• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode முத்தாடு முத்தாரமே... 7

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,260
Reaction score
50,190
Location
madurai
முந்தைய பதிவிற்கு லைக்ஸ் அண்ட் கமெண்ட்ஸ் கொடுத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் :love: :love: :love:

***

முத்தாரம்-7

Vacation mode on
Chaai with maams
Maith, esh with love

பல கேப்சன்களுடன் பதிவேற்றப்பட்ட ஜோடிப் புகைப்படங்கள் மைத்ரியின் சோஷியல் மீடியா பக்கங்களில் ஜோராய் வலம் வந்தன.

இருவரின் செல்ஃபி மற்றும் ரீல்ஸ்களுக்கு நண்பர்களின் லைக்ஸ் அண்ட் விஷஸ் குவிந்த வண்ணமாய் இருக்க, அவளின் மொபைல் கேலரியில் இவர்கள் மட்டுமே நிறைந்திருந்தனர். இடப்பற்றாக்குறைக்கு ஈஸ்வரின் செல்பேசியிலும் செல்ஃபிகளை நிரப்பியிருந்தாள்.

அவனுக்கோ இந்த சிறுபிள்ளை விளையாட்டுகளில் எல்லாம் அத்தனை ஈடுபாடு இல்லை. ஆனாலும் புது மனைவியின் ஆசைக்கு தடை விதிக்கவில்லை. கணவனுடன் நின்றால், நடந்தால், சிரித்தால் கூட செல்ஃபி எடுத்து ஸ்டேடஸ் போட்டுக் கொண்டே இருந்தாள்.

‘கொத்தவா, கொஞ்சவா!’ என நண்பர்கள் கூட்டம் ஜோடிப்புறாக்களை கொஞ்சி கமெண்ட் அடித்ததில், ஈஸ்வர் ஏக அவஸ்தையில் நெளிந்தான். அழுத்தமில்லாத தொலைதூரப் பயணம் இருவருக்குமிடையே இருந்த தயக்கங்களை தடுமாற்றங்களை முற்றிலுமாக அகற்றியிருந்தது.

ஈஸ்வர் கற்றுக் கொடுக்கும் அளவிற்கு இல்லாமல் மைத்ரி முன்னரே டிரைவிங் கற்று கைவசம் லைசென்சும் வைத்திருந்ததால் ஒருவர் மாற்றி ஒருவராக காரினை விரட்டி கோவில் குளங்களுக்கு சென்றுவர இலகுவாயிற்று!

தொடர்ந்து மூன்று நாட்கள் நவக்கிரக கோவில்களை தரிசித்து விட்டு, ஊர் சுற்றிப் பார்க்க பாண்டிச்சேரி பக்கம் வந்து விட்டான் ஈஸ்வர்.

மனதில் மௌனமாய் அரிப்பெடுத்துக் கொண்டிருந்த தேனிலவு ஆசையும், மனைவியின் அருகாமையும் ஈஸ்வரை பித்தனாக்கியதில், கவனத்தை ஊர் சுற்றுவதில் வைத்தால் மனம் மாறி விடுமென்று பயணத்தின் தடம் மாற்றினான். ‘பித்தம் தீர இது சரியான வழியல்ல’ என்று அவனுக்குத் தெரியவில்லை. காரணம் அனுபவமில்லை.

இத்தனை தூரம் வந்த பிறகு பாண்டிச்சேரியின் அழகும் கடற்கரையும் ஈஸ்வரின் மனதில் நங்கூரமிட்டு நின்றதில் ஆசையை நிறைவேற்றிக் கொள்ள, மனைவியிடம் கூட சொல்லாமல் ஊர் சுற்றிப் பார்க்க கிளம்பி விட்டான்

சென்னை செல்வதற்கு காரில் ஏறியதும் வண்டி ரூட் மாறி பாண்டிச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்க, மைத்ரியால் கோபத்தை கூட ஒழுங்காகக் காட்ட முடியவில்லை.

கார் செல்லும் சாலையைப் பார்த்து அமைதியாக முறைத்துக்கொண்டே வந்தாளே தவிர, ஒன்றும் சொல்லவில்லை. ஹோட்டலில் ரூம் எடுத்து சற்று ஓய்வெடுத்துக் கொண்டு மீண்டும், “பீச்சுல லாங் டிரைவ் போலாம்!” என்று கிளம்பினான்.

‘இவருக்கு டிரைவ் பண்ண அலுக்கவே அலுக்காதா? இப்பத்தானே வந்தோம்!’ மனதிற்குள் கேள்வியை உருட்டியவளின் கையில் சாவியை திணித்து,

“இப்ப நீதான் டிரைவ் பண்ணனும்!” என்றதும்,

“ஹாங்...” என்று முழித்தாள்.

“டூ ஹவர்ஸ் சுகமா தூங்கிட்டு வந்தேல்ல... இப்ப வண்டியெடு... நான் பீச் சுத்திப் பாக்கணும்”

“அதுக்கு நடந்து போகணும் மாமா!”

“ஷ்ஷு... சொன்னதைச் செய்!” கணவனின் கறாரில், மறுபேச்சின்றி கடமையே கண்ணானாள்.

அதே பிள்ளைக் கோபம், ஆனால் செயலில் வேகமாக காரினை தனது விருப்பத்திற்கு விரட்டிக் கொண்டிருந்தாள் மைத்ரி.

“மெதுவா போ குட்டி... ரிலாக்ஸ் ரைட்டுக்கு ஏன் பறக்கற?” ஈஸ்வரின் எச்சரிக்கையை எல்லாம் தூசியாக தட்டிவிட்டு அதே வேகத்தில் தொடர,

“கோபத்தை டிரைவிங்ல காட்டக்கூடாதுடி!” அவளை அறிந்து கொண்டவனாகச் சிரித்தான்.

“உங்க மேல எப்படி காமிக்கிறதுனு தெரியல மாமா?” அப்பாவியாக முகம் சுருக்க,

“அடி அப்புராணி... என்னை என்னமும் செஞ்சுக்கோன்னு ஊரையே கூட்டி வச்சு உனக்குதானேடி பட்டா போட்டு குடுத்துருக்கு... நீ என்ன இப்படி கேட்டுபுட்ட?” பேச்சி பாட்டியைப் போலவே தாடையில் கைவைத்து அங்கலாய்க்க, அவன் பாவனையில் கோபம் மறந்து சிரித்தாள்.

“ரூமுக்கு போனதும் அப்பத்தா ரசிகருக்கு ரீல்ஸ் போடணும், ஞாபகப்படுத்துங்க மாமா...”

“வேணாம்டி செல்லம்... எனக்கு லண்டன் ஃபேன்ஸ் போதும்... உள்ளூர் ஃபேன்ஸ் சிக்கல்ல மாட்ட வைக்குறாங்க!”

“உள்ளூரு ஆட்டக்காரங்களை ஈஸியா நினைச்சா அப்படித்தான்...” மைத்ரி கெத்து காண்பிக்க,

“என்னை டோட்டலா டேமேஜ் பண்ற வேலையை மட்டுமே சின்சியரா பண்ணிட்டு இருக்க... பாக்கத்தான்டி நீ பசு... எப்பேற்பட்ட அராத்துன்னு எனக்குத் தானே தெரியும்!” என்று சுகமாய் அலுத்துக் கொண்டான்.

“கோவிலுக்கு போயிட்டு நேரா வீட்டுக்கு வர்றதுதான் நல்லதுன்னு, வீட்டுல சொல்லித் தானே அனுப்புனாங்க! அப்பத்தான் சாமி நம்ம கூட வீட்டுக்கு வரும்.” குறைபாட்டில் இவளின் சின்னக்கோபமும் புரிய, சரியென ஒத்துக் கொண்டால் கணவனின் கௌரவம் என்னாவது?

“இவ்வளவு தூரம் வந்துட்டு, ஊர் சுத்திப் பார்த்து, ஹனிமூன் செலிபிரேட் பண்ணலைன்னாலும் சாமி கோவிச்சுக்கும் குட்டி!”

“ஹப்பா... என்ன வாய்! எல்லாத்துக்கும் பதில் பேசுறீங்க மாமா... எப்படித்தான் சின்னதுல உங்களை அத்தை சமாளிச்சாங்களோ?”

“நான்தான்டி உங்க அத்தையை சாமளிச்சேன்! அவங்ககிட்ட எடுத்த டிரைனிங் தான் ஏதோ கொஞ்சமா உன்கிட்ட வாய் பேச வைக்குது!” அசராமல் பதிலுக்குபதில் பேசி இருவருமே கலாய்த்துக் கொண்டனர்.

“என் ஆசைக்கு மூனே மூனு நாள் இங்கே அட்ஜஸ்ட் பண்ணிக்கோ குட்டி... அப்புறம் உனக்காக எத்தனை நாள்னாலும் எங்கேனாலும் ஊர் சுத்தலாம், சரியா?”

“உங்க இஷ்டம் தான் மாமா... எனக்காக பாக்க வேணாம்!”

“இப்படி ஜால்ரா தட்டியே மனுசனுக்கு கடுப்பேத்தி விடுற!”

“உங்க ஆசைப்படியே நடக்கட்டும்னு சொல்றேன், அது தப்பா?

“இங்கே காரை நிறுத்திட்டு, பொடிநடையா நடந்தே ஊருக்கும் போகணும்னு எனக்கு ஆசை. அதுக்கும் சரின்னு சொல்வியா? நான் எதாவது மாத்தி யோசிச்சாலும், உன் மனசுக்கு சரின்னு பட்டதை என்கிட்டே சொல்ல மாட்டியா? என்ன பொண்டாட்டி நீ? புருஷனை அதட்டி, உருட்டி, மிரட்டி உன் துப்பாட்டாக்குள்ள முடிஞ்சுக்க தெரியல...” அநியாயத்திற்கு நல்லவனாக மனைவியை சீண்டிக்கொண்டே வந்தான்

“வீட்டுல பெர்மிஷன் கேக்காம வந்துட்டோம்னு பயந்துட்டு மிட்நைட்ல முழிச்சு அம்மா வேணும், அப்பா வேணும்னு அழுது அடம்பிடிக்கக் கூடாதுடி கொழந்தே...” வீட்டில் இவளைக் கொஞ்சுவதைப் போலவே ஈஸ்வர் பேசிக்காட்ட மைத்ரிக்கு அவஸ்தையாகிப் போனது.

“நீங்களுமா மாமா? இப்படி கூப்பிடாதீங்கன்னு எத்தனை தடவ சொன்னாலும் யாரும் கேக்கறதில்ல...எனக்கும் ட்வென்டி ஒன் ஸ்டார்ட் ஆகிடுச்சு!” சிணுங்கலோடு முகம் சுருக்க,

“ஹப்பாடி... வயசுப் பொண்ணுன்றதுல தெளிவாத் தான் இருக்க... உன்கூட குப்பை கொட்டலாம்னு எனக்கும் இப்ப நம்பிக்கை வந்துடுச்சு!” வாரிவிட்டு செல்ல அடிகளை பெற்றுக் கொண்டான்.

“அநியாயம் பண்றீங்க... இவ்வளவு சேட்டையை உங்ககிட்ட இருந்து எதிர்பார்க்கல!”

“நீ இவ்வளவு பேசுவன்னு நானும் எதிர்ப்பார்க்கல... வேற எங்கேயும் போவோமா, சொல்லுடா?”

“போகணும்னு ஆசைதான்... ஆனா உங்களுக்கு வீட்டுல இருக்கறது தானே பிடிக்கும்.”

“குட் கேர்ள்... இந்த ரெண்டு வாரத்துலயே என்னை நல்லா புரிஞ்சு வைச்சுருக்க குட்டி... அதுக்காக உன் விருப்பத்துக்கு தடா போடமாட்டேன்!”

“சொர்க்கமே என்றாலும் நம்ம வீடு போல வருமானு வாய் ஓயாம எசப்பாட்டுல்ல பாடுறீங்க... புரியாம இருக்குமா?”

“என்ன புரிஞ்சு, என்ன புண்ணியம்? இன்னும் சின்னப் பொண்ணாவே இருக்கியே தங்கம்... உன் மாமன் ஆசைமனசு புரியலையா?” என்றதும் நாணிக்கோணி தழைந்து போனாள்

“போங்க மாமா... நிமிசத்துல கெட்ட பார்வை பாக்கறீங்க!” என்றவளுக்கு கணவனின் ஆசைப்பார்வை புரியாமல் இல்லை.

தொட்டும் தொடாமலும் சீண்டிக் கொண்டே வந்தாலும் கோவில், புனிதம் என்று ஓரளவிற்கு மேல் எல்லை தாண்ட முடியவில்லை. திருநள்ளாறை தாண்டிய உடனே தனது சேட்டைகளைத் தொடங்கி விட்டான்.

மனைவியின் தோளில் கை போட்டு இழுக்க, கன்னம் கிள்ள, பறக்கும் முத்தம் கொடுக்க என பல சில்மிஷங்களை அரங்கேற்றியும் பெண்முகம் நாணச் சிவப்போடு முறைப்பையும் பரிசாக அளித்தது.

“நானும் எத்தனை நாளைக்கு தான் நல்லவனா இருக்கறது? முடியலடி...” கணவனின் ஏக்கப் பார்வையை அறிந்தும் அமைதியாகத் தொடர்ந்தாள்.

தானாக முன்னெடுத்து வைக்க அவனுக்கு தயக்கம். வெட்கம் துறந்து ஆசையைச் சொல்ல இவளுக்கும் நடுக்கம்! ‘அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்றே சொல்லி வளர்க்கப்பட்டவள் தயங்கி நிற்பதிலும் தவறில்லையே! ஆனால் இவருக்கு என்ன... ஆண்மகனுக்கும் இத்தனை தடுமாற்றமா?’ பலமுறை மனதிற்குள் எழுந்த கேள்வியை கணவனிடம் கேட்கவும் அவளுக்குத் தயக்கம் மேலிட்டது.

நுரை பொங்கிவரும் கடலலையை ரசித்தபடி கடற்கரை மணலில் இருவரும் அமர்ந்திருக்க, சுழன்றடித்த காற்று சுகமாய் தள்ளாட வைத்தது. வீசும் காற்றில் பறந்த முடிகளை அடக்க அவள் சிரமப்பட்ட போது உதவிக்கு வந்தான். காதோரம் கூந்தலை ஒதுக்கியவனின் பார்வை நெற்றி வகிட்டு குங்குமத்தில் நிலைத்து ஆண்மனதை பித்தம் கொள்ள வைத்தது.

“சில பேருக்கு மட்டும் நெற்றி வகிட்டுக் குங்குமம் ரொம்ப அழகா பொருந்திப் போகுது” என்றவன் ஆசை மிகுதியில் அங்கே முத்தம் கொடுக்க, கன்னமும் போட்டிக்கு நின்றது.

“அச்சோ, வெட்ட வெளியில மாமா...” வெட்கத்தில் சிவந்தவளின் பேச்சைத் தொடர விடாமல், கன்னம், மூக்கு என முத்த ஒத்தடத்தை தொடர்ந்தான்.

“ஃபர்ஸ்ட் டைம் ஃபோட்டோல பாக்கறப்ப கூட நீ இவ்வளவு அழகா இல்லடா குட்டி! ஆனா இப்ப... எப்படி சொல்றது? சோ கார்ஜியஸ்!” காதல்மொழி பேசுவதாக நினைத்து, தனக்குத்தானே ஆப்பு வைத்துக் கொண்டவன், நெற்றிக் குங்குமத்தின் மீது மீண்டும் முத்தம் வைக்க, குங்கும நிறம் அவன் உதட்டிலும் ஒட்டிக்கொண்டது.

“மாமா, உங்க லிப்ஸ்ல குங்குமம் ஒட்டிருச்சு...” கிளுக்கிச் சிரித்து வேகமாகச் சொன்னவள், துடைப்பதற்கு கையை தூக்கிய நேரத்தில் சட்டென்று பின்வாங்கினாள்.

“என்ன சொன்னீங்க? முதல் தடவ பாக்கும்போது நான் அவ்வளவு அழகில்லையா? அப்ப பிடிக்காம தான் என்னைக் கல்யாணம் பண்ணீங்களா?” முசுக்கென்று கோபம் முந்திக்கொண்டு வர, அதையும் ரசித்தான்.

“லண்டன் ஃபிகருங்கள பக்கத்துல வச்சுகிட்டு, இந்த நாட்டுக்கட்டைக்கு ஓகே சொல்ல நான் பட்ட பாடு இருக்கே...” போலியாய் நீட்டி முழக்க,

“என்னது, லண்டன் ஃபிகருங்களா?” கோபத்தில் பல்லைக் கடித்தாள்.

“உன் மாமனுக்கு லண்டன்ல ஏக கிராக்கி!” கெத்தாக டி-ஷர்ட் காலரை தூக்கி விட்டுக் கொள்ள,

“ஒஹ்... லண்டன் பிகருங்களை ஓரம் கட்டிட்டு தான் எனக்கு வாழ்க்கை குடுத்தீங்களா ராசா... என் துயரம் உனக்கு ஏன் ஈஸ்வரா? போங்க... போயி உங்க லம்பாடி ஃபிகர்ஸ் கூடயே ஹனிமூன் கொண்டாடுங்க...” சண்டைக்கோழியாக சிலிர்த்து அதே வேகத்துடன் எழுந்து காரினை நோக்கி நடந்தாள்.

“ஹேய் குட்டி, நில்லுடி!”

“மைத்தி!”

“கொழந்த...” பின்தொடர்ந்த அவனது அழைப்புகளை எல்லாம், ‘கேட்காது’ என்ற பாவனையில் நடந்தாள்.

“அந்தளவுக்கு நான் பிடிக்காதவளா இருக்கறதால தான் இங்கே வர்றதுக்கும் ஒரு வார்த்தை என்கிட்ட கேக்கத் தோனலல்ல...” மூக்கு சிவந்த கோபத்துடன் நடையை எட்டிப் போட,

“கடவுளே... எதுக்கும் எதுக்கும் இவ முடிச்சை போடுறா?” மானசீகமாய் தலையிலடித்துக் கொண்டு பின்தொடர்ந்தான்.

மைத்ரியின் மனதிற்குள் அத்தனை கடுகடுப்பு புயலாய் மையமிட்டது! “மொத தடவ பார்த்தப்ப அவ்வளவு அழகில்லையாமே நானு... அப்புறம் என்னத்துக்கு கல்யாணம் கட்டுனாராம்? குட்டி, கொழந்தன்னு ஒரு நாளைக்கு ஓராயிரம் தடவ கெஞ்சுறது, கொஞ்சுறது வேற... எல்லாம் நடிப்பு!” சிடுசிடுப்பு குறையாமல் காரின் முன்சீட்டில் உட்கார்ந்து கொண்டாள்.

“ஏய்... நீதான் டிரைவ் பண்ணனும்னு சொன்னேனா, மறந்தாச்சா?” இவன் நினைவூட்ட,

“எனக்கு டயர்ட்டா இருக்கு, உங்களுக்கு தான் டிரைவ் பண்ண அலுக்காதே... வந்து காரெடுங்க!” மீறமுடியாத குரலில் உத்தரவிட,

“இது நம்ம லிஸ்டுலயே இல்லையே.... இப்ப என்ன சொல்லிட்டேன்னு உனக்கு கோபம்?” கேட்டபடி டிரைவர் சீட்டில் அமர்ந்தான்.

“பிடிக்காம கட்டுனேன்னு சொல்லிட்டு கேள்வி வேறயா?” கண்கள் சிவந்து, பல்லிடுக்கில் அரைபட்டு வார்த்தைகள் வெளிப்பட்டன.

மனைவியின் இந்த பாவனை சற்றே கலக்கம் கொள்ள வைத்தது. இவன் விளையாட்டாகச் சொன்னது, இப்படியொரு வினைப்பயனைத் தருமென்று தெரிந்திருந்தால், ‘குட்டியே சரணம்’ என்று பாமாலை பாடியிருப்பான்.

‘என்னென்னமோ பிளான் பண்ணேன்... சொதப்பிட்டியே ஈஸ்வரா! ரொமான்ஸ்கும் உனக்கும் சம்மந்தமே இல்லடா கருவாப்பயலே...’ தன்னைத்தானே திட்டிக்கொண்டு நொந்து போனான்.

ஐந்து நிமிட அமைதியில் ஐம்பது முறை மனைவியின் முறைப்பினை பரிசாய் வாங்கியிருப்பான். ‘கட்டம் சரியில்லடா பேமானி!’ சந்தடிச் சாக்கில் மனசாட்சியும் காறித் துப்பியது.

‘சும்மா இரு... எப்படி பேச வைக்கிறேன்னு மட்டும் பாரு!’ மனசாட்சியிடம் மல்லுக்கு நின்றவன், குரலை தழைத்துக் கொண்டான்.

“என்னடி, நீ இவ்வளவு மக்கு பொண்ணா இருக்க? உன் மொபைல்ல இருக்கற உன்னோட பிஎம், ஏஎம் போட்டோஸ் உத்து பாரு... உனக்கே புரியும்” அவசரத்தில் வாயில் வந்ததை உளறி அவளை யோசிக்க வைத்தான். முறைப்பு குறையணும்ல சாமி!

“அதென்ன பிஎம், ஏஎம் போட்டோ... எனக்கே தெரியாம?” அவள் புருவத்தை நெறிக்க,

“அது வந்து, பிஃபோர் மேரேஜ், ஆஃப்டர் மேரேஜ் போட்டோ... ஹிஹி...” அசட்டு விளக்கம் கொடுக்க, உஷ்ணப் பெருமூச்சு விட்டாள்.

“நல்லா பாரு குட்டி.... நான் சொல்றது உனக்கே புரியும்!” என்று மொபலைக் கூட அவளது கைகளில் திணித்தான். அவசரக்காரி கேட்டால் தானே!

‘அழகில்லை, பிடித்தமில்லை என சொல்லி விட்டானே!’ என்ற வீம்புக் கோபமும், ‘தாலி கட்டிய கடமைக்காக என்னுடன் வாழத் தயாராகி விட்டானோ!’ மனதின் ஆதங்கமும் சேர்ந்து, கணவன் பேச்சை கேட்கவே கூடாதென அவளை ஆட்டிப் படைத்தது. அறைக்குள் வந்தும் சண்டையை கொண்டாடிக் கொண்டிருந்தாள்.

இரவு உணவை அறைக்கே வரவழைத்தான் ஈஸ்வர். இருவருமே மல்லுக்கு நின்று சீண்டுவார் இல்லாமல் காயத் தொடங்கியது உணவு. பொறுமை தொலைந்து போனதில் கோபத்தை கட்டுப்படுத்த அறையின் பால்கனியில் தஞ்சமடைந்தான்.
 
Sindhu siva

மண்டலாதிபதி
Joined
May 10, 2023
Messages
143
Reaction score
117
Location
Trichy
ஈஸ்வருக்கு வாயில வாஸ்து சரி இல்ல 😂
 
Advertisements

Latest Episodes

Advertisements

Top