரீஷ் அந்த டாகுமெண்டை ஆதர்ஷிற்கு மெயில் அனுப்பிவிட்டு அவன் எண்ணிற்கு அழைத்தான்.

“மச்சு... நான் சொல்லப் போற பாயிண்ட்ஸ் எல்லாம் உனக்கு மெயில் பண்ணி இருக்கேன். பார்த்துட்டு ஓகேவா சொல்லு”

“கடைசி நேரத்துல எதுக்குடா கேட்குற?”

“விளையாடாத... நான் கிளம்ப இன்னும் ஒன் ஹவர் தான் இருக்கு. அதுக்குள்ள ஏதாவது மாத்தணும்னா மாத்திடுறேன். பார்த்துட்டு கால் பண்ணு”

மொபைலை அருகில் வைத்து லேப்பை ஆன் செய்து மெயிலை பார்த்தான். அவன் அனுப்பியிருந்த டாகுமென்ட் திருப்தியளிக்க அவனுக்கு கால் செய்து “இது போதும் சபரீஷ்” என்றுக் கூறி கிளம்ப ஆரம்பித்தான்.

இரவு அலுவலகம் வந்து சேர்ந்தப் பிறகு “மாதுரிக்கு கால் பண்ணி நாளைக்கு நைட் ஆபீஸ் வர சொல்லு நக்ஷத்ரா. வேற எதுவும் வர்க் பெண்டிங் இருந்தா பார்த்து அவகிட்ட சொல்லிடு. இல்லன்னா பேமென்ட் செட்டில் பண்ணிடலாம்.

நம்ம நேர்ல போய் குடுக்கணும். இப்படி அவள வர சொல்லுறது சரி இல்லைதான். பட் சபரீஷ் அவளுக்கு ரெண்டு தடவ கால் பண்ணப்போ ரொம்ப பிஸியா இருந்தா. சோ நாளைக்கு நைட் வர முடியுமான்னு கேட்டுப் பாரு” என்றான் ஆதர்ஷ்.

“நாளைக்கு வர சொல்லுறேன்” என்றவள் சபரீஷ் எடுக்கவிருக்கும் செஷனை அட்டென்ட் செய்ய தனதறைக்குள் சென்றாள்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top