• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

முள்ளோடு முத்தாட வா... அத்தியாயம் - 19

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Vasaki

அமைச்சர்
Joined
Apr 20, 2021
Messages
1,541
Reaction score
2,998
Location
Chennai
ஆணையிடும் அரிமாவா, இல்லை
அடம்பிடிக்கும் மாயக் கண்ணனா?
யாரும்மா இந்த அர்ஜுன்?
@Anamika 47 ☺☺☺
 




Anamika 47

அமைச்சர்
Author
Joined
Nov 5, 2021
Messages
1,414
Reaction score
3,158
ஆணையிடும் அரிமாவா, இல்லை
அடம்பிடிக்கும் மாயக் கண்ணனா?
யாரும்மா இந்த அர்ஜுன்?
@Anamika 47 ☺☺☺
கண்ணம்மாவின் காதலன்.
சம்யுக்தாவின் சாம்ராட் 😁
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
முள்ளோடு முத்தாட வா...

அத்தியாயம் - 19

View attachment 32303

“அர்ஜுன்... “ என்ற அதிரடி அழைப்பில், அர்ஜுனும் பாரதியும் திரும்பினர்.

கண்களில் ரௌத்திரம் மிக அர்ஜூனை நோக்கி வேக நடையுடன் வந்து கொண்டிருந்தார் சுந்தரேச பாண்டியன். அவரின் வேக நடைக்கு ஈடு கொடுக்க முடியாமல் அவரை பின்தொடர்ந்தார் அவரின் தர்மபத்தினி அபிராமி.

தன் கைகளில் இருந்த செய்தித்தாள்களை நீட்டி, “இதற்கு என்ன அர்த்தம் அர்ஜுன்?

பாரதியின் வாழ்க்கையை இப்படி சந்தி சிரிக்க வைத்து விட்டாயே!

உன்னை பெற்றதற்கு நாங்கள் அனுபவிப்பது பத்தாது என்று பாரதியும் அனுபவிக்க வேண்டுமா?

பெண் பாவம் பொல்லாதது அர்ஜுன். நீ விதைத்த வினையை நீதான் அறுவடை செய்ய வேண்டும்.

முடங்கிக் கிடந்த உன்னை மீட்டெடுத்ததற்கு நீ தரும் பரிசு இதுதானா?

பாரதிக்கு நீ நீதி சொல்லித்தான் ஆக வேண்டும் அர்ஜூன்” என்று கொந்தளித்தார்.

தன் கைகளில் இல்லாத தூசியைத் தட்டி விட்டவாறு,
“மிஸ்டர் பாண்டியன் சத்தம் கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கே....

என் முன்னே யாரும் கை நீட்டிப் பேசுவது எனக்குப் பிடிக்காது அது நீங்களாக இருந்தாலும்.

பெற்ற பிள்ளையை வளர்க்கும் வயதில் ஒழுங்காக வளர்க்காமல், கைமீறிச் சென்றபிறகு கண்டிக்க வந்திருக்கிறீர்கள்.

எனது விருப்பம். எனது வாழ்க்கை. நீங்கள் கொஞ்சம் ஒதுங்கிக் கொள்கிறீர்களா?

இந்த விஷயத்தில் உங்கள் ஒய்ஃப் ஒரு ஜென்டில்வுமன். ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை. ம்.... இல்லையில்லை.... கேட்கமுடியாது” என்று தன் தாயைப் பார்த்து நக்கலான சிரிப்பினை உதிர்த்தான்.

அபிராமியின் மனம் கலங்கித் தவித்தது. தன் மகனுடன் மல்லுக் கட்ட முடியாத சுந்தரேச பாண்டியனோ பாரதியைப் பார்த்து,

“பாரதி இதை நீ என்னிடம் அப்பொழுதே கூறியிருந்தால் இவ்வளவு அனர்த்தங்கள் நடந்து இருக்காதே.

செய்தித்தாள்களில் வந்திருக்காதே. உன்னிடம் என்ன கூறி சமாதானப்படுத்துவது என்று எங்கள் இருவருக்கும் தெரியவில்லை பாரதி.

உன் பாதுகாப்பிற்கு நான் பொறுப்பு என்று கூறிய என் வீட்டிலேயே இவ்வளவு நடந்திருக்கிறது.

பெற்ற மகனின் பாவத்தில் பங்கேற்க, நீ என்ன தண்டனை கூறினாலும் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் அம்மா” என்று கண் கலங்கினார்.

தன் தந்தையைப் போன்ற ஒரு நல்ல மனிதர் தன்னிடம் இறங்கி பேசுவதைக் கண்டதும் பாரதி, “அங்கிள் தெரியாமல் செய்தால் மறந்துவிடலாம், அறியாமல் செய்தால் அழித்துவிடலாம். தெரிந்தே செய்த தவறுக்கு என்ன நான் செய்வது?

ஆனால் அர்ஜுன் என்னை கீழே தள்ளிப் புதைத்த இடத்தில், மரமாய் எழுந்து அனைவரும் தலை நிமிர்ந்து பார்க்க நிற்பேன். இது நிச்சயம்” என்றாள்.

அவளின் தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் பார்த்து மெய்சிலிர்த்த சுந்தரேச பாண்டியன், பதில் உரைக்கத் தோணாது தன் இரு கைகளையும் கூப்பினார்.

“அச்சச்சோ... என்ன அங்கிள் இது. எந்த அஸ்திரத்தாலும் என்னை சாய்க்க முடியாது” என்று கூறிக்கொண்டே அவரது கரங்களை கீழிறக்கினாள்.

அபிராமி ஓடிவந்து பாரதியை இறுக அணைத்துக் கொண்டார். பாரதியின் தோள் நனைத்த கண்ணீர் கூறியது அவரது மன வலியை.

இப்படிப்பட்ட தூய உள்ளம் கொண்ட பாரதிக்கு, நியாயத்தை வாங்கியே தீருவேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு களத்தில் இறங்கினார் சுந்தரேச பாண்டியன்.

“அர்ஜுன் நீ பாரதிக்கு உரிய நியாயத்தை வழங்கியே தீரவேண்டும். இப்பொழுது நீ என்ன பதில் கூறப் போகிறாய்?“ என்றார் அதிகாரமாக.

“பாரதிக்கு பதில் சொல்ல வேண்டுமா?” அர்ஜுன் தன் தாடைகளைத் தடவியவாறு, எண்ணியதை முடிக்கும் திண்ணிய நெஞ்சுடையவனாய் பாரதியின் அருகில் நெருங்கி வந்தான்.

“கைகுலுக்கி கலைந்த பெண்கள் என் கடந்த காலம்.

வீழ்ந்த இடத்திலிருந்து எழுவதற்கு கைகொடுத்த நீ என் நிகழ்காலம்.

எழுந்த நான் நிமிர்வதற்கு என் எதிர் காலமாய் நீ என் கைத்தலம் பற்றிடுவாயா ரதி? என்றான் தன் வலது கையை அவள் புறம் நீட்டி, வசீகரப் புன்னகையுடன்.

தன் மகனின் புது அவதாரத்தைக் கண்டு, நின்ற இடத்தில் மூச்சுவிட மறந்தனர் சுந்தரேச பாண்டியனும் அபிராமியும்.

தன் தலையை மெதுவாக இடவலமாக அசைத்தவாறு மென் புன்னகையுடன், “அர்ஜுன் இது என்ன புது விளையாட்டு? உங்கள் ஆட்டத்திற்கு நீங்கள் வேறு துணை தான் தேட வேண்டும்” என்று இதமாகவே மறுத்தாள்.

அர்ஜூனின் வாழ்வில் பாரதி நுழையும் பாதைக்கு மானசீகமாக மலர் தூவிக் கொண்டிருந்தார் அபிராமி.

பேசவந்த சுந்தரேச பாண்டியனை, அவரின் முகத்திற்கு நேரே தன் ஐவிரல் நீட்டித் தடுத்தான்.

“முடியும், முடியாது இரண்டில் ஒரு பதிலைக் கூறு பாரதி” என்றான்.

“முடியா..... “ என்று பாரதி பதில் கூற தொடங்கும் முன்னே, அருகில் பூந்தோட்டத்திற்கு போட்டிருந்த இரும்புக் கம்பி வேலியில் தன் வலது கையை ஓங்கி அடித்தான்.

“அர்ஜுன் ஸ்டாப் இட்... “ என்ற பாரதியின் ஓங்கிய குரலில் மீண்டும் மீண்டும் தன் கையை ஓங்கி அடித்துக் கொண்டே இருந்தான் அந்த முள்வேலியில்.

உதிரம் உதிரத் தொடங்கியது. தடுக்க நினைத்தால் அர்ஜூனின் வீம்பு இன்னும் அதிகமாகி, நிலைமை மோசமாகிவிடும். பாரதியையும் வற்புறுத்த முடியாமல், பயம் கலந்த படபடப்புடன் அர்ஜூனின் பெற்றோர்கள் அவனை கோபம் கலந்த இயலாமையுடன் பார்த்தனர்.

உள்ளங்கையில் சதைகள் கிழியத் தொடங்கிய நிலையில், புல்வெளி எங்கும் ரத்தப் பூக்கள் பூக்கத் தொடங்கின.

பாரதி அர்ஜுனின் கைகளை பிடிக்கத் தொடங்கும்போது, உன்மத்தம் கொண்டவனின் ஒரே உதறலில் தூரமாய் போய் விழுந்தாள்.

செந்நீரில் நனைந்த அந்த முள் வேலியை தன் கையில் முறுக்கி சுருட்டினான்.

தரையில் விழுந்த நிலையில், பாரதியின் கண்களுக்கு அர்ஜுனின் அரக்க அவதாரம் பதைபதைப்பு தந்தது.

கண்கள் சிவந்து, தோள் தசைகள் முறுக்கேறி, நெஞ்சம் திமிறிக்கொண்டு , கழுத்து நரம்புகள் புடைத்தெழுந்து, கைகளில் ரத்தம் தோய்ந்த முள் ஆயுதத்தோடு, தன்னை உறுத்து விழிக்கும் அந்த அசுரனைப் பார்த்து, அச்சம் அறியாதவளுக்கு, அவள் மனதின் அச்சத்தின் பக்கங்கள் புரட்டப்பட்டது.

தனது இடது கையை அவள் புறம் நீட்டி, “என்னோடு கை கோர்க்க வா பாரதி” என்று ஆணையிட்டது அந்த அரிமா.

தன்னை பலவீனப்படுத்தும் அவன் வார்த்தைகளை மனதிற்குள் செலுத்தாமல் அவனைத் தீர்க்கமாய் பார்த்தாள்.

“உன்னை அடைந்து தான் அடக்க வேண்டுமென்றால், அதையும் கடக்க நான் தயார்... “ அகம் பாவி உள்ளே உறுமினான்.

“பாரதி என்னை மறுக்கும் உன் விழிகளைக் காண, என் உயிர் மறுக்குதே. உன்னைப் பார்க்க முடியாத இந்தக் கண்களுக்கு, இந்த உலகத்தையும் பார்க்கத் தேவையில்லை....” என்று கூறிக்கொண்டே முள்வேலி சுற்றிய தன் கையை கண்களின் அருகே கொண்டு சென்றான்.

தன் உயிர் துடிக்க, மடிந்து அமர்ந்த நிலையில் இருந்து பாய்ந்து எழுந்தாள் பாரதி.

“வேண்டாம் அர்ஜுன்..... “ என்று கூறிக்கொண்டே தன் முதுகினை அர்ஜூனின் மார்பில் சாய்ந்தவாறு, அவன் கைக்கும் முகத்திற்கும் நடுவே தன் முகத்தை கொண்டு நிறுத்தினாள் பாரதி.

முள் வேலியிட்ட அர்ஜுனின் கை பாரதியின் முகத்தின் அருகே வந்து நின்றது.
அவளின் வேக மூச்சுக்களே, பயத்தையும் , பதட்டத்தையும் எடுத்துரைத்தது.

தன் ரத்தம் தோய்ந்த முன் கையை பாரதியின் கழுத்தில் வைத்தவாறு, அவளின் காதருகில் குனிந்து, “உன் சம்மதத்தை உன் வாயால் சொல் ரதி” என்றான்.

வானோடும் சேர முடியாமல் மண்ணோடும் வீழ முடியாமல் பெண்ணவள், அர்ஜுனின் பிரம்மாஸ்திரத்தில் மனதிற்குள் துடித்தாள்.

அர்ஜுன் பாரதியைத் தாக்கி விடுவானோ என்று நிமிடத்திற்கு நிமிடம் பயத்தில் தத்தளித்தார் சுந்தரேச பாண்டியன்.

பாரதியின் மவுனம் அர்ஜுனை வெறியேற்றியது. தன் தாடையை பாரதியின் உச்சந்தலையில் வைத்து அழுத்தி, மென்மையாக அவள் காதுகளில்,

“டாக்டருக்கு இப்போ வேற ஆப்ஷனே இல்லை.... “ என்றான்.

விருட்டென அவன் பிடியிலிருந்து விலகி அர்ஜுனை உற்றுநோக்கினாள் பாரதி.

“உன் மௌனத்தை சம்மதமாக எடுத்துக் கொள்ளமுடியாது ரதி. என்னை மணக்க சம்மதம் என்று உன் திருவாய் மலர்ந்து சொல்” என்றான்.

மழைத்துளி கீழே விழுந்து உடைந்து சிதறுவது போல், உண்மை உடைந்து சிதறியதைக் கண்டாலும், என்றோ எதிர்பார்த்த ஒன்றுதான் என்றாலும், காவு வாங்கத் துடிக்கும் சாவாய் அவதாரம் எடுத்தவனின் மேல் சினம் துளிர்க்க,

“அச்சத்தை வேட்கைதனை அழித்து விட்டால்,
அப்போது சாவுமங்கே அழிந்து போகும்;
மிச்சத்தைப் பின்சொல்வேன்,சினத்தை முன்னே
வென்றிடுவீர்”


என்ற மகாகவியின் வரியில் தன் சினத்தைப் புதைத்து, அர்ஜுனை நேர் நிமிர்ந்து பார்த்தாள்.

“எனக்கு ஒரு வாரம் அவகாசம் வேண்டும் மிஸ்டர் அர்ஜூன்” என்றாள்.

“இல்லை பாரதி ஒரே ஒருநாள் மட்டும் தான் உனக்கு அவகாசம்” என்றான் அர்ஜூன்.

அர்ஜுன் தன்னைத் தானே அழித்துக் கொள்வதில் கலங்கிய தன் இதயத்தை திடப்படுத்த முயன்று, கண்களை ஒரு நிமிடம் மூடித்திறந்த பாரதி, “ ஓகே மிஸ்டர் அர்ஜுன்” என்றாள்.

சுகமா? துக்கமா? என்று பிரித்தறிய முடியாத மனநிலையில் நின்றிருந்தனர் சுந்தரேச பாண்டியனும், அபிராமியும்.

சமூக வலைத் தளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருந்த அந்த செய்தியைப் பார்த்துவிட்டு, அர்ஜுனை பார்க்கவென்று தோட்டத்திற்கு வந்தான் அருண்.

ரத்தம் சிந்தியபடி நின்ற அர்ஜுனைப் பார்த்தவுடன், பாய்ந்து ஓடி வந்தான்.

“டேய் அறிவு கெட்டவனே! நீ திருந்தவே மாட்டியாடா. அப்படி என்னடா கோபம் உனக்கு?

மீண்டும் உன்னை இரத்த கோலத்தில் பார்த்ததும் என் உயிரே என்னிடம் இல்லையடா படுபாவி.

சொல்லு மச்சி எவன்டா அவன்? அவனை ஒரு கை பார்த்துவிடுவோம். எத்தனை பாடிகாட்ஸ், எவ்வளவு பாதுகாப்பு எவன்டா அதை எல்லாம் மீறி உன்னைத் தொட்டது” கொதித்தெழுந்தான் அருண்.

விழிகளில் பாவமான ஒரு சோகத்தை கொண்டுவந்து, தன் இடது கை சுட்டு விரல் நீட்டி பாரதியை சுட்டிக்காட்டினான் அர்ஜூன்.

“யாருடா அது?.... “ என்று கேட்டுக்கொண்டே ஸ்லோமோஷனில் திரும்பிய அருண் பார்த்தது, இறுகிய முகத்துடன் காட்சி அளித்த பாரதியைத்தான்.

“சைத்தான் மர்டர் பண்ண மட்டையை தூக்குனா, லிஸ்டுல நம்ம பேரு தான் முதல்ல நிக்குதே..... “ என்றது அருணின் மைண்ட் வாய்ஸ்.

அர்ஜுனை நெருங்கிய பாரதி, கைகளில் சுற்றியிருந்த முள்வேலியை மெதுவாக அப்புறப்படுத்த முயன்றாள்.

அழுத்தமாக சுற்றப்பட்ட அந்த கம்பியை வளைத்து திருப்பத் திணறினாள்.

ஒரு கட்டத்திற்கு மேல் அருணும் இணைந்துகொண்டு இருவருமாக மெதுவாக அந்த முள்வேலியை அப்புறப்படுத்தினர்.

வேறு யாராக இருந்தாலும் மயக்கமுற்றிருப்பது உறுதி. அர்ஜுனின் இந்த மன உறுதி பாரதியையே அசைத்துப் பார்த்தது.

அர்ஜுனின் விழிகள் வலிகளை பிரதிபலிக்கவில்லை. உணர்ச்சிகளைத் துடைத்த அந்த முகம், பாரதியின் அடுத்த கட்ட நடவடிக்கையை ஆராய்ந்தது.

“கைகளை சுத்தப்படுத்தி முதலுதவி செய்ய வேண்டும் மிஸ்டர் அர்ஜூன். காயம் ஆழமாக இருப்பதால் தையல்கள் கூட போட வேண்டி வரலாம்” என்றாள்.

“டாக்டர் மேடம் கூட இருக்கும்போது எனக்கு கவலை வருமா? மருத்துவ முத்தம் கொடுத்து சரி செய்து விட மாட்டிங்க “ என்று மென் குரலில் கூறி கண்ணடித்தான்.

விதியின் சாட்சியாக இருந்த அனைவரும் அந்த இடத்தை விட்டு கிளம்பினர்.

அர்ஜுனின் கையினை சுத்தப்படுத்தி மருந்திட்டுக் கட்டினாள் பாரதி.

கடமையே கண்ணாக இருந்தவளைப் பார்த்து,
“ஏன் பாரதி, கைகளில் அடிபட்டால் உன் சேலைத் தலைப்பை கிழித்து எனக்கு கட்டிட மாட்டாயா?” என்றான் கேலியுடன்.

“கட்டித் தான் இருக்க வேண்டும் மிஸ்டர் அர்ஜுன் உங்கள் வாயை..... “ என்றாள்.

“உன் இதழ் சிறையில் கட்டுப்பட என்றும் இந்த அர்ஜுன் தயார் பாரதி” என்றான்.

மனதின் சோர்வை கண்களில் காட்டாமல், “ நான் என் ஹாஸ்பிடல் வரை சென்று வருகிறேன் அர்ஜுன்” என்றாள்.

உதடு கடித்து சிரித்தபடி சரி என்று தலை அசைத்தான்.

கீழே இறங்கி வந்த பாரதியை அபிராமி கை பிடித்து இழுத்துக் கொண்டே பூஜை அறைக்குள் நுழைந்தார்.

பாரதியின் கைகளை இறுகப் பற்றியபடி,” சின்ன கண்ணனை திருமணம் செய்துகொண்டு இருண்ட இந்த வீட்டிற்கு ஒளியேற்றும் வரம் தருவாயா பாரதி? “ என்றார்.

உணர்ச்சியற்ற பார்வையுடன் பூஜை அறையை விட்டு வெளியேறினாள் பாரதி. அவளின் பதிலற்ற தன்மையைப் பார்த்து மீண்டும் கடவுளிடம் முறையிட கிளம்பினார் அபிராமி.

பாரதி வீட்டின் முகப்பு வாசலை அடைந்தவுடன், பாதுகாப்பு படை சூழ கார்கள் அணிவகுத்து வந்து நின்றது.

கேள்வியாய் அர்ஜுனின் பால்கனியை நிமிர்ந்து பார்த்தாள் பாரதி.

தனது இடக் கையின் இரு விரல்களை எடுத்து இரு கண் இமைகளில் அழுத்தி பாரதியை நோக்கி நீட்டினான்.

கண்களை இறுக்க மூடி வாகனத்தில் அமர்ந்த பாரதியின் அருகில் வந்து அமர்ந்தான் அருண்.

“பாரதி நான் சொல்ல வருவதைக் கொஞ்சம் கேளு ப்ளீஸ்” என்றான்.

விழிகளைத் திறந்து அருணை ஏறிட்டாள் பாரதி. அருணின் கட்டளைக்கிணங்க கார் கடற்கரை ஓரத்தில் நின்றது.

ஹோ..... என்ற இரைச்சலுடன் ஆர்ப்பரித்த அலையின் கரையில், நீலவானை வெறித்தபடி நின்றிருந்தாள் பாரதி.

“முடிவு எடுக்கும் முன்பு நீ அர்ஜுனைப் பற்றி நன்கு தெரிந்து கொள்ள வேண்டும் பாரதி” என்றான்.

கற்சிலை போல் இறுகி நின்றவளிடம், அர்ஜுனின் கடந்தகாலத்தை சொல்ல ஆரம்பித்தான் அருண்.

ஃபார்முலா ஒன் எனப்படும் எஃப்1 ரேஸ் கார் விளையாட்டில் இந்தியாவின் முன்னணி ஓட்டுனர்தான் “தி ஐஸ் மேன்“ (The Ice Man) என்று அனைவராலும் கொண்டாடப்படும் அர்ஜுன்.

செல்லும்போதே பெருமிதம் வழிந்தது அருணின் குரலில்.

இதுவரை எந்த ஒரு இந்தியனும் பெற்றிராத வெற்றியைப் பெற்றிட அபுதாபி க்ராண்ட்ப்ரிக்ஸ் கார் பந்தயத்தில் அர்ஜுனின் கைகளில் சீறிப்பாய்ந்து கொண்டிருந்தது அந்த நான்கு சக்கரம் கொண்ட உலோகம்.

உலகத்தை வெல்லத் துடிப்பவன் உள்ளத்தை வென்றிடுவானா?
Wow....
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top