• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

முள்ளோடு முத்தாட வா... அத்தியாயம் - 29

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Sowdharani

அமைச்சர்
Joined
Feb 7, 2018
Messages
1,438
Reaction score
1,923
Location
Chennai
அருமை
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
முள்ளோடு முத்தாட வா...

அத்தியாயம் – 29

View attachment 33534


அந்த மருத்துவக் கல்லூரி வளாகத்தின் நடைமேடையே அதிரும்படி ஒரு கூட்டம் நடந்து வந்து கொண்டிருந்தது.

பின்னால் இருந்த ரஞ்சனி “வேண்டாம் பாரதி விட்டுடு. நமக்கு எதுக்கு வம்பு?” என்று கெஞ்சியபடி ஓடிவந்து கொண்டிருந்தாள்.

அந்தக் கூட்டத்திற்கு தலைமை ஏற்றிருந்த பாரதியின் கால்களோ, எதற்கும் அஞ்சாத வீரநடை இட்டுக்கொண்டிருந்தது.

அவளது கையோ, முதலாம் ஆண்டு மாணவி ஒருத்தியின் கைகளை இறுக்கிப் பிடித்து, இழுத்தபடி வந்துகொண்டிருந்தது.

அந்த மாணவியின் கண்கள் அழுது சிவந்து, தடித்து, ஒளி இழந்து பயத்துடன் காணப்பட்டது. உதடுகள் வீங்கி தடித்து ரத்தம் கண்டி காணப்பட்டது.

“பாரதி இதனை இத்தோடு விட்டு விடலாமே! நீ திரும்ப பிரச்சனை செய்யும்போது அது இந்த பெண்ணுக்குத்தானே வம்பாய் வந்து முடியும்” விடாது பேசிக்கொண்டே வந்தாள் ரஞ்சனி.

பாரதி முறைத்த முறைப்பில் சட்டென தன் வாயை மூடிக் கொண்டாள் ரஞ்சனி.

பாரதியின் வேக நடை அந்த மருத்துவக் கல்லூரியின் கேன்டீனில் வந்து நின்றது.

“ யாரது?..... “ உறுமினாள் பாரதி.

அந்த முதலாம் ஆண்டு மாணவியோ பயத்துடன் தன் கண்களை அங்கும் இங்கும் சுழல விட்டாள்.

அலைபாய்ந்த அவளது கண்கள், மூலையில் அமர்ந்திருந்த இறுதியாண்டு மாணவன் பாலாவின் டேபிளைக் கண்டதும் அசையாது பயத்துடன் நிலைகுத்தி நின்றது.

அவளைத் தரதரவென்று இழுத்து சென்ற பாரதி பாலாவின் முன் வந்து நின்றாள்.

“ பரவாயில்லையே..... நான் உன்ன மட்டும் நைட்டுக்கு வர சொன்னா. நீ ஒரு கூட்டத்தையே பகல்ல கூட்டிட்டு வந்துட்டியே.... “ பற்களால் உதட்டை கடித்தவாறு சிரித்தான் பாலா.

அந்த பாலாவை மேலிருந்து கீழாக உற்றுநோக்கினாள் பாரதி.

அவளது கையை உதறிவிட்டு பாரதி அவன் முன்னே வந்தாள். “ காதல் என்கிற பேரில், காமம் தேடும் நாயே... நீ சொன்னதுக்கு உடன்படவில்லை என்றால் போட்டோவை மார்பிங் செய்து நெட்டில் உலவ விடுவாயாமே...

வலுக்கட்டாயமாக முத்தம் எல்லாம் கொடுத்து ட்ரையல் ஷோ காட்டினாயாமே...

உன் முன்னே நான் நிற்கிறேன். நீ தைரியமான ஆண்மகன் என்றால் போட்டோ எடுடா என்னை. மேல கைய வெச்சு பாருடா...” அசுரனை வதம் செய்யும் காளியாய் மாறினாள்.

அவள் பேச்சில் ஆத்திரமுற்ற பாலா பின் நக்கலாக , “நீ ஒரு பொண்ணு.... நல்லா யோசிச்சுகோ...” என்று கூறியபடி தன் செல்போனில் கேமராவை ஆன் செய்து அதன் வழியே பாரதியின் அழகை ரசிக்க ஆரம்பித்தான்.

அருகில் இருந்த சேரை கையிலெடுத்து ஒரே அடியில் அவள் தலையில் அடித்து வீழ்த்தினாள். அவனுடைய செல்போன் பறந்து சென்று சுவற்றில் மோதி சுக்குநூறாக தூள்தூளாக உடைந்தது.

தனது புகைப்படம், வீடியோ இருந்த அந்த செல்போன் கீழே விழுந்து உடைந்ததைக் கண்ட அந்த பாதிக்கப்பட்ட பெண், தன்னை மிரட்டிய அந்த பிரம்மாஸ்திரம் அழிந்த மகிழ்ச்சியில், அருகிலிருந்த ஒரு சேரை எடுத்து அவனை அடிக்க ஆரம்பித்தாள்.

பாலாவின் நண்பர்கள் முன்னே வர, “ யாராவது ஒருத்தர் முன்னே வந்தாலும், அதன் விளைவுக்கு நான் பொறுப்பல்ல “ பெண் அரிமா கர்ஜித்தது.

பாரதியைக் குறைவாக எடை போட்ட பாலாவின் நண்பன் ஒருவன் முன்னே வர, அருகில் கொதித்துக் கொண்டிருந்த சுடுதண்ணி வட்டாவில் இருந்த தண்ணீரை அவனின் முகத்தில் ஊற்றினாள்.

முகம் வெந்து தோல் உரிய துடிதுடித்துக் கீழே விழுந்தான்.

“இன்னும் எவனுக்கெல்லாம் எல்லாம் தைரியம் உள்ளதோ முன்னாடி வாங்கடா”.

பலரின் கால்கள் பின்னே செல்ல மீண்டும் ஒருவன் முன்னேறி வந்தான்.

டேபிளில் இருந்த மிளகாய் மற்றும் உப்புத் தூளை அவனுடைய கண்களைப் பார்த்து வீசினாள்.

எரிச்சலில் தவியாய் தவித்தவனைக் கண்டும், தன் மனம் எரிவது அடங்க மறுத்தது பாரதிக்கு.

பாரதியின் செயல்களைப் பார்த்து அருகில் இருந்த பெண்களுக்கும் தைரியம் வர, அனைவரும் எதிர்க்கத் தொடங்கினர்.

கீழே அடிபட்டு விழுந்து கிடந்த பாலாவைப் பார்த்து பாரதி, “இன்னும் எத்தனை ஆண்டு காலத்திற்குத்தான், பெண்களை சதையைக் காட்டி மிரட்டுவீர்கள்.

உடல் பலத்தோடு போட்டியிடும் அற்பனே....
எங்களில் மனோபலம் உனக்குத் தெரியுமா?

இனி உன்னை எதிர்க்க நான் தேவையில்லை “ கோபாவேசத்துடன் இருக்கும் மற்ற மாணவியரை தன் சுட்டு விரலால் சுட்டிக்காட்டினாள்.

பின் அந்த பாதிக்கப்பட்ட மாணவியைப் பார்த்து,

“அஞ்சி அஞ்சிச் சாவார் இவர் - அஞ்சாத பொருள் இல்லை அவனியிலே”

பயந்து கொண்டே இருந்தால் வாழ்வின் எல்லை வரை பயம் மட்டுமே கூட இருக்கும்.

உனக்காக நீ உன் சுண்டு விரலை அசைக்கா விட்டால், உன் கண்ணீரை துடைக்க வேறு கைகள் வராது.

கேண்டீனில் இருந்து வெளியேறியவளை பிடி பிடி என்று பிடித்துக்கொண்டாள் ரஞ்சனி.

“பி ஜி பண்ணுனோமா போனாமான்னு இல்லாம, ஏன்டி இப்படி வம்பு சண்டைக்கு மல்லு கட்டிக் கொண்டு நிற்கிற? “ என்றாள் ரஞ்சனி.

“பெண்ணென்றால் பாலுறவுப் பண்டமா?
அலங்கார அழகு பொம்மையா?
விளம்பரப் பொருளா?
குழந்தை பெறும் இயந்திரமா?
மண்ணில் எந்தப் பிறவியும் பெண் இல்லாமல் பிறப்பதேது?
பெண்களுக்கு யாரும் ஆள இந்த பூமியில் இடம் தரவேண்டாம்.
அவள் வாழ இடம் தந்தால் போதும்” சூடு பறந்தது பாரதியின் பேச்சில்.

தன் இரு கைகளையும் மாற்றி தன் காதை பிடித்துக் கொண்டு தோப்புக் கரணம் போட்டு மன்னிப்புக் கேட்டாள் ரஞ்சனி.

“ சரி தான் வாடி” என்று அவளை இழுத்துச் சென்றாள் பாரதி.

தன் கல்லூரியில் நடந்ததை தன் தாய்க்கு கதையாக விளக்கினாள் பாரதி.

தன் மகள் கதை சொல்லும் அழகை இமை சிமிட்டாமல் பார்த்தார் அருந்ததி.

அவளது ஆக்சன் கதையில் அடுப்படியில் இருந்த சாமான்கள் திசைக்கு ஒன்றாகச் சிதறி இருந்தது.

“கண்ணம்மா உன் உலகமும் ஒருநாள் சுருங்கும். உன் தோல்வியும் ஒருநாள் அழகாகும். உன் வலிகளை மறந்து நீ இன்னொரு வலிக்கு ஆறுதல் தரும் காலமும் வரும்.

அப்போது இப்படி அம்மாவுடன் கதை பேசிக்கொண்டு இருக்க மாட்டாய். உன் கணவனுடன் கைகோர்த்துக் கொண்டிருப்பாய்” என்று கூறி ஆதுரமாக பாரதியின் தலையை வருடினார் அருந்ததி.

“நான் எப்பொழுதும் என் அம்மாவின் கண்களுக்குள் கண்மணியாகவே இருப்பேன்” என்று கூறி அவர் கண்களில் அழுந்த முத்தமிட்டாள்.

தன் வீட்டிற்குள் நுழைந்த ராம்பிரசாத் இந்த கண்கொள்ளா காட்சியைக் கண்டு ஆனந்தத்தில் பூரித்தார்.

தொடர்ந்து இரண்டு வருடங்களாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏற முயற்சி செய்துகொண்டிருந்தாள் பாரதி.

தன் தந்தையின் மருத்துவமனையில் பகுதி நேர மருத்துவராகப் பணிபுரிந்து கொண்டு, தன் முதுகலை மருத்துவ படிப்பையும் திறம்பட முடித்தாள்.

இந்த முறை அவள் திபெத்துக்குச் சென்றபோது, வெளி உலகத்துடனான தொடர்பைத் துண்டித்தாள்.

அவள் யாரிடமும் அதாவது ஸ்பான்சர்கள் மற்றும் அவளது குடும்பத்தினரிடமும் கூட தனது திட்டங்களைப் பற்றி கூறவில்லை.

அவளது சமூக ஊடக சேனல்கள் இருட்டாகிவிட்டன, மேலும் அவள் எவரெஸ்டுக்குச் செல்வதை நிருபர்களிடம் கூட கூற மறுத்தாள்.

கடந்த தோல்விகளில் அவளது கவனத்தை , மீடியா கவரேஜ் மிகவும் சிதறடித்தது.

உலகிற்கு தெரியாமல் மலை ஏறுவது மிகவும் ஆபத்தான, பெரிய இலக்காக இருந்தது அவளுக்கு.

வெளி உலகத்திடம் இருந்து பாராட்டுகளைப் பெற அவள் மலை ஏறவில்லை என்பதை அவளது மனமே அவளுக்கு உறுதிப்படுத்தியது.

தன் கனவில் ஆழ்ந்த கவனம் செலுத்த அனைத்து இரைச்சலையும் சரிசெய்து மலைகள் மீதான தன் காதலை தான் உணர வேண்டும் என்று அவள் விரும்பினாள்.

பாராட்டுகளை விட, தனிப்பட்ட முறையில் தன்னைத் தானே சவால் செய்ய விரும்பினாள்.

தன்னால் முடியும் என்று தனக்கே நிரூபிக்க புறப்பட்டாள்.

தன் மகளின் கண்ணாமூச்சி ஆட்டத்தில் ராம் பிரசாத் மிரண்டு விட்டார்.

அருந்ததியிடம் பாரதி மெடிக்கல் கேம்ப்பிற்கு சென்று இருப்பதாக கூறி சமாளித்தார்.

உருண்டையான இந்த உலகத்தின் உச்சியை நோக்கி பொழியும் பனிக்குள் தன் பாதத்தை புதைத்து நடந்து கொண்டிருந்தாள் பாரதி.

பாரதி என்ற நம்பிக்கை நெருப்பு பனியில் நனையாமல், அணையாமல், வான்நோக்கி எரியும் சுடர் போல் மலை முகட்டினை நோக்கி எரிந்தது.

உயிரை உறைய வைக்கும் குளிரில் முற்றிலுமாக தன்னை முடக்கிக் கொண்டு,
உச்சிதனை அடைந்து நம் நாட்டின் கொடியை பறக்க விட்ட போது அவளது உணர்ச்சிகளை வடிக்க அவளிடம் வார்த்தைகள் இல்லை.

மேலிருந்து பார்க்கும் காட்சி மிகவும் அற்புதமானதாக, ஒலி இல்லாமல் பாரதியை அமைதியாக,அடக்கமாக உணர வைத்தது.

தன்னைச் சுற்றி சூழ்ந்திருக்கும் இயற்கையைக் கண்டு பிரமித்தாள்.

நாம் விரும்பியதை அடைவது என்பது சாதாரண விஷயம். ஆனால் நாம் எதை விரும்புகிறோம் என்பதை உணர்வதே அசாதாரணமான விஷயம்.

மனதில் மகிழ்ச்சி தழும்ப அந்த மலை உச்சியில் இருந்து “அம்மா..... “ என்று கத்தினாள் பாரதி.

அன்று காலை முதலே அருந்ததிக்கு மனதிற்கு ஏதோ தவறாகப் பட கோவிலுக்குச் செல்ல முடிவெடுத்தார்.

அவசர அறுவை சிகிச்சை காரணமாக அன்று அதிகாலையிலேயே ராம்பிரசாத் தன் மருத்துவமனைக்கு சென்றிருந்தார்.

இறைவனை வணங்கி விட்டு திரும்பி வரும்போது, “ஹாய் ஆன்ட்டி... “ என்ற குரலில் திரும்பிப் பார்த்தார்.

“ ரஞ்சனி நல்லா இருக்கியாடா?“ என்று அன்பொழுக விசாரித்தார்.

“ நல்லா இருக்கேன் ஆன்ட்டி. நீங்கள் மட்டும் தனியாக இருக்கிறீர்கள் பாரதி எங்கே?” என்றாள்.

“ பாரதி மெடிகல் கேம்ப் சென்றிருக்கிறாள். அங்கு போன் செய்யும் வசதியும் இல்லையாம் அங்கிள் சொன்னார் “ என்றார்.

“ மெடிக்கல் கேம்பா? அதுவும் நான் இல்லாமலா? உங்கள் காதில் பூ சுற்றி விட்டு மேடம் எங்கோ சென்று இருக்கிறார்கள். வீட்டிற்கு வந்ததும் முதுகில் நான்கு தட்டு தட்டுங்கள் ஆன்ட்டி “ என்று சிரித்தபடி கூறி விட்டு வெளியேறினாள் ரஞ்சனி.

காரில் ஏறி அமர்ந்த அருந்ததிக்கு 'பாரதி எங்கே சென்றாள்?' என்ற பதட்டத்தில் நெஞ்சு வலிக்க ஆரம்பித்தது.

அவரின் வேதனையைக் கண்ட டிரைவர் காரின் வேகத்தை அதிகரித்தார்.

அதிகரித்த வேகத்தில் கார் தன் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவற்றில் மோதி விபத்துக்குள்ளாகியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த அருந்ததியை, மிகவும் மோசமான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில், ராம்பிரசாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அருந்ததியின் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருந்தது.

ராம் பிரசாத் எவ்வளவு முயன்றும் பாரதியை அவரால் தொடர்பு கொள்ளவே முடியவில்லை.

அருந்ததியின் உயிர் தன் கண்ணெதிரே சிறிதுசிறிதாக பிரிவதைக் கண்டு உயிரோடு மரித்தார்.

எப்பொழுதும் மகளைப் பாசத்துடன் வருடும் தன் கண்களைத் திறந்தபடியே, தன் மகளை எதிர்நோக்கியபடியே, தன் உயிரை நீத்தார் அருந்ததி.
வெற்றியும், தோல்வியும் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் என்பது உண்மைதான்...
இரண்டுக்கும் நூலிழை வித்தியாசம் என்று உணரும் நாள் அருகில்
 




Anamika 47

அமைச்சர்
Author
Joined
Nov 5, 2021
Messages
1,414
Reaction score
3,158
வெற்றியும், தோல்வியும் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் என்பது உண்மைதான்...
இரண்டுக்கும் நூலிழை வித்தியாசம் என்று உணரும் நாள் அருகில்
துவளும் தோல்வி நிச்சயம் ஒருநாள் வெற்றியாய் நம் கையில் தவழும் 😍
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top