முந்தைய பதிவிற்கு விருப்பங்கள் கருத்துகள அளித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்...
***
முத்தாரம்-16
இன்று...
மைத்ரியின் ஐந்தாம் மாத வளைப்பூட்டு விசேசத்தை தனக்கான பஞ்சாயத்தாக மாற்றி விட்டார் பைரவி. தனது ஆதங்கத்திற்கு வடிகாலை தேடிக்கொண்டு நிற்க, மனைவியின் மீதான கோபத்தை கூட காட்டமுடியாமல் அமைதியாக பல்லைக் கடித்தார் சண்முகநாதன்.
அர்த்தமுள்ள கோபத்திற்கும் அமைதி காக்க நேர்ந்தால் அங்கே சுயமே அர்த்தமற்றுப் போய்விடும். அப்படித்தான் சண்முகநாதனின் நிலமை! எங்கே தவறினோம் என்று அறிந்து கொண்டதை விட, அதை எப்படி சரி செய்யப் போகிறோம் என்பதில் தெளிவுறாமல் இருப்பதே அவரின் துரதிர்ஷ்டம்
“புத்தி கெட்டு அவ தான் மல்லுக்கு நிக்கிறான்னா, நீயும் அவளுக்கு தப்பாம தாளம் தட்ட நிக்கிறியா?” குரலையுயர்த்தி மகனை கண்டித்த பேச்சியம்மாள்
“மொதல்ல இந்த கழுதைய வெளியே தள்ளி கதவ சாத்து!” வெறுப்போடு பைரவியைப் பார்த்துச் சொல்ல, ருத்ரேஷிற்கு ரோசம் உடைப்பெடுத்துக் கொண்டு வந்தது.
காரணமே இல்லாமல் கோபம் கொள்ளும் முன்கோபக்காரன் அல்லவா! அதிலும் அம்மாவிற்கென்றால் யோசிக்கத்தான் தோன்றுமா?
“கெழவி, யாரை பார்த்து என்ன வார்த்தை பேசுற? இது எங்க வீட்டு பிரச்சனை, நீ வாய மூடிட்டு இரு!” யோசிக்காமல் முதியவளிடம் எகிறிக் கொண்டு வந்தான்.
“உன் வீட்டு பிரச்சனைய, என் வீட்டுல வந்து பேசுனா நான் கேக்கத்தான் செய்வேன்! எம் புள்ளைய பேசினா நான் வேடிக்கை பாப்பேன்னு நினைச்சியா? எம் பேத்திக்கு ஒரு நல்ல விஷயம் நடக்கும் போது அச்சாணியமா வந்து நிக்கணுமா?” பேரனிடமும் சரிக்கு சரியாக வாயாடினார் பேச்சி.
“எங்க வீட்டுக்கு இவர் வந்தா, நாங்க ஏன் இவரை தேடிட்டு இங்கே வரப் போறோம்? பணத்தாசை பிடிச்சவர்... சொத்தெல்லாம் தன் கைக்குள்ள போட்டுக்கிட்டு, நாங்க இவர் பின்னாடியே வந்து பிச்சையெடுக்கணும்னு ஆசைப்படுறார்” தாயின் போதனையில் வீண்பழியைச் சுமத்தி, ருத்ரேஷ் தனது மனக்கொதிப்பை இறக்கி வைக்க,
“ருத்ரா அமைதியா இரு... நான் பேசுறேன்” பைரவியின் ஒற்றை வார்த்தையில் அமைதியானான்.
“பார்த்தியா, நேத்து பொறந்த பய... பெத்தவ பேச்சை கேட்டு அமைதியாயிட்டான். நீயும் இருக்கியே...” அங்கலாய்ப்புடன் சேலை முந்தியை உதறி இடுப்பில் சொருகியபடி பேச்சியம்மாள் மகனிடம் நொடித்துக் கொள்ள,
“நீயும் ஏன் இப்படி மல்லுக்கு நிக்கிற? வீட்டுக்கு வந்தவங்களை வெளியே போகச் சொல்றதெல்லாம் தப்பு அப்பத்தா!” கலக்கத்துடன் சொன்னது மைத்ரி தான்!
ஆளாளுக்கு பேசிக் கொண்டிருப்பதை பார்த்து படபடத்துப் போயிருந்தாள். மனமெல்லாம் நடுக்கம் கொண்டதின் எதிரொலியாக அவளது கைகளும் சில்லிட்டு லேசாக நடுக்கம் கொள்ளத் தொடங்க, தன்னையும் அறியாமல் தந்தையின் கைகளை பலமாகப் பற்றிக் கொண்டுதான் பாட்டியிடம் பேசினாள்.
மகளின் பதட்டத்தை உணர்ந்து கொண்ட சண்முகநாதனும், “டென்ஷன் ஆகிட்டியா பாப்பா... ஒன்னும் பிரச்சனை இல்லடா! நீ வேணா ரூமுக்கு போறியா?” என்றவர்,
“பானு, பாப்பாவ உள்ளே கூட்டிட்டு போ!” வெகு நிதானமாகச் சொல்ல,
“இல்லப்பா, நான் இங்கேயே இருக்கேன்...” என்றவள் சுற்றிலும் இருப்பவர்களைப் பார்த்து தயங்கியபடியே.
“நான் ஒன்னு சொன்னா கோச்சுக்க மாட்டீங்களே?” என தந்தையிடம் கேட்டு பைரவியின் முகம் பார்த்தாள்.
விவரம் தெரிந்ததில் இருந்தே பெரியம்மாவைப் பார்த்ததும் பதுங்கிப் பின்னடைந்து விடுவாள். அவரின் எதிரில் நின்று பேசுவதெல்லாம் சாத்தியமில்லாத ஒன்றுதான் மைத்ரிக்கு!
அவளின் பார்வைக்கு பதிலாக இளக்கார பார்வையுடன் “என்னை பேசச் சொல்லிட்டு மகளோட கொஞ்சிட்டு இருக்கார், இதுதான் இவரோட லட்சணம்!” எள்ளலாய் பேசிய பைரவிக்கு, மகள் அப்பாவிடம் பேசினாலும் பொறாமைதான்!
“சாரி பெரியம்மா, பெரியவங்க பேசுறப்ப இடையில நான் பேசக்கூடாது தான், ஆனா இப்ப பேசணும்னு தோணுது!” என்றவள்,
“ப்பா, இது நம்ம குடும்ப விஷயம், என்ன பிரச்சனையா இருந்தாலும் யாருக்கும் மனக்கஷ்டம் வரவிடாம நமக்குள்ளயே பேசி முடிங்க... யாருக்கும் எதிரியா நீங்க இருக்க வேண்டாம். அவருக்கும் இந்த மாதிரி பஞ்சாயத்தெல்லாம் பிடிக்காதுப்பா!” தனது விருப்பத்தை அழுத்தமாகக் கூறி, அதற்கு பக்கபலமாக கணவனையும் கூட்டு சேர்த்துக் கொண்டாள் மைத்ரி.
அவளது பேச்சைக் கேட்டு அமைதியாக, நெகிழ்வாக, இகழ்வாக எனப் பலரும் பலவிதமாய் பார்த்துக் கொண்டிருக்க, “தங்கமே, நீதான்டி எம்பேத்தி! எம்புள்ள குணத்துக்கு தப்பாம பொறந்திருக்க! இவனும் இருக்கானே...” பேச்சியம்மாளின் வாயாடல் ருத்ரேஷை தூண்டி விடத்தான் செய்தது.
“உன்னைய கொல்லப்போறேன் கெழவி!” மீண்டும் அவன் எகிறிக் கொண்டு வர,
“போடா போக்கத்தவனே! நீயெல்லாம் என்னத்த படிச்சு கிழிச்ச? உன்னைப் பெத்தவ தான் சின்னபுத்தியோட பேசுறான்னா, உனக்குமா அறிவில்லை? இந்த வயசுக்கு மேல புருஷனை பகைச்சுகிட்டு என்னத்த சாதிக்கப் போறா?” குறையாத கோபத்தில் தனது வசைமொழியை தொடர்ந்தார் பேச்சி.
பதில் கொடுக்க முன்னேறிய ருத்ரனிடம், “அவங்க பேசி முடிக்கட்டும். நாம நிதானமா பேசலாம்” முணுமுணுத்து அடக்கினார் பைரவி,
“இவளும் வாழமாட்டா, மகனையும் வாழ விடமாட்டா... என்ன நெஞ்சழுத்தம் இவளுக்கு? எம் புள்ள மேல பிராது சொல்ல...” தொடர்ந்து வசைபாடிய முதியவளின் கொதிப்புகள் அடங்கவில்லை.
“அப்பத்தா, கொஞ்சம் அமைதியா இரேன்! என் அப்பா, உன் புள்ளங்கிறத தாண்டி பெரியம்மாவுக்கு வீட்டுக்காரர்! அப்படி பாரு, எல்லாம் சரியா இருக்கும்.” நியாயம் எடுத்துக் கூறிய மகளை கண்டிக்க முந்திக்கொண்டார் பானுமதி.
“வாயை மூடு மைத்தி! இப்ப நீதான் சரிக்கு சரியா பேசிட்டு இருக்க...” என்று மகளை அடக்கிவிட்டு பைரவியை பார்த்து,
“உங்க புள்ள வாழ்க்கை சீர்படலங்கற ஆதங்கத்தை இங்கே கொட்டப் போறீங்கன்னு நினைக்கிறேன். அத்தனை அவசியமா இவர்கிட்ட பேசியே ஆகணும்னா சென்னையிலயே இவரைத் தேடி வந்து பேசியிருக்கலாம் ஆனா இங்கே வந்து, ஊர்க்காரங்க மத்தியில...” என்று அதற்கு மேலும் தொடர விரும்பாதவராக
“உங்களுக்கான நியாயத்தை கேக்க வந்திருந்தாலும் நாலு பேரு நாலு விதமா பேசி வேடிக்க பாக்கற இடத்துல தான் நீங்க நின்னுட்டு இருக்கீங்க... உங்க மதிப்புக்கும் மரியாதைக்கும் இதெல்லாம் அழகா?” பானுமதியின் கேள்வி பைரவியின் சுயத்தை உரசிப் பார்த்ததில்,
“வாயை மூடுறியா? உன்னை இங்கே யாரும் சமரசம் செய்யக் கூப்பிடல... எனக்கு வேண்டியதை எப்ப எப்படி கேட்டு வாங்கணும்னு எனக்கு தெரியும். நீ எனக்கு புத்தி சொல்ல வேணாம்!” என்றவர் கணவரை நேருக்கு நேராக பார்த்தார்.
துளியும் கருணையோ கரிசனமோ அந்தப் பார்வையில் இல்லை. வெட்டி விட்டு முறித்துக் கொள்ளும் எதிராளியின் வெறுப்பு தான் வெளிப்பட்டது.
“சின்னவ அனுமதி கொடுக்கலன்னா நீ இந்தளவுக்கு கூட வாழ்ந்திருக்க முடியாதுடி... சீண்டுவார் இல்லாம நாறிப் போயிருப்ப...” பேச்சி அதிகப்படியாகவே பேசிவிட
“அதுக்குதான் வாழ வைச்சு பழி வாங்கிட்டீங்களே! இவருக்கு பானுமதியும் அவ பொண்ணு மேலயும் இருக்கற பாசம் ஒருநாளும் எங்க மேல இருந்ததில்ல... தாலி கட்டின பாவத்துக்கு என்கூட வாழ்ந்து புள்ளைய குடுத்துட்டாரு! தகப்பனா எம் புள்ளைக்கு நல்லதை செய்யாம தவறிட்டாரு... இதுக்கு மேல இவரோட உறவை சகிச்சுட்டு வாழ எனக்கு விருப்பமில்லை”
தொடர்ந்து பேசியவரின் வார்த்தைகளை எல்லாம் ருத்ரேஷால் கூட சகித்துக்கொள்ள முடியவில்லை. “என்னம்மா நீங்க? யுதி மாதிரி அர்த்தமில்லாம சண்ட புடிச்சிட்டு இருக்கீங்க!” கடுப்புடன் தாயின் பேச்சை தடுத்தான்.
“சரிதான்... உன் ஆத்தா என்ன பேசப்போறான்னு தெரியாம தான் என்கிட்ட எகிறிட்டு நின்னியா ராசா?” பேச்சியின் எகத்தாளத்திற்கு மைத்ரி பலமாக முறைத்தாள்.
“உனக்கொரு பஞ்சாயத்து வைக்கணும் கெழவி!” என்று பேத்தியும்,
“வாய மூடு, உன்னை யாரும் இங்கே கூப்பிடல...” என்று பேரனும் பல்லைக் கடித்து முதியவளை அடக்கினார்கள்.
“நமக்கு ஆகாதுன்னு தானே ஒதுங்கி நிக்கிறோம், அதையே ஏன் பிரச்சனையா சொல்றீங்கம்மா?” அம்மாவையே கேள்வி கேட்டான் ருத்ரேஷ்.
“அப்ப நீ வாழ வேணாமா ருத்ரா? உனக்காகத் தான்டா நான் பேசிட்டு இருக்கேன், என்னை பேச விடு!”
“எது தேவையோ அதை மட்டும் பேசுங்க! பொதுவுல மன்னிப்பு கேட்டு உங்ககூட வாழுறேன்னு அவர் வந்தா நீங்களும் ஏத்துகிட்டு சேர்ந்து வாழப் போறீங்களா?” எதிர்கேள்வி கேட்டு பைரவியின் வாயை அடைத்தான்.
இரு துருவங்களாக எப்பொழுதும் வெட்டிக்கொண்டு வாழும் பெற்றோரின் வாழ்க்கை முறையைப் பார்த்து வளர்ந்தவனுக்கு இருவரது மனதின் நிலைப்பாடும் சொல்லித்தான் புரிய வேண்டிய அவசியமில்லை.
“எல்லாரும் நம்மையே வேடிக்கை பாக்குறாங்கம்மா...” என்று அத்தனை சங்கோஜப்பட்டான்.
நகரத்தில் வளர்ந்து நாகரீகத்தில் உழன்றவனுக்கு அம்மாவின் வார்த்தைகளும் செய்கைகளும் அதிகப்படியான நாடகத்தனமாகவேப் பட்டது.
“உனக்கு புரியாது ருத்ரா!” பைரவியும் பார்வையில் கோபத்தை அடக்கிக்கொண்டு பேச,
“இத்தனை வருஷம் கழிச்சு புரிஞ்சு என்ன ஆகப் போகுது? என் அம்மாவை வேடிக்கை பார்த்து, கை நீட்டி அடுத்தவங்க பேசுறதை பார்க்கற சக்தி எனக்கில்ல... நான் பேசுறேன்மா, ப்ளீஸ்! ஒரு பத்து நிமிஷம் அமைதியா இரேன்!” என்று கெஞ்சலாய் அம்மாவை அடக்கினான் ருத்ரேஷ்.
நேரடியாக தந்தையைப் பார்த்தான். “எனக்கு பணம் வேணும் அதுக்கான ரைட்ஸ் உங்ககிட்ட தான் இருக்கு. அந்த பொறுப்புல இருந்து நீங்களா விலகிக்கோங்க... பிசினெஸ், பிராப்பர்டி பவர், கார்டியன்ஷிப் எல்லாம் அம்மா பேர்ல மாத்திடுங்க! எங்களுக்கு இதுதான் வேண்டியிருக்கு, மத்தபடி நீங்களும் அம்மாவும் எப்பவும் தனித்தனி தானே, அதைப்பத்தி பேசி டைம் வேஸ்ட் பண்ண வேணாம்!” தெளிவாக தன்னை முயன்று அடக்கிக் கொண்டு வெகு நிதானமா பேசி முடித்தான் ருத்ரேஷ்.
இத்தனை பக்குவமான பேச்சு எப்படி வந்ததென்று அவனுக்கே ஆச்சரியம். முடிவான பேச்சில் தானும் சண்முகநாதனின் வாரிசு என்பதை உணர்த்திவிட்டு பேச்சியம்மாளை அழுத்தமாகப் பார்த்தான்.
‘இனிமே என் அம்மாவை பேசு, உனக்கிருக்கு!’ என்ற பலத்த கண்டனம் அந்த பார்வையில் நிறைந்திருந்தது.
“இதில்ல பேச்சு, இதுதான் எம் பேரனுக்கு அழகு! எவ்வளவு நேக்கா விசயத்தை உடைச்சு சொன்ன பார்த்தியா? இதெல்லாம் எப்படின்னு நினைக்குற? உன் அம்மா சொல்லிக் கொடுத்தாளா? கிடையாது... உன் உடம்புல ஓடற எம் புள்ள ரத்தம் உன்னை பேச வைக்குது” சீண்டலுடன் பேச்சி எகத்தாளம் பேச,
“நீ பெருமை பீத்திக்க நேரமே கிடைக்கலையா?” என்றபடி பொறுமையிழந்த மைத்ரி, வேகமாக எழுந்து சண்முகநாதனின் தோளில் கிடந்த துண்டை எடுத்து அவரின் வாயில் கட்டி, அங்கேயே அமர வைத்தாள்.
“மூச்சு விட்ட அவ்ளோ தான்!” என்று மிரட்டியவள்,
“என்னப்பா நீங்களும் வேடிக்கை தான் பாப்பீங்களா?” அவங்களுக்கு பதிலைச் சொல்லுங்க... பிரச்சனைய முடிங்கப்பா!” என்று மூச்சு வாங்கப் பேசிவிட்டு,
“சாரிண்ணா... இந்த கெழவிய அடக்க வேற வழியே தெரியல, அதான்...” என்று ருத்ரேஷிடம் மன்னிப்பை வேண்டினாள்.
இவளுக்குமே பஞ்சாயத்து, கோர்ட்டு கேஸ் என்பதில் எல்லாம் உடன்பாடே இல்லை. எத்தனை பெரிய பிரச்சனையாக இருந்தாலும் சத்தமில்லாமல் ஊராரின் வம்புப் பேச்சிற்கு இடம்கொடுக்காமல் முடியவேண்டும் என்பதில் மட்டும் கவனமாய் இருந்தாள்.
தற்கால மாற்றமாக குதர்க்கம், புரளி பேச, சோஷியல் மீடியா, ரீல்ஸ், லோக்கல் சேனல் என்று வரிசை கட்டிக்கொண்டு அலைகின்றதே! அதற்கு தப்பாமல் குடும்ப விசயங்களை பொதுவில் அம்பலப்படுத்தும் நாகரீகமும் முன்னேறிக் கொண்டிருப்பதை சொல்லவும் வேண்டுமா!
செல்வாக்கும் மரியாதையும் கொண்ட சண்முகநாதனின் குடும்பத்தையும் பதம் பார்க்காமல் விட்டு விடுமா இன்றைய ஊடகங்கள்! இவற்றையெல்லாம் மனதில் ஓட்டிப்பார்த்தே யோசித்தனர் ருத்ரேஷும் மைத்ரியும்!
தங்கையின் செயலையோ பேச்சினையோ கருத்தில் கொள்ளாமல் பெற்றவரையே இமைக்காமல் பார்த்தான் ருத்ரேஷ். “இன்னும் எத்தனை நாளைக்கு தான் இப்படி கல்லு பிள்ளையாராட்டாம் இருக்கப் போறீங்க? பதிலை இங்கே சொல்றீங்களா? கோர்ட்டுல சொல்றீங்களா?” கண்டிப்பான குரலில் கேட்க,
மைத்ரியும், “கோர்ட்டுக்கு போனா பிரச்சனை இழுக்கும்ப்பா... எப்படியும் அண்ணனுக்கு சேர வேண்டியது தானே! அதை இப்பவே நேர் பண்ணி கொடுத்துடுங்க... உங்களோட அமைதியான பிடிவாதம் தான் அண்ணியும் விலகிப் போனதுக்கு காரணமா இருக்கு. அவங்க வாழ வேணாமா?” எடுத்துச் சொல்லி மாமியாரின் முகம் பார்த்தாள்.
இவர்களுக்கிடையே என்ன பேசுவதென்றே தெரியாமல் அமைதியாக நின்றிருந்தார் துர்கா. மகளாக, தங்கையாக, மருமகளாக பொறுப்புடன் தற்போதைக்கு எது தேவையோ அதை மட்டுமே பேசினாள் மைத்ரி.
ஐந்து நிமிடத்திற்கும் மேல் அமைதியாகவே நேரம் கடந்தது. பலமான யோசனை செய்ததின் அடையாளமாக சண்முகநாதன் புருவத்தை ஏற்றி இறக்குவதும், கண்களை சுருக்குவதுமாக யோசித்து பின்னர் பெருமூச்சு விட்டபடி மகனைப் பார்த்து,
“மொத்தமா விலகிக்கிறேன், உங்கம்மா சொல்ற விடுதலைக்கும் ஏற்பாடு பண்றேன், நாளைக்கே வக்கீலை பார்த்து பேசுறேன்!” முடிவாகக் கூறிவிட்டு பிரச்சனையை தற்காலிகமாக ஒதுக்கி வைக்க, பஞ்சாயத்து வைப்பதற்கே அவசியமில்லாமல் போனது.
நடப்பதை எல்லாம் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்த துர்காவிற்குள் ஏகப்பட்ட குழப்பம். பைரவியின் இளமைக்கால தவறோ, தற்போதைய பிரச்சனையோ எதுவும் சரியாகத் தெரியவில்லை. மகள் வாழாமல் இருக்கும் வருத்தம் தான் அவருக்கு இமாலயப் பிரச்சனையாகத் தெரிந்தது.
‘இந்தம்மா சின்ன வயசுல ஆகாத இழவ எல்லாம் இழுத்து விட்டுட்டு, எம் பொண்ணை துக்கிரின்னு சொல்லி ஏசுச்சா... இது எந்த ஊரு நியாயம்? என்ன குடும்பமோ இது!’
வெளியில் சொல்லிக் கொள்ள முடியாத வெறுப்பும் கோபமும் தான் தோன்றியது. குற்றமாய் பேசி ஒட்டு மொத்த குடும்பத்தையே தரம் தாழ்த்திப் பார்க்க மனம் வரவில்லை. சம்மந்தம் செய்த குடும்பம் அல்லவா!
இத்தனை துயரங்களுக்கு இடையே நாளை மருமகளை அழைத்துக்கொண்டு சென்னைக்கு புறப்பட்டாக வேண்டும். கர்ப்பிணியின் பொறுப்பை ஏற்றுக்கொண்டு அவளை தாங்கிக்கொள்ள வேண்டும்.
மனதைக் குடையும் குழப்பத்தில் மருமகளை எதுவும் பேசி அவளை மனமுடையச் செய்து விடுவோமோ என்ற புதியதொரு அச்சம் முளைத்தது.
வயிற்றுப் பிள்ளைக்காரி முகம் சுணங்கினாலும் அதன் பாதிப்பு சிறிய உயிரையும் அல்லவா பாதிக்கும்! உள்ளே இருக்கும் பேரப்பிள்ளையின் வளர்ச்சியில் குறை ஏற்றப்பட்டு விடுமோ என்ற தொலைநோக்கு குழப்பத்தில் மருமகளை தன்னுடன் அழைத்துச் செல்லும் யோசனையை அறவே ஒதுக்கி வைத்தார் துர்கா.
தன் மனதில் தோன்றிய சந்தேகங்களை, குழப்பங்களை வெளிப்படையாகச் சொல்லியே மருமகளை அழைத்துச் செல்லவில்லை என்பதையும் உடைத்தே சொன்னார். அதற்கும் ஆயிரம் நொடிப்புகளைச் சொல்லி ஒய்ந்தார் பேச்சி.
“எதுக்கு, எதை இணை கூட்டி பேசுறவ? என்னதான் காலம் மாறுனாலும் மாமியாளுங்க மனசும் அலட்டலும் மாறவே போறதில்ல போ!” என்று பைரவியையும் ஜாடையாகப் பார்த்தே பேசினார்.
“இதை நீ பேசுறியாக்கா? நீயும் உன் மருமகளும் காட்டாத பவுசையா உன் வீட்டு சம்மந்தியம்மா காமிச்சுட்டாங்க... எப்பவும் போல இன்னைக்கும் அப்பாவியா நிக்கிறது எம் பொண்ணு தான்!” பானுமதியின் நினைவில் ஆதங்கத்துடன் தமக்கையை குத்திக் காட்டினார் வேதாச்சலம். எத்தனை வயதானால் என்ன? தந்தை மகள் பாசம் விட்டுப் போய்விடுமா?
“இன்னைக்கு உன் காட்டுல மழைதான், உன்னை அடக்க ஆளில்லாம இஷ்டத்துக்கு எல்லாரையும் ஏசிட்டு இருக்க...” பேச்சியிடம் ஊரார் பலவிதமாய் இடக்காகப் பேசிவிட்டு நகன்றனர்.
துர்கா அன்றைக்கே சென்னைக்கு புறப்பட்டுச் சென்றார். ‘பிரச்சனைகள் எல்லாம் ஒய்ந்த பிறகு மறக்காமல் மகளை அழைத்துக் கொள்ளுங்கள்’ என்று ருத்ரேஷிடம் கோரிக்கை வைக்க,
“நாம கூப்பிட்டதும் வாழ வந்துட்டு தான் அவ மறு வேலை பாக்கப் போறாளா?” அந்த நிலையிலும் குதர்க்கம் பேசினார் பைரவி.
பேச்சியம்மாளை விட்டுவிட்டு மொத்தக் குடும்பமும் சென்னைக்கு கிளம்பியது. வீட்டு மாப்பிள்ளையான ஈஸ்வரிடம் அனைத்து விவரங்களையும் தெரியப்படுத்தி, மைத்ரி தற்சமயம் தங்களுடன் இருக்கட்டும் என்பதையும் சொல்லி முடித்தார் சண்முகநாதன்.
“உங்கம்மா பேசுனதும் தப்பில்ல... பொண்ணை பெத்தவனா அவங்க இடத்துல இருந்து யோசிச்சா, சரியாத்தான் இருக்கு. எனக்கும் பாப்பா பக்கத்துல இருந்தா மனசுக்கு கொஞ்சம் நல்லா இருக்கும்னு தோணுது. எங்ககூட இருக்கட்டும் மாப்ள!” கோரிக்கையாக சொல்லும்போது ஈஸ்வரால் மறுப்பு கூற முடியவில்லை.
அம்மாவின் மீதும் வெளிக்காட்ட முடியாத கோபத்தில் இருந்தான் ஈஸ்வர். மருமகளை பார்க்கத் தவறிவிட்டாய் என்று ஜாடைமாடையாக பேசி தனது வருத்தத்தை குறிப்பு காட்டினான், அவ்வளவே! மேற்கொண்டு எதுவும் சொல்லப்போனால் அது தங்கையின் வாழ்க்கைப் பிரச்சனையோடு பிணைந்து தொடர் சங்கிலியாக நீள்கிறதே என்கிற ஆயாசம் தான்!
அதனால் எப்படியோ எதாவது ஒரு விதத்தில் ஏதோ ஒரு முடிவு கிடைத்தால் சரி என்பதோடு அமைதி காத்தான். நேரில் எதையும் பார்க்காமலும் பேசாமலும் என்னவென்று கருத்து கூற முடியும்? அதனால் யார் என்ன சொன்னாலும் சரியென்று கேட்டுக் கொண்டான் ஈஸ்வர்.
மிக வேகமாக வேலைகளை ஆரம்பித்தார் சண்முகநாதன். குடும்ப வக்கீலிடம் தேவைகளைக் கூறியே எந்தவித பிரச்சனையுமின்றி அனைத்தையும் மகனிடம் ஒப்படைக்கும் வேலையில் இறங்கினார்.
“நீங்களே உங்க பொறுப்புல இருந்து விலகிக்கிறதா மனப்பூர்வமா ஒத்துகிட்டா ஈசியா உங்க மகன் பேருக்கு எல்லாம் மாத்திடலாம். ஆனா உங்க மனைவியோட விவாகரத்து, விடுதலை எல்லாம் சேர்த்து வரும்போது புரசீஜர்ஸ் இன்னும் நீண்டுகிட்டே போகும்.
தேவையில்லாத பார்மாலிட்டீஸ் எல்லாம் ஃபாலோ பண்ண வேண்டி வரும். வேண்டாத தலைவலியை ஏன் இழுத்து வச்சுக்க நினைக்கிறீங்க! இப்போதைக்கு சொத்து பிரச்னையை முடிப்போம். கொஞ்சநாள் கழிச்சு ரொம்ப அவசியமா இருந்தா மட்டும் மத்த விசயங்களை பற்றி யோசிப்போம்!” என்று ருத்ரேஷை வைத்துக்கொண்டே பேசி முடித்தார் வக்கீல்.
சண்முகநாதன் மறந்தும் கூட பைரவியுடன் பேச்சு வார்த்தையை வைத்துக் கொள்ளவில்லை. நாதன் டிரேடர்ஸ் மூலமாக தனக்கென எடுத்துக்கொண்ட சிறு லாபத்தொகையை விடுத்து மற்ற அனைத்து விதமான பொறுப்புகள் மற்றும் முதலீடு, சொத்துக்களையும் ருத்ரேஷின் பெயருக்கு மாற்றிக் கொடுத்து அங்கிருந்து மொத்தமாக விலகினார்.
அங்கே முடித்து விட்டு பானுமதியின் வீட்டிற்கு வந்தார். அந்த மனைவியின் பொறுப்பில் இருக்கும் சில்லறை வணிக கணக்குளையும் மொத்தமாக அவரிடம் ஒப்படைத்தார். பின்னர் தன் பெயரில் இருந்த சொத்துக்களை எல்லாம் மகன் மகள் பெயருக்கு சரி சமமாக எழுதி வைத்தார்.
“இப்ப என்ன நடந்து போச்சுனு மொத்தமா கணக்கு முடிக்க நினைக்கறீங்க? என்னையும் சேர்த்து ஏன் ஒதுக்க நினைக்கறீங்க? நம்ம புள்ளைக செய்ய வேண்டிய கடமை இன்னும் முடியல” ஆற்றாமையுடன் கேட்ட மனைவியிடம்
“அவனுக்கு பைரவி இருக்கா... பொண்ணுக்கு நீ இருக்க இடையில நான் இருந்து யாரை கரையேத்தப் போறேன்! ஆரம்பத்துல இருந்தே புள்ளைங்க கிட்ட ஒதுங்கியே தானே இருக்கேன்! ஊர் மெச்ச கௌரவமா வாழ்ந்து கிழிச்சது போதும்” மனதில் மூண்ட வெறுப்பை எல்லாம் விரக்தியாக இறக்கி வைத்தார்.
“இனி மிச்சமிருக்கிற வாழ்க்கைய சொந்த மண்ணுல என் ஆத்தாளுக்கு புள்ளையா வாழ்ந்து முடிக்கப் போறேன்! மூணு வேளை கஞ்சி குடிக்க விவசாய நிலம், தோட்டம் இருக்கு. என் முடிவுல மாற்றமில்ல...” என்றவர் அதே முனைப்போடு சொந்த கிராமத்தில் தனது ஜாகையை மாற்றிக் கொண்டார்.