• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

முள்ளோடு முத்தாட வா... அத்தியாயம் - 20

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anamika 47

அமைச்சர்
Author
Joined
Nov 5, 2021
Messages
1,414
Reaction score
3,158
முள்ளோடு முத்தாட வா...

அத்தியாயம் - 20

MEME-20211127-064323.jpg


பார்முலா 1 பந்தயம் கிராண்ட் ப்ரிக்ஸ் என்ற பெயரில் ஆண்டுமுழுவதும் உலகின் பல்வேறு நகரங்களில் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு கிராண்ட் ப்ரிக்ஸ் பந்தயத்திலும் வெற்றி பெறுபவர்களுக்கு புள்ளிகள் வழங்கப்படும். அந்தந்த ஆண்டின் இறுதியில் ஒட்டுமொத்தமாக கூடுதல் புள்ளிகளைப் பெற்றுள்ளவர்கள் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவார்கள்.

அபுதாபியில் நடைபெறும் கிராண்ட் ப்ரிக்ஸ் போட்டிக்காக 300 கிலோமீட்டர் தூர இலக்கை நோக்கி 10 அணிகளைச் சேர்ந்த வீரர்கள் சீறிப் பாய்ந்து கொண்டிருந்தனர்.

70 கோடிக்கும் மேல் மதிப்புடைய, ஒரு இருக்கையை மட்டுமே கொண்ட அந்தக் காரின் காக்பிட்டுக்கு உள்ளே பொருத்தப்பட்டிருக்கும் தண்ணீர் பாட்டிலின் டியூப் வழியே தண்ணீரை அசால்டாக உறிஞ்சினான் அர்ஜூன்.

கார் எஞ்சின் வெளியிடும் வெப்பத்தில் அர்ஜுனின் தலைக்கவசத்தின் ஒளிர்ந்த "ஐஸ்மேன்" என்ற எழுத்துக்கள் கூட உருகத் தொடங்கின.

அழுத்தத்துடனும், வேகம் கலந்த விவேகத்துடனும் ஒவ்வொரு கார் போட்டிகளிலும் வெற்றிபெறும் பாங்கிலேயே "ஐஸ்மேன்" என்ற அடைமொழியால் அறியப்பட்டான் அர்ஜுன்.

ஃபெராரி அணியின் சார்பாக களமிறங்கிய அர்ஜுனின் கார் கண் இமைக்கும் நேரத்தில் காற்றைக் கிழித்துக் கொண்டு சென்றது.

சக போட்டியாளனும், நண்பனும் ஆகிய பரத்கேசவுடன் போட்ட சவால் நினைவிற்கு வர இளநகை பூத்தான் அர்ஜுன்.

திரும்பும் வளைவுகளில், சக்கரங்களில் தீப்பொறி பறக்க, அந்த உலோகம் உயிர் வலியில் கரும் புகையைக் கக்க, அர்ஜூனின் எண்ணத்திற்கேற்ப அவனது ஸ்டேரிங் வீலும் தலையை அசைத்துக் கொண்டே வந்தது.

தன்னை முந்திச் செல்லும் வாகனத்தை பார்த்துக் கொண்டே இருந்தவன்,
“அர்ஜூன்..... முடியும்..... உன்னால் முடியும்..... உன்னால் மட்டுமே முடியும். வாடா அர்ஜூன்....... “ என்று தன்னுள் இருந்து கட்டளையிட்டவனின் ஆணைக்கிணங்க அதிகபட்சம் இரண்டு மணி நேரம் ஆகக் கூடிய தொலைவை 90 நிமிடத்தில் கடந்தான். வெற்றிப் புள்ளிகளை தட்டிப் பறித்தான்.

பார்முலா 1 பந்தயங்களின்போது இன்ஜின்கள் கடும் வெப்பத்தை வெளியிடுவதால், ஒவ்வொரு போட்டியின் இறுதியிலும் பந்தய வீரர்கள் 4 கிலோ எடை வரை இழப்பார்கள். மேலும் போட்டியின்போது மூன்று லிட்டர் அளவு தண்ணீர் வரை தங்கள் உடலில் இருந்து இழப்பார்கள்.

உடலின் சோர்வை சிறிதளவும் தன் முகத்தில் காட்டாமல், ஆகாயத்தை வென்ற அசுரனாய் பூமியில் கால் பதித்தான் அர்ஜூன்.

மைதானத்தில் கரஒலிகளும் , ஆரவாரமும், “ அர்ஜூன் அர்ஜூன்” என்ற கோஷங்களுமே எங்கும் நிறைந்திருந்தன.

காரிலிருந்து இறங்கிய அர்ஜுனை அருண் தாவிச் சென்று முதுகில் தொங்கிக்கொண்டு தன் சந்தோஷத்தைப் பகிர்ந்தான்.

தன் தலையிலிருந்து தலைக்கவசத்தை ஸ்டைலாக கழட்டிய அர்ஜுனை இளம் பெண்கள் கூட்டம் சூழ்ந்து கொண்டது.

அர்ஜுனுடைய தலைக்கவசத்தின் இருந்த ஐஸ் மேன் என்ற எழுத்திற்கு தங்கள் உதட்டுச் சாயத்தால் வர்ணம் பூசினர்.

பெருமையுடன் தன் தலைக்கவசத்தை உயர்த்திக் காட்டிய அர்ஜுனை அரங்கமே ஆரவாரித்து கொண்டாடியது.

பார்வையாளருக்கான டிக்கெட்களின் விலை லட்சங்களில் புரண்ட போதும் இந்தப் பணக்கார விளையாட்டிற்கு உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இளம் பெண்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு அர்ஜூனுக்கு தங்களது தொடர் ஆதரவுகளை தெரிவித்த வண்ணம் இருந்தனர்.

தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பப்பட்ட இந்த நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்த பார்வையாளர்களும் அர்ஜுனின் வேகத்தில் மிரண்டனர்.

பவுன்சர்கள் படைசூழ அர்ஜுனை பாதுகாப்புடன் வழிநடத்திச் சென்றான் அருண்.

அர்ஜூனின் கடைக்கண் பார்வைக்காக காத்திருந்த கன்னியர் கூட்டம் இருபுறமும் கரை என முட்டி அலைமோதியது.

க்ளிக்... கிளிக்... என்ற கேமராக்களின் ஒளிரும் ஒலியோடு, வெற்றிக் கோப்பையை பெற்றுக் கொண்ட அர்ஜுன், தன் வெற்றியை தன் ரசிகர்களுக்கு சமர்ப்பிப்பதாகக் கூறி பேட்டியை முடித்துக் கொண்டான் .

பின் அலட்சியப் பார்வையுடன், கைகள் குவித்து பறக்கும் முத்தமிட்டபடி வெளியேறினான் அர்ஜுன்.

ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் 100 புகழ்பெற்றவர்கள் பட்டியலில் இடம்பெற்ற முக்கியமான 2 பார்முலா1 ஓட்டுநர்களில், அர்ஜுன் பெயரும் இடம் பெற்றிருந்தது . மேலும் அதே பட்டியலில் அதிக சம்பளம் பெறும் புகழ்பெற்றவர்களில் 25-வது இடத்திலும் விளையாட்டு வீரர்களில் அதிக சம்பளம் பெறுவோர் பட்டியலில் 3-வது இடத்திலும் அர்ஜூனின் பெயர் ஒளிர்ந்தது.

அன்று இரவு அபுதாபி கிராண்ட் ஹயாட் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் அர்ஜூனின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் நண்பர்களாலும், அழகிகளாளும் அந்த பார்ட்டி ஹால் நிரம்பி வழிந்தது.

அர்ஜூனுடைய பார்ட்டியின் இவன்ட் மேனேஜர் பொறுப்பிலிருக்கும் லீனா பார்ட்டியின் தீம்மை , வெற்றியின் நிறமான சிகப்பு நிறத்திற்கு ஏற்றவாறு சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தாள்.

பார்ட்டி ஹாலின் சுவர்கள் கண்ணாடித் தடுப்புகளால் வடிவமைக்கப்பட்டிருந்தது. கண்ணாடித் தடுப்புக்கு உள்ளே நீல நிற பளிங்கு போல் உள்ள தண்ணீரில் வண்ணமீன்கள், சிகப்பு மின் விளக்கின் ஒளியில் நெருப்புக் கடலில் ஜொலி ஜொலிக்க, அந்தக்காட்சி குளிர்ச்சியாகவும் ரம்மியமாகவும் இருந்தது.

கருப்பு பேண்ட், கருப்பு சட்டை, சிகப்பு பிளேஸருடன், கைகளில் ரோலக்ஸை சரி செய்தவாறே வெற்றி தந்த பூரிப்பில், உள் நுழைந்தான் அர்ஜுன்.

அர்ஜுனின் பாதுகாப்புப் படை அவனைச்சுற்றி கவசமாகவே நின்றுகொண்டிருந்தது.

அருணை அருகே அழைத்து அவன் காதுகளில் சில ஏற்பாடுகளை செய்யச் சொன்னான். வேண்டாமே! என்று பாவம் போல் பார்த்த அருணை பார்வையால் அடக்கினான் அர்ஜூன்.

அதிரடி இசையுடன் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் ஆரம்பமானது. விழா நாயகனை மேடைக்கு அழைக்க, இடது கையினால் பிளேஸரை கழட்டி காட்ஸிடம் கொடுத்துவிட்டு, தன் கறுப்பு நிற சட்டையை மேலே சுருட்ட, இடது முன் கையில் ஐஸ்மேன் என்ற டாட்டூ முறுக்கி நின்றது.

“வாவ்......” என்ற பெண்களின் ஏக்கப்பெருமூச்சு அந்த பார்ட்டி ஹாலை சூடாக்கியது.

மேடையில் ஆடிய அர்ஜூனின் கால்களோடு மேலும் இரண்டு கால்கள் ஜோடி சேர்ந்தது. முகம் மலர பரத்கேசவனை அணைத்துக்கொண்டு அர்ஜூனின் அதிரடி ஆட்டம் அரங்கேறியது.

ஆட்டம் முடிந்தவுடன் ரெட் ஒயினை கையில் ஏந்தியபடி அமர்ந்திருந்த அர்ஜுன் அருகில் வந்தான் பரத்.

சர்வதேச கார் பந்தயங்களில் கலந்து கொண்டு இருந்தாலும் இதுவரை ஃபார்முலா 1 பந்தயத்தில் கலந்துகொள்ள முடியாத பரத், அர்ஜுன் வெற்றி பெற்றால் தன் லம்போகினியை தருவதாக சவால்விட்டு இருந்தான்.

தன் இடது புருவத்தை ஏற்றி, சவாலில் ஜெயித்ததை நினைவூட்டினான்.

தன் இரு கைகளையும் மேலே தூக்கி, தலையை ஆட்டிக் கொண்டு சிரித்தவாறே தன் கோட் பாக்கெட்டில் இருந்த லம்போகினி கார் சாவியை மேஜை மீது வைத்தான் பரத்.

அர்ஜூனின் அருகில் வந்த லீனா, அவன் கைகளைப் பற்றி, “அர்ஜுன் பேபி உங்கள் லீக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கக் கூடாதா? உங்கள் இரவுகளை நான் இனிமையாக்க கூடாதா?” படபடவென இமைகள் அடித்து மையல் கொண்டு கேட்டாள்.

அர்ஜூனின் கூர்மையான விழிகள் லீனாவை உறுத்து விழித்தது.

உடலின் வனப்பை அப்பட்டமாக எடுத்துக்காட்டும் இறுக்கமான சிகப்பு நிற வலைப்பின்னல் டாப்ஸும், குட்டைப்பாவாடையும் அணிந்திருந்தாள்.

அவளின் வெண்ணிற இடையை இழுத்து அணைத்து, லீயின் கன்னத்தோடு கன்னம் இழைத்து, கையிலிருந்த ரெட் ஒயின் ததும்பும் மது கோப்பையைத் தூக்கி லீயின் உதட்டில் சொட்டுச் சொட்டாக விழும்படி செய்தான்.

அர்ஜூனின் கைகள் தந்த வெம்மையோடு, இளம் சிகப்பு நிற உதட்டுச் சாயம் பூசிய உதட்டில், அடர் சிகப்பு நிற திரவத்தால் சிவந்த உதடுகளின் குளுமையில் சிலிர்த்தபடி தன் நாவால் ஒயினை சுவைத்துக்கொண்டே, இடது கையினால் அர்ஜுனை வளைத்துக் கொண்டு, வலது கையினை உயர்த்தி அர்ஜுனோடு செல்பி எடுத்தாள்.

மயங்கி நின்ற அவளின் காதருகே குனிந்து, “உனக்கு இரண்டு நிமிடம்தான் அவகாசம் அதற்குள் இந்த இடத்தை காலி செய்ய வேண்டும்.

இல்லையென்றால்...... “ என்று கூறிக்கொண்டே ஒயினில் ஊறிய அவள் உதட்டை சுண்டினான்.

சட்டென கண்களில் கண்ணீர் வர, நாசுக்காக துடைத்தபடி, அசட்டை சிரிப்புடன் வெளியேறினாள் லீனா.

அர்ஜுன் சிரித்துக்கொண்டே கார் சாவியை எடுத்து, விரலில் மாட்டிய படி, கைகளை மேலே உயர்த்தி சுழற்றினான்.

அர்ஜுனின் சமிக்கைகளை கவனித்துக்கொண்டே வந்த பெண்கள் கூட்டம் தங்கள் கார் சாவிகளை கைகளில் எடுத்துக்கொண்டு அர்ஜுனை சுற்றி நின்று கீ கேம் என்று கூச்சலிட்டனர்.

“எஸ்.... லெட் அஸ் ஸ்டார்ட் அவர் கீ கேம்” என்றான் வசீகரப் புன்னகையுடன்.

சுற்றியிருந்த இளம்பெண்கள் தங்கள் கார் சாவிகளை மேஜைமீது தங்க நிறத்தில் ஜொலித்த அந்தக் குடுவையின் உள்ளே போட்டனர்.

அர்ஜுன் சிரித்துக்கொண்டே, குடுவையின் உள்ளே இருந்து ஒரு கார் சாவியை எடுத்தான்.

நிசப்தமாக இருந்த அந்த இடத்தில் தன் கைகளில் அந்த பென்ஸ் கார் சாவியை தூக்கிக் காட்டினான்.

ஹோ... என்ற உற்சாகம் உடைந்த கூக்குரல் எழுந்தது.

அந்த பென்ஸ் காரின் சொந்தக்காரி, சிகப்பு நிற பார்ட்டி கவுனில் ஒயிலாக நடந்து வந்து அர்ஜுனின் தோள் சாய்ந்தாள்.

பத்திரிகைக்காரர்கள் சூடான அந்த இளம் ஜோடியை தங்களின் கேமராக்கள் சூடாகும் வரை படமாக எடுத்துத் தள்ளினர்.

“வாழ்த்துக்கள் அர்ஜுன்” என்று கிண்டலாக மொழிந்தவாறு வெளியேறினான் பரத்.

அருணைப் பார்த்த அர்ஜுனுக்கு, தன் கட்டை விரலை உயர்த்தி சைகை செய்தான் அருண்.

அதே ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்த விஐபி சூட்டுக்குள் அந்த அழகியின் தோளை அணைத்தவாறு நுழைந்தான் அர்ஜுன்.

மெல்லிய வெண்ணிற லேஸ் திரையால் மூடப்பட்ட அந்த பிரம்மாண்டமான கட்டிலை நோக்கி அடி எடுத்து வைத்தாள் அந்த அழகி.

தன் கால்களை அகற்றி நின்றவாறு கைகளைக் கட்டியபடி “ஒரு நிமிடம்” என்று குரல் கொடுத்து தடுத்தான் அர்ஜுன்.

அழகிய கண்ணாடியால் ஆன அந்த மேஜையின் மீது அழகிய பரிசுப் பொருட்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தன. அந்தப் பரிசுப் பொருட்களை காட்டி,
“இவை அனைத்தும் உனக்குத்தான்..... “ என்றான்.

மோகமும், தாபமும், ஆசையும் போட்டியிட இறுதியில் ஆசையே வென்றிட, அந்த பரிசுப் பொருட்களை நோக்கி அடி எடுத்து வைத்தாள் அந்த அழகி.

வைரம், பிளாட்டினத்தால் ஆன அழகிய ஆபரணங்கள் எதற்கும் குறைவில்லை. சந்தோஷ கூச்சலுடன் அர்ஜுனை கட்டியணைக்க ஓடி வந்தாள் அந்த அழகி.

அவளின் தோள்களை தன் ஒற்றை விரலால் தள்ளி நிறுத்தினான் அர்ஜுன்.
“ டோன்ட் டச் மீ, பட் டேக் மீ ”
(Don’t touch me, but take me) என்றான்.

விழி விரித்து,”வாட்...? “ என முழித்தாள் அந்த அழகி.

“எஸ் டார்லிங் என்னைத் தீண்டாமல் தீண்டு.... “ என்றான் கர்வமாக.

“அர்ஜுன் பேபி, உங்களுக்கு எப்பொழுதுமே விளையாட்டுத்தான். அப்படி என்றால் நான் காற்றாய் மாறித்தான் உங்களைத் தொட வேண்டும்” என்று கிளுகிளுத்துச் சிரித்தாள்.

“அர்ஜுன் ஐ லவ் யூ..... என் நெடுநாள் காதல். என் நெடுநாள் ஆசை. ஷால் வீ...... “ என்று தாபமாய் பார்த்தாள்.

“என் எண்ணங்களின் பூட்டை திறப்பவளுக்கே என் காதலும் காமமும் சமர்ப்பணம். விடியும்வரை உனக்கு சந்தர்ப்பம் அளிக்கிறேன்.

பூட்டின் சாவியை கண்டுபிடித்தால் இந்த அர்ஜுன் உனக்கு. இல்லையேல் இந்த பரிசுகளுடன் நீ சந்தோசமாகச் செல்லலாம்” என்றான்.

"ஒருவேளை திறக்கும் சாவி இந்த உடையோ?” என்று பற்களால் உதட்டை கடித்து சுழித்தபடி, பார்ட்டி கவுனின் முடிச்சின் மீது கைவைத்தாள்.

“பச்...... நோ...... பேபி....... வேறு ஏதாவது முயற்சி செய்... “ என்றான் நக்கலுடன்.

அங்கே இருந்த நீள் இருக்கையில் அமர்ந்துகொண்டு அந்த வெள்ளை அழகி, காற்றில் கைகளால் அர்ஜுனைக் கவரும் திட்டத்தை வரைவதும், பின் அழிப்பதுமாக இரவை போக்கிக்கொண்டிருந்தாள்.

விஐபி சூட்டோடு இணைந்திருந்த மற்றொரு அறையில், தன் கைகளை தலைக்கு அடியில் கொடுத்தபடி படுக்கையில் படுத்திருந்தான் அர்ஜூன்.

இதற்கு முன் வந்த பெண்கள் நடனம் ஆடியும், பாட்டு பாடியும் தன்னைக் கவர முயன்றதை எண்ணிச் சிரித்தான்.

“சரியான அலங்கார பொம்மைகள். இந்த சாம்ராட்க்கு ஒரு சம்யுக்தாதான் வேண்டும் சாமரம் வீசுபவர்கள் அல்ல. ஒரு ஆண்மகனைக் கவர உடல்மொழியைத் தவிர வேறு மொழிகள் அறியாத மூடர் கூட்டம்” உள்ளிருந்த அகம்பாவி குரல் கொடுத்துக்கொண்டே இருந்தான்.

அர்ஜுனும் அகம்பாவியிடம், உன் இதயத்தை திறக்கும் சாவி தான் என்ன? என்றான்.

"நெருங்கி வரும்போதே என் மேனி சிலிர்க்க வேண்டும். அவள் கை பிடிக்கும்போது என் கர்வம் ஓங்க வேண்டும். நீ பெற்றதெல்லாம் வெற்றி இல்லையடா அர்ஜுன், நானே உன் வெற்றி என்று ஆயுள் முழுவதும் கொண்டாட வேண்டும்.



அவள் “அர்ஜுன்” என்று அழைக்கும் ஒரு சொல்லிலேயே என் இதயம் அதிர்ந்து திறக்க வேண்டும்" கர்ஜித்தான் அகம்பாவி.

வெற்றியின் போதையோடு, அகம்பாவியின் போதனைகளும் அவன் தலையில் கிரீடமாய் வந்து அமர்ந்தன.

மகாகவி பாரதியின் கண்ணம்மாவைப் போல், தன் கண்ணம்மாவை கனவினில் தேட ஆரம்பித்தான். உதட்டில் இளநகை மலர ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றான் அர்ஜுன்.

காலை புலர்ந்ததும், தன் அறையை விட்டு வெளியேறினான் அர்ஜூன். அணிந்திருந்த சிகப்புக் கவுனுக்கு ஏற்றவாறு கண்களும் சிவந்ததடி நின்றிருந்தாள் அந்த மாது.

அர்ஜுனை அடைவது அவ்வளவு எளிதல்ல என்ற முடிவுக்கு வந்த அந்தப் பெண் “எவ்வளவு முயற்சி செய்தும், தொடாமல் இம்ப்ரஸ் செய்யும் ஒரு வழியும் எனக்கு தெரியவில்லை.

ஐ ரியலி மிஸ் யூ அர்ஜுன். இட்ஸ் ஓகே பேபி.... கடைசியாக ஒரு முறை...“ என்று தன் தோல்வியை ஒத்துக் கொண்டு, அர்ஜூனை இறுக்க அணைத்து கன்னத்தில் முத்தமிட்டு பரிசுப் பொருட்களுடன் வெளியேறினாள்.

அவன் கண்ட உலகில், பெண்களுக்கு அழகும், புகழும் ஆசையுமே பிரதானமாய் போக இகழ்ச்சியாய் இதழ் வளைந்தது புகழின் உச்சியிலிருந்த அர்ஜுனுக்கு.

காட்டுத்தீயை நீர்த் துளியால் அணைக்க முடியாது......

தீயை அணைக்க தீயாய் வருவாள்.....
 




Last edited:

Anamika 47

அமைச்சர்
Author
Joined
Nov 5, 2021
Messages
1,414
Reaction score
3,158
அன்பிற்கினிய நட்புகளே 💐💐💐
நான் உங்கள் நட்புக்குரிய அனாமிகா 47, (AK 47)

முள்ளோடு முத்தாட வா...

கதையின் அத்தியாயம் - 20 பதிவு செய்துவிட்டேன்.
கதையின் நிறை குறைகளை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாங்க🙏 பேசலாம்🙏 பழகலாம்🙏
கவிதை மொழியில்......

இந்த அத்தியாயம் – 20 ன் முதல் கருத்தை பதிவிடும் அன்பார்ந்த நட்புக்கு,
கவிதை கனி ஒன்று பறித்துத் தரப்படும்.

அபாயக் குறிப்பு :

கனியின் சுவையில் மயங்கிட வேண்டாம். சோடா தெளித்துக் கொண்டே படிக்கவும் 😁😁😁😁

(பழம் கிலோ என்ன விலை என்று கேட்கக்கூடாது. ஆத்தரு கணக்குல கொஞ்சம் வீக்கு 😁😁😁😁)
 




Bshasan

மண்டலாதிபதி
Joined
Aug 20, 2020
Messages
289
Reaction score
538
Location
Chennai
பக்கா play பாய் லுக் வெளியில், உள்ளே மனதை திறக்கும் சாவியா ?தோழன் பரத் என்றால் வில்லன் வினய் யார்? பெற்றோர் மேல் ஏன் கோபம் ?அர்ஜுன் மனதை திறந்துட்டாளா ரதி ?
 




Anamika 47

அமைச்சர்
Author
Joined
Nov 5, 2021
Messages
1,414
Reaction score
3,158
பக்கா play பாய் லுக் வெளியில், உள்ளே மனதை திறக்கும் சாவியா ?தோழன் பரத் என்றால் வில்லன் வினய் யார்? பெற்றோர் மேல் ஏன் கோபம் ?அர்ஜுன் மனதை திறந்துட்டாளா ரதி ?
அன்பார்ந்த நட்பே,
ஏறிய உயரம் அதிகம் என்றால்,
கீழே விழும்போது,
வாங்கும் காயங்கள் ஆறாத ரணங்கள் தான்....

அர்ஜுனனையும் பாரதியையும் இணைக்கும் கோடு , இன்னும் விதியால் வரைய படவில்லை.
🤣🤣🤣🤣🤣🤣
 




Anamika 47

அமைச்சர்
Author
Joined
Nov 5, 2021
Messages
1,414
Reaction score
3,158
பாசத்திற்குரிய நட்பே 💐
தலைநகர் தந்த தோழமையே 💐

முதல் கருத்தை வெளியிட்டதால் உமக்கான கவிதை கனி இதோ.......

கதைத் திரியை ஏற்றிய நேரம்
இல்லை இல்லை நிமிடம்,
கருத்துத் திரியில் சேர்ந்து
கதை என்னும் விளக்கை ஒளிரச் செய்த நட்பே,
இரவின் இருளில்,
கைபேசியின் ஒளியில்,
என் முகத்தோடு அகம் மலர,
நிமிட இடைவேளை கூட இல்லாத.
நிந்தன் மடல் கண்டு மதி மயங்கினேன்.
முக்கனியின் தித்திப்பை புறம் தள்ளியது..
அன்பென்னும் சாறு ததும்பும் உந்தன் நட்பு கனி.


( இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால், கனி என்று குறிப்பிட்டு ஆத்தர் தன் வாக்கை காப்பாற்றினார் 🤣🤣🤣🤣👏👏👏👏 )
 




Bshasan

மண்டலாதிபதி
Joined
Aug 20, 2020
Messages
289
Reaction score
538
Location
Chennai
பாசத்திற்குரிய நட்பே 💐
தலைநகர் தந்த தோழமையே 💐

முதல் கருத்தை வெளியிட்டதால் உமக்கான கவிதை கனி இதோ.......

கதைத் திரியை ஏற்றிய நேரம்
இல்லை இல்லை நிமிடம்,
கருத்துத் திரியில் சேர்ந்து
கதை என்னும் விளக்கை ஒளிரச் செய்த நட்பே,
இரவின் இருளில்,
கைபேசியின் ஒளியில்,
என் முகத்தோடு அகம் மலர,
நிமிட இடைவேளை கூட இல்லாத.
நிந்தன் மடல் கண்டு மதி மயங்கினேன்.
முக்கனியின் தித்திப்பை புறம் தள்ளியது..
அன்பென்னும் சாறு ததும்பும் உந்தன் நட்பு கனி.


( இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால், கனி என்று குறிப்பிட்டு ஆத்தர் தன் வாக்கை காப்பாற்றினார் 🤣🤣🤣🤣👏👏👏👏 )
கவிதை பரிசு எனக்கே எனக்கு இன்று கனியுடன் .
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top