• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

முன்னோட்டம் 02

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anamika 78

நாட்டாமை
Author
Joined
Nov 15, 2021
Messages
32
Reaction score
39
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...

சென்ற பதிவுக்கு கருத்துக்களை பகிர்ந்த அனைவருக்கும் நன்றி. அஃப்கோர்ஸ்... இது ஆண்டி ஹீரோ திருவிழா இல்லையா? எல்லா ஹீரோ/ஹீரோயின்ஸையும் பார்த்திருப்பீங்க. சோ, இது மாற்றத்திற்கான முன்னோட்டம்.

முன்னோட்டம் 02:


பரந்து விரிந்திருந்த கடலுக்கு முன்னே தன் கால்களை நீட்டி அமர்ந்திருந்தான் அவன். அந்த கடலை விட ஆழமான அவன் காதலை அனுபவிப்பவள் அவன் தோளோடு தலை சாய்த்து அமர்ந்திருக்கிறாள்.
இருவருக்குள்ளும் இருக்கும் காதல் அதன் கரைகளை உடைக்க நேரம் பார்த்துக்கொண்டிருந்தன, அவர்கள் எதிரே ஆர்ப்பரிக்கும் அலைகளைப் போல.
எவ்வளவு நேரம் தான் தூர இருந்தே ரசிப்பது என்று நினைத்தவர்கள், கடலின் அருகே சென்று அதன் மடியில் தஞ்சமடைந்தனர், உன்னுடன் சிறிது விளையாடுகிறோம் என்று.
விளையாட்டில் அலைகளும் பங்கு கொள்ள எண்ணியதோ என்னவோ! எங்கிருந்தோ வந்தது அந்த ராட்சத அலை ஆடவனை விட்டு அவளை மட்டும் அள்ளிச் செல்ல, துவண்டு போனான் அவன்.
போர்வையின் பின்னே ஒளிந்திருக்கும் தாயை தேடும் குழந்தையைப் போல அவளும் கடலை போர்வையாக்கிக் கொண்டாளோ என்று அதனை விலக்கி விலக்கி தேடிக்கொண்டிருந்தான் அவன்.
சட்டென்று காட்சி மாறுகிறது. விடியல், அவனுக்கு மட்டும் விடியலல்ல. அவன் எங்கிருந்தோ ஓடிவருகிறான். கரையோரம் ஒரு குவியல். அதனருகில் சென்று பார்க்கும் போதுதான் தெரிகிறது, அவன் உயிரானவள் உயிரற்று கிடக்கிறாள் என்று.
அவளை மடியேந்திக்கொண்டு எழுப்ப முயலுகிறான், அனைத்தும் முயற்சியாகவே நின்று போயிற்று.
சிறிது சிறிதாக அவனுக்கு தெரிகிறது, தன் எல்லாமுமானவள் இப்போது இங்கில்லை என்று.

*****
“குட்டிம்மா!!!” என்று அவன் பதறியடித்து எழுந்து பார்க்க, அவன் அருகில் அவன் குட்டிம்மா. நிற்சலனமாக உறங்கிகிறாள்; மருந்தின் வேலை.
கண்ட கனவு அவனை கலவரப்படுத்த, தூங்க மனதில்லாமல் தன்னெதிரே இருப்பவளையே பார்த்திருந்தான் அவன்.
 




Shasmi

அமைச்சர்
Joined
Jul 31, 2018
Messages
1,229
Reaction score
1,456
Location
USA
இன்றோ செம்ம, வாழ்த்துக்கள் ரைட்டர் ஜீ 💐💐💐💐
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top