• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

முள்ளோடு முத்தாட வா....அத்தியாயம்-1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anamika 47

அமைச்சர்
Author
Joined
Nov 5, 2021
Messages
1,414
Reaction score
3,158
புலியின் குகைக்குள் புள்ளி மானிற்கு என்ன வேலையோ?!
😉😉😉
புள்ளி மானும் தன் தோலை கழற்றினால் பெண் புலியாய் சீறுமே 😍
 




Nirmala senthilkumar

அமைச்சர்
Joined
Jan 25, 2022
Messages
2,532
Reaction score
6,742
Location
Salem
முள்ளோடு முத்தாட வா...

அத்தியாயம் - 1

View attachment 31832


அம்மா....... மா.....என்ற பெரும் சத்தமும், அதனைத் தொடர்ந்து சாமான்கள் தூக்கி வீசப்படும் பேரிரைச்சலையும் கேட்டபடி மாடிப்படியில் கைகளைப் பிசைந்தபடி நின்று கொண்டிருந்தார் அபிராமி.

கால்களை முன்வைப்பதும், பின் வைப்பதுமாய் பெரும் மனப் போராட்டத்தில் இருந்தார்.

தன் மனைவி படும்பாட்டை ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்தவாறு பார்த்துக் கொண்டிருந்த சுந்தரேச பாண்டியன் நிதானமாக எழுந்து வந்து,

அபிராமியின் கரம்பிடித்து, "அபி, கொஞ்சநேரம் விட்டுட்டா அவனே சரியாகிவிடுவான். நீ அவனை டென்ஷன் பண்ணாத! ", என்றார்.

விழி வழி வழிந்த வலிகளை அடக்கியபடி, "இல்லைங்க, இன்னும் அவன் மருந்து எடுத்துக்கல... நம்மையும் பக்கத்துல விடமாட்டான்.

நர்சு வந்தாலும் துரத்தி விடுகிறான். இதோட பத்து நர்ஸ் மாத்தியாச்சு. எல்லாரும் ஹாஸ்பிடல்ல வெச்சு பார்க்க சொல்றாங்க.

பெத்த மனசு கேட்கலைங்க. கோடி கோடியா சேர்த்து வச்ச சொத்துக்கு ஒரே வாரிசு. எப்படி இருந்தவன்?", அதற்குமேல் அடக்கமாட்டாமல் வெடித்து அழ ஆரம்பித்தார் அபிராமி.

"கவலைப்படாத அபிராமி, நம்ம டாக்டர் அறிவழகன் கிட்ட உடனடியா நர்ஸ் வேணும் என்று சொல்லிருக்கேன்.

பொறுமையா, பொறுப்பா பார்த்துக்கிற ஆளா பார்க்க சொல்லி இருக்கேன். இதுவும் கடந்து போகும், அபிராமி! நமக்கு நம் மகன் திரும்பக் கிடைப்பான்", தன் மனைவிக்கு ஆறுதல் கூறிக்கொண்டே தனக்கும் ஆறுதல் சொல்லிக்கொண்டார்
சுந்தரேச பாண்டியன். தொழில் உலகில் முடிசூடா மன்னன். பாண்டியன் குரூப்ஸ் கம்பெனிகளின் நிர்வாகி. தமிழ்நாட்டின் சிறந்த தொழிலதிபர்.

நேரம் செல்லச் செல்ல மாடியில் சத்தம் குறைந்து நிசப்தம் நிறைந்தது. அபிராமி கையில் உணவுத் தட்டுடன் மெல்ல மாடி அறை நோக்கிச் சென்றார்.

தன் மகனின் அறையை திறந்தவுடன், சில்லென்ற ஏசி காற்று முகத்தில் வீசி அறைந்தது. தயக்கத்துடன் அறைக்குள் நுழைந்தார்.

காரிருள் கவிழ்ந்தது போல் இருந்த அந்த அறையின் திரைச்சீலைகளை விலக்கினார்.

சூரியனின் பொன் கதிர்கள் கட்டிலில் படுத்திருந்த அந்த ஆறடிச் சிலையின் மேல் விழுந்தது.

முகம் மறைத்த தாடியுடன், கருவளையம் சூழ்ந்த களையுடன், திடகாத்திரமான வெற்று மார்புடன், கை முஷ்டிகள் இறுக்கி மூடிய படி, கலைந்த படுக்கையில், சிதைந்த ஓவியமாய் அவன். அர்ஜூன்!

அபிராமி படுக்கையின் அருகில் நெருங்கி வந்து, அவன் தலையைக் கோதி, "அஜுமா" என்று அழைக்க,
மூடிய இமைகள் விருட்டென திறக்க, பழிதீர்க்க விழிகள் பளிங்கு போல் ஜொலிக்க, ஆத்திரத்தில் அபிராமியின் கையிலிருந்த உணவுத்தட்டு பறக்க, "என் முன்னாடி யாரும் கஷ்டப்பட்டு நடிக்க வேண்டாம். எனக்கு யாரும் வேண்டாம். என் முன்னாடி வராதீங்க,போங்க வெளியில" என்றான் அர்ஜுன்.

"அர்ஜுன் அம்மாவை அப்படி சொல்லாதடா. என் பக்கம் இருந்து நான் என்ன சொல்ல வரேன்னு கொஞ்சம் கேளுடா. நீ எனக்கு குடுக்குற தண்டனை ரொம்ப பெருசுடா. அர்ஜுன் ப்ளீஸ்....." என்று கண் கலங்கினார்.

அர்ஜுனின் இதழ்கள் கேலியாய் இகழ்ச்சியாய் வளைந்தது. "ஆஹான்! அப்படியா, ரொம்ப தப்பாச்சே, ஏற்றிய புருவங்கள் எழிலாய் கீழிறங்க, மிஸஸ் பாண்டியன் நீங்களும் தானே என் முதுகில் குத்துனீங்க. அதை எந்தக் கணக்கில் சேர்க்கிறது", கோணலாய் தலையாட்டிக் கொண்டே கேட்டான் அர்ஜுன்.

"அது... அது....உன் நல்லதுக்காகத்தான் அர்ஜுன்", குரல் நடுங்கிக்கொண்டே தன்னை ஒப்புக் கொடுத்தார் அபிராமி. "எல்லாத்துக்கும் ஒரு காரணம் இருக்குடா என்ன புரிஞ்சிக்கோடா அர்ஜுன்".

"ஸ்டாப் இட்.... உங்களுடைய எந்தக் காரணமும் எனக்குத் தேவையில்லை. ஏன் நீங்களே எனக்கு தேவையில்லை" என்றான்.

ஆத்திர மிகுதியால் அருகில் இருந்த மது பாட்டிலை எடுத்து அருந்தத் தொடங்கினான் அர்ஜுன்.

எரியும் அவன் நெஞ்சத்தை அது நெருப்பாய் நெரித்தது. இழந்தவை எல்லாம் இடியாய் இறங்கியது.

சுழற்றிய கண்கள் சுவற்றின் பக்கம் வந்து நின்றது. வெற்றிக் கோப்பையுடன் சிரித்தபடி அர்ஜுன் புகைப்படத்தில். விரக்தி மிகுந்த புன்னகையை சுமந்த இதழ்கள் நொடியில் வன்மாய் புன்னகைக்க, ராக்கெட் வேகத்தில் மதுபாட்டில் போட்டோவை தாக்கியது.

அறையிலிருந்து வெளியேறிய அபிராமி, பூஜை அறைக்குச் சென்று தஞ்சம் அடைந்தார். விதியின் சதிராட்டத்திற்கு விடை சொல்பவர் யாரோ?

சுந்தரேச பாண்டியனின் காரியதரிசி வாசுதேவன், "சார்" என்று அழைக்க, சற்றே திரும்பி என்ன என்பதுபோல் பார்த்தார் பாண்டியன்.

வாசுவோ, "சார் இன்னைக்கும் பிரஸ் பீப்பிள் நம்ம வீட்டு முன்னாடி நிற்கிறார்கள். என்ன சொல்லனும்னு நீங்க சொல்லிட்டீங்கனா, நான் அப்படியே சொல்லிடுவேன்", என்றார்.

சுந்தரேச பாண்டியனோ சேர்த்துவைத்த பெருமூச்சை இழுத்து விட்டவாறே, "அர்ஜுன் சார் ரெஸ்ட் எடுத்துட்டு இருக்காருன்னு சொல்லிடுங்க. கூடிய விரைவில் பேட்டி கொடுப்பார் என்று சொல்லிடுங்க ", என்றார்.

"இதையே நாம் ஆறுமாசம் சொல்லிட்டு இருக்கோம் சார். வேற...", என்று இழுத்தார் வாசுதேவன். சுந்தரேச பாண்டியன் முறைத்த முறைப்பில் சற்றே பின் வாங்கினார்.

மருத்துவமனையில் டாக்டர் அறிவழகன் முன் கையை கட்டிக் கொண்டு அவரையே பார்த்து நின்றாள் பாரதி.

டாக்டர் அறிவழகனோ "நல்லா யோசிச்சுக்கோ பாரதி, நீ முடிவா அந்த வீட்டுக்கு போய்த்தான் ஆகணுமா? இதை ஏன் சொல்றேன்னா இதுக்கு முன்னாடி போய் வந்த நர்சுகளோட அனுபவம் அப்படி", என்றார் .

"ஆமாம் அங்கிள் எனக்காக நீங்க இந்த உதவிய செஞ்சுதான் ஆகணும். இதுல ஏன் நான் இவ்வளவு ஆர்வமா இருக்கேன்னு உங்களுக்கே தெரிஞ்சிருக்கும்", கண் கலங்கியபடி கேட்ட பாரதியை வியப்பாய் பார்த்திருந்தார் டாக்டர் அறிவழகன்.

"ஓகே. நீ இவ்வளவு துணிந்து நின்னதுக்கு அப்புறமும் நான் சரி சொல்லலைன்னா அது அவ்வளவு நல்லா இருக்காது. நீ ஒரு டாக்டர் ஆனா நர்ஸ் மாதிரி போறேன்னு சொல்றியே பாரதி, அதுதான் கொஞ்சம் யோசனை எனக்கு", என்றார் .

"இல்லை அங்கிள். டாக்டர் மாதிரினா விசிட்டிங் ஹவர்ஸ் மட்டும்தான் போற மாதிரி இருக்கும். அதுவே நர்ஸா இருந்தா பார்த்துட்டே இருக்கலாம் இல்லை " என்றாள் .

"புலிக் குகைக்குள் ஒரு புள்ளி மானை அனுப்ப இப்பவும் எனக்கு பயம் தான் பாரதி.

சுந்தரேச பாண்டியனும் அபிராமியும் உன்னை நல்லா பார்த்துக்குவாங்க. ஆனா அர்ஜுன்? நீ கொஞ்சம் கவனமா நடந்துக்கணும் பாரதி. அதுவும் அந்த அர்ஜுன் ஒரு ஆள் மயக்கி" என்றார்.

ஹா ஹா ஹா ஹா...... சத்தமிட்டு நகைத்தாள் பாரதி. விதியும் சேர்ந்து சிரித்தது.
Nirmala vandhachu 😍😍😍
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top